Yarl Forum
சிறிலங்கா அரசாங்கம் மீது ஐ.நா. தடை(எச்சரிக்கை) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிறிலங்கா அரசாங்கம் மீது ஐ.நா. தடை(எச்சரிக்கை) (/showthread.php?tid=1040)



சிறிலங்கா அரசாங்கம் மீது ஐ.நா. தடை(எச்சரிக்கை) - sanjee05 - 02-04-2006

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடருமேயானால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளின் பொருளாதாரத் தடையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் அமைதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடிய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.யேசுதான் விடுத்துள்ள அறிக்கை:

சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிக்கந்த பகுதியில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரு கடத்தல் சம்பவங்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை வழிகாட்டுதலில் துணை இராணுவக் குழுவினர் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்டோருக்கான பணிகளை மேற்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை இக்குழுவினர் அடுத்தடுத்து ஒரே இடத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதையடுத்து மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருவோர் அப்பகுதிகளில் தங்களது பணிகளைச் செய்ய மறுத்து வருகின்றனர். ஏற்கனவே போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் நிலைமையை தற்போதைய சம்பவம் மேலும் மோசமடையச் செய்துள்ளது.

வடக்கு - கிழக்கில் அரச படைகளாலும் இராணுவக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்படுகிற கடத்தல்கள், பிடியாணை இல்லாத கைதுகள், தடுத்து வைப்புகள், நிராயுதபாணிகளான மக்கள் மீதான தாக்குதல்கள், சித்திரவதைகள் ஆகியவை யுத்த நிறுத்த மீறல்களே. இவற்றை தடுத்து யுத்த நிறுத்த அமலாக்கப் பேச்சுகள் நடத்துவதற்கான ஏதுவான நிலையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

இலங்கை நிலைமைகள் தொடர்பில் கடந்த சனவரி 18 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில், சட்டத்தின் செயற்பாடுகள் இல்லாத நிலையில் மனித உரிமை மீறல்கள் நடந்தேறுகின்றன. நீதித்துறை மற்றும் காவல்துறையின் செயற்பாடுகள் செயலற்று இருப்பதே இந்த நிலைமைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடருமானால் பல்வேறு நாடுகள் மீது ஐக்கிய நாடுகள் சபையும் இதர நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளும் பொருளாதரத் தடை விதிக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

ஆகையால் கடத்தப்பட்டோரை பாதுகாப்பாக விடுதலை செய்ய இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை சிறிலங்கா அரசுக்கு உரிய அழுத்தத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


- தூயவன் - 02-04-2006

நல்ல செய்தி!!
இப்போதாவது சிங்ள தேசத்தின் இரட்டை மகமூடித் தன்மையை சர்வதேசம் புரிந்து கொள்கின்றதே!!


- ukraj - 02-04-2006

இந்த செய்தி வெளிவந்த முலத்தினை வெளியிட்டால் அதனை பயன்படுத்தலாம்.


- ukraj - 02-04-2006

இந்த செய்தியை ஏதாவது தமிழ் அமைப்பா வெளியிட்டது...?


- sanjee05 - 02-04-2006

நான் இதை புதினம் தளத்தில் இருந்துதான் எடுத்தேன். ஏன் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறீர்கள்