![]() |
|
சர்ச்சைக்குரிய தபால்தலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சர்ச்சைக்குரிய தபால்தலை (/showthread.php?tid=2631) |
சர்ச்சைக்குரிய தபால்தலை - Vaanampaadi - 11-03-2005 தபால்தலை பிரச்சினை இந்து அமைப்புகளின் கோரிக்கை: இங்கிலாந்து தபால் இலாகா நிராகரித்தது லண்டன், நவ.3- தபால் தலை பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் விடுத்த கோரிக்கையை இங்கிலாந்து தபால் இலாகா நிராகரித்து விட்டது. சர்ச்சைக்குரிய தபால்தலை இங்கிலாந்து நாட்டின் ராயல் தபால்துறை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 6 வகையான தபால்தலைகளை வெளியிட்டு உள்ளது. அதில் ஒரு தபால் தலையில், பொட்டு வைத்த ஒரு ஆணும், நெற்றியில் குங்குமம் வைத்த ஒரு பெண்ணும் குழந்தை இயேசுவை வணங்குவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த தபால்தலை நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. இந்துக்கள் எதிர்ப்பு இந்த தபால்தலைக்கு அங்கு வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்து ஆணும், இந்து பெண்ணும் குழந்தை இயேசுவை வணங்குவது போன்ற தபால்தலை வெளியிட்டது. இந்துக்களை அவமதிப்பதாக உள்ளது என்றும், எனவே அந்த தபால் தலையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் 250 இந்து அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு ராயல் தபால் இலாகாவை கேட்டுக் கொண்டது. நிராகரிப்பு ஆனால் இந்த கோரிக்கையை தபால் துறை நிராகரித்து விட்டது. மும்பை ஓவியக் கூடத்தில் உள்ள ஒரு ஓவியத்தின் அடிப்படையில்தான் தபால் தலை வடிவமைக்கப்பட்டதாகவும், மும்பையில் உள்ள அந்த ஓவியம் 17-ம் நூற்றாண்டில் வரையப்பட்டது என்றும் ராயல் தபால்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அந்த தபால் தலையை வாபஸ் பெறுவதோ அல்லது அதில் திருத்தம் செய்வதோ இயலாத காரியம் என்றும் அவர் கூறினார். இந்த தபால் தலை இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். போராட்டம் சர்ச்சைக்குரிய தபால் தலையை வாபஸ்பெற முடியாது என்று தபால்துறை கூறி விட்டதால் இங்கிலாந்தில் வசிக்கும் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர். பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் ராயல் தபால் துறையின் தலைமை அலுவலகத்துக்கு தபால் தலை ஒட்டாமல் ஏராளமான தபால்களை அனுப்பப் போவதாகவும் இந்தியாவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்ல இருப்பதாகவும் இந்துக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரமேஷ்கல்லிடாய் தெரிவித்தார். இந்து தம்பதி குழந்தை இயேசுவை வணங்குவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ள தபால் தலையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். Dailythanthi - Mathan - 11-03-2005 <img src='http://img365.imageshack.us/img365/93/stamp1jr.jpg' border='0' alt='user posted image'> இந்து குடும்பத்தினர் யேசுவை வணங்குவது போல காட்சியளிக்கும் இந்த தபால் தலையை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரோயல் மெயில் வெளியிட்டது. இதற்கு பிரிட்டன் வாழ் இந்துக்கள் தமது சமய உணர்வுகளை புண்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்த போதும் இந்த தபால் தலையை திரும்ப பெற ரோயல் மெயில் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து ரோயல் மெயிலுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடந்த இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன, - vasisutha - 11-03-2005 தகவலுக்கு நன்றி வானம்பாடி.. மதன்.... ........................ - Netfriend - 11-03-2005 இதுக்கெல்லாம் போராட்டமோ... நல்லவிசயம்தானே உண்மையாகவே இங்கு இப்போ ஐரோப்பாவில் நடக்கிறதுதானே இது..." பாமினியில் எழுதப்பட்டதை யூனிக்கோட்டிற்கு மாற்றியுள்ளேன் - மதன் - Vasampu - 11-03-2005 உண்மையில் இது போன்ற விடயங்கள் பலகாலமாகவே நடைபெறுவதும் பின் வருத்தம் தெரிவிப்பதும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இம்முறை பதிலில் தினாவெட்டே அதிகமிருக்கின்றது. முன்பு கூட உள்ளாடைகளில் பாதணிகளில் இந்து தெய்வங்களை அச்சிடடு அவமானப் படுத்தினார்கள். இப்படியான விடயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக உலகளாவியரீதியில் ஒரு சட்டத்தடுப்பை ஏற்படுத்தி அதை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். மத நம்பிக்கை என்பது அவரவரது சொந்த விடயம். ஒருவர் இன்னொரு மதத்தவர் மனம் நோகும்படி நடந்து கொள்வதே அவர் சார்ந்த மதத்தை கேவலப்படுத்துவதற்கு ஒப்பானது. இப்படியான விடயங்களில் தகுந்த நடவடிக்கைகள் தேவையானவையே. - adithadi - 11-03-2005 Mathan Wrote:<img src='http://img365.imageshack.us/img365/93/stamp1jr.jpg' border='0' alt='user posted image'> இப்படத்தில் உள்ளவர்கள் இந்துக்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இவ் ஓவியம் 17ம் நூற்றாட்டில் வரையப்பட்டதாக கூறப்படுகிறது. திருநூறு இந்துவின் அடையாளம், ஆனால் பொட்டு இந்திய உபகண்ட மக்களின் அடையாளம். இந்திய உபகண்டத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள் இல்லையா? இயேசு இவ் மானிடரின் கொடுமைகளை உடைத்தெறிந்தார், புரட்சிவாதி. ஆனால் முட்டாள் மக்களோ அவரை கடவுள் ஆக்கி விட்டார்கள். ஆனால் இன்று மதவெறியர்கள் இன்னும் ஒருமேல் படி போய்விட்டார்கள். மதத்திற்காக மனிதனை கொல்லும் மிருகங்களாக மாறி விட்டார்கள். - Mathan - 11-03-2005 திருநீறு இந்துசமய பிரிவான சைவ சமயத்தவர் அணிவது என்று நினைக்கின்றேன். பொட்டு பெரும்பாலும் அனைத்து இந்து சமயத்தவரும் அணிவது. அது எல்லா இந்திய உபகண்ட மக்களுக்கும் உரியது என்று சொல்ல முடியாது. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் பொட்டு அணிவதில்லை, - KULAKADDAN - 11-03-2005 Mathan Wrote:திருநீறு இந்துசமய பிரிவான சைவ சமயத்தவர் அணிவது என்று நினைக்கின்றேன். பொட்டு பெரும்பாலும் அனைத்து இந்து சமயத்தவரும் அணிவது. அது எல்லா இந்திய உபகண்ட மக்களுக்கும் உரியது என்று சொல்ல முடியாது. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் பொட்டு அணிவதில்லை,ஐரொப்பியர் அணிவதில்லை மதன், ஆனால் ஈழத்தில் கத்தோலிக்கர்களும் தென்னிந்திய திருச்சபை கிறீஸ்தவர்களும் பொட்டு அணிவர். - Mathan - 11-03-2005 எனக்கு தெரிந்து யாழில் பல கிறிஸ்தவர்கள் பொட்டு அணிவதில்லை. ஒரே குழப்பமாக இருக்குது - sathiri - 11-03-2005 இளவாலை பாசையுர் ஒட்டகப்புல கிறீஸ்த்தவர்கள் பொட்டு அணியும் வழக்கம் உள்ளவர்கள் இந்தியாவில் முஸ்லிம்களும் பொட்டு வைக்கும் வழக்கம் உண்டு காரணம் அவர்களும் முன்னர் இந்துக்களே அதனால் இந்து பழக்கவழக்கங்கள் சிலதை தொர்ந்தும் செய்கின்றனர் - adithadi - 11-03-2005 Mathan Wrote:<img src='http://img365.imageshack.us/img365/93/stamp1jr.jpg' border='0' alt='user posted image'> இப்படத்தில் உள்ளவர்கள் இந்துக்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இவ் ஓவியம் 17ம் நூற்றாட்டில் வரையப்பட்டதாக கூறப்படுகிறது. திருநூறு இந்துவின் அடையாளம், ஆனால் பொட்டு இந்திய உபகண்ட மக்களின் அடையாளம். இந்திய உபகண்டத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள் இல்லையா? இயேசு இவ் மானிடரின் கொடுமைகளை உடைத்தெறிந்தார், புரட்சிவாதி. ஆனால் முட்டாள் மக்களோ அவரை கடவுள் ஆக்கி விட்டார்கள். ஆனால் இன்று மதவெறியர்கள் இன்னும் ஒருமேல் படி போய்விட்டார்கள். மதத்திற்காக மனிதனை கொல்லும் மிருகங்களாக மாறி விட்டார்கள். - Vasampu - 11-03-2005 அடிதடியின் வாதம் விதண்டாவாதம். பொட்டு அடிப்படையில் இந்துக்களால்த் தான் அணியப்படுகின்றன.. முன்பு இந்துக்களாக இருந்து தற்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் சிலர் பாவிப்பதை வைத்து அதனைப் பொதுப்படையாக சொல்லமுடியாது. தப்பு செய்தவர்களே தப்பை ஒத்துக் கொள்ளும்போது ஏன் மற்றையோர் சடைய முற்படவேண்டும். - Birundan - 11-03-2005 ஏனப்பா பிரச்சனை பாலன் கையில் வேல் கொடுத்தால், ஆயுதம் ஒப்படைச்ச மாதிரியும் இருக்கும், பிரச்சனை தீர்ந்தமாதிரியும் இருக்கும், வேனுமெண்றால் ஒரு முத்திரையும் அடிச்சு விட்டா போதும். - vasisutha - 11-03-2005 ஆகா இது நல்ல யோசனை பிருந்தன்.. அதோட மாதாவின கையில் ஒரு சுூலமும் கொடுத்தாப் போச்சு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 11-03-2005 உடுக்கடிச்சு தூள் கிளப்பிட மாட்டம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 11-04-2005 Birundan Wrote:உடுக்கடிச்சு தூள் கிளப்பிட மாட்டம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்ப சாமியாடுறது யாரு? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (இதுக்கால திரத்த முதல்ல போயிடுறேனுங்கோ..) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- adithadi - 11-04-2005 Vasampu Wrote:அடிதடியின் வாதம் விதண்டாவாதம். பொட்டு அடிப்படையில் இந்துக்களால்த் தான் அணியப்படுகின்றன.. முன்பு இந்துக்களாக இருந்து தற்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் சிலர் பாவிப்பதை வைத்து அதனைப் பொதுப்படையாக சொல்லமுடியாது. தப்பு செய்தவர்களே தப்பை ஒத்துக் கொள்ளும்போது ஏன் மற்றையோர் சடைய முற்படவேண்டும். எனக்கு தெரிந்த தமிழ்கிறிஸ்த்தவர்கள் எல்லோரும்மே பொட்டு அணிகிறார்கள். இவ் தபால்வெளியீடில் குங்குமம் அணிந்து கிறிஷ்தவர்களாக காட்சிதரும் முத்திரியையில் என்ன பிழை இருக்கிறது? Re: சர்ச்சைக்குரிய தபால்தலை - vasisutha - 11-04-2005 <img src='http://img80.imageshack.us/img80/4186/stamp1jr8nu.jpg' border='0' alt='user posted image'> இதில் ஆண் உருவமும் பொட்டு (நாமம்)வைத்திருக்கிறதே..?? :? - Birundan - 11-04-2005 அவரும் ஹிண்டுதான்................................................................... - Vasampu - 11-04-2005 அடிதடி நீங்கள் இன்னும் உலகத்தை புரிந்து கொள்ளவில்லையென்று நினைக்கின்றேன். இப்படி ஒரு முத்திரை வெளியிட்டு இவர்கள் என்ன சாதித்து விடப் போகின்றார்கள். இதற்கொரு உதாரணம்: இந்தியா சுதந்திரம் அடைந்தபின் எலிசபெத் மகாராணியார் முதன்முதலாக இந்தியா வந்தபோது இந்திய அரசாங்கம் அவரை கோலாகலமாக வரவேற்று மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கம்பளமொன்றை பரிசாக அளித்தது. மகாராணியார் பிரித்தானியா திரும்பியதும் தனக்குத் தரப்பட்ட இரத்தினக் கம்பளத்தை தனது வேலையாட்கள் பாவிக்கும் மலசலகூடத்தில் கால் துடைப்பதற்கு போட்டுவிட்டார். இதனை எழுத்தாளர் குஷ்வந்சிங் தனது குறிப்பொன்றில் மிகவும் கண்டித்து எழுதியிருந்தார். ஒன்றைமட்டும் மனதில் வைத்திருங்கள் எங்களுக்குள் பலர் வைத்திருக்கும் தாழ்வுமனப்பான்மைதான் எம்மை மற்றையவர்கள் கேவலமாக எடை போட வைக்கின்றது. |