Aggregator

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

3 months 2 weeks ago
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் TorontoCanada 2 மணி நேரம் முன் Share விளம்பரம் கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டனம் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனேடிய தமிழர் பேரவை கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

3 months 2 weeks ago
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
TorontoCanada
 2 மணி நேரம் முன்
 
 
 
Share
  • விளம்பரம்
 

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டனம்

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 

 

 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய தமிழர் பேரவை

கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. 

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் | Canadian Tamil Congress Toronto Office Fire Attack

 

 

 

இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.

 

 

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
விசுகு, உங்கள் பழைய அரசியல் பதிவுகளை கிண்டியெடுத்து, நீங்கள் தாயக அரசியல் நடவடிக்கைகளை அல்லது அரசியல்வாதிகளை விமர்சித்த பதிவுகளை தேடியெடுக்க இப்போது என்னால் முடியாது. ஒவ்வொரு பதிவாக வாசித்து அதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும். ஆனால், யாழ் இணையத்தில் பல கள உறவுகள் தாயக அரசியல்வாதிகளின் அரசியலை விமர்சித்த துள்ளபோதும் அந்தப் பதிவுகளில் எனது பதிவுகளை தவிர வேறு பதிவுகளில் வந்து அவ்வாறு விமர்சிப்பது தவறானது என்று நீங்கள் கூறவில்லை. ஏன் தாயக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்ககையை விமர்சித்து அவதூறு புரிந்த பதிவுகளில் கூட நீங்கள் அது தவறு என்று கூறவில்லை. நிற்க, தாயக அரசியலை விமர்சிப்பது தவறான செயல் அல்ல. தமிழ் பொதுமக்கள் அனைவருக்கும் அந்த உரிமை உள்ளது. அதன் பிரகாரமே இங்கு கள உறவுகள் அதை செய்கிறார்கள். அது உலகம் முழுவதும் ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். பொது வாழ்வில் இவ்வாறான விமர்சனங்கள் தேவை. தாயகத்தில் மக்களின் அரசியலை தீர்மானித்த/ நடைமுறையில் தீர்மானம் எடுக்கும் அனைவரையுமே விமர்சிக்கும் உரிமை பொது மக்களுக்கு உண்டு. இதில் விதிவிலக்கு எவருக்கும் இல்லை. விமர்சனம் என்பது அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டுமேயன்றி அவர்களது தனிப்பட்ட வாழ்வைப்பற்றதல்ல. தாயக/ புலம் பெயர் அரசியலை விமர்சிப்பது தவறு என்று நீங்கள் முடிவெடுத்து அதை எதிர்காலத்தில் செயற்படுத்தினால் அதை செய்யும் முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. அதில் எவரும் தலையிட முடியாது.

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
4 வெளிநாட்டு வீரர்களுக்குமேல் விளையாட முடியாது. ஆனால் 11 இந்திய வீரர்கள் விளையாடலாம். சீமான் சொன்னது நடக்கலாம் https://www.mpl.live/blog/how-many-overseas-players-are-allowed-in-ipl-teams/

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
ரஸ்யா பரம எதிரி என்ற காரணத்தால் ....அதே மேற்கு சிறிலங்காவை,இஸ்ரேலை, தள்ளி வைக்கவில்லை....

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்

3 months 2 weeks ago
ரணிலும் அமெரிக்காவும் விரும்பும் கூட்டணி...காலம் பதில் சொல்லட்டும்...வரும் பொது தேர்தலில் தமிழ் தேசியத்துடன் சுமத்திரன் நிற்பரா அல்லது சிறிலங்கா தேசியத்துடன் நிற்பாரா..என்று..

பிரி(யா)விடை -T. கோபிசங்கர்

3 months 2 weeks ago

பிரி(யா)விடை 

9 ஜூலை 1995

காலமை ஆசுபத்திரீ;

காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patient ஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை எண்டு senior group இல எல்லாரையும் wardக்கு வெளீல கலைச்சு விட்டிட்டார். ஆர்டை நோயாளி எண்டு சேர் கேக்கேக்க ஒற்றுமையா காட்டிக் குடுக்காம விட்டிட்டு பிறகு “எல்லாம் அரவிந்தனால” எண்டு பெட்டைகள் விரலை நீட்ட, நான் canteen இல சாப்பிட்டிட்டு வாறன் எண்டு அரோ போனான். 

படிப்பை மட்டுமே மூச்சாயும் மூலதனமாயும் நினைச்சு வந்திருந்த எல்லாப் பொம்பிளைப் பிள்ளைகளும் சில பெடியளும் “சேர் இனிமே இப்பிடி நடக்காது” எண்டு சொல்லிக் காலில விழ, “சரி , இண்டைக்கு இரவும் நிண்டு எல்லாரும் full history யும் கேட்டு வையுங்கோ” எண்டு கணேசர் சொல்ல, “ஓம் சேர்” எண்டு சொன்னது நல்லூர் முருகனுக்கே கேட்டிச்சுது. 

பின்னேரம் போல “அடேய் இண்டைக்கு கணேசர் medicos nite க்கு chief guest ஆப் போறாராம் நாங்கள் பின்னேரம் வரத்தேவேல்லை” எண்டு சிலர் வெளிக்கிட “சேர் சொன்னாக் கட்டாயம் வருவார்” எண்டு பெட்டைகள் வெருட்ட வெளிக்கிட்ட பெடியள் திருப்பி நிண்டிச்சினம். 

ஆர்வக்கோளாறுக்காரர் எல்லாம்

அண்டைக்கு வயித்துநோ , கட்டி வெண்டு வந்த ஆளை வைச்சு கட்டி கரைஞ்சு போற அளவுக்கு அமத்திப் பாக்க சிலர் மட்டும் Nursing பழக வந்த பிள்ளைகளோட “சள்” அடிச்சுக்கொண்டு இருந்திச்சனம். புத்தகத்தைப் படிச்சு ஏறாத அறிவை தலைக்கு கீழ படுக்க வைச்சு ஏத்திக் கொண்டு சிலர் இருந்திச்சினம். பாவம் இந்த குறூப் அண்ணாமாரும் அக்காமாரும் மட்டும் இரவிரவா ஆஸ்பத்திரீல நிக்க மருத்துவபீடம் களைகட்டி இருந்திச்சுது.

பின்னேரம் medical faculty;

Ragging நேரத்தில பாத்தோண்ணயே பிடிச்சதும் சரிவராம , “பழகப் பழகப் பிடிச்சிடும் எண்டு ஒண்டாப் படிச்சதும் சரிவராம கடைசி நாள் வரை முயற்சியைக் கைவிடாம தன்டை காதல் அம்புகளை இசை ரொக்கற்றில விட்டுக் கொண்டிருந்தார் ஒரு அண்ணா. மருத்துவ பீட farewell நிகழ்வில இது எப்பவுமே நடக்கிறது. இவர் விட்ட இசைத்தூதுக்கு இணை அனுசரணை வழங்கின பிரதாபன் organன்டை எந்தப்பக்கமும் எட்டா( வது ) சுரக்கட்டையை தேடித்தேடி வாசிக்க, எங்கடை பீலிங்குக்கு ஏத்த மாதிரி மழை மட்டும் பெய்யத் தொடங்கிச்சுது. முதலாவது வருசத்தில கம்பஸில நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுக்கும் புதுசா வாறாக்கள் தான் எடுபிடி , ஆனாலும் எங்களுக்கும் எல்லாத்திலேம் பங்கு கிடைக்கும் 

கட்டி முடிக்காத இப்பத்தைய Hoover Auditorium சுவருக்கு பாயைக் கட்டி வைச்சதால பேர் வந்த “பாய்க்கடை” . இந்தப் பாய்க்கடைப் பக்கம் காத்து வாங்கிறதுக்காக போன கூட்டம் நல்ல “கணகணப்போட” திருப்பி வந்திச்சுது. வந்த குறூப் சும்மா நிக்காமல் சுதியோட வந்து சோகப்பாட்டுக்கும் லயத்தோட ஆடத் தொடங்கிச்சுது. இந்த ஜோதீல பலர் சேர நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டிருந்த சிலர் மட்டும் “வாங்கோ சேந்து குறூப்பா படம் எடுப்பம்” எண்டு சொல்லீட்டு இரகசியமா ரெண்டு பேரா போச்சினம் .

படம் எடுக்கிறதை எட்டிப் பாப்பம் எண்டு போய்ப் பாத்தா இந்த ஊர்க்காரர் இந்தப் பள்ளிக்கூட காரர் எண்டு தேடிக் கூப்பிட்டும் தங்கடை சோடிகளோட இணைஞ்சும் படம் எடுத்துக்கொண்டு இருந்திச்சினம் கொஞ்சப் பேர். சோடிகளோட இணையாத பல பேர் இசையோட இணைஞ்சு இருத்திச்சினம்.

பெய்த மழையில கேட்ட பெரிய இடி உள்ளயா வெளியையா எண்டு தெரியாத அளவு உச்சம் தொட்டிருந்தது பிரியாவிடைப் party. மேடைக்குப் பக்கத்தில கொஞ்சப்பேர் “ குரங்குகள் போலே மரங்களின் மேலே“ எண்டு பாட்டை கும்பலா பாடமாக்கிக் கொண்டு இருந்திச்சினம், கடைசியாப் பாடிறதுக்கு. பிரியிற சோகம் பெரிசாக ஆடிற இடத்தை தாண்டி ஆக்கள் இருக்கிற இடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிச்சினம் . 

நாசூக்கா , நாகரீகமா “ நாங்கள் வெளிக்கிடிறம்“ எண்டு கொஞ்சக் காஞ்சிபுரம் கட்டினவையும், டை கட்டினவையும் வெளிக்கிடத் தொடங்கிச்சினம். உடுக்கேறியும் கலை வராத ஆக்களுக்கு கலவைப் பானம் குடுத்து ஆட வைக்க முயற்சிகள் தீவிரமா நடந்து கொண்டிருந்திச்சுது. 

இரவு ஆசுபத்திரி:

வெளீல பெய்த மழையையும் இடிச்ச இடியையும் தாண்டி அங்க எங்களை விட்டிட்டு party போடிறவங்களைத் திட்டிக்கொண்டிருந்த studentsக்கு ஆசுபத்திரீல இருந்து “கணேசரட்ணம் சேருக்கு“ அம்புலன்ஸ் போகத் தான் ஆசுபத்திரி எல்லாம் தெரிய வந்திச்சுது ஒருக்கா மட்டும் கேட்ட இடி இறங்கினது நவாலி church க்க எண்டு. 

பள்ளிக்கூடக் காலத்தில ஆனந்தராஜா சேரை சுட்டிட்டாங்களாம் எண்டு கேட்ட உடன எப்பிடி கிரவுண்ட் வெறிச்சோடி ஆசுபத்திரி நிரம்பிச்சுதோ அப்பிடித்தான் இண்டைக்கும் நடந்திச்சுது மருத்துவபீடம் வெறிச்சோடி ஆஸ்பத்திரி நிரம்பிச்சுது.

ஆசுபத்திரில இருக்கிற ஓரு அம்புலன்ஸை அனுப்பி என்ன செய்யிறது , எத்தினை வாகனம் தேவை எண்டு நிர்வாகம் யோசிக்க ஓட்டோ, மோட்டசைக்கிள் , land master எண்டு நிண்ட எல்லா வாகனத்திலேம் காயக்காரர் வந்திறங்கிச்சனம். வந்தவனுக்குப் பதிவு ஒண்டும் போடாமல் நேர வாட்டில விட்டிட்டு, பெரிய காயக்காரரை theatre க்கு கொண்டு போகத் தொடங்கிச்சினம். ஒப்பிரேசன் தியட்டருக்க போய்ப் பாத்தா ஒரு trolley இல ரெண்டு மூண்டு பேராக் கிடத்தி இருச்சினம். Theatre வாசலிலியே ஒப்பிரேசனுக்கு எடுக்க முதலே ஒவ்வொரு உயிராப் பிரியத் தொடங்கிச்சுது. 

வீம்பா அறிக்கை விட்டு நான் டொக்டரா வாறது தான் நோக்கம் எண்டு பாலர் வகுப்பிலயே சொல்லிப் படிச்சு வந்த வெள்ளைக் கோட்டுக் கார senior அக்கா மார் இறந்ததுக்கெல்லாம் உயிர் கொடுக்க முயற்சிச்சு சரிவராதெண்டு அறிஞ்சு விக்கி விக்கி அழுது கொண்டு நிண்டிச்சினம்.

கடைசியா OPD யில வந்திறங்கின tractor ஆல இறங்கக்கூடிய ஆக்கள் இறங்கி வர, இறங்க ஏலாததுகளை தூக்குவம் எண்டு போய் கையைப்பிடிச்சுத் தூக்கினவனுக்கு கைமட்டும் , காலைப் பிடிச்சவனுக்கு கால் மட்டும் கிடைச்சுது . முழுசா ஒண்டு கூட இருக்கேல்லை . எல்லாத் துண்டையும் இறக்கீட்டு அண்டிரவு முழுக்க கையெது காலெது எண்டு பாத்த jig saw puzzle மாதிரி பொருத்தீட்டு அடையாளம் கண்டு பிடிச்சாக்களை அப்பிடியே கட்டிக் குடுத்து விட்டிச்சினம் death certificate கூட இல்லாமல்.

அடுத்தநாள் விடியாத பொழுதில்

செத்தவை ஆரார் எண்டு பேப்பர்காரான் தான் கண்டுபிடிச்சுப் போட்டிருந்தான். பொறுக்காத பொருந்தாத துண்டுகளின் கணக்கு எத்தினை எண்டு இப்பவரை தெரியாது. 

இந்த சோகத்தை ஊர் அழுது முடியமுதல் அடுத்தடுத்த ஊரிலேம் இடம் பெயர்வு வர எட்டுச் செலவு எட்டாமலும் , அந்திரட்டி அந்தரிச்சும் போனது . 

இடம்பெயர்வு 30/101995

“ பல்கலைக் கழகம் அகதி முகாமானது” எண்ட தலைப்போட ஒரு நாள் உதயன் வர அதோட சனம் ஒதுங்கின இடம் எல்லாம் அகதி முகாமாக மாற, அண்டின சனத்துக்கு அண்டைக்கு சமைச்சதை பிரிச்சுக் குடுத்துச் சாப்பிட்டிட்டு அடுத்த வேளை கூட சமைக்கலாமா இல்லையா எண்டு சனம் யோசிச்சுக் கொண்டு இருந்திச்சுது.

ஸ்பீக்கர் வைச்சு ரோடு ரோடாப் போய் வெளிக்கிடச் சொன்னதை கேக்காம ரெண்டு நாள் பொறுத்துப் பாப்பம் எண்ட சனம் , துவக்குச்சூட்டுக்கும் அசையாத சனம், குண்டு விழுந்தாலும் வரமாட்டேன் எண்ட சனம் எல்லாம் கடைசீல வீம்பைக் கைவிட, உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனமே மரதன் ஓடியது. உயிரற்றதை எல்லாம் அப்பிடியே விட்டிட்டு, மனமில்லாமல் அடை வைச்ச முட்டையைக் கூட அரை உயிரோட கொண்டு போச்சுது. 

படிப்புமில்லை இனி ஓடிப் பயனுமில்லை எண்ட சிலர் மட்டும் திருப்பி அடிப்பம் எண்டு அண்ணை வழி போக வழமை போல மற்றவர் எல்லாம் மந்தைகளாய் பிரிந்தனர்.

நான் தான் முன்னுக்கு ஓடிறன் எண்டு வந்தவனெல்லாம் நிண்ட இடத்திலேயே ஓடிக் கொண்டிருந்தான் . யாழ்ப்பாணத்தில இருந்த நாவக்குளிப் பாலத்துக்கால சனம் எல்லாம் தென்மராட்சிக்கு, பிரசவிச்சு வெளீல வரக் கஸ்டப்படிற பிள்ளை மாதிரி முக்கி ,மூச்சு முட்டி, இஞ்சி இஞ்சியாய் அசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் வந்துது. “அறுந்து போவாங்கள் இப்பிடி செய்யிறதுக்கு ஒரேடியா குண்டைப் போட்டு எல்லாரையும் சாக்காட்டி விடலாம்” எண்டு ஒரு கிழவி சொன்னது ஆருக்கு கேட்டிச்சோ தெரியேல்லை அவனடிச்ச செல் நீர்வேலி தரவை வரைக்கும் வந்து விழ 

குடும்பமா, குறூப் குறூப்பா ஓடத் தொடங்கினவை எல்லாம் , கூட்டத்தில தாங்கள் எங்க நிக்கிறம் எண்டும் தெரியாம தங்களைச் சுத்தி ஆர் நிக்கினம் எண்டும் தெரியாம தேடிறதையும் கை விட்டிட்டு தனித்துப் போக , வாழக்கைச் சங்கிலிகள் கனக்க அறுந்து போய் தனி வளையங்களாகியது. 

விடை பெறாமலே பிரிஞ்ச கம்பஸ் பிரியாவிடையும் , சொல்ல முடியாமலே போன இடம் பெயர்வுகளும் கன பேரை பிறகு சேர்க்கவே முடியாத பிரிவிடையாப் போனது தான் சோகம். 

ஒண்டு மட்டும் உண்மை இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை, இனிமேலும்……

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
ஜ‌பிஎல் விதிமுறை ஒவ்வொரு அணியிலும் 4வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாட‌னும்...........இவ‌ர்க‌ளுட‌ன் சேர்த்து 7இந்திய‌ வீர‌ர்க‌ள்................ஜ‌பிஎல் ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை இதில் ஜ‌பிஎல் நிர்வாக‌ம் மாற்ற‌ம் செய்ய‌ வில்லை...........சென்னையில் 11 தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் ஒரு போதும் விளையாட‌ முடியாது................. இந்த‌ விடைய‌த்தில் அண்ண‌ன் சீமான் தேவை இல்லாம‌ மூக்கை நுழைத்து விட்டார்..............

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
We are dying slowly:’ Palestinians are eating grass and drinking polluted water as famine looms across Gaza CNN — Hanadi Gamal Saed El Jamara, 38, says sleep is all that can distract her children from the aching hunger gnawing at their bellies. These days, the mother-of-seven finds herself begging for food on the mud-caked streets of Rafah, in southern Gaza. She tries to feed her kids at least once a day, she says, while tending to her husband, a cancer and diabetes patient. “They are weak now, they always have diarrhea, their faces are yellow,” El Jamara, whose family was displaced from northern Gaza, told CNN on January 9. “My 17-year-old daughter tells me she feels dizziness, my husband is not eating.” As Gaza spirals toward full-scale famine, displaced civilians and health workers told CNN they go hungry so their children can eat what little is available. If Palestinians find water, it is likely undrinkable. When relief trucks trickle into the strip, people clamber over each other to grab aid. Children living on the streets, after being forced from their homes by Israel’s bombardment, cry and fight over stale bread. Others reportedly walk for hours in the cold searching for food, risking exposure to Israeli strikes. Even before the war, two out of three people in Gaza relied on food support, Arif Husain, the chief economist at the World Food Programme (WFP), told CNN. Palestinians have lived through 17 years of partial blockade imposed by Israel and Egypt. https://www.cnn.com/2024/01/30/middleeast/famine-looms-in-gaza-israel-war-intl/index.html

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்

3 months 2 weeks ago
நியுசிலாந் இந்தியா கூட‌ ப‌டு தோல்வி இல‌ங்கை பெரிய‌ ஸ்கோர் அடிச்சும் வெஸ் இண்டீஸ் வென்று விட்டார்க‌ள்..............வெஸ் இண்டீஸ் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌ ப‌டியால் இல‌ங்கையை வென்று விட்டின‌ம்...........கூட்டி க‌ழித்து பார்த்தால் இந்தியா தான் கோப்பையுட‌ன் நாடு திரும்பும்.............

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் தினேஸ் கார்த்திக் ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வின்...........இவ‌ர்க‌ள் பார்ப்ப‌ன‌ர்..........தினேஸ் கார்த்திக்கு நீண்ட‌ நாள் ஆசை சென்னைக்கு விளையாட‌னும் என்று................திற‌மையான‌ த‌மிழ‌க‌ வீர‌ர் ந‌ட‌ராஜ‌ன் இருக்க‌ ப‌டு மோச‌மாய் ப‌ந்து போடும் வ‌ட‌ நாட்டானை வேண்டி வைச்சு இருக்கின‌ம்.............பெய‌ரு சென்னை ம‌ற்ற‌ம் ப‌டி அங்கு த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்கு இட‌ம் இல்லை............ஜ‌பிஎல் தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ போது குறைந்த‌து ஜ‌ந்து த‌மிழ் வீர‌ர்க‌ள் விளையாடுவின‌ம்........... அண்ண‌ன் சீமான் சொல்வ‌து போல் 11 த‌மிழ‌னை ஜ‌பிஎல்ல‌ விளையாட‌ வைக்க‌ முடியாது அப்ப‌டி வைச்சா அது ர‌ஞ்சி ரொபிக் போல‌ மானில‌த்துக்கான‌ போட்டி போல் ஆகிவிடும்..............குறைந்த‌து மூன்று அல்ல‌து 4பேரை த‌ன்னும் விளையாட‌ விட‌னும்.................. அண்ண‌ன் சீமான் கிரிக்கேட்டை ப‌ற்றி ந‌ங்கு தெரிந்து வைத்து விட்டு வார்த்தையை விட‌னும்..................

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
Good 🥰🙏............. இவ‌ர் தான் உண்மையான‌ விளையாட்டு வீர‌ர்...............தேசிய‌ அணிக்கு இப்ப‌ இருக்கும் வெஸ் இண்டீஸ் வீர‌ர்க‌ள் முக்கிய‌ம் கொடுப்ப‌தில்லை.........இவ‌ர் முற்றிலும் மாரு ப‌ட்ட‌வ‌ர் போல் தெரிகிற‌து வாழ்த்துக்க‌ள்....................

கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட்

3 months 2 weeks ago
உலகில் எனது நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன் - கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கம் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார். பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கெப்டனாக பணியாற்றுகிறார். இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:- என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/289897

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
அடுத்த 3 ஐ.பி.எல். சீசன்களில் டோனி விளையாடுவார்! மகேந்திர சிங் டோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:- அறுவை சிகிச்சைக்கு பின்னர் டோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் டோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள். டோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். டோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது. டோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம். களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம். https://thinakkural.lk/article/289781

2023 இல் புதிய உச்சத்தை தொட்ட இராணுவ ஆயுதங்கள் விற்பனை

3 months 2 weeks ago
கடந்த 2023 இல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் இராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையை தவிர, அமெரிக்க அரசே நேரடியாக விற்பனை செய்த $81 பில்லியன் வணிகமும் இதில் அடங்கும். இப்பட்டியலில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நோர்வே ($1 ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), அவுஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகியவை அமெரிக்காவிற்கு சாதகமான ஆயுத விற்பனை வர்த்தகத்திற்கு உதவும் நாடுகள் ஆகும். இது குறித்து அமெரிக்க அரசு, “பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என தெரிவித்தது. ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது. அமெரிக்க அரசிடம் இருந்து இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் இராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாடிக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம். ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/289891