| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 223 online users. » 0 Member(s) | 221 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,505
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,240
|
|
|
| தொடரலாமா? |
|
Posted by: inthirajith - 11-06-2005, 12:49 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (21)
|
 |
அண்மையில் ஒரு தொடர்கதை எழுத தொடங்கினேன்.இடையில் அந்த கதையின் நாயகனின் தொடர்புக்காக முயற்சி செய்து இப்போ தான் முழுக்கதையின் முடிவும் கிடைத்தது அவன் ஆதரவுடன் அவன் சோகத்தை பகிர அனுமதியும் கொடுத்து விட்டான்
சுடுகின்றபுதைமணல்களின் தொடர்ச்சி மனது நிறைய பாரத்துடன் தொடரவிரும்புகிறேன்
|
|
|
| பித்தலாட்டத்தை அம்பலமாக்கியது தமிழ் நாளிதழ்! |
|
Posted by: thiru - 11-05-2005, 08:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>புலிகள் ஆட்களைப் பிடித்துவந்து கூட்டம் நடத்துவதாகப் பிதற்றித்திரியும்; கூட்டத்தின் பித்தலாட்டத்தை அம்பலமாக்கியது தமிழ் நாளிதழ்!</b>
'வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்' என்று தமிழிலே ஒரு பழமொழி உண்டு. அதுபோலப் புலிகள் எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதற்கென்றே ஒரு கும்பல் செயற்படுகிறது.
அக் கும்பலுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கிடைப்பதே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது தயவினால்தான்.
என்ன வியப்பாக உள்ளதா?
ஆனால் உண்மை அதுதான். இந்தக் கும்பல் உயிர்வாழ்வதே 'புலி எதிர்ப்பு' என்ற ஒரே ஒரு கொள்கையால்தான். அவர்களுக்கு வேறெந்த இலட்சியமும் இல்லை. இலக்கும் இல்லை. கொள்கை கோட்பாடு எதுவுமே கிடையாது. இருந்து பாருங்கள். தப்பித்தவறி ரணில் சனாதிபதியானால் ஏதாவது ஒரு சாக்கிட்டுக்கொண்டு ரணிலின் வாலைப் பிடிக்க வந்துவிடுவார்கள்.
இவர்களது 'புலி எதிர்ப்புத்' திறமைக்காக மாறிமாறி வரும் சிறிலங்கா அரசாங்கங்கள் உண்ண உணவும், கைச்செலவுக்குப் பணமும் இவர்களை வளர்த்து வருகின்றன.
அதாவது 'நஞ்சு மாலை' தரித்த புலிகள் அமைப்பின் இருப்புத்தான் இவர்கள் 'செல்லிடப்பேசி(cellular phone) மாலை'யுடன் வளைய வரவும் காரணமாகிறது. புலிகள் அமைப்பு இல்லையேல் இவர்களுக்குப் பிழைப்பேது?
எனவே இப்போது சொல்லுங்கள். பிரபாகரன் அவர்களது தயவில்தானே இவர்கள் உயிர்வாழ்கிறார்கள்!
சரி, இனி விடயத்திற்கு வருவோம். மேற்படி கும்பல் எங்கு புலிகள் அமைப்போ அல்லது வெகுசன அமைப்புகளோ கூட்டங்கள் பேரணிகள் நடத்தினாலும் சொல்லிவைத்ததுபோல 'புலிகள் ஆட்களை வாகனங்களில் ஏமாற்றி அழைத்துவந்து கூட்டம் நடத்தினார்கள்" என்று சொல்லிவிடுவார்கள்.
இந்தக் கும்பல் -தாமே சனநாயகத்தின் காவலர்கள் என்றும் புலிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் திக்கெட்டும் கூச்சலிடும் கூலிக் கும்பல்- எப்படிச் சலுகைகளைக் காட்டித் தமிழ் மக்களின் முதுகில் சவாரி விடுகிறார்கள் என்பதை இன்றைய தினம் சிறிலங்காவில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
அந்தச் செய்தியை அந்த நாளிதழில் உள்ளது உள்ளபடியே கீழே தருகிறேன்.
<b>'' பிரதமருடனான சந்திப்புக்கு நடேஸ்வரா கல்லு}ரிக்கு கூட்டிச் செல்லப்பட்ட மக்கள்</b>
வேலைவாய்ப்பு மற்றும் ஆலய புனர்நிர்மாணத்துக்கான நிதியுதவிகளைப் பெறுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை காலை யாழ் நகரிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஸ்ரீதர் திரையரங்கு அலுவலகத்திற்குச் சென்றவர்களுக்கு புதுவித அனுபவமொன்று கிடைத்துள்ளது.
சமுர்த்தி வேலை வாய்ப்பு, தொண்டர் ஆசிரியர் நியமனம், கோயில்களுக்கான காசோலைகள், நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் யாழ் நகரில் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் வழங்கப்படுமெனவும் அதனை நேரில் பெற்றுக் கொள்ள வருமாறும் கடிதம் மூலம் ஈ.பி.டி.பி. யினர் அழைத்திருந்தனர்.
இதற்கமைய நேற்றுக் காலை சுமார் 9.30 மணியளவில் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் சுமார் ஆயிரம் பேர் கூடினர். பலத்த பாதுகாப்புச் சோதனையின் பின்னர் கிடைக்கப் போகும் நியமனக் கடிதங்களுக்காகவும் காசோலைகளுக்காகவும் எல்லோரும் காத்திருந்தனர்.
அரை மணிநேரத்தின் பின்னர் அறிவிப்பொன்று வந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தக் கடிதங்களும் காசோலைகளும் தெல்லிப்பளையில் வைத்தே வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டு, காலை 11 மணியளவில் நான்கைந்து பஸ்களில் அனைவரும் நெருக்கி ஏற்றப்பட்டு இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் காங்கேசன்துறை வீதியுூடாக தெல்லிப் பளைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கும் பலத்த சோதனை நடைபெற்ற பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லு}ரிக்கு அனைவரும் கூட்டிச் செல்லப்பட்டனர்.
கல்லு}ரியின் கீழ் மாடியிலேயே நிகழ்வு நடைபெறுமென முதலில் கூறப்பட்டு அனைவரும் அங்கு கூடியிருக்க, நிகழ்வு மேல் மாடியிலேயே நடைபெறுமென அறிவிக்கப்பட அனைவரும் அங்கு சென்றனர்.
எனினும், நிகழ்வு கீழ் மாடியில், மேல்மாடியில் என மாறி மாறிக் கூறப்பட்டு நான்கு தடவை அனைவரும் கீழ் மாடிக்கும் மேல் மாடிக்கும் ஏற்றி இறக்கப்பட்டு, கடைசியில் கீழ் மாடியில் நிகழ்வு நடைபெற்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவ்வாறு நடந்ததாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 1.15 மணியளவில் அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலத்த பாதுகாப்புடன் வந்தார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அனைவரையும் சந்திப்பாரென கூறிய அமைச்சர் தேவானந்தா, இது ஒரு அறிமுகச் சந்தர்ப்பமெனவும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் முழு உதவியும் கிடைக்குமெனவும் கூறினார்.
பிரதமரும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் நாட்டுப் பிரச்சினை பற்றியும் உரையாற்றியதுடன் இந்தத் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
சுமார் 2 மணியளவில் நிகழ்வு முடிவடைந்தது. மீண்டும் காங்கேசன்துறை வீதியுூடாகச் சென்றால் பஸ்களைத் தாக்க வீதிகளில் பொது மக்கள் பலர் கூடியிருப்பதாகக் கூறி சேந்தான் குளம், மாதகல், திருவடி நிலை (சுழிபுரம்) ஊடாக கூட்டி வந்து பின்னர் மானிப்பாய் ஊடாக யாழ் நகருக்கு மாலை 4.30 மணியளவில் கூட்டிச் சென்றனர். "
<b>நன்றி:</b> தினக்குரல் (05-10-2005)
இனி, இதேவிடயம் தொடர்பாக மேற்படி கும்பல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் 'இந்த மக்களின் வருகை' குறித்த பகுதிகளை வாசியுங்கள்
'அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு கொட்டும் மழையிலும் திரண்டு வந்த மக்கள் மத்தியில் பிரதமர் மகிந்த... செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உரை! யாழ் நடேஸ்வராக்கல்லூரி மண்டபத்தில் தீடீர் ஏற்பாடு!"
'பாதுகாப்பு காரணங்களுக்காக பகிரங்க அறிவிப்பு எதுவும் செய்யப்படாத நிலையில் ஈ.பி.டி.பி விடுத்த தனிப்பட்ட அழைப்பின் பேரில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்."
'கொட்டும் மழை என்றும் பாராமல் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு திரண்டு வந்த மக்கள் மத்தியில் மகிந்த ராஐபக்ச அவர்கள் உரையாற்றுகையில்..."
'...செயலாளர் நாயகம் அவர்கள் தனது உரையின் இறுதியில் தெரிவிக்கும்போது கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ,இங்கு நீங்கள் திரண்டு வந்திருப்பதை விடவும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நீங்கள் வந்திருப்பதுதான் வரவேற்கத்தக்க விடயமாகும். உங்கள் மீது விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை எதிர் கொண்டு ,இங்கு நீங்கள் திரண்டிருப்பது எனது நம்பிக்கையினை மேலும் பலப்படுத்தியுள்ளது! .."
செயலாளர் நாயகத்தையும் பிரதமரையும் காண்பதற்கென வந்திருந்த மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த நேரம் தவறியதால் வாகனங்களை விட்டு ,இறங்காமலேயே திரும்பிச்சென்றுள்ளனர்.
இப்பொழுது சொல்லுங்கள். 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...'
<b>தொகுப்பு: </b>திருமகள் (ரஷ்யா)
|
|
|
| மஜா |
|
Posted by: SUNDHAL - 11-05-2005, 03:57 PM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
மஜா
மலையாளத்தில் சில்வர்ஜுப்ளி அடித்த படம். தமிழில் லேசாக நொண்டியடிக்கிறது. அதிரடியான அந்நியனை கொடுத்த விக்ரம், கிராமத்து கெட்டப்பில்! சொய்ய்ய்ங்ங் என்று இறங்குகிறது சுதி!
திருட்டை தொழிலாக கொண்ட மணிவண்ணன், பசுபதி, விக்ரம் மூவரும் அதை முற்றிலும் விட்டொழித்துவிட்டு வேறு ஊருக்கு போகிறார்கள் பிழைக்க. அங்கே ஊரே நடுங்குகிற வில்லன் முரளி (இவர் மலையாள குணச்சித்திர நடிகர்) அவருக்கு ஒரு அழகான மகள் அசின். வில்லனின் மகளும் வில்லியாக இருக்கிறார். அவரது ஆணவத்தை அடக்கி அசின் கழுத்தில் தாலி கட்டுகிறார் விக்ரம். அப்புறம் என்னாச்சி? அங்கங்கே சுவாரஸ்யம்.. அங்கங்கே ஆவ்...வ்!
அடியாட்கள் புடை சூழ, விஜயகுமார் வீட்டிற்கு வந்து ரகளை பண்ணுகிற அசின் அழகான ராட்சசி. அவர் பேச பேச பொறுத்துக் கொள்ள முடியாத விக்ரம் அசின் கன்னத்தில் பளார் விட, குதிரை வேகம் பிடிக்கிறது திரைக்கதை. இவரால் அனுபிரபாகர் திருமணம் நின்று போகிற எரிச்சலில் அசின் கழுத்தில் கட்டாய தாலி கட்டிவிட்டு அப்புறம் வரப்போகிற சவால்களை சந்திப்பார் என்று எதிர்பார்த்தால் சப்!
அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் விக்ரம். மாமிச மலைகளோடு மோதி வில்லன் முரளியை அதிர வைப்பது சுவாரஸ்யம் என்றால், சண்டை முடிந்தபின் உங்க பொண்ணை கொடுங்க என்று கேட்டு அதிர வைப்பது இன்னும் சுவாரஸ்யம். சண்டை காட்சிகளில் நெருப்பு பறக்கிறது. பசுபதியோடு விக்ரம் மோதும் சேற்று சண்டை, பிரமிப்பு...பிரமாண்டம்!
தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசிக்கொண்டு பசுபதி. போதும் போததற்கு அனுபிரபாபகர் மீது காதல். கொடூரமான வில்லன் இமேஜ் உள்ள பசுபதி, ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பது ஆச்சர்யம். ஆற்றில் குளிக்கும் அனுவுக்கு, தாமரை இலைமேல் ரோஜாவை வைத்து பசுபதி அனுப்ப, இன்னொரு பக்கத்திலிருந்து இலைமேல் செருப்பை வைத்து விக்ரம் அனுப்புவது கலகலப்பு.
வாய் ஓயாமல் பேசி கொண்டேயிருக்கிறார் மணிவண்ணன். இவரின் வளர்ப்பு பிள்ளைகளாம் பசுபதியும், விக்ரமும். அதற்காக மணிவண்ணன் தற்கொலை செய்து கொள்ள ஓடுவதும் இவர்கள் பதறியடி பின்னால் ஓடுவதும் எரிச்சல்.
திடீரென்று கரெண்ட் கட் ஆகிவிட, வைர நெக்லசை திருடியது யார் என்ற எம்.ஜி.ஆர் காலத்து காட்சிகளும் உண்டு. இதுதான் படத்தின் திருப்புமுனையாம். அடக்கடவுளே...
வித்யாசகரின் இசையும், பாலசுப்ரமணியத்தின் கேமிராவும் ப்ளஸ்!
மஜா என்றால் ஜாலி என்று அர்த்தமாம். கேலி பண்ணியிருக்கிறார்கள்.
-ஆர்.எஸ்.அந்தணன்
|
|
|
| Realignment of Sinhala Nationalist forces spells trouble |
|
Posted by: kurukaalapoovan - 11-05-2005, 03:49 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (4)
|
 |
"Radicalisation of Sri Lanka polity resulting in the realignment of Sinhala Nationalist forces as witnessed by the coalitions for Sri Lanka's presidential elections, raises the spectre of nationlist politics of the 50s and is leading towards imminent collapse of the peace process," said Gajendrakumar Ponnambalam, Tamil National Alliance (TNA) parliamentarian, addressing a forum on Sri Lanka's Peace prospects, held in Washington D.C Friday at the Center for Strategic International Studies (CSIS).
Ambassador Goonetilleke
The forum on "The Sri Lanka Peace Process: Dead end or is there hope?" organized by CSIS in collaboration with East-West Center (EWC), an education and research organization, was addressed by Hon. Bernard A B Goonatilleke, Ambassador of Sri Lanka to the US, Gajendrakumar Ponnambalam, and Dayan Jayatilleke, Adjunct Professor at The Johns Hopkins University.
The forum was moderated by Muthiah Alagappa, Director of EWC, and Teresita C. Schaffer, former US Ambassador to Sri Lanka and Director South Asia Program at CSIS.
Gajendrakumar Ponnambalam
"Decades of war, followed by peace overtures and expressions of readiness to restructure Sri Lankan state by Sinhala leaders, disoriented Sinhala nationalist forces and dulled their enthusiasm during interim years. The cessation of hostilities during the last three years, however, has again reinvigorated the Sinhala Nationalists who have been further emboldened by International community's one-sided actions to restrain and reprimand the Liberation Tigers," said Gajendrakumar.
Dayan Jayatilleke
"Tamil people are aware that Colombo, while talking peace, was always trying to undermine Tamil struggle through its active support to the paramilitaries. Tamils are yet to be convinced of the bona fides of the Sri Lanka government of its readiness to share power. This central issue will determine the prospects for peace," Gajendrakumar said.
Ambassador Goonatillake attributed the deadlock in the peace process to four factors: (a) Norwegians pressured Colombo to sign the Cease Fire Agreement (CFA) in a haste, resisting changes to the text of CFA, and not allowing time to address concerns of Sri Lanka security forces, (<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo--> LTTE continually shifting 'goal posts' to expand its control over territory and dislodge the Security forces from NorthEast, © limitations in Sri Lanka Monitoring Mission (SLMM) in containing the CFA breaches, mainly by the LTTE, and (d) policy of appeasement adopted by the international community that has emboldened the LTTE.
New thinking has to be adopted by both parties to co-exist peacefully, he said.
Ambassador Vollebaek
Norwegian Ambassador to the United States and former Norwegian Foreign Minister, Mr. Knut Vollebaek, responded that Norway served only as a facilitator and did not engage in pressuring any side. "When I talked to Ms Kumaratunge when Norway was first invited it was evident that Colombo needed a facilitator. That is why Norway accepted the invitation," he said. He urged both parties to go forward from what has already been achieved. "There is no need to reinvent the same process again," he said.
Dayan Jayatilleke said LTTE was the cause for the collapse of the past four peace efforts. He said LTTE will not be satisfied by federalism as evidenced by its assassination of several eminent Tamil federalists including Neelan Thiruchelvam and Appapillai Amirthalingam. He said International community [US and India] should first send a strong message to the Liberation Tigers to shun violence, and if this fails, they should be prepared to augment the Sri Lanka military to subdue the LTTE.
Ambassador Teresita Schaffer
Ambassador Schaffer disagreed with Mr Jayatilleke's statement that in 1983 JVP lost 60,000 cadres "defending the 13th amendment to the constitution."
Ambassador Schaffer reaffirming her statement she made earlier in Colombo on the need for US to engage the LTTE, said: "If US is going to play a role [in promoting peace] it needs to have legal flexibility to communicate with different parties in dispute. At present terrorism law precludes any kind of contact other than low level and housekeeping tasks. I would like a US policy decision that allows US representatives to decide if he/she can do something useful by engaging or communicating with LTTE or not and make decision based on that. Most diplomats prefer flexibility to make that decision."
Thanks: TamilNet
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16261
<span style='font-size:21pt;line-height:100%'>SriLanka diplomatically on a defensive mode?</span>
|
|
|
| ஆச்சேயைத் தொடர்ந்து இலங்கையிலும் தமிழருக்கு காதுகுத்த வேணும் |
|
Posted by: kurukaalapoovan - 11-05-2005, 01:51 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தோனேசியாவின் ஆச்சே இனப் பிரச்சனைக்குப் பின்னர் உலகின் அடுத்த சமாதான உடன்படிக்கை இலங்கையிலேயே ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக இடப்பெயர்வுப் பிரிவின் பொறுப்பாளர் டெனிஸ் மக்மனாரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் தேசிய மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான சர்வதேச கருத்தரங்கை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரை:
http://www.eelampage.com/?cn=21438
|
|
|
| மாவீரர் நினைவு நாள் |
|
Posted by: MEERA - 11-05-2005, 01:26 PM - Forum: நிகழ்வுகள்
- Replies (17)
|
 |
இந்த வருடம் இலண்டனில் மாவீரர் எழுச்சி நாள் 27ம் திகதி காலை 11 மணிக்கு தேசிய தலைவரின் உரையுடன் (நேர்முக அஞ்சல்) ஆரம்பமாகிறது.........................
(இரண்டு பிரிவுகளாக இரு இடங்களில்) மிகுதி மிக விரைவில்.....................
|
|
|
| ஹலோ பிரதர் ஒரு …தம்† கொடு:தூக்கில் தொங்கிய பிணம் |
|
Posted by: வினித் - 11-05-2005, 12:07 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ஹலோ பிரதர் ஒரு …தம்† கொடு* தூக்கில் தொங்கிய பிணம் பீடி கேட்ட அதிசயம்
விளம்பரம்
திருவனந்தபுரம், நவ. 5- தூக்கில் தொங்கிய பிணம் பீடி கேட்ட அதிசயம் கேரளாவில் நடந்தது.
கொல்லம் அருகே உள்ள வாளத்துங்கல் என்ற இடத்தை சேர்ந்தவர் தாஜுதீன் (வயது 34). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு பொழுது போக்கு …தண்ணி† அடிப்பது. காலையில் எழுந்ததும் பல் தேய்க்க மறந்தாலும் மது குடிக்க மறப்பதில்லை.
…கிக்† ஏறி விட்டால் போதையில் என்ன செய்கிறேhம் என்று அவருக்கே தொpயாது. இதனால் அடிக்கடி தாஜுதீன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகவும் தவறுவதில்லை.
சம்பவத்தன்று நன்றhக மூச்சு முட்டக் மது குடித்த தாஜுதீன் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லை. வீட்டினுள் சென்ற தாஜுதீன் திடீரென போதை அதிகமாக ஏதோ ஞாபகத்தில் தனது மனைவியின் சேலையை எடுத்து கழுத்தில் கட்டி மறுமுனையை மின்விசிறியில் கட்டியுள்ளார்.
சிறிது நேரத்தில் கயிறு கழுத்தை இறுக்கவே, அப்படியே மயக்கமானார். நீண்டநேரம் கழித்து அவரது மனைவி வீட்டில்; வந்து பார்த்தபோது தனது கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டார்.
இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தாஜுதீன் இறந்து விட்டதாகவே அனைவரும் கருதினர். ஆனாலும் ஒருவேளை லேசாக அவருக்கு உயிர் இருக்குமோ என்ற சந்தேகத்தில் கொல்லம் அரசு மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு தாஜுதீனை பாpசோதித்த டாக்டர் நிலைமை மோசமாக இருப்பதால் திருவனந்தபுரம் மருத்துவ கல்லு}hp மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தாஜுதீனை மீண்டும் ஆம்புலன்சில் திருவனந்தபுரம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த இடைவெளிக்குள் தாஜுதீனுக்கு மயக்கம் தௌpய ஆரம்பித்தது. அடுத்த நொடியே ஸ்டிரெச்சாpல் இருந்து துள்ளி எழுந்த அவர், ஆம்புலன்ஸ் டிரைவாpன் தோளைத் தட்டி, …தம்பி ஒரு தம் இருக்குமா?† என்று கேட்டுள்ளார்.
அவ்வளவுதான் டிரைவருக்கு மயக்கம் வராத குறைதான். அலறியடித்து ஆம்புலன்சை அந்த இடத்திலேயே நிறுத்தி பேயோ, பிணமோ என நினைத்து ஓட முயற்சித்துள்ளார். தாஜுதீன் டிரைவரை கெட்டியாகப் பிடித்து, தனக்கு ஒன்றுமில்லை, இனிமேல் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறிய பிறகுதான் ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை மீண்டும் கொல்லத்திற்கு திருப்பினார்.
அதற்குள் தாஜுதீன் வீட்டில் உறவினர்கள் குவியத் தொடங்கி விட்டனர். வீட்டில் ஒரே அழுகை சத்தம். இந்த சமயத்தில் தான் தாஜுதீன் ஆம்புலன்சை வழியிலேயே திருப்பி அனுப்பி விட்டு வீட்டுக்கு ஜhலியாக நடந்து சென்றhர்.
இதைப் பார்த்த உறவினர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். இறந்தவர் எப்படி மீண்டு; வந்தார்? இதுதான் கொல்லம் பகுதியில் இப்போதைய பரபரப்பு பேச்சு
http://www.dinakaran.com/
|
|
|
| கார்த்திகை ஒளிர்கிறது....! |
|
Posted by: kuruvikal - 11-05-2005, 09:04 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (18)
|
 |
<img src='http://img355.imageshack.us/img355/6342/heroesday10px.jpg' border='0' alt='user posted image'>
<b>கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட...
மரணம் மண்டியிட
மண்ணில் வீழ்ந்தோம்
அன்னை மடிமீது
அந்நிய ஆதிக்கம்...
உயிர் மூச்சு நெருப்பாக்கி
உற்ற கடமை செய்தோம்..!
உறவுகள் எமக்கு
உலகெங்கும்
உணர்வுகள் எமக்குள்ளும்
உயிர் வாழ...
உங்கள் உரிமைக்காய்
உயிர் கொடுத்தோம்...!
உறங்கும் நாள் குறித்தோம்
எங்கள் வாழ்வுக்காய் அல்ல...
உங்கள் பிஞ்சுகள்
உரிமை கொண்டாட
தமிழன் நான்
தனித்துவமானவன்
எண்ணங்கள் காத்திடுங்கள்...!
இன்னும்...
உற்ற அன்னை
உள்ளுக்குள் அழுகிறாள்
உருவில்லை என்றாலும்
எங்கள் மூச்சுகள் உணருது
உங்கள் மூச்சொடு
இறுதி இலட்சியம் வென்றிடுங்கள்
வீணடிக்காது விரைந்து
வீர வரலாறு
இறுதி அத்தியாயம் எழுதிடுங்கள்...!
மாவீரனை வணங்குதல்
"இலட்சியம் காத்தல்"
அர்த்தப்படுத்தி
உயிர் விதைகள்
ஊன்றிய இடத்தில்
சத்தியம் செய்யுங்கள்..!
உரிமைகள் வென்று
விடுதலை வாங்கி
உதாரணமாகி நில்லுங்கள்..!
எமக்காய்..
கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது...
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் சுமக்கின்றார்
வீழ்ந்தும் வாழ்கிறோம்
நினைவுகளாய்
விதை நிலங்களில்..!
என்றும் வீரராய் வாழ்வோம்
சுதந்திர தேசத்தில்...!</b>
(படம் - தமிழ்நாதம்)
http://kuruvikal.yarl.net/
|
|
|
|