![]() |
|
அடுத்த குறி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: அடுத்த குறி (/showthread.php?tid=1044) |
அடுத்த குறி - starvijay - 02-04-2006 பெஷாவர் : "சச்சின் சொந்த சாதனைக்காகத் தான் விளையாடுகிறார். இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதில்லை,'' என்ற பழைய விமர்சனங்கள் தற்போது உண்மையாகி வருகின்றன. கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. ஸ்கோர் எடுக்க அணி தள்ளாடிக் கொண்டிருந்த போது, பொறுப்பில்லாமலும், அணியின் வெற்றி பற்றி சுத்தமாக கவலை இல்லாமலும் அவுட் ஆகி சென்ற சச்சின், இனியும் ரசிகர்களின் ஆவலை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. டெஸ்ட் தொடரில் படுமோசமாக ஆடிய இவர், இன்னும் ஏன் அணியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்? இளைஞர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவது தானே நல்லது. தாமாக முன்வந்து இதை செய்வாரா? வயது 32. "டென்னிஸ் எல்போ' காயம் வேறு சாக்குப் போக்கு சொல்ல காரணமாகிறது. ஏகப்பட்ட பிரச்னைகளுடன் விளையாடினால் எப்படி ஸ்கோர் செய்ய முடியும்? ஆசிப் முகமது போன்ற இளம் வேகங்களின் பந்துவீச்சில் போல்டு தானே ஆக முடியும்! ப்ளீஸ் "கெட்அவுட்': இந்திய கிரிக்கெட்டில் மும்பை வீரர்களுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு. இவர்களை அணியில் இருந்து பிடித்து தள்ளும் வரை தொங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். உதாரணமாக கவாஸ்கரை குறிப்பிடலாம். எத்தனையோ சாதனைகள் படைத்த இவர் கடைசி கட்டத்தில் "பார்ம்' இல்லாமல் தவித்தார். ஆனாலும், தானாக விலகவில்லை. அவரைப் போலத்தான் இப்போது சச்சினும். இதில் வெங்சர்க்கார் மட்டும் விதிவிலக்கு. கவுரவமாக விடைபெற்றார். இவரை பின்பற்றி சச்சினும் ஓய்வை அறிவிக்க வேண்டும். அணியில் இருந்து நீக்குவதற்கு முன்பு நல்ல முடிவை தானாக எடுக்க வேண்டும். பழைய வரலாறு: சச்சின் ஏன் விலக வேண்டும்? ஏன் இந்த ஆத்திரம். சச்சின் சூப்பராக ஆடியது எல்லாம் பழைய வரலாறு. கடந்த 10 இன்னிங்சில் இவர் பெரிதாக சாதிக்கவில்லை. அதிலும் பாகிஸ்தான் தொடரில் 3 டெஸ்டில் சேர்த்து எடுத்த ரன்கள் வெறும் 63. இப்படிப்பட்ட ஒருவரை பழைய சாதனைகளுக்காக மட்டும் அணியில் வலுக்கட்டாயமாக வைத்திருக்க வேண் டுமா? அப்படி என்ன அவசியம் வந்தது. இந்திய அணியில் வேண்டுமானால் இவர் "இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' போல இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவில் ஒருவர் கூட திறமையானவர் இல்லையா? அவரை நீக்கிவிட்டு துணிச்சலாக ஓர் துடிப்பான இளைஞரை ஏன் சேர்க்கக்கூடாது. முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர் டால்மியா ஆதரவாளர் என்ற போது மட்டும் முன்னாள் கேப்டன் கங்குலி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, இவர் மீது ஏன் எடுக்கக்கூடாது? இந்திய அணியில் இவருக்கு மட்டும் நிரந்தர பட்டாவா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். சச்சினை நீக்கி விட்டு, கூடுதலாக ஒரு பவுலருக்கு வாய்ப்பு தரலாமே. பாகிஸ்தானில் ஒரு ரசாக் இருந்ததால்தானே விக்கெட்டுகளை அள்ள முடிந்தது. வெறும் வாய்ச்சவடாலும் சாக்குப் போக்கும் நீடித்தால் இன்னும் எத்தனை உலக கோப்பைகளை நாம் இழக்க வேண்டியிருக்கும். பாலாஜி வாய்ப்பு: கராச்சி டெஸ்டில் நமது அணி தோற்பதற்கு பந்துவீச்சு தான் முக்கிய காரணம். 6 பேட்ஸ்மேன், 5 பவுலர்கள் என்ற அடிப்படையில் அணி அமைந்திருந்தால் பிரச்னை வந்திருக்காது. தோனி, பதான் போன்றவர்கள் பேட் செய்யும்போது சச்சின் எதற்கு? இவருக்கு பதிலாக தமிழகத்தின் பாலாஜிக்கு வாய்ப்பு அளித்திருக்கலாமே. விளம்பரம் முக்கியம்: இளம் வீரர்களுக்குத்தான் நன்றாக விளையாடினால் விளம்பர வருமானம். ஆனால் சச்சின் ஓய்வு பெற்றுவிட்டால் கூட அவர் வருமானத்தில் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை என்ற நிலைக்கு அவர் உயர்ந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு இனி ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அவர் அணியை விட்டு விலகட்டும். வீரர்களுக்கு வேண்டுமானால் இலவச ஆலோசனை தரட்டும், விளம்பரத்தில் நடிக்கட்டும். மீதமுள்ள நேரத்தில் அவர் நடத்தும் அதிபிரமாண்ட ஓட்டலை நிர்வகிக்கட்டும். சச்சின் என்றாலே சாதனை என்பது ஒரு காலம். பிரபல "டைம்ஸ்' பத்திரிகையின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் நிலைமை, இப்போது பரிதாபமாக இருக்கிறது. இவரது கிரிக்கெட் வாழ்க்கை "முடிந்து விட்டது' என்பதை சொல்லும் விதமாக "எண்டுல்கர்' என ஓர் ஆங்கில பத்திரிகை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கவுரவ ஓய்வு: சச்சினை பொறுத்தவரை சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி விட்டார். இனி சாதிக்க ஒன்றும் இல்லை என்ற மனநிலையை எட்டி விட்டார். இந்த மனநிலையில் இருக்கும் ஒருவரால் அணி நலனை முக்கியமாக கருத முடியாது. அணி மீது அக்கறை இல்லாத ஒருவர் நமக்கு தேவையா? இதை இந்திய கிரிக்கெட் போர்டு சிந்தித்து துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். அதற்குள் சச்சின் தானாக ஓய்வு பெற்றால்...அது அவருக்கு கவுரவமாக இருக்கும். -தினமலர் நாளிதழ். <b>சச்சின்தான் அடுத்த குறியா?</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- starvijay - 02-06-2006 <img src='http://img80.imageshack.us/img80/892/fpn0eq.jpg' border='0' alt='user posted image'> <b>பெஷாவர், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சச்சின் அபாரமாக விளையாடி சதமடித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.</b> -தினமலர் நாளிதழ் அப்பாடா.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-06-2006 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41299000/jpg/_41299764_buttmalik.jpg' border='0' alt='user posted image'> பாகிஸ்தான் அணியின் சார்பிலும் Butt (101) சதமடித்துள்ளார். அத்தோடு முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியும் பெற்றுள்ளது. இந்தியா நிர்ணயித்த 328 என்ற கடுமையான இலக்கை..பாகிஸ்தான் வீரர்கள் திறமையாக விளையாடி அடைந்துள்ளனர்..! <b>பாகிஸ்தான் வீரர்களுக்கும் சதம் அடித்த சச்சினுக்கும் பாராட்டுக்கள்..!</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 02-06-2006 இந்தியாவில் இதுதான் பிரச்சினை,, தமிழக வீரர்களில் பல வீரர்கள் நல்ல போர்மில் இருக்கிறார்கள், இந்தியாவில் நடைபெறும் ரஞ்சித் கோப்பை போட்டிகளை கவனித்தால் தெரியும், தமிழக அணி ரெஸ்ற் & ஒரு நாள் போட்டியில் நன்றாக விளையாடுவார்கள், டெல்லி அணிக்கு சவாலக விளையாடக்கூடியவர்கள், ஆனால் இந்தியாவின் அரசியல் கிறிக்கட்டுக்குள் நன்றாக காலூன்றீவிட்டதால், மும்பை, டெல்லி வீரர்கள் காட்டப்படும் அக்கறை தமிழக வீரர்களின் மேல் காட்டப்படுவது குறைவு, :? :roll: இந்திய அணியில் விளையாடும் வீரர் சில நேரம் நன்றாக விளையாடமல் விட்டால் உடனே சொல்வார்கள், உள்ளூர்போட்டிகளில் விளையாடி தங்களின் திறமையை காண்பிக்க வேண்டும், அப்படி இருக்கையில் தமிழக வீரர்கள் பலர் ரஞ்சித் கோப்பை உட்பட பல போட்டிகளில் நன்றாக விளையாடும் பொழுது இவர்களை புறக்கணிப்பது ஏன்?? :roll: |