![]() |
|
கமலரஜினியின் வந்தனங்கள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: கமலரஜினியின் வந்தனங்கள்! (/showthread.php?tid=2642) |
கமலரஜினியின் வந்தனங்கள்! - kamalarajini - 11-02-2005 வணக்கம்! என் பெயர் கமல ரஜினி. இன்று முதல் யாழ் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் வணக்கங்கள். - poonai_kuddy - 11-02-2005 வணக்கமக்கா......வாங்கோ.....சந்தோசம்... யாழில உங்கட கருத்துக்கள படிக்கிறதுக்கு ஆவலாக இருக்கிறம்..... - kpriyan - 11-02-2005 வணக்கம்.. கமலரஜினி.. களத்திற்கு வரவேற்கிறோம். உங்களது பெயர் என்ன வித்தியாசமாக இருக்கிறதே.. புனைபெயரா.. (என்று தான் நினைக்கின்றேன்.) - Rasikai - 11-02-2005 வணக்கம் கமலரஜனி தங்கள் வரவு நல்வரவாகட்டும் - தூயவன் - 11-02-2005 வணக்கம் சகோதரி உங்கள் சிறந்த கருத்துக்களை எம்முடன் பகிருங்கள் - வெண்ணிலா - 11-02-2005 வணக்கம் கமலரஜனி அக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சிரித்துகொண்டு வரவேற்கிறேன்
- Danklas - 11-02-2005 வணக்கம் கமலரஜனி.. வாருங்கள் யாழ்களத்துக்குள்ளே, உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடையும் அதே வேளை உங்களின் நல்ல சிறப்பான கருத்துக்களை தாருங்கள், முக்கியமா உங்களுக்கு கம்யுனிசம் முதலாளித்துவம் பற்றீ எதுவும் அறிந்து இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மிகுந்த ஆகலாக உள்ளோம்ம்ம், நகைச்சுவை, தெருக்கூத்து, சினிமா பற்றிய செய்திகள் ஏதாவது இருந்தால் மன்னிக்கவும் அதை நாங்கள் எதிர்ப்பாக்கவில்லை வருந்துகின்றோம், அதைவிட உங்கபெயர் வித்தியசமா இருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்தேன், களத்திலே பல தூய்மையான பெயர்களும் கையொப்பங்களும் இருப்பதை இங்கே குறிப்பிடவேண்டும்,உங்கட பெயரில் கமல+ரஜினி எண்டு 2 பெயர்கள் இருக்கின்றது உங்க பெயர் எதுவெண்டு அறீயத்தாருங்கள், அதைவிட உங்களைபற்றிய அறிமுகத்தை தாருங்களேன்.. இப்படிக்கு 1ம் திகதி மார்கழி மாதம் 2004ம் ஆண்டு களத்திலே இனைந்து 2775 கருத்துக்களுக்கு மேல் எழுதிக்கொண்டு இருக்கும் கள உறுப்பினர் டங்கிளாஸ்.
- vasisutha - 11-02-2005 வணக்கம் வாருங்கள்.. கமல ரஜனி.. உங்களை யாழ்களம் வரவேற்றுக்கொல்கிறது. - kamalarajini - 11-02-2005 நன்றி.. வரவேற்ற அனைவருக்கும். கேபிரியன் மற்றும் டன்.. எனது பெயர் சொந்தப் பெயர் தான். புனைபெயர் இல்லை. இதுதான் என்னுடைய சொந்தப் பெயர்! என்னுடைய அப்பா ஒரு ரஜினி ரசிகர். அம்மா ஒரு கமல் ரசிகர். அதனாலேயே எனக்கு இந்தப் பெயர் வந்தது. பெயரில் என்ன இருக்கிறது. டன்.. எனக்கு முதலாளித்துவம் மார்க்கசியம் உட்பட எந்த இசமும் தெரியாது. நான் ஒரு அக்காவாக தங்கையாக நட்பு ரீதியாக பழகவே வந்தேன். நன்றி மீண்டும் அனைவருக்கும் - Mathan - 11-02-2005 வணக்கம். யாழ் களம் உங்களை வரவேற்கின்றது. - Danklas - 11-02-2005 ஓ அப்படியா,, நன்றி உங்க விளக்கத்திற்க்கு அதுசரி உங்கட பாட்டன் பூட்டிக்கு சிவாஜி எம்.ஜி.ஆர் எண்டு ஒருத்தரையும் பிடிக்காதோ? இல்லை அப்படி இருந்தாலும் பெயர் என்னம் கொஞ்சம் நீளமா இருக்கும் எண்டபடியால் வைக்கல்லையோ? களத்தில கன உறூப்பினர் நீளமானபெயர்கள் எல்லாம் வைத்திருக்கிறார்களே காணவில்லையா?? இருந்தாலும் பெரிய கலைகுடும்பமுங்க உங்கட குடும்பம் ,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kamalarajini - 11-02-2005 டன்.. நகைச்சுவைக்காக தானே சொல்லுறீங்கள்.. அல்லது.. உண்மையாகவா..? உண்மையெனின்.. இந்த தங்கைக்கு கவலையாக இருக்கிறது. - Danklas - 11-02-2005 kamalarajini Wrote:டன்.. நகைச்சுவைக்காக தானே சொல்லுறீங்கள்.. அல்லது.. உண்மையாகவா..? உண்மையெனின்.. இந்த தங்கைக்கு கவலையாக இருக்கிறது. ஏனுங்கோ? இதில என்ன நகைச்சுவை இருக்கு? சொறி இந்த களத்தில நகைச்சுவைக்கு இடம் இல்லை.. சாறி கமலராஜின் மனம் புன்பட்டிருந்தால் மனம் வருந்துகின்றேன்.. அதொண்டுமில்லை ஒரு சின்ன ரெஸ்ட், ஏனெண்டால் இந்த பிரிவில நீங்க பாஸ் பன்னினால் தான் தொடர்ந்து மற்ற பிரிவில எழுதலாம், கமலரஜினி இந்த இத்தினையூண்டு விசயத்துக்கே காவலைபடுறீங்களே என்னம் எத்தனை விசயங்களைபற்றி சக உறுப்பினர்கள் சீரியசாக கதைப்பர்கள் அதுக்கு உங்களை தயார்படுத்ததான் இந்த ரெஸ்ற்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kamalarajini - 11-02-2005 சரி.. நான் கவிதைககள் எழுதுவதில் விருப்பம் உள்ளவள். எப்போது கவிதை எழுதலாம்? அதற்கு எத்தனை கருத்துக்கள் எழுத வேண்டும்.. - Niththila - 11-02-2005 வணக்கம் கமல ரஜினி உங்கட கருத்துகளையும் கவிதைகளையும் ஆவலாக எதிர்பார்க்கிறம் . - SUNDHAL - 11-02-2005 ஆஹா ஓஹோ... 2 திரைஉலக இமயங்களினுடைய பெயரில் வந்த இருக்கின்றீர்கள்..........வாங்க வாங்க......... - kamalarajini - 11-02-2005 நன்றி நிதிலா.. மற்றும் சுண்டல்.. சண்டல் உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. அது காரண பெயரா? - Birundan - 11-02-2005 வணக்கம். மீண்டும் வணக்கம். அட மீண்டும் வணக்கம். - வியாசன் - 11-02-2005 வணக்கம் கமலரஜனி உங்களுடைய பெயரைப்போல கருத்துக்களும் வித்தியாசமாக இருக்குமென நம்புகின்றேன். களத்தில் உங்கள் குரலை கேட்ட ஞாபகம் வருதே ஞாபகம் வருதே - kamalarajini - 11-02-2005 Quote:களத்தில் உங்கள் குரலை கேட்டஎன் குரலையா.. ஆஹா.. நான் எந்த பாட்டும் பாடலையே.. |