![]() |
|
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி (/showthread.php?tid=2574) Pages:
1
2
|
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி - Vaanampaadi - 11-06-2005 மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி. மகானே! மீண்டும் பிறந்து வா! குண்டுகளுக்கும் தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ! ஆகையால் மீண்டும் பிறந்து வா! தலைவனை இழந்து துயரப்படும் குழந்தைகள் நாங்கள்! 'இன்று' எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது அம்மை அப்பனை முதியோர் இல்லத்தில் சேர்க்க! சகோதரனை சொத்துக்காக ஹர சம்ஹாரம் செய்ய! மனைவியை மந்தையாக்க! எதிரிகளை முதுகில் குத்த! என எல்லாவற்றையும் இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது. விலைமகளிடம் போய்விட்டு விலை போகாமல் வந்தவன் நீ! இன்று விலைமகளிடம் போய்விட்டு விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்! காலத்தைப் பார்த்தாயா மகானே! வா! வந்து படித்த சிலருக்கேனும் வாழும் வகையைச் சொல்லிவிட்டுப்போ! ஏனெனில் இவர்களெல்லாம் ராமாயாணத்தையும் படித்துவிட்டு கோயிலையும் இடிக்கிறார்கள்! குரானையும் படித்துவிட்டு குண்டும் வைக்கிறார்கள்! மீண்டும் வா! இன்னொரு கோட்சே எங்காவது இருப்பான்! அவனிடம்இம்முறை என் முறை சாக என்கிறேன்! பயப்படாமல் வா! உனது தோளுக்கு காவலாகவும் கொள்கைக்கு கோட்டையாகவும் இன்று நானும் இருக்கிறேன். நன்றி/எம்.கே. - Vasampu - 11-06-2005 இணைத்ததற்கு நன்றி வானம்பாடி <b>உண்மையில் மகாத்மா இதைப் பார்த்தால்</b> ஏனப்பா நான் நிம்மதியாக இருக்கிறது உனக்கு பிடிக்கலையா என்றுதான் கேட்பார். - sathiri - 11-06-2005 அது சரி கவிதை நல்லா தான் இருக்கு ஆனல் மாகாத்மா என்பவர் யார்??? - stalin - 11-06-2005 அது சாத்திரி ...உண்மையான விடுதலை வீரர்களாண சுபாஸ் சந்திரபோஸ் போன்றவருக்கு மரியாதை கிடைக்க போகுதென்று வெள்ளைக்காரனால் சிலருக்கு உருவாக்கிய பட்டம் மகாத்மா... - sathiri - 11-06-2005 ஒஒ அந்த தடியோடை கண்ணாடியோடை ஒருதாத்தா அவரா மகாத்மா? வெள்ளை காரனின்ரை கை பொம்மை - Vaanampaadi - 11-07-2005 [b][size=18]மஹாத்மா என்பது பதவியுமல்ல பட்டமுமல்ல, எடுத்த வீச்சுக்கு எல்லோருக்கும் சும்மா தூக்கிகொடுக்கும் [size=9]**** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Birundan - 11-07-2005 வாணம்பாடி நீங்கள் ****** அசிங்கம் படுத்துவதாக நினைத்து மஹாத்மாவை அசிங்கம் படுத்துகிறீர்கள். பொறுமை, சகிப்பு, அன்பு இதைத்தான் அவர் கைக்கொண்டார். <span style='font-size:14pt;line-height:100%'>**** - நீக்கப்பட்டுள்ளது - மதன்</span> - Vaanampaadi - 11-07-2005 [quote=Birundan]வாணம்பாடி நீங்கள் **** நீங்க சொன்னது உண்மைதானுங்க பிருந்தன்... நன்றிங்க...... [size=9]**** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Vasampu - 11-07-2005 <b>பிருந்தன்</b> மேலே சிலர் மஹாத்மாவை அசிங்கமாக எழுதியிருப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?? வானம்பாடியிலுள்ள கோபத்தை மஹாத்மாவில் காட்டுவதும் தப்புத் தானே?? - sathiri - 11-07-2005 Quote:மேலே சிலர் மஹாத்மாவை அசிங்கமாக எழுதியிருப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?? வானம்பாடியிலுள்ள கோபத்தை மஹாத்மாவில் காட்டுவதும் தப்புத் தானே??ஜஃமகாத்மாவை யார் அசிஞ்கமா எழுதினது ******** இப்படி எங்காவது எழுதியிருந்தால் தான் அசிங்கம் நான் அப்படி ஏதும் எழுதவழல்லையே மகாத்மா என்றால் யார் என்று தானே கேட்டிருந்தேன் அதுக்கு ஒழுங்கான விடை சொல்ல தெரியாமல் அசிங்கம் பண்ணீட்டம் எண்டு கத்தினால் அது விடயாயிடுமா??? <span style='font-size:14pt;line-height:100%'>**** - நீக்கப்பட்டுள்ளது - மதன்</span> - kuruvikal - 11-07-2005 பாரதத்தில் காந்தியின் மீள் வரவை தேடும் கவி...ஏக்கங்களின் வெளிப்பாடு என்று கருதலாம்..! நல்ல ஒரு இணைப்பைத் தந்தீர்கள்..! குறித்த ஒரு காலத்தின் தேவையாக வழிகாட்டியாக வாழ்ந்த காந்தித் தாத்தாவை பிடிக்காதவர்கள் யாருமிலர்..! அவர் கால் பதிந்த மண்ணில் தவழ்ந்திருக்கின்றோம்..! அதற்காக பெருமையும் படுகின்றோம்..! சிறுவயதில் பெரியார் பற்றி எழுதச் சொன்னால் முதலில் ஞாபகம் வருவது காந்தித் தாத்தா தான்...! அவரின் மீள் வரவைத் தேடும் கவிக்கு.. நன்றி வானம்பாடி..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Eelavan - 11-07-2005 ஆமாம் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்ட இந்தியாவைக் காப்பாற்ற பாவம் அந்தக் கிழவரை மீண்டும் பிறந்துவரும் படி அழைக்கிறார்கள்.அவனவனுக்கு தன் நாட்டைத் தான் காப்பாற்றும் துணிவில்லை.ஒரே ஒரு காந்தி மீளவும் பிறந்து ஒட்டுமொத்த இந்தியாவையே கரையேற்றிவிடுவார் என நினைக்கிறார்கள். கடந்த முறை வெள்ளைக்காரனுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததால் காந்தி தப்பிப் பிழைத்தார்.இம்முறை சொந்த மக்கள் திருந்தவேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தால் அவ்வளவுதான். மகாதமாக்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள் - stalin - 11-07-2005 இரவில் பெற்ற சுதந்திரம் பெற்ற அதனால் இன்னும் விடியவில்லை என்பது போல..... இரண்டாம் உலக மாக யுத்தத்தின் போது பிரிட்டிசார் இந்தியாவின் உள்நாட்டில் பகத்சிங் சுபாஸ் சந்திர போஸ்போன்றவர்களின் உள் நாட்டுக்கிளர்ச்சியையும் சந்தித்தமையால் தனக்கு சாதகமான பிரித்தானிய அடிவருடிகளான நேரு குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து சென்றது. காந்தியம் வென்றது என்ற சவடால்களுடன் எமதுநாட்டிலும் கறுப்பு கோட்டு அப்புக்குகாத்து மாரால் பிரயோகித்து தோல்வியை கணடது....... காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்ப்படடவர் என அதிகார வர்க்கம் கோசம் போட்டு துதி பாடி வருகிறது.... அதையே பலரும் பின் பற்றி போற்றி வருகின்றனர் துணிச்சலாக திரை படம் எடுக்க வெளிக்கிட்ட கமலகாசன் கூட ஹேராம் விசயத்தில் எதி்ர்ப்பின் காரணமாக அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டாரென்பதை....மூல நாவல் ர.சு.நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் வாசித்தவர்கள் புரி்ந்திருப்பார்கள் - kurukaalapoovan - 11-07-2005 அய்யய்யோ காந்திக்கே ஆப்பா? hock: நான் ஸ்குலில பெருமையா படிச்சதெல்லாம் பொய்யா? கண்டவன் நிண்டவன் எல்லாம் புளொக்ஸ் இல எழுதுவான் அதை மேற்கோள் காட்டி எழுதுறது எல்லாம் ஆதாரமுள்ள கருத்தா? :roll: Re: மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி - tamilini - 11-07-2005 [quote=Vaanampaadi]மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி. மகானே! மீண்டும் பிறந்து வா! குண்டுகளுக்கும் தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ! ஆகையால் மீண்டும் பிறந்து வா! தலைவனை இழந்து துயரப்படும் குழந்தைகள் நாங்கள்! 'இன்று' எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது அம்மை அப்பனை முதியோர் இல்லத்தில் சேர்க்க! சகோதரனை சொத்துக்காக ஹர சம்ஹாரம் செய்ய! மனைவியை மந்தையாக்க! எதிரிகளை முதுகில் குத்த! என எல்லாவற்றையும் இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது. விலைமகளிடம் போய்விட்டு விலை போகாமல் வந்தவன் நீ! இன்று விலைமகளிடம் போய்விட்டு விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்! காலத்தைப் பார்த்தாயா மகானே! வா! வந்து படித்த சிலருக்கேனும் வாழும் வகையைச் சொல்லிவிட்டுப்போ! ஏனெனில் இவர்களெல்லாம் ராமாயாணத்தையும் படித்துவிட்டு கோயிலையும் இடிக்கிறார்கள்! குரானையும் படித்துவிட்டு குண்டும் வைக்கிறார்கள்! மீண்டும் வா! இன்னொரு கோட்சே எங்காவது இருப்பான்! அவனிடம்இம்முறை என் முறை சாக என்கிறேன்! பயப்படாமல் வா! உனது தோளுக்கு காவலாகவும் கொள்கைக்கு கோட்டையாகவும் இன்று நானும் இருக்கிறேன். நன்றி/எம்.கே. மகாத்மா திரும்பி வந்தா திலீபன் அண்ணா பற்றி அறியாமலா போய்விடுவார் அறிஞ்சா வந்தவழியே திரும்பி போயிடுவார். :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கரிகாலன் - 11-07-2005 stalin Wrote:இரண்டாம் உலக மாக யுத்தத்தின் போது பிரிட்டிசார் இந்தியாவின் உள்நாட்டில் பகத்சிங் சுபாஸ் சந்திர போஸ்போன்றவர்களின் உள் நாட்டுக்கிளர்ச்சியையும் சந்தித்தமையால் தனக்கு சாதகமான பிரித்தானிய அடிவருடிகளான நேரு குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து சென்றது ம்ம்ம் ஸ்டாலின் சொல்லவதும் உண்மைதான் ஆனால் திரைமறைவில் நடக்கும் இந்தக் கூத்துக்கள் எத்தனை பேருக்குத் தெரியும் ?? இந்தக் கட்டுரையை படியுங்கள் நேருவின் பரம்பரை நடாத்திவரும் நாடகத்தை அறியாலாம் :roll: :roll: http://www.yarl.com/forum/viewtopic.php?t=7004 - narathar - 11-07-2005 ஐயோ காந்தித் தாத்தவைப் பற்றி இப்படி கண்ட படி எழுதிறியள்... நல்லா இல்லை...அவர் எவ்வளவு உயர்வான மகான்.எங்கட ஸ்கூலில அவருக்கு சிலை எல்லாம் இருக்கு. ............அவரைப் பற்றி எத்தனை புத்தகத்தில நல்லா எழுதி இருக்கு. சும்மா சீர்திருத்தம் ,பெரியார் எண்டு புலம்பிறவைக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது.......இவைக்கு பிரைன் இலாதாபடியாத் தானே இப்படி நோட்டியா இருகினம். .............இன்டெலிஜென்ஸ் இல்லாத சனம் வெரி பாட் மான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Birundan - 11-07-2005 [quote=Vasampu]<b>பிருந்தன்</b> மேலே சிலர் மஹாத்மாவை அசிங்கமாக எழுதியிருப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?? வானம்பாடியிலுள்ள கோபத்தை மஹாத்மாவில் காட்டுவதும் தப்புத் தானே?? அசிங்கம் என்று எதை சொல்லுகிறீர்கள்? மகாத்மாவை யார் என்று கேட்டதையா? மகாத்மாவை தெற்காசியாவில் ஏன் ஆசியாவிலையே தெரியாதவர்கள் இருக்க முடியாது, வேனுமென்றால் ஜரோப்பவில் தெரியாதவர்கள் இருக்கலாம், அப்படி பட்டவரை யார் என்று கேட்கிறார் என்றால், அந்த கேள்வியில் உள்ள கோபத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், யார்மீது நாங்கள் அதீத நம்பிக்கையும் அன்பும் வாத்திருக்கிறோமோ அவர்கள் அதில் இருந்து தவறும்போது அதீதகோவம் உருவாகிறது. இந்திராவின் மீதும் இந்தியாவின் மீதும் நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தோம், முன்பு ஊரில் பாருங்கள் வாசிகசாலைகளில் எமது அரசியல் கட்சிதலவர்களின் படங்களை நாங்கள் வைத்திருக்கவில்லை, மகாத்மாவினதும், இந்திராவினதும் படங்தான் இருக்கும், வெள்ளைக்காரர்களால் மகத்மாவின் வயிற்றில் எரிந்த ஆகுதியின் சூட்டை உணரமுடிந்திருக்கிறது, ஏன் அதை கற்றுத்தந்த இந்தியாவினால் திலீபனின் வயிற்றில் எரிந்த ஆகுதியின் சூட்டை உணரமுடியாமல் போனது. பொதுவாக உண்ணாவிரதம் இருப்பவர்கள் முதல் நாள் வயிற்றை கழுவுவார்கள், காரணம் உடலுக்கு தொடர்ந்து உணவு போகாதபோது உடலுக்கு தேவையான சத்தை பெறுவதற்காக உடல் வயிறில் இருக்கும் மலத்தை மீண்டும் சமிபாடுஅடைய வைக்கிறது, அது வார்த்தையால் சொல்லமுடியாத, எழுதமுடியாத தாங்கொணா வேதனை, வெள்ளையனுக்கு தெரிந்த அந்த வேதனையின் தாற்பரியத்தை ஏன் எமது நேசநாடான இந்தியாவினால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை, ஒரு இந்தியனாக சிந்தித்தால் இதன் உண்மை புரியாது, ஒரு தமிழனாக சிந்தித்தால் நிட்சயம் புரியும், தாய் நாட்டை நேசிப்பது தவறல்ல, இந்தியா என்பது எப்பொது உருவனது? 50 வருடம் இருக்குமா? வல்லவாய்பட்டேல் என்ற இரும்புமனிதனால் சடுதியாக இனைக்கப்பட்ட நாடுதான் இந்தியா? ஆனால் தமிநாட்டின் வரலாறு வெறும் 50 வருடங்கள் அல்ல, அது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தமிழனின் வரலாறு, இந்தியனாக எம்மோடு கருத்தாடினால் நிட்சயம் கருத்து மோதல்கள்தான் ஏற்படும், தமிழனாக கருத்தாடினால் கருத்துவேறுபாடுகள் களைந்தெறியப்படும். - தூயவன் - 11-07-2005 வெள்ளைக்காரன் காந்திக்கு கொடுத்த மரியாதையால் இந்தியா சுதந்திரம் பெற்றதாக பெருமை பேசுவார்கள். அதை விட உண்மையாக உண்ணாவிரதம் இருந்த திலீபனையும், அன்னை புூபதியையும் மதிக்கத்தெரியாத இவர்களா மகாத்மாவைப் பற்றி பேசுவது?. காந்தி திரும்பிவந்தால் வெட்கத்தால் கூனி நிற்பார். இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததை எண்ணி. - kuruvikal - 11-07-2005 இந்திய சுதந்திர முன்னோடிகளில் காந்தியும் ஒருவர்..! ஒரு விடுதலை வீரராக.. அவருக்கு மதிப்பளிக்க வேண்டியது.. மானுட உலகின் கடமை..! அண்மையில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவர் சிலரைச் சந்திக்கக் கிடைத்த போது...இந்திய உபகண்டம் சார்பில்..காந்தியை மட்டுமே மாணவர்களுக்கு தெரிந்திருந்தது...! அவருடைய விடுதலைப் போராட்டப் பின்னணிகள் எதுவாகவும் இருக்கட்டும்...அது இப்போ அவசியமில்லை...அவர் மக்களுக்கு என்ன செய்தார் எப்படி விளிப்புணர்வை வளர்த்தார் என்பதே முக்கியம்..! அதேபோல் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு முக்கியமல்ல.. காந்தியின் பொது வாழ்வு எந்த வகையில் பயன்பட்டது என்பதே அவசியம்...! இந்திய எதிர்ப்பு என்பது ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோரின் கண்மூடித்தனமான செயலாக இருக்கிறது..! அதன் மூலம் இந்தியா என்றதும் அது சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்த எடுப்பில் எதிர்ப்பதே இவர்களின் பஷன்...! சிலர் தங்களை வேறுபடுத்திக் காட்ட ஏதோ வித்தியாசமா எழுத இவற்றையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்...எழுதும் எழுத்தின் தார்ப்பரியம் புரியுமோ தெரியவில்லை அவர்களுக்கு..! ஏதோ உலகை ஏய்க முற்படுகிறர்கள்..! உண்மையில் அவர்கள் தாங்களே தங்களை ஏமாற்றிக் கொள்கின்றனர்..அவ்வளவும் தான்..! இந்திய மக்களின் மனதில் காந்தி எப்படி மதிக்கப்படுகிறார் என்பது அறிவோம்...ஆனால் அவரை மதிக்கும் அளவுக்கு அவருடைய கொள்கைகளை மதிப்பவர்களா இந்திய மக்கள் இல்லை..! அதையே கவிதையும் சொல்கிறது..! வானம்பாடி உங்களிடம் இருந்து தொடர்ந்து இப்படியான தரமான இந்திய மக்களின் நிகழ்கால எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது...! தொடர்ந்து எழுதுங்கோ..அல்லது இணையுங்கோ..! ஈழத்தில் காந்திய வடிவப் போராட்டத்தை திலீபன் அண்ணா பூபதியம்மா முன்னொடுத்த போது காந்திய தேசம் அதை மதிக்கவில்லை...அதுக்காக காந்தியத்தை திலீபன் பூபதி மதிக்கவில்லை என்பது ஆகாது..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|