Aggregator

2023 இல் புதிய உச்சத்தை தொட்ட இராணுவ ஆயுதங்கள் விற்பனை

3 months 2 weeks ago

கடந்த 2023 இல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளது.

US-4.jpg

அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் இராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையை தவிர, அமெரிக்க அரசே நேரடியாக விற்பனை செய்த $81 பில்லியன் வணிகமும் இதில் அடங்கும்.

இப்பட்டியலில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நோர்வே ($1 ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), அவுஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகியவை அமெரிக்காவிற்கு சாதகமான ஆயுத விற்பனை வர்த்தகத்திற்கு உதவும் நாடுகள் ஆகும்.

இது குறித்து அமெரிக்க அரசு, “பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என தெரிவித்தது.

ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

அமெரிக்க அரசிடம் இருந்து இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் இராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாடிக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம். ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/289891

உலகில் மழையே பெய்யாத கிராமம்!

3 months 2 weeks ago
இந்த உலகம் பல அதிசயங்களை தனக்குள் பூட்டி வைத்திருக்கிறது. ஒரு நாட்டை போல மற்றொரு நாடு இல்லை, ஒரு நிலப்பரப்பை போல மற்றொரு நிலப்பரப்பு இல்லை. அபூர்வமான விஷயங்கள் இன்னும் மனித அறிவை பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில், `நீரின்றி அமையாது உலகு’ எனக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், மழையின்றி ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமத்தைப் போல, மழையே பெய்யாத ஒரு கிராமம் இருக்கிறது. அப்படியென்றால் அது பாலைவனமாக இருக்கும் என நினைக்கலாம். அதுதான் இல்லை, இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுடாய்ப் என்ற கிராமம் உள்ளது. மலைப்பகுதியான இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து சுமார் 3,200 மீற்றர் உயரத்தில் உள்ளது. ஒரு சிவப்பு மணற்கற்களால் ஆன மேடையில் இந்த கிராமம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் இரண்டு பள்ளிகள், ஹதிமி மசூதி மற்றும் மன்சூர் அல் யேமன் மசூதி என இரண்டு மசூதிகள் உள்ளன. அரபியில் கஹ்ஃப் உன்-நயீம் என்று அறியப்படும் `ஆசீர்வாத குகை’ ஹுடாய்ப் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலையின் உச்சியில் பல அழகான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மலை உச்சியில் நின்று பார்க்கும் காட்சியைக் காணவே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கிராமத்தில் மழை பெய்யாததற்கு காரணம், இந்த கிராமம் மேகங்களுக்கும் மேல் அமைத்துள்ளது. பொதுவாகவே மேகங்கள் மழையை உருவாக்கும். மேகங்களுக்குக் கீழே மழை பொழியும். மேகங்களுக்கு மேல் கிராமம் அமைந்துள்ளதால் மழையே பெய்யாத சூழல் இங்கு நிலவுகிறது. மழை இல்லாததால் இந்த பகுதி வறட்சியுடன் காணப்படுகிறது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/289871

அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை

3 months 2 weeks ago
30 JAN, 2024 | 01:25 PM அரச இரகசியங்களை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. சிபெர்வழக்கு என அழைக்கப்படும் விவகாரம் தொடர்பிலேயே பாக்கிஸ்தான் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. பாக்கிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூட் குரேசியும் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கும் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை | Virakesari.lk

80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர்

3 months 2 weeks ago
  • மாயகிருஷ்ணன் க
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.

தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

80 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் மற்ற பிரிவு மக்கள் தங்களுக்கென வேறொரு கோவிலை கட்டத் தொடங்கியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்ற பிரிவினர் எதிர்ப்பு

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களையும் திருவிழா நடத்த ஒரு நாள் அனுமதிக்க வேண்டும் மற்றும் கோவில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பிற சமூக மக்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலின் உள்ளே செல்ல தங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்த மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை என தெரியவந்தது.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

பட்டியலினத்தவர்கள் கோவிலுக்குள் சென்றதற்கு பிற சமூகத்தினர் தனியாக ஒரு கோவிலைக் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பட்டியலின மக்கள் கோவிலுக்கு உள்ளே செல்லலாம் என்றும் கோவில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை துறையினர் கூறினர்.

பிற சமூக மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்த கிராமத்தை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

பட்டியலின மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே அவர்களை அனுமதிக்க கூடாது, இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவில் கதவை திறந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

பட்டியலினத்தவர்கள் முத்துமாரியம்மன் கோவிலுக்குள் சென்றதையடுத்து, அந்த கோவிலில் வழிபாடு செய்வதைக் கைவிட்டனர்.

"பட்டியலினத்தவர் நுழைந்த கோவில் எங்களுக்கு வேண்டாம்"

இந்நிலையில் பல மாதங்களாக பிற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதை கைவிட்டனர். மேலும் அவர்கள் ஒன்று கூடி பேசி அந்த கோவில் நமக்கு வேண்டாம் என்றும் புதிதாக ஒரு கோவிலை கட்டி வழிபாடு செய்வோம் என்றும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத, பிற சமூகத்தைச் சேர்ந்த நபர் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசினார்.

“எங்கள் கிராமத்தில் பலதரப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்களும் பிரச்னை செய்ய போவதில்லை. தேவையில்லாமல் எங்களுக்கு கோவில் சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் பட்டியிலினத்தவர் என்று தனியாக இடம் ஒதுக்கி கோவில் கட்டித் தந்தோம். அதில் அவர்கள் தொடர்ந்து வழிபாடும் நடத்தி வந்தனர்."

"அப்படி இருக்கும் போது, தேவையில்லாமல் எங்கள் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு வழிபட வந்தது வருத்தத்தை அளித்தது. எனவே பிரச்னைக்குரிய அந்த கோவில் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டோம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த கோவிலை அனைவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்," என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், பிற சமூகத்தினர் இணைந்து தங்கள் சொந்த பணத்தை வைத்து இரண்டு சென்ட் நிலத்தை வாங்கி அதில் கோவில் கட்டவுள்ளனர்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை

இதுகுறித்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர், பட்டியலினத்தவர்கள் அந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ததால் ஊர் பொதுமக்கள் யாரும் பட்டியலினத்தவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவித்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "சாமி எல்லாவற்றுக்கும் பொதுவானது தானே? நாங்கள் அப்படித்தான் நினைத்து கும்பிட்டோம். இந்நிலையில் அவர்கள் தனியாக கோவில் கட்ட முடிவெடுத்தது அவர்கள் விருப்பம். இதில் நான் என்ன சொல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான முத்தையன், ராமர் கோயிலுக்கு அனைத்து சமூகத்தினரும் செல்லும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

"தனியாக இடம் வாங்கி அதில் புதிதாக கோவில் கட்டினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஏற்கனவே வழிபாடு செய்து கொண்டிருந்த கோவிலை தவிர்த்து அது வேண்டாம் என்று கூறி ஒதுங்கி வேறு ஒரு கோவிலை கட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது," என்று கூறிய அவர், இதை “இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறோம்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தற்பொழுது கூட அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் விசேஷத்திற்கு அனைத்து சமூக மக்களுமே சென்றார்கள். இது எல்லோருக்குமே தெரியும். இங்கு எல்லோரும் இணக்கத்துடன் வாழ வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழ, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்," என்றார்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தையன், ராமர் கோயிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் அனுமதிக்கப்படும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கோயில் வழிபாடு குறித்த விதிகளை விளக்கினார். யார் ஒருவரும் தனியாக கோயில் கட்டிக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது என்றாலும், சாதி அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது சட்டப்படி குற்றம் என்று அவர் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பட்டி இரண்டு வகை கோவில்கள் உள்ளன‌. ஒன்று பொது கோவில், மற்றொன்று தனிநபர் கோவில். இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தனி நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இணைந்து தனியாக கோவில் கட்டி வழிபடுவதை யாரும் தடுக்க முடியாது. தனியார் கோவில்களான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், ஸ்ரீபுரம் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் பொதுஜன வழிபாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு அவர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்," என்று விளக்கினார்.

கோயில் வழிபாடு- சாதி பிரச்னை
படக்குறிப்பு,

சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு என மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கூறினார்.

"பொதுக் கோவில்கள் எனப்படும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அனைவரும் வந்து வழிபாடு செய்யலாம். அதாவது உண்டியல் வைத்து நிதி சேர்த்து அதை கோவில் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தினால் அது அனைவரும் வந்து வழிபடும் கோவில் என்று எளிதாக புரியும்படி கூறலாம்."

"ஆனால் உண்டியல் இல்லாமல் தனி நபர்கள் கட்டி அவர்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே வந்து வழிபாடு செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனினும், சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு. ஆனால் எங்களுக்கான கோவிலை நாங்கள் வழிபாடு செய்வதற்காக மட்டும் கட்டிப் பராமரித்து வைத்துக்கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் ஒரு கோவிலைக் கட்டினாலும், அதை யாராலும் தடுக்க முடியாது." என்றார்.

திருவண்ணாமலை: 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர் - BBC News தமிழ்

80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர்

3 months 2 weeks ago
மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 80 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் மற்ற பிரிவு மக்கள் தங்களுக்கென வேறொரு கோவிலை கட்டத் தொடங்கியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்ற பிரிவினர் எதிர்ப்பு கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களையும் திருவிழா நடத்த ஒரு நாள் அனுமதிக்க வேண்டும் மற்றும் கோவில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் பிற சமூக மக்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலின் உள்ளே செல்ல தங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை என தெரியவந்தது. 30 ஜனவரி 2024 ஹாஜி மேலாங் - மும்பையில் இந்து, முஸ்லிம் இரு தரப்பும் வழிபடும் இந்த தர்காவால் என்ன சர்ச்சை?6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பட்டியலினத்தவர்கள் கோவிலுக்குள் சென்றதற்கு பிற சமூகத்தினர் தனியாக ஒரு கோவிலைக் கட்ட முடிவெடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பட்டியலின மக்கள் கோவிலுக்கு உள்ளே செல்லலாம் என்றும் கோவில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை துறையினர் கூறினர். பிற சமூக மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்த கிராமத்தை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பட்டியலின மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே அவர்களை அனுமதிக்க கூடாது, இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவில் கதவை திறந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். 29 ஜனவரி 2024 7,600 பேர் பயணிக்க கூடிய உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அறிமுகம் - வசதிகள் என்ன?29 ஜனவரி 2024 படக்குறிப்பு, பட்டியலினத்தவர்கள் முத்துமாரியம்மன் கோவிலுக்குள் சென்றதையடுத்து, அந்த கோவிலில் வழிபாடு செய்வதைக் கைவிட்டனர். "பட்டியலினத்தவர் நுழைந்த கோவில் எங்களுக்கு வேண்டாம்" இந்நிலையில் பல மாதங்களாக பிற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதை கைவிட்டனர். மேலும் அவர்கள் ஒன்று கூடி பேசி அந்த கோவில் நமக்கு வேண்டாம் என்றும் புதிதாக ஒரு கோவிலை கட்டி வழிபாடு செய்வோம் என்றும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத, பிற சமூகத்தைச் சேர்ந்த நபர் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசினார். “எங்கள் கிராமத்தில் பலதரப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்களும் பிரச்னை செய்ய போவதில்லை. தேவையில்லாமல் எங்களுக்கு கோவில் சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் பட்டியிலினத்தவர் என்று தனியாக இடம் ஒதுக்கி கோவில் கட்டித் தந்தோம். அதில் அவர்கள் தொடர்ந்து வழிபாடும் நடத்தி வந்தனர்." "அப்படி இருக்கும் போது, தேவையில்லாமல் எங்கள் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு வழிபட வந்தது வருத்தத்தை அளித்தது. எனவே பிரச்னைக்குரிய அந்த கோவில் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டோம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த கோவிலை அனைவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்," என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், பிற சமூகத்தினர் இணைந்து தங்கள் சொந்த பணத்தை வைத்து இரண்டு சென்ட் நிலத்தை வாங்கி அதில் கோவில் கட்டவுள்ளனர். 29 ஜனவரி 2024 உடலில் நாள்பட்ட அரிப்பு ஏன் ஏற்படுகிறது? எப்படி குணப்படுத்துவது?29 ஜனவரி 2024 இதுகுறித்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர், பட்டியலினத்தவர்கள் அந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ததால் ஊர் பொதுமக்கள் யாரும் பட்டியலினத்தவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவித்தார். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "சாமி எல்லாவற்றுக்கும் பொதுவானது தானே? நாங்கள் அப்படித்தான் நினைத்து கும்பிட்டோம். இந்நிலையில் அவர்கள் தனியாக கோவில் கட்ட முடிவெடுத்தது அவர்கள் விருப்பம். இதில் நான் என்ன சொல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பினார். வழக்கறிஞரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான முத்தையன், ராமர் கோயிலுக்கு அனைத்து சமூகத்தினரும் செல்லும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். "தனியாக இடம் வாங்கி அதில் புதிதாக கோவில் கட்டினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஏற்கனவே வழிபாடு செய்து கொண்டிருந்த கோவிலை தவிர்த்து அது வேண்டாம் என்று கூறி ஒதுங்கி வேறு ஒரு கோவிலை கட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது," என்று கூறிய அவர், இதை “இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறோம்,” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "தற்பொழுது கூட அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் விசேஷத்திற்கு அனைத்து சமூக மக்களுமே சென்றார்கள். இது எல்லோருக்குமே தெரியும். இங்கு எல்லோரும் இணக்கத்துடன் வாழ வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், சமூக நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழ, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்," என்றார். 28 ஜனவரி 2024 மருத்துவ காப்பீடு: இனி ஒரு ரூபாய் செலவின்றி நாடு முழுக்க சிகிச்சை பெறலாம் - புதிய விதிகள்27 ஜனவரி 2024 படக்குறிப்பு, சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தையன், ராமர் கோயிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் அனுமதிக்கப்படும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கோயில் வழிபாடு குறித்த விதிகளை விளக்கினார். யார் ஒருவரும் தனியாக கோயில் கட்டிக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது என்றாலும், சாதி அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது சட்டப்படி குற்றம் என்று அவர் கூறினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பட்டி இரண்டு வகை கோவில்கள் உள்ளன‌. ஒன்று பொது கோவில், மற்றொன்று தனிநபர் கோவில். இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தனி நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இணைந்து தனியாக கோவில் கட்டி வழிபடுவதை யாரும் தடுக்க முடியாது. தனியார் கோவில்களான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், ஸ்ரீபுரம் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் பொதுஜன வழிபாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு அவர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்," என்று விளக்கினார். படக்குறிப்பு, சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு என மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கூறினார். "பொதுக் கோவில்கள் எனப்படும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அனைவரும் வந்து வழிபாடு செய்யலாம். அதாவது உண்டியல் வைத்து நிதி சேர்த்து அதை கோவில் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தினால் அது அனைவரும் வந்து வழிபடும் கோவில் என்று எளிதாக புரியும்படி கூறலாம்." "ஆனால் உண்டியல் இல்லாமல் தனி நபர்கள் கட்டி அவர்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே வந்து வழிபாடு செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனினும், சாதி, மொழி அடிப்படையில் யாரையும் விலக்கி வைப்பது தவறு. ஆனால் எங்களுக்கான கோவிலை நாங்கள் வழிபாடு செய்வதற்காக மட்டும் கட்டிப் பராமரித்து வைத்துக்கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் ஒரு கோவிலைக் கட்டினாலும், அதை யாராலும் தடுக்க முடியாது." என்றார். திருவண்ணாமலை: 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்; புதிய கோவிலை கட்டும் பிற சமூகத்தினர் - BBC News தமிழ்

மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தி ஈலோன் மஸ்க் நிறுவனம் சாதனை - எவ்வாறு செயல்படும்?

3 months 2 weeks ago
மனித மூளையில் வெற்றிகரமாக சிப் பொருத்திய மஸ்கின் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீஸ்வரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனத்தை நிறுவியுள்ளார். மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது நியூராலிங்க். கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். மேற்கொண்டு எந்த தகவலையும் நியூராலிங்க் வழங்கவில்லை. நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகள் அசைவற்று போய் விடும். அந்நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் மூளை, உடல் உறுப்புகளுக்கு எண்ணங்கள் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பும் பரிமாற்றமும் நின்று விடும். அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் மூளையில் மின்னணு சிப் பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயற்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/289874

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
மருத்துவ பணியாளர்கள் போல ஜெனின் மருத்துவமனைக்குள் நுழைந்து இஸ்ரேலிய படையினர் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 30 JAN, 2024 | 04:52 PM மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர். மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன. தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன. ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார். மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார். சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175175

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

3 months 2 weeks ago
ஜோர்தான் தாக்குதலிற்கு பின்னர் கடும் அழுத்தத்தில் பைடன் - பதில் தாக்குதல் மிகவும் உக்கிரமானதாக காணப்படும் - சிஎன்என் Published By: RAJEEBAN 30 JAN, 2024 | 11:23 AM ஜோர்தானில் உள்ள அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கான அமெரிக்காவின் பதிலடி முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு உக்கிரமானதாகயிருக்கலாம் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. ஈராக் சிரியா மீது அமெரிக்கா முன்னர் மேற்கொண்ட தாக்குதலை விட இம்முறை இடம்பெறவுள்ள தாக்குதல் உக்கிரமானதாகயிருக்கலாம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும் பென்டகனும் வெள்ளை மாளிகையும் இதுவரை தங்கள் திட்டங்களை வெளிவிடவில்லை இது குறித்து எச்சரிக்கையுடன் உள்ளன எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஜோபைடன் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்காக பதில் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்ற கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார் - ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு குழுக்கள் 160 தடவைகளிற்கு மேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. மிகத்தெளிவான செய்தியை தெரிவிப்பதற்காக ஈரானிற்குள் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் அதிகளவு அமெரிக்க படையினரை கொலை செய்த ஆளி;ல்லா விமானதாக்குதலிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதே ஜோ பைடன் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறும்வேளையில் அபேகேட்டில் இடம்பெற்ற தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் கொல்லப்பட்ட பின்னர் அதிக அமெரிக்கபடையினர் தற்போதைய தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175126

மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தி ஈலோன் மஸ்க் நிறுவனம் சாதனை - எவ்வாறு செயல்படும்?

3 months 2 weeks ago
பேட்ரிக் ஜாக்சன் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார். மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது. பல போட்டி நிறுவனங்கள் ஏற்கனவே இதேபோன்ற சாதனங்களை ஆய்வு செய்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மனித மூளையில் சிப் செயல்படுவது எப்படி? நியூராலிங்க் மற்றும் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகிய இரண்டையும் பிபிசி நியூஸ் அணுகி கருத்து கேட்டது. மனிதர்களின் உடலில் இதுபோன்ற சிப்பைப் பொருத்திப் பரிசோதிக்க மஸ்க்கின் நிறுவனத்திற்கு மே மாதம்அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதுபோன்ற அனுமதியைப் பெறுவதற்காக அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கருதப்பட்டது. ஆறு ஆண்டு கால ஆய்வின் தொடக்கத்திற்கு இது ஒரு அனுமதியை அளித்தது என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து மனித முடியை விட மெல்லியதாக 64 நெகிழ்வான நூல்களை அறுவை சிகிச்சை மூலம் "இயக்க எண்ணத்தை" கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியில் வைக்க ஒரு ரோபோவை நியூராலிங்க் பயன்படுத்தியது. இந்த நூல்கள் அதன் பரிசோதனை நடவடிக்கைக்கு உதவுகின்றன. இணைப்பு ஏதும் இல்லாமல் (வயர்லெஸ்) சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் மூளையில் உருவாகும் சமிக்ஞைகளை வயர்லெஸ் முறையில் பதிவுசெய்து, அவை டீகோட் செய்யும் கணினி அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 'டெலிபதி' சாதனம் எவ்வாறு பயன்படும்? முன்பு ட்விட்டர் என்று அறியப்பட்ட தனக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ‘X’ இல் பதிவிட்ட மஸ்க், நியூராலிங்கின் இந்த முதல் தயாரிப்பு ‘டெலிபதி’ என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் . "உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் மூலம் எந்தச் சாதனத்தையும், சிந்தனையின் மூலம் கட்டுப்படுத்தவும் இந்த டெலிபதி உதவும்," என்று அவர் கூறினார். "தங்கள் கை, கால்களைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு அவர்களது பிரச்னையைக் குறைக்க இந்த டெலிபதி தொடக்கத்தில் பயன்படுத்தப்படும்," என்று அவர் விளக்கினார். மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட மறைந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு அதிவேக தட்டச்சு செய்பவரை விட வேகமாக தமது எண்ணங்களை பிறருட்ன் பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நியூராலிங்க்கின் குறிக்கோள்," என்றார். நியூராலிங்கின் போட்டியாளர்கள் மஸ்க்கின் ஈடுபாடு நியூராலிங்கின் புகழை உயர்த்தும் அதே வேளையில், அவர் போட்டியாளர்களையும் எதிர்கொண்டு வருகிறார். அவர்களில் சிலர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இது போன்ற சாதனைகளைப் புரிந்துள்ளனர். அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தை தளமாகக் கொண்ட பிளாக்ராக் நியூரோடெக் நிறுவனம் 2004 இல் மூளை மற்றும் கணினிக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்த பல சிப்புகளைப் பொருத்தி பரிசோதித்தது. நியூராலிங்க் இணை நிறுவனரால் உருவாக்கப்பட்ட ப்ரிசிசன் நியூராசைன்ஸ் நிறுவனம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் சிப் மூளையின் மேற்பரப்பில் இருக்கும் மிக மெல்லிய டேப்பை ஒத்திருக்கிறது என்பதுடன் "கிரானியல் மைக்ரோ-ஸ்லிட்" மூலம் அது பொருத்தப்படலாம். இது மிகவும் எளிமையான செயல்முறை என்று அந்நிறுவனம் கூறுகிறது. ஏற்கனவே உள்ள சாதனங்களும் கணிசமான முடிவுகளை உருவாக்கியுள்ளன. சமீபத்திய இரண்டு தனித்தனி அமெரிக்க அறிவியல் ஆய்வுகளில், ஒரு நபர் பேச முயற்சிக்கும் போது மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க இதுபோன்ற சிப்புகள் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூராலிங்க் நிறுவனம் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்டையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் ஒரு குரங்கு வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக ஈலோன் மஸ்க் அறிவித்தார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்னும் இவரது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் நரம்பியல் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் உதவிகரமான விளைவுகளைக் கொண்டுவர முடியும் என்று மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெலிபதி: மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தியது ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் - எவ்வாறு செயல்படும்? - BBC News தமிழ்

மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தி ஈலோன் மஸ்க் நிறுவனம் சாதனை - எவ்வாறு செயல்படும்?

3 months 2 weeks ago
  • பேட்ரிக் ஜாக்சன்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.

மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

பல போட்டி நிறுவனங்கள் ஏற்கனவே இதேபோன்ற சாதனங்களை ஆய்வு செய்து வருகின்றன.

வயர்லெஸ் மூளை சிப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

மனித மூளையில் சிப் செயல்படுவது எப்படி?

நியூராலிங்க் மற்றும் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகிய இரண்டையும் பிபிசி நியூஸ் அணுகி கருத்து கேட்டது.

மனிதர்களின் உடலில் இதுபோன்ற சிப்பைப் பொருத்திப் பரிசோதிக்க மஸ்க்கின் நிறுவனத்திற்கு மே மாதம்அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதுபோன்ற அனுமதியைப் பெறுவதற்காக அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கருதப்பட்டது.

ஆறு ஆண்டு கால ஆய்வின் தொடக்கத்திற்கு இது ஒரு அனுமதியை அளித்தது என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து மனித முடியை விட மெல்லியதாக 64 நெகிழ்வான நூல்களை அறுவை சிகிச்சை மூலம் "இயக்க எண்ணத்தை" கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியில் வைக்க ஒரு ரோபோவை நியூராலிங்க் பயன்படுத்தியது.

இந்த நூல்கள் அதன் பரிசோதனை நடவடிக்கைக்கு உதவுகின்றன. இணைப்பு ஏதும் இல்லாமல் (வயர்லெஸ்) சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் மூளையில் உருவாகும் சமிக்ஞைகளை வயர்லெஸ் முறையில் பதிவுசெய்து, அவை டீகோட் செய்யும் கணினி அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

'டெலிபதி' சாதனம் எவ்வாறு பயன்படும்?

முன்பு ட்விட்டர் என்று அறியப்பட்ட தனக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ‘X’ இல் பதிவிட்ட மஸ்க், நியூராலிங்கின் இந்த முதல் தயாரிப்பு ‘டெலிபதி’ என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .

"உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் மூலம் எந்தச் சாதனத்தையும், சிந்தனையின் மூலம் கட்டுப்படுத்தவும் இந்த டெலிபதி உதவும்," என்று அவர் கூறினார்.

"தங்கள் கை, கால்களைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு அவர்களது பிரச்னையைக் குறைக்க இந்த டெலிபதி தொடக்கத்தில் பயன்படுத்தப்படும்," என்று அவர் விளக்கினார்.

மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட மறைந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு அதிவேக தட்டச்சு செய்பவரை விட வேகமாக தமது எண்ணங்களை பிறருட்ன் பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நியூராலிங்க்கின் குறிக்கோள்," என்றார்.

நியூராலிங்கின் போட்டியாளர்கள்

மஸ்க்கின் ஈடுபாடு நியூராலிங்கின் புகழை உயர்த்தும் அதே வேளையில், அவர் போட்டியாளர்களையும் எதிர்கொண்டு வருகிறார். அவர்களில் சிலர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இது போன்ற சாதனைகளைப் புரிந்துள்ளனர். அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தை தளமாகக் கொண்ட பிளாக்ராக் நியூரோடெக் நிறுவனம் 2004 இல் மூளை மற்றும் கணினிக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்த பல சிப்புகளைப் பொருத்தி பரிசோதித்தது.

நியூராலிங்க் இணை நிறுவனரால் உருவாக்கப்பட்ட ப்ரிசிசன் நியூராசைன்ஸ் நிறுவனம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் சிப் மூளையின் மேற்பரப்பில் இருக்கும் மிக மெல்லிய டேப்பை ஒத்திருக்கிறது என்பதுடன் "கிரானியல் மைக்ரோ-ஸ்லிட்" மூலம் அது பொருத்தப்படலாம். இது மிகவும் எளிமையான செயல்முறை என்று அந்நிறுவனம் கூறுகிறது.

ஏற்கனவே உள்ள சாதனங்களும் கணிசமான முடிவுகளை உருவாக்கியுள்ளன. சமீபத்திய இரண்டு தனித்தனி அமெரிக்க அறிவியல் ஆய்வுகளில், ஒரு நபர் பேச முயற்சிக்கும் போது மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க இதுபோன்ற சிப்புகள் பயன்படுத்தப்பட்டன.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூராலிங்க் நிறுவனம் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்டையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் ஒரு குரங்கு வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக ஈலோன் மஸ்க் அறிவித்தார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்னும் இவரது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் நரம்பியல் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் உதவிகரமான விளைவுகளைக் கொண்டுவர முடியும் என்று மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெலிபதி: மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தியது ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் - எவ்வாறு செயல்படும்? - BBC News தமிழ்

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:

3 months 2 weeks ago
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா: (மாதவன்) வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில், வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா (30)இன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலில் இருந்து ஊர்வலமாக யாழ்ப்பாண குழல் ஓசை, சிறுவர் நடனம், கும்பியாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், இஸ்ஸாமிய நடனம், பொய்கால் குதிரையாட்டம்,மயிலாட்டம் என்னும் கிராமிய நடனத்துடன் விருந்தினர்கள் சரஸ்வதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார். இவ் விழாவில், கலை பண்பாட்டில் மிகச்சிறந்த ஆற்றலை 07 வருடகாலமாக வெளிப்படுத்திய 15 பேருக்கு யாழ் முத்து விருதும், கடந்த இரண்டு வருடங்களாக கலைத்துறைக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த இளம் கலைஞர்கள் விருது 12 நபர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது. இவ் விருதுகளை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச். எம்.சாள்ஸ் வழங்கி வைத்தார். வடமாகாண கலை பண்பாட்டலுவல்கள் பணிமனை பிரதிப்பணிப்பாளர் லாகினி நிர்பராஜ், சிவபூமி அறக்கட்டளை ஸ்தாபகராம் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவருமான ஆறுதிருமுருகன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், இளங்கலைஞர்கள், யாழ் முத்து விருது பெறும் கலைஞர்கள், சமூக பெரியோர்கள், ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா: (newuthayan.com)

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:

3 months 2 weeks ago

யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன்

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:

(மாதவன்)
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில், வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா (30)இன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலில் இருந்து ஊர்வலமாக யாழ்ப்பாண குழல் ஓசை, சிறுவர் நடனம், கும்பியாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், இஸ்ஸாமிய நடனம், பொய்கால் குதிரையாட்டம்,மயிலாட்டம் என்னும் கிராமிய நடனத்துடன் விருந்தினர்கள் சரஸ்வதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார்.

இவ் விழாவில், கலை பண்பாட்டில் மிகச்சிறந்த ஆற்றலை  07 வருடகாலமாக வெளிப்படுத்திய 15 பேருக்கு யாழ் முத்து விருதும், கடந்த இரண்டு வருடங்களாக கலைத்துறைக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த இளம் கலைஞர்கள் விருது 12 நபர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் விருதுகளை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச். எம்.சாள்ஸ் வழங்கி வைத்தார்.

வடமாகாண கலை பண்பாட்டலுவல்கள் பணிமனை பிரதிப்பணிப்பாளர் லாகினி நிர்பராஜ், சிவபூமி அறக்கட்டளை ஸ்தாபகராம் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவருமான ஆறுதிருமுருகன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், இளங்கலைஞர்கள், யாழ் முத்து விருது பெறும் கலைஞர்கள், சமூக பெரியோர்கள், ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா: (newuthayan.com)

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்

3 months 2 weeks ago
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம் Mithuna / 2024 ஜனவரி 30 , பி.ப. 05:36 - 0 - 59 உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த காரணிகளின் அடிப்படையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. பூஜ்ய (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 180 நாடுகளில் எந்த நாடும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. அதாவது உலகம் முழுவதும் ஊழல் இருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதேபோல் கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133-வது இடத்தையும், இலங்கை 115-வது இடத்தையும் சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா நாடு கடைசி இடத்தில் உள்ளது. Tamilmirror Online || ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்

3 months 2 weeks ago
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்  
 

Mithuna   / 2024 ஜனவரி 30 , பி.ப. 05:36 - 0      - 59

print sharing button
facebook sharing button
whatsapp sharing button
twitter sharing button

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த காரணிகளின் அடிப்படையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. பூஜ்ய (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 180 நாடுகளில் எந்த நாடும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. அதாவது உலகம் முழுவதும் ஊழல் இருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதேபோல் கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன.

பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133-வது இடத்தையும், இலங்கை 115-வது இடத்தையும் சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா நாடு கடைசி இடத்தில் உள்ளது.

Tamilmirror Online || ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை

3 months 2 weeks ago
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற போதிலும் இலங்கையின் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு முக்கிய தொடர்புள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதே திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது வன்முறை மிகுந்த கடந்தகாலத்தை கையாள்வதில் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக கோட்டாபய ராஜபக்சவை பொறுப்புக்கூறலிற்கு உள்ளாக்குவதே அதற்கான அமில பரிசோதனையாக காணப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகபணியாற்றிய வேளை போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு அவர் வழங்கிய உத்தரவுகள் தொடர்பான புதிய ஆதாரங்களை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச சட்டத்தின் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இராணுவதளபதியாக இல்லாவிட்டாலும் பாதுகாப்புபடையினர் தொடர்பில் கட்டளையிடுவது குறித்து வலுவான கட்டுப்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள புதிய அறிக்கை அவருக்கு பாதுகாப்பு படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை சர்வதேச குற்றவியல் சட்டங்களை மீறுவது குறித்து நன்கு தெரிந்திருந்தது ஆனால் அவர் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறினார் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்ளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தயங்கினார் எனவும் ஐடிஜேபியின் அறிக்கை தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர்பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகதன்மைமிக்க விசாரணையை மேற்கொள்வதற்கும் நீதிநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவருக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களிற்கும் போதிய சந்தர்ப்பமிருந்தது எனினும் உண்மை வெளியில் வருவதற்கு அனுமதிப்பதற்கு பதில் கோட்டாபய ராஜபக்சவும் ஏனைய ஆட்சியாளர்களும் உரிமை மீறல்களில் பாதுகாப்பு படையினருக்கு தொடர்புள்ளதை மறுத்துவந்துள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் அவர்களிற்கு பதவிஉயர்வுகளை வழங்கியுள்ளதுடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது. https://itjpsl.com/assets/Tamil_Gotabaya-Rajapaksas-war-time-role-Jan-2024_Final_26.01.2024_compressed.pdf போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை | Virakesari.lk

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை

3 months 2 weeks ago

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற போதிலும் இலங்கையின் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு முக்கிய தொடர்புள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதே திட்டம் தெரிவித்துள்ளது.

mullivaikal_new.jpg

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனது வன்முறை மிகுந்த கடந்தகாலத்தை கையாள்வதில் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக  கோட்டாபய ராஜபக்சவை பொறுப்புக்கூறலிற்கு உள்ளாக்குவதே அதற்கான அமில பரிசோதனையாக காணப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகபணியாற்றிய வேளை போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு அவர் வழங்கிய உத்தரவுகள் தொடர்பான புதிய ஆதாரங்களை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச சட்டத்தின் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

இராணுவதளபதியாக இல்லாவிட்டாலும் பாதுகாப்புபடையினர் தொடர்பில் கட்டளையிடுவது குறித்து வலுவான கட்டுப்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள புதிய அறிக்கை அவருக்கு பாதுகாப்பு படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை சர்வதேச குற்றவியல் சட்டங்களை   மீறுவது குறித்து நன்கு தெரிந்திருந்தது ஆனால் அவர் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறினார் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்ளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தயங்கினார் எனவும் ஐடிஜேபியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர்பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகதன்மைமிக்க விசாரணையை மேற்கொள்வதற்கும் நீதிநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்   அவருக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களிற்கும் போதிய சந்தர்ப்பமிருந்தது எனினும் உண்மை வெளியில் வருவதற்கு அனுமதிப்பதற்கு பதில் கோட்டாபய ராஜபக்சவும் ஏனைய ஆட்சியாளர்களும் உரிமை மீறல்களில் பாதுகாப்பு படையினருக்கு தொடர்புள்ளதை மறுத்துவந்துள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அவர்கள் அவர்களிற்கு பதவிஉயர்வுகளை வழங்கியுள்ளதுடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது.

 

https://itjpsl.com/assets/Tamil_Gotabaya-Rajapaksas-war-time-role-Jan-2024_Final_26.01.2024_compressed.pdf

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை | Virakesari.lk

மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி

3 months 2 weeks ago
Published By: VISHNU 30 JAN, 2024 | 12:23 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் எரியூட்டி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகள் பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது. எதிர்வரும் வரும் மார்ச் மாதம் முதல் எரியூட்டி தொழிற்பட தொடங்கும் என பணிப்பாளர் தெரிவித்தார். மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி | Virakesari.lk

மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி

3 months 2 weeks ago

Published By: VISHNU

30 JAN, 2024 | 12:23 PM
image
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். 

வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் எரியூட்டி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகள் பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது.

எதிர்வரும் வரும் மார்ச் மாதம் முதல் எரியூட்டி தொழிற்பட தொடங்கும் என பணிப்பாளர் தெரிவித்தார்.

மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி | Virakesari.lk

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய விதிமுறைகளை அமுல்படுத்த நடவடிக்கை

3 months 2 weeks ago
அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை அமுல்படுத்த நடவடிக்கை அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்றார். விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வீதி விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கீழ் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவித்த அமைச்சர், இந்த கலந்துரையாடலில் பொலிஸார், வீதி பொறியியலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டதாக தெரிவித்தார். “கட்டுநாயக்க – கொழும்பு நெடுஞ்சாலையில் பதிவாகும் பல விபத்துக்கள் அதிக வேகத்தினால் ஏற்படுவதாக கலந்துரையாடலில் கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முற்படும் வாகனங்களாலேயே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது,” என்றார் . பயணிக்கும் போது சீட் பெல்ட் மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை அணியாமை, குடிபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வீதி விதிகளை பின்பற்றத் தவறியமை ஆகியன இலங்கையில் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதாக கூறப்படுவதை மறுத்த அமைச்சர் குணவர்தன, சாரதியின் வசதிக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரதிபலிப்பு விளக்குகளே நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவத்தின் வெளிச்சத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கேரவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கு அதீத வேகத்தினால் ஏற்பட்ட விபத்து என கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விபத்துக்குப் பின்னர், அதே அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்ட மற்றுமொரு விபத்தும் பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/289908

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 30 JAN, 2024 | 05:10 PM கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே கேப்பாபிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நான்கு நாட்களாக தொடர்ச்சியான முறையில் இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றையநாள் நான்காவது நாளாக தொடரும் இவர்களின் போராட்டத்தினை குறித்த பகுதி கிராம அலுவலரோ, பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை. இதுவரை குறித்த போராட்டத்திற்கான நீதி கிடைக்காததனால் இரு குடும்பங்களும் வீட்டிற்கு செல்ல முடியாமலும், வீட்டில் இருக்க பாதுகாப்பற்ற நிலையிலும் வீதியிலேயே இருக்கின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த பகுதி கிராம அலுவலரும் தம்மை கண்டு கொள்ளவில்லை எனவும், பொலிஸார் நேரடியாக நீதிமன்றத்துக்கே தம்மை அனுப்புவதாகவும், தமக்கு குழந்தைகளும் இருப்பதனால் வீதியில் தொடர்ச்சியாக கொசுகடிக்குள் இருக்க முடியாது,வேலைக்கும் செல்ல முடியாது, வருமானமும் இல்லாமல் போக நாம் வீதியிலையே இருக்கின்றோம். எம் பிள்ளைகள் வீதியிலே போகும்போது எதிராளிகள் துப்புகின்றனர். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது எனவும், எம் உயிர் போக முன்னமே சமாதானமாக வாழ நீதியை பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றோம் . இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை வீட்டில் தனிமையில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தபோது பிரச்சினைக்குரிய அயல் வீட்டு குடும்பஸ்தர் அங்கு சென்று போதைப்பொருளை வைத்து விட்டு பொலிஸாரை அழைத்துவந்து குறித்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல் வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும் அதற்கான நீதி தமக்கு வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி இரு குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்! | Virakesari.lk