| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 321 online users. » 0 Member(s) | 318 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,644
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,505
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,240
|
|
|
| புதுமைப்பித்தனின் வாழ்வியல் ஆலோசனை |
|
Posted by: Mind-Reader - 11-07-2005, 11:20 PM - Forum: நூற்றோட்டம்
- No Replies
|
 |
""எதுதான் சிறுகதை? சிறுகதையின் எல்லை என்ன? சிறுகதைக்குத் தனிப்பட்ட ரூபம் உண்டா? இதற்கெல்லாம் சூத்திரங்கள் ஒன்றும் கிடையாது. சிறுகதையின் எல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கதாசிரியனும் எடுத்தாண்ட ரூபங்கள் எண்ணிறந்தன... சிறுகதை என்ற பிரிவு, இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது'' என்பார் புதுமைப்பித்தன்.
"என் அபிப்பிராயம், (27௰௧935) என்ற தலைப்பில் மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதி வந்த கட்டுரை வரிசையில் முதலாவது வெளியானது புதுமைப்பித்தனின் "சிறுகதை' எனும் இந்தக் கருத்துரை.
அவரது முதல் கதையான "ஆற்றங்கரைப் பிள்ளையார்' (மணிக்கொடி 22-04௧934) தொடங்கி இறுதிக் கதையாகக் கருதப்படும் "கயிற்றரவு' (காதம்பரி, ஏப்ரல் 1948) வரை பல்வேறு சோதனை முயற்சிகள்! கதைக் கருக்களுடன் அவர் எடுத்தாண்ட உத்திகள் குறிப்பிடத்தக்கவை.
அவர் காலத்திய அறிவியல் கலைச்சொற்களும் இங்கு முக்கியம். "தொலைநோக்கி' இவரது கதை ஒன்றில் "தூர திருஷ்டிக் கண்ணாடி' ஆக இடம்பெறும். விலங்கியல் குறித்த இவர் பார்வை வேறு மாதிரி. பிராணி நூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறுமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள் (பால்வண்ணம் பிள்ளை) என்று ஒரு கதையில் அங்கதச் சுவை! இவர் கருத்துப்படி, ""தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஓர் உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும் "சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்'' என்று பால்வண்ணம் பிள்ளையின் மனைவி பற்றி சித்திரிக்கிறார். ஒருவிதத்தில் மெய்ஞ்ஞானியும் விஞ்ஞானியும் கருத்துப் பரவல்தளத்தில் ஒரே அலைநீளத்தில் இயங்குபவர்தாம்.
""கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக் கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே'' (கயிற்றரவு) என்பார் புதுமைப்பித்தன். உண்மைதான். வானவியல் அடிப்படையில் சூரியனுக்கு அருகில் இருந்து கோள்களை வரிசைப்படுத்தினால் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என்றுதானே கிழமை அமைய வேண்டும். நாம் கற்பனையாக (ஹழ்க்ஷண்ற்ஹழ்ஹ்) வரையறுத்துக் கொண்டது தானே இந்த வார நாள் பரிணாமங்கள்!
அதே கதையில் ""அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது. அதிலே விளைந்த அனந்தகோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூர்ண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று, நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது. மீனாயிற்று. தவளையாயிற்று. வாலிழந்தது குரங்காயிற்று. சமாதி நிலையிலே உறங்கலாயிற்று... சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுகட்டாகக் காத்திருந்தது'' என்கிறார்.
ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சூரிய மண்டலம் உருவான வரலாறும், சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் சித்தாந்தமும் பின்னிப் பிணைந்த பிரபஞ்சவியல் இது. அதிலும், ""நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப்போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு''. உரத்த அறிவியல் சிந்தனை இது. ""நான் நினைக்கிறேன். அதனால் இருக்கிறேன்'' (ஐ ற்ட்ண்ய்ந் ற்ட்ங்ழ்ச்ர்ழ்ங் ஐ ங்ஷ்ண்ள்ற்) என்பதை "காகிடோ எர்கோ சம்' (இர்ஞ்ண்ற்ர் ங்ழ்ஞ்ர் ள்ன்ம்) என்பார் கிரேக்க மேதை டெக்காத்தே.
ஒரு வகையில் ஐன்ஸ்டீனின் நவீன சார்பியல் சித்தாந்தமும் இதுவே. அதுவும் பாருங்கள். இந்த அக்டோபரில் சூரிய கிரகணம், சந்திர கிரகணங்கள் நிகழ்ந்த அதே காலகட்டத்தில் ஐன்ஸ்டீன் வாழ்விலும் ஓர் அனுபவம்.
""1913 அக்டோபர் 14 அன்று தோன்றிய சூரிய கிரகணத்தின்போது சூரிய ஒளி அதன் விளிம்பில் 0.83 பாகை வளைந்தது தெரியவந்தது. அதாவது, ஒளி கூட ஈர்ப்பு விசைக்கு உள்ளாகும் உண்மை நிரூபணம் ஆயிற்று. ஐன்ஸ்டீனின் 1915-ஆம் ஆண்டின் பொதுச்சார்பியல் சித்தாந்தப் பரிசோதனை முடிவு இது.
பல்வேறு மருத்துவ அறிவியல் துறைகள் பற்றிய புதுமைப்பித்தனின் கருத்தோட்டத்தைப் பாருங்கள். ""அன்று ஆப்பரேஷன் தியேட்டருக்குக் கொண்டு வரப்பட்டவன் ஹடயோகி. விஷங்களையும், கண்ணாடிச் சில்லுகளையும் கண் எதிரில் தின்று சாகாதவன். சித்தாந்த சாமி என்ற அவன், இந்த இரு டாக்டர்கள் முன்னிலையில் கூடத் தன் திறமையைக் காட்டி இருக்கிறான்... எக்ஸ்ரே பரீûக்ஷயில் குடலில் ஒரு பகுதி பழுத்து அழுகி விட்டது என்று கண்டனர். காரணம், குடல் சதையில் ஒரு கண்ணாடிச் சில் குத்திக் கொண்டிருந்ததே'' (உபதேசம்) என்று விவரிக்கிறார். இறுதியில் அவர்களில் விஸ்வநாத் எனும் இந்திய மருத்துவர் தலைமொட்டை அடித்து, இடையில் காவி வேஷ்டி தரித்து, காலில் குப்பிப் பூண் பாதக் குறடு அணிந்து, பனிமலையில் பத்மாசனம் இட்டு நிஷ்டையில் உட்கார்ந்தபடி, தனது சக ஆங்கில மருத்துவருக்கு உபதேசம் செய்கிறார்: ""நான் சாகவில்லை. நீ என்னை எந்த நிலையில் பார்த்தாலும் சாகவில்லை என்று நம்பு. நமது உயிர் நூல்கள் சாஸ்திரங்களைக் கிழித்தெறிந்து விட்டு வேறு மாதிரியாக எழுத வேண்டும். அஸ்திவாரமே தப்பு''.
தினமணி நாளிதழின் உதவியாசிரியராக (1936 - 43) பணியாற்றி வந்த காலத்தில் புதுமைப்பித்தன் எழுதிய மருத்துவ நூல் மதிப்புரைகளில் ஊசியும் இருக்கும் மருந்தும் இருக்கும். "ஹோமியோபதி' (எம்.பால் எச்.எம்.பி), பயோ-கெமிஸ்ட்ரி (டாக்டர் என் கொண்டா, எம்.டி.எச்.எஸ்) ஆகிய இரு நூல்கள் பற்றிய இவரது மதிப்பீடுகள் இவை.
""...தற்போதைய நிலையில் இவை இரண்டும் தமிழன் கையில் கொடுப்பதற்கு மிகவும் அபாயகரமானவை என்பது என் கருத்து. இதில் சொல்லப்படும் மருந்துகள் யாவும், ரசாயன சாஸ்திரத்தை ஆழ்ந்து படித்து அதில் பண்பட்ட ஆசாமிகளுக்கே விளங்கும். ஒரு அணாவை உள்ளே தள்ளி பிளாட்பாரம் டிக்கட் வாங்கும் "ஸ்லாட் யந்திரம்' அல்ல அந்த அனுபவம். ரசாயன சாஸ்திரம் தெளிவாக அறிந்திருந்தால்தான் என்ன சேர்த்தால் என்னவாகும் என்றாவது ஒருவாறு பிடிபடும். லத்தீன் கடபுடாக்களான பெயர்கள் முழங்கும் தெளிவற்ற இப்பத்தகத்தை வைத்து தமிழன் ஹோமியோபதி கற்க முயல்வது அபாயகரமான வேலை. போலீஸ், கோர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு விட்டாலும் விட்டுவிடும்'' (தினமணி 31-01௧938) என்று நையாண்டி பண்ணுகிறார்.
அதே இதழில், "நியு ஹெல்த்' எனும் தலைப்பில், ""...நாகர்கோவிலில் இருந்து வெளிவரும் முப்பாஷை சுகாதாரப் பத்திரிகையின் வருஷ மலர் ஒன்று வரப் பெற்றோம். அதில் ஆங்கிலம், மலையாளம், தமிழ் முதலிய மூன்று பாஷைகளிலும் வைத்யம், தேகாரோக்யம் முதலியன பற்றி பல கட்டுரைகள் காணப்படுகின்றன. ஆயுர்வேத வைத்யத்திற்கு விசேஷ ஆதரவு கொடுக்கப்படுவது போற்றத்தக்கது'' என்று நற்சான்று வழங்கி இருக்கிறார்.
அறிவியலுக்குத் தகவல்களே ஆதாரம். பாருங்கள், திருநெல்வேலி சுலோசன முதலியார் பாலம் ""முட்டையும் பதநீரும் அரைத்த காரையில் கட்டியதாம்'' (சாமியாரும், குழந்தையும், சீடையும்) என்ற விவரணம் தொல் கட்டட நுட்பம் அல்லவா?
"செல்வம்' என்ற கதையில், ""ஜடத்தின் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் வேண்டும். அது முதல் படி. மற்ற எல்லா லட்சியங்களுக்கும்... அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டு மெத்தைக்கு என்ன வார்னிஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்'' என்று வாழ்வியல் வளர்ச்சிக்கும் ஆலோசனை தருகிறார் புதுமைப்பித்தன். ""மனிதன் நல்லவன்தான்; தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது அது தன்னிடமிருந்ததாக அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அறிவாளியாக அல்லல்படுகிறான்'' (சாமியாரும், குழந்தையும், சீடையும்) என்று சாமியார் வாய்மொழியாகக் கூறுகிறார் புதுமைப்பித்தன். அதுவும் உண்மைதானே!
நெல்லை சு. முத்து
நன்றி: தினமணி
|
|
|
| ஒட்டுப் படைகளை வைத்து சிறிலங்கா படையினர் தாக்குதல்கள் |
|
Posted by: வினித் - 11-07-2005, 04:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>ஒட்டுப் படைகளை வைத்து சிறிலங்கா படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்கள்: ஆதாரப+ர்வமான அம்பலம்
</b>
<b>திங்கட்கிழமைஇ 7 நவம்பர் 2005 ஸ ஜ நசார் ஸ
சிறிலங்கா படையினர் ஒட்டுப் படைகளை வைத்து தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராகத் தாக்குதல் நடத்துவது இப்போது ஆதார பூர்வமாக அம்பலத்திற்கு வந்துள்ளது. </b>
<b>ஒட்டுப் படையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த மூன்று இளைஞர்கள் இந்த உண்மையினை ஊடகவியலாளர்களிடம் பகிரங்கப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் இன்று பி.ப.4.00 மணிக்கு நடைபெற்றது. </b>
கறுப்பளையைச் சேர்ந்த கனகசுந்தரம் சுரேஸ் (வயது 16), மாங்கேணி மதுரங்குளத்தைச் சேர்ந்த செல்வம் பாபு (வயது 15), கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த சண்முகம் சர்வராஜா (வயது 21) ஆகிய மூவருமே இவ்வாறு சரணடைந்தவர்களாவர்.
கறுப்பாளையைச் சேர்ந்த கனசுந்தரம் சுரேஸ் கருத்துத் தெரிவிக்கையில்:-
<img src='http://img16.imageshack.us/img16/417/suresh1cd.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>கனகசுந்தரம் சுரேஸ் (வயது 16</span>)
நான் கூலித்தொழிலான மில் வேலை மற்றும் வரம்பு வேலை செய்பவன். முறக்கொட்டான்சேனையிலுள்ள உறவினர் வீட்டில் நின்று கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெலிக்கந்தையில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பிடித்தனர்.
பிடித்து கருணா குழு எனக் கூறும் ஒட்டுப் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஒரு நாள் இருட்டு அறைக்குள் பூட்டி வைத்தனர். மறுநாள் சித்தா மற்றும் சிலர் என்னை அவர்களுடன் இணைந்து செயற்படுமாறும் மாதம் ஆறாயிரம் ரூபாய் தருவதாகவும் கூறி கட்டாயப்படுத்தினர். பின்னர் ஆறுநாள் பயிற்சி தந்தார்கள். அதன் பின் என்னையும் வேறு ஒரு பெடியனையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான காக்காச்சிவட்டைக்கு அனுப்பி வைத்தார்கள்.
என்னுடன் வந்த இளைஞர் விடுதலைப் புலி உறுப்பினரைச் சுட்டதும் அவரிடம் இருக்கும் அடையாள அட்டை மற்றும் பொருட்களை எடுத்து வருமாறும் கூறியிருந்தனர். இவ்வாறு வந்து தங்கி நின்ற போது தான் பிடிபட்டதாகவும் மற்றைய நபர் ஓடி விட்டதாகவும் தெரிவித்தார். தற்போது எதுவித பயமுமின்றி இருப்பதாகவும் கூறினார்.
<img src='http://img242.imageshack.us/img242/3777/papu3uz.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>செல்லம் பாபு வயது 15 </span>
<b>மாங்கேணி மருதங்குளத்தைச் சேர்ந்த செல்லம் பாபு வயது 15 தெரிவிக்கையில்:- </b>
நான் கூலி வேலை செய்பவன். ஓமடியார் மடுவில் வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒட்டுப் படையைச் சேர்ந்த ராஜிகுமார், ரங்கன், மாயவன் ஆகிய மூவரும் என்னைப் பிடித்தனர்.
எங்களோடு நில்@ உனக்கு மாதம் ஆறாயிரம் ரூபா சம்பளம் தருவோம் எனக் கூறினர். பின்னர் தீவுச்சேனைக்குக் கொண்டு சென்றனர். அங்குதான் ஒட்டுப் படையினர் முகாமிட்டுள்ளனர். அங்கு ஐந்து நாள் பயிற்சி தந்தார்கள்.
பின்னர் வாகரை, கட்டுமுறிவுக் குஞ்சன் குளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்குக் கூட்டிச் சென்றனர். (30.10.2005) அங்கு விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆமிக்காரர்களும் வந்தார்கள். இவர்கள் சிங்களம் பேசினார்கள். பின்னர் மகேசன் என்னும் போராளி மீது கைக்குண்டை வீசி விட்டு வா. உனக்கு பத்தாயிரம் ரூபாய் தாரன். அதன் பின்பு வீட்டுக்குப் போகலாம் எனத் தெரிவித்தனர். நான் கைக்குண்டையும் எடுத்துக் கொண்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தேன் எனத் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த சண்முகம் சர்வராசா (வயது 21) தெரிவிக்கையில்:-
<img src='http://img16.imageshack.us/img16/639/sarvarasa7kk.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>சண்முகம் சர்வராசா (வயது 21)</span>
நான் வெளிநாடு சென்று கட்டாரில் வேலை செய்தேன். அப்போது ஒட்டுப் படையிலுள்ள மார்க்கன் என்னோடு தொடர்பு கொண்டு நீ கொழும்பு திரும்பு. உனக்கு வேறு நாட்டில் நல்ல வேலை பெற்றுத் தருகிறேன் என்றார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையம் நடத்துவதாகவும் குறிப்பிட்டார். அதனை நம்பி நான் கொழும்பு திரும்பிய போது விமான நிலையத்தில் காத்திருந்த மார்க்கன் என்னை ஏற்றிக் கொண்டு தீவுச்சேனைக்குக் கொண்டு வந்தார்.
சேனபுர என்ற முகாமுக்குக் கூட்டிச் சென்று என்னை படையினரிடம் அறிமுகப்படுத்தினார். இவர் எங்களுடைய ஆள். வெளிநாடு சென்றிருந்தவர். தற்போது வந்திருக்கிறார். இவர் போக்குவரத்துச் செய்யும் போது ஒத்துழைப்பு வழங்குமாறு கூறியிருந்தார்.
பின்னர் தாக்குதலுக்குப் போகும் முன்பு படை முகாமுக்குப் போவார்கள். அங்கு ஆயுதங்கள் துப்பாக்கி ரவைகள், கைக்குண்டுகள் எல்லாம் வழங்கப்படும்.
ஆமிக்காரர்களும் ஒட்டுப் படையினரின் முகாமுக்கு வந்த போவார்கள் எனத் தெரிவித்த சர்வராசா ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்:-
தற்போது தீவுச்சேனையில் 65 ஒட்டுப் படையினர் உள்ளனர். இவர்களில் அநேகமானோர் முதியவர்கள். தொழிலில்லாது கஸ்டப்பட்டவர்களுக்கு மாதம் ஆறாயிரம் தருவதாகக் கூறியே இணைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
திருமலையில் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான டிக்கான் மீது தாக்குதல் நடத்தியது சிறிலங்கா கடற்படையினர் தான். ஏனெனில், சிறிலங்கா கடற்படையினர் வந்து இவர்களையும் கூட்டிச் சென்றனர் என்றார்.
இறுதியாக மட்டக்களப்பு பற்பொடி கம்பனியிலுள்ள சிறிலங்கா படை புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியான குமாரசேன என்பவர் இராணுவ வாகனத்தில் ஏற்றிக் கொண்டு 25.09.2005 அன்று இரவு மண்முனை ஐந்தாம் கட்டை எனும் இடத்திற்கு என்னைக் கொண்டு வந்தனர். அங்கே மண்முனை சிறிலங்கா அதிரடிப் படையினரின் வாகனம் வந்தது. அதில் குமார சேன ஏற்றி விட்டு ஒரு ரைபிளைத் தந்து கொக்கட்டிச்சோலைக்குப் போய் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரைச் சுட்டு விட்டு வருமாறு கூறினார்கள்.
அதிரடிப் படையினர் மண்முனைக்கு வந்ததும் மீன்பிடி தோணிகளில் ஏற்றி என்னை கொக்கட்டிச்சோலைக்கு அனுப்பினார்கள். நான் விடுதலைப் புலிகளிடம் வந்து சேர்ந்தேன் என்றார்.
http://www.nitharsanam.com/?art=12878
http://www.eelampage.com/?cn=21500
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=3458
|
|
|
| ஆடிய ஆட்டம் என்ன? வீடு போகிறார். |
|
Posted by: வினித் - 11-07-2005, 03:54 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கு எதிராக ஆடிய ஆட்டம் என்ன - இலங்கை அரசியலில் அதிகம் தலையிட்டவர் வீடு போகிறார்.
ஜ திங்கட்கிழமைஇ 7 நவம்பர் 2005 ஸ ஜ அருள்ராஜன், ஸ
இலங்கை அரசியலில் அதிகம் தலையிட்டவர் இந்திய அரசியலில் இருந்து வீட்டுக்குப்போகிறார். தனது பதவியையும், கதிரையையும் இன்று அவர் காலி பண்ணியுள்ளார். பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயாரின் மிகவும் நெருங்கிய நண்பனாகவும், அமெரிக்க ஜனாதிபதி புஷ் யின் சினேகிதனாகவும் காட்ட முற்பட்டு, தென் கிழக்காசியாவில் இந்தியாதான் வல்லரசு என்று உலகத்திற்கு காட்ட முற்பட்டவர் அரசியலில் முக்குடைந்து வீட்டக்குச் செல்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நகர்வுகளில் இவருக்கு பாரிய பங்கிருந்ததாக நம்பப்படுகிறது. கதிர்காமரின் மரணச்சடங்கிற்கு தனி விமானத்தில் இறுதி கிரியை நடாத்த கொழும்பு வந்த இவர் நோர்வே தரப்பினரை சந்திக்க மறுப்பு தெரிவித்திருந்தார். அனுரா பண்டாரநாயக்காவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக செயற்பட விரும்பிய இவர் மகிந்த றாஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டவர். இலங்கைக்கு வந்து, சிவராமை கொலை செய்த கும்பலான புளொட் அமைப்பினரை முதலாவதாக சந்தித்து பலரையும் அதிச்சியடைய வைத்ததுடன் இலங்கையில் உள்ள தமிழ் சருகு குழுக்கள் அனைத்தையும் சமாதான பேச்சுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று வீர வசனம் பேசியதுடன், சமாதான பேச்சுகள் தொடர்பாக வீர வசனம் பேசியவர்.
அமெரிக்க விசேட சதி வலைக்குள் அகப்பட்ட இவர் தென் கிழக்காசியாவில் அமெரிக்காவிற்கு ஆதரவாக நடப்பது போன்று காட்டிக்கொண்டு அமெரிக்காவிற்கு எதிராக சவால் விடும் விதத்தில் நடக்க முற்பட்டதனால், தற்போது ஊழல் அம்பலத்தில் அகப்பட்டு வீட்டுக்கு செல்கிறார். தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை அரசியலில் அதிகம் தலையிட்டவர் என்ற ஒரு கருத்தையும் ஜரோப்பிய ஆய்வாளர்கள் மத்தியில் சம்பாதித்துக்கொண்டவர். </b>
http://www.nitharsanam.com/?art=12874
|
|
|
| இது லொள்ளுங்க சோமவன்ச |
|
Posted by: வன்னியன் - 11-07-2005, 03:11 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்கள் இருக்கும் வரை நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படாது ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க
விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களிடம் ஆயுதம் இருக்கும் வரை நாட்டில் சமாதானமோ அமைதியோ ஏற்படப் போவதில்லை.
ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கஇ காலி - சமனல மைதானத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய சோமவன்ஸ:
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தை நவீனமயப்படுத்தப் போவதாகக் கூறுகின்றார். எப்படி செய்யப்போகிறார். விடுதலைப் புலிகளின் படைக்கு சமமாக கொண்டு வருவாராஇ படை அணியைக் குறைக்கப் போவதாகக் கூறுகிறார்.
விடுதலைப் புலிகளுடன்இ அவர் பிரதமராக இருந்தபோது செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி சிவில் உடையில் பொலிஸாரோஇ இராணுவத்தினரோ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் போக முடியாது! இதுதான் சமாதான ஒப்பந்தம்.
விடுதலைப் புலிகளிடம் அடிமைகளாக வாழும் வடக்குஇ கிழக்கு தமிழ் மக்கள் அதில் இருந்து விடுவிக்க தென்பகுதி மக்களின் உதவியை நாடுகின்றனர்.
ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது அதனை எதிர்த்தவர் மகிந்த ராஜபக்ஷ. உலக நாடுகளும் அதனை எதிர்த்தன. ஆனால் ரணில் அதனை ஆதரித்தார்.
ஜே.வி.பி.பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தமது உரையில்:
புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படாமல் செய்யப்பட்டது. புலிகளுக்கு நாட்டை பிரிக்கும் ஒப்பந்தமே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
வெளிநாட்டவர்கள் எமது நிலங்களை வாங்குகின்றனர். காலி கோட்டையில் 40 வீடுகளை வெளிநாட்டவர்கள் வாங்கியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றினார். நாம் ஆட்சிக்கு வந்து அதனை மீண்டும் திணைக்களமாக மாற்றினோம்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டை அபிவிருத்தி செய்வதாக தனியாருக்கு அரச சொத்துக்களை விற்பார்கள் என்றார்.
[b]ஏனுங்கோ நீங்கள் 87 களில் வைச்சிருந்ததையெல்லாம் கொடுத்துவிட்டியளோ
நீங்கள் அதை வைச்சு பிரித் ஓதினனீங்களோ? அதை வைச்சு போதுமக்களைதானே கொன்று குவித்தனிங்கள்
|
|
|
| ஈழத்தவரின் மண்! திரைப்படம்! |
|
Posted by: Shan - 11-07-2005, 01:23 PM - Forum: சினிமா
- Replies (49)
|
 |
மாற்று மற்றும் கனவுகள் நிஜமானால் படத்ழத இயக்கிய புதியவன் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட மண் என்ற திரப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் உலகமெங்கும் எதிரி வரும் மாசிமாதம் திரைக்குவரவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் திரையில் ஒரு ஈழத்ததவர்களின் படைப்பு வரவுள்ளது. கோமாளிகள் வாடைக்காற்று போன்ற பேர் சொன்ன திரைப்படங்களின் பின் இந்த படமும் நிச்சயம் ஒரு முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. தென்னிந்திய தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகியமையால் புதியவனின் தொலைக்காட்சி படங்களில் இருந்த தொழில் நுட்ப குறைகள் இதில் அருகிவிடும். தென்னிந்தியாவில் தற்போது எடிட்டிங்வேலைகளும் இலங்கையில் தற்போது டப்பிங் வேலைகளும் மிக மும்மரமாக நடை பெறுகின்றது. மட்டு நகரை சேர்ந்த ஒரு இளம் பெண் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜேர்மன் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். புதியவின் மண் பற்றிய மேலதிக தகவல்களை இங்கு எதிர்பாருங்கள்.
|
|
|
| Karuna Defection - Wickremasinghe's Ploy” - UNP Stalwart |
|
Posted by: narathar - 11-07-2005, 12:14 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (4)
|
 |
“Karuna Defection - Wickremasinghe's Ploy” - UNP Stalwart
[TamilNet, November 07, 2005 10:04 GMT]
A United National Party (UNP) stalwart, Mr. Naveen Dissanayake, has said that it would not be necessary for Sri Lanka’s Military to fight the Tigers. "American and Indian forces will fight the LTTE if Liberation Tigers' leader Pirapaharan opts to wage a war," Naveen Dissanayake told the audience at an Election propaganda meeting, Thursday, at Ginigathena in the upcountry district of Nuwara Eliya, a Tamil daily, Uthayan, quoted in its headline story, Monday. Mr. Dissanayake has also claimed that a situation was created to make the renegade LTTE commander Karuna to get dissatisfied with his leadership during the period covering his trips to Europe, the paper said.
According to the paper report, Dissanayake has claimed that Karuna had the full backing of Wickremasinghe before he set out on his diversion. "This is why Mr. Pirapaharan was unable to wage another war," the UNP stalwart told the audience.
Dissanayake also referred to Mr. Wickremasinghe's meetings with the US President, George W. Bush, and Mrs. Sonia Gandhi, the president of the Indian National Congress (Congress Party), and said that Wickremasinghe has made the necessary groundwork to conduct the war with the LTTE, if the latter opts for one..
"There will be no need for Sri Lankan forces to do the fighting," he further said.
The meeting was organised by the Nuwara Eliya district organiser of the UNP, Mr. K. K. Piyadasa. Mrs. Hema Premadasa, the wife of the late Sri Lankan president and former UNP leader Mr. R. Premadasa , UNP parliamentarian Bandula Gunawardene, and Mr. Vijeyakumar, the General Secretary of the Upcountry People’s Front were present at the meeting, the paper said.
The UNP parliamentarian Naveen Dissanayake is the son of late Gamini Dissanayake.
source, TamilNet,
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16275
|
|
|
| போர்'' அடித்ததால் நகை திருடி மாட்டிக்கொண்ட மூதாட்டி |
|
Posted by: SUNDHAL - 11-07-2005, 04:09 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
போர்'' அடித்ததால் நகை திருடி மாட்டிக்கொண்ட மூதாட்டி
62 வயதான இத்தாலி நாட்டு மூதாட்டி ஒருவர் வாழ்க்கை `போர்' அடித்ததால் அதை உற்சாகமாக மாற்ற நகைகளை திருடியதால் ஜெனோவா நகர போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். மெலிதாக இருந்தாலும் தன்னை பணக்கார பெண் போல் காட்டிக்கொண்டு நகைக்கடைகளில் தன் `கைவரிசை'யை காட்டி வந்தார்.
நகைகளை பார்வையிடுவது போல் பாவனை செய்து, விற்பனையாளர் மற்ற வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது நைசாக நகைகளை திருடி உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக்கொள்வார். இப்படி அவர் திருடிச் சேர்த்த நகைகளின் மதிப்பு ரூ.35 லட்சத்துக்கும் அதிகமாகும். ஆனால், ஒரு நாள் திருடும்போது கேமராவில் சிக்கிக்கொண்ட அவர் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
அன்றாட வாழ்க்கை `போர்' அடித்ததால் அதை உற்சாகமாக மாற்ற நகைகள் திருட ஆரம்பித்ததாக கூறிய அவர், தான் வயதானவர் என்பதாலும், உள்ளாடைக்குள் நகைகளை மறைத்து வைத்ததாலும் இதுவரை யாருக்கும் சந்தேகம் வரவில்லை'' என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
Thanks:Thanthi....
|
|
|
| வாழ்க்கை பொய்யா? |
|
Posted by: Rasikai - 11-07-2005, 03:08 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
<b>வாழ்க்கை பொய்யா? </b>
அளவான ஆசை வாழ்க்கை
அதிகமான ஆசை கனவு
வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும்
வாழ்வு என்னமோ
கனவின் கை பிடித்தே நகரும்...
கனவுகளில் பல மெய்யாவதில்லை
அப்போ வாழ்க்கையும் பொய்யா??????????????
:roll: :roll: :roll: :roll:
|
|
|
| இலக்கியத்தியல் அறிவியல் |
|
Posted by: Rasikai - 11-07-2005, 01:42 AM - Forum: தமிழும் நயமும்
- Replies (14)
|
 |
<b>இலக்கியத்தியல் அறிவியல்
சிங்கை கிருஷ்ணன்</b>
ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின்அறிவையும், பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக்
காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கிறது.
இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துகளை புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்ப காலக்கண்ணாடியாக இலக்கியத்தில் காணலாம்.
''இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடுகூடப் படாத சங்க காலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவில் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கிறது."! இன்றைய
நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கிப் பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு அறிவியல் பார்வை இலக்கியத்தில் பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.
'' எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப அறிவு '' [குறள்.355]
'' எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு '' [குறள்.423]
என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார். விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல்
என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார்.
இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான் வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது. பின்னர் ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.
''அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் ''
என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.
கம்பரும் இக்கருத்தினை இரணி வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார். இரணியன்,
'' இறைவன் எங்கு உள்ளான் '' என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன்
ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.
'' சாணினு முளனோர் தன்மை
அணுவினைச் சத கூறிட்ட
கோணினு முளன்..... " [கம்பராமாயணம்.253]
என்ற பாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து மிளிர்கிறது.
தமிழ் இலக்கியத்தில் '' ஒப்புநோக்குக் கொள்கை'' உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடையவராய் விளங்கினர் என்பதற்கு தொல்காப்பியரைச் சான்றாக காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள்
என்பதனை,
'' முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப் இயல்புணர்ந் தோரே ''
என்று நிலமும் காலமும் என இருவகையாகப் பிரித்துள்ளார்.
நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப் பொருளின் இச் சுருங்கா இயல்பை
அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் ' பாஸ்கல் ' என்னும் அறிஞர். இப் பாஸ்கல்
விதிக்குச் சான்றாக,
''ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது ''
என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தை பொறுத்து அழுத்தம் மிகுகின்றது என்ற
மற்றொரு அறிவியல் உண்மையும் எடுத்துரைக்கின்றார்.
உலகில் நிகழும் சாதாரணச் செயல்கள் அனைத்திலும் வேதியியலின் நிகழ்வுகள் உண்டாகின்றன.
இவ்விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. ஆனால் ஏன் என்ற வினாவிற்குக் கற்றவர்கள் தவிர
கல்லாதவர்கள் விடை அளிக்க இயலாது. தமிழ்ச் சான்றோர்பல் துறை அறிவுடையவராய்
விளங்கியமையால் இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கித்தம் பாடல்களில் தம்
முத்திரைகளைப் பதித்துள்ளனர்.
சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச்
சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர்
இளங்கோ அடிகள். ஆதலின்,
''ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும்
காவிரி நாடான் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலந்தரி தலான்...''
என்று ஞாயிற்றைப் போற்றினார்.
உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதை தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகிப் பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும்
செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்பு செல்
தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை. இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய்,
''ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே ...'
..தொல் பொருள் மரபியில்:29.
உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வாரக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், இராமன் அவரதாங்கள்.
அதில் மனிதனை நெறிப்படுத்தும் தத்துவங்களை மீறிய ஒரு விஞ்ஞான அதிசயம் பொதிந்து கிடப்பதுதான் முக்கியம். உயிர்களின் வளர்ச்சியை பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த டார்வின் சித்தாந்தம் இந்துமத இதிகாசங்கள் பொருந்தி இருப்பதைக் காணலாம்.
டார்வினுக்கு நமது இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை.
ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். இந்த மூன்று அவதாரங்களை கவனித்தால் டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது. இங்கேயும் செல் [ஜீன்] விஷயம் தெரிகிறது. மனிதனுக்கு அவனது ஜீன்கள் என்ற ஜீவ அணுவில் ஏற்கனவே எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதை, எந்த காலகட்டத்தில் அவன் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதி. அதன்படிதான் மனித குலம் வளர்ந்து
வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மீனில் ஆரம்பித்த அவதாரம் 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். வாமன அவதாரம் என்பது விஞ்ஞான ரீதியாக பரிணாம வளர்ச்சியில் மிகச் சரியானது. இந்துமத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வெளியிட்டுள்ள அறிவியல் செய்தி.
மற்ற அவதார புருஷர்களைவிட இவர் குள்ளமானவர்! நான்கு அவதாரங்களை அடுத்து மிகச் சரியாக விடுபட்ட [ மிஸ்ஸிங் லிங்க் ] இந்த குள்ளமான வாமன அவதாரம். விஞ்ஞானத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது.
''மிஸ்ஸிங் லிங்க் ''என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும்
ஒரு சொல். '' விட்டுப்போன கண்ணி '' குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று
விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று
இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை
பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப்
பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.
டார்வின் சித்தாந்தப்படி உயிர்கள் தண்ணீரில்தான் உருவாயிற்று என்று 200 ஆண்டுகளுக்கு
முன்னால்தான் ஆச்சரியமாக கண்டறியப்பட்டு. இந்து மத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னமே முதல் அவதாரமாக 1.' மச்ச அவதாரம்' என்று மிகச் சரியாக காட்டியுள்ளது.
2. 'கூர்ம அவதாரம்' [மை வடிவம்].
3. 'வராக அவதாரம்' 4.காட்டுக்கு ராஜாவான சிங்கத்திற்கு 'சிம்மாவதாரம்'.
5. மிருகங்களிலிருந்து முதுகுத் தண்டு நிமிர ஆரம்பித்த குள்ள ஜீவனான 'வாமன அவதாரம்.
6வது பரசுராம அவதாரம், 7வது அவதாரம்
இராம அவதாரம் 8வது பலராம அவதாரம்.
எல்லாமே மனிதன் சாதாரணக் கருவிகளான வில்
ஈட்டி, கோடாரியை பயன்படுத்திய காலகட்ட அவதாரங்கள்!
வானவியல் பற்றிய அறிவுடையவராய் விளங்கினர் அக்கால மக்கள் என்பதை இலக்கியங்கள்
மூலமாக உணரலாம். சூரியனையும், அதனைச் சுற்றி உள்ள கோள்களையும் அறிவியல் அறிஞர்கள் [ Solar System] சூரிய வட்டம், அதனைச் சுற்றியுள்ள பாதை என்று மொழிகின்றனர். இவ்வாறு வானவெளியில் காணப்படும் இக்காட்சியைப் புறநானூறுக்
கவிஞர்,
'' செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்று பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்...''
புறநானூறு : 30.
என்று பாடியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் கனவைத் தம் பாடலின் மூலம் கூறுகிறார்.
'' வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்...
என்று பாடியுள்ளமை உணரலாம். இன்று சந்திர மண்டலத்தினையும் தாண்டி மற்ற கோள்களையும் ஆய்வு மேற்கொண்டுள்ளான்.
தமிழ் இலக்கியத்தில் பயணத்தை விரைவாக்கிய விமானம் பற்றிய சிந்தைகளையும் காணமுடிகிறது. புறநானூறு ஓட்டுநர் இல்லாத வானவூர்தியைப் பற்றிய செய்தினை தருகின்றது. அவ்வடிகள்:
'' வலவன் ஏவா வான வூர்தி
எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக் ...''
புறம்.27
''கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்..'
சிலம்பு.
என்ற அடிகளில் சிலப்பதிகாரம் ' வானவூர்தி' என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளமை காணலாம். சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர், விசயை வானத்தில் பறக்கக் கூடிய பறவை உருசத்தில் அமைந்த ஊர்தியில் சென்றதாகக் காட்டுகிறார். அவ்வடிகள்:
''என்பு நெக்குருகி உள்ளமொழுகுபு சோர யாத்த
அன்பு மிக்க வலிதாற்றா வாருயிர் கிழத்தி தன்னை
இன்ப மிக்குடைய சீர்த்தி இறைவன தாணை கூறித்
துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன் றுணைவி சேர்ந்தாள்''
- சீவக சிந்தாமணி-
இவ்வாறு தமிழிலக்கியச் சான்றோர்கள் விமானம் பற்றிய தம்முடைய சிந்தனையை வித்திட்டு சென்றனர்.
கடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம்- புலமைக்குத் தலைமை தந்த பெருமை - அறிவியலையை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன் முதலில் நடைப்பெற்ற பட்டிமன்றம்.
சிறப்புடன்... அது ஒரு அறிவியல் தலைப்பட்ட அறிஞர் விவாதம். ஒரு புலவனுக்கு உதவ இறையானர் இறங்கி வந்தது. உண்மையான திறமையுள்ள புலவனுக்கு இறைவனை எதிர்புறவாதம் செய்யவும் துணிவு இருந்தது.
இலக்கிய, ஞன, ஆன்மீக, கலாச்சார சிறப்புகள்.
எல்லோரும் அறிந்த கதைதான். மதுரை மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஒரு ஐயம். பெணகளின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா ? ஆலவாய் சொக்கர் தருமிக்கு தந்துதவிய பாட்டு.
"கொங்கு தேர் வாழ்க்கை அன் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியன்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே'' !
மலர்கள் தோறும் சென்று பூந் தாதுக்களைத் தேர்ந்தெடுத்துத் தேன் உண்ணும் வண்டினை நோக்கித் தலைவன் கூறுவதாய் அமைந்த பாடல்.
'' நீ கண்டுள்ள மலர்களில் எல்லாம், தலைவி கூந்தலுக்கு நிகரான மணம் உண்டோ''
என்று வினவும் பாடல்.
இப்பாடலின் உள்ளூறை - கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு!
சரி. நவீன விஞ்ஞானத்தைச் சற்று பார்ப்போம்.
''·பீரோமோன்ஸ்'' [ Pheromones ] என்று சில வேதிப்பொருட்கள்
( ரசாயனப் பொருட்கள்) உள்ளன. இவை குறிப்பிட்ட சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன.
இத்தைய ·பீரோமோன்ஸ், அந்த வகையில் உயிரினங்களுக்குள், ஆண்-பெண் அடையாளம் காட்டவும்,
அவற்றின் பாலின மற்றும் நடத்தைகளை நிர்ணயிக்கவும் உதவுகின்றன.
சரி, ·பீரோமோன்ஸ் எங்கெங்கு உள்ளன? ·பீரோமோன் சுரப்பிகள் மயிர்கால்களோடு
அதிகம் தொடர்புடையவை.
இன்னமும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் முழுமையாக முற்றுப் பெறாத நிலையில் நமக்கு கிடைத்திருக்ககூடிய செய்தி இது. மேலும் ஆராய்ச்சிகள் தொடரத் தொடர இன்னமும் தெளிவான செய்திகள் கிடைக்கலாம்.
எப்படியாயினும், இயற்கையில் சுரக்கப்படும் ·பீரோமோன்ஸ் தரும் மணத்தை
இயற்கை மணம் உண்டு இறையனார் பாடல் சுட்டுகிறது.
அப்படியானால், செண்பகப் பாண்டியனுக்கு வந்தது ஒரு விஞ்ஞான சந்தேகம். இறையனார் தருமி மூலம் கொடுத்த, ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கும் ஆலவாய் சொக்கருக்கும் ஏற்பட்டது ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கு முதலில் உடன்பாடு இல்லை.
ஆனால், யார் இதற்கான நிச்சியமான தகவலைத் தரமுடியும்?
நிச்சியமாக இயற்கையின் உண்மையை - இயற்கைத் தலைவனான இறைவனே விளக்குவதாக நிகழ்ச்சி அமைந்தால், சிக்கலுக்கு தீர்வு கிடைத்தது.
அறிவியல் தனத்தோடு , அறிவியல் பார்வையோடு நம் பார்வை அமையலாம். அமையவேண்டும்.
இன்றைய விஞ்ஞானப்படி தண்ணீரில் ஹைரஜன் வாயு இரண்டு பங்கும், பிராண வாயுஒரு பங்கும் உண்டு [H 2 0 ] என்கிறோம். இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
'' பிராணம் ஏசும் அன்யத்வே '' என்கிறது அதர்வண வேதம். அதாவது பிராண வாயு ஒரு பங்கும்
இன்னொரு வாயு இரண்டு பங்கும் என்கிறது.
பல வருடங்களுக்கு முன் சந்திர மண்டலத்துக்கு சென்று மண்ணெடுத்து வந்தார்கள். அந்த மண் கறுப்பாக இருந்தது.
நம் பழைய வேதத்தில் அதைப்பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அங்கீரஸ் மஹரிஷி ஒரு ஹோமம் நடத்தினார். அதற்கு சந்திரலோகத்திலிருந்து மண்ணெடுத்து
வந்து பூமியிலுள்ள மண்ணோடு பிசைந்து குண்டம் தயாரிக்க வேண்டியிருந்தது.
அது சரித்திரம். அதைக் குறிப்பிடும்போது '' சந்த்ரமஸி கிருஷ்ணம '' என்கிறது வேதம்.அதாவது, '' சந்திர மண்டலத்து மண் கறுப்பானது '' என்று விளக்கம்.
இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சரித்திர முக்கியதுவம்வாய்ந்த நிகழ்ச்சி குருசேத்திரத்தில் 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போர்.
அஸ்தினாபுரத்தில் கண் பார்வையில்லா திருதராஷ்டிரன் தன் சயன மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்க, பார்வையில்லாத அவனுக்கு தேரோட்டி சஞ்சயன் சினிமாஸ்கோப் அகலத்தில் சுவரில் தெரிந்த போர்க்களக் காட்சிகளைப் பார்த்து வருணனை [கமெண்டரி] செய்து கொடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. முதல் ஒளிபரப்பு அதுவும் நேரடி ஒளிபரப்பு மகாபாரதப் போர். முதல் வருணனையாளர் சஞ்சயன்.
இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற எல்லா விஞ்ஞான அறிவியல் சங்கதிகளும் மகா பாரத காலத்திலேயே இருந்திருக்கின்றன. அதே போல் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த சித்தர் தன் தொலை நுண்ணுணர்வு மூலம் [ இப்போது டெலிபதி என்று சொல்கிறோம்] வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு
ஞான மொழியில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.
சமீப ஒரு கண்டுபிடிப்பை டெல்லி பல்கலைகழத்தைச் சேர்ந்த ஒரு அறிவியலாளரும், அவரது குழுவினரும் வெளியிட்டுள்ளார்கள். பல ஆண்டுகள் இவர்கள் குருச்சேத்திர
அகழ்ந்து தோண்டி ய்வு செய்துள்ளார்கள். மகா பாரதப் போரில் இரசாயன ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு. போர் நடந்த பிரதேசத்தில் சற்று ஆழமாகத் தோண்டி எடுத்த மண், இரும்பு துண்டுகள், தேர் சக்கர உதிரி பாகங்களை எடுத்து பரிசோதனை
செய்து பார்த்ததில் இப்போது இந்திய இராணுவத்தில் உள்ள அக்னி ஏவுகணையில் என்னென்ன இரசாயன சங்கதிகள் உள்ளதோ அத்தனையும் அந்த மண்ணில் உள்ளதாம்.
நவீன அறிவியல் கருவிகளை கொண்டு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கதிர் வீச்சுகள் இன்னும் அந்த உலோகப் பொருட்களில் இருப்பதை மெய்பித்துள்ளார்கள். [ தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சிலும் இதனை நான் பார்த்திருக்கிறேன்.]
நமது முன்னோர்கள் நமக்கு முன்னால் பிறந்தவர்கள் மட்டும அல்ல. நம் காலத்தில் இருக்கும் எல்லா விஞ்ஞான விஷயங்களுக்கும் அவர்கள் முன்னோடிகளும் கூட
நன்றி எழில்நிலா
|
|
|
|