![]() |
|
தமிழர் தாயகத்துக்கான கட்டட வடிவமைப்பு கட்டுமானங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: தமிழர் தாயகத்துக்கான கட்டட வடிவமைப்பு கட்டுமானங்கள் (/showthread.php?tid=2614) |
தமிழர் தாயகத்துக்கான கட்டட வடிவமைப்பு கட்டுமானங்கள் - வினித் - 11-04-2005 தமிழர் தாயகத்துக்கான கட்டட வடிவமைப்பு கட்டுமானங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிகள் அறிமுகம் [வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2005, 14:26 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] தமிழர் தாயகப் பகுதிகளில் கட்டிட வடிவமைப்பு கட்டுமானங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிகள் (Design and Construction Guidelines) இன்று வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. <img src='http://img494.imageshack.us/img494/3535/200511040018lf.jpg' border='0' alt='user posted image'> தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் இன்று வடக்கு-கிழக்கில் செயலாற்றும் பொறியியலாளர்கள் சந்தித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடச் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இந்த வழிகாட்டு நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. <img src='http://img494.imageshack.us/img494/7020/200511040024zc.jpg' border='0' alt='user posted image'> இந்த நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை: தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழர் தாயகப் பகுதியில் அனைத்து கட்டுமானப் பணிகளும் தமிழீழ தேசத்தின் எதிர்கால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு முன்னெடுப்பட வேண்டும் என்பதில் அக்கறையாகவுள்ளார். திட்டங்கள் மற்றும் கட்டுமானங்கள் முன்னெடுக்கும் போது அவை மக்கள் நலனை மையப்படுத்தியதாகவும் சூழல் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டுமேயன்றி வெறுமனனே நிதியை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது. சிறிலங்கா அரசினது திட்டமிட்ட செயற்பாடுகளால் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாத சூழல் எமது பிரதேசத்தில் உள்ளது. இருப்பினும் வேறு உதவிகள் மூலம் நடைமுறைப்படுத்துகின்ற சிறிய சிறிய திட்டங்களை கூட சிறப்பான முறையில் திட்டமிட்டு தரமானதாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு. <img src='http://img494.imageshack.us/img494/6414/200511040036vf.jpg' border='0' alt='user posted image'> போர் நடைபெற்ற காலங்களில் எமது மண்ணில் நடைமுறையரசு சிறப்பாக செயலாற்றி வந்தாலும் திட்டமிடலுக்கும், அபிவிருத்திக்குமான முக்கியத்துவம் கூடுதலாக கொடுக்க முடியவில்லை. <img src='http://img494.imageshack.us/img494/7835/200511040047rf.jpg' border='0' alt='user posted image'> தற்போதுள்ள சூழலில் கடந்தகால போர்ச் சூழலைக் காரணமாக கூறிக்கொண்டு திட்டமிடலிலும், அபிவிருத்திலும் பின்தங்கிவிட முடியாது. இவற்றில் நாம் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும். தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகள் எதிர்காலத்தில் பல நன்மைகளைத் தரக்கூடிய விதத்தில் திட்டமிட்ட முறையில் அமைக்கப்பட வேண்டும். எமது தேசத்தை வளமான தேசமாக கட்டியெழுப்புவதில் பொறியியலாளர்களின் பங்கு முக்கியமானது என்றார். திட்டமிலுக்கும் மேம்பாட்டுக்குமான செயலகத்தினால் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டுமானங்கள் தொடர்பான வழிகாட்டும் நெறிகள் பற்றி வடக்கு கிழக்கில் பல்வேறு திணைக்களங்களிலும் பணியாற்றும் பொறியியாளர்களுடன் கலந்துரையாடும் சந்திப்பாக இது அமைந்தது. இந்த வழிகாட்டும் நெறிகளை அடிப்படையாகக் கொண்டே தமிழர் தாயகத்தில் எதிர்காலத்தில் கட்டுமானப் பணிகளும் அவற்றுக்கான அனுமதி மற்றும் கண்காணிப்புச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: புதினம் |