Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 503 online users.
» 0 Member(s) | 500 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,505
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,240

 
  மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி
Posted by: Vaanampaadi - 11-06-2005, 09:41 PM - Forum: கவிதை/பாடல் - Replies (33)

மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி.

மகானே!

மீண்டும் பிறந்து வா!
குண்டுகளுக்கும்
தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ!
ஆகையால்
மீண்டும் பிறந்து வா!

தலைவனை இழந்து துயரப்படும்
குழந்தைகள் நாங்கள்!

'இன்று' எங்களுக்கு
எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது

அம்மை அப்பனை
முதியோர் இல்லத்தில் சேர்க்க!
சகோதரனை சொத்துக்காக
ஹர சம்ஹாரம் செய்ய!
மனைவியை மந்தையாக்க!
எதிரிகளை முதுகில் குத்த!

என எல்லாவற்றையும்
இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது.

விலைமகளிடம் போய்விட்டு
விலை போகாமல் வந்தவன் நீ!

இன்று விலைமகளிடம் போய்விட்டு
விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்!
காலத்தைப் பார்த்தாயா மகானே!

வா! வந்து படித்த சிலருக்கேனும்
வாழும் வகையைச் சொல்லிவிட்டுப்போ!

ஏனெனில்
இவர்களெல்லாம்
ராமாயாணத்தையும் படித்துவிட்டு
கோயிலையும் இடிக்கிறார்கள்!
குரானையும் படித்துவிட்டு
குண்டும் வைக்கிறார்கள்!

மீண்டும் வா!
இன்னொரு கோட்சே எங்காவது இருப்பான்!
அவனிடம்இம்முறை என் முறை சாக என்கிறேன்!
பயப்படாமல் வா!
உனது தோளுக்கு காவலாகவும்
கொள்கைக்கு கோட்டையாகவும்
இன்று நானும் இருக்கிறேன்.

நன்றி/எம்.கே.

Print this item

  இதயமே என் இதயமே..
Posted by: அனிதா - 11-06-2005, 09:04 PM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

<img src='http://img334.imageshack.us/img334/8757/sogladd18dg.jpg' border='0' alt='user posted image'>


[size=15]என்னைக் கேளாமலே..
என்னவனின் நினைவுகளை..
நிரப்பிவிட்டாய்
என் இதயச் சுவர் எங்கும்...!

உன்னைக் கேளாமலே..
என்னவனையே..
பூட்டி வைத்துவிட்டேன்..
உனக்குள்...!

உன்னை..
கலங்க வைப்பதும்
காயப்படுத்துவதும்...
சிதற வைப்பதும்...
சிரிக்க வைப்பதும்...
நானல்ல ..என்னவனே தான்..!

இதயமே...
அது எனக்கு புரிகிறது...
உனக்கு புரிகிறதா..
புரிந்தால் என்னை மன்னிப்பாயா
இல்லை சிந்திப்பாயா....

<img src='http://img331.imageshack.us/img331/228/fancyheartbar5md.gif' border='0' alt='user posted image'>

(யாவும் கற்பனையே)

Print this item

  உயர்கல்விக்கான புலமைப்பரிசில்கள்.
Posted by: KULAKADDAN - 11-06-2005, 06:04 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (16)

<b>உயர்கல்வி கற்பதற்கு பல்வேறு புலமைப்பரிசில்கள் பல நாடுகளால் வழங்கப்படுகிறது. புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இவை பயன் தராவிட்டாலும் ஈழத்தில் உள்ள உங்கள் உறவுகள் பயன் பெறமுடியும் எனும் நம்பிக்கையில் எனக்கு தெரிந்த புலமைபரிசில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
</b>

<b>இவற்றில் பெரும்பாலனவை முதுவிஞ்ஞானமானி |(MSc )பட்டத்துக்கானவை. எனவே இலங்கையில் இளமானி (BSc, BBA, BCom, BA)பட்டத்தை பெற்றவர்களே விண்ணப்பிக்கமுடியும்.</b>
இப்பகுதிக்குள் பொதுநலவாயபுலமைபரிசில், ஜப்பான் நாட்டின் புலமைபரிசில் ,சார்க் புலமைபரிசில் பற்றிய விபரங்களை இணைக்கவில்லை. அவை இலங்கையில் அரசபணியில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்ககூடியவை. கீழே சொல்லபடுபவை அங்கு தற்கலிக பணி அனுபவமும், இளநிலை பட்டத்தில் நல்ல பெறுபேறையும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.

<b>1.தாய்லாந்து</b>

ஆசிய தொழில்நுட்பநிறுவன புலமைபரிசில் (Asian Institute of Technology)
முதுவிஞ்ஞானமானி பட்டத்துக்கனது.
www.ait.ac.th
இணைய தளத்தில் புலமைபரிசிலுக்கன பாடங்களையும் அவற்றிற்கான அடிப்படை தகுதிகளையும் பார்க்கமுடியும்.

<b>2.நோர்வே</b>

நோராட் புலமைபரிசில்
http://siu.no/vev.nsf/o/norad

<b>3. சுவீடன்</b>
லுண்ட் பல்கலைகழக லுண்ட் தொழில்நுட்பநிறுவகத்தில் (Lund Institute of Technology, Lund University)
http://www.lth.se/english/master/default.html

இந்த பக்கத்தில் மேலும் பல பாடநெறிகள் பற்றிய விபரங்களை பெறமுடியும்.
http://www.sweden.se/templates/cs/SISFront...ge____4908.aspx

<b>4.டென்மார்க்</b>
இரண்டு கற்கைநெறிகள் The Royal Veterinary and Agricultural University இங்கு வழங்கபடுகிறன.
http://www.mli.kvl.dk/

<b>5.பெல்ஜியம்</b>

1. இங்கு 15க்கு மேற்பட்ட கற்கைநெறிகள் பல்வேறு பல்கலைகழகங்களினாலும் நடாத்தப்படுகிறன. அவற்றிற்கான புலமைபரிசிலை ஒரு நிறுவனம் வழங்குகிறது.
www.vlir.be
மேலுள்ள இணையதளத்தில் பாடநெறிகள் பற்றிய விபரங்களையும் விண்ணப்பபடிவங்களையும் பெறமுடியும்.

International Training Programme
Optimisation in Diagnostic Radiology EHSAL-K.U.Leuven-VUB
Scientific and Technological Information Management in Universities and Libraries - an Active Training Environment 5 (STIMULATE 5) VUB
Webmaster and interactive Visualisation for trainers and Students UGent
Engendering Development Policy, Projects and Organisations UA
Poverty Reduction Strategy Papers and Civic Society Participation UA
Environmental Impact Assessment and Information and Communication Technology Application (EIA-ICT) VUB


organised by the VLIR
Master of Science in Ecological Marine Management (ECOMAMA)
Master of Science in Molecular Biology
Master of Science in Physical Land Resources
Master of Science in Water Resources Engineering
Master of Science in Food Technology
Master of Architecture in Human Settlements
Master of Science in Biostatistics
Complementary Studies in Food Science and Nutrition
Master of Science in Aquaculture
Master of Science in Environmental Sanitation
Master of Science in Nematology
Master of Science in Human Ecology

organised by the Universiteit Antwerpen (UA) under the VLIR-agreement
Master en Evaluation et Gestion du Dveloppement UA
Master en Globalisation et Dveloppement Economique UA
Master en Gouvernance et Dveloppement

2. கிராம அபிவிருத்தி முதுவிஞ்ஞானமாணி
http://www.agri-econ.ugent.be/IMRD/


<b>6.ஜேர்மனி</b>
கீழுள்ள இணைய தளத்தில் கற்கைநெறிகளையும் விபரங்களையும் பெறமுடியும்.

http://www.daad.de/portrait/en/

<b>7.ஐரொப்பிய நாடுகளில் கற்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய புலமைபரிசில்</b>

http://europa.eu.int/comm/education/progra...s/index_en.html

மேலுள்ளவை எனக்கு தெரிந்தவை மட்டுமே. இவற்றைவிட நீங்கள் மேலும் அறிந்திருந்தால் அவற்றையும் இணையுங்கள். பலரும் பயன்பெறமுடியும்.

இப்பகுதியில் இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு விபரங்களை இணைக்கவில்லை. அவை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.

Print this item

  புதுப் பொலிவு பெறும் பிரெஞ்சு பத்திரிகை &quot;லே மாண்டே'
Posted by: SUNDHAL - 11-06-2005, 04:00 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

பிரபல பிரெஞ்சு பத்திரிகையான "லே மாண்டே' புதுப் பொலிவு பெறுகிறது.

இன்டர்நெட், செல் போன் மற்றும் இலவச உள்ளூர் பத்திரிகைகள் வாயிலாக செய்திகளை அறிந்து கொள்ளும் முறை வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில், வாசகர் எண்ணிக்கை குறைந்துவருவதை சமாளிக்க லே மாண்டே இந்த மாற்றத்தை மேற்கொள்கிறது.

அதிக புகைப்படங்கள், கட்டுரைகள், வண்ணப் பக்கங்கள், பெரிய எழுத்துகளுடன் மாற்றி அமைக்கப்பட்ட வடிவில் இப் பத்திரிகை வரும் திங்கள்கிழமையில் இருந்து வெளிவர உள்ளது.

பத்திரிகையில் எழுத்துகளின் அளவு 13 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. மூன்றாம் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட செய்தி மற்ற பத்திரிகைகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில் அமைந்திருக்கும்.

தினசரி 3,24,000 பிரதிகள் விற்பனையாகும் "லே மாண்டே' பத்திரிகையின் தற்போதைய வாசகர் எண்ணிக்கை 20 லட்சம்.

இந்த மாற்றங்களின் மூலம் இந்த வாசகர் எண்ணிக்கையை தக்க வைக்கலாம் என்று "லே மாண்டே' கருதுகிறது.

Print this item

  காசிஆனந்தன் சிறப்புபேட்டி
Posted by: Birundan - 11-06-2005, 03:34 PM - Forum: தமிழீழம் - Replies (3)

`உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விடுதலையிலிருந்து என் உணர்வு விலகாது'

`எத்தனை வருட காலங்களாக என்னால் ஈழத்துக்கு வர முடியாமல், வர விடாமல் தடுப்புகள் போடப்பட்டாலும், என்னுடைய எழுதுகோல் ஈழத்தைப் பதிவு செய்வதை எவர் வந்தாலும் தடுக்க முடியாது'

உலகம் முழுவதிலும் பரவிய தமிழன் எங்காவது ஓரிடத்தில் தமிழனாக நிலைத்தானா?' என்று நியாயமாகவே கேட்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். 50,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தமிழைப் புறந்தள்ளி,-1,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆங்கிலத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்கள் இவருடைய கவனத்துக்குள் அதிகமாக இருக்கிறார்கள். மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்த நமது கவிஞர் இன்று தவிர்க்க முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கிறார்.

தனது மொழிமீது கொண்டுள்ள தீராப் பற்றுதலால், பிறமொழிகளெதுவும் வந்துகலந்துவிடக் கூடாதென்று கருத்துரைக்கின்றார். இதுவரை கலந்து விட்டவைகளைக் களைந்து கொள்வதற்கு தனது படைப்புகளில் அவர் தருகின்ற விளக்கங்கள் கனதியானவை. 2004 இல் அவர் வெளியிட்ட `தமிழனா..... தமிங்கிலனா?' என்ற நூலில் தமிழ்நாட்டுப் படைப்பாளிகளின் மொழிக் கலப்பை முறையாக விமர்சித்திருப்பதுடன் தமிழ் மொழியின் முரண்பாட்டாளர்களையும் முடிந்தவரை சாடியிருக்கிறார்.

`எத்தனை வருட காலங்களாக என்னால் ஈழத்துக்கு வரமுடியாமல்; வர விடாமல் தடுப்புகள் நேர்ந்தாலும் என்னுடைய எழுதுகோல் ஈழத்தைப் பதிவு செய்வதை எவர் வந்து தடுக்க முடியும்? என்கிற மிடுக்கான கேள்வி அவருடைய விழிகளில் எப்போதுமே மிதந்து கொண்டிருக்கிறது. நிறையவே எழுதுகிறார்.

எங்கும் இருக்கிற தமிழர்களுக்காக அவரால் எங்கிருந்தும் எழுத முடியும்! தமிழ்நாட்டின் மேடைகள் பல கவிஞர் காசி ஆனந்தன் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருப்பதால் ஓய்வுக்கும் அவருக்குமான நெருக்கம் மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், முயன்று கிடைத்த அவருடனான ஒருமணிநேர சந்திப்பில் தயாரான இப்பேட்டி நமது வாசகர்களுக்குக் கிட்டிய வாய்ப்பே!

இங்குள்ள கவிஞர்களின் மனோநிலையை ஈழத்துக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருப்பீர்கள். முடிவு சொல்லுங்கள்?

இங்கு உவமை தேடாமல் உண்மையை எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். நம்மவர்கள் ஈழத்தில் எங்காவது நடந்துபோகும்போது செவ்வரத்தம் பூவைப் பார்த்தால் அதில் போராளியின் குருதியைப் பார்க்கிறார்கள். அதுவே உண்மையான இலக்கியமும் கூட! ஆனால், குருதியில் செவ்வரத்தம் பூவைப் பார்ப்பது இலக்கியம் அல்ல. இங்கு அப்படித்தான் அதிகம் பேர் எழுதுகிறார்கள். வர்ணனை அதிகமாக இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை.

உங்களுடைய எழுதுகோல் இங்கே சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் இருக்கிறதா?

எந்தச் சூழலும் என்னுடைய எழுதுகோலைக் கட்டுப்படுத்தாது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் என்னுடைய உணர்வு ஈழத்தின் விடுதலையிலிருந்து விலகி ஓடாது. சில விடயங்களை நான் எழுதக்கூடாது என்கிற நிலை இருந்தாலும்கூட, எழுதக்கூடிய வகையில் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

சூழல்கள் தடுக்கிற கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு எழுத என்னால் முடியும்! (குரலில் மிகுந்த உறுதி தெரிகிறது) நேற்றைய, இன்றைய ஈழப் போராட்டத்தின் நாளைய நிலைமை என்ன?

வெற்றிதான்! எப்பொழுதும் அறமே வெல்லும் என்று நான் நம்புகின்றேன். தமிழ் இனத்தை முற்றாக அழித்தொழிப்பது என்கிற சிங்கள இனவெறிக் கோலம் அறத்துக்கு முரணானது.அறத்தையே கொலை செய்வது, அறத்துக்கு குழி பறிப்பது. அறத்துக்கு எதிரான இனவெறி எக்காலத்திலும் வெல்லாது. இறுதியான வெற்றி அவர்களிடம் போய்ச் சேராது என்பது உறுதி!

இன்னொரு விடயம், இதுவரையில் 18,000 பேர் களத்தில் போராடி மடிந்திருக்கிறார்கள். ஒரு போராட்டத்தை வளர்த்து வெற்றியின் விளிம்புக்குக் கொண்டு வந்து விட்டு மடிந்தார்கள். இவ்விரண்டு காரணங்களும் வெற்றி தவிர்க்கப்பட முடியாதது என்பதற்கும் தமிழீழம் மலரும் என்பதற்குமான நம்பிக்கைதான்!

உணர்ச்சிக் கவிஞர் என்று விளிக்கப்பட்டவர் நீங்கள். இது....(இடைமறிக்கிறார்)

உணர்ச்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. என்றோ ஒருநாள் ஆதித்தனார் ஐயா என்னை அப்படி அழைத்தார். அது அவர் என்மீது கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடு. என்னுடைய பெயருக்கு முன்பாக இதை நான் போட்டுக் கொள்வதில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் இது தாராளமாக இருக்கிறதே!

ஆம். வேந்தர், அரசர், பேரரசர், கோ, கவிக்கோ என்றெல்லாம் பல முன்னொட்டுகள். தமிழன் அடிமையாக வாழ்கிற காலத்தில் இவன் அரசு என்றும் வேந்தன் என்றும் பெயருக்கு முன் பின்னாகப் போட்டுக் கொண்டு அரசை இழந்து நொண்டியாக நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்தவரையில், பாவை எழுதுகிறோம். அவற்றை நம்முடைய மண்ணுக்காகவும் மொழிக்காகவும் படைத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.

ஈழம், மக்கள், விடுதலை - இவற்றுக்காகவே உங்களுடைய எழுதுகோல் இயங்கும் என்பது போன்றதொரு அடையாளத்தை - உணர்வை வெகு இயல்பாக ஏற்படுத்தியிருந்த நீங்கள் இன்று அங்கில்லை. இது குறித்த உங்களுடைய உளப் போக்கு எப்படி இருக்கிறது?

தூரங்களால் என்னுடைய உணர்வுகளை இல்லாமல் செய்ய முடியாது. நான் எங்கிருந்தாலும் என்னுடைய சிந்தனை ஈழத்தினின்று அகலாது. களத்தில் நிற்கிற வீரர்களின் ஈகம், தற்கொடை- உயிரிழப்பு இவற்றுக்கு ஈடாக நம்மால் எதையும் கொடுக்க முடியவில்லை என்கிற இயலாமை என்னைக் கடுமையாகத் துன்புறுத்துகிறது.

நமது மண்ணின் விடுதலைக்காக நம்மால் ஆன பணியை நம்முடைய ஆற்றலுக்கேற்ப செய்ய முடிந்ததைச் செய்யாமல் யாருமே மடிந்து விடக்கூடாது என்பதே எனது எண்ணம்!

போராட்டத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கிற ஒரு எழுதுகோலாளனுக்குச் சமமாக யாரைக் கொண்டாட முடியும்?

போராளிக்கு உணவளிக்கிற எவரையும் கொண்டாட முடியும். ஒரு இலக்கியகாரனுக்குச் சமமாக உணவளித்த தாய் ஆகிவிடுகிறாள். இதுவெல்லாம் வரலாற்றின் மிகப் பெரும் பகுதியும் பதிவுமாகும்.

போராளிகளுக்கு; போராட்டத்துக்கு உணவு கொடுத்து உதவுகிற எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்கிறீர்கள். `இதைச் செய்த நாங்கள் அவர்களால் தூக்கி எறியப்பட்டோம்' என்ற கருத்தை இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி.....!

முஸ்லிம்கள் நேற்றைப் போலவே இன்றும் நாளையும் கூட தம்மை இப்போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழீழத்தில் இருக்கிற முஸ்லிம்கள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்களல்ல அல்லது இஸ்லாம் மதத்தில் பிறந்து வளர்ந்து உருவானவர்களுமல்ல.
இவர்கள் தமிழீழத்தில் தமிழர்களாகப் பிறந்து, தமிழர்களாக வளர்ந்து, இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் இன்றும்கூட மட்டக்களப்பில் உள்ளவர்களிடம் `நீங்கள் யார்' என்று கேட்டால் `நாங்கள் இஸ்லாம் ஆனவங்க' என்று தான் சொல்வார்கள்.

அவர்கள் நம்முடைய பழைய தமிழர்கள். ஆனால், அவர்களிடையே தேசிய உணர்வைவிட; மத உணர்வுதான் காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்படுகிறது. நீங்கள் பழைய தமிழர்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.

அவர்களிடம் மிகவும் பணிவாக நான் ஒரேயொரு எடுத்துக் காட்டினைக் கூற விரும்புகிறேன். நாம் இன்றுவரையில் போற்றி மதிக்கத் தகுந்த இஸ்லாமியர்கள் குர்திஸ்தானில் இருக்கிறார்கள். ஈரான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளின் எல்லைகளில் குர்திஸ் மக்கள் வாழ்கிறார்கள். ஈரானில் வாழ்கிற இஸ்லாமியர்கள் தனியொரு தேசிய இனம். அவர்கள் பாரசீக மொழி பேசுகிற பாரசீக தேசிய இனம். ஈராக்கில் வாழ்பவர்கள் அரபு மொழி பேசுகிற அரேபிய தேசிய இனம். துருக்கி எல்லையில் இருப்பவர்கள் துருக்கி மொழி பேசுகிற துருக்கிய தேசிய இனம். ஆனாலும், இம்மூன்று தேசிய இனத்தினரும் இஸ்லாம் மதத்தவர்கள். இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு இம்மூன்று நாடுகளின் எல்லைகளிலும் இருக்கிற குர்திஸ் மக்கள் குர்திஸ் மொழி பேசுகிற குர்திஸ் தேசிய இனம். ஆனால், இவர்கள் இஸ்லாம் மதத்தையே பின்பற்றுகிறார்கள்.

துருக்கியையும் ஈரானையும் ஒருபுறம் விட்டு, ஈராக்கை எடுத்துக் கொண்டால், அங்கு உள்ளே வாழ்கிற இஸ்லாமியர்கள் அரபு மொழி பேசுகிறார்கள். எல்லையில் வாழ்கிற இஸ்லாமியர்கள் குர்திஸ் மொழி பேசுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன?

குர்திஸ் மக்களுடைய மதத்தைத் தோற்றுவித்த மிகப் பெருந்தலைவர் - முஹமது நபி அவர்கள். இவருடைய தாய்மொழி அரபு மொழி. அரேபியர்களுக்குப் பக்கத்திலேயே வாழ்ந்தாலும்கூட குர்திஸ் மக்கள் அரபுமொழி பேசவில்லை. தம்முடைய மதத்தைத் தோற்றுவித்து வழிகாட்டிய நபி பெருமானுடைய தாய்மொழியும் திருக்குர்ஆன் எழுதப்பட்டுள்ள மொழியுமான அரபு மொழியை குர்திஸ் மக்கள் பின்பற்றவேயில்லை.
தம்முடைய இனத்தைவிட, மொழியைவிட, மதம்தான் உயர்வானது என்று குர்திஸ் இனம் நினைத்திருந்தால்; தம்முடைய புனித நூலான திருக்குர் ஆன் எழுதப்பட்டுள்ள மொழியை ஏற்றுக்கொண்டு அரபு மக்களுடைய மொழியைப் பேசி அவர்களுடனேயே இரண்டறக் கலந்து வாழ்ந்திருக்க முடியும். ஆனால், குர்திஸ்கள் தமது தேசிய இனத் தன்மையையும் மொழியையும் மதத்துக்காக விட்டுக் கொடுக்கவில்லை.

ஆனாலும், அல்லாஹ்வையோ, நபிகளையோ,குர் ஆனையோ குர்திஸ்கள் மறந்துவிடவில்லை. தம்முடைய உயிரிலும் மேலானது தமது மொழி என்று களத்தில் நின்று இன்றுவரை போராடி வருகிறார்கள். அவர்களுடைய உணர்வுக்கு நான் தலை வணங்குகின்றேன். இந்த தேசிய உணர்வு ஈழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

`ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாகவே நாம் தமிழீழத்திலிருந்து விரட்டப்பட்டோம்' என்று இன்றுவரை கூறிக் கொண்டிருக்கிற முஸ்லிம்கள் உங்களுடைய இக்கருத்தோடு முரண்பட மாட்டார்களா?

போராட்ட களங்களில் சில நேரங்களில் ஏதாவது சறுக்கல்கள், தவறுகள் ஏற்படுவதுண்டு. மிகப் பெரியளவிலான இழப்புகளுக்கு மத்தியில் ஒரு இனம் நிமிர முற்படுகின்றபோது சில குறைபாடுகள் நேர்வதைத் தவிர்க்க முடிவதில்லை. வரலாற்றில் அவற்றையெல்லாம் நாம் திருத்திக் கொண்டு மேல் நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.

தவிரவும், ஈழத்து முஸ்லிம் மக்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இவர்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த போராட்டங்களுக்கு முழு அளவில் தமது பங்களிப்பெதனையும் செய்யவில்லை.

கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட போராட்ட காலத்தில் 18,000 விடுதலைப் போராளிகள் தமிழினத்தின் விடுதலைக்காகக் குருதி சிந்தியிருக்கிறார்கள். அக்காலத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய மக்களின் சொந்த நல்வாழ்வுக்காகத் தம்மால் முடிந்த பணிகளைச் செய்தார்கள். அது இஸ்லாமிய மக்களுக்காகச் செய்தார்கள் என்கிற அளவோடுதான்!
ஆனால், விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களல்லாத தமிழர்களுடைய அர்ப்பணிப்பில் இஸ்லாமிய மக்களுக்கான பாதுகாப்பும் அடங்கியிருந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு, அறப் போராட்ட நிலைமை எப்படி இருந்தது?

அக்கால அரசியல் சூழ்நிலைகளின்போது அறப்போராட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன. அறப்போராட்டம் முழுமை பெறுவதற்கு அரும்பணி செய்தவரான தந்தை செல்வாவின் காலத்தில்தான் அதற்குச் சரியான தளம் அமைக்கப்பட்டது. ஆனாலும், அவர் போராட்டத்துக்கான முன்னெடுப்புகளைத் திட்டமிட்டு எடுத்தார் என்று கூற முடியாது. ஏனெனில், அவருடைய உடல் நிலை அப்படி இருந்தது. இருப்பினும் தந்தை செல்வாவின் முன்னெடுப்பு நடவடிக்கைகளால்தான் தமிழ் மக்கள் விழிப்புணர்வூட்டப்பட்டார்கள்.

தமிழினத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய இனவெறி பிடித்ததாகவே இலங்கையில் சிங்கள இனம் இருக்கிறது என்பதை தந்தை செல்வா சரியாக இனங்கண்டார். அதனால் அவர் என்ன செய்தார் என்றால், `இலங்கை முழுவதும் ஒரு தேசியம்' என்கிற எண்ணம் இருக்கக் கூடாது. அது வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனால் தமிழீழப் பகுதியில் எந்தக் காலத்திலுமே முழு இலங்கையும் ஒரு தேசம் என்று ஏற்றுக் கொள்கிற ஒரு அரசியல் கட்சி காலூன்ற முடியவில்லை. இலங்கை அரசியல்வாதிகள் `இலங்கை ஒரு தேசம்' (Srilanka is a nation) என்று சொல்கிறார்கள். ஆனால், தந்தை செல்வாவோ, `Srilanka is a Country Comprising of two nations' என்றார்.

அதாவது, இலங்கை இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை அவர் உறுதி செய்தார். இது தந்தை செல்வாவினாலான நல்லதோர் தொடக்கம். இத்தொடக்கத்தினாலேயே பின்னாளில் மிகப் பெரிய விடுதலைப் போரை ஆரம்பித்து, வளர்த்து, வெற்றி நோக்கிச் செல்ல முடிந்தது.

இவ்விரண்டு போராட்ட காலப் பதிவுகளும் இலங்கைப் படைப்புகளில் மிகச் சரியாகவும் தவறாமலும் இடம்பெற்றுள்ளனவா?

இதில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கொழும்பு வட்டம், தமிழீழ வட்டம் என்றிரு பிரிவுகள் எங்களுடைய இலக்கியங்களில் அறப்போராட்ட காலத்திலிருந்தே நிலையாக இருக்கின்றன. கொழும்பிலேயே வாழ வேண்டிய சூழல் இருந்ததால், ஆட்சியிலுள்ளவர்களைப் பகைக்காமல் கொழும்பு வட்ட இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. சிங்கள வெறியர்கள் வீடு புகுந்து ஆட்களை வெட்டிப் புதைக்கிற அக்காலத்தில் அவர்களுக்குப் பயந்தே இலக்கியம் செய்ய வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் அறப்போராட்ட காலத்திலேயே இருந்தது.

இதனுடைய விளைவுதான்; கைலாசபதி போன்றவர்கள் (அவர்களைக் குறை சொல்வதாகக் கருத வேண்டாம்) சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து செயற்பட வேண்டியிருந்தது. அறப்போராட்டத்தை; அதை நடத்தியவர்களைச் சிங்களவர்களோடு இணைத்துக் கிண்டல் செய்த தமிழ்ப் படைப்பாளிகளும் கொழும்பில் இருந்தார்கள். ஆனால், இவற்றையெல்லாம் மீறி, தமிழீழத்திலிருந்து நாம் எம்மால் முடிந்ததை எழுதினோம். எம்முடைய அந்த எழுத்துகள் மிகவும் பிற்போக்கானவை என்கிற விமர்சனங்களும் கொழும்பிலிருந்து வந்து குவிந்தன. எமது இலக்கியம் வகுப்புவாத இலக்கியம் என்றார்கள்.

நாங்கள் பேசுவதெல்லாம் குறுகிய நோக்கம் கொண்டதென்று எழுதினார்கள். ஆனாலும், எம்முடைய கால்கள் மண் விடுதலையைத் தேடியே அடியெடுத்து வைக்கிறதென்று திடமாகப் புரிந்து கொண்டோம்.

எங்களுக்குச் சரியென்று பட்டவற்றையெல்லாம் தெளிவாகவே எடுத்து வைத்தோம். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாம் முன்பு எழுதியவைகளே விதைகளாகவும் வேர்களாகவும் இருந்தன. இதனுடைய வளர்ச்சியாகவே இன்று களத்தில் நின்றுகொண்டு இலக்கியம் படைக்கிறார்கள். அவர்களுடைய இந்தச் சுதந்திரம் இன்றும்கூட கொழும்பு சார்ந்த சூழலிலும் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலும் உள்ள படைப்பாளிகளுக்கு இல்லை. இவர்கள் அஞ்சி அஞ்சியே தமது கருத்தை முன்வைக்கிறார்கள்.

வெளிப்படையாகக் கூறினால், தமிழீழத்தின் களத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வெளியாகிற இலக்கியங்கள் ஆற்றல் மிக்கவையாக வெளிவருகின்றன.

பலஸ்தீனம், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதெல்லாம் எப்படி களங்களிலிருந்து இலக்கியங்கள் உருவாகின்றனவோ அவ்வாறு தம்முடைய போர்க் களங்களிலிருந்தும் இலக்கியங்கள் பிறந்து கொண்டிருக்கின்றன.

இயந்திரத்தனமான வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலிலிருந்து மிகக் குறைவாகவும்; அச்சம் நிறைந்த கொழும்புச் சூழலிலிருந்து உண்மைகள் மறைக்கப்பட்டனவாகவும் வெளிவருகின்ற ஈழத்து இலக்கியப் படைப்புகளை நோக்குகையில்; தரமான படைப்புகளைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம் என்று கருதலாமா?

இதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூற வேண்டியிருக்கிறது. அண்மையில் நமது எஸ்.பொ.இங்கு தமிழகத்தில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். `21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியங்கள் இலங்கையிலிருந்தே வெளிவரும்' என்றார். இதற்குப் பல எதிர்ப்புக் குரல்களும் இங்கு கிளம்பின.

உண்மையில், களத்தில் நின்றுகொண்டு அல்லது களத்தை நினைத்து வெறெங்கிலுமாவது இருந்து எழுதுகின்ற படைப்புகளில் சோர்வு தெரியாது. ஒரு தூய்மை இருக்கும். வேகம் இருக்கும். அதையெல்லாம் எம்முடைய படைப்புகளில் காண்கிறோம்.

இதற்கு மாறாக, ஆம் என்பதற்கான பதில் தான்; படைப்பாற்றல் மிக்கவர்களின் கொழும்பு வட்ட இலக்கியங்களும் படைப்புகளும்! இவை காத்திரத்தன்மை குறைந்தவை. உண்மைகள் மறைக்கப்பட்டவை.
ஆனாலும் கூட, இவையெல்லாவற்றையும் தாண்டி தமிழீழ இலக்கியம் செழிப்பாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது.

`தமிழ்மொழி அழியாது' என்று அழகாக உச்சரிக்கிறார்களே தவிர; `அதை அழிய விடமாட்டோம்' என்பதற்கான சரியான முயற்சிகளில் இங்குள்ள கலைஞர்கள் என்கிற திரை உலகமோ, பெரும்பாலான இலக்கியர்களோ, ஊடகங்களோ இறங்கிச் செயற்படவில்லையே!

தமிழகத்தில் எனக்குச் சுமையாக இருக்கும் விடயம் இதுதான்! நீங்கள் குறிப்பிட்ட இவர்களெல்லாம் தமிழைப் படுகொலை செய்து வேரோடு பிடுங்கி எறிகிறார்கள். வழிகாட்ட வேண்டிய பலர் வியாபாரம் பார்க்கிறார்கள். ஆனாலும், இதை எதிர்த்து சில பேர் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

மருத்துவர் ராமதாஸ், தொல் திருமாவளவன், மருத்துவர் சேதுராமன் இவர்களோடு உலகமே போற்றுகிற நம்முடைய பழ.நெடுமாறன் எல்லோரும் இணைந்து ஒரு பெரிய தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி முன்நடத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழ்க் காப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனாலும், மக்களிடம் இந்தத் தமிழ்க் காப்பை நேரடியாக எடுத்துச் செல்வதற்கு ஆட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பெருங்கட்சிகள் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், அவர்களிடம் அப்படி ஒரு முயற்சி இருக்கிறதா ஈடுபாடு இருக்கிறதா, அது குறித்த கவலை இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லையென்றே படுகிறது. அதுதான் கவலை.
கல்வி மொழியாக தமிழ் மொழி ஆக வேண்டியது; தமிழ் மொழி குறித்த பெரிய கட்டாயமாகும். தமிழ்க் காப்புத் தேவையென்றால் தமிழ்நாட்டில், தமிழ் காலத்தாழ்வு இன்றி கல்வி மொழியாக வேண்டும். அதேபோன்று, ஆட்சிமொழியாக அது முழு அளவில் செயற்படவும் வேண்டும்.

நன்றி தினக்குரல்
-பேட்டி அடுத்தவாரமும் தொடரும்-

Print this item

  ஒரு பக்கக் கதை: அவளின் இடம்!
Posted by: SUNDHAL - 11-06-2005, 03:16 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (7)

காலை எட்டரை மணி. ஒன்பதாவது படிக்கும் சங்கீதா பள்ளிக்குக் கிளம்பினாள். வீட்டை விட்டுப் புறப்படும் வேளையில் ரமேஷ் வந்தான். ரமேஷ் சங்கீதாவின் அண்ணனோட வகுப்புத் தோழன்.

"" குமார் போயிட்டானா...சங்கீதா''

""இப்பத்தான் பள்ளிக்கூடத்துக்குப் போறான்''

""சரி...பார்த்துக்கிறேன்..''

""எப்படி இருக்கீங்க... படிப்பெல்லாம் எப்படி இருக்கு''

""நல்லா போகுது''

இரண்டே வார்த்தைகளில் பதிலை உதிர்த்துவிட்டு சைக்கிளில் பறந்துவிட்டான் ரமேஷ்.

செருப்பை மாட்டிக் கொண்டு, படி இறங்கும் போது, " சங்கீதா 'ஓங்கிய குரலில் கூப்பிட்டாள் அம்மா.

""என்னம்மா...''

"" இங்க உள்ள வா..ஒரு விஷயம்..''

""என்னம்மா விஷயம்?''

""குமார் எங்கேன்னு கேட்டா..இல்லைன்னு சொல்லி நிறுத்த வேண்டியதுதானே...தேவை இல்லாத பேச்சு அவன்கிட்ட எதுக்குப் பேசுற.. இத்தன நாளும் பேசுனது சரி..இப்ப ..நீ பெரிய மனுஷி ஆனவ...அனாவசியமா ஆம்பளப் பயல்ககிட்டப் பேசக் கூடாது...தெரியிதா..''

""இப்ப என்னத்த அதிகமாப் பேசிட்டேன்..படிப்பு எப்படிப் போகுதுன்னுதான் கேட்டேன்..இதுக்குப் போய் அலட்டிக்கிடுற''- என்று சொல்ல வாயெடுத்தாள். ஆனால் சொல்லவில்லை. இதைச் சொன்னால் .... அவ்வளவுதான்.. அதுக்கு அரை மணி நேரம் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவாள். அதனால் சரிம்மா என்று மட்டும் தலையாட்டிவிட்டு பள்ளிக்குப் புறப்பட்டாள்.

மாலை நேரம். சங்கீதாவின் அம்மா -ஆச்சி இருவருக்கும் ஏதோ வாக்குவாதம். ஊழல் இல்லாத அரசியல்வாதி இருக்கலாம். ஊரை ஏய்க்காத மந்திரி கூட இருக்கலாம். சண்டை சச்சரவுகள் வராத மாமியார்- மருமகள் இருக்க இயலுமா?

நிமிடத்திற்கு நிமிடம் இருவருக்கும் வாக்குவாதங்கள் வலுப்பெற்றதே தவிர குறைந்தபாடில்லை. தடித்த வார்த்தைகள் வெடித்துச் சிதறத் தவறவில்லை. மாறி ..மாறி இரண்டு பேரும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சங்கீதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

""ச்சே.. என்ன இது..இப்படி சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க ...யாராவது ஒருத்தர் பொறுத்துத்தான் போனா என்ன ...மாறி..மாறிப் பேசி ... ஏன் பேச்ச வளத்துக்கிட்டே போறீங்க..''

-பொறுமை இழந்து கத்தினாள் சங்கீதா.

இவள் நடுவில் புகுந்து இப்படி நியாயம் பேசுவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

""எங்களுக்குப் புத்தி சொல்ற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டியா...பேசாமக் கெட..''

""நீ சின்னக் கழுத.. மொளச்சி மூணு எல விடல..இது மாதிரி சங்கதியில தலையிட இன்னும் காலம் கெடக்கு''

அம்மா-ஆச்சி இருவரும் ஒரே தொனியில் சங்கீதாவை அதட்டினார்கள்.

"காலையில் அம்மா, நீ பெரிய மனுஷி ஆம்பளப் பயல்களோட பேசக் கூடாதுன்னு சொன்னாங்க... இப்ப என்னடான்னா...ஆச்சியும் அம்மாவும் பெரிய மனுஷி மாதிரிப் பேசாத ...நீ சின்னக் கழுதைங்கிறாங்க...என்னோட எடம் எது..பெரியவளா..சின்னப் பிள்ளையா..' -

என்கிற எண்ணம் சங்கீதாவின் மனதைக் குழப்பியது.
ThanksBig Grininamani...

Print this item

  கோயிஞ்சாமி தி(கொ)ண்டாடிய தீபாவளி!: ஒரு சிறப்பு ரிப்போர்ட்
Posted by: SUNDHAL - 11-06-2005, 03:03 PM - Forum: நகைச்சுவை - No Replies

நம்ம எல்லாரும் மஜாவா சிவகாசி பட்டாசு வெடிச்சு, தவமாய்த் தவமிருந்து சேர்த்து வைச்ச காசுல தீபாவளி கொண்டாடிப்புட்டோம்! எல்லாவற்றிலும் அப்பாவியாய் மாட்டிக்கொள்ளும் நம்ம "லொள்ளு தர்பார்' சிறப்புக் கதாநாயகன் கோயிஞ்சாமி எப்படி தீபாவளி கொண்டாடுவார் என அறிய கடந்த ஒரு வாரமாக அவரை ரகசியமாகப் பின் தொடர்ந்தோம். செம கலாட்டா போங்க! உங்களுக்காக அந்த ஸ்பெஷல் ரிப்போர்ட்.

தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்..

"சார் போஸ்ட்!' என மத்திய அரசின் குரல் ஒலிக்க, வீட்டின் கொல்லைப் பக்கம் கொய்யாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த கோயிஞ்சாமி வேகமாக ஓடி வருகிறார். நான்கு குஷ்பு இட்லிகளையும், கொஞ்சம் கெட்டிச் சட்னியையும் ஒரு கவரில் போட்டுக் கட்டினால் எவ்வளவு எடை இருக்குமோ அவ்வளவு எடை கொண்ட கவர் அது! மத்திய அரசு தீபாவளிக்காகத் தலையைச் சொறிந்து கொண்டு நிற்க, தன் கோட்டையின் கஜானாவிலிருந்து ஐந்து ஒரு ரூபாயை தபால்காரருக்கு அள்ளிக் கொடுத்தார் கோயிஞ்சாமி.

"நமக்குத்தான் தீபாவளிக்கு யாரோ ஏதோ கிஃப்ட் அனுப்பியிருக்காங்க என்ற மெகா ஆவலில் பார்சலைப் (பங்குக்கு வந்து விடக் கூடாதே என மனைவிக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாகப்) பிரித்தார். கத்தை கத்தையாய் காகிதக் குப்பைகள், திரி இல்லாமல் சில பட்டாசுகள், ஒரு சிறு பொட்டலத்தில் செம்மண், நாலைந்து ஓலைச்சுவடிகள். புரியாமல் கொரிய மொழிப் படத்தை கீழே ஆங்கில சப்-டைட்டில் இல்லாமல் பார்க்கும் ஒருவன் போல் முழித்தார் கோயிஞ்சாமி.

ஓலைச்சுவடிகளை எடுத்து படிக்க ஆரம்பித்தார். புரியும்படி தெளிவாகத்தான் இருந்தன எழுத்துக்கள். "தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த ஓலைச்சுவடி உன் வாழ்க்கைத் தரத்தை தாறுமாறா உயர்த்தப் போகுது! இந்த தீபாவளி உனக்கு மறக்க முடியாத தீபாவளி! ஓலைச்சுவடி சொல்லுறபடி நீங்க தீபாவளி கொண்டாடணும்! அதுல ஏதாவது குறை வந்தா குபேரன் உன்னை விட்டு ஓடிவிடுவார். இது சத்தியம்! அதன் பின் கோயில் வாசலில் உட்கார உனக்கு ஒரு இடம் நிச்சயம் கிடைக்கும்!'

வெலவெலத்துப் போன கோயிஞ்சாமி, ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரை தொண்டை வழியே ஓட விட்டார். மீண்டும் தைரியத்தை, கெஞ்சிக் கூத்தாடி வரவழைத்து அடுத்த ஓலைச்சுவடியைப் படித்தார் கோயிஞ்சாமி!

"ஏய்...நிறுத்து...இதை மட்டும் படி. அடுத்த ஓலைச்சுவடியைப் படிக்காதே! எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு. அதை அதை அந்தந்த நேரத்துலதான் செய்யணும். இல்லாட்டி எந்த நேரமும் குபேரன் உனக்கு எஸ்.எம்.எஸ் கூட அனுப்பமாட்டான்! தீபாவளி அன்னிக்கு அதிகாலையில் கரெக்டா 3.13 க்கு அடுத்த ஓலைச் சுவடியை எடுத்துப் படிக்கணும். ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தைப் பத்தி யார் கிட்டயாவது உளறினா, அப்புறம் நீ வாழ்க்கை ஃபுல்லா உளற வேண்டியதுதான். இது செல்லானந்த சுவாமிகளின் கட்டளை!'

இஞ்சி ஜூஸ் குடித்த மங்கியின் முகம் போல் மாறிப்போனது கோயிஞ்சாமியின் முகம்!

"என்னங்க, பால் அல்வா கிண்டினேன். சரியா இருக்கான்னு பாத்துச் சொல்லுங்க!' என்று ஒரு தட்டை நீட்டினாள் அவர் மனைவி.

வாயில் அதை மென்றபடி, "கொஞ்சம் உப்பு ஜாஸ்தியா இருக்கு! வத்தல் பொடியை கரைச்சு ஊத்துனா சரியா வரும்!' என்றார் மிரண்டு போன கோயிஞ்சாமி.

"ரொம்பத்தான் நக்கல் உங்களுக்கு! என செல்லமாக, நன்றாக வலிக்கும்படி அவர் கன்னத்தில் ஒரு குத்து விட்டுப் போனாள் அவள்.

தீபாவளி அன்று காலை...

அதிகாலை 2.30 மணி...

தூக்கம் வரவே இல்லை கோயிஞ்சாமிக்கு. 3.00 மணிக்கு அலாரத்தை வைத்துவிட்டு, அது அடிக்காமல் ஏமாற்றிவிடக்கூடாதே என்ற பயத்தில் அதன் அருகிலேயே கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு காத்திருந்தார் கோயிஞ்சாமி.

அலாரம் அடித்ததும் மெüனமாக அலறி அடித்துக்கொண்டு ஓலைச்சுவடியை ஒளித்து வைத்திருந்த மொட்டை மாடிக்கு ஓடினார். மணி 3.13..கைகள் தத் தத் தத் தந்தியடிக்க பிரித்துப் பார்த்தார். "இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இன்னும் நேரமிருக்கிறது. போய் குறட்டை விட்டு நிம்மதியாகத் தூங்கு! அடுத்த ஓலைச்சுவடி பார்க்க வேண்டிய நேரம் காலை மணி 4.11. இது செல்லானந்த சுவாமிகளின் கட்டளை' வானத்தைப் பார்த்து ""அய்யய்யோ இன்னும் அரை மணி நேரத்துல எந்திரிக்கணும். அதுக்குள்ள நான் எப்படி குறட்டை விட்டுத் தூங்குவேன். செல்லானந்த சுவாமிஜி நீங்கதான் காப்பாத்தணும்'' எனப் புலம்பியபடி, கீழே சென்று தூக்க மாத்திரை ஒன்றைப் போட்டுக் கொண்டு, இழுத்துப் போர்த்திப் படுக்கிறார்.

அலாரம் அலற, குறட்டை விட்டுக் கொண்டிருந்த கோயிஞ்சாமியை நாலு குத்து குத்தி எழுப்புகிறார் மனைவி.

""சுவாமிஜி என்னை மன்னிச்சுக்கோங்க!'' எனக் கதறியபடியே எழுந்த கோயிஞ்சாமி மொட்டை மாடிக்கு கெட்ட வேகத்தில் ஓடினார்.

ஓலைச்சுவடி...அதில்... "செல்லானந்த சுவாமிகளுக்கு இது உணவருந்தும் நேரம். இன்னும் இரு மணி நேரத்தில் வடை பாயசத்துடன் நீ இதே இடத்தில் வயிராற உண்ண வேண்டும். அடுத்த ஓலைச்சுவடியைப் பார்க்க வேண்டிய நேரம் காலை 6.16!'

கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும் சுமோ வேகத்தில் கிச்சனுக்கு ஓடிய கோயிஞ்சாமி வேகவேகமாக சமைக்க ஆரம்பித்தார். மிரண்டு போன அவர் மனைவியைப் பார்த்து, "ப்ளீஸ் பாயசம் மட்டும் இன்னும் பத்தே நிமிசத்துல ரெடி பண்ணிடு..ப்ளீஸ் டார்லிங்!' என கெஞ்சிக் கொண்டே வடை மாவை கொதிக்கும் எண்ணெய்க்குள் ஊற்ற ஆரம்பித்தார்.

ஒன்றரை மணி நேரத்தில் மொட்டை மாடியில் திணறத்திணற லஞ்ச் சாப்பிட்டு விட்டு, "ஏவ்வ்வ..' என ஏப்பம் விடும்போது மணி 6.16.

அடுத்த ஓலைச்சுவடி..

"இது பல் தேய்க்கும் நேரம். பன்னிரெண்டு கழுதைகளுக்கு தீபாவளி அன்று பிரஷ்தானம் செய்தால் செல்வம் "பல்'கிப் பெருகும். அடுத்த ஓலைச்சுவடி பார்க்க வேண்டிய நேரம் பகல் மணி 11.59'

கழுதைகளைத் தேடி குதிரை வேகத்தில் ஓடினார் கோயிஞ்சாமி! பன்னிரெண்டாவது கழுதையைக் கண்டுபிடிக்கும்போது மணி 11.30. வாயில் பிரஷ்ஷை வைத்து தேய்த்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடி வந்தார் கோயிஞ்சாமி!

அடுத்த ஓலைச்சுவடி

"இது பொழுது போக்கு நேரம்! இன்று நீ பார்க்க வேண்டிய திரைப்படம் "ராமாயி வயசுக்கு வந்துட்டா!' எப்படியாவது பார்த்துவிடு. அடுத்த நேரம் இரவு 7.12'

""சார், "ராமாயி வயசுக்கு வந்துட்டா' பட சிடி உங்ககிட்ட இருக்குமா?'' என பெட்டிக் கடைகளைக் கூட விட்டு வைக்காமல் முட்டி முட்டித் தேடினார் கோயிஞ்சாமி.

கிடைக்கவில்லை. மணி 7.00

கதறிக் கதறி அழுது கொண்டே மொட்டை மாடிக்குச் சென்று அடுத்த ஓலைச் சுவடிப் பிரித்தார்.

"சரி அழாத! அடுத்த வேலையாவது ஒழுங்கா செய்! போ! போய்க் குளி! 1 லிட்டர் கடலெண்ணெயை உடம்பு முழுசா நல்லா தேய்ச்சி, ஒரு மணி நேரம் ஊற வைச்சி, 1 லிட்டர் மினரல் வாட்டர்ல தாராளமா நல்லாக் குளிரக் குளிரக் குளி! அதன்பின் நீ புதிதாக எடுத்த உடையை ஒரு வாளித் தண்ணீரில் அரைக்கிலோ மஞ்சள் பொடியைப் போட்டுக் கரைத்து, அதில் முக்கி, பின் அணிந்து கொள்! மங்களம் உண்டாகட்டும்! இது செல்லானந்த சுவாமிகளின் ஆர்டர்! மீண்டும் இரவு 11.00 மணிக்கு சந்திக்கலாம்!'

""இந்தாங்க, எலுமிச்சம்பழம்...இதையும் நல்லா தேய்ச்சுக் குளிங்க! அப்பவாவது உங்களுக்குத் தெளியுதான்னு பார்ப்போம்'' என்றாள் கோயிஞ்சாமியின் மனைவி.

பிசுபிசு உடலில் மஞ்சள் மாக்கான் போல் உடை அணிந்து கொண்டு, 11.00 மணிக்கு அடுத்த ஓலைச் சுவடியைப் படித்தார்.

"திரியில்லாத அந்த வெடிகளை எப்படியாவது வெடிக்க வைத்துவிடு! மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்! விரைவில் உன்னைத் தேடி குபேரன் கொரியரில் வருவார்! செல்லானந்த சுவாமிகள் உனக்கு அருள் புரிவார்.' என்றிருக்க, கோயிஞ்சாமிக்கும் கோபம் வந்து, அந்த போஸ்ட் கவரை எரிக்கப் பார்க்கிறார்.

""அடப்பாவிகளா..டூ அட்ரஸ்ல என் பேரே இல்லையே...இது பக்கத்து தெரு அட்ரஸôச்சே! என தானே தன்னைக் கேனையனாக்கி விட்டோமே என் பீல் பண்ணத் தொடங்கினார் கோயிஞ்சாமி!
ThanksBig Grininamani...

Print this item

  சுழன்று எரிகிறது உன்பெயர். - மாவீரர்கள்..
Posted by: இவோன் - 11-06-2005, 01:37 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

மாவீரனே!
உரமேறிக் கறுத்த
பனையின் காலாய்
ஊன்றி நிற்கிறது
உன் மரணம்.

இழந்த உடலிலிருந்து
சிறகடித்து வந்து
எங்கள்
இதயத்தில் உட்கார்ந்திருக்கிறது
உன் பெயர்.

நாங்கள்
ஒவ்வொருவராய்
சொல்லச் சொல்ல
உன் ஒற்றைப்பெயர்
இலட்சம் பெயராகிறது.

உனக்காக
ஏற்றி வைக்கப்பட்ட
தீபத்தின் நாக்கு
காற்றின் குரலெடுத்து
சுழற்றிச் சுழற்றி
சொல்கிறது உன் பெயரை.

உன் பெயர்
தெறித்து விழுகிறது
எங்கள் விளக்குகளிலும்
எதிரிகளின் உடல்களிலும்.

நீ இல்லாமல் போனாலும்
உம் பெயரில்லாமல்
எதுவும் இல்லை இங்கு.

பழநிபாரதி.- தமிழகம்

நன்றி- மண் -தை.2002
(கவிஞர் அறிவுமதியால் நடத்தப்படும் சஞ்சிகை.)

Print this item

  உ&quot; போடு
Posted by: கோமதி - 11-06-2005, 11:43 AM - Forum: தமிழும் நயமும் - Replies (11)

http://www.keetru.com/literature/essays/pamaran_2.html

"உ" போடு
பாமரன்



"suspect everybody": சேகுவேரா

"அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே... நீங்க தடுக்கவில்லையா?" என்றேன் நண்பரிடம்.

"அது அவருடைய நம்பிக்கை. நான் மற்றவர்களது நம்பிக்கைகளில் குறுக்கிடுவதில்லை" என்றார் வெகு அமைதியாக.

அடப்பாவிகளா.. எது நம்பிக்கை? எது மூட நம்பிக்கை? எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரபித்தால் தலை சுற்றுகிறது.

முதலில் "தன்னம்பிக்கை"ப் பிரியர்களைப் பார்ப்போம். இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.

"மேலதிகாரியைத் திருப்திப்படுத்துவது எப்படி?", "நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?", கொளுந்தியாளைக் கோணாமல் பார்த்துக்கொள்வது எவ்வாறு? என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள். "பல் விளக்குவது எப்படி?" என்பதைக்கூட புத்தகத்திலோ, விளம்பரத்திலோ பார்த்ததுதான் "ஒப்புக்கொள்ளும் மத்திய தர வர்க்கம்தான் இவர்களது இலக்கு.

மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் "வாழும் கலை"யைச் சொல்லித் தருவதற்குக் கூட புத்தகம் தான் வேண்டி இருக்கிறது இந்த வர்க்கத்திற்கு.

இந்தத் தன்னம்பிக்கைப் பிரியர்களது மகா "கண்டுபிடிப்பு"தான் "செய்யும் தொழிலே தெய்வம்".

புதை சாக்கடைக்குள் இறங்கி மலத்துக்கு நடுவே "முத்துக்குளித்து" அடைப்பு நீக்கி வெளியில் வருபவருக்கும், மின் விசிறிக்குக் கீழே கோப்புகளோடு குறட்டை விட்டுக்கொண்டிருப்பவருக்கும் ஒரே தெய்வம். முன்னவர்களுக்கு மட்டும் துர்நாற்றம் வீசும் தெய்வம். பின்னவர்களுக்கு "சுகந்தம்" வீசும் தெய்வம். ஏனிப்படி..? என்றெல்லாம் கேட்டுத் தொலைக்காதீர்கள். அப்புறம் நீங்களெல்லாம் "தன்னம்பிக்கை"க்கு எதிரிகள் ஆகி விடுவீர்கள்.

இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம்: "உ" போடு. அதென்ன "ஓ"வுக்குப் பதிலாக "உ". அதுதான்: உண்மை - உழைப்பு - உயர்வு. இந்த மூன்று "உ"வையும் தூக்கிக்கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.

மக்கள் எவரும் போராட்டம், புரட்சி, போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள், தமது "வெற்றிக்கான படிக்கட்டுகளை". "நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப் பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன்" என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.

இது போதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று "உ"க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான்: உழைப்பால் உயர்ந்த உத்தமர்.

சரி இதுகள் இருக்கட்டும் ஒருபுறம்,

இன்று நாம் எதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் முண்டியடித்துக்கொண்டு சண்டைக்கு வருவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இது வேறு வகை.

"ஆண்கள் பொட்டு வைப்பது மூடநம்பிக்கை" என்று கலைஞர் ஒருமுறை எடுத்துவிட...

மதத்தின் மனசு நோகாமல் பார்த்துக் கொள்ளும் காவலர்கள் குமுறி எழ... "நான் நாத்திகர்களிலேயே நல்ல நாத்திகன்" என இவர் சொல்ல...

"நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று எப்படிச் சொல்லலாம்?" என்று மீண்டும் எகிறிக் குதிக்க... அந்த நேரம் பார்த்துத் தானா தேர்தல் வந்து தொலைக்க வேண்டும்?

தான் "சீறிய ஆசாமிக்கே மூட நம்பிக்கைக் கோட்டாவில் எம்.பி.சீட்டை ஒதுக்கித் தர... "கோட்டா"வுக்கு எதிரானவர்கள் அந்த நல்ல நாத்திகரோடு கூட்டணி வைத்துக்கொண்டு வலம் வர... மொத்தத்தில் அந்த விளையாட்டு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

இரண்டு தரப்பையும் ரசித்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது:

"இவர்களது நாத்திகமும் பொய், அவர்களது ஆத்திகமும் பொய் என்பதே மெய்" என்று. மதவாதியோ, பகுத்தறிவுவாதியோ இரு தரப்பும் வசதியாக மறந்துபோன விஷயம் ஒன்று உண்டு. அதுதான்: கருத்துச் சுதந்திரம்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் துணிவற்ற அசடுகளின் கருத்துப் படி.. உலகம் உருண்டை என்கிற விஞ்ஞானத்தைச் சொன்ன கலிலியோ பழம் கிருஸ்தவர்களது நம்பிக்கையில் குறுக்கிட்ட வராகிறார்.

பிராம்மணனும் அப்பிராம்மணனும் சமமே என்ற புத்தர் வர்ணாசிரம் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

"நட்ட கல்லும் பேசுமோ" என்று கேட்ட சிவவாக்கியர் உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

எந்த மார்க்கமோ, எந்தத் தத்துவமோ, எந்த இயக்கமோ அதற்குத் தேவை கருத்தை கருத்தால் சந்திக்கும் துணிவு. இல்லாவிடில்...

"கொலை வாளினை எடடா மிகும் கொடியோர் செயல் அறவே" என்றாராம் பாரதிதாசன். அப்படியாயின்...

கொடியோரைக் கொடியோர் என்று அழைப்பதுகூட ஒருவேளை கொடியோரது நம்பிக்கையில் குறுக்கிடுவதாக ஆகிவிடுமோ என்னவோ?

Print this item

  கறுப்பு மேகங்கள்- மாவீரர் நினைவாய்..
Posted by: காவடி - 11-06-2005, 09:20 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

<img src='http://img107.exs.cx/img107/365/maveerarcard4rz.gif' border='0' alt='user posted image'>

சாவதற்கே வாழும் கறுப்பு மேகங்களே
தியாகம் செய்து
மழையென பெய்து ஓய்கிறீர்;கள்
எங்கள் கண்களின் குளங்களை நிரப்பி விட்டு..

நரக வீதிகளில்
நாளெண்ணிக் கிடந்தோம்.
நாவுக்கடியில் சொற்களைப் புதைத்து
உயிர் மட்டும் சுமந்து
உலவித் திரிந்தோம்.

எங்கள் விதி செதுக்கும்
உங்கள் உயிர்களை
உளியாக்கினீர்கள்.
தமிழின விடிவின்
ஒளியாகினீர்கள்.
உரிமைக் குரலில்
ஒலியாகினீர்கள்
ஊமை உதடுகள் உச்சரிக்கும்
புதிய மொழியாகினீர்கள்.

கனத்தினை கரத்திலும்
உரத்தினை சிரத்திலும் கொண்ட புலியாகினீர்கள்.
எம்
உயிர்ப் பயிர்கள் விளையும்
நிலமாகினீர்கள்.
தமிழ் மரம் முளைக்க மீண்டும்
விதையாகினீர்கள்.
எங்கள் தலை நிமிர
உங்கள் நிலை மறந்தீர்கள்.

காற்றும் நுழையாத
சிங்கக் குகைகளை சிதற வைத்தீர்கள்.
வேற்று கிரகம் வரை
உங்கள் புகழ் மணக்கும்.
தூற்றும் துவேச வாய் கூட
பல சமயம் சொல் மறந்து பிளந்திருக்கும்.

நேற்று வரை புயல் அடித்தது காற்றுக்கு கூட தெரியும்..
கூற்றுவனை கட்டி யணைத்து
வரவேற்கும் துணிவை
பறை சாற்றிக் கொண்டு திரியும்..

புலி யென்றால் படையும் நடுங்குமென
புதுச் சரித்திரம்
படைத்தீர்கள்.
வெற்றியும்
வீரமரணமும்
ஒன்றானது உங்களில்த் தான்.
வெந்த தணலில்
வீர வேட்கை கொண்டு
செங்குருதி குளிக்கும்
மறத்தமிழர் நாமென்று
மார் தட்ட வைத்தீர்கள்..

உங்கள் மூச்சை
சுவாசிக்கும் காற்றும்
புயலாகும்..
ஓவ்வொரு மூச்சுக்கும் ஓராயிரம்
அர்த்தங்கள்
உங்கள் உணர்வின்
உயரம் அளந்தால்..
வானம் கூட உற்றேப்பார்க்கும்..

வென்று முடித்து
ஊமையாய்
ஊறங்குபவை
கல்லறைகள் அல்ல..
சில்லறைப் படைகளை
சிதற வைத்து தம்
உயிர் நீத்த தெய்வங்கள்
உறையும்
கருவறைகள்?.

எழுதியவர்- தஷந்தி நிரேக்கா

Print this item