Aggregator

அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்த பரந்தளவிலான கூட்டணி அமைக்க நடவடிக்கை - சம்பிக்க

3 months 2 weeks ago
29 JAN, 2024 | 08:48 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் தரம்மிக்க குழுவினருடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க கலந்துரையாடி வருகிறோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த குழுவில் உள்ள பொருத்தமான ஒருவரையே வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அரசியல் ரீதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் அரசியல் புரட்சி ஒன்றை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனெனில் நாட்டை வங்குராேத்து அடையச் செய்த குழுவினரை ஜனநாயக ரீதியில் வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயாராகி உள்ளனர்.

அதனால் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தகுதிவாய்ந்தவர்களுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க தற்போது நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.

அத்துடன் எமது பரந்துபட்ட கூட்டணியை பாராளுமன்றத்தில் இருப்பவர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி ஒன்றை எதிர்வரும் காலத்தில் கட்டியெழுப்புவோம்.

இந்த கூட்டணியில் இருக்கும் மிகவும் பொருத்தமான வேட்பாளரை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அதேபோன்று பாெருத்தமான வேட்பாளர் குழுவொன்றை பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முன்வைப்போம்.

அத்துடன் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகின்றனர். அரசாங்கம் பாரியளவிலான வரி சுமையை மக்கள் மீது சுமத்தி இருக்கிறது.

எந்தவித தேடிப்பார்ப்பும் இல்லாமலும் முறையான திட்டமிடல் இல்லாமலும் டின் இலக்கம் ஒன்றின் ஊடாக மக்களை வரி முறைமைக்கு உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.

மேலும் அரசாங்கம் கடந்த வாரம்  நிகழ்சிலை காப்புச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அதிக சந்தர்ப்பம் இருப்பது  இணையவழி சேவை எனும் டிஜிடல் சேவை மூலமாகும். சமூவலைத்தளங்களை ஒழுங்குபடுத்தப்போவதாக தெரிவித்து, அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மரண அடியை வழங்கி இருக்கிறது.

சமூகவலைத்தளம் ஊடாக சேறுபூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவது உண்மை என்றாலும் அதனை மேற்கொள்ள வழிவகுத்த பிரிவினரே சட்ட திட்டங்களை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இணையவழி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் அரசாங்கம் நினைத்த பிரகாரம் சட்ட திட்டங்களை கொண்டுவந்துள்ளதால் இணையவழி நேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முழு உலகிலும் இணையவழி சேவைகளில் வரி அறவிடப்படுவது 6 நாடுகளிலாகும். அதில் இலங்கையும்  ஒன்றாகும்.

அத்துடன் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கு அரசியல் குண்டர்கள் செயற்பட்ட நிலையில், எதிர்வரும் காலத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டு, அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாக இருப்பது அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களை அடக்குவதாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/175083

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்

3 months 2 weeks ago
அரை இறுதி விடயத்தில் இலங்கை, மேற்கிந்திய தீவுகளை விட அவுஸுடன், தென் ஆபிரிக்கா/இங்கிலாந்து செல்வதற்கு வாய்ப்பு அதிகம் தானே? மற்றைய குழுவில் இந்தியாவுடன் பாகிஸ்தான்/நியூசிலாந்து/பங்களாதேஷ் போகும்.

பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!

3 months 2 weeks ago
ஆள் அமெரிக்காவில் ஒரு பிரபல புள்ளி. அவரது வாழ்க்கை சரிதத்தை கலைக்களஞ்சியத்தில் வாசித்து பாருங்கள். இது இரண்டு பிரபலங்கள் சம்மந்தப்பட்ட வழக்கு. முடிவு பிரபலமாக அமைவதில் ஆச்சரியம் இல்லை தானே. முடிவு அப்பீள் செய்யப்படுகின்றது. தவிர வழக்கை நடாத்திய நீதிபதிக்கும், பாதிக்கப்பட்டவர் சார்பாக வழக்காடிய வழக்கறிஞரும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் எனவும், அவர்களுக்கு இடையில் உள்ள தொடர்பு பற்றி முன்பே நீதிபதி அறிவிக்கவில்லை எனவும், இது சட்டத்துக்கு முரணானது எனவும் டிரம்ப் தரப்பில் சொல்லப்படுகின்றது (Conflict of interest).

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
விளையாடடை விளையாடடகத்தான் பார்க்க வேண்டும். CSK சொந்தக்காரன் ஒன்றும் பச்சை தமிழன் இல்லை. அவர் ஒரு பச்சை பார்ப்பனன். அங்கு யாரும் பார்ப்பனன் இருந்தால் சொல்லுங்கள், அவர்களை எடுப்பார்கள். பார்ப்பனன் தமிழனா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. சுப்ரமணிய ஸ்வாமியும் பார்பனந்தான்.

மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் போரா? ஆதிக்கம் செலுத்தப்போகும் நாடு எது?

3 months 2 weeks ago
நிச்சயமாக மன்னராட்சி நாடுகள் இதனை விரும்பாது. எனவே சவூதி, UAE , கட்டர், பஹ்ரைன், ஜோர்டான் , ஓமான், குவைத் போன்ற நாடுகள் இரான், ஈராக், துருக்கி போன்ற நாடுகளுடன் இணையாது. எனவே சீனா, ரசிய போன்றவற்றிட்கும் இது பிரச்சினையாக இருக்கும். எனவே எப்படியாவது இதனை குறைந்த மடத்தில் பேணவே நாடுகள் முயட்சிக்கும். எப்படி இருந்தாலும் ஹூத்தி ஏமன், சிறிய தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் தொடரத்தான் போகின்றன. இரான் தனிமைப்படுத்தப்பட சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படுகின்றன.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

3 months 2 weeks ago
வாழு, வாழ விடு. வாழவும் மாட்டேன் , வாழ விடவும் மாட்டேன் என்றால் நிலைமை கொடூரமாகத்தான் இருக்கும். இது உலக நியதி.

சர்வதேச நாணய நிதியத்தின் மேலும் 110 நிபந்தனைகள் நிலுவையில் !

3 months 2 weeks ago
எத்தனை நிபந்தனைகள் என்றாலும் இலங்கை அரசு சமாளித்து விடும். கடினமான நிபந்தனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விடடான.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று

3 months 2 weeks ago
இந்திய ஆதரவு சங்கிகளுக்கும் , சங்கிகளல்லாதோருக்குமான போராட்டம். அதாவது கட்சியில் பதவி போராட்டம். இவர்களும் சாதாரண படடம் பதவிக்காக போராடும் அரசியல்வாதிகள்தான். எப்படியோ , இலங்கை அரசு கிராம சபைகளுக்கு மேலாக எதுவும் தர போவதில்லை.

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
இந்த‌ வீர‌ர் சென்னைக்கு விளையாட‌ போவ‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது அண்ணா..........இவ‌ர் சென்னைக்கு வ‌ந்தா இல‌ங்கை வீர‌ர் குட்டி ம‌லிங்கா கூப்பில‌ தான் உக்கார‌னும்..............இவ‌ர் திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர் அதோட‌ ம‌ட்டையால் ப‌ந்தை சிக்ஸ்சுக்கு அடிப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர்..........இர‌ண்டு ம‌ச்சில் சாதிச்சு காட்டினால் டோனி க‌ண்டிப்பாய் இவ‌ருக்கு சென்னை அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் கொடுப்பார்....................

சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது!

3 months 2 weeks ago
சடடம் அமுலாகும் முதலே கைதுகள் தொடக்கி விட்ட்து. இனி நிறைய அரசியல் கைதுகள் தொடர போகின்றது. இலங்கையில் இருந்து எழுதுபவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் எழுத வேண்டி உள்ளது.

இரண்டாம் பயணம்

3 months 2 weeks ago
இது என்ன கேள்வி கிருபன் கரணவாய். தான் நீங்களும் கரணவாய் தான் சிலநேரம். இருவரும் சொந்தமாக இருக்கலாம் 😂🤣. மிகுதியையும். எழுதுங்கள்’’