Yarl Forum
அதிக செலவு பிடிக்கும் நகரம் லண்டன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: அதிக செலவு பிடிக்கும் நகரம் லண்டன் (/showthread.php?tid=2638)



அதிக செலவு பிடிக்கும் நகரம் லண்டன் - SUNDHAL - 11-02-2005

ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி மற்றும் வாழ்க்கை செலவு அதிகமாக இருக்கும் நகரம் எது என்பது குறித்து ஒரு நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் லண்டன் நகரம் தான் செலவு அதிகம் பிடிக்கும் நகரம் என்று தெரிய வந்துள்ளது.

பாரிஸ் நகரம் 2-வது இடத்தையும், ஜெர்மனியின் பிராஷ்க்பர்ட் நகரம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. பெல்ஜியத்தின் புரூசெல்ஸ் நகரம் 4-வது இடத்தில் உள்ளது.
Thanks:Malaimalar..


- Mathan - 11-02-2005

நோர்வேயின் ஒஸ்லோ நகரம் ஐரோப்பாவில் வாழ்க்கை செலவு அதிகமான நாடு என்று நினைத்தேன் அப்படி இல்லையா?


- sayanthan - 11-02-2005

வாழ்க்கை செலவு குறைந்த நகரம் மெல்பேண் எண்டு நினைக்கிறன்.. அல்லது மெல்பேணும் ஒண்டு.. சுண்டல் ஏதாவது தெரியுமா


- Mathan - 11-02-2005

புள்ளிவிபர இணைப்பு ஏதும் இருந்தால் தாருங்கள்


- SUNDHAL - 11-02-2005

ஆம் சயந்தன் அப்பிடி தான் நானும் கேள்விப்பட்டேன்;..
பொதுவாக நோர்வேக்கு போய்ட்டு வருபர்கள் சொல்ல கேட்டுஇருக்கின்றேன் அங்கு வாழ்க்கை செலவு மிக அதிகம் என்று..ஈனால் பத்திரிகை செய்தி இப்படி கூறுகின்றது..
மேபி நோர்வேயில.வருமாணம் அதிகமாக இருக்கலாம் அதைவைத்தும் கணக்கிட்டு இருப்பார்கள்..


- Mathan - 11-02-2005

இந்த பட்டியலை பாருங்கள், இதன்படி உலகில் வாழ்க்கை செலவுகள் கூடிய நகரம் பட்டியலில் ஜப்பானின் TOKYO மற்றும் OSAKA முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றது. மூன்றாவது இடத்தில் லண்டன், இந்த பட்டியலின் படி பார்த்தால் ஐரோப்பாவில் முதலிடம் லண்டன் தான்,

<img src='http://img258.imageshack.us/img258/8590/yarlrating7zs.jpg' border='0' alt='user posted image'>

பட்டியலை முழுமையாக பார்க்க http://www.finfacts.com/costofliving3.htm


- SUNDHAL - 11-02-2005

நன்றி மதன்............முதல் 15 லயும் சிட்னி இல்ல.... அப்பா தப்பிச்சம்.......


- ஜெயதேவன் - 11-02-2005

ம்ம்ம்ம்.... இப்பவாவது விளங்குங்கோடாப்பா! ஏன் நான் ஈழ்பதீஸ்வரத்தானின் உண்டியல் உருட்டினேன் என்று????

லண்டன் செலவு கூடி! என்னால் மேல்த்தர வாழ்க்கை வாழ முடியாமல் இருந்ததும்!! ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு வந்த என் சகலங்கள் தடுங்கினத் தோம் போடத் தொடங்கின படியாலுமே!!! உண்டியலை அரவணைத்தேன்!!!!!!!

இன்று ஈழ்பதீஸ்ஸானின் உண்டியல் அருளுடன், லண்டன் செலவுகளைப்பற்றி நான் கவலைப் படுவதில்லை!!!!!!!! அரோகரா!!!!!!!!!


- kurukaalapoovan - 11-02-2005

மொஸ்கோவும் சியோலும் ஆச்சரியமா இருக்கு.

லண்டன் ரோக்கியோ ஒசாக்கா கொங்கொங் போன்ற இடங்களில் வாடகை அல்லது இருப்பிட விலை நிலத்தட்டுப்பாடு காரணமாக அதிகம். இங்கே எனைய செலவுகளிற்கு (சாப்பாடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு) எத்தனை வீதம் மொத்த சராசரி செலவிலிருந்து போகிறது?


- Mathan - 11-02-2005

லண்டன் ஐரோப்பாவில் முதலிடத்தில் இருப்பதற்கு தங்குமிட செலவு, போக்குவரத்து செலவு மற்றும் பவுண்ஸ் நாணயத்தில் மதிப்பு போன்றவை உயர்வாக இருப்பதுதான் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்,


- அருவி - 11-02-2005

அப்ப ரொறன்ரோ இல்லயா :roll:

யாரோ சும்மா போட்டிருக்காங்க போல :wink:


- Mathan - 11-02-2005

82 ஆவது இடத்தில் ரொரண்டோவை பார்த்தேன்.


- அருவி - 11-02-2005

ஆ 132ஆவது இடம் கொழும்புக்கு Confusedhock:

Confusedhock: Confusedhock: Confusedhock: