| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 362 online users. » 0 Member(s) | 359 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241
|
|
|
| தமிழர் தாயகத்துக்கான கட்டட வடிவமைப்பு கட்டுமானங்கள் |
|
Posted by: வினித் - 11-04-2005, 11:04 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
தமிழர் தாயகத்துக்கான கட்டட வடிவமைப்பு கட்டுமானங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிகள் அறிமுகம்
[வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2005, 14:26 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழர் தாயகப் பகுதிகளில் கட்டிட வடிவமைப்பு கட்டுமானங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிகள் (Design and Construction Guidelines) இன்று வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
<img src='http://img494.imageshack.us/img494/3535/200511040018lf.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் இன்று வடக்கு-கிழக்கில் செயலாற்றும் பொறியியலாளர்கள் சந்தித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடச் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இந்த வழிகாட்டு நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
<img src='http://img494.imageshack.us/img494/7020/200511040024zc.jpg' border='0' alt='user posted image'>
இந்த நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை:
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழர் தாயகப் பகுதியில் அனைத்து கட்டுமானப் பணிகளும் தமிழீழ தேசத்தின் எதிர்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு முன்னெடுப்பட வேண்டும் என்பதில் அக்கறையாகவுள்ளார்.
திட்டங்கள் மற்றும் கட்டுமானங்கள் முன்னெடுக்கும் போது அவை மக்கள் நலனை மையப்படுத்தியதாகவும் சூழல் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டுமேயன்றி வெறுமனனே நிதியை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது.
சிறிலங்கா அரசினது திட்டமிட்ட செயற்பாடுகளால் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாத சூழல் எமது பிரதேசத்தில் உள்ளது. இருப்பினும் வேறு உதவிகள் மூலம் நடைமுறைப்படுத்துகின்ற சிறிய சிறிய திட்டங்களை கூட சிறப்பான முறையில் திட்டமிட்டு தரமானதாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.
<img src='http://img494.imageshack.us/img494/6414/200511040036vf.jpg' border='0' alt='user posted image'>
போர் நடைபெற்ற காலங்களில் எமது மண்ணில் நடைமுறையரசு சிறப்பாக செயலாற்றி வந்தாலும் திட்டமிடலுக்கும், அபிவிருத்திக்குமான முக்கியத்துவம் கூடுதலாக கொடுக்க முடியவில்லை.
<img src='http://img494.imageshack.us/img494/7835/200511040047rf.jpg' border='0' alt='user posted image'>
தற்போதுள்ள சூழலில் கடந்தகால போர்ச் சூழலைக் காரணமாக கூறிக்கொண்டு திட்டமிடலிலும், அபிவிருத்திலும் பின்தங்கிவிட முடியாது. இவற்றில் நாம் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும்.
தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகள் எதிர்காலத்தில் பல நன்மைகளைத் தரக்கூடிய விதத்தில் திட்டமிட்ட முறையில் அமைக்கப்பட வேண்டும்.
எமது தேசத்தை வளமான தேசமாக கட்டியெழுப்புவதில் பொறியியலாளர்களின் பங்கு முக்கியமானது என்றார்.
திட்டமிலுக்கும் மேம்பாட்டுக்குமான செயலகத்தினால் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டுமானங்கள் தொடர்பான வழிகாட்டும் நெறிகள் பற்றி வடக்கு கிழக்கில் பல்வேறு திணைக்களங்களிலும் பணியாற்றும் பொறியியாளர்களுடன் கலந்துரையாடும் சந்திப்பாக இது அமைந்தது.
இந்த வழிகாட்டும் நெறிகளை அடிப்படையாகக் கொண்டே தமிழர் தாயகத்தில் எதிர்காலத்தில் கட்டுமானப் பணிகளும் அவற்றுக்கான அனுமதி மற்றும் கண்காணிப்புச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்
|
|
|
| அமெரிக்காவில் அதிகரித்து வரும் வறுமை |
|
Posted by: adsharan - 11-04-2005, 09:42 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (3)
|
 |
அன்று அமெரிக்க ஜனாதிபதியான லின்டன் ஜோன்சன் வறுமைக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்து நாற்பது வருடங்களின் பின் உலகின் மிகச் செல்வந்த நாடான அமெரிக்காவில் மூன்று கோடி எழுபது இலட்சம் மக்கள் வறியவர்களென உத்தியோகபூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது வருடந்தோறும் அதிகரித்த வண்ணமாயுள்ளது.
சென்ற வருடம் ஒரு கோடி பத்து இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்று விட்டனர். இந்தத் தொகையானது டல்லஸ் அல்லது பிராக் நகரங்களின் மொத்த சனத்தொகைக்குச் சமமாகும்.
2000 ஆம் ஆண்டிலிருந்து வருடந் தோறும் வறியவர்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து (55) இலட்சத்தால் அதிகரித்துள் ளது. ஜனாதிபதி லின்டன் ஜோன்சன் வறுமைக்கு எதிரான யுத்தத்தை அன்று பிரகடனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, "துரதிர்ஷ்டமாக பல அமெரிக்கர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். சிலர் வறுமை காரணமாகவும் சிலர் அவர்களுடைய நிறம் காரணமாகவும் இவர்களிற் பலர் இரண்டு காரணங்களாலும் இவ்வாறான நம்பிக்கையீன நிலைக்கு உள்ளாகி உள்ளனர். அமெரிக்க நிர்வாகம் அமெரிக்காவில் வறுமைக்கு எதிராக நிபந்தனையற்ற யுத்தத்தைப் பிரகடனம் செய்கிறது,". என்று கூறினார்.
சென்ற வருடம் அமெரிக்க சனத் தொகையில் 12.7 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வருடந்தோறும் அமெரிக்க புள்ளி விபரத் திணைக்களம் அமெரிக்காவில் நிலவும் வறுமை தொடர்பாக புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த விபரங்கள் சுமார் எழுபது (70) பக்கங்களில் இருக்கும். இவை ஆய்வாளர்களுக்குத் தேவையானதாக இருந்த போதிலும் அவை பொது விவாதங்களை என்றுமே ஏற்படுத்தியதில்லை. 2005 ஆம் ஆண்டின் அறிக்கையும் அவ்வாறே அமைந்துள்ளது.
இந்த அறிக்கையானது லூசியானா, மிசுசிப்பி ஆகிய இடங்களில் 1100 பேருக்கு அதிகமானோரை பலி கொண்டு பெரும் நாசத்தை விளைவித்த கத்ரீனா சூறாவளியின் போது நீயூ ஓர்லின்சில் நிலவிய நிலைமையை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பக்கம் பக்கமாக புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களில் இவை காணப்படவில்லை என்ற உண்மை அதன் ஊடாக அம்பலத்திற்கும் வந்தது.
நீயூ ஓர்லின்ஸ் காட்சிகள் உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன. வெட்கித் தலைகுனிந்த அமெரிக்கர்கள் சோமாலியா, அங்கோலா, சூடான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் தங்கள் நாட்டை ஒப்பிட நேர்ந்ததை ஒரு அவமானமாகக் கருதினர்.
வறிய கறுப்பின மக்கள் உதவி கோரி பிச்சை கேட்ட காட்சிகள் காட்டப்பட்டன. ஏனோதானோ என்ற தோரணையில் நேரம் கடந்து வந்து சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் வெள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீயூ ஓர்லின்சின் ஏகப் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்கள். வெள்ளத்தின் போது கிட்டத்தட்ட சகல வெள்ளையர்களும் சொந்தக்கார்களிலும் பணமுடையவர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனங்களிலும் ஓடித் தப்பினர். ஆனால் வாகன வசதியற்ற ஒரு லட்சம் கறுப்பின மக்கள் வெள்ளம் புகுந்த நகரத்திலேயே மாட்டிக் கொண்டனர்.
வறுமையில் வாடும் கறுப்பின மக்கள் 24.7 வீதமாகும். இது வெள்ளையர்கள் உட்பட ஏனைய இனத்தவர்களிடையே நிலவும் வறுமையின் இரட்டிப்பான வீதமாகும். அமெரிக்காவில் தற்போது பொருளாதார ரீதியான புறக்கணிப்பை கறுப்பின மக்களே அதிகம் எதிர்நோக்குகின்றனர். நகரின் ஒரு புறத்தில் வறிய கறுப்பின மக்களும் மறுபுறத்தில் வசதிபடைத்த வெள்ளையரும் என்ற மிகத் தெளிவாக அடையாளம் காணக் கூடிய ஏற்றத்தாழ்வு நிலை அங்கு காணப்படுகிறது.
அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இந்தப் பொருளாதாரப் புறக்கணிப்பு காணப்படுகிறது. நியூயோர்க், பிலோடெல்பியா, டெற்றோயிற், அற்லான்ரா, பால்ரிமோர், சென்லியூஸ், ஓக்லாண்ட், மியாமி ஏன் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இந்தப் புறக்கணிப்பு அப்பட்டமாகக் காணக்கூடியதாயுள்ளது. வெள்ளை மாளிகையிலிருந்து வாகனத்தில் பத்து நிமிடப் பிரயாணம் செய்தால் அனாகோசியாவை அடையலாம். இது நகரின் மிகமோசமான வறுமை நிலவும் ஒரு இடமாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் வறிய கறுப்பின மக்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கு வறிய வெள்ளையர்கள் முழு அமெரிக்காவிலும் உள்ளனர். கறுப்பின மக்களிலும் பார்க்க வேகமாக வெள்ளையர்கள் வறுமைக் கோட்டிற்கு தள்ளப்படுகின்றனர். அரசாங்கம் காலாவதியான 1963 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட வறுமை மட்ட அளவு கோலையே இன்றும் பயன்படுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான உழைக்கும் வறுமையாளர்களின் உணவு, உடை உட்பட வீட்டு வாடகை தற்போது பெரிய செலவாகின்றது. வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கானோர் கார்களிலும், நீண்ட தூர புகையிரதங்கள், பஸ்களிலும் சிறிய கொட்டில்கள் போன்றவற்றிலும் உறங்குகின்றனர். வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகளில் நிலவும் வறுமையை விட அமெரிக்காவின் வறுமை மிக மோசமானது. "ஒவ்வொரு ஆகஸ்டிலும் அமெரிக்கர்களாகிய நாங்கள் எங்களுக்கே பொய் சொல்லுவோம்" என டியூக் பல்கலைக்கழகத்தில் வறுமை பற்றி ஆய்வு நடாத்தும் பேராசிரியர் டேவிட் பிராடி கூறுகிறார்.
வறுமைக்கெதிரான யுத்தத்தில் அரசு வெற்றி பெறுவதாகக் காட்டுவதற்காகவே வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிடுகின்றனர்.
சகலதையும் கணக்கில் எடுத்தால் 18 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர். அதாவது 4 கோடி 80 இலட்சம் பேர் வறியவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் நிலவும் வறுமையானது வேறு எந்த வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்க மோசமானது. உலகில் உள்ள 41 கோடி 60 இலட்சம் பேரின் வருமானத்தின் அளவு உலகின் மிகப் பெரிய 500 பணக்காரர்களின் வருமானத்திற்குச் சமமாகும். வெளிநாடுகளில் இரு ந்து வேலை வாய் ப்பு பசியுள்ளவர்களை இழுப்பதற்கு அமெரிக்காவில் வருடந்தோறும் 50,000 பேருக்கு நிரந்தர வதிவிடத்திற்காக நடத்தப்படும்"கிறீன் கார்ட்" லொத்தர் முறையுள்ளது. இது போன்று உலகில் வேறெங்கும் இல்லை.
அக்டோபர் 1 ஆம் திகதியிலிருந்து மணித்தியாலம் ஒன்றிற்கு ஆகக்குறைந்த ஊதியம் 15 சதங்களால் அதிகரிக்கப்பட்டு 6.35 டொலர்களாகவுள்ளது. இந்த ஊதியம் ஒருவரை வறுமையின் எல்லைக் கோட்டிற்கு மேலே கொண்டு செல்லாது. சுகாதாரக் காப்புறுதி அல்லது விடுமுறை இல்லாமலும் ஆரம்பக் கல்வியை மட்டும் பெற்ற இலட்சக்கணக்கானவர்க்கே இந்த மாதிரியான குறைந்த ஊதிய வேலையே கிடைக்கும்.
ஒரு காலத்தில் கனரக கைத்தொழிலில் பயிற்சிபெறாதவர்கள் நல்ல ஊதியம் பெற்றனர். அது இப்போது அற்றுப் போய்விட்டது. 2001 ஆம் ஆண்டிலிருந்து 27 இலட்சம் உற்பத்தித் தொழிலில் வேலைவாய்ப்பு இழக்கப்பட்டது.
ஒரு ஜனாதிபதி வறுமைக்கு எதிரான யுத்தத்தைப் பிரகடனம் செய்தார். மற்றொரு ஜனாதிபதியான றொனால்ட் றேகன் 1988 இல் ஓர் உண்மையைக் கூறினார்"சமஷ்டி அரசு வறுமைக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தது ஆனால் வறுமையே வெற்றி கண்டது
http://www.thinakural.com/New%20web%20site...4/Article-1.htm
|
|
|
| 4வயது சிறுவன் மனைவி, குழந்தைகளுடன் வாழ அடம்பிடிக்கிறான் |
|
Posted by: Vaanampaadi - 11-04-2005, 09:06 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (8)
|
 |
முற்பிறப்பை கூறும் 4 வயது அதிசய சிறுவன்
மனைவி, குழந்தைகளுடன் வாழவேண்டும் என்று அடம் பிடிக்கிறான்
லக்னோ,நவ.4-
4 வயது சிறுவன் தனது முற்பிறப்பை கூறி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.
அதிசய சிறுவன்
உத்தர பிரதேசமாநிலம் லக்னோ அருகில் உள்ள பிபாரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாபுராம். இவரது ஒரே மகன் அனகேஷ். இவனுக்கு 4 வயதாகிறது.
கடந்த ஆண்டு அனகேஷ் ஒருநாள் திடீர் என்று தனது பெயர் சோட்டேலால் என்றும் தனக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருப்பதாகவும் கூறினான்.
தனது கிராமத்தின் பெயர் குர்சாலி என்றும் விபத்தில் மரணம் அடைந்ததாகவும் இப்போது அந்த கிராமத்துக்கு சென்று மனைவியையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்றும் கூறினான்.
முதலில் இதை கேட்ட அவனது தந்தை அவன் ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று நினைத்து அதை பொருட்படுத்தவில்லை.
விபத்தில் மரணம்
ஆனால் அவன் இதையே அடிக்கடி கூறிவந்தான். இதனால் அவனது தந்தை தனது உறவினர் ஒருவரை குர்சாலி என்ற கிராமத்துக்கு அனுப்பி இதுபற்றி விசாரித்து வரும் படி கூறினார்.
அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த சோட்டேலால் என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்தார் என்றும் அவருக்கு 3 குழந்தைகள் உண்டு என்பதும் தெரிய வந்தது.
வீட்டுக்கு அழைத்துச் சென்றான்
இதைத் தொடர்ந்து பாபுராம் ஒரு நாள் தனது மகன் அனகேஷை குர்சாலி கிராமத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் இது தனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊர் போல் தனது தந்தையை ஒவ்வொரு தெருவாக அழைத்துச் சென்று நேராக சோட்டேலாலின் வீட்டில் போய் நின்று இதுதான் எனது வீடு என்று கூறினான்.
அத்துடன் அங்கு இருந்த ஒரு பெண்ணை பார்த்து தன்னுடைய தாயார் என்றும் மற்றொரு பெண்ணை பார்த்து தனது மனைவி என்றும் கூறினான். அங்கு நின்று கொண்டு இருந்த 3 குழந்தைகளை பார்த்து அவர்கள் தான் தனது பிள்ளைகள் என்றும் கூறினான். அத்துடன் அங்கிருந்த அத்தனை பேரின் பெயர்களையும் சரியாக சொன்னான். முற்பிறவியில் தான் சோட்டேலாலாக இருந்த போது நிகழ்ந்த சில சம்பவங்களையும் சரியாக கூறினான்.
இதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். திடீரென்று 4 வயது சிறுவன் ஒருவன் வந்து இவர் தான் எனது தாயார், இவர் தான் என் மனைவி என்று கூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பின்னர் அனகேஷ் சோட்டேலாலின் குடும்பத்தினருடையே தங்கி அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தனது தந்தை பாபுராமிடம் கூறினான். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் அவனை மீண்டும் பிபாரியா கிராமத்துக்கு அழைத்து வந்து விட்டார்.
மனோதத்துவ நிபுணர்
அதன்பிறகு அவர் வீட்டில் பூஜைகள் நடத்தினார். ஜோசியர்களையும் பார்த்தார். இறுதியாக பரேலியில் உள்ள மனோதத்துவ நிபுணர் ஒருவரையும் சென்று பார்த்தனர். அவர் அனகேஷ் வளர்ந்து பெரியவன் ஆனதும் முற்பிறவி தொடர்பான நினைவுகள் அவனுக்கு படிபடியாக மறந்து விடும் என்று கூறி இருப்பதாகவும் இது ஒன்றுதான் தற்போது தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்றும் பாபுராம் கூறினார்.
இந்த விவரங்களை அறிந்த அக்கம் பக்கத்து கிராமத்தினர், அதிசய சிறுவன் அனகேஷை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
Dailythanthi
|
|
|
| சிந்திக்க சில செய்திகள் |
|
Posted by: Birundan - 11-04-2005, 12:32 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
செய்தி - 1
இலங்கைத்தீவில் நடைமுறையில் இருக்கும் போர்நிறுத்தம் காரணமாக, சிறிலங்கா படைவீரர்களால் அவர்களது மனைவிமார் மீதான, பலாத்கார பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்துள்ளதாக, Woman In Need என்ற அமைப்பால் நடாத்தப்பட்ட ஆய்வின் புள்ளிவிபரங்கள் கூறுகிறது. போர்க்காலத்தில் ஏற்பட்ட உளச்சிதைவால், அக்காலப்பகுதியில் இவ்வாறான கொடுமையான துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தார்கள் என்றும், அப்போது தினசரி இருபது பெண்கள் தமது கணவர்மாரை பற்றி முறைப்பாடு செய்திருந்ததாகவும் அவ் அமைப்பு கூறுகிறது.
செய்தி - 2
நேற்று 03 - 11 - 2005 இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்துக்கு தற்போதைய சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றார். யாழ்குடாநாட்டில் ஆக்கிரமித்திருக்கும் 40000 படைவீரர்களின் தபால்மூலமான வாக்குகளை உறுதிப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கமாகும்.
அவர் படைவீரர்களை மட்டுமே சந்தித்தார். பொதுமக்கள் எவரையுயும் சந்திக்கவில்லை. ஆனால் இவரது பயணம் பற்றி ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட தலைப்பு: Wickremesinghe campaigns in Sri Lanka's rebel heartland .
செய்தி - 3
2001 ஆம் ஆண்டு இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு The World Factbook என்ற இணையத்தளத்தில் குடித்தொகை புள்ளிவிபரங்களை இணைத்துள்ளார்கள். அதன்படி
சிங்களவர் 73.8%
முஸ்லிம்கள் 7.2%
இந்தியதமிழர் 4.6%
இலங்கைதமிழர் 3 .9%
இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போர் காரணமாக பல
லட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த நிலையில் நடைபெற்ற சனத்தொகை கணிப்புத்தான் என்றாலும் புள்ளிவிபரங்களை பார்க்கும்போது இது கவலை அளிக்கின்ற விடயமே. ஆனால் இக்கணக்கெடுப்பின்போது தமிழீழதாயகத்தின் புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது எத்தனைபேருக்கு தெரிந்திருக்கும்.
நன்றி>தமிழ்சங்கம்
|
|
|
| இன்னும் வருக, காதல்கள்! |
|
Posted by: இவோன் - 11-03-2005, 10:34 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
சுட்ட கவிதைகள்.. எழுதியவரெவரோ அவருக்கு நன்றி..
வேண்டாம் என்று மறுத்த என்
மனதுடன் போராடி இறுதியாய்
உனக்கொரு வார்த்தை சொல்ல
சம்மதம் பெற்றேன்
என் வார்த்தைகள் உன்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
உன் நினைவுகள் இனி என்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
வேறொரு உயிரில் உயிர்
வைக்க இன்று முதல் முயல்கிறேன்.
ஒருமுறைதான் காதல் அரும்புமென
உள்ளம் நினைத்திருந்தது
முகமறியா முதற்காதலின் முறிவால்
உறவொன்றின் இணைப்பை ஏற்க
உள்ளம் மறுத்திருந்தது
விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில்
விளையாடச்சொன்னது
இன்னும் பல உணர்வுளால்
தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
உன்னால் குடிபூரல்
கோலாகலமாய் நடக்கின்றது
முதற் காதலின் வெறுமை இதயத்தின்
ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக
மேடையில் வாழக்கைத் தொடரின்
அடுத்த காட்சி அரங்கேறும்
|
|
|
| நம்மைப் பிடித்த பிசாசுகள்....:) |
|
Posted by: sayanthan - 11-03-2005, 10:22 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (1)
|
 |
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின..
'எங்கட பிரண்ட்சிப்பை இப்படித் தப்பா ஏன் விளங்கிக் கொண்டீங்கண்ணு எனக்கு இன்னும் விளங்கேல்லை.. " சொல்லி விட்டு நிரோஷா திரும்பிப் பார்த்தாள். சாரகன் அமைதியாய் நின்றான்.
'அவசரப்பட்டு விட்டேனோ..இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்திக் கேட்டிருக்கலாமோ.." எண்ண அலைகள் உள்ளே மிதந்து கொண்டிருந்தன. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமென முடித்து விட்டு மறந்து விட்டுப்போகின்ற வழமைக்குள்ளேயே சிறு வயது முதல் வளர்ந்த அவனுக்கு காலந்தாழ்த்தல் என்பது சிரமமாயிருந்திருக்க வேண்டும்.
';ஒண்ணு கேட்டால் சொல்வீங்களா.." நிரோஷா தான் அமைதியைக் குலைத்தாள்.
'சொல்லுங்க"
'இதுக்கு நானும் ஏதாவது காரணமாய் இருந்திருக்கேனா..?"
அந்த நேரத்திலும் சாரகனுக்கு சிரிப்பு வந்தது. எப்படி இவளால் இப்படி இலகுவாக கேட்க முடிகிறது..'இருட்டில போகப் பயமாயிருக்கு.. ஒவ்வோர் நாளும் என் கூட வரமுடியுமா.." 'உங்களுக்கென்றதால்த் தான் என் போட்டோஸை நான் காட்டினேன்..எப்படி சாறியிலை நான் அழகாயிருக்கேனா.." 'உங்க நம்பர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.." என்றெல்லாம் பேசினாளே.. ஞாபகத்திலேயே இருக்காதா..? சில சமயம் சாதாரணமாய்த்தான் இப்படியெல்லாம் பேசினாளோ..? வேறெந்த எண்ணமும் இல்லாமல் இப்படியெல்லாம் பேசக் கூடாதா..? ஒரு வேளை நிரோஷா அப்படிப் பேசியிருந்தால்... நான் காரணங்களைச் சொல்ல ச்சீ..நீ இவ்வளவு தானா என்று அவள் நினைக்கக்கூடும்.. கிட்டத்தட்ட சாரகன் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். நினைவுகளில் காலம் பின்னோக்கிப் போனது.
சாரகனின் வீட்டிற்கு இரண்டு மூன்று வீடுகள் தொலைவில்த்தான் நிரோஷா இருந்தாள். சில காலங்களுக்கு முன்னரேயே அவளை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும் அவன் படித்த வகுப்பிலேயே அவளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் முதன்முதலாய் அவனுக்குள் ஏதாவது நிகழ்ந்திருக்க வேண்டும். அதிகாலை நேர வகுப்புக்களுக்கு அவள் செல்லும் போது நேரம் பார்த்திருந்து வீதியில் இறங்கி குட்மோர்ணிங் சொல்லி.. இப்படித்தான் ஆரம்பமானது.. ஆனாலும ஒவ்வொரு நாளும் இப்படிச் சந்திப்பதை அவள் தப்பாக விளங்கிக்கொள்ள மாட்டாளா என்று கவலைப்பட்ட போது தான் அவள் ஒரு நாள் கேட்டாள்..
'சாரகன்.. காலையில க்ளாசுக்கு போறதுக்கு வீட்டில பயப்பிர்றாங்க.. ஒவ்வொரு நாளும் என் கூட வரமுடியுமா..." சாரகனின் நெஞ்சுக்கூண்டுக்குள் குரங்கொன்று ஜம் என்று வந்து உட்கார்ந்து கொண்டது அப்போது தான்.
வகுப்பை வந்தடையும் வேளைகளில் கூடி நின்று நண்பர் கூட்டம் கேலி பண்ணும். நிரோஷா எரிச்சலடைவாள்.
'அவங்கள் அப்படித்தான்.. அதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க.." சாரகனின் உதடுகள் உச்சரித்த போதும் மனது நண்பர்களை மானசீகமாய் வாழ்த்தும்.
'சாரகன் உங்க நம்பர் என்ன..?" ஒரு முறை கேட்ட போது சொன்னான்.
'வாவ்.. எனக்கு ரொம்பப்பிடிச்ச நம்பர்" என்றவள் கண்களை அகலவிரித்துச் சொன்ன போது நெஞ்சுக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்ட குரங்கு சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தது.
'நியூமராலஜியில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா..?" தொடர்ந்து கேட்டாள்.
'ம்.. நிறைய.."
தொடந்தும் குரங்கின் சேட்டைகள் தொடர்ந்தன. இதனை தொடர வி;ட முடியாது என்ற நிலையில் முடிவு எப்படி இருக்கிறதோ, நினைத்ததை நிகழ்த்தி முடிப்பவன் என்ற அவனுக்குள்ளிருந்த இறுமாந்த நெஞ்சு ஒரு மாலைப்பொழுது அவளிடம் கேட்க வைத்தது.
ழூ ழூ ழூ
'என்ன சாரகன்.. நானும் ஏதாவது காரணமா..?"
'இல்லை.. நீங்க காரணமில்லை.. நான் தான்.." சாரகன் அவசரமாய்ச் சொன்னான்.
நிரோஷா சிரித்தாள்.. 'நான் நினைச்சுக் கூடப் பாக்கலை சாராகன்... ஓ.கே.. இப்ப என்ன..? நீங்க கேட்டது கூட நல்லது தான்.. இல்லைன்னா உங்களுக்குத்தான் பிறகு கஸ்ரமாயிருக்கும்.. "
சாரகன் நாக்கு வரண்டு உதடு உலர்ந்து போயிருப்பதாய் உணர்ந்தான். இந்த இழப்பு வாழ்வையே அடித்துப் போட்டு சின்னாபின்னமாக்கி விடாது என்று அவனுக்குத் தெரியும்.. இரண்டு வாரமோ மாதமோ பின் மனது வழமைக்குத் திரும்பக்கூடும். அப்புறம் இச்சம்பவம் எப்போதாவது ஞாபகிக்கையில் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அதுவரை ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டேயிருக்கும். அது வழமைச் செயல்களைப் பாதிக்க விடக்கூடாது என்று சாரகன் நினைத்துக் கொண்டான்.
'என்ன சாரகன் பேசாமலிருக்கிறீங்க.. தொடர்ந்தும் நாங்க இப்பிடியே இருக்கலாம் என்று நான் நினைக்கிறன்.. நீங்க என்ன சொல்லுறீங்க.."
சாரகன் மீண்டும் மீண்டும் அமைதியாயிருந்தான். ஒரு தலைக் காதல் என்பது உண்மையில் காதல் இல்லை என்கிறார்கள் மனவியலாளர்கள். அது காதல் மீதான ஒரு ஏக்கம் தானாம். காதலோ ஏக்கமோ.. அவ்வளவு தானா.. இது தான் முடிவா..? வேறு ஏதாவது வகையில் நிரோஷாவுடன் பேசி.. எப்பிடிப் பேசி.. நீங்க இல்லையென்றால் செத்திடுவன்.. வாழ்க்கையே இல்லாமல் போயிடும்.. இப்பிடி ஏதாவது.. அடி செருப்பாலை.. இவ்வளவு தானா நீ என்று இப்போது சாரகன் தன்னையே கேட்டுக்கொண்டான்.
'தெரியேல்லை.. நிரோஷா.. ஆனா இந்தப் பிரச்சனைக்கு சண்டை பிடிச்சுக்கொண்டு பிரிஞ்சு போறதென்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கும். ஆனா அதுக்கு முதல் நான் சில விஷயங்களை மறக்க வேணும். என்னாலை முடியும்.. " என்று தொடர்ந்தவனை 'நிறைய அனுபவம் உள்ளவர் மாதிரிச் சொல்லுறிங்க.." என்று குறுக்கிட்டாள் நிரோஷா.. சாரகன் சின்னதாய்ச் சிரித்தான்.
'அதுக்குப்பிறகு நான் உங்களோடை கதைக்கிறன்.. அது வரை நன்றி வணக்கம்.." கை குவித்துச் சொன்னான்..
'கீப் இற் அப்.." என்றாள் நிரோஷா
'உங்கட வாழ்த்தைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் உனக்கு உப்படித்தான் நடக்கும். அந்த ஒவ்வொரு முறையும் இப்பிடியே செய் எண்ட மாதிரியெல்லோ இருக்கு..அப்பிடியெதுவும் நடந்தால் உங்களுக்குத்தான் அடியிருக்கு.." இயல்பான உற்சாகம் இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனாலும் வலிந்து வரவழைத்துச் சொன்னான்.
இப்போது நிரோஷா பலமாகச் சிரித்தாள்.
'இந்தச்சிரிப்புத்தானே...." என்றெழுந்த மனதை 'ச்சே.. சும்மாயிரு.." என்று சாரகன் அடக்கினான்.
ழூ ழூ ழூ
அம்மாவிற்கும் என்னை அலைக்கழித்த பெண்களிற்கும் அர்ப்பணம்.. ராத்திரி நித்திரைக்குப் போகு முன் படித்த புத்தகத்திலிருந்த வசனம் சாரகனின் ஞாபகத்தில் காரணமின்றி வந்து போனது. கூடவே உதட்டோரம் ஒரு சிரிப்பும்.. அவன் புரண்டு படுத்தான்.
முன்பெல்லாம் விடுமுறை நாட்களிலும் அதிகாலை எழும்ப வேண்டியிருக்கும். இப்போது அப்படி இல்லை. பத்து பதினொரு மணிவரை தூங்க முடிகிறது.
தொலைபேசி கிணுகிணுத்தது. அருகிலேயே அது இருந்த போதும் எழுந்து சென்று எடுக்கின்ற அலுப்பில் அவன் படுத்திருந்hன். அம்மா வந்து எடுத்து விட்டு உனக்குத்தான் என்று சொல்ல எரிச்சல் வந்தது. றிசீவரை வாங்கினான்..
'ஹலோ.."
'ஹலோ நான் அட்சயா கதைக்கிறன்.. "
சாரகனை விட நாலைந்து வயது இளைய அவள் சில மாதங்களுக்கு முன்னர்தான் அறிமுகமானாள். அவ்வப்போது போன் பண்ணி அவள் அடிக்கும் அரட்டை சில சமயம் எரிச்சலை வரவழைக்கும். சில சமயம் பொழுது போகச்செய்யும். சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிசு படுத்திப் பேசுவதும் அடிக்கடி கோபிப்பதும் அவளுக்கு வழமையானவை. 'சின்ன வயது தானே.. அது தான் அப்படி.." என்று சாரகன் நினைத்துக் கொள்வான்..
'சொல்லு.. " தூங்கியெழுந்த சோர்வு அவன் வார்த்தைகளில் தெரிந்தது.
'என்ன நித்திரையை குழப்பிட்டேனா..?"
'குழப்பிட்டாய்.. இனி என்ன செய்ய முடியும்.. சொல்லு.."
'உங்கடை நம்பர் என்ன.."
உள்ளிருந்து ஓடிவந்த பதில் சாரகனின் தொண்டைக்குழிக்குள் சுதாகரித்து நின்று கொண்டது. ஏதேதோ சம்பவங்களெல்லாம் ஞாபகத்தில் வந்து போகத்தொடங்கின.
'ஏன்.. கேட்கிறாய்.."
'நியூமராலஜி புத்தகம் ஒண்டு கிடைச்சிருக்கு.. அது தான் பார்க்கிறதுக்கு கேட்டனான்... சொல்லுங்கோ.. என்ன நம்பர்.."
'இல்லை.. எனக்கு அதிலயெல்லாம் நம்பிக்கையில்லை.. " என்றான் சாரகன்.
'பரவாயில்லை.. எனக்குச் சொல்லுங்கோ.." அட்சயா விடாது கேட்டாள்..
'ஏய் முடியாதென்று சொல்லுறனெல்லே.. விடன்.." சாரகன் உண்மையிலேயே கோபப்பட்டான். அவள் சடாரென்று தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு அட்சயா கதைக்காது விடக்கூடும்.
நித்திரை முழுதும் முறிந்து விட அறையை விட்டு வெளியே வந்த போது எதிர் வீட்டிருக்கின்ற ராகுலன் பென்சிலும் கொப்பியுமாக எதிரில் வந்தான். இரண்டாவது வகுப்பில் படிக்கும் அவன் எப்போதாவது வந்து அண்ணா அம்மாவைப்பற்றி பத்து வசனம், உலகம் பற்றி பத்து வசனம் எழுதி;த் தாங்கோ என்பான். இன்றைக்கும் அது எதற்காகவோ தான் வந்திருக்க வேண்டும்.
'என்னடா.." என்று கேட்டான் சாரகன்.
'அண்ணா ரீச்சர் சொன்னவ பாரதியார் எழுதின பாட்டு ஏதாவது எழுதிக்கொண்டு வரச்சொல்லி.. சொல்லுறியளே.. எழுதுறன்.."
சாரகன் யோசிக்கத் தொடங்குமுன்னரே எதேச்சையாக அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்தன..
'நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி.." ராகுலன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.
'முழுப்பாட்டும் என்னண்ணா.."
'கொஞ்சம் பொறு..எடுத்தாறன்" சாரகன் உள்ளே போனான்.
இது (சிறுகதை என்று சொல்லவே மாட்டன்) 2003 சுடரொளியில் வெளிவந்தது. இவ்வாறானவற்றை நான் சுடரொளிக்குத் தான் அனுப்புவேன். எப்போதாவது சுடரொளிக்கு சிறுகதைப் பஞ்சம் வந்தால் அது இவ்வாறானவற்றையும் வெளியிடும்.
|
|
|
| இலண்டனில் இரண்டு நிகழ்வுகள் |
|
Posted by: Mathan - 11-03-2005, 10:00 PM - Forum: நிகழ்வுகள்
- Replies (7)
|
 |
இலண்டனில் இரண்டு நிகழ்வுகள்
1. எழுத்தாளர் சந்திப்பு 19-11-2005
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/meeting---19%5B1%5D.11.05.jpg' border='0' alt='user posted image'>
2. குறும்பட விழா 20-11-2005
<img src='http://www.appaal-tamil.com/images/stories/News/vimbam-2005.jpg' border='0' alt='user posted image'>
தகவல் நன்றி: இராஜன்/அப்பால் தமிழ்
|
|
|
| பாகிஸ்தான் கதஸ்ராஜ் கோயிலை நினைவு சின்னமாக மாற்ற முடிவு |
|
Posted by: aathipan - 11-03-2005, 09:21 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.tribuneindia.com/2003/20030702/ind.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tribuneindia.com/2005/20050313/ind1.jpg' border='0' alt='user posted image'>
பாகிஸ்தான் கதஸ்ராஜ் கோயிலை நினைவு சின்னமாக மாற்ற முடிவு
புதுடில்லி: இந்தியாவுடனான உறவு ஓரளவு சுமூகமாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள கதஸ்ராஜ் கோயிலை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக மாற்றும்படி பரிந்துரை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் சாக்வால் மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற கதஸ்ராஜ் சிவன் கோயில். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலை செப்பனிடும் பணி கடந்த ஜூன் மாதம் துவங்கியது. பாக்., பயணம் மேற்கொண்ட பா.ஜ., தலைவர் அத்வானி புனரமைப்பு பணியை துவக்கி வைத்தார்.
இந்தக் கோயில் மற்றும் அதன் வளாகத்தை 2.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் சீரமைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தக் கோயிலை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக மாற்றும்படி பரிந்துரை செய்யவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
|
|
|
| உனது நினைவுகளோடு |
|
Posted by: இளைஞன் - 11-03-2005, 08:48 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (14)
|
 |
'உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்' அண்மையில் வெளியான காதல் திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த பாடல். அது என்னையும் கடந்த காலத்துக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது. என்னையும் அறியாமல் என் மனசு அந்த நாட்களை நினைவுகளுக்குள்ளும், கனவுகளுக்குள்ளுமாய் தொலைந்து விடுகிறேன்.
தினம் தினம் இல்லாது விட்டாலும் சிலநேரங்களில் மனசை அலைக்கழித்து விடுகின்ற அவளது நினைவுகள்.... வாய்கட்டப்பட்ட பிராணியாய் அல்லாடும் என்நிலை. என்னை வாழவைத்துத் தன்னையழித்துப் போன அவளது ஞாபகங்களுக்குள்ளிருந்து என்னால் எழமுடியாத துயரில் என் ஆயுள் கரைந்து விடும் நிலையில் இன்னொருத்தியின் கணவனாக நான்.
ஏன் நாங்கள் பிரிந்தோம் ? என்னிலா அவளிலா தவறு ? இருவரும் பங்காளிகளாய் எங்களையே ஏமாற்றி ஏன் இத்தனை வலியையும் சுமையாக்கி விட்டோமோ ? அவளை நினைக்கின்ற போதுகளில் இப்படித்தான் உள்ளத்து சிம்மாசனத்தில் ஏறி
உட்கார்ந்து விடுகின்ற கேள்விகளைத் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இன்றைய திகதியை என்றுமே மறந்துவிடாத நாளாக என்னுள் கண்ணீரைக் கனப்படுத்திய நாளிது. கட்டிலை விட்டு இறங்காமல் படுக்கையில் மனசை அலையவிட்டபடி விழிகளை மட்டும் மூடியபடி படுத்திருந்தேன்.
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" நெற்றியில் முத்தமிட்டு எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி....
"எழும்புங்கோ வெளியிலை போட்டு வருவோம்....."
என் துணைவியின் அக்கறை கலந்த எழுப்பல் அது.
"எழும்புங்கோ?"
என்னை உலுக்கிப் போர்வையை இழுத்தாள்.
"விடும் கொஞ்ச நேரம் படுக்கப்போறேன்."
"இல்லை எழும்புங்கோ. இண்டைக்கு உங்கடை பிறந்த நாளெல்லோ கனநேரம் நித்திரை கொள்ளப்படாது."
"நீர் வெளிக்கிடும். நான் அதுக்கிடையில் எழும்பீடுவன்."
அவளைச் சமாளித்துக் குளிக்க அனுப்பிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன். கண்ணுக்குள் அவள்தான் கரைச்சல் தந்து கொண்டிருந்தாள். மனசெங்கும் அந்தரத்தில்
உடல் பதற உயிர் நாடிகள் வலியில் துடிதுடித்தபடியிருக்க.... மீண்டும் அவள் வந்துவிட்டாள்.
"என்ன இன்னும் எழும்பேல்லயா? எழும்புங்கோ?" யன்னல் திரைச்சீலையை விலக்கி வெளிச்சத்தை உள்ளே வர அனுமதி கொடுத்தது போல் சூரியஒளி என் முகம் வரையும் வந்து நின்றது. உடுப்பு அலமாரியைத் திறந்து C&A கடையின் பையொன்றை என்னிடம் நீட்டினாள்.
"என்ன இது? உங்களுக்கு நேற்றொரு உடுப்பெடுத்தனான். பாருங்கோ பிடிச்சிருக்கோண்டு....?"
"இதென்ன கேள்வி நீரெடுத்தா எனக்குப் பிடிச்சதாத்தானே எடுத்திருப்பீர்...."
"சரி.. எழும்பிக் குளிச்சிட்டு வாங்கோ வெளியிலை போட்டு இண்டைக்கு ரெஸ்ரோரண்டிலை மத்தியானம் சாப்பிடுவோம்."
இத்தனை அன்பால் என்னை நனைக்கின்ற இவளுக்குக்கூட ஒரு நம்பிக்கையுள்ளவனாக இல்லாமல் இன்னும் அவளும் எனக்குள் வாழ்ந்தபடி... நினைப்புகளையெல்லாம் ஆக்கிரமித்து... அவள்...
யாரை மறக்க? யாரை நினைக்க? குழப்பமில்லாத தெளிவான பதிலொன்றையும் என்னால் சொல்லிவிட முடியவில்லை. எழுந்து விறாந்தைக்கு வந்த நான் காதல் படத்தில் என்னைக் கொள்ளை கொண்ட அந்தப்பாடல் 'உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்' பாடலைப் போட்டுவிட்டுக் குளியலறைக்குள் நுழைகிறேன்.
என்றுமே நீ நிம்மதியாய் இருக்கக்கூடாது என்றோ என்னவோ என் காதல் ஏழு வருடங்களுக்கு முன்னால் கரைந்து போய் இன்னும் கலையாத நினைவுகளாய் என்னைக் கலங்கடிக்கும் என் காதல். அந்தப்பாடலை எத்தனையோ தரம் கேட்டாயிற்று.... இப்போ அந்தப்பாடல் எனக்கு மனப்பாடமாயும் விட்டது. அந்தளவுக்கு என்னை ஆக்கிரமித்துவிட்ட அந்தப் பாடலைக் கேட்டபடி குளித்து முடித்து வெளியில் வருகிறேன்.
இண்டைக்கும் சோகப்பாட்டோ ? சோகப்பாட்டிலை அப்பிடியென்ன சுவையோ தெரியாது?
அப்பாவியாய் சிரித்தபடி சேரனின் ஓட்டோகிராபிலிருந்து 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை மாற்றிவிட்டாள் அவள். நம்பிக்கை தரும் அந்தப்பாடல் அவளுக்குப் பிடித்த பாடல். அதை அடிக்கடி கேட்பாள்.
"இப்பிடியான பாட்டுக்களைக் கேளுங்கோ.... மனதுக்கும் சந்தோசமாயிருக்கும்..." என்றாள்.
"எத்தனை பாட்டுக்களைக் கேட்டாலும் 'உனக்கென இருப்பேன்' பாட்டுமாதிரியில்லை" என்றேன்.
"அப்ப ஓட்டோ கிராப் 'நினைவுகள் நெஞ்சினில்' பாட்டையேன் ஓட்டோகிராப் வந்த புதிசிலை கேட்டனீங்கள்?"
"அதுவும் நல்ல சோகப்பாட்டு அதுதான்..." என்றேன் தாமதிக்காமல்.
"இப்ப வாற படங்களிலையெல்லாம் எப்பிடியாவது ஒரு காதல் ஒரு சோகப்பாட்டு கட்டாயமாய் வந்திடும்..." என்றாள் அவள். எத்தனை வாதித்தாலும் கோபமே இல்லாமல் திரும்பவும் என்னிடமே அடைக்கலமாகிவிடுகிற அவளுடன் வாதிட்டு அவளை வலிப்படுத்த விரும்பாமல் அமைதியாகிவிடுகிறேன்.
மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டு கடைகளுக்குப்போய் அவளது உறவினர்களிடம் போய் எல்லோரும் எனக்கான பிறந்த நாள் வாழ்த்துத் தந்து வீடு திரும்பிவிட்டோம். நான் கணணிக்குள் புகுந்து இணையவலை நண்பர்களுடன் உரையாடலில் இறங்க, "வெளியிலை அக்காவீட்ட ஒருக்காப் போட்டு வாறன்" என மாலை 3.30 இற்கு வெளியில் போனவள், ஐந்து மணிக்குத் திரும்பி வந்து அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுக் கேட்டாள்.
"என்ன மௌனம்?"
"இல்லை இங்கை வாரும்..." என அழைத்தேன்.
"என்ன?" என் தோழில் சாய்ந்தபடி கேட்டாள். அவளை ஆதரவாக அணைத்து அவள் தலையை ஆதரவாகக் கோதிவிட்டபடி கேட்டேன்.
"உமக்குப் பெண்குழந்தையா, ஆண் குழந்தையா விருப்பம்?"
தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தபடி கேட்டாள்....
"உங்களுக்கு?"
"எனக்குப் பெண் குழந்தைதான் விருப்பம்..." என்றேன்.
"எனக்கென்ன குழந்தையெண்டாலும் பிரச்சனையில்லை...."
"பெண்குழந்தையெண்டா நீங்கள் பேர் வைக்கிறது.... ஆண் குழந்தையெண்டா நான் பேர் வைக்கிறது. உங்களுக்கு விருப்பமான பேரைச் சொல்லுங்கோ" என்றாள்.
எனக்குள் இருந்தவளின் பெயரைச் சொல்லிவிட... அவளும் ஒரு ஆண்குழந்தையின் பெயரைச் சொன்னாள்.
"உமக்கேனந்தப் பெயர் விருப்பம்?" இது நான்.
"உங்களுக்கேனந்தப் பெயர் விருப்பம்?" கேட்டாள்.
"நல்ல பெயர் அதுதான்" என்றேன். "எனக்கும் அப்பிடித்தான்" என்றாள் அவளும்.
என் கைகளிலிருந்து விலகி புத்தகம் ஒன்றினுள் தன் சிந்தனைகளைச் சிதறவிடுகிறாள். நான் மீண்டும் இணைய வலையில் இணைகிறேன். இணைய வலையில் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்த இணைய வலைத் தோழியுடன் உரையாடல் தொடர்கிறது. பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னாள் என் இணையவலைத் தோழி.
பழைய ஞாபகங்களை அவளும் மீள ஞாபகப்படுத்திவிட்டு வெற்றியின் அடையாளமான படமொன்றை அனுப்பி வைத்தாள்.
இணைய வலையில் தன் எழுத்துக்கள் மூலம் எனக்கு அறிமுகமான அவளுடன் ஒருநாள் உரையாடலின்போது என் கடந்த காதல் பற்றியும் சொல்ல நேர்ந்தது. என் வாழ்வின் மறுபக்கத்தை அறிந்து வைத்திருக்கும் இரண்டாவது ஜீவன் என் இணைவலைத் தோழிதான். என் அன்புத் தோழனின் பின்னால் இணைவலையில் கிடைத்த தோழமை இவள் தான். இணைவலையில் அறிமுகமாகும் ஆயிரமாயிரம் பேருக்குள்ளிருந்து என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக என்னைவிட நான்கு வயதால் மூத்த அவளிடம் என் சோகக் கதைகளெல்லாம் சேமிப்பாகியிருந்தது. பலதரம் 'முட்டாள் பயலே' என்றும் திட்டியிருக்கிறாள்.
"அம்மா, அப்பா, சகோதரத்துக்காகத்தான் அவளை விட்டனான்... அவள் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்... அவையளைச் சமாளிச்சிருப்பன்.... அதுக்குள்ளை கட்டுநாயக்கா நான் தாண்ட அவள் நஞ்சைக்குடிச்சு..... இப்ப இருக்கிறாளோ இல்லையோ எதுவும் தெரியாமல் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்."
"என்ரை சினேகிதன்தான் ஆசுப்பத்திரியிலை போய்ப்பாத்தவன். பிறகு ஆளைக் காணேல்லயாம். அவளின்ரை தாய் தகப்பனும் எங்கையெண்டு தெரியேல்ல. ஆனா ஒருக்கா ஒரு சாத்திரி சொன்னதாம் எனக்கு நாப்பது வயதிலை அவளை திரும்பச் சந்திப்பேனாமெண்டு. அதுமட்டும் தானிருக்கமாட்டனாமெண்டு என்ரை சினேகிதனிட்டைச் சொல்லிவிட்டிருந்தவள். சிலவேளை அந்தச் சாத்திரி சொன்னமாதிரி நாப்பது வயதிலை அவளைச் சந்திக்காட்டிலும் பறவாயில்லை. இப்ப இருக்கிறாளா? இல்லையா? எப்பிடியிருக்கிறாளெண்டு தெரிஞ்சா போதுமெனக்கு."
"எட லூசுப்பயலே, அப்பிடியெண்டா எப்பிடியடா காதலை மறந்து இன்னொருத்தியைக் கலியாணங்கட்டச் சம்மதிச்சனி....."
"எல்லாம் அம்மா, அப்பா, சகோதங்களுக்காகத்தான்... ரண்டுவீடும் பணத்திமிர் பிடிச்சதுகள். அதுக்கு நானும் அவளும் பலியாகீட்டோம். கடைசியா நான் வெளிநாடு வெளிக்கிடுறதுக்கு முதல்நாள் காலியிலை சந்திச்சனான். அப்பவும் சொன்னனான் பொறுமையா இரு, நான் திரும்பி வருவனெண்டு...."
"இல்லை நாங்கள் சேரமாட்டம். அப்பாவின்ரை ஆக்களுக்கை ஆருக்கோ என்னைக் கட்டிக் குடுக்கத்தான் அப்பா முடிவெடுத்திருக்கிறார். என்னை இப்பவே உன்னோடை
கூட்டிக்கொண்டு போ... நான் இஞ்சை இருந்தா செத்துப்போவன்."
"என்ர நெஞ்சிலை விழுந்து அழுதாள். கடைசியா நான் வெளிக்கிடப்போறனெண்டதும் ஒரு கடிதத்தைத் தந்தாள் இதை நீ விமானத்திலையிருந்து வாசிக்க வேணுமெண்டு.... அந்தக்கடிதத்தை விமானம் ஏறமுதல் உடைக்கப்படாதெண்டு தன்ரை தலையிலை தொட்டு சத்தியமும் வாங்கிக் கொண்டு போனவள்தான், போயேவிட்டாள்."
"கட்டுநாயக்காவுக்கு தனிய வந்திருந்தாள். அவளுக்குக் கிட்டவும் போகேலாமல் வீட்டுக்காறர் நிண்டிச்சினம். அம்மா அந்தப்பிள்ளை பாவமம்மா. அப்பாட்டைச் சொல்லுங்கோம்மா.... நீங்கள் சொல்றவரையும் நான் காத்திருக்கிறனம்மா... உங்களோடை கூப்பிட்டு வைச்சிருங்கோம்மா.... என்னாலை நிம்மதியா வெளிக்கிடேலாமலிருக்கு.... கண்கள் கலங்கக் கெஞ்சினேன் அம்மாவிடம்...."
"நானென்னப்பு செய்ய... அப்பாவும் அதுகின்ரை அப்பாவும் எதிரும் புதிருமாயெல்லோ நிக்கினம்.... நீ யோசிக்காதை நான் அப்பாவோடை கதைக்கிறேன்.... அம்மாவும் கண்கலங்கி என்னை ஆறுதல்படுத்தி விமானம் ஏறும் நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டுத் திரும்ப அவளும் வந்தாள். விமானநிலையத்தில் தெரிந்தவர்களிடம் தனது குடும்ப செல்வாக்கைப் பயன்படுத்தி என்னிடம் வந்து அழுதாள். அழுதது மட்டுந்தான்... எதையும் பேசவில்லை போய்விட்டாள்."
இதயத்தில் சுமையுடன் நான்... விமானம் மேலேறுகிறது. அவளது கடிதத்தை உடைக்கிறேன். வழமையான அன்பான விசாரிப்புடன்....
'நீ இந்த நாட்டின் எல்லையைத் தாண்டும் போது நான் செத்துவிடுவேன்.... என்னால் இந்தப் பணக்கார மனிதர்களோடு உயிருடன் வாழமுடியாது. நீ எங்காவது நன்றாய் வாழவேண்டும். இதயபூர்வமாகவே வாழ்த்துகிறேன். ஒரு நஞ்சுப்போத்தலுடன் என்னை முடித்து கொள்கிறேன்....
அன்புடன்
............................'
வானுக்கும் பூமிக்கும் இடையேயான அந்தரத்தில் நான்... பதின்னான்கு மணத்தியாலங்கள் தாண்டினால் மட்டுமே நான் ஒரு நிலத்தில் இறங்க முடியும். என்ன செய்ய? ஏது செய்ய? எதுவுமே புரியாது நான்.... மனம் நிறைந்த துயரை அடக்கியபடி விமானம் தரையிறங்கும் வரையும் ஊமைக் காயத்துடனான இதயவலியை உள்ளுக்குள் பூட்டிவைத்து அன்னிய மண்ணொன்றில் கால்பதித்து.... நண்பனிடம்தான் அவளைப்பற்றி விசாரித்தேன்.
"நான் போய்ப் பாத்தனான்.... நாலு நாளாலை ஆளில்லை ஆசுப்பத்திரியிலை.... தாய் தகப்பனும் எங்கையோ போட்டினம்.... சிலவேளை எங்கையாவது வெளிநாடு வெளிக்கிட்டிருப்பினமெண்டு நினைக்கிறேன்..... நீ யோசிக்காதை..... சந்திக்கிறதெண்டு விதியிருந்தா கட்டாயம் சந்திப்பாய்..." என்றான் அவன். அவளைப்பற்றி விசாரிக்காத நபர்களேயில்லை.... ஐந்து வருசமா தேடல் விசாரிப்பு.... ஒரு பதிலுமில்லை.... ஒருநாள் அம்மாதான் சொன்னா அவள் நஞ்சு குடிச்சதிலை உயிர் தப்பேல்லயாம்.... செத்துப்போட்டாளெண்டு..... போனவருசம் அப்பான்ரை சினேகிதன்ரை மகளான என் துணையை அப்பாவின் முடிவுடன் முடிவு செய்துவிட்டு எனக்கு அறிவித்தார்கள்..... தங்கைகளினதும் தம்பியினதும் வாழ்வை காரணம் காட்டி திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்து... கொழும்பில் போயிறங்கி.... என் காதலை என் காதலியைத் தேடி... எந்தப்பயனுமின்றி அவள் எங்கேயிருக்கிறாள்? என்ன செய்கிறாள்? எதுவுமே அறிய முடியாமல்.... இன்னொருத்தியின் கணவனாகி ஒரு வருசம் முடிஞ்சிட்டுது....
"அப்ப உம்முடைய துணைவிக்குத் தெரியுமா உமக்குள்ளை இருக்கிற அந்த ஒருத்தியைப் பற்றி?"
"இல்லை!"
"ஏன் சொல்லேல்ல?"
"அந்தளவு தைரியம் வரேல்ல?"
"இந்தப் பிள்ளை எனக்காக என்னவும் செய்யும். அந்தளவுக்கு என்னை நேசிக்குது.... நம்புது... அப்பிடியிருக்க எப்பிடி அதைச் சொல்ல...?"
"முதல் ஒருத்தி காதலாலை என்னைக் கரைச்சு அழவைச்சிட்டுப் போட்டாள்.... இவளோ தன்ரை நேசிப்பாலையும், நேசத்தாலையும் என்னை ஆக்கிரமிச்சு.... எனக்குள்ளையே இருந்திட்டுப் போகட்டும் இந்த நினைப்பும் சோகமும்...."
"அனேகமான காதல்கள் தோல்வியிலை தானே முடிஞ்சிருக்கு... இனி இருக்கிற வாழ்க்கையை நல்லபடியா வாழவேணும்."
'ஒவ்வொரு பூக்களுமே" பாடலை இணையம் வழிதந்துவிட்டு மீண்டும் சந்திப்பதாய் விடைபெற்றுச் சென்றாள் என் இணைய வலைத்தோழி....
என் சுவாச அறைகளின்
சுழற்சியாய் இருந்தவளே !
காதல் வார்த்தையையே
கௌரவப்படுத்திய கற்பூரமே.
கடைசியாய் நீ தந்த கடிதம்
என்றோ நீ சொன்னது போல
கைகூடாத காதலின் சாட்சியாக....
உனது கண்ணீர் முழுவதையும்
கட்டியனுப்பிய கடலது.
கட்டுநாயக்கா நான் தாண்ட
நஞ்சு தின்ற என் காதலியே !
எங்கேயடி இருக்கிறாய் ?
கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்....
கண்ணீரைத் துடைத்தபடி நான்....
முதற் காதல் - நீ
தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள்
இன்னும் விரல்களில்....
வாசமடிக்கிறது.
கூடப்பிறந்தவர்க்கும் ,
உன்னைக் காதலிக்க
உயிர் தந்தவர்க்கும்
அர்ப்பணமாய் என் காதல்.
அம்மாவிடம் உன்னைப்பற்றி
விசாரித்தேன்.
நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.
கனவெல்லாம் என்னை நிரப்பி
உன் வாழ்வையே தறித்து
எனக்கு வாழ்வு தந்தவளே !
உன்னோடு கழிந்த
ஒவ்வொரு கணங்களும்
நினைவுக் காப்பகத்தில்
கௌரவமாக - நான்
இன்னொருத்தியின் கணவனாக.....
உன் நினைவுகளோடு.....!
<b>எழுதியவர்: சாந்தி ரமேஸ்வவுனியன்
நன்றி: தமிழமுதம்</b>
|
|
|
|