![]() |
|
கருத்து சுதந்திரமும் முகம்மது நபியும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கருத்து சுதந்திரமும் முகம்மது நபியும் (/showthread.php?tid=1042) |
கருத்து சுதந்திரமும் முகம்மது நபியும் - Mathan - 02-04-2006 முகம்மது நபி கேலிச் சித்திரம்: பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41288000/jpg/_41288660_pakprotest_afp203b.jpg' border='0' alt='user posted image'> <b>பாகிஸ்தானில் டென்மார்க் கொடி எரிக்கப்படுகிறது</b> இஸ்லாமிய இறைதூதர் முகம்மதுவின் கேலிச் சித்திரம் வேறு சில பத்திரிகைகளில் மறு பிரசுரம் ஆகியிருக்கும் நிலையில் ஜும்மா தொழுகை நாளான இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென உலகில் பல இடங்களில் முஸ்லிம்களிடம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முகம்மதுவை சித்தரிப்பதே மத நிந்தனை என்கிறது இஸ்லாம். கேலிச் சித்திரத்திற்காக உலக அளவில் முஸ்லிம்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் நாளாக இன்றைய தினம் அமைய வேண்டுமென வளைகுடாப் பகுதியில் வாழும் முன்னணி இசுலாமிய மதகுரு யூசுஃப் அல் கரதாவி கூறியுள்ளார். கார்டூன் முதலில் பிரசுரமான டென்மார்க்கில் பதற்றத்தைத் தணிக்க அரசு முயல்கிறது. முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியதற்காக அரபு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்புக் கேட்டார் டென்மார்க் பிரதமர் அண்டர்ஸ் BBC தமிழ் - Mathan - 02-04-2006 கருத்துச் சுதந்திரமும் காழ்ப்புணர்வும் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை ஒன்றில் முஹம்மது நபி அவர்களை கேலிச் சித்திரம் வரைந்திருந்தனர். அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதற்கு வருத்தம் தெரிவிக்கும்படி கோரினர். அந்த பத்திரிக்கை வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டது. அக்டோபர் 20ஆம் நாள் டென்மார்க்கில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்து புகார் செய்தனர். இதனாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஜனவரி 10ஆம் நாள் நார்வே பத்திரிக்கையொன்று அந்த கேலிச் சித்திரங்களை மறுபதிப்பு செய்தது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட சவூதி அரசு ஜனவரி 26ஆம் நாள் டென்மார்க் நாட்டுக்கான தன்னுடைய தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து டென்மார்க்கின் பொருள்களை விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்கின்றனர். இதனை அறிந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகக் கழக தலைவர் பீட்டர் மண்டெல்சன் 'நார்வே-டென்மார்க் பொருட்களை புறக்கணிப்பது, ஐரோப்பிய யூனியனின் பொருட்களை புறக்கணிப்பதற்குச் சமமானது; சவூதி அரசாங்கம் இப்புறக்கணிப்பை கைவிடவில்லையென்றால், உலக வர்த்தக சபையில் முறையிட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். ஜனவரி 30ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய சிலர் பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகத்திற்கு சென்று, மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரினர். ஜனவரி 31ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை மன்னிப்புக் கோரியது. பிப்ரவரி 1ஆம் நாள் பிரான்சு, ஜெர்மன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டுப் பத்திரிக்கைகள் சித்திரத்தை மறுபதிப்புச் செய்தன. இதன் பிறகே பிப்ரவரி 3ஆம் நாள் இந்தோனேசியா, இராக், பாலஸ்தீன், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும், இந்தோனேசியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் தாக்கப்படுகிறது. (இதை நான் ஆதரிப்பதாகக் கருதவேண்டாம்). நன்றி: பி.பி.சி. அரப் நியூஸ் இதைவிட சாத்வீகமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா எனத் தெரியவில்லை. தங்களுக்குப் பிடித்த கருத்தைச் சொல்ல தங்களுக்கு உரிமை உண்டு என வாதிடுவோர், தங்களுக்குப் பிடிக்காதவர்களின் பொருள்களின் பொருள்களை வாங்க மாட்டோம் என்ற கருத்தை ஏற்க மறுப்பது ஏனோ? இது குறித்து வலைப்பூக்களில் பதியப்பட்ட பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலிருந்தும் பல காழ்ப்புணர்வுகள். நிலா கூறும்போது.... //கார்டூன்கள் வெளியிட்டது தவறு என்று வைத்துக் கொண்டால் கூட இவ்வளவு களேபரம் தேவையா என்று தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க எவ்வளவோ அமைதியான முறைகள் இருக்கின்றனவே. ஏன் மீண்டும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டும்? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று நிரூபிக்க முயலலாமே?// நிலா அவர்களே மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளை வரிசையாகப் படித்துப் பார்க்கக் கோருகிறேன். இதுகுறித்து டோண்டு அவர்கள்.... //ஹுஸேனை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ந்டத்தியபோது அதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக சித்தரித்ததும் பல இசுலாமியர்கள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்கள் செய்ததே.// என் மதத்திற்கு அப்பொழுது நேர்ந்த கொடுமை இப்பொழுது உன் மதத்திற்கு நேர்ந்துள்ளது என்று கூறுகிறார். அவருக்கு நம்முடைய கேள்வி.... அந்த ஓவியம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாக சித்தரித்த இஸ்லாமிய அறிஞர் ஒருவரையாவாது அவரால் அடையாளம் காட்ட முடியுமா? மாறாக அல்லாஹ் குர்ஆனில், மற்றவர்கள் தெய்வமென வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள் என்று கூறியுள்ளான். //கராத்தே ஹுஸைனீ பத்திரிகையாளர்களை அழைத்து அந்த நிர்வாண படத்திற்கு அழகாக உடையை எழுதிப் பொருத்தினார்.// என்று கூறும் டோண்டு அவர்கள் இந்துக்கள் அந்தப் படத்திற்கு ஆடை அணிவிக்குமுன்பு ஆடை அணிவித்த கராத்தே ஹுசைனி அவர்கள் முஸ்லிம் என்பதை அறியாதவரா? ஏன் இந்த காழ்ப்புணர்வு? பிற்காலங்களில் தோன்றிய தேசியமும், தேசியத்தின் அடையாளங்களும் மதிக்கப்பட வேண்டியவை என்று ஒத்துக் கொள்கிறோம். புஷ் தன்னுடைய நாய்க்குட்டிக்கு இந்தியா என்று பெயர் வைத்தால் கொதித்தெழுகிறோம். நாமே உருவாக்கிய நம்முடைய தேசியக் கொடி எரிக்கப்பட்டால் உணர்ச்சி வசப்படுகிறோம். அவனுடைய தனிப்பட்ட உரிமை என்று எவருமே, எந்நாட்டவருமே கருதுவதில்லை. ஆனால் தேசம் கடந்து, மொழி கடந்து உலக முஸ்லிம்களால் உயிரினும் மேலானவராகக் கருதப்படும் முஹம்மது நபியவர்களைக் கேவலம் செய்தால் பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் கூறினால் இது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறு என்னவாக இருக்கும்? நன்றி அழகப்பன் - ஜெயதேவன் - 02-04-2006 "அல்லாக்கு ரோகரா".... மதமொன்று மதம் பிடித்து அலைகின்றது!! மேற்கத்தேய வல்லாதிக்கவாதிகளால் ஆப்கானிஸ்தானில், தம் பிராந்திய, வல்லாதிக்க தேவைகளுக்காக மதத்திற்கு மதமேற்றப்பட்டது!!! தம் தேவைகளுக்காக தொடக்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வே இன்று அவர்களுக்கே நஞ்சாகியுள்ளது!!! அன்று சல்மான் ருஸ்டியினால் எழுதப்பட்ட நாவலுக்கு மீண்டும் மதம்பிடித்த மதத்தை உரிய முறையில் கட்டுப்படுதாதனாலேயே, இந்த மதவெறி, இன்று கட்டுக்கடங்காமல் உலகையே ஆட்டிப்படைக்கிறது!! இன்று மீண்டும் கிழர்ந்துள்ள மதவெறியை, மேற்குலகம் உரிய முறையில் கட்டுப்படுத்தாது, அம்மதவெறிக்கு மீண்டும் அடிபணிவார்களேயாயின், "மதத்தின் பெயரால்" பயங்கரவாதம் மேற்கின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல உலக பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும்!! - Mathan - 02-06-2006 லெபனானிலுள்ள டென்மார்க் தூதரகம் தாக்கப்பட்டது- முகம்மது நபி கேலிச் சித்திர எதிரொலி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் டென்மார்க் தூதரகத்தை முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கி, கட்டிடத்துக்கு தீவைத்துள்ளனர். புகையும் தீச்சுவாலைகளும் ஜன்னல்கள் வழியாக பீறிட கட்டிடம் சூறையாடப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த சமயத்தில் கட்டிடத்துக்குள் தூதரக ஊழியர்கள் யாரும் இருந்திருக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் பொலிசாரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானிலிருந்து டென்மார்க் பிரஜைகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென டென்மார்க் அரசு கோரியுள்ளது. ஆரம்பத்தில் டென்மார்க் செய்தித்தாள் ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட இறைதூதர் முகம்மதுவின் கேலிச்சித்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல முஸ்லிம் நாடுகளில் நடந்துவரும் ஆர்ப்பாட்டங்களில் கடைசியாக நடந்திருப்பது இது. ஆப்கானிஸ்தானிலும் பல இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். BBC தமிழ் - தூயவன் - 02-06-2006 எகிப்தில் கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கின்றது. இது கூட அக் காட்டூனுக்கான எதிரொலியோ தெரியவில்லை |