![]() |
|
மஜா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மஜா (/showthread.php?tid=2598) |
மஜா - SUNDHAL - 11-05-2005 மஜா மலையாளத்தில் சில்வர்ஜுப்ளி அடித்த படம். தமிழில் லேசாக நொண்டியடிக்கிறது. அதிரடியான அந்நியனை கொடுத்த விக்ரம், கிராமத்து கெட்டப்பில்! சொய்ய்ய்ங்ங் என்று இறங்குகிறது சுதி! திருட்டை தொழிலாக கொண்ட மணிவண்ணன், பசுபதி, விக்ரம் மூவரும் அதை முற்றிலும் விட்டொழித்துவிட்டு வேறு ஊருக்கு போகிறார்கள் பிழைக்க. அங்கே ஊரே நடுங்குகிற வில்லன் முரளி (இவர் மலையாள குணச்சித்திர நடிகர்) அவருக்கு ஒரு அழகான மகள் அசின். வில்லனின் மகளும் வில்லியாக இருக்கிறார். அவரது ஆணவத்தை அடக்கி அசின் கழுத்தில் தாலி கட்டுகிறார் விக்ரம். அப்புறம் என்னாச்சி? அங்கங்கே சுவாரஸ்யம்.. அங்கங்கே ஆவ்...வ்! அடியாட்கள் புடை சூழ, விஜயகுமார் வீட்டிற்கு வந்து ரகளை பண்ணுகிற அசின் அழகான ராட்சசி. அவர் பேச பேச பொறுத்துக் கொள்ள முடியாத விக்ரம் அசின் கன்னத்தில் பளார் விட, குதிரை வேகம் பிடிக்கிறது திரைக்கதை. இவரால் அனுபிரபாகர் திருமணம் நின்று போகிற எரிச்சலில் அசின் கழுத்தில் கட்டாய தாலி கட்டிவிட்டு அப்புறம் வரப்போகிற சவால்களை சந்திப்பார் என்று எதிர்பார்த்தால் சப்! அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் விக்ரம். மாமிச மலைகளோடு மோதி வில்லன் முரளியை அதிர வைப்பது சுவாரஸ்யம் என்றால், சண்டை முடிந்தபின் உங்க பொண்ணை கொடுங்க என்று கேட்டு அதிர வைப்பது இன்னும் சுவாரஸ்யம். சண்டை காட்சிகளில் நெருப்பு பறக்கிறது. பசுபதியோடு விக்ரம் மோதும் சேற்று சண்டை, பிரமிப்பு...பிரமாண்டம்! தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசிக்கொண்டு பசுபதி. போதும் போததற்கு அனுபிரபாபகர் மீது காதல். கொடூரமான வில்லன் இமேஜ் உள்ள பசுபதி, ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பது ஆச்சர்யம். ஆற்றில் குளிக்கும் அனுவுக்கு, தாமரை இலைமேல் ரோஜாவை வைத்து பசுபதி அனுப்ப, இன்னொரு பக்கத்திலிருந்து இலைமேல் செருப்பை வைத்து விக்ரம் அனுப்புவது கலகலப்பு. வாய் ஓயாமல் பேசி கொண்டேயிருக்கிறார் மணிவண்ணன். இவரின் வளர்ப்பு பிள்ளைகளாம் பசுபதியும், விக்ரமும். அதற்காக மணிவண்ணன் தற்கொலை செய்து கொள்ள ஓடுவதும் இவர்கள் பதறியடி பின்னால் ஓடுவதும் எரிச்சல். திடீரென்று கரெண்ட் கட் ஆகிவிட, வைர நெக்லசை திருடியது யார் என்ற எம்.ஜி.ஆர் காலத்து காட்சிகளும் உண்டு. இதுதான் படத்தின் திருப்புமுனையாம். அடக்கடவுளே... வித்யாசகரின் இசையும், பாலசுப்ரமணியத்தின் கேமிராவும் ப்ளஸ்! மஜா என்றால் ஜாலி என்று அர்த்தமாம். கேலி பண்ணியிருக்கிறார்கள். -ஆர்.எஸ்.அந்தணன் - Rasikai - 11-06-2005 ம்ம் மடம் பார்த்தேன். நல்ல நகைச்சுவை படம். பறவாய் இல்லை பார்க்கலாம். அதுல எனக்கு பிடிச்ச கரெக்டர் ஆதி :wink: |