Yarl Forum
திருமண வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: திருமண வாழ்த்துக்கள் (/showthread.php?tid=2643)



திருமண வாழ்த்துக்கள் - kpriyan - 11-02-2005

அவள் என்றும் அழகுதான்,
என் கண்களுக்கு.
அன்றோ எல்லோருக்கும் அழகாக தெரிந்தாள்,

சிறிது நேரம் அவளை ரசிப்போமே
என்று இதயம் விண்ணப்பமிட
இருமனதாய் ஒத்துக்கொள்ளுகிறது மனது

தலையில் ஒரு அழகிய பூந்தோட்டம்
கறுத்து நீண்ட புற்கள்,
நெற்றியில் ஒரு அந்நிய ஒற்றை முடி
அதில் தொங்கும் என் இதயம்,

உயிரினை உருக்கும் கண்கள்
என்னைப்பார்த்து அல்ல
என்னைப்பார்க்கவைத்து,

அவள் அன்பாய் என்னை அழைக்கையில்
உடலை விட்டு ஒடுச்சென்றது மனது,
கனவுகளை கலைத்துவிட்டு
சப்த்தங்களை சபித்துவிட்டு

பூக்களுக்கு அவளை கையளித்து
வழ்த்தினேன்

"திருமண வாழ்த்துக்கள்"


- poonai_kuddy - 11-02-2005

Quote:அவள் அன்பாய் என்னை அழைக்கையில்
உடலை விட்டு ஒடுச்சென்றது மனது,
கனவுகளை கலைத்துவிட்டு
சப்த்தங்களை சபித்துவிட்டு

பூக்களுக்கு அவளை கையளித்து
வழ்த்தினேன்

"திருமண வாழ்த்துக்கள்"
அண்ணா யாருக்கு திருமண வாழ்த்துக்கள்? நல்லா சொல்லியிருக்கிறீங்கள். பூக்களுக்கு அவளை கையளித்து வாழ்த்தினேன் எண்டு சொனனது வித்தியாசமா இருக்கண்ணா.


- kpriyan - 11-02-2005

நன்றி பூனைக்குட்டி! எல்லாம் சும்மா கற்பனைதான்....