![]() |
|
பூமி வெப்பமடைதலும் காலநிலை மாற்றமும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பூமி வெப்பமடைதலும் காலநிலை மாற்றமும் (/showthread.php?tid=2639) |
பூமி வெப்பமடைதலும் காலநிலை மாற்றமும் - Mathan - 11-02-2005 புவி வெப்பமடைவதை தடுக்கு வழிவகைகள் தொடர்பாக இருபது நாடுகள் விவாதம் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40968000/jpg/_40968794_greenpeacehongkongafpg.jpg' border='0' alt='user posted image'> <b>மாசு ஏற்படுத்தாத எரிசக்தி கோரி ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள்</b> புவி வெப்பமடைவதை தடுப்பதற்கு எவ்வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது பற்றி இருபது நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர்கள் இன்று லண்டனில் கூடி விவாதித்துவருகின்றனர். வளருமுக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு தடைபோடாமல் அவர்களின் வெப்பவாயு வெளியேற்றத்தை குறைப்பது எப்படி என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் என்ற விவகாரத்தில் மிகச் சிக்கலான அம்சம் இது. குறிப்பாக இந்தியா சீனா போன்ற வளருமுக நாடுகள் தங்களுடைய வெப்ப வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதை இதுவரையில் இலக்குகளை நிர்ணயித்திருக்கவில்லை. இலக்குகளை நிர்ணயிக்கப்படுவதிலும் அவை ஆர்வம் காட்டாமல் இருந்துவருகின்றன. மேலும் உலகில் மிக அதிகமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்திவரும் அமெரிக்காவும் இலக்கு நிர்ணயிக்கப்படுதல் என்ற யோசனையை முழுமையாக எதிர்க்கிறது. காலநிலை மாற்றத்தை நிர்ணயிப்பது இயற்கையும் அறிவியலும்தானே ஒழிய நாடுகள் பேரம் பேசுவதோ அடுத்த நாடுகளுக்கு அழுத்தம் தருவதோ அல்ல என்று இன்றைய கூட்டத்தை துவக்கிவைத்து பேசிய பிரிட்டன் சுற்றுச்சூழல் அமைச்சர் மார்கரெட் பெக்கெட் கூறினார். வளர்ந்த நாடுகளுக்கு வெப்பவாயு வெளியேற்ற இலக்குகளை நிர்ணயித்த கியோட்டோ ஒப்பந்தம் இந்த ஆண்டுதான் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. BBC தமிழ் - Mathan - 11-02-2005 புவி வெப்பமடைவதை தடுப்பது தொடர்பாக லண்டனில் 20 நாடுகளிடையே விவாதம் <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041206200213_towers_ap_203.jpg' border='0' alt='user posted image'> <b>கரியமில வாயுக்கள் புவி வெப்பமடைய முக்கியக் காரணம்</b> கரியமில வாயுக்கள் புவி வெப்பமடைய முக்கியக் காரணம் புவி வெப்பமடைந்துவருவதை தடுப்பதற்கு எவ்விதமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக இருபது நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் இன்று லண்டனில் கூடுகிறார்கள். இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பது ஜி-எட்டு எனப்படும் உலகின் தொழில்வளம் மிகுந்த எட்டு நாடுகளின் அமைப்பாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளும் பெரிய பொருளாதாரங்களாக உருவெடுத்துவரும் நாடுகளான சீனா, இந்தியா, பிரசில் மற்றும் மெக்ஸிகோவும், சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான போலந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவையும் கலந்துகொள்கின்றன. இந்த ஆண்டில் முன்னதாக அமலுக்கு வந்த உலக காலநிலை மாற்றம் குறித்த கியோட்டோ ஒப்பந்தம் பற்றிய விவாதங்கள் பின்புலத்திலிருக்க இன்றைய கூட்டம் நடக்கிறது. மேலும் 2012ல் இந்த கியோட்டோ ஒப்பந்தம் முடிவுக்கு வந்தவுடன் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது பற்றிய இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மிகவும் தொழில்மயமான நாடுகள் தாங்கள் வெளியேற்றும் புவிவெப்ப கிரீன்ஹவுஸ் வாயுக்களை 2012ஆம் ஆண்டுக்குள் ஓரளவுக்கு குறைக்க வேண்டும் என்று கியோட்டோ ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. பின்னால் மேலும் வலுவான நடவடிக்கை எடுக்கப்படுவதன் தொடக்கமாக கியோட்டோ நிபந்தனைகள் அமைந்துள்ளன. சர்வதேச அளவில் பலனளிக்கக்கூடிய ஸ்திரமான நடவடிக்கைகள் உருவாக வேண்டுமென்றால், பெரிய பொருளாதாரங்களாக உருவெடுத்துவரும் சீனாவும் இந்தியாவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடப்பாடுகளை நீண்டகால அடிப்படையில் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பது அவசியம். BBC தமிழ் |