![]() |
|
சுழன்று எரிகிறது உன்பெயர். - மாவீரர்கள்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சுழன்று எரிகிறது உன்பெயர். - மாவீரர்கள்.. (/showthread.php?tid=2581) |
சுழன்று எரிகிறது உன்பெயர். - மாவீரர்கள்.. - இவோன் - 11-06-2005 மாவீரனே! உரமேறிக் கறுத்த பனையின் காலாய் ஊன்றி நிற்கிறது உன் மரணம். இழந்த உடலிலிருந்து சிறகடித்து வந்து எங்கள் இதயத்தில் உட்கார்ந்திருக்கிறது உன் பெயர். நாங்கள் ஒவ்வொருவராய் சொல்லச் சொல்ல உன் ஒற்றைப்பெயர் இலட்சம் பெயராகிறது. உனக்காக ஏற்றி வைக்கப்பட்ட தீபத்தின் நாக்கு காற்றின் குரலெடுத்து சுழற்றிச் சுழற்றி சொல்கிறது உன் பெயரை. உன் பெயர் தெறித்து விழுகிறது எங்கள் விளக்குகளிலும் எதிரிகளின் உடல்களிலும். நீ இல்லாமல் போனாலும் உம் பெயரில்லாமல் எதுவும் இல்லை இங்கு. பழநிபாரதி.- தமிழகம் நன்றி- மண் -தை.2002 (கவிஞர் அறிவுமதியால் நடத்தப்படும் சஞ்சிகை.) - Mathuran - 11-06-2005 பழனிபாரதியின் உணர்வு எப்படியானது என்பது இக் கவிவரிகள் மூலம் உணந்து கொண்டோம். இக் கவியினை உள்வாங்கி இணைத்த இவோனுக்கு எனது நன்றிகள். - Rasikai - 11-06-2005 இணைப்புக்கு நன்றி இவோன் மிகவும் உணர்ச்சி பூர்வமான கவி. - shanmuhi - 11-06-2005 <b>மாவீரனே! உரமேறிக் கறுத்த பனையின் காலாய் ஊன்றி நிற்கிறது உன் மரணம்.</b> இணைப்புக்கு நன்றி இவோன். - Mathan - 11-06-2005 பழனிபாரதியின் கவிதையை அறிய தந்தமைக்கு நன்றி, இந்த கவிதை ஒலிவடிவமாக வெளிவந்துள்ளதா? - காவடி - 11-08-2005 நல்லது இவோன். கவிஞர் தாமரையும்.. மாவீரர்கள் குறித்து கவிதை எழுதியிருக்கிறார்.. தேடிப்பார்க்கிறேன்.. - வியாசன் - 11-08-2005 மாவீரர் மாதத்தில் பொருத்தமான பாடலை இணைத்துள்ளீர்கள் நன்றி இவோன். இப்படியான பாடல்களை மாவீரர் மாதத்தில் இணையுங்களேன். - கரிகாலன் - 11-09-2005 [b]மாவீரர்கள் மாவீரர்கள் எம் மண்ணின் மைந்தர்கள் மானமே பெரிதெனக் கொண்டு மண் மீட்க எழுந்தவர்கள் மறத்தமிழன் யாரென மானிடர்க்கு உணர்த்தியவர்கள் மன்னவனாம் எம் தலைவனின் மனத்தில் நிலையானவர்கள் மரணத்தின் வாயிலில் நின்று மறப்போர் தொடுத்தவர்கள் மனவுறுதியை உரமாக்கி மக்களுக்காய் உழைத்தவர்கள் மலரும் தமிழீழத்திற்காய் மனவுணர்வுகளை துறந்தவர்கள் மனிதத்தை வென்றுவிட்ட மாமனிதர்கள் இவர்கள் மமதையுடன் வந்த எதிரிகட்கு மரணப்பாடம் புகட்டியவர்கள் மண்ணின் விடுதலைக்காய் மாவீரர் ஆனவர்கள் மலர்கின்ற தேசத்தில் மீண்டும் மலர்ந்து உயிர் வாழ்வார்கள் யாரோ. நல்ல கவியை இணைத்துள்ளீர்கள். நன்றி இவோன் - jeya - 11-09-2005 மரணத்தை நினைத்து அஞ்சும் மானிடப் பிறப்புகளுக்குள் மரணமுடன் விழையடி மரணத்தை திகைக்கவைத்து மரணத்தை மரிக்க வைத்து மாற்றானை ஓடவைத்து மண்ணினை மீட்டிடவே மாவீரர் ஆகியதால் மரணத்தை வென்றவராய் மண்ணுக்காய் மரணித்து மானமுள்ள தமிழனாய் மாவீரர் இல்லங்களில் மண்ணுக்குள் உறங்குகின்ற மாவீரர் கண்மணிகளை மலர் தூவி வணங்கிடுவோம் மனங்களிலே துதித்திடுவோம் மறவாமல் அவர்(கள்) கனவை மகிழ்வோடு நிறைவேற்றுவோம் |