![]() |
|
இன்னும் வருக, காதல்கள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இன்னும் வருக, காதல்கள்! (/showthread.php?tid=2620) |
இன்னும் வருக, காதல்கள்! - இவோன் - 11-03-2005 சுட்ட கவிதைகள்.. எழுதியவரெவரோ அவருக்கு நன்றி.. வேண்டாம் என்று மறுத்த என் மனதுடன் போராடி இறுதியாய் உனக்கொரு வார்த்தை சொல்ல சம்மதம் பெற்றேன் என் வார்த்தைகள் உன்னைத் தொந்தரவு செய்யாவண்ணம் உன் நினைவுகள் இனி என்னைத் தொந்தரவு செய்யாவண்ணம் வேறொரு உயிரில் உயிர் வைக்க இன்று முதல் முயல்கிறேன். ஒருமுறைதான் காதல் அரும்புமென உள்ளம் நினைத்திருந்தது முகமறியா முதற்காதலின் முறிவால் உறவொன்றின் இணைப்பை ஏற்க உள்ளம் மறுத்திருந்தது விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில் விளையாடச்சொன்னது இன்னும் பல உணர்வுளால் தூசி படிந்து இரண்டு வருடங்களாய் பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று உன்னால் குடிபூரல் கோலாகலமாய் நடக்கின்றது முதற் காதலின் வெறுமை இதயத்தின் ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக மேடையில் வாழக்கைத் தொடரின் அடுத்த காட்சி அரங்கேறும் |