Yarl Forum
அழகே அழகே தமிழழகே பாடல் வேண்டும். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: அழகே அழகே தமிழழகே பாடல் வேண்டும். (/showthread.php?tid=2597)

Pages: 1 2


அழகே அழகே தமிழழகே பாடல் வேண்டும். - tamilini - 11-05-2005

பாடல் வேண்டும்.
நித்தியசிறி மகாதேவன் பாடிய அழகே அழகே தமிழழகே என்ற பாடல் ஒலிவடிவமாக யாராவது இருந்தால் தந்துதவ முடியுமா உறுப்பினர்களே. அல்லது அந்தப்பாடல் உள்ள இறுவெட்டுப்பற்றியாவது சொல்லியுதுவீர்களா..??ஓலி ஒளி வடிவமாக ரீரீஎன் னில் அடிக்கடி போடுவார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 11-05-2005

இந்த பாடலை நான் கேட்டதில்லை, சினிமா பாடலா அல்லது அல்பம் ஆக வந்ததா?


- hari - 11-05-2005

தங்கையே அப் பாடல் என்னிடமுள்ளது, நாளை தரவேற்றம் செய்து அனுப்புகின்றேன்.


- Mathan - 11-05-2005

ஆகா நன்றி ஹரி. அந்த இணைப்பை களத்தில் தந்தால் அனைவரும் கேட்க கூடியதாக இருக்கும்,


- hari - 11-05-2005

ஆம், மதன்! களத்தில் தருகின்றேன், அந்த இருவெட்டு வீட்டில்தான் இருக்கிறது நாளை கொண்டுவந்து இணைத்துவிடுகின்றேன்,


- tamilini - 11-05-2005

Mathan Wrote:இந்த பாடலை நான் கேட்டதில்லை, சினிமா பாடலா அல்லது அல்பம் ஆக வந்ததா?

சினிமாப்பாடல் இல்லை மதன். தாயகப்பாடல் நித்தியசிறியின் அழகிய குரலில் அருமையான பாட்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-05-2005

hari Wrote:தங்கையே அப் பாடல் என்னிடமுள்ளது, நாளை தரவேற்றம் செய்து அனுப்புகின்றேன்.

மகிவும் நன்றி மன்னர் அண்ணா. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 11-05-2005

தகவலுக்கு நன்றி தமிழினி, நித்தியசிறியின் குரலில் தாயக பாடல் வெளிவந்தது எனக்கு தெரியாது. ஹரி இணைத்ததும் கேட்டு பார்க்கின்றேன்.


- tamilini - 11-05-2005

பின்னணிப்பாடகர்கள் பலரின் குரலில் தாயகப்பாடல்கள் இருக்கிறது. ஹரிகரணம் உண்ணிக்கிரிஸ்னன். சித்ரா. என அனேகர் பாடியுள்ளார்கள். நித்யசிறியின் (இன்னும் சிலர்) இந்தப்பாடல் அதற்கு அபினயம் பரதநாட்டிய வடிவில் மிகவும் அருமையாக இருக்கிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 11-05-2005

தமிழினி,

இவை அனைத்தும் ஒரே சிடியில் வெளியிடப்பட்டவையா?

ஹரி,
தமிழினி குறிப்பிட்ட மற்றய பாடல்களும் உங்களிடம் இருந்தால் இணைத்து விடுங்கள். அனைத்தையும் ஒரேயடியாக இணைக்க முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது ஒன்று ஒன்றாக தரலாம்.

அந்த பரதநாட்டிய அபிநயம் ஒளிவடிவில் பார்க்க கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.


- tamilini - 11-05-2005

இல்லை மதன் ஒரே இறுவெட்டில் அல்ல வெவ்வேறு இறுவெட்டிக்களில் பல பாடல்கள் கேட்டிருக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 11-05-2005

தாயக தயாரிப்புக்களை கேக்க இருக்கிற உணர்வு அதற்குரிய அன்பளிப்பை செலுத்தி கேக்வேண்டும் என்று ஏன் உங்களை நினைக்கவைப்பதில்லை?

புலத்திலுள்ள உங்களுக்கே அந்த சிறுதொகை அன்பளிப்பை செலுத்துவது கடினம் என்றால் வேறு எத்தனைபேர் முன்வருவார்கள்?

ஈழத்து தாயாரிப்புகளை குறுக்குவழியின்றி நேர்மையான முறையில் அதிக செலவானாலும் பெற்று ஊக்குவியுங்கள் வலுச்சேருங்கள். எதிர்காலத்திலும் ஈழத்து பொருளாதாரத்தின் ஏற்றுமதி சந்தையின் பெரும் பங்கு புலத்திலுள்ள உங்கள் ஒவ்வெருவரின் கைகளில் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.


- MEERA - 11-05-2005

இதோ இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்......
http://www.eelamstore.com/shop/index.php?c...7bbe893a95db4ca


- tamilini - 11-05-2005

kurukaalapoovan Wrote:தாயக தயாரிப்புக்களை கேக்க இருக்கிற உணர்வு அதற்குரிய அன்பளிப்பை செலுத்தி கேக்வேண்டும் என்று ஏன் உங்களை நினைக்கவைப்பதில்லை?

புலத்திலுள்ள உங்களுக்கே அந்த சிறுதொகை அன்பளிப்பை செலுத்துவது கடினம் என்றால் வேறு எத்தனைபேர் முன்வ ருவார்கள்?

நல்ல கருத்து குறுக்ஸ் அது தான் பாடல் இறுவெட்டு விபரத்தை கேட்டிருந்தேன். எந்த இறுவெட்டில் என்று கேட்டிருந்தேன். சில பாடல்கள் இறுவெட்டில் வருவதும் இல்லை என்று நினைக்கிறேன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- மின்னல் - 11-05-2005

பாடலைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் கிளிக் பண்ணவும்

http://www.eelatamil.com/eelamsongs/OzhiMu...kam/azhake.smil

பாடலை டவுன்லோட் செய்யமுடியாது


- tamilini - 11-05-2005

நன்றி மின்னல். இது தான் அந்தப்பாடல் மதன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 11-05-2005

நன்றி மின்னல்,

ம் கேட்டுப் பார்த்தேன், நன்றாக இருக்கிறது பாடல், நீங்கள் குறிப்பிட்ட ஒளிவடிவில் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


- இவோன் - 11-06-2005

அந்தப் பாடல்.. 2000 ம் ஆண்டின் முற்பகுதிகளில் வெளிவந்த ஒளிமுகம் தோறும் புலிமுகம் இசைத் தட்டில் இடம் பெற்றது. கவிஞர் அறிவுமதி அந்தப் பாடல்களை எழுதியிருந்தார். தினா இசையமைத்திருந்தார். அந்த இசைத்தட்டில்.. நித்தியசிறீ தமிழே பாடலையும், எங்கள் தலைவன் பிரபாகரன் முருகனுக்கே நிகரானவன் என்ற பாடலையும் அனுராதா சிறீராம் ரண்டாயிரத்திலே ஈழம் கிடைக்கும் என்ற பாடலையும் சிறீநிவாஸ் கிட்டண்ணா.. மற்றும் திலீபன் நினைவான பாடலையும்.. புஷ்பவனம் குப்புசாமி பனைமரமே பாடலையும் பாடியிருந்தார்கள்.


- இவோன் - 11-06-2005

Quote:சில பாடல்கள் இறுவெட்டில் வருவதும் இல்லை என்று நினைக்கிறேன்.

தனித்தனியாக வந்தாலும் பின்னாளில் கண்டிப்பாக இறுவட்டில் இணைத்து வெளியிடுவார்கள். எந்தப் பாடல் என்று சொல்லுங்கள்.. கண்டிப்பாக எந்த இறுவட்டு என்று சொல்வோம்.


- Mathuran - 11-06-2005

நித்திய சிறியின் இனிய குரலில் தமிழ் மொழியின் அழகினை கேட்கும் பொழுது அருமையாய் உள்ளது.