![]() |
|
புதுமைப்பித்தனின் வாழ்வியல் ஆலோசனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: புதுமைப்பித்தனின் வாழ்வியல் ஆலோசனை (/showthread.php?tid=2564) |
புதுமைப்பித்தனின் வாழ்வியல் ஆலோசனை - Mind-Reader - 11-07-2005 ""எதுதான் சிறுகதை? சிறுகதையின் எல்லை என்ன? சிறுகதைக்குத் தனிப்பட்ட ரூபம் உண்டா? இதற்கெல்லாம் சூத்திரங்கள் ஒன்றும் கிடையாது. சிறுகதையின் எல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கதாசிரியனும் எடுத்தாண்ட ரூபங்கள் எண்ணிறந்தன... சிறுகதை என்ற பிரிவு, இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது'' என்பார் புதுமைப்பித்தன். "என் அபிப்பிராயம், (27௰௧935) என்ற தலைப்பில் மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதி வந்த கட்டுரை வரிசையில் முதலாவது வெளியானது புதுமைப்பித்தனின் "சிறுகதை' எனும் இந்தக் கருத்துரை. அவரது முதல் கதையான "ஆற்றங்கரைப் பிள்ளையார்' (மணிக்கொடி 22-04௧934) தொடங்கி இறுதிக் கதையாகக் கருதப்படும் "கயிற்றரவு' (காதம்பரி, ஏப்ரல் 1948) வரை பல்வேறு சோதனை முயற்சிகள்! கதைக் கருக்களுடன் அவர் எடுத்தாண்ட உத்திகள் குறிப்பிடத்தக்கவை. அவர் காலத்திய அறிவியல் கலைச்சொற்களும் இங்கு முக்கியம். "தொலைநோக்கி' இவரது கதை ஒன்றில் "தூர திருஷ்டிக் கண்ணாடி' ஆக இடம்பெறும். விலங்கியல் குறித்த இவர் பார்வை வேறு மாதிரி. பிராணி நூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறுமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள் (பால்வண்ணம் பிள்ளை) என்று ஒரு கதையில் அங்கதச் சுவை! இவர் கருத்துப்படி, ""தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஓர் உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும் "சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்'' என்று பால்வண்ணம் பிள்ளையின் மனைவி பற்றி சித்திரிக்கிறார். ஒருவிதத்தில் மெய்ஞ்ஞானியும் விஞ்ஞானியும் கருத்துப் பரவல்தளத்தில் ஒரே அலைநீளத்தில் இயங்குபவர்தாம். ""கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக் கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே'' (கயிற்றரவு) என்பார் புதுமைப்பித்தன். உண்மைதான். வானவியல் அடிப்படையில் சூரியனுக்கு அருகில் இருந்து கோள்களை வரிசைப்படுத்தினால் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என்றுதானே கிழமை அமைய வேண்டும். நாம் கற்பனையாக (ஹழ்க்ஷண்ற்ஹழ்ஹ்) வரையறுத்துக் கொண்டது தானே இந்த வார நாள் பரிணாமங்கள்! அதே கதையில் ""அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது. அதிலே விளைந்த அனந்தகோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூர்ண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று, நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது. மீனாயிற்று. தவளையாயிற்று. வாலிழந்தது குரங்காயிற்று. சமாதி நிலையிலே உறங்கலாயிற்று... சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுகட்டாகக் காத்திருந்தது'' என்கிறார். ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சூரிய மண்டலம் உருவான வரலாறும், சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் சித்தாந்தமும் பின்னிப் பிணைந்த பிரபஞ்சவியல் இது. அதிலும், ""நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப்போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு''. உரத்த அறிவியல் சிந்தனை இது. ""நான் நினைக்கிறேன். அதனால் இருக்கிறேன்'' (ஐ ற்ட்ண்ய்ந் ற்ட்ங்ழ்ச்ர்ழ்ங் ஐ ங்ஷ்ண்ள்ற்) என்பதை "காகிடோ எர்கோ சம்' (இர்ஞ்ண்ற்ர் ங்ழ்ஞ்ர் ள்ன்ம்) என்பார் கிரேக்க மேதை டெக்காத்தே. ஒரு வகையில் ஐன்ஸ்டீனின் நவீன சார்பியல் சித்தாந்தமும் இதுவே. அதுவும் பாருங்கள். இந்த அக்டோபரில் சூரிய கிரகணம், சந்திர கிரகணங்கள் நிகழ்ந்த அதே காலகட்டத்தில் ஐன்ஸ்டீன் வாழ்விலும் ஓர் அனுபவம். ""1913 அக்டோபர் 14 அன்று தோன்றிய சூரிய கிரகணத்தின்போது சூரிய ஒளி அதன் விளிம்பில் 0.83 பாகை வளைந்தது தெரியவந்தது. அதாவது, ஒளி கூட ஈர்ப்பு விசைக்கு உள்ளாகும் உண்மை நிரூபணம் ஆயிற்று. ஐன்ஸ்டீனின் 1915-ஆம் ஆண்டின் பொதுச்சார்பியல் சித்தாந்தப் பரிசோதனை முடிவு இது. பல்வேறு மருத்துவ அறிவியல் துறைகள் பற்றிய புதுமைப்பித்தனின் கருத்தோட்டத்தைப் பாருங்கள். ""அன்று ஆப்பரேஷன் தியேட்டருக்குக் கொண்டு வரப்பட்டவன் ஹடயோகி. விஷங்களையும், கண்ணாடிச் சில்லுகளையும் கண் எதிரில் தின்று சாகாதவன். சித்தாந்த சாமி என்ற அவன், இந்த இரு டாக்டர்கள் முன்னிலையில் கூடத் தன் திறமையைக் காட்டி இருக்கிறான்... எக்ஸ்ரே பரீûக்ஷயில் குடலில் ஒரு பகுதி பழுத்து அழுகி விட்டது என்று கண்டனர். காரணம், குடல் சதையில் ஒரு கண்ணாடிச் சில் குத்திக் கொண்டிருந்ததே'' (உபதேசம்) என்று விவரிக்கிறார். இறுதியில் அவர்களில் விஸ்வநாத் எனும் இந்திய மருத்துவர் தலைமொட்டை அடித்து, இடையில் காவி வேஷ்டி தரித்து, காலில் குப்பிப் பூண் பாதக் குறடு அணிந்து, பனிமலையில் பத்மாசனம் இட்டு நிஷ்டையில் உட்கார்ந்தபடி, தனது சக ஆங்கில மருத்துவருக்கு உபதேசம் செய்கிறார்: ""நான் சாகவில்லை. நீ என்னை எந்த நிலையில் பார்த்தாலும் சாகவில்லை என்று நம்பு. நமது உயிர் நூல்கள் சாஸ்திரங்களைக் கிழித்தெறிந்து விட்டு வேறு மாதிரியாக எழுத வேண்டும். அஸ்திவாரமே தப்பு''. தினமணி நாளிதழின் உதவியாசிரியராக (1936 - 43) பணியாற்றி வந்த காலத்தில் புதுமைப்பித்தன் எழுதிய மருத்துவ நூல் மதிப்புரைகளில் ஊசியும் இருக்கும் மருந்தும் இருக்கும். "ஹோமியோபதி' (எம்.பால் எச்.எம்.பி), பயோ-கெமிஸ்ட்ரி (டாக்டர் என் கொண்டா, எம்.டி.எச்.எஸ்) ஆகிய இரு நூல்கள் பற்றிய இவரது மதிப்பீடுகள் இவை. ""...தற்போதைய நிலையில் இவை இரண்டும் தமிழன் கையில் கொடுப்பதற்கு மிகவும் அபாயகரமானவை என்பது என் கருத்து. இதில் சொல்லப்படும் மருந்துகள் யாவும், ரசாயன சாஸ்திரத்தை ஆழ்ந்து படித்து அதில் பண்பட்ட ஆசாமிகளுக்கே விளங்கும். ஒரு அணாவை உள்ளே தள்ளி பிளாட்பாரம் டிக்கட் வாங்கும் "ஸ்லாட் யந்திரம்' அல்ல அந்த அனுபவம். ரசாயன சாஸ்திரம் தெளிவாக அறிந்திருந்தால்தான் என்ன சேர்த்தால் என்னவாகும் என்றாவது ஒருவாறு பிடிபடும். லத்தீன் கடபுடாக்களான பெயர்கள் முழங்கும் தெளிவற்ற இப்பத்தகத்தை வைத்து தமிழன் ஹோமியோபதி கற்க முயல்வது அபாயகரமான வேலை. போலீஸ், கோர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு விட்டாலும் விட்டுவிடும்'' (தினமணி 31-01௧938) என்று நையாண்டி பண்ணுகிறார். அதே இதழில், "நியு ஹெல்த்' எனும் தலைப்பில், ""...நாகர்கோவிலில் இருந்து வெளிவரும் முப்பாஷை சுகாதாரப் பத்திரிகையின் வருஷ மலர் ஒன்று வரப் பெற்றோம். அதில் ஆங்கிலம், மலையாளம், தமிழ் முதலிய மூன்று பாஷைகளிலும் வைத்யம், தேகாரோக்யம் முதலியன பற்றி பல கட்டுரைகள் காணப்படுகின்றன. ஆயுர்வேத வைத்யத்திற்கு விசேஷ ஆதரவு கொடுக்கப்படுவது போற்றத்தக்கது'' என்று நற்சான்று வழங்கி இருக்கிறார். அறிவியலுக்குத் தகவல்களே ஆதாரம். பாருங்கள், திருநெல்வேலி சுலோசன முதலியார் பாலம் ""முட்டையும் பதநீரும் அரைத்த காரையில் கட்டியதாம்'' (சாமியாரும், குழந்தையும், சீடையும்) என்ற விவரணம் தொல் கட்டட நுட்பம் அல்லவா? "செல்வம்' என்ற கதையில், ""ஜடத்தின் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் வேண்டும். அது முதல் படி. மற்ற எல்லா லட்சியங்களுக்கும்... அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டு மெத்தைக்கு என்ன வார்னிஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்'' என்று வாழ்வியல் வளர்ச்சிக்கும் ஆலோசனை தருகிறார் புதுமைப்பித்தன். ""மனிதன் நல்லவன்தான்; தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது அது தன்னிடமிருந்ததாக அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அறிவாளியாக அல்லல்படுகிறான்'' (சாமியாரும், குழந்தையும், சீடையும்) என்று சாமியார் வாய்மொழியாகக் கூறுகிறார் புதுமைப்பித்தன். அதுவும் உண்மைதானே! நெல்லை சு. முத்து நன்றி: தினமணி |