Aggregator

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!

3 months 2 weeks ago
பெலியத்தையில் ஐவர் படுகொலை : மேலும் மூவர் கைது 31 JAN, 2024 | 11:29 AM பெலியத்தையில் ஐவரின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மூவர் மாத்தறை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் பூஸா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஹுங்கம பொலிஸாரால் இரண்டு சந்தேக நபர்களும் மாத்தறையில் ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை மறைத்தமை , பண உதவி செய்தமை போன்ற செயற்பாடுகளில் இடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைத செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175200

இரண்டாம் பயணம்

3 months 2 weeks ago
மீசாலையில் இருந்து நவிண்டிலில் 4 மாதங்கள் இடம்பெயர்ந்திருந்தோம். 96 உலகக்கோப்பை கிரிக்கெட் நாவலர் மடப்பக்கமாக உள்ள ஒரு வீட்டில் தான் சென்று பார்த்தோம்.

வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி!

3 months 2 weeks ago
வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி! (இனியபாரதி) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச வானுர்தித்தளம் (விமான நிலைய) அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு வானுர்தி(விமானப் போக்குவரத்து) அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய இன்று நில அளவைப் பணிமனிமனை அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர். இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுகின்றது. வானுர்தி (விமானப் போக்குவரத்து) அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த வரைபடம் சகிதம் சுவீகரிக்க முயற்சிக்கும் பகுதிகளின் கிராமசேவகர்களும் இதன்போது அப்பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றதனால் அப் பகுதி மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். வலி. வடக்கில் ஏற்கனவே படையினரிடம் மூவாயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விடுவிக்குமாறு பலகோரிக்கைகள் முன்வைத்தபோதும் மௌனம் காக்கும் அரசு தற்போது இந்த இரகசிய முயற்சியில் ஈடுபடுகின்றமை அம்பலமாகியுள்ளது. வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ்-கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(30) தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது காணி விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பட்டது. இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார். இதேவேளை விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்த வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், அல்லாவிடின் அதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலில் இவ்வாறு மீளவும் காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதை ஏற்கமுடியாது என்றார். https://newuthayan.com/article/வலி__வடக்கில்_மக்களிடம்__கையளிக்கப்பட்ட_நிலங்களில்_500_ஏக்கரைச்__சுவீகரிக்க__முயற்சி!

வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி!

3 months 2 weeks ago
வலி வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கரைச் சுவீகரிக்க முயற்சி!
1582015351.jpg

(இனியபாரதி)
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது.

யாழ். சர்வதேச வானுர்தித்தளம் (விமான நிலைய) அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு வானுர்தி(விமானப் போக்குவரத்து) அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய இன்று நில அளவைப் பணிமனிமனை அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர்.

இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுகின்றது.

வானுர்தி (விமானப் போக்குவரத்து) அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த வரைபடம் சகிதம் சுவீகரிக்க முயற்சிக்கும் பகுதிகளின் கிராமசேவகர்களும் இதன்போது அப்பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றதனால் அப் பகுதி மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

வலி. வடக்கில் ஏற்கனவே படையினரிடம் மூவாயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விடுவிக்குமாறு பலகோரிக்கைகள் முன்வைத்தபோதும் மௌனம் காக்கும் அரசு தற்போது இந்த இரகசிய முயற்சியில் ஈடுபடுகின்றமை அம்பலமாகியுள்ளது.

வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும்  யாழ்-கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(30) தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது காணி விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்த வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், அல்லாவிடின் அதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலில் இவ்வாறு மீளவும் காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதை ஏற்கமுடியாது என்றார்.

 

https://newuthayan.com/article/வலி__வடக்கில்_மக்களிடம்__கையளிக்கப்பட்ட_நிலங்களில்_500_ஏக்கரைச்__சுவீகரிக்க__முயற்சி!

ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!

3 months 2 weeks ago
சாந்தனை இலங்கைக்கு அழைக்க அமைச்சர் உறுதியளிப்பு! adminJanuary 31, 2024 ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை இலங்கைக்கு அழைப்பது வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31.01.24) சந்தித்தனர். மேலும், சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் கேட்டுக் கொண்டனர். இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டது. https://globaltamilnews.net/2024/200256/ சாந்தனின் விடுதலை விரைவில் சாத்தியம் அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோருடன் உரையாடிய பின்னர் சிறீதரன் தெரிவிப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய் யப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரும்கூட இன்னமும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் விடுதலை விரைவில் சாத்தியம் என்றும், அதற்குரிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் உதயனுக்குத் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப் பட்டு 32 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர வேண்டிய கட்டாய நிலைமை தொடர்பில் சாந்தனின் தாயார் தில்லையம்பலம். மகேஸ்வரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். சாந்தனும், தானும் இது தொடர்பில் பல்வேறு பேச்சுகளையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ள போதிலும், அவற்றை உரியதரப்புகள் கண்டுகொள் ளவில்லை என்றும். தற்போது உயி ருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு. கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் சாந்தன் அவதி யுற்று வரும்நிலையில், அவரை இலங் கைக்கு அனுப்ப இலங்கை. இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, சாந்தனின் விடு தலை தொடர்பில் இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட் டோருடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும், அவர் அடுத்த சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவார் என்று தனக்குத் தெரி விக்கப்பட்டுள்ளதாக சி.சிறீதரன் உதய னுக்கு நேற்று இரவு தெரிவித்தார். சிறீதரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது: சாந்தனின் விடுதலை தொடர்பில் பல் வேறு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப் பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவ கார அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பில் நாங்கள் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் அடுத்த சில தினங்களுக் குள் சாந்தனின் விடுதலை சாத்தியம் என்று எங்களுக்குத் தெரிவித்துள்ளார். சென்னைத் துணைத்தூதரகத்தினருடனும் அலி சப்ரி பேச்சு நடத்தியுள்ளார். சாந்தனின் பயண ஆவணங்கள் அனைத்தும் முழு மைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இந் திய பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலை யும் சில கோப்புகளையும் பெற வேண்டி யுள்ளதாலேயே சாந்தன் இலங்கையை நோக்கிய பயணப்படுவது தாமதமாகின்றது. அடுத்த சில தினங்களில் இந்த ஆவணங்கள் கைக்கு கிடைத்ததும் சாந்தன் இலங்கைக்கு அனுப்பிவைக் கப்படுவார்- என்றார். (ஏ) https://newuthayan.com/article/சாந்தனின்_விடுதலை_விரைவில்_சாத்தியம்

துவாரகா உரையாற்றியதாக...

3 months 2 weeks ago
திருமதி அருணாதேவி குமாரதாஸ்: மதி மாமியின் உடன்பிறப்பான இவர், பின்னாளில் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதற்கு முழுமையாகத் துணைநின்றவர் ஆவார். எனக்கு புலனாய்வுத்துறைப் போராளி ஒருவர் வழங்கிய நேரடி வாக்குமூலத்தில்: "இவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து வெளிநாட்டில் தற்தேவைகளுக்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தார். இது தொடர்பில் தலைவர் கவனத்திற்கு அண்ணியார் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அண்ணியார் இது தொடர்பில் எடுக்க வேண்டிய செய்கையினை தலைவருக்குக் கூற அதை தலைவர் செய்ய மறுத்தார். பின்னர் தலைவர் அவர்கள் தன்னுடன் கூட நின்ற ஒரு புலனாய்வுத்துறைப் போராளியை நேரடியாக வெளிநாட்டிற்கு அனுப்பி இவரை எச்சரிக்கை செய்து அவ்வீனச் செயலை நிறுத்தினார்."

அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை

3 months 2 weeks ago
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை! January 31, 2024 11:40 am பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள இம்ரானுக்கு அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நேற்று (30) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இம்ரான் 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து அவரது எதிரிகளால் வெளியேற்றப்பட்டார். மேலும் ஊழல் குற்றச்சாட்டில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என்று இம்ரான் கூறுகிறார். https://tamil.adaderana.lk/news.php?nid=183439

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

3 months 2 weeks ago
அமெரிக்க இராணுவம் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் ஆதரவுபெற்ற இஸ்லாமியக் குழு அமெரிக்காவுக்கெதிரான தாக்குதல்களை தாம் நிறுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஈராக் அரசுக்கு அவமானம் ஏற்படுவதைத் தடுக்கவே தாம் இதனைச் செய்வதாகவும் கூறியிருக்கிறது. ஆனால், அமெரிக்கா தனது பதிலடி பற்றிய தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும், விரைவில் அது நடக்கும் என்றும், பல படி நிலைகளில் தாக்குதல் அமையும் என்றும் கூறியிருக்கிறது. ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள், ஈரானின் விசேட படைகளின் தளபதிகள் போன்றோர் இலக்குவைக்கப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

துவாரகா உரையாற்றியதாக...

3 months 2 weeks ago
திரு சிறிதரன் ஏரம்பு: மதி மாமியின் உடன்பிறப்பான இவர், பின்னாளில் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதன் பரப்புரைக்கு துணைநின்றார்.

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-benefaction force Black Tigers images

3 months 2 weeks ago
மறைமுகக் கரும்புலிகளை குறிக்கப் பாவிக்கும் சின்னம் (இது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை அன்று)

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

3 months 2 weeks ago
இதுவும் கனடாவில்தான் நடந்திருக்கு....புரிஞ்சுக்கோங்க.. ( முகப் புத்தகத்தில் பிரதி பண்ணப் பட்டது.... செய்தி 100 வீதம் உண்மை) · தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா இன அழிப்பு அரசின் பின் புலத்தில் இயங்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 73,769.12 கனடியன் டொலர்களை முப்பது நாட்களுக்குள் செலுத்துமாறும் தீர்ப்பளித்திருக்கிறது. புலத்தில் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை - செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் நோக்குடன் எல்லை கடந்த அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தோல்வியில் முடிந்திருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஐயப்பன் கோவில் நிர்வாகம் மக்கள் முன் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது. கார்த்திக் நந்தகுமார் தனி மனிதன் அல்ல - அவர் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி. இந்த வழக்கில் அவருக்குப் பக்க பலமாக உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அணிவகுத்திருந்தார்கள். இது அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல - இன அழிப்பைச் சந்தித்துத் தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்தபடியே நீதி வேண்டி நிற்கும் ஒரு இனத்தின் நீதியின் மீது - தமிழீழ தேசியச் சின்னங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு. ஐயப்பன் கோவில் நிர்வாகம் மட்டுமல்ல இனியும் அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்குள் பலியாகி புலத்தில் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் - செயற்பாட்டாளர்கள் மீதும் வழக்குத் தொடுக்கும் ஒவ்வொருவரும் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் முன் இப்படித்தான் அம்பலப்பட்டு நிற்க வேண்டும். உங்கள் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும், சுய அரிப்புகளுக்கும் தமிழீழ விடுதலை என்பது ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. இனியும் இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம்.

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்

3 months 2 weeks ago
அவர்களுக்கு நான் வெள்ளை அடிக்கவில்லை. இரண்டு தரப்பும் செய்ததன் விளைவு கடைசியில் போராடடம் அழிக்கப்பட்டு தேசியமும் கதி கலங்கிவிட்டது . விளைவை மட்டும் .

மக்களைப் பாதிக்கும் எந்தவொரு சட்டங்களும் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை - தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!

3 months 2 weeks ago
பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இந்த கொடிய சட்டங்கள் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கலாம் என யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது.. பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது அதற்கான் பதிலாக கொண்டு வரப்படுகிற பயங்கரவாத எதிரப்பு சட்டமோ இலங்கைக்கு தேவையில்லை. ஏனேனில் கடந்த காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கடந்த 78 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரபட்டதே பயங்கரவாத தடைச் சட்டம். அது சில காலம் மட்டும் தான் எனக் கூறி தற்காலிகமாக கொண்டு வந்திருந்தாலும் 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. ஆகவே பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. இந்தச் சட்டத்தால் தான் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இப்போது அது தேவையற்ற சட்டம் தான். எனினும் பயங்கரவாதம் நாட்டில் இருப்பதாக சொல்லி புதிய புதிய சட்டங்களை அரசிற்கு ஆதரவாக கொண்டு வருகின்றனர். ஏனெனில் அரசாங்கத்தை எதிர்க்கிற போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அடக்கி ஒடுக்குவதற்கு அல்லது தண்டனை வழங்குவதற்காக இந்தச் சட்டங்களை கொண்டு வருகின்றனர். ஆகவே எம்மைப் பொறுத்த வரையில் பல சாதாரண சட்டங்கள் இருக்கின்ற போது அதனைப் பயன்படுத்துவதை விடுத்து இத்தகைய கொடிய சட்டங்கள் தேவையற்றது. அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் எமது மக்களை பயப்படுத்தி கஸ்ரப்படுத்தி தமது எதிரிகளை வேறு விதமாக கையாளும் வகையில் இத்தகய சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் அந்தச் சட்டங்கள் என்பது சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என்று தான் கூறுகிறோம். அதே நேரத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதும் பின்னர் விடுவது அல்லது தாமதிப்பது என மாறி மாறி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிலும் அரச தரப்பில் ஐனாதிபதி ஒரு கட்சியாகவும் ஏனையவர்கள் மற்றொரு கட்சியாகவும் இருக்கின்றனர். இதனாலேயே இந்த இழுபறி ஏற்பட்டு இருக்கலாம். ஆனாலும் இதனைக் கொண்டு தேவையற்றது தான். மேலும் இரு தரப்பு பிரச்சனைகளாலும் தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கும். ஆகையினால் அதிகாரத்துடன் பதவில் இருப்பதற்காகவும் இந்த சட்டத்தை இழுத்து இழுத்து பயன்படுத்தலாமென்றார். https://newuthayan.com/article/மக்களைப்_பாதிக்கும்_எந்தவொரு_சட்டங்களும்_சட்டப்_புத்தகத்திலே_இருக்கத்_தேவையில்லை_-_தமிழ்_மக்கள்_கூட்டணியின்_தலைவரும்_நாடாளுமன்ற_உறுப்பினருமான_சீ.வீ._விக்கினேஸ்வரன்_தெரிவிப்பு!

மக்களைப் பாதிக்கும் எந்தவொரு சட்டங்களும் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை - தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!

3 months 2 weeks ago

பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இந்த கொடிய சட்டங்கள் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கலாம் என யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..

பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது அதற்கான் பதிலாக கொண்டு வரப்படுகிற பயங்கரவாத எதிரப்பு சட்டமோ இலங்கைக்கு தேவையில்லை.

ஏனேனில் கடந்த காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கடந்த  78 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரபட்டதே பயங்கரவாத தடைச் சட்டம். அது சில காலம் மட்டும் தான் எனக் கூறி தற்காலிகமாக கொண்டு வந்திருந்தாலும்  44 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

ஆகவே பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. இந்தச் சட்டத்தால் தான் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இப்போது அது தேவையற்ற சட்டம் தான்.

எனினும் பயங்கரவாதம் நாட்டில் இருப்பதாக சொல்லி புதிய புதிய சட்டங்களை அரசிற்கு ஆதரவாக கொண்டு வருகின்றனர். ஏனெனில் அரசாங்கத்தை எதிர்க்கிற போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அடக்கி ஒடுக்குவதற்கு அல்லது தண்டனை வழங்குவதற்காக இந்தச் சட்டங்களை கொண்டு வருகின்றனர்.

ஆகவே எம்மைப் பொறுத்த வரையில் பல சாதாரண சட்டங்கள் இருக்கின்ற போது அதனைப் பயன்படுத்துவதை விடுத்து இத்தகைய கொடிய சட்டங்கள் தேவையற்றது. 

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் எமது மக்களை பயப்படுத்தி கஸ்ரப்படுத்தி தமது எதிரிகளை வேறு விதமாக கையாளும் வகையில் இத்தகய சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் அந்தச் சட்டங்கள் என்பது சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என்று தான் கூறுகிறோம்.

அதே நேரத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதும் பின்னர் விடுவது அல்லது தாமதிப்பது என மாறி மாறி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிலும் அரச தரப்பில் ஐனாதிபதி ஒரு கட்சியாகவும் ஏனையவர்கள் மற்றொரு கட்சியாகவும் இருக்கின்றனர். இதனாலேயே இந்த இழுபறி ஏற்பட்டு இருக்கலாம். ஆனாலும் இதனைக் கொண்டு தேவையற்றது தான்.

மேலும்  இரு தரப்பு பிரச்சனைகளாலும் தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கும். ஆகையினால் அதிகாரத்துடன் பதவில் இருப்பதற்காகவும் இந்த சட்டத்தை இழுத்து இழுத்து பயன்படுத்தலாமென்றார்.

https://newuthayan.com/article/மக்களைப்_பாதிக்கும்_எந்தவொரு_சட்டங்களும்_சட்டப்_புத்தகத்திலே_இருக்கத்_தேவையில்லை_-_தமிழ்_மக்கள்_கூட்டணியின்_தலைவரும்_நாடாளுமன்ற_உறுப்பினருமான_சீ.வீ._விக்கினேஸ்வரன்_தெரிவிப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்

3 months 2 weeks ago
ரண்டுபேரும் தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் போது பார்த்து பக்குவமாய் அடியுங்கோ. பெயின்ற் கீழ ஊத்திடக் கூடாது.

சட்டத்தின் பெயரால் சர்வாதிகாரம்

3 months 2 weeks ago
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சபாநாயகர் கையெழுத்திட்டதிலிருந்து சட்டம் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டத்தின் நோக்கம் அதன் சரத்துகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் அப்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்தச் சட்டவரைவு தொடர்பில் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை இப்போதிருக்கும் சூழலில் இப்படியொரு சட்டவரைவு தேவையா என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துர்நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாக ஆளும் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். 'குட்டைப்பாவாடைகளுடன் பெண்கள் நடமாட முடியாத சூழல் இருக்கின்றது. அப்படி அவர்கள் நடமாடுவதை படமெடுத்து சமூகவலைத் தளங்களில் பகிர்கின்றனர். பெண்கள் குளிப்பதைக்கூட படமெடுத்து சமூகவலைத்தளங்களில் தரவேற்றுகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த இந்தச்சட்டம் அவசியம்' என்று நாடாளுமன்றத்தில் இந்தச்சட்டவரைவு மீதான விவாதத்தின் போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந் தானந்த அளுத்கமகே கூட உரையாற்றியிருந்தார். அவர் குறிப்பிடுவதைப்போன்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க எமது நாட்டில் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் ஏற்கனவே உள்ளன. அவற்றை தற்போதைய நவீன யுகத்துக்கு ஏற்றவாறு சர்வதேச தரத்துக்கு மாற்றியமைத்தாலே போதுமானது. இவ்வாறான சிறப்பான சட்டம் ஒன்று அதற்குத் தேவையில்லை. நடைமுறையில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் களைவதற்குப் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் இருக்கத்தக்கதாகவே, இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் சிறப்புச் சட்டத்தின் விளைவை 3 தசாப்தங்களாக இந்த நாட்டின் மூவின மக்களும் அனுபவித்திருக்கின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு வழங்கிய கட்டுப்பாடற்ற அதிகாரம், அந்தச் சட்டத்தை வைத்து அவர்கள் ஆள்வோரின் நலனுக்காக எவ்வாறெல்லாம் செயற்பட்டார்கள் என்பதை அறிய முடியும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டமும் அவ்வாறானதொன்றே. ஆட்சியாளர்களின் தேவைக்கே அது பயன்படுத்தப்படப் போகின்றது. ஆட்சியாளர்களுக்கு விரும்பத்தகாத சகல பதிவுகளும் சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கப்படப் போகின்றன. அவ்வாறான பதிவர்கள் குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் - முற்போக்குவாதிகள் ஊடகர்கள் கைதாகப் போகின்றனர். இந்தச் சட்டத்தின் ஊடாக அரச தலைவரால் 5 பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்படும். அந்த ஆணைக்குழுவே, ஒவ்வொற்று சமூகவலைத்தளப் பதிவுகள் தொடர்பிலும் தீர்மானிக்கும் உரித்தைக்கொண்டிருக்கப்போகின்றது. அரச தலைவரால் நியமிக்கப்படும் ஓர் ஆணைக்குழு எப்படி இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற பெயரில் இயங்கிய ஆணைக்குழுக்கள் ஆட்சியாளர்களின் தாளத்துக்கு ஆடாவிட்டால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது பரகசியமானது. இப்படியான நிலையில் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணையாளர்கள் சமூகஊடகங்களின் பதிவுகளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணைக்குழு, சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்களை சவாலுக்கு உட் படுத்தமுடியாது. அதாவது மேன்முறையீடு செய்யமுடி யாது. நீதிமன்றப் பொறிமுறையை நாடமுடியாது. இது மிகமோசமானதொரு நடைமுறையே. இப்படியான சட்டத்தையே நாடாளுமன்றத்தில் தலைகீழாக நின்று ஆளும் தரப்பு நிறைவேற்றியிருக்கின்றது. மக்கள் இதன் ஆபத்தை உணர்ந்து வீதிக்கு இறங்காத வரையில் ஆட்சியாளர்கள் இதை விட மோசமாக இன்னும் செயற்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். https://newuthayan.com/article/சட்டத்தின்_பெயரால்_சர்வாதிகாரம்

சட்டத்தின் பெயரால் சர்வாதிகாரம்

3 months 2 weeks ago

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சபாநாயகர் கையெழுத்திட்டதிலிருந்து சட்டம் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டத்தின் நோக்கம் அதன் சரத்துகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் அப்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்தச் சட்டவரைவு தொடர்பில் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை இப்போதிருக்கும் சூழலில் இப்படியொரு சட்டவரைவு தேவையா என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துர்நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாக ஆளும் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். 'குட்டைப்பாவாடைகளுடன் பெண்கள் நடமாட முடியாத சூழல் இருக்கின்றது. அப்படி அவர்கள் நடமாடுவதை படமெடுத்து சமூகவலைத் தளங்களில் பகிர்கின்றனர். பெண்கள் குளிப்பதைக்கூட படமெடுத்து சமூகவலைத்தளங்களில் தரவேற்றுகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த இந்தச்சட்டம் அவசியம்' என்று நாடாளுமன்றத்தில் இந்தச்சட்டவரைவு மீதான விவாதத்தின் போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந் தானந்த அளுத்கமகே கூட உரையாற்றியிருந்தார். அவர் குறிப்பிடுவதைப்போன்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க எமது நாட்டில் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் ஏற்கனவே உள்ளன. அவற்றை தற்போதைய நவீன யுகத்துக்கு ஏற்றவாறு சர்வதேச தரத்துக்கு மாற்றியமைத்தாலே போதுமானது. இவ்வாறான சிறப்பான சட்டம் ஒன்று அதற்குத் தேவையில்லை.
நடைமுறையில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் களைவதற்குப் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் இருக்கத்தக்கதாகவே, இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் சிறப்புச் சட்டத்தின் விளைவை 3 தசாப்தங்களாக இந்த நாட்டின் மூவின மக்களும் அனுபவித்திருக்கின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு வழங்கிய கட்டுப்பாடற்ற அதிகாரம், அந்தச் சட்டத்தை வைத்து அவர்கள் ஆள்வோரின் நலனுக்காக எவ்வாறெல்லாம் செயற்பட்டார்கள் என்பதை அறிய முடியும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டமும் அவ்வாறானதொன்றே. ஆட்சியாளர்களின் தேவைக்கே அது பயன்படுத்தப்படப் போகின்றது. ஆட்சியாளர்களுக்கு விரும்பத்தகாத சகல பதிவுகளும் சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கப்படப் போகின்றன. அவ்வாறான பதிவர்கள் குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் - முற்போக்குவாதிகள் ஊடகர்கள் கைதாகப் போகின்றனர். இந்தச் சட்டத்தின் ஊடாக அரச தலைவரால் 5 பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்படும். அந்த ஆணைக்குழுவே, ஒவ்வொற்று சமூகவலைத்தளப் பதிவுகள் தொடர்பிலும் தீர்மானிக்கும் உரித்தைக்கொண்டிருக்கப்போகின்றது. அரச தலைவரால் நியமிக்கப்படும் ஓர் ஆணைக்குழு எப்படி இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற பெயரில் இயங்கிய ஆணைக்குழுக்கள் ஆட்சியாளர்களின் தாளத்துக்கு ஆடாவிட்டால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது பரகசியமானது. இப்படியான நிலையில் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணையாளர்கள் சமூகஊடகங்களின் பதிவுகளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணைக்குழு, சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்களை சவாலுக்கு உட் படுத்தமுடியாது. அதாவது மேன்முறையீடு செய்யமுடி யாது. நீதிமன்றப் பொறிமுறையை நாடமுடியாது. இது மிகமோசமானதொரு நடைமுறையே. இப்படியான சட்டத்தையே நாடாளுமன்றத்தில் தலைகீழாக நின்று ஆளும் தரப்பு நிறைவேற்றியிருக்கின்றது. மக்கள் இதன் ஆபத்தை உணர்ந்து வீதிக்கு இறங்காத வரையில் ஆட்சியாளர்கள் இதை விட மோசமாக இன்னும் செயற்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்.

https://newuthayan.com/article/சட்டத்தின்_பெயரால்_சர்வாதிகாரம்