Yarl Forum
பாகிஸ்தான் கதஸ்ராஜ் கோயிலை நினைவு சின்னமாக மாற்ற முடிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பாகிஸ்தான் கதஸ்ராஜ் கோயிலை நினைவு சின்னமாக மாற்ற முடிவு (/showthread.php?tid=2623)



பாகிஸ்தான் கதஸ்ராஜ் கோயிலை நினைவு சின்னமாக மாற்ற முடிவு - aathipan - 11-03-2005

<img src='http://www.tribuneindia.com/2003/20030702/ind.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tribuneindia.com/2005/20050313/ind1.jpg' border='0' alt='user posted image'>

பாகிஸ்தான் கதஸ்ராஜ் கோயிலை நினைவு சின்னமாக மாற்ற முடிவு

புதுடில்லி: இந்தியாவுடனான உறவு ஓரளவு சுமூகமாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள கதஸ்ராஜ் கோயிலை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக மாற்றும்படி பரிந்துரை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் சாக்வால் மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற கதஸ்ராஜ் சிவன் கோயில். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலை செப்பனிடும் பணி கடந்த ஜூன் மாதம் துவங்கியது. பாக்., பயணம் மேற்கொண்ட பா.ஜ., தலைவர் அத்வானி புனரமைப்பு பணியை துவக்கி வைத்தார்.

இந்தக் கோயில் மற்றும் அதன் வளாகத்தை 2.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் சீரமைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தக் கோயிலை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக மாற்றும்படி பரிந்துரை செய்யவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.