Aggregator

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
மேலே ஏராளன் தந்த செய்தியில் இப்படி தான் உள்ளது. 👇 தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்

3 months 2 weeks ago
இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர். சிலர் தான் கொலை கொள்ளைகள் செய்யும் கெட்டவர்கள் அவர்களை இந்த நல்லவவரால் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அவர் தொடர்ந்தும் அங்கே இருந்தார்

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
உள்ளூர் நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றம் நடத்தப்படும். வழக்குகள் வெல்வது தோற்பது சாதாரணமாக நிகழும் நிகழ்வுகள் இதனை வைத்து வழக்குகள் போடாதே என்று கூறுவது அதுவும் ஒரு அமைச்சர் கூறுவது கேலிகூத்தாகும். இந்த அமைச்சர் விருப்பம் என்ன??? சர்வதேச நீதிமன்றத்தில் தமிழருக்கு சார்பாக வழக்கு தோற்க வேண்டும் என்பது தானே?? வெல்ல வேண்டும் என்பது இவருடைய விருப்பம் இல்லையே ! எனவே சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அமைச்சர் விருப்பம் நிறைவேறும் அதை ஏன் எதிர்க்க வேண்டும் ?? இங்கே முகத்திரை கிழிச்சது அமைச்சருக்கு தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு அல்ல வழக்கு தோற்க்கும். என்று எந்தவொரு வழக்கினையும். போடமால் விடுவதில்லை எனவேதான் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை தெரிவு செய்வது கோருவது சரியானது ஆகும் நாங்கள் எங்கள் பக்கத்து நியாயத்தை எடுத்து உரைக்க வேண்டும் தீர்ப்பை நீதிமன்றம் தான் வழங்க வேண்டும் நாங்கள் தீர்ப்பை வழங்குவது கூடாது தீர்ப்பு எப்படியுமிருக்கலாம்

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

3 months 2 weeks ago
Suren Surenthiran London ல் இருப்பதால் அவர் தப்பிப் பிழைத்தார். யாழ் களத்தில் துரோகியாக முத்திரை குத்தப்படுபவர்களின் நிலை ......🥺

இரண்டாம் பயணம்

3 months 2 weeks ago
நன்றி கிருபன். படத்துடன். விளக்கம் அருமை நான் உந்த இடங்களுக்கு வந்தது இல்லை ஒரு சின்ன கிராமத்தில் நிறைய பாடசாலைகள் உண்டு ஆச்சரியமாய் இருக்கிறது கரணவாய்யில் அனைவரும் படித்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
நான் ஒன்றை கேட்டேன். உங்களிடம் இல்லை. எதுக்கு சும்மா எதுகை மோனை விளையாட்டு,? குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே.

மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)

3 months 2 weeks ago
Working from home இல்லாத காலத்திலும் வாசித்துக்கொண்டுதான் இருந்தேன்.😁 இப்போது புத்தகத்தை கையில் தூக்கி வைத்து படிக்கவேண்டியதில்லை! Kindle app அல்லது ஒன்லைனில் அதிகம் படிப்பது. இடையிடையே printed புத்தகங்கள். ஆசான் ஜெயமோகனின் மகாபாரதம் நாவல் வரிசையில் 16வது புத்தகம் படிக்கின்றேன். பாண்டவர்களின் பாதி நாடு கேட்டு, ஆறு ஊர் கேட்கும் வரை வந்தாயிற்று. இன்னும் பத்து நாவல்கள் உள்ளன. 2026 இல் முடிக்கலாம்!

இரண்டாம் பயணம்

3 months 2 weeks ago
முன்னர் ஒரு காலத்தில் குஞ்சர்கடைச் சந்தியில் இருந்து கல்லுவம் போகும் வீதியில் “கரணவாய் 1 மைல்” என்று வழிகாட்டும் தூணில் இருந்தது. இது கரணவாய் மகாவித்தியாலயம் அமைந்துள்ள இடத்தையே கரணவாய் என்று குறிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் கரணவாய் எனும் கிராம நிர்வாக அலகு 750 இலக்க பஸ் போகும் யாழ்- பருத்தித்துறை வீதியின் இரு பக்கமும் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதான வீதியின் வடக்கில் வீடும், தோட்டங்கள் வீதிக்கு தெற்கேயும் இருந்தன. மாரி தொடங்கும் காலத்தில் அதிகாலையில் குழைவண்டில்கள் இந்தவீதியில் எமது தோட்டத்திற்கு அருகில் தரித்து நிற்கும்! 90களில் (என நினைக்கின்றேன்) கரணவாய் நிர்வாகத் தேவைக்காக மத்தி (யாழ்-பருத்தித்துறை வீதிக்கும், வதிரி-உடுப்பிட்டி வீதிக்கும் இடையே), வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டது. இதன்படி எமது வீடு அமைந்துள்ள இடம் மத்தியிலும், தோட்டம் தெற்கிலும், நான் படித்த பாலர் பாடசாலை வடக்கிலும், பட்டம் அறுத்துக்கொண்டு போனால் விழும் இடம் மேற்கிலும் உள்ளன! கரணவாய் கிழக்குப் பகுதிக்கு போகவேண்டிய தேவை அநேகமாக இருந்ததில்லை. @ரஞ்சித் இன் அம்மம்மா வீடு நாவலர் மடத்தில் இருந்து தெற்கு நோக்கிப் போகும் பாதையில் உப்புவெளிக்கு வடக்கேயும் , விக்கினேஸ்வராக் கல்லூரிக்கு மேற்கேயும் உள்ள கரணவாய்-கரவெட்டி எல்லையில் உள்ள உச்சில் அம்மன் கோயிலடியில் இருக்கின்றது. நான் ஒரே ஒரு தடவைதான் குருக்கள்பகுதி, மணல்பாதிப் பக்கத்தால் இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திற்குப் போயிருக்கின்றேன்.😊

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
இலங்கையின் நீதித்துறையின் சீரழிவே சர்வதேச நீதிமன்றத்தினை நாட மக்கள் விரும்புகிறார்கள், மக்கள் அனைத்தினையும் சகித்து வாழவேண்டும் என கூறுவதன்மூலம் கொஞ்ச நஞ்சமுள்ள சாதாரண மனிதர்களின் உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு காட்டு இராஜ்ஜியம் செய்ய அமைச்சர் விரும்புகிறார். இதனை எப்படி பகிரங்கமாக கூறுகிறார்கள்? எதிர்காலத்தில் மக்கள் சிந்திப்பதனை நிறுத்திவிடவேண்டும் என விரும்புகிறார்கள். ஆரம்ப பாடசாலை தமிழ் புத்தகத்தில் பக்தூர் எனும் கதை உள்ளது ரவீந்திரனாத் தாகூர் காதாசிரியர் என கருதுகிறேன்) ஒர் ஒநாய் ஒரு செல்வந்தர் வீட்டில் வசிக்கும் நாயின் செல்வசெழிப்பை பார்த்து தானும் அங்கு வாழ விரும்பும், அந்த நாயும் தன்னை எவ்வாறு அந்த வீட்டினர் கவனித்து கொள்கிறார் என கூறிகொண்டு வீடுவரை வந்துவிடும், ஓநாய் நாயின் கழுத்தில் ஒரு பட்டி காணப்பட அது என்ன என வினவ தன்னை கட்டிப்போட பயன்படுத்தும் பட்டி என நாய் கூற ஓநாயிற்கு புரிந்தது நாயின் நிலை. தொடர்ந்து நியாத்திற்காக போராடமல் விட்டால் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும். நீதியினை இலங்கையில் கோருவது மாயை என இலங்கை அமைச்சர் தன் வாயாலேயே கூறுகிறார்.

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
நிச்சயமாக இல்லை. உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் தேடியெடுத்தால் உண்மை தெரியும். உங்கள் மனச்சாட்சிக்கும் அது தெரியும்.

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை

3 months 2 weeks ago
இந்த இணையத் தளத்தைப் பார்த்தால் நம்பிக்கையுள்ளதாகத் தெரியவில்லை. இவர்களின் ட்விட்டர் பக்கத்தில் ஏராளமான தமிழ் கார்டியன் செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
த‌லை கீழாக‌ நின்றாலும் இது ந‌ட‌க்காது...........ஜ‌பிஎல் எத‌ற்காக‌ கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து என்றால் 2007 உல‌க‌ கோப்பையில் இந்தியா ப‌டு தோல்வி அடைந்து வெளி ஏறின‌து..........அதே ஆண்டு 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையையும் அறிமுக‌ம் செய்து வைச்சின‌ம்..............ஜ‌பிஎல்ல‌ ஆர‌ம்பிக்க‌ க‌டின‌மாய் உழைத்த‌வ‌ர் Lalit Modi 2008க‌ளில் இருந்து 2010வ‌ரை இவ‌ர் தான் ஜ‌பிஎல் நிர்வாகி இவ‌ர் சொல்வ‌தின் ப‌டி தான் எல்லாம் ந‌ட‌க்கும்............ல‌லித் மோடி அவ‌ரின் ந‌ண்பருட‌ன் விவாதிச்சார் 3வெளி நாட்டு வீர‌ர்க‌ளை ஒவ்வொரு அணியிலும் விளையாட‌ விட‌லாம் என்று அப்ப‌ ல‌லித் மோடியின் ந‌ண்ப‌ர் சொன்னார் 4 வெளி நாட்டு வீர‌ர்க‌ளை ஒவ்வொரு அணியிலும் விளையாட‌ விட்டால் தான் ஜ‌பிஎல் உல‌க‌ ம‌க்க‌ளிட‌ம் ந‌ல்ல‌ வ‌ர‌வேற்பை பெறும் என்று...........அத‌ற்கு ல‌லித் மோடியும் ஒரு ம‌ன‌தாய் ஓம் என்று சொல்ல‌ ஒவ்வொரு விளையாட்டிலும் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாட‌லாம் என்று அறிவித்தார்க‌ள்..........4வெளி நாட்டு வீர‌ர்க‌ளுட‌ன் 7இந்திய‌ர்க‌ளும் இப்ப‌டி தான் அன்று தொட்டு இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்க‌ இருக்கும் ஜ‌பிஎல்ல‌ விதிமுறை மாற்ற‌ம் செய்யாம‌ ந‌டைமுறையில் இருக்கு.............. ஒவ்வொரு அணியும் ஏல‌த்தில் 7வெளி நாட்டு வீர‌ர்க‌ளை வேண்ட‌லாம்.........அதில் 4பேரை விளையாட்டு மைதான‌த்தில் விளையாட‌ விட‌லாம்.........மொத்த‌மாய் ஒரு அணியில் 17 வீர‌ர்க‌ளை வைத்து இருக்க‌லாம்............. 11த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை ஒரு நேர‌த்தில் மைதான‌த்தில் விளையாட‌ விட‌ முடியாது...............த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ஜ‌பிஎல்ல‌ த‌லையிட‌ முடியாது ஜ‌பிஎல் பெரிய‌ பெரிய‌ கோடிஸ்வ‌ர‌ர்க‌ள் ஒவ்வொரு அணிய‌ வேண்டி ந‌ட‌த்தும் விளையாட்டு தான் ஜ‌பிஎல்............ அப்ப‌டி 11 த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை விளையாட‌ விட‌னும் என்றால் ர‌ஞ்சி ரொபிக்கில் தான் விளையாட‌ முடியும் அது ஒவ்வொரு மானில‌த்துக்குமான‌ போட்டி..........ஜ‌பிஎல் அப்ப‌டி இல்லை.............. ப‌ஞ்சாப் அணி........ஹிந்தி ந‌டிகை பிரித்தி சிந்தான்ட‌ கொல்க‌ட்டா ஹிந்தி ந‌டிக‌ர் ஷாருக்க‌னின் ச‌ன்ரைடெஸ் க‌ருணாநிதி குடும்ப‌த்தின் மும்பை இன்டிய‌ன் அம்பானி குடும்ப‌த்தின் வ‌ங்க‌ளூர் அந்த‌ கால‌த்தில் ம‌ல்லையாவின் இப்ப‌டி ஒவ்வொரு அணிய‌ ஒவ்வொருத‌ர் கொடி விலை கொடுத்து வேண்டின‌வை........... Lalit Modi 2010க‌ளில் ப‌ய‌ங்க‌ர ஊழ‌ல் செய்த‌தால் அவ‌ரை நீக்கி விட்டு இன்னொருத‌ர‌ ஜ‌பிஎல் நிர்வாக‌ பொறுப்புல் நிஜ‌மித்தார்க‌ள்.......... க‌ருணாநிதி குடும்ப‌மும் ஒரு ஜ‌பிஎல் அணி வைச்சு இருக்கின‌ம் அதில் இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் விளையாடுகின‌ம்............அண்ண‌ன் சீமான் சொல்வ‌தை பார்த்தால் இவ‌ர் சென்னை அணிய‌ இவ‌ரின் க‌ட்சி கார‌ர் பெய‌ரில் வேண்டினால் கூட‌ ஆர‌ம்ப‌ கால‌ ஜ‌பிஎல்ல‌ போல் குறைந்த‌து 5 த‌மிழ‌ர்க‌ளை விளையாட‌ விட‌லாம்................ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு............... பின்குறிப்பு சென்னையில் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ளுட‌ன் 7 த‌மிழ‌ர்க‌ள் விளையாடினால் விள‌ம்ப‌ர‌ சிக்க‌லில் இருந்து ப‌ல‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு முக‌ம் கொடுக்க‌ வேண்டி வ‌ரும்.............சென்னை அணியில் குறைந்த‌து 4த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடினாலே போதும் ம‌ற்ற‌ ஜ‌பிஎல் அணிக‌ளில் 8 த‌மிழ‌க‌ வீர‌க‌ள் விளையாடுகின‌ம் தினேஸ் கார்த்திக் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ந‌ட‌ராஜ‌ன் சேய் சுத‌ர்ச‌ன் ஷாருக்கான் முருக‌ன் அஸ்வின் ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வின் ....................

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
உங்களது இந்த அட்வைஸை நீங்களே கடைப்பிடிப்பதில்லை. இதே யாழ்களத்தில் எத்தனை முறை அரசியல்வாதிகளை நீங்கள் விமர்சித்திருப்பீர்கள் என்பதை கள பதிவுகளை பார்ததாலே தெரியும். உங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களுக்கு ஜதார்ததமாக தர்ககரீதியில் பதில் கூற முடியாத போது எரிச்சலுடன் ஒன்றில் எதிர்க்கருத்தாளர் மீது அபாண்டமாக பழி போடுவது அல்லது இப்படிப்பட்ட ஒரு சில மனப்பாடம் செய்யப்பட்ட வசனங்களை ஒப்புவிப்பது. 😂 என் கருத்துக்களை வாசிக்கவில்லை என்றால் இத்தனையும் பொய்யான புனைதல் தானே.?

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை

3 months 2 weeks ago
இந்த மாயைகளை நம்ப வேண்டாம் ...இன்னும் நூறு வருடங்களின் பின்பும் இதே அறிக்கை வெளி வரலாம் ....மலம் துடைத்து எறியும் கடுதாசி போல இதையும் தூக்கி ஏறிந்து கடந்து செல்ல வேண்டும் ..

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்

3 months 2 weeks ago
நாட்டின் பொருளாதார நிலை அப்படி .....அவர்களிடம அரசாங்கம் அல்லது மத்திய வங்கி சொல்லியிருக்கும் ....லஞ்சம் வாங்கி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த சொல்லி....

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
அதே போல சிறிலங்கா அரசுடன் பேசுவதும் அர்த்தமற்றது என்பது தமிழ் மக்களின் அனுபவரீதியான வெளிப்பாடு....

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்

3 months 2 weeks ago
தற்போது இலங்கையில் இருந்து கனடாவிற்கு Visit visa வில் பயணம் செய்யும் ஒவ்வொருவரையும், குறிப்பாக தனியாகச் செல்லும் இளைஞர் யுவதிகள் எல்லோரையும் மிரட்டிக் கப்பம் பெறும் செயற்பாட்டில் இலங்கைக் குடியகல்வு குடிவரவு அலுவலர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:

3 months 2 weeks ago
வடமாகாண சபை குறுகி யாழ் மாவட்ட அதிகார சபையாக மாறப்போகுது போல....யாழ்மாவட்ட பண்பாடு.... யாழ் மாவட்ட தமிழர் பண்பாடு என்று சொல்லப்படாது... அதிகாரிகளே இதில் கவனமாக் இருங்கள் நாதஸ்வரம்,மேளம் ...இதெல்லாம் எங்கே? அதென்ன கும்பியாட்டம்...இதெல்லாம் இந்திய துணை தூதரகத்தின் நிகழ்ச்சி நிரல் போல தெரிகிறது ... இஸ்லாமிய நடனம் உண்டு ,கிறிஸ்தவ,பெளத்த பண்பாடுகள் எங்கே?

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
ச்சும்மா .....😁 Indian Army massacre at Jafana Hospital Sri Lanka: look back after 36 years Sri Lankan government officially categorized the Jaffna Massacre as grave crime against humanity | SAMAA WEB DESKOct 21, 2023 Photo: File Stay Connected, Stay Informed - Follow SamaaTV on Whatsapp for Real-time Updates! It's been 36 years since the Indian military carried out a horrifying massacre at Jaffna Hospital in the city of Jaffna, Sri Lanka on October 21, 1987. According to eyewitness accounts cited by Tamil Guardian, Indian troops systematically conducted the massacre within the hospital premises, resulting in the tragic deaths of 47 innocent Tamil patients and 21 doctors, all of whom were ruthlessly killed. In 2008, the Sri Lankan government officially categorized the Jaffna Massacre as a grave crime against humanity. Prior to this event, in 1987, the Indian military had been involved in similar incidents, such as the killing of 64 civilians in Welikada, 40 in Chavakachcheri in 1988, and over 40 innocent individuals in Kokkuvil in 1989. The Tamil community, in response to these brutal actions, referred to the Indian Peace Keeping Force as the "Indian People Killing Force." These atrocities ignited a wave of anger, leading the Tamil people to seek retribution and ultimately compelling the Indian military to withdraw from the country. In 1991, the individual who attempted to assassinate Rajiv Gandhi was Kalaivani Rajaratnam, who was of Tamil descent and had been ganged raped by Indian military, Tamil Guardian reports. Tamil Guardian also reported that the Indian military's involvement in Sri Lanka resulted in severe human rights violations, including incidents of looting, massacres, and various social injustices, leaving a lasting scar on their reputation. https://www.samaa.tv/208733006-indian-army-massacre-at-jafana-hospital-sri-lanka-look-back-after-36-years

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

3 months 2 weeks ago
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
TorontoCanada
 2 மணி நேரம் முன்
 
 
 
Share
  • விளம்பரம்
 

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டனம்

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 

 

 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய தமிழர் பேரவை

கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. 

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் | Canadian Tamil Congress Toronto Office Fire Attack

 

 

 

இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.

 

https://ibctamil.com/article/canadian-tamil-congress-toronto-office-fire-attack-1706632055