Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரிசில் தொடரும் கலவரங்கள்
#1
<b>பிரான்ஸ் விவகாரம்</b>

பிரான்சின் தலைநகர் பாரிசில், ஏழாவது இரவாக தொடர்ந்து கலவரங்கள் வெடித்த, இடங்களில், குடியேறிய சமுதாய மக்களுக்கு மரியாதை காட்டுமாறு அரசியல்வாதிகளை பாரிஸ் நகர முஸ்லீம் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40977000/jpg/_40977520_parisshop_ap203i.jpg' border='0' alt='user posted image'>
வன்முறைகள் தொடர்கின்றன
குடியேறும் சமூக மக்கள் அவமானகரமான, பாழடைந்துவரும், 1960கள் காலத்திய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் ஒதுக்கப்படக்கூடாது என்று, அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் தலீல் பூபக்கூர் கூறியுள்ளார்.

கிலிஷி சூ புவா என்ற இந்த வன்முறை தொடங்கிய புறநகர்ப் பகுதியில் உள்ள மற்றொரு முஸ்லீம் தலைவர், அந்தப்பகுதியில் உள்ள மக்கள் தொகையில், கால் பங்கினர் வேலை ஏதும் இல்லாத இளைஞர்கள் என்றார்.
<img src='http://a123.g.akamai.net/f/123/12465/1d/media.canada.com/cp/world/20051103/w110312a.jpg' border='0' alt='user posted image'>
- BBC tamil
Reply
#2
என்ன எங்க பார்த்தாலும் பிரச்சினையாக கிடக்கு . ம்ம் தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா
<b> .. .. !!</b>
Reply
#3
என்ன பிரச்சினை? எனக்கு தலையும் புரியேல்லை
வாலும் புரியேல்லை.. :?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
vasisutha Wrote:என்ன பிரச்சினை? எனக்கு தலையும் புரியேல்லை
வாலும் புரியேல்லை.. :?
Quote:இந்த கலவரங்களுக்கு முன்னர் என்ன நடந்ததென்று சற்று விரிவாகப் பார்த்தால், முதல் நாள் இரவு 19.15 மணிபோல் பொலிஸார் வீதி சோதனைகளில் இருந்த போது, இரு வெளிநாட்டுக்காரர்கள் பொலிஸ்காரர்களை கண்டதும் ஓடத்தொடங்கி இருக்கின்றார்கள். அவர்களை பிடிப்பதற்காக விரட்டிச்சென்ற போது அவர்கள், அதிஉயர் மின்சார மற்றி இருக்கும் இடத்திற்குள் சுவரேறிக் உள்ளே சென்றிருக்கின்றார்கள்.

அப்போது மின்சாரம் தாக்கி இருவரும் அதேஇடத்தில் பழியானர்கள்.
இவர்கள் பழியானதற்கு பொலிஸ்தான் காரணம் என்று, அவர்களது சகாக்கள் முதலில் சிறிய வன்முறையில் ஈடுபட்டார்கள். அதனை தொடர்ந்து அந்த நாட்டுக்காரர்களும்,அவர்களைத் தொடர்ந்து அவர்களை சார்ந்த மற்றைய வெளிநாட்டவர்களும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது வரை 200 அதிகமாக வாகனங்களை தீயிட்டு எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை வெளிநாட்டு நபர்களின் சங்கங்கள்! தங்களுக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே கூறவேண்டும்.

இந்த சப்பவம் நிகழ்ந்த இடம் CLICHY SOUS-BOIS. பரிஸை சூழவுள்ள புறநகர் பகுதியில் நிகழ்ந்தது. அதன் தொடர்ந்து அண்டை ஊர்களிலும்(Seine-Saint-Denis ,AULNAY-SOUS-BOIS) கலவரங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தப் பகுதியில், அனேகமான வாழ்பவர்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் சட்டவிரோதமான வியாபாரங்கள்,களவுகள்,கொள்ளைகள் என்பன பலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களை சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்றே கூறவேண்டும்.

எப்படியும் இரண்டொரு நாட்களில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
- நன்றி :றெனி ( நிலா முற்றம்)

<span style='font-size:22pt;line-height:100%'>இது பற்றிய உண்மை விபரங்களை அறிந்து கொள்வதற்காக
இன்று , என்னுடன் வேலை செய்யும் ஒரு பிரெஞ்சு வைத்திய அதிகாரியோடு பேசினேன்.

அவர் \"இங்கே வன் முறையில் இறங்கி இருக்கும் இளைஞர்கள் வெளி நாட்டுக்காரர்கள் அல்ல.
அவர்களும் பிரெஞ்சுக்காரர்களே.
அதாவது அவர்களது பெற்றோர் வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
ஆனால் இப்போது அவர்களுக்கும் பிரெஞ்சுக் குடியுரிமையுண்டு.

இப்போது பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள்
பிரான்சில் பிறந்து - வளர்ந்து - படித்த இளைஞர்கள்.
இவர்கள் வெளி நாட்டவர் போல் வாய் மூடி மெளனமாக வேலை செய்யக் கூடியவர்கள் அல்ல.
தவறுகளை பிரெஞ்சு நாட்டவர் போல் தட்டிக் கேட்பவர்கள்.
இது பலருக்கு பிடிப்பதில்லை.

இவர்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் அரசு அமுல்படுத்தாத காரணத்தால்
இவர்கள் வேலை வாய்ப்புகள் இன்றியே அலைகிறார்கள்.

வெளி நாட்டவர் போல் இவர்களை நடத்துவதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இவர்களது பெயர்கள் முஸ்லிம் பெயர்கள் கொண்ட காரணத்தால் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
எனவே வேலை வாய்ப்புகளற்று சுற்றித் திரிய வேண்டியுள்ளது.

இளைஞர்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை அந்த அரசுக்கு உண்டு.
அது அங்கு நடை முறையில் இல்லை.
ஒரு நாட்டின் குடியுரிமை மட்டும் ஒரு மனிதனுக்கு போதாது.
இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

இனியும் இதைக் கணக்கிலெடுக்கா விட்டால் பிரான்ஸ் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளும் பெரும் சவால்களை எதிர் நோக்க வேண்டி வரும்\" என்றார்.

<b>யோசிக்க வேண்டிய விடயம்?</b></span>
Reply
#5
<b>பாரிஸ் வன்முறைகள் தொடருகின்றன</b>
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/europe_enl_1131113290/img/laun.jpg' border='0' alt='user posted image'>
<i>வன்முறைகள் தொடருகின்றன</i>

பாரீஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த எட்டு இரவுகளாக நடந்துவரும் வன்முறையின் அடித்தளமாக அமைந்துள்ள பிரச்சினைகள், கடந்த முப்பது வருடங்களாக உதாசீனப்படுத்தப்பட்டுவரும் பிரச்சினைகள் என்றும் இவற்றுக்கு தீர்வுகாண காலம் பிடிக்கும் என்றும் பிரஞ்சு உள்துறை அமைச்சர் நிக்கோலஸ் சர்கோரி கூறியுள்ளார்.

ஆவேசம்கொண்ட இளைஞர் கும்பல்கள் நேற்றிரவு ஐநூறுக்கும் அதிகமான கார்கள், ஒரு பேருந்துப் பணிமனை மற்றும் ஒரு ஜமக்காள சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

முந்தைய இரவுகளுடன் ஒப்பிடும்போது இளைஞர்களுக்கும் பொலிசாருக்கும் இடையிலான நேரடி மோதல் நேற்றைய இரவு குறைவாக இருந்தது என்பதால் வன்முறை முடிவுக்கு வருகிறது என்பதாக கருதிவிடமுடியாது என்று சர்கோரி இன்று கூறினார்.

பாதிக்கப்பட்ட அரபு இன மற்றும் ஆபிரிக்க இன சமூகங்களில் பிரச்சினைகளை உண்டுபண்ணும் கடும்போக்காளர்களை தனியாக ஒதுக்க முயல்வதாக அச்சமூகங்களின் தலைவர்கள் கூறுகின்றனர்.

பாரீஸ் நகர வன்முறைகளைப் பின்பற்றி நேற்றிரவு முதல்முறையாக மற்ற சில இடங்களில் குறிப்பாக தெற்கிலுள்ள மர்சை நகரைச் சுற்றி வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
Reply
#6
ம்ம் எங்கு சென்றாலும் இந்த வன்முறை அல்லது பயங்காரவாதம் பேச்சு தான்... அஐிவன் தகவலுக்கு நன்றி

Reply
#7
Quote:<b>பாரிஸ் வீதி வன்முறையின் பின்னணி பற்றிய கண்ணோட்டம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051104112201blaze_afp203index.jpg' border='0' alt='user posted image'>
பாரிஸ் வன்முறைகள்
குடியேற்ற சமூகம் அதிகம் வாழும் பாரீஸ் நகரின் பல புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக மிகத் தீவிரமாக வன்முறையும் பதற்றமும் நிலவிவரும் நிலையில், ஒழுங்கீனத்தை ஒடுக்கும் நோக்கிலும், அதேநேரம் நாட்டின் இனச் சிறுபான்மையினரிடம் புதியதொரு பேச்சுவார்த்தையை நடத்தும் நோக்கிலும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாக பிரஞ்சு அரசு வாக்குறுதியளித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் பல பாகங்களிலிருந்து பிரான்சில் குடியேறியிருக்கும் சமூகங்கள் பயங்கரமான ஒரு விதத்தில் ஒதுக்கப்பட்டுவருகின்றன என்பதை ஒப்புக்கொண்டு அதற்கு ஒரு தீர்வுகாண வேண்டுமென்பது அரசாங்கத்தின் இலக்காக இருக்கிறது.

பிரான்ஸ் முழுமையிலும் பார்த்தால், இந்த ஆண்டில் மட்டும் முப்பதாயிரம் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

பிரச்சினையான இடங்கள் என்று சொல்லப்படும் இடங்களின் மொத்த எண்ணிக்கை தொள்ளாயிரமாக இருக்கிறது.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051104090853051104_armazemparis203credito.jpg' border='0' alt='user posted image'>
தொடரும் வன்முறைகள்
அரபு மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் கறுப்பின ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் பிரான்ஸ் வந்துள்ள குடியேறிகள் மற்றும் அக்குடியேறிகளின் பிள்ளைகள், இம்மாதிரியான இடங்களில் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு கட்டுக்கடங்காமல் திரிகிறார்கள் என்று தெரிகிறது. இந்த இடங்களில் வேலை வாய்ப்பு இல்லை, இனரீதியான பாரபட்சமே இந்நிலைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

குடியுரிமை இல்லையென்றாலும்கூட நாட்டில் அதிக காலம் வாழ்ந்துவிட்டவர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவது அவர்களின் குறைகளை நீக்குவது போன்ற மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பெரிய சட்ட சீர்திருத்தங்கள் வர வேண்டும் என்றும் சர்கோசி கூறியுள்ளார்.

-நன்றி: பீபீசீ தமிழ்
Reply
#8
<b>பாரீஸ் வன்முறையை அடக்குவது குறித்து பிரஞ்சு அமைச்சர்கள் ஆராய்கிறார்கள் </b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051105145722parismarch.jpg' border='0' alt='user posted image'>
பாரீஸ் வன்முறைகளை
நிறுத்தக் கோரி ஊர்வலங்கள்

பாரீஸ் நகரின் பாராமுகப் புறநகர்ப் பகுதிகளில் ஆரம்பித்து இப்போது நாட்டின் வெளிப் பிரதேச நகரங்களுக்கும் பரவியிருக்கும் வன்முறை அலையை எவ்வாறு அடக்குவது என்று ஆராய பிரெஞ்சு மந்திரிகள் அவசரமாகக் கூடியுள்ளனர்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட 10 அமைச்சர்களும் கடந்த ஒன்பது இரவுகளாக நடந்து வரும் வன்முறைகளில் ஏற்பட்ட இழப்புகளைக் கணக்கிட்டனர். சுமார் தொள்ளாயிரம் கார்கள் தீ வைக்கப்பட்டுள்ளன, 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரங்கள் பெரும்பாலும் தொடங்கியது அரபு மற்றும் ஆபிரிக்க வம்சாவழியினர் வாழும் பாரீஸ் நகரத்துப் புறநகர்ப் பகுதிகளில்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051105102507parisriots.jpg' border='0' alt='user posted image'>
<i>வன்முறையும் தொடருகிறது</i>
இங்கு தொடங்கிய வன்முறைகள் பின் ஸராஸ்பூர்க், துலூஸ், றென் போன்ற வெளிப்பிரதேச நகரங்களுக்கும் தொற்றிக் கொண்டது.

பாரீஸ் நகரின் வட - கிழக்குப் புறநகர்ப் பகுதியொன்றில் போலீசாரிடமிருந்து தப்புவதற்காக ஒழிந்து கொள்ள முயன்ற இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி இறந்த விபத்தை அடுத்து இந்த வன்முறைள் ஆரம்பித்திருந்தன.

இவர்கள் இருவரையும் தாங்கள் துரத்திச் செல்லவில்லை எனப் போலீஸார் கூறுகின்றனர்.

வன்முறைகள் நின்று, அமைதி திரும்ப வேண்டும் என்று கூறி பாரீஸ் நகரின் புறநகர்ப் பகுதி இரண்டில் இன்று ஊர்வலங்கள் நடக்கின்றன.
-BBC tamil
Reply
#9
[size=15]<b>குடியேறிகள் வாழும் பகுதிகளில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட கடும் முயற்சி தேவை: பிரஞ்சுப் பிரதமர்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40994000/jpg/_40994846_ap203indexfight.jpg' border='0' alt='user posted image'>
<i>கலவரத்தை அடக்க பொலிசார் திணறுகின்றனர்.</i>

கலவரத்தை அடக்க பொலிசார் திணறுகின்றனர்.
பிரான்ஸில் பெரும்பாலும் குடியேறிகளின் புறநகர்ப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு கடுமையான உழைப்பும்இ நீண்ட அவகாசமும் தேவைப்படும் என்று பிரஞ்சுப் பிரதமர் டொமினிக் த வீல்பன் அவர்கள் தேசிய சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பொறுத்தவரை அனைத்து வகையிலான பாரபட்சத்துக்கு எதிரான போராட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று இந்த வன்செயல்கள் தொடர்பிலான விவாதம் ஒன்றில் பேசுகையில் பிரதமர் கூறினார்.

பிரான்ஸின்இ வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்ட மற்றும் குறைந்த வருமானம் உள்ள சமூகங்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பின்னர் அவர் வரையறுத்துப் பேசினார்.

தொடர்ச்சியாக 12 இரவுகள் நடந்த வன்செயல்கள் தொடர்பில்இ வேலைவாய்ப்பின்மை இனவாதம் மற்றும் பரந்துபட்ட பிரஞ்சு சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படல் போன்றவற்றால் ஆத்திரமடைந்த ஆப்பிரிக்க மற்றும் அரேபிய இன இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த வன்செயல்களை அடக்குவதற்கு ஏதுவாக உள்ளூர் அதிகாரிகள் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிப்பது குறித்து முன்னதாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- BBC tamil
Reply
#10
எடுத்ததெற்கெல்லம் அரசையே குறைகூறுவதில் அர்த்தம் இல்லை


1) முதலில் தமது இளவயது (11 - 17) புதல்வர்களை கட்டுப்படுத்த திரணியற்ற பெற்றோர்
12 -13 வயது பிள்னைகளுக்கு இரவில் திரிவதற்கு அனுமதி கொடுத்தது யார் ?

2) 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்று, பிள்ளை வளர்ப்பு உதவித்தொகை, வீட்டுமானியம் , போக்குவரத்து மானியம், இலவச மருத்துவம் மற்றும் இன்னோரன்ன உதவிகளை அனுபவித்தவாறு வேலை வெட்டி இன்றி வீட்டில் இருக்கும் அப்பாமார்.

3) பிரான்சு சட்டப்படி 15 வரை கட்டாயக் கல்வி. அதுவரை ஏனோ தானோ என பாடசாலை செல்வது, கல்லு}ரி கல்வியை ஒழுங்காக முடிக்காது வீதியில் அடவாடித்தனம், மோசமான சேர்க்கை களவு , விசித்திர உடை, பேச்சு வழக்கு பிரன்சு மொழி ( தமிழில் மடராஸ் பாசைக்கு சமன்) என்று பரிமாணம் எடுக்கும் இவர்களுக்கு என்னவென்று உதவுவது ? இன்றய நவீன பொருளாதாரப் போட்டி உலகில் திறமைக்குத் தான் வேலை எனும் நிலை யில், ஊக்கமற்ற இவ் இளைஞகள் அரசாங்கம் சிபார்சு செய்யும் தொழிற்பயிற்சிகள் பிடிப்பதில்லை. ஆனால்
அவர்கள் எதிர்பார்ப்பது 8மணி நேர கோட்டும் சுhட் வேலை ?

4) நீங்கள் பிரான்சு அரச அலுலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் எத்தனையோ
வெளிநாட்டவர் பணிபுரிவதை அவதானிக்கலாம். அவர்களில் பலர் " வன்முறையாளர்களின ";
நாட்டைசேர்ந்தோர் தான்.

5) பிரான்சின் உள்நாட்டு அமைச்சரும், எதிர்கால ஜனாதிபதி வேட்பாளருமான நிக்கோலா சாக்கோஸி யின் சில அதிரடி நடவடிக்கைகள், பல போதைவஸ்து கடத்தல் விற்பனையாளருக்கு தலையிடியாக இருக்கிறது. போதைவஸ்து மற்றும் திருட்டுப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ள பாரிஸின் புறநகர் தொடர்மாடி குடியிருப்புகளில் பொலிஸாரின் பார்வை
திரும்பியதும் வன்முறையை அதிகப்படுத்தியுள்ளது.
Reply
#11
ஓம் நீங்கள் சொல்வது மிகச்சரி.
உங்கள் கருத்துத்தான் என்னுடையதும்
இவர்களுடைய அட்டகாசத்தால் இன்றும் நடந்தே வீடு வரவேண்டிய நிலமை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#12
sabi Wrote:ஓம் நீங்கள் சொல்வது மிகச்சரி.
உங்கள் கருத்துத்தான் என்னுடையதும்
இவர்களுடைய அட்டகாசத்தால் இன்றும் நடந்தே வீடு வரவேண்டிய நிலமை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

என்ன சகோதரமே உங்கள் பக்கத்திற்கு பஸ் இல்லையா?? மிகவும் வேதனையான விடையம் தான்
பாதைகளில் பார்த்துப்போங்கோ
Reply
#13
அதை விட எரியிற நெருப்பிலை எண்ணெயை ஊத்திற மாதிரி உள்துறை அமைச்சர் சார்கோசி வெளி நாட்டு குப்பைகளை துடைப்போம் எண்டிட்டார் கலவரம் தொடர;கிறது
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#14
தாயகத்தில் அடாவடித்தனம் செய்பவர்க்கு
கலாச்;சாரம் பேணும்; குழு பச்சைமட்டை அடி கொடுக்கலாம் ஆனால் பிரான்சில் அடாவடித்தனம் செய்தால் மயிலிறகால் வருடவேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம்

அழுக்;கை அடித்துத் தான் தோய்க்க வேண்டும்


VERNON
Reply
#15
இப்போது பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள்
பிரான்சில் பிறந்து - வளர்ந்து - படித்த இளைஞர்கள்.
இவர்கள் வெளி நாட்டவர் போல் வாய் மூடி மெளனமாக வேலை செய்யக் கூடியவர்கள் அல்ல.
தவறுகளை பிரெஞ்சு நாட்டவர் போல் தட்டிக் கேட்பவர்கள்.
இது பலருக்கு பிடிப்பதில்லை.

இவர்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் அரசு அமுல்படுத்தாத காரணத்தால்
இவர்கள் வேலை வாய்ப்புகள் இன்றியே அலைகிறார்கள்.

வெளி நாட்டவர் போல் இவர்களை நடத்துவதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இவர்களது பெயர்கள் முஸ்லிம் பெயர்கள் கொண்ட காரணத்தால் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
எனவே வேலை வாய்ப்புகளற்று சுற்றித் திரிய வேண்டியுள்ளது.

இளைஞர்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை அந்த அரசுக்கு உண்டு.
அது அங்கு நடை முறையில் இல்லை.
ஒரு நாட்டின் குடியுரிமை மட்டும் ஒரு மனிதனுக்கு போதாது.
இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

இனியும் இதைக் கணக்கிலெடுக்கா விட்டால் பிரான்ஸ் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளும் பெரும் சவால்களை எதிர் நோக்க வேண்டி வரும்" என்றார்.
8) Idea
.
Reply
#16
<b>பிரான்ஸ் வன்முறையின் பின்னணி (பலகணி)</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051109085214toulousecapa.jpg' border='0' alt='user posted image'>
பிரான்சில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் அவசரகால அதிகாரங்கள் அமல்செய்யப்பட்டாலும், அங்கு 13ஆவது இரவாக வன்முறைகள் தொடர்ந்து அரங்கேரின.

ஆனால் வன்முறைகளின் அளவு குறைந்து விட்டதாகவும், வன் முறையால் பாதிக்கப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்துவிட்டதாவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வன்முறை முதல்முதலாக ஏற்பட்டது.

இனப் பாகுபாடு காட்டப்படுதல் குறித்தும், சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள நிலை குறித்தும் இளைய தலைமுறையினர் புகார் கூறிவருகின்றனர்.

இந்தப் பிரச்சனையின் அடிப்படையில் உருவான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கும் அதிகாரம் பிரன்சில் உள்ள நகரங்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கலவரங்களின் பின்னணி, அங்கே இனச் சிறுபான்மையினரிடம் நிலவும் உணர்வுகள், பிரஞ்சு இனத்தவர் கருத்துகள் போன்றவற்றைத் தொகுத்து எமது செய்தியாளர் லிலியன் சாக் வழங்கும் கண்ணோட்டத்த்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_promo.shtml
Reply
#17
என்ன நாசமோ நன்றி அஜீவன் அண்ணா இப்ப பிரான்சில் இனி மெல்ல மெல்ல எல்லாஇடமும் எதிர்பார்ததுதானே நடக்கட்டும்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
VERNON Wrote:தாயகத்தில் அடாவடித்தனம் செய்பவர்க்கு
கலாச்;சாரம் பேணும்; குழு பச்சைமட்டை அடி கொடுக்கலாம் ஆனால் பிரான்சில் அடாவடித்தனம் செய்தால் மயிலிறகால் வருடவேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம்

அழுக்;கை அடித்துத் தான் தோய்க்க வேண்டும்


VERNON

பிரான்ஸ் வன்செயல்களின் உண்மையான நிலவரம் தெரியவில்லை. அங்கு அடாவடித்தனம் புரிவோருக்கு மயிலறகால் வருடவேண்டும் என்பதில்லை கடுமையான நடவடிக்கைகள் நிச்சயம் அவசியம். ஆனால் பச்சைமட்டை அடி போல மிக கடுமையாக நடந்து கொள்ள முடியாது, அப்படி செய்தால் அவை பிரான்சில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
<img src='http://www.puthumai.com/images/stories/ajg3/image072.jpg' border='0' alt='user posted image'>
<b>தீக்குளிக்கின்றதா நாடு? </b>
-ஏஜேஜி

12 இரவுகளை வன்முறைகள் கண்டுவிட்டன.
ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரையில் 5,873 கார்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. 1,500 பேரைப் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றார்கள். 17 பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. தீயணைப்பில் தீவிரமாக ஈடுபட்ட பொலீஸ் படையினரில், 120 பேர் வரையில் காயப்பட்டிருக்கிறார்கள்.
ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை இன்று எழுதும்போது பிரான்ஸ் நாட்டில் வெடித்து, 12வது நாளைத் தொட்டுக் கொண்டிருக்கும், இன்றைய நிலையில் கிடைத்த புள்ளி விபரங்கள்.
பிரான்ஸ் நாட்டில் என்னதான் நடக்கின்றது? இன்னும் எத்தனை பேர் கொல்லப்படப் போகின்றார்கள்? எத்தனை வாகனங்கள் தீக்குளிக்கப் போகின்றன?

இரண்டு இளைஞர்கள், மின்சாரத்தால் தாக்குண்டு இறந்த நிகழ்வுதான், இந்த வன்முறைகளை விதைத்திருக்கின்றன. பொலீஸார் இந்த இரு இளைஞர்களையும் துரத்திச் சென்றபோது, தப்பியோட எத்தனித்த இளைஞர்கள், மின்சார உற்பத்தி நிலையத்துள் புகுந்து மறைந்திருந்த சமயம், மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் பொலீஸாரோ நாம் அப்படி யாரையும் துரத்தவில்லை என்று அடியோடு மறுக்கின்றார்கள்.

நாடெங்கும் வெடித்து, வளரும் இந்த வன்முறைகளை அடக்க இறுதி ஆயுதம் கையாளப்பட்டிருக்கின்றது. உள்துறை அமைச்சர், நாட்டின் நகரங்கள், பட்டினங்களெங்கும் ஊரட்ஙகு சட்டத்தை அமுல்செய்யும்படி, அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

பாரிஸ் நகரில் இந்த வன்முறை சற்று அடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ஏனைய நகரங்களில் நிலைமையில் மாற்றம் தெரிவதாக இல்லை. அரபு இனத்தவர்களும், ஆபிரிக்க இனத்தவர்களும் அதிகமாக வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு வாழ்கின்ற பிராந்தியங்களிலேயே, இந்த இரவுக் கலவரங்கள் வெடித்துள்ளன. இனவேறுபாடு பார்க்கப்பட்டு நாம் ஒதுக்கப்பட்டு வருகின்றோம் என்பதே இவர்கள் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

1955இல் அமுலுக்கு வந்த ஒரு சட்டததிற்கு அமையும் விதத்தில்தான், ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1954-1962 காலகட்டத்தில், அல்ஜீரியா, பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற, போர் தொடுத்த வேளை அல்ஜீரியாவில் பிறப்பிக்கப்பட்ட சட்டமே இது. இந்தத் தடவை, அவசரம் அவசரமாக கட்நத செவ்வாயன்று கூட்டப்பட்ட பாராளமன்றத்தில், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்டிருந்த 1500 பொலீஸ் அதிகாரிகளுக்கு கைகொடுப்பதற்காக, மேலும் 8000 பேர் அனுப்பப்பட்டுள்ளார்கள். இராணுவம் தற்போதைய நிலையில் அனுபப்பட மாட்டாது என்று சொல்லப்படுகின்றது.

கடந்த திங்களன்று இரவு வெடித்த வன்முறையில் 1000க்கு மேற்பட்ட வாகனங்கள் தீயூட்டப்பட்டிருக்கின்றன. பல கட்டடங்களும், நெருப்பில் எரிந்து அழிக்கப்பட்டுள்ளன. Toulouse நகரின் தென் பிராந்தியத்தில், ஒரு பஸ் வண்டி எரிக்கப்பட்டுள்ளது. Lille
என்ற நகரின் வட பிராந்தியத்திலும் வெடித்த வன்மறையிலும் வாகனங்கள் தீக்கிரையாகி இருக்கின்றன. Nord-Pas-de-Calais , Picardie பிராந்தியங்களையும் வன்முறைகள் தாக்கி இருக்கின்றன.

பாலர் பாடசாலை, உயர் நிலைப் பாடசாலை, எரிபொருள் நிரப்பு நிலையம் என்று பற்பல எரித்து நாசமாக்கப்ட்டுள்ளன.

இங்கு வெளிநாட்டவர்கள், ஜாக்கிரதையாக இருக்கும்படி, அந்தந்த நாட்டு அரசுகளால் எச்சரிக்கப்பட்டிருக்கின்றன. பெல்ஜியத்தின் தலைநகரிலுள்ள, புகையிரத நிலையமொன்றில் ஐந்டது கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. பேர்லின் நகரிலும் எரியுண்ட ஐந்து கார்கள் குறித்து ஜேர்மன் பொலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

கடந்த மாதம் 27 ந்திகதிதான் இந்த வன்முறைகள் ஆரம்பித்து, இப்பொழுது நாடெங்கும் பரவியிருக்கின்றன. மின்சாரத் தாக்குதலால் எரியுண்ட இரு இளைஞர்களில் இருவருமே ஆபிரிக்க வழி வந்தவர்கள். இவர்களுக்கு வயதும் அதிகமில்லை. ஒருவனுக்கு வயது 15. இரண்டாமவனுக்கு வயது 17. இந்த இரு இளைஞர்களினதும் படங்களுடன், அதற்குக் கீழ் சமாதானமாக ஓய்வெடுங்கள் எனறு பொருள்படும்படி வாசகங்களை எழுதி, தங்கள் கைத்தொலைபேசிகள் மூலம், ஆளுக்கு ஆள் இங்கே அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் தாம் அணிந்துள்ள மேலாடையில் மரணம், வெறுமனே விடப்பட்டு விடாது என்ற பொருள்படும்படி வாசகங்களை எழுதியபடி திரிகின்றார்கள். மரணம் என்பது உணர்ச்சிகளைக் கிளறக் கூடியதுதான். ஆனால் இங்கே நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்று காலங்காலமாக மனதுள் புதைந்து கிடந்த இவர்கள் உணர்ச்சிகளே வெடித்து, கலவரமாக பிரசவமாகி இருப்பதாக அவதானிகள் கருதுகின்றார்கள்.

பல அரபு, ஆபிரிக்க வழிவந்த இளைஞர்கள், நேர்முகப் பரீட்சைகளில் சமூகமளித்து, தாம் ஒதுக்கப்பட்ட விரக்தியில் இங்கு பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேலையில்லாத பல இனைஞர்கள் ஒன்றாக வாழும்போது, அதன் விளைவுகள் பொதுவாக வன்முறை வெடிப்பாகவே இருப்பதுண்டு.
அரபு நாட்டவர்களும், ஆபிரிக்க நாட்டவர்களும் வாழும் பிராந்தியங்கள் பல வழிகளிலும் புறக்கணிக்கப்ட்டு வருகின்றன என்று இவர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, முகம் கொடுத்தாக வேண்டிய இகட்டான நிலைக்கு, பிரெஞ் அரசு தள்ளப்பட்டிருக்கின்றது.

- நன்றி : புதினம்
Reply
#20
[size=15]பிரான்ஸ் புதிதாகக் கொண்டு வரவுள்ள சட்டத்தின் வழி
கலவரத்தில் ஈடுபடுவோரை <b>குடியேறிகள் </b>என்று கூறி திருப்பி அனுப்ப நினைப்பதும்
சட்டத்தை தமக்கு சாதகமாக்க முயல்வதும்
பாரதூரமான விளைவுகளை ஐரோப்பாவுக்குள் ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

இவர்களது குடும்பங்கள் உண்மையிலேயே 2ம் உலக யுத்தத்துக்குப் பின்னர் இங்கு அழைத்து வரரப்பட்டு ஐரோப்பாவைக் கட்டி எழுப்ப ரத்தம் சிந்தியவர்கள் என்பதே சரி.

இவர்களது உழைப்பு இல்லாவிடில் இன்றைய ஐரோப்பா ஒரு சுவர்க்கமாக இருந்திருக்காது.

இவர்களை ஒத்த
இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஆணி வேராக இருக்கும் மலையக மக்களை நமக்கு விளங்கும் விதத்தில் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலேயரால் இலங்கையின் மலையகத்தை செழிப்பாக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டவர்களின் கதி
சிறிமா - சாத்திரி உடன்படிக்கை மூலம் நாட்டை விட்டு வெளியேற்றியதே.
அவர்கள் இன்று தமிழகத்தில் கேட்பாரற்ற நிலை வாழ்வு வாழ்கிறார்கள்.

மலையகத்தில் இருப்போரில் பெரும்பாலாக
மக்கள் கூட லயன்களினல் கீழ்த்தரமான வாழ்வோடு போராடுகிறார்கள்.
இவர்கள் இன்றும் இந்தியர்களாகவே கருதப்படுகிறார்கள்.

இலங்கையரெனும் உரிமை பிறப்பு சான்றிதழில் கூட இல்லை.
இவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றே குறிப்பிடப்படுகிறார்கள்.

இவர்களது வாக்குகளைப் பறித்தவர்கள் அன்றைய தமிழ் தலைவர்கள் என்பது வேதனைக்குரிய உண்மை.
இது வெட்கப்பட வேண்டியதாகவே கருதுகிறேன்.
இவர்களுக்காவது இன்று அரசியல் கட்சிகள் இருக்கின்றன.

ஐரோப்பாவில் வாழும் இந்த குடியேறிகளின் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஒரு அமைப்போ அல்லது பாராளுமன்ற அங்கத்துவமோ இல்லாதது
குடியேறிகளின் குழந்தைகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வைத்திருக்கிறது.

இங்கு பிறந்தவர்களுக்கு இது அவர்களது தாயகம்.
இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இது பற்றிய ஒரு சில தெளிவான விளக்கத்தை நாளை எழுதுகிறேன்.

இவ் வன்முறைகள் நடைபெறும் தருணத்தில்
பிரிட்டனில் பிரதமர் டோனி பிளேர் அறிமுகப்படுத்த விரும்பிய பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்கள் தொடர்பில் அவர் தனது ஆட்சியில் முதல் முறையாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலை
நல்லதொரு திருப்பமாக இருப்பதாகவே படுகிறது.

[quote]<b>பிரிட்டிஷ் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி</b>

பிரிட்டனில் பிரதமர் டோனி பிளேர் அறிமுகப்படுத்த விரும்பிய பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்கள் தொடர்பில் அவர் தனது ஆட்சியில் முதல் முறையாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் இன்று தனது மூத்த அமைச்சர்களை பிளேர் சந்தித்தார்.

தேசம் எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தலின் தன்மை குறித்து மக்களுக்கும் நாடாளும்னறத்திற்கும் இடையில் வருந்தத்தக்க கருத்து வேற்றுமை ஒன்று உருவாகிவிட்டது என்று பிளேர் அவர்கள் மத்தியில் வாதிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மூத்த அமைச்சர்கள் இடையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு அவர்கள் நடந்ததை நினைத்து வருந்துகிறார்கள் என்பதற்கான அறிகுறி எதுவும்கூட தெரியவில்லை. மாறாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் விடாப்பிடியாக இருப்பது சரிதான் என்று அமைச்சரவை முழுமையிலும் ஒரேமாதிரியான கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது.

ஆனாலும் நேற்று அரசு அடைந்த தோல்வியின் அளவு கண்டு பலர் அடைந்த ஆச்சரியத்தை அதிர்ச்சியை பூசிமெழுகத்தான் தற்போது அமைச்சர் மத்தியில் இப்படி நம்பிக்கை பீறிடுகிறது என்று கூறப்படுகிறது.

தனது கட்சிக்குள் எளிதில் ஒத்துப்போகாதவர்களைப் பேசி இணங்கவைக்கும் பிளேரின் பெரிய வல்லமை இவ்விஷயத்தில் பயனற்று போயிருக்கின்ற நிலையில் மேலும் சர்ச்சைக்குரிய மற்ற சட்டங்களை நாடாளுமன்றத்தில் முயன்று நிறைவேற்ற பிளேரால் முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தான் விரும்பி விலகுவதற்கு முன்னரே பிளேர் பதவிவிலக வேண்டும் ஏனெனில் அவர் அந்த அளவுக்கு பலவீனமடைந்துவிட்டார் என சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சர்ச்சைக்குரிய மற்ற பகுதிகள் மீது அடுத்த வருடம் நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடக்கும்வரை பிளேர் நிலைமையை சமாளித்துக்கொள்ளலாம்.
-BBC tamil

பிரான்சின் தாக்கங்கள் ஜெர்மனிக்கும் தாவியிருக்கிறது.

இந்நிலையில்
பிரான்சில் உள்ள அரசியல்வாதிகள்
கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில்
எதிர்கால செயல்கள் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமுமில்லை.

ஐரோப்பாவின் நாசத்துக்கு அல்கொய்தா போன்ற பயங்கரவாதங்கள் (அமெரிக்காவும்தான்?)
ஊடறுத்து செயல்பட வழி வகுத்தால் அதை தணிக்க எந்த ஜென்மம் எடுத்தாலும் முடியாது போகலாம்.
இதுவே மிகப் பயங்கரமானது.
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.........

-அஜீவன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)