| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 89 online users. » 0 Member(s) | 86 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| விடுதலைப்புலிகள் - தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு- |
|
Posted by: மேகநாதன் - 02-04-2006, 01:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='color:green'><b>விடுதலைப்புலிகள் - தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு- முக்கிய விடயங்கள் ஆராய்வு! </b>
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விடுதலைப் புலிகளினை சந்தித்து சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடினர். விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைத்துPவு, வவுனியா, மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்கள், சமாதான செயலகத்தை சேர்ந்த இளந்திரையன், ஆகியோர் விடுதலைப்புலிகள் தரப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் சிறிலங்காவின் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாகவும் கடத்தப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்களினை விடுவிப்பது பற்றியும் பிரதானமாக பேசியதாக குறிப்பிட்டார்.
சிறிலங்கா அரசு நடத்தவுள்ள உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளரைக் கேட்டிருக்கின்றோம் என்று கூறிய மாவை சேனாதிராஜா, சட்ட பிரச்சினைகள் காரணமாக உள்ளுராட்சி தேர்தல் நடந்தால் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் செல்லாமல் தடுப்பதற்காக எமது தேசத்தின் விடுதலையின் மீது பற்றுக் கொண்டவர்களை அந்த தேர்தலில் பங்குபற்ற செய்வதற்குள்ள சாத்தியங்களையும் இன்றைய சந்திப்பில் ஆராய்ந்தோம் என்று தெரிவித்தார்.
கடத்தப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர்களை விடுவிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வது பற்றி ஆராந்தோம். வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் போன்றவர்கள் இதனை கட்டுக்கதை என்று கூறுவதற்கு சரியான பதிலை பாராளுமன்றில் கூறியிருக்கின்றோம். ஆவணப+ர்வமாகவும் ஆதாரப+ர்வமாகவும் பத்திரிகைகளுக்கும் சர்வதேசத்துக்கும் இதனை எடுத்துரைக்கும் நடவடிக்கையினை செய்யவுள்ளளோம்.
ஜெனீவா பேச்சுவார்த்தை புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாகவே இடம்பெறவுள்ளது. குறிப்பாக ஒட்டுப்படைகளை கலைத்தல், தமிழ் மக்களின் இயல்பு வாழ்வைத் தோற்றுவித்தல் என்பன நடந்தால் தமிழீழ விடுதலைப்புலிகளும் பேச்சுக்களில் கலந்து கொள்ள சாத்தியம் இருப்பதாக கருதுகின்றோம். விடுதலைப்புலிகள் பேசுவதற்கு மாறானவர்கள் அல்லர்@ அரசு தனது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு பதிலாக யாரை தெரிவு செய்வது என்று இரண்டு மூன்று தினங்களில் அறிவிக்கப்படும் என்றார்.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி ஜெனீவா பேச்சுக்களில் புரிந்துணர்வு உடன்படிக்கை பற்றியே பேசப்படவுள்ளது. அதனை அமுல்படுத்துவதில் பெரும் பங்கு சிறிலங்கா அரசுக்குதான் உரியது. அதனை செய்ய முடியாது என்ற நிலையில் விடுதலைப்புலிகளை பேச்சுக்களுக்கு வரவிடாமல் தடுக்கும் நோக்குடன் தான் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்களை கடத்தியிருக்கின்றது என்று கூறினார். </span>
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
|
|
|
| வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன |
|
Posted by: மேகநாதன் - 02-04-2006, 01:30 PM - Forum: கலைகள்/கலைஞர்கள்
- Replies (1)
|
 |
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி
சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து
விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு...
அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து விளையாடுகிற விளையாட்டு இருக்கே, கொஞ்சநேரம் ஆச்சர்யப்படுத்துகிற நேரத்திற்கு நின்னு பாத்திட்டு போலோமே அதுமாதிரி இந்தப்படத்தில் நடத்திருக்கு. அரவிந்தசாமியும், கௌதமியும், ரஞ்சிதாவும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்காங்க. கடைசி கடைசியாக நாமும் நகரத்தார்களின் மென்மையான வாழ்க்கையை பதிவு செய்திட்டோம். நியாயம் செய்திட்டோம் என்ற சந்தோஷம் வருது. அந்த சந்தோஷம் உங்களுக்கு வந்துவிட்டால் இது ஒரு வெற்றிப்படம். இதில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
<b>இவ்வளவு விற்பன்னர்கள், அற்புதமான டெக்னிஷியன்கள் இருந்தும் தமிழ்சினிமா பெரிய ஏன் அளவுக்கு போனதில்லை?</b>
நல்ல சினிமான்னு நினைச்சாலே போதும். இங்கே பெரிய வேடிக்கை என்னவென்றால், நம்ம டெக்னிஷியன்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவங்க கிடையாது. அப்படியிருந்தும் இன்னிக்கும் டி.வி.டி.யை பார்த்துத்தான் படம் பண்றோம். படம் பார்த்து படம் பண்றோம். சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அப்படியே அடிக்கு அடி காப்பி பண்ணி படம் செய்திருக்காங்க. அதை செய்திட்டு கதை, வசனம் என்று வேறே பேரைப் போடுறாங்க. என்ன அசிங்கம். மேற்கொண்டு இங்கே ஆஸ்கார் அவார்டுக்கு வேறே போட்டி. ஆஸ்காரே பெரிய அவார்டு கிடையாது. கேன்ஸ் பட விழா தான் பெரிய அவார்டு. இதையே நம்ம ஆட்கள் இன்னும் புரிஞ்சுக்கலை. அதுதான் வேதனை. ஒரு எம்.ஜி.ஆர்., சிவாஜி எங்கவாது பார்க்க முடிஞ்சதா? இளையராஜா மாதிரி மேதை இங்கே தானே கிடைச்சார். எவ்வளவு விஷயங்கள் கிடைத்தும், மேற்கொண்டு பயணம் போகாமல் அப்படியே உட்கார்ந்திருக்கோம்.
<b>தமிழீழம் போய் இருந்திங்க போலேயிருக்கு?</b>
அங்கே போனாலும் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழனுக்கு காதலைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையான்னு கேட்கிறாங்க. உங்களுக்கு பிரச்சினை எப்படியாவது ஐ லவ் யு சொல்லியாகணும். இதைத்தானே காட்டுறீங்கன்னு வேதனைப்படுறாங்க. 'உதிரிப்பூக்கள்' மாதிரி படம் காணோமே என்கிறார்கள். இன்னும் என்னைத் தாண்டி தமிழ்சினிமா வரவில்லையா என்று எனக்கே வேதனையாக இருக்கு. அவங்க வேதனை நியாயமாக இருக்கு. கேரள ஆடியன்ஸ் பாருங்க, அவங்களுக்கு வவீனீமீ ணீஸீபீ னீஷீஸீமீஹ் ஸ்மீக்ஷீஹ் ஜீக்ஷீமீநீவீஷீரள இங்கே நம்முடைய ரசிகனுக்கு நேரத்தின் அருமையும் தெரியாது. பணத்தின் அருமையும் தெரியாது. அது அவங்க குற்றமில்லை. நாம் அதற்கு பழக்கப்படுத்தி வைச்சிருக்கோம். அதே சமயம் நம்ம ஆடியன்ஸிடம் ஒரு நல்ல குணம் உண்டு. ரொம்ப பரிட்சார்ந்த படங்களையும் பார்த்திருங்காங்க. மொழி புரியாமல்கூட பார்த்திருக்காங்க. இவங்க மட்டும் ஒரு தீர்மானத்திற்கு வந்துட்டாங்கன்னா நிச்சயம் நல்ல படங்கள் உருவாகும்.
<b>தமிழீழத்தில் என்ன செய்தீர்கள்?</b>
அங்கே கிளிநொச்சியில் ஆதவன் திரைப்படக்கல்லூரி இருக்கு. சினிமாவை சொல்லித்தர கூப்பிட்டாங்க. மூணு மாசம் போய் இருந்தேன். போரும், துப்பாக்கி வாசனையின் எச்சமும் இருந்தாலும், அங்கே சகஜவாழ்க்கை வந்துவிட்டது. தமிழ்வடிவத்தின் பலவித பிரிவுகளை ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. '1996' என்று அரைமணி நேரம் ஓடக்கூடிய படம் எடுத்தோம். நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத தமிழீழ மக்களை நடிக்கவச்சேன். அவங்க வாழ்க்கையை எடுத்து, அவர்களுக்கே பாடம் சொல்லித்தந்தேன். 'நடிப்பு என்பது' பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். நின்னு நிதானிச்சு ஆழமாக வாழ்க்கையின் தரிசனத்தை தந்த இடம் தமிழீழம். பெரிய மரியாதையோடு என்னை வைச்சு நடத்தினாங்க. இங்கேயிருந்து பயணப்படுகிற தூரத்தில் இருந்துகிட்டு, ரத்தமும் சதையுமாக வேறே மாதிரி வாழ்க்கை இருக்கு. வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி தமிழீழம்.
நீங்க ஊருக்கு போயிருந்த சமயத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சிருக்கார்...
சினிமா எடுத்த ஒரு பாமரன் மாதிரித்தான் நான் பேசுறேன். பெரிய பெரிய கொள்கைகள், யோசனைகள் சொன்னவங்களை எல்லாம் பார்த்தாச்சு. கொள்கையின்னு சொல்லாமல் இருக்கிறதே பெரிய கொள்கையாக இருக்கு. கொள்கைன்னு சொல்லிட்டு, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிட்டு குடும்பத்திற்காகவே பாடுபடுறாங்க இல்லையா, அப்படி எதுவும் சொல்லாமல் இருக்கார் இல்லையா, அதுதான் சிறந்த கொள்கை. யார் வேண்டுமானாலும் சொல்லாமல் செய்தால் நல்லது. யார் வேண்டுமானாலும் சத்தம் போடாமல் நல்லது செய்திட்டுப் போங்கள். உரக்க சத்தம் போட்டு, கூவிப் பார்த்து நமக்கே அலுத்துப்போச்சு இல்லையா.
<b>உங்கள் மகன் 'சச்சின்' ஜான் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?</b>
அவன் சினிமா பக்கமே போகாமல் படிப்பு உண்டு, தான் உண்டுன்னு தான் இருந்தான். ராஜாதான் அவனை இசையில் அக்கறைப்பட வைச்சார். இன்னிக்கும் ஜான் இசையில் ரொம்ப நேர்த்தியானவன். எந்தப்பாடலை கேட்டாலும், எந்த இசையை கேட்க நேர்ந்தாலும் அதனோட ஆதி அந்தம் சொல்வான். அவனோட பலம், பலவீனம் எல்லாம் நான் டைரக்டராக இருப்பதுதான். என்னை மாதிரியே படம் எடுக்கணும்னு நினைப்பாங்க. இன்னொரு மகேந்திரன் எதுக்குன்னு நினைக்கமாட்டாங்க. விஜய் படக்கதையை நான் ஜான்கிட்டே கேட்கவும் இல்லை. அவன் சொல்லவும் இல்லை. அவன் படத்தில் சில குறைகள் இருந்தது. எல்லாவற்றையும் களைந்து அவன் சிறந்த டைரக்டராக வெளிப்படுவான்னு எனக்கு எண்ணம் இருக்கு.
<b>இனிமேல் படங்களில் சிகரெட் பிடிக்கிற காட்சி இடம்பெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்போறாங்க?</b>
பெண்களை படங்களில் எவ்வளவு கீழ்த்தனமாக காண்பிக்க முடியுமோ, அவ்வளவும் கூச்சப்படாமல் செய்கிறோம். டபுள்மீனிங், எல்லா குளோசப்பும் தொப்புளை நோக்கிப் போகுது. படங்களில் ஏராளமாக வன்முறையை அனுமதிக்கிறோம். ஆனால் நமக்கு என்னடா என்றால் புகைபிடிக்கக்கூடாது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட இதுமாதிரி ஒரு சட்டம் கொண்டு வரமாட்டாங்க. மதுக்கடைகளை திறந்து வைச்சிருக்கோம். ஆனால் குடி குடியைக்கெடுக்கும் என்ற வாசகம். எங்கே பார்த்தாலும் சிகரெட் வகைவகையாய் கிடைக்கும். ஆனால் சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது. நிஜமாகவே சட்டம் போடுகிற ஆட்சியாளர்களை நினைச்சால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
<b>இப்ப இருக்கிற இயக்குநர்களைப் பற்றிச் சொல்லுங்க?</b>
பாலாகிட்டே இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவரைப்பருங்க புரடியூசராக மாறிக்கிட்டு இருக்கார். அதையும் தப்புச்சொல்ல முடியாது. நல்ல பெயரை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கலாம். சேரன் இன்னிக்கும் தனித்தன்மையோடு செயல்படுகிறார். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் இதுவே பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா பண்றது செக்ஸ் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. மூடி மறைச்சு, மூடி மறைச்சு என்னத்தைக் கண்டோம். அதை அவர் அழகுணர்ச்சியோடு செய்தால் போதும். ஆனால் அவர் எல்லாத்தையும் ஈஸியாக எடை போடுகிறார். நடிக்கிறதை விட டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக வெளிப்படுவார். நல்ல கமர்ஷியல் படங்கள் செய்வது கஷ்டம். கே.எஸ்.ரவிக்குமார் அந்த விதத்தில் நேர்த்தி. அவரும் ரஜினியும் பிரிஞ்சதது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இரண்டு பேரும் நல்ல காம்பினேஷன். கமர்ஷியல் சினிமாவில் ரவிக்குமார், ரஜினி காம்பினேஷன் அவ்வளவு கச்சிதம். ரஜினியை 100 சதவீதம் புரிந்தவர் ரவிக்குமார். ரஜினிக்கேற்ற மாதிரி நான் கூட கச்சிதமாக படம் பண்ணலை. இதை சாதாரணமாக படம் பார்க்கிற பாமரனாகப் பேசுறேன். டிக்கெட் வாங்கி படம் பார்க்கிற ஆளாகத்தான் பேசுறேன்.
<b>இன்றைய நடிகர்களை யாரைப்பிடிச்சிருக்கு</b>?
கார்த்திக் மாதிரி சிறந்த ரஸீபீமீக்ஷீஜீறீணீஹ் பண்ற நடிகர் கிடையாது. அவர் இப்ப வில்லனாகப் பண்றாராம். சரி, அதில் கூட வித்தியாசம் காட்டுவார். அமிதாப்பச்சன் மாதிரி இன்னும் இருபது வருஷம் கழிச்சு விக்ரம் வருவார்னு தோணும். எல்லா வேடங்களையும் அவரால் செய்ய முடியும். விஜய் வேறு வகை. அவரையும் குழந்தகளுக்கு பிடிக்குது. அவர் ரொம்ப மெனக்கெடாமல் மனசை கொள்ளை அடிச்சிட்டுப் போய்விடுவார். நம்பிக்கை அளிக்கிற இன்னொரு வரவு சூர்யா. எனக்கென்னவோ ஹீரோக்களை விட காமெடியன்களை மெச்சத்தோணும். தமிழ்நாட்டு காமெடியன்களை நாம் கொண்டாடணும். ரொம்ப நாளாக சிரிச்சு கைதட்டி அவங்களை மறந்திட்டு வர்றோம்.
<b>குஷ்புவும், சுகாசினியும் ஏற்படுத்திய பிரச்சினைகள்...</b>
எப்பவும் செய்தியில் அடிபடணும்னு சில பேர் நினைக்கிறாங்க, அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, யாராவது குதர்க்கமாகப் பேசினால், நாம் சகித்துக்கொண்டே இருப்போம். இந்த மாதிரி பப்ளிசிட்டி தேடுகிறவர்களை பற்றி என்ன அபிப்பிராயம் சொல்ல.
<i><b>குமுதம்
நா.கதிர்வேலன், </b></i>
<i><b>தகவல் மூலம்- நிதர்சனம்.கொம்</b></i>
|
|
|
| சிறிலங்கா அரசாங்கம் மீது ஐ.நா. தடை(எச்சரிக்கை) |
|
Posted by: sanjee05 - 02-04-2006, 09:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடருமேயானால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளின் பொருளாதாரத் தடையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் அமைதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடிய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.யேசுதான் விடுத்துள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிக்கந்த பகுதியில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரு கடத்தல் சம்பவங்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை வழிகாட்டுதலில் துணை இராணுவக் குழுவினர் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்டோருக்கான பணிகளை மேற்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை இக்குழுவினர் அடுத்தடுத்து ஒரே இடத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருவோர் அப்பகுதிகளில் தங்களது பணிகளைச் செய்ய மறுத்து வருகின்றனர். ஏற்கனவே போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் நிலைமையை தற்போதைய சம்பவம் மேலும் மோசமடையச் செய்துள்ளது.
வடக்கு - கிழக்கில் அரச படைகளாலும் இராணுவக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்படுகிற கடத்தல்கள், பிடியாணை இல்லாத கைதுகள், தடுத்து வைப்புகள், நிராயுதபாணிகளான மக்கள் மீதான தாக்குதல்கள், சித்திரவதைகள் ஆகியவை யுத்த நிறுத்த மீறல்களே. இவற்றை தடுத்து யுத்த நிறுத்த அமலாக்கப் பேச்சுகள் நடத்துவதற்கான ஏதுவான நிலையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
இலங்கை நிலைமைகள் தொடர்பில் கடந்த சனவரி 18 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில், சட்டத்தின் செயற்பாடுகள் இல்லாத நிலையில் மனித உரிமை மீறல்கள் நடந்தேறுகின்றன. நீதித்துறை மற்றும் காவல்துறையின் செயற்பாடுகள் செயலற்று இருப்பதே இந்த நிலைமைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடருமானால் பல்வேறு நாடுகள் மீது ஐக்கிய நாடுகள் சபையும் இதர நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளும் பொருளாதரத் தடை விதிக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.
ஆகையால் கடத்தப்பட்டோரை பாதுகாப்பாக விடுதலை செய்ய இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை சிறிலங்கா அரசுக்கு உரிய அழுத்தத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
|
|
|
| சுதந்திரமாம் சுதந்திரம்! |
|
Posted by: வர்ணன் - 02-04-2006, 07:58 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<b>எம் இல்லங்கள் மீது - இடி இறங்கும்
ஒரு நாளில்- இலங்கையின் - சுதந்திரம் பற்றி-
ஏன் ஒரு கவலை-உனக்கு?
புறங்கையால் அதை தள்ளிவிடு சோதரா!
உன் கண்களில் ஊசி தைத்துபோனதை
கண்டு சொல்ல இன்னொருவன் வேணுமா?
என்ன நீ?
சொத்து-சுகம்- சொந்தம் பந்தம்-
ஒட்டுமொத்தமாய் கூட்டியள்ளி கொளுத்திவிட்டு வந்து-
கட்டிடகாட்டின் மத்தியில் நின்று- உன் கண்ணீரை பிறர் காணுமுன் துடைக்கிறாயே
- அது பொய்யா-?
சிங்கத்தின் வால் கொண்டு முகம் துடைப்பவன் எவனாயிருந்தாலும் வாழட்டும்-
இரு ஒரு விநாடி- உன் முழங்கையை ஒரு தடவை முகர்ந்து பார்- நண்பா!
சிதறி போன உன் உறவுகளை - துண்டம் துண்டமாய்
பொறுக்கி சென்று கொள்ளி வைத்துவிட்டு வந்தாயே-
ரத்தவாடை இன்னும் உன் நாசி துவாரங்களில் கூடுகட்டி இருக்ககூடும்!
பாம்பின் பட நிழலில் பகுத்தறிவுள்ளவன் தூங்கமாட்டான்!
58 என்ன- 580 ஆண்டுகள் ஆனாலும் என்ன-
சிங்களவன் -வந்து சிறுத்தைகள் வீதியில் நடக்க-
கடவுச்சீட்டு அவனுக்கு -வேறொன்று வேண்டும்-
காலத்தை நாம் வென்றே ஆவோம்- நீ நம்பு -தோழா!</b>
|
|
|
| கருத்து சுதந்திரமும் முகம்மது நபியும் |
|
Posted by: Mathan - 02-04-2006, 07:51 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
முகம்மது நபி கேலிச் சித்திரம்: பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41288000/jpg/_41288660_pakprotest_afp203b.jpg' border='0' alt='user posted image'>
<b>பாகிஸ்தானில் டென்மார்க் கொடி எரிக்கப்படுகிறது</b>
இஸ்லாமிய இறைதூதர் முகம்மதுவின் கேலிச் சித்திரம் வேறு சில பத்திரிகைகளில் மறு பிரசுரம் ஆகியிருக்கும் நிலையில் ஜும்மா தொழுகை நாளான இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென உலகில் பல இடங்களில் முஸ்லிம்களிடம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
முகம்மதுவை சித்தரிப்பதே மத நிந்தனை என்கிறது இஸ்லாம். கேலிச் சித்திரத்திற்காக உலக அளவில் முஸ்லிம்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் நாளாக இன்றைய தினம் அமைய வேண்டுமென வளைகுடாப் பகுதியில் வாழும் முன்னணி இசுலாமிய மதகுரு யூசுஃப் அல் கரதாவி கூறியுள்ளார்.
கார்டூன் முதலில் பிரசுரமான டென்மார்க்கில் பதற்றத்தைத் தணிக்க அரசு முயல்கிறது. முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியதற்காக அரபு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்புக் கேட்டார் டென்மார்க் பிரதமர் அண்டர்ஸ்
BBC தமிழ்
|
|
|
| சிங்களத்து சின்ன குயில் - பூஜா |
|
Posted by: Mathan - 02-04-2006, 06:59 AM - Forum: சினிமா
- Replies (7)
|
 |
'பொறி' வைக்கும் பூஜா
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/pooja12-525.jpg' border='0' alt='user posted image'>
திடீரென்று ஆளைக் காணலையே என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பொறி படம் மூலம் மீண்டும் வருகிறார் பூஜா.
அவ்வப்போது வந்துவிட்டு காணாமல் போகும் நடிகைகளில் ஒருவர் பூஜா. ஜேஜேவில் அறிமுகமாகி அப்படியே மறைந்து போய் பின்னர் உள்ளம் கேட்குமே, அட்டகாசம், ஜித்தன் என திரும்பி வந்தவர் இந்த சிங்களத்து ஆப்பிள். (அப்பா சிங்களம்)
பெங்களூர் மௌண்ட் கார்மெல் கல்லூரியில் படித்த இந்த மங்களூர் பெண் (அம்மா கர்நாடகா) இடையில் இலங்கைக்குப் போய் அஞ்சலிக்கா என்ற சிங்களப் படம் ஒன்றிலும் தலை காட்டினார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பழைய சரக்கு ஒன்றை சாப்பிட்டு வாந்தி, பேதியாகி பெரும் அவஸ்தைக்குள்ளாகி மீண்டார்.
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/pooja-family-450.jpg' border='0' alt='user posted image'>
தமிழில் அவ்வப்போது பூஜா கேப் விட்டதால் நயன்தாரா, அசின், ரேணுகா மேனன் என ஏகப்பட்ட கேரளத்து குஜிலிகள் கூடி நின்று கும்மியடித்து அவரது இடத்தை ஒன்றுவிடாமல் பிடித்துவிட்டார்கள்.
இந் நிலையில் திரும்ப வந்திருக்கும் பூஜா கஷ்டப்பட்டு வாய்ப்புத் தேடி இப்போது பிரஷாந்த்துடன் தகப்பன்சாமி, ஜீவாவுடன் பொறி மற்றும் பரத்துக்கு ஜோடியாக பட்டியல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 படங்களுக்கு பேச்சுவார்த்தை (எல்லாம் துட்டு விவகாரம் தான்) நடக்கிறது.
பட்டியல் படத்தில் மெயின் ஹீரோயினாக பத்மப்ரியா நடிக்கிறார். பொறி மற்றும் தகப்பன் சாமியில் பூஜா தான் மெயின் ஹீரோயின். ஆனால், தகப்பன்சாமியில் நமிதா புகுந்துவிட்டதால் அதை சமாளிக்க, ஜித்தனில் கலக்கிய மாதிரி இதிலும் கவர்ச்சி ரசம் சொட்ட விட்டுள்ளாராம் பூஜா.
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/pooja14-360.jpg' border='0' alt='user posted image'>
திருடா திருடி என்ற மிகப் பெரிய 'சமூகப் படத்தைக்' கொடுத்த சுப்ரமணியம் சிவாவின் இயக்கத்தில் உருவாகிறது பொறி. இதில் பூஜாவுடன் ஜோடி போடப் போவது ஜீவா. ஏற்கனவே ஜீவாவின் அண்ணன் ரமேஷûடன் ஜித்தனில் கலக்கிய பூஜா, இப்போது தம்பியுடன், ஜமாய்க்கப் போகிறார்.
ஹாலிவுட் போய் தயாரிப்பு நுணுக்கம், டைரக்ஷன் நுணுக்கம் (தமிழ் சினிமாவுக்கு இதெல்லாம் தேவையில்லை தான்) என ஏகப்பட்ட விஷயங்களை கரைத்துக் குடித்து விட்டு வந்துள்ள கார்த்தி சம்பந்தம் என்பவர்தான் படத்தைத் தயாரிக்கப் போகிறார்.
திருடா திருடியில் மன்மதா ராசா என்ற சூப்பர் ஹிட் கலக்கல் பாட்டை சேர்த்தது போல, இந்தப் படத்திலும் ஒரு 'கும்மாங்' பாட்டை கோர்க்கப் போகிறார்களாம். இந்தப் பாட்டுக்கும் மன்மதா ராணி சாயாசிங்கை கூப்பிட்டுக் குத்த வைத்து விட சுப்ரமணியம் சிவா திட்டமிட்டுள்ளாராம்.
பிட்டு 1: பூஜாவின் உண்மைப் பெயர் என்ன தெரியுமோ?
கௌதமி உமாசங்கர்.. (ரொம்ப முக்கியம்)
பிட்டு 2: பூஜாவின் சம்பளம் என்ன?
கேட்பது ரூ. 15 லட்சம்
ஒத்துகொள்வது ரூ. 12 லட்சத்துக்கு
தட்ஸ் தமிழ்
|
|
|
| அடுத்த குறி |
|
Posted by: starvijay - 02-04-2006, 05:27 AM - Forum: விளையாட்டு
- Replies (3)
|
 |
பெஷாவர் : "சச்சின் சொந்த சாதனைக்காகத் தான் விளையாடுகிறார். இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதில்லை,'' என்ற பழைய விமர்சனங்கள் தற்போது உண்மையாகி வருகின்றன.
கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. ஸ்கோர் எடுக்க அணி தள்ளாடிக் கொண்டிருந்த போது, பொறுப்பில்லாமலும், அணியின் வெற்றி பற்றி சுத்தமாக கவலை இல்லாமலும் அவுட் ஆகி சென்ற சச்சின், இனியும் ரசிகர்களின் ஆவலை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
டெஸ்ட் தொடரில் படுமோசமாக ஆடிய இவர், இன்னும் ஏன் அணியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்? இளைஞர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவது தானே நல்லது. தாமாக முன்வந்து இதை செய்வாரா?
வயது 32. "டென்னிஸ் எல்போ' காயம் வேறு சாக்குப் போக்கு சொல்ல காரணமாகிறது. ஏகப்பட்ட பிரச்னைகளுடன் விளையாடினால் எப்படி ஸ்கோர் செய்ய முடியும்? ஆசிப் முகமது போன்ற இளம் வேகங்களின் பந்துவீச்சில் போல்டு தானே ஆக முடியும்!
ப்ளீஸ் "கெட்அவுட்': இந்திய கிரிக்கெட்டில் மும்பை வீரர்களுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு. இவர்களை அணியில் இருந்து பிடித்து தள்ளும் வரை தொங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். உதாரணமாக கவாஸ்கரை குறிப்பிடலாம். எத்தனையோ சாதனைகள் படைத்த இவர் கடைசி கட்டத்தில் "பார்ம்' இல்லாமல் தவித்தார். ஆனாலும், தானாக விலகவில்லை. அவரைப் போலத்தான் இப்போது சச்சினும். இதில் வெங்சர்க்கார் மட்டும் விதிவிலக்கு. கவுரவமாக விடைபெற்றார். இவரை பின்பற்றி சச்சினும் ஓய்வை அறிவிக்க வேண்டும். அணியில் இருந்து நீக்குவதற்கு முன்பு நல்ல முடிவை தானாக எடுக்க வேண்டும்.
பழைய வரலாறு: சச்சின் ஏன் விலக வேண்டும்? ஏன் இந்த ஆத்திரம். சச்சின் சூப்பராக ஆடியது எல்லாம் பழைய வரலாறு. கடந்த 10 இன்னிங்சில் இவர் பெரிதாக சாதிக்கவில்லை. அதிலும் பாகிஸ்தான் தொடரில் 3 டெஸ்டில் சேர்த்து எடுத்த ரன்கள் வெறும் 63. இப்படிப்பட்ட ஒருவரை பழைய சாதனைகளுக்காக மட்டும் அணியில் வலுக்கட்டாயமாக வைத்திருக்க வேண் டுமா? அப்படி என்ன அவசியம் வந்தது.
இந்திய அணியில் வேண்டுமானால் இவர் "இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' போல இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவில் ஒருவர் கூட திறமையானவர் இல்லையா? அவரை நீக்கிவிட்டு துணிச்சலாக ஓர் துடிப்பான இளைஞரை ஏன் சேர்க்கக்கூடாது. முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர் டால்மியா ஆதரவாளர் என்ற போது மட்டும் முன்னாள் கேப்டன் கங்குலி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, இவர் மீது ஏன் எடுக்கக்கூடாது? இந்திய அணியில் இவருக்கு மட்டும் நிரந்தர பட்டாவா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
சச்சினை நீக்கி விட்டு, கூடுதலாக ஒரு பவுலருக்கு வாய்ப்பு தரலாமே. பாகிஸ்தானில் ஒரு ரசாக் இருந்ததால்தானே விக்கெட்டுகளை அள்ள முடிந்தது. வெறும் வாய்ச்சவடாலும் சாக்குப் போக்கும் நீடித்தால் இன்னும் எத்தனை உலக கோப்பைகளை நாம் இழக்க வேண்டியிருக்கும்.
பாலாஜி வாய்ப்பு: கராச்சி டெஸ்டில் நமது அணி தோற்பதற்கு பந்துவீச்சு தான் முக்கிய காரணம். 6 பேட்ஸ்மேன், 5 பவுலர்கள் என்ற அடிப்படையில் அணி அமைந்திருந்தால் பிரச்னை வந்திருக்காது. தோனி, பதான் போன்றவர்கள் பேட் செய்யும்போது சச்சின் எதற்கு? இவருக்கு பதிலாக தமிழகத்தின் பாலாஜிக்கு வாய்ப்பு அளித்திருக்கலாமே.
விளம்பரம் முக்கியம்: இளம் வீரர்களுக்குத்தான் நன்றாக விளையாடினால் விளம்பர வருமானம். ஆனால் சச்சின் ஓய்வு பெற்றுவிட்டால் கூட அவர் வருமானத்தில் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை என்ற நிலைக்கு அவர் உயர்ந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு இனி ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அவர் அணியை விட்டு விலகட்டும். வீரர்களுக்கு வேண்டுமானால் இலவச ஆலோசனை தரட்டும், விளம்பரத்தில் நடிக்கட்டும். மீதமுள்ள நேரத்தில் அவர் நடத்தும் அதிபிரமாண்ட ஓட்டலை நிர்வகிக்கட்டும்.
சச்சின் என்றாலே சாதனை என்பது ஒரு காலம். பிரபல "டைம்ஸ்' பத்திரிகையின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் நிலைமை, இப்போது பரிதாபமாக இருக்கிறது. இவரது கிரிக்கெட் வாழ்க்கை "முடிந்து விட்டது' என்பதை சொல்லும் விதமாக "எண்டுல்கர்' என ஓர் ஆங்கில பத்திரிகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
கவுரவ ஓய்வு: சச்சினை பொறுத்தவரை சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி விட்டார். இனி சாதிக்க ஒன்றும் இல்லை என்ற மனநிலையை எட்டி விட்டார். இந்த மனநிலையில் இருக்கும் ஒருவரால் அணி நலனை முக்கியமாக கருத முடியாது. அணி மீது அக்கறை இல்லாத ஒருவர் நமக்கு தேவையா? இதை இந்திய கிரிக்கெட் போர்டு சிந்தித்து துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். அதற்குள் சச்சின் தானாக ஓய்வு பெற்றால்...அது அவருக்கு கவுரவமாக இருக்கும்.
-தினமலர் நாளிதழ்.
<b>சச்சின்தான் அடுத்த குறியா?</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|
|
|
| புலிகள்- உலக நிதி நிறுவனங்கள் சந்திப்பு ஒத்திவைப்பு |
|
Posted by: Mathan - 02-04-2006, 05:10 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
புலிகளுடனான சந்திப்பை உலக நிதி நிறுவனங்கள் ஒத்திப்போட்டன
சுனாமி மற்றும் மோதலுக்கு பின்னரான மீள்கட்டமைப்புப் பணிகள் எதிர்நோக்கும் தடைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமுகமாக, கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனுடன் தாம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன ஒத்திப்போட்டுள்ளன.
அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகியவற்றுடனான கலந்தாலோசனையை அடுத்து கிளிநொச்சிக்கான இந்த சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இந்த மாதம் பிற்பகுதியில் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்த சந்திப்பு மீண்டும் தீர்மானிக்கப்படும் என்று உலக வங்கியின் வெளியுறவு அலுவலகம் இன்று கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஒரு போலியான அங்கீகாரத்தை கொடுக்கும் நோக்கில் சர்வதேச அமைப்புகளுடனான புலிகளின் இந்த சந்திப்பு பிரபலப்படுத்தப்படலாம் என்று கூறி, இலங்கை ஆளும் கட்சியின் ஆதரவு கடும்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த சூழ்நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
சுனாமிக்குப் பின்னரான எந்தவிதமான புனர்வாழ்வுத் திட்டம் குறித்தும் இந்த சர்வதேச அமைப்புகள் ஜனாதிபதியுடன் பேசவேண்டுமே தவிர, அவை புலிகள் அமைப்புடன் பேசக்கூடாது என்று கூறி, இந்த சர்வதேச நிறுவன பிரதிநிதிகளின் வன்னிக்கான விஜயம் தடுத்து நிறுத்தப்படவேண்டுமென்று ஆளுங்கட்சியின் ஆதரவு கடும்போக்கு அமைப்புகள் கோரியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் வெற்றியிலேயே அதிக எதிர்பார்ப்புகள் தங்கியுள்ளதாகவும், பாதகமான விளைவுகள் எதனையும் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் தமது நிறுவனம் எடுக்காது என்றும் உலகவங்கியின் அறிக்கை கூறுகிறது.
ஆயினும் சுனாமி மறுகட்டமைப்பு நடவடிக்கைகளின் அமுலாக்கம் குறித்து ஆராய தமது அமைப்புகளின் தொழில்நுட்பக் குழுக்கள் கிளிநொச்சிக்கு செல்லும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இலங்கையில் வறுமை ஒழிப்புக்கு அங்கு சமாதானம் உருவாவது மிகவும் முக்கியம் என்ற வகையில், இலங்கை சமாதான முயற்சிகளுக்கு தாம் செய்யக்கூடிய பொருத்தமான பங்களிப்பை இந்த நிதிநிறுவனங்கள் வழங்கும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கையில் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனித வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கும், மனித நேய உதவிகளுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி ஆகியன தமது பங்கை செய்யும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
BBC தமிழ்
|
|
|
|