Yarl Forum
பிச்சை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பிச்சை (/showthread.php?tid=2627)



பிச்சை.. - Nithya - 11-03-2005

அம்மா "பிச்சை" போடுங்கோ..
(ம்ம் மன்னிக்கவும்)
அக்கா "பிச்சை" போடுங்கோ..

ஏனப்பா?
கால் கை எல்லாம்
நன்றாகத்தானே உள்ளன??

வேலை எதுவும் கிடைக்கேல அக்கா..!!

சரி.. நாளை இங்கு போ..
உனக்கு வேலை கிடைக்கும் !!

அடுத்த நாள் அடுத்த வீதியில்
அதே குரல்
"அம்மா பிச்சை போடுங்கோ"

எதிர் கொண்டேன்..
ஏன்டா "பிச்சை" எடுக்கிறாய்???
அழுத்தமான குரலில் கேட்டேன்

மறுமொழி கூறாமல்
பார்வையுடன் சென்று விட்டான்
கலங்கி நின்றேன்..!!

ஒரு வாரத்தில்
ஒரு கடுதாசி..!

"வயிற்றுக்காய் பணம் சேகரித்தல்"
என்று தலைப்பிடப்பட்டிருந்தது..!

அவசரமாய் பிரித்தேன்..

உள்ளே..

"பிச்சை என்று
இகழ்ச்சி செய்ததால்
உங்கள்மேல் வழக்கு"

அடே தமிழா...
சிரிக்கத் தோன்றுகிறது..!!

நான் நேற்று
பிறந்தவள்..
"பிச்சை" என்றோ
(அதுவும் உன்னால்)
பிறப்பிக்கப் பட்டது..!

அம்மா "பிச்சை" போடுங்க
என்பதை நீ நிறுத்து..
என் பச்சையை நான்
நிறுத்துகிறேன்..!!


- kuruvikal - 11-03-2005

கவிதை நடை எழுத்துப் பிழைகளைக் கவனியுங்கோ...பிரசுரிக்க முதல்..! நல்ல முயற்சி பாராட்டுக்கள்..! :wink: Idea


Re: பிச்சை.. - KULAKADDAN - 11-03-2005

Nithya Wrote:அடே தமிழா...
சிரிக்கத் தோன்றுகிறது..!!

நான் நேற்று
பிறந்தவள்..
"பிச்சை" என்றோ
(அதுவும் உன்னால்)
பிறப்பிக்கப் பட்டது..!

அம்மா "பிச்சை" போடுங்க
என்பதை நீ நிறுத்து..
என் பச்சையை நான்
நிறுத்துகிறேன்..!!

நித்தியா ஏதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு. ஆனால் கடைசி பந்தியில் பச்சையை ???????? புரியவில்லையே.


- Mathan - 11-03-2005

என்ன புரிந்தது என்பதை எழுதுங்களன் குளம்


Re: பிச்சை.. - Birundan - 11-03-2005

KULAKADDAN Wrote:
Nithya Wrote:அடே தமிழா...
சிரிக்கத் தோன்றுகிறது..!!

நான் நேற்று
பிறந்தவள்..
"பிச்சை" என்றோ
(அதுவும் உன்னால்)
பிறப்பிக்கப் பட்டது..!

அம்மா "பிச்சை" போடுங்க
என்பதை நீ நிறுத்து..
என் பச்சையை நான்
நிறுத்துகிறேன்..!!

நித்தியா ஏதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு. ஆனால் கடைசி பந்தியில் பச்சையை ???????? புரியவில்லையே.

குழக்காட்டான் காரணகாரியங்களுக்காக எழுதப்படும் கவிதைகள், களத்தில் தொடர்ந்து இருந்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். :wink:


- Mathan - 11-03-2005

அதைத்தான் நானும் நினைத்தேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பாவம் குளம்


- vasisutha - 11-03-2005

ஒண்டை மேவி மறைக்க இன்னொண்டா..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம் நடத்துங்கோ... :wink: அடிக்கிற அடியில் காது சவ்வு
கிழியாமல் இருந்தால் சரி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 11-03-2005

மேலே உள்ள கருத்து நகைச்சுவைப்பகுதிக்குள் இந்த
தலைப்பு இருந்தபோது எழுதப்பட்டது.


- Nitharsan - 11-04-2005

பிச்சை நீங்கள் இன்னோருவரிடம் எடுக்கிறது....பச்சை நீங்கள் கௌரவமாக அரசாங்கத்திடம் எடுக்கிறது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (கனடாவில் மற்ற நாடுகளில் அதுக்கு என்ன பெயரோ...)