<b>மண்</b>
<img src='http://www.virakesari.lk/VIRA/Cinema/images/man_1.png' border='0' alt='user posted image'>
இலங்கைத் தமிழ் திரைப்பட வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பின் பிலிம் ஏசியா புரடக்ஸன் தரும் சினிமாஸ்கோப் திரைப்படம் "மண்".
சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவுக்கான தனி அங்கீகாரத்தை பெற்றுக்ககொடுக்கும் நம்பிக்கையோடு உருவாகிக்கொண்டிருக்கும் முழு நீளத் வண்ணத் திரைப்படம்.
எப்படி மண்ணானது நாம் பிறக்கிறபோது.. தவழ்ந்துநடக்கிறபோது.. உழுது விதைக்கிறபோது, அழுது அணைக்கிறபோது…காதலித்துக்கட்டிப் புரள்கிறபோது,மரணித்து ஆத்மா அடங்குகிற போது எம்மைச் சுமக்கின்றதோ அதே போல எம் திரைக்காவியம் "மண்" கூட உங்களை ஒரு தமிழ் கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வாழவிட்டு.. அழவிட்டு.. சிரிக்க விட்டு.. சிந்திக்கவிட்டு.. உணர்ச்சி ததும்ப விட்டு.. படமாக இல்லாமல் உங்கள் வாழ்வின் பகுதியாக எண்ணவிட்டு திரையரங்கிலிருந்து வீட்டுக்கு செல்ல வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் D.T.S டிஜிடல் ஒலிக் கலவையுடன் வெளிவர
இருப்பதோடு மட்டுமல்லாது இலங்கைத் தமிழ் சினிமாவின் மறுபிறப்புக்கு கட்டியம் கூறும் என்பதும் மிகையல்ல. ஒரு தமிழ் கிராமத்தின் மண்வாசனையை அள்ளி வரும் இந்த மண் ஒரு திருப்பு முனையாக வாழ்வின் மூச்சாக உயிரின் நிழலாக உங்களோடு இணையப்போகிறது என்ற நம்பிக்கையோடு வெளிக்கொண்டு வர இருக்கிறோம்.
<b>காதலும் அரசியலே! வாழ்வும் அரசியலே!!</b>
<img src='http://www.virakesari.lk/VIRA/Cinema/images/man_2.png' border='0' alt='user posted image'>
<i>திரையில்.</i>
இந்தப் படத்தில் மாற்று கனவுகள் நிஜமானால் ஆகிய இரண்டு படங்களில் நடித்த விஜித் கதாநாயகனாக நடிக்க முக்கிய பாத்திரத்தில் தோன்றி நடிக்கிறார் ஆதவன் - ஷனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முன்நூறு படங்களுக்குமேல் நடித்திருக்கும் தென்னிந்திய நடிகர் சந்திரசேகரன் காதல் புகழ் சுகுமார் மற்றும் இவர்களோடு இலங்கை சரஸ்வதி பரிசில் பெற்ற செல்வசேகரன் ஏ9 இவ்வழியால் வாருங்கள் உட்பட பல திரைப்படங்களில் நடித்த நம் கலைஞர் தர்சன் உட்பட மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
<img src='http://www.virakesari.lk/VIRA/Cinema/images/man_3.png' border='0' alt='user posted image'>
திரைக்குப் பின்னால்..
இந்தப் படத்தின் நடன இயக்கத்தை ஏற்றிருக்கிறார் தினா ஜெயம் போன்ற படங்களில் பணியாற்றிய பாலாஜி. அக்னி நட்சத்திரம் வசூல் ராஜா எம்பிபிஎஸ் சந்திரமுகி போன்ற படங்களை தொகுத்த சுரேஸ் அர்ஸ் தொகுக்க, ஒளிப்பதிவு செய்கிறார் கனவுமெய்ப்படவேண்டும் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார். சேட்டை நம்பியார் போன்ற படங்களுக்கு இசை அமைத்த நம்மவர் ஜேர்மன் விஜய் இசையமைக்க ஒப்பனைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் சர்வதேச விருதுகள் பெற்ற இலங்கைப் படங்களில் பணியாற்றிய வசந்த
<img src='http://www.virakesari.lk/VIRA/Cinema/images/man_4.png' border='0' alt='user posted image'>
விட்டாச்சி. ஆங்கிலப் படங்கள் உட்பட 15 படங்களுக்கு மேல் முதல் உதவி இயக்குனராக பணியாற்றிய விமல் தேசப் பிரிய இப்படத்திலும் முதல் உதவி இயக்குனராகும். கனவுகள் நிஜமானால் படத்திற்கு திரைக்கதை எழுதிய கஜேந்திரா இப்படத்திற்கு திரைக்கதை எழுதித் தயாரிக்க வசனம் இயக்கத்தை ஏற்றிருக்கிறார் மாற்று , கனவுகள் நிஜமானால் படங்களை இயக்கிய புதியவன்.
Thanks:
http://www.virakesari.lk/VIRA/Cinema/Cinem...ema_%20news.htm
[b]<span style='font-size:22pt;line-height:100%'>உங்கள் கலைப் படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.</span>