Aggregator

நான் முதல்வராக வந்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் - அவ்வணியில் நானும் விளையாடுவேன்

3 months 2 weeks ago
இனிமேல் இந்தப்பக்கம் ஒருவரும் தலைவைத்துப் படுக்கப்போவதில்லை. . 😁

இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், சட்ட கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை

3 months 2 weeks ago
Published By: VISHNU 29 JAN, 2024 | 08:33 PM (எம்.மனோசித்ரா) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் குறித்த புலமைப்பரிசில் திட்டங்களில் மருத்துவம், சட்டத்துறை, துணை மருத்துவம் (Paramedical), ஆடை வடிவமைப்பு (Fashion Design) ஆகிய கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய 2024 - 2025 காலப்பகுதியில் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பாடநெறிகளுக்கு நேரு நினைவு உதவித்தொகை திட்டத்தின் மூலமும், பொறியியல், அறிவியல் மற்றும் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மௌலானா ஆசாத் திட்டத்தின் ஊடாகவும் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175100

இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், சட்ட கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை

3 months 2 weeks ago

Published By: VISHNU  29 JAN, 2024 | 08:33 PM

image

(எம்.மனோசித்ரா)

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. 

எனினும் குறித்த புலமைப்பரிசில் திட்டங்களில் மருத்துவம், சட்டத்துறை, துணை மருத்துவம் (Paramedical), ஆடை வடிவமைப்பு (Fashion Design) ஆகிய கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. 

அதற்கமைய 2024 - 2025 காலப்பகுதியில் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பாடநெறிகளுக்கு நேரு நினைவு உதவித்தொகை திட்டத்தின் மூலமும், பொறியியல், அறிவியல் மற்றும் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மௌலானா ஆசாத் திட்டத்தின் ஊடாகவும் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175100

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
ஜதார்தத்திற்கு புறம்பாக சுயநல அரசியலை செய்துவரும் புலம் பெயர் நாட்டு மற்றும் தாயக அரசியல்வாதிகளின் அரசியலை பற்றியே நான் பேசினேன். அதை பேசுவதற்கு உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் உள்ளது. செயற் திட்டங்களை செய்வது தலைமைகளே தவிர தனி மனிதர்கள் அல்ல. உங்களால் அரசியலில் எந்த செயற் திட்டத்தையும் செய்ய முடியாதது போலவே எனக்கும் செய்ய முடியாது. தற்போதைய நிலையில் நீங்கள் விசுவாசம் வைத்திருக்கும் புலம் பெயர் மற்றும் தாயக அரசியல்வாதிகளிடமேயே எந்த செயற் திட்டமும் இல்லாது காலத்தை வீண்டிக்கும் போது நீங்கள் என்னிடம் செயற் திட்டத்தை பற்றி பேசுகின்றீர்கள். தர்ககரீதியில் கருத்தாட முடியாத போது கருத்தாடும் எதிர்தரப்பு மீது அபாண்டமாக பழி போட்டு நான் சொல்லாததை சொன்னதாக பொய்யுரைத்து விவாதம் செய்வது உங்களைப் போன்றவர்களின் வழமையான பாணிதான்.

பொருளாதார பயங்கரவாதிகளான ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் - சஜித்

3 months 2 weeks ago
29 JAN, 2024 | 08:47 PM நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ் குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷ்ர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நட்பு வட்டார செல்வந்தர்களை பாதுகாக்கும், கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் ராஜபக்ஷ் பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து மக்களை இந்த நெருக்கடியில் இருந்து மீட்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஹேவாஹெட்ட நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். மாற்றுத் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் குழு திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தைக் கேட்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இல்லாமலயே திருடர்களைப் பிடித்தது. நாட்டிற்கு மாற்று அணி என்று கூறும் சில குழுக்கள் ஆவணப் கோப்புகளைக் காட்டி திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும், நீதித்துறையின் ஊடாக நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்கள் யார் என்பதை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ராஜபக்ஷ் மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார். இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து,விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி,குற்றம் சாட்டப்பட்டவர்களது குடியியல் உரிமைகளை இல்லாதொழிக்காதது ஏன் என ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார். ராஜபக்ஷ் மொட்டு மாபியா மூலம் தற்போதைய ஜனாதிபதியை நியமித்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ராஜபக்ஷ் மொட்டு மாபியாவைச் சேர்ந்த 134 பேர் தமது கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளமையினாலயே நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார். இது தொடர்பில் வினவிய போது மொட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார்.இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்ஷ்ர்களின் கைகளிலயே உள்ளன. இந்த திருடர்களுடன் ஜனாதிபதிக்கு டீல் இருந்த போதிலும்,இவ்வாறான டீல் தன்னிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடும் திருடர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும். நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175082

பொருளாதார பயங்கரவாதிகளான ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் - சஜித்

3 months 2 weeks ago
29 JAN, 2024 | 08:47 PM
image

நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ் குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷ்ர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நட்பு வட்டார செல்வந்தர்களை பாதுகாக்கும், கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் ராஜபக்ஷ் பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து மக்களை இந்த நெருக்கடியில் இருந்து மீட்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹேவாஹெட்ட நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

dsg.gif

மாற்றுத் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் குழு திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தைக் கேட்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இல்லாமலயே திருடர்களைப் பிடித்தது.

நாட்டிற்கு மாற்று அணி என்று கூறும் சில குழுக்கள் ஆவணப் கோப்புகளைக் காட்டி திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும், நீதித்துறையின் ஊடாக நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்கள் யார் என்பதை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார்.

th.gif

இந்நாட்டை வங்குரோத்தடையச்  செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து,விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி,குற்றம் சாட்டப்பட்டவர்களது குடியியல் உரிமைகளை இல்லாதொழிக்காதது ஏன் என ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியா மூலம்  தற்போதைய ஜனாதிபதியை நியமித்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

rhf.gif

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவைச் சேர்ந்த 134 பேர் தமது கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளமையினாலயே நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார்.

இது தொடர்பில் வினவிய போது மொட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார்.இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்ஷ்ர்களின் கைகளிலயே உள்ளன.

egd.gif

இந்த திருடர்களுடன் ஜனாதிபதிக்கு டீல் இருந்த போதிலும்,இவ்வாறான டீல் தன்னிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் திருடர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/175082

சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது!

3 months 2 weeks ago
சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது! 29 JAN, 2024 | 08:50 PM சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (29) கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/175106

சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது!

3 months 2 weeks ago
சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது!
29 JAN, 2024 | 08:50 PM
image

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (29) கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.

அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/175106

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது பக்கத்தில் சிங்களம் படைத்து வைத்து காத்திருக்க தமிழர்கள் அதை தட்டி விட்டு உலகத்திடம் சென்று தேவையற்ற பயனற்ற விடயங்களை பேசுவதாக இருக்கிறது. உண்மையில் சிங்களத்திற்கான ஒரு சிறிய அழுத்தமாகத்தான் தமிழினம் இதை செய்கிறதே தவிர இறுதியில் சிங்களத்திடம் தான் தீர்வு என்பது ஈழத்தில் இன்று பிறக்கும் குழந்தைக்கும் தெரிந்த விஷயம் தான். உங்கள் போன்ற மேதாவிகள் பிழை அல்லது செய்பவர்களை பைத்தியம் என்பீர்களே தவிர உங்களால் எதையும் பிரேரிக்க முன்னுதாரணமாக செயற்பட முடியாது தெரியாது. அதற்கான எந்த முயற்சியோ செயற்பாடோ செயல்முறைகளோ உங்களிடம் இல்லை. உங்களிடம் இருந்து வரவும் போவதில்லை.

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
ஆம் இந்த‌ காணொளிய‌ நேற்று பார்த்தேன் எல்லாரும் வெற்றி ஆன‌ந்த‌த்தில் க‌ண்ணீரும் விட்டார்க‌ள்..............வெஸ் இண்டீஸ் அணி 2வ‌து ரெஸ் ம‌ச்சை வெல்லுவின‌ம் என்று யாரும் எதிர் பார்த்து இருந்து இருக்க‌ மாட்டின‌ம்................ வெஸ் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துக்க‌ள்............. ப‌ழைய‌ வெஸ் இண்டீஸ் சீனிய‌ வீர‌ர்க‌ள் பெரிய‌ ம‌லைக‌ள் நிலைத்து நின்று ஆடுவின‌ம்............இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் அவேன்ட‌ இட‌த்தை ஒரு போதும் பிடிக்க‌ மாட்டின‌ம்............... இனி ஒரு நாள் தொட‌ர்...........பாப்போம் விளையாட்டு எப்ப‌டி போகுது என்னு அவுஸ் முன்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு ஓய்வு கொடுத்து இருக்கு..............சிமித் த‌ல‌மையிலான‌ அவுஸ் அணியும் ந‌ல்ல‌ அணி.................

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்

3 months 2 weeks ago
அடுத்த‌ ம‌ச்சில் இந்தியா த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ பிச் அமைச்சு சூழ்ச்சி முறையில் வெல்ல‌ பாப்பின‌ம்..............விளையாட்டில் நேர்மை இருக்க‌னும் ஆனால் இந்தியாவில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அதை எதிர் பார்க்க‌ முடியாது.....................

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
27 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி: கண்ணீர் சிந்திய லாரா - வைரலாகும் வீடியோ வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அவுஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 1997 ஆம் ஆண்டில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அருகில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார். கண் கலங்கியபடி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு லாரா வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/289746 கில்லி முகத்திலும் புன்னகை!!

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்

3 months 2 weeks ago
இங்கிலாந்துக்கு எதிராக வெளிப்பட்ட பலவீனம் - 'பேஸ்பால்' நுட்பத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லையா? பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், விமல் குமார் பதவி, மூத்த விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய அணி சொந்த மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் எளிதில் தோல்வியடையாது. எட்டு ஆண்டுகளாக விராட் கோலியின் தலைமையில், இந்திய மண்ணில் இந்தியா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது, ஆனால் ரோகித் சர்மாவின் தலைமையில், ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்திய அணி இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இப்போது ஹைதராபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தோல்வியடையாத சாதனையை இந்திய அணி எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். இங்கிலாந்து அணிக்கு எதிரான பேஸ்பால் வியூகம், இந்திய அணிக்கு அதிர்ச்சி தந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தின் காலகட்டத்தை கடந்து செல்லும் தற்போதைய அணிக்கு வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சவால்கள் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி இதில் விளையாடாவிட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இஷாந்த் சர்மா, விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறினர். அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா மற்றும் கோலி கூட டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் 'பேஸ்பால்' நுட்பத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லையா? பட மூலாதாரம்,REUTERS இந்த வீரர்கள் இல்லாத பட்சத்தில், ஹைதராபாத் போட்டியில் நடந்த தோல்வியைப் போன்ற ஒரு தோல்விக்கு இந்திய அணி ரசிகர்கள் வேதனைப்பட மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தும், இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல்முறை. 690 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் மிக்க பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை விளையாடும் பதினொன்று பேரில் இருந்து வெளியேற்றியது இங்கிலாந்து அணி. போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதாக இங்கிலாந்து அணி அறிவித்தது. இதில், இரண்டு வீரர்கள் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்தைத்தான் பெற்றிருந்தார்கள். உண்மையில், பந்து மற்றும் மட்டைக்கு பதிலாக ஆக்ரோஷமான சிந்தனையால் இங்கிலாந்து அணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இதுவே பேஸ்பால் விளையாட்டின் அடிப்படைத் தத்துவம். சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், தோல்வியைப் பொருட்படுத்தாமல் வெற்றி பெற விளையாடுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த வார்த்தைகள் காகிதத்தில் படிக்கும் போதும் காதுகளால் கேட்கும் போதும் நன்றாகத் தோன்றலாம், ஆனால், ஆடுகளத்தில் இந்த சிந்தனையை செயல்படுத்துவது மிகவும் கடினம். பட மூலாதாரம்,REUTERS இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்த வகை கிரிக்கெட்டை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு, அதுவும் இவ்வளவு நெருக்கமான வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள இந்திய அணியை அதிகம் விமர்சிக்க முடியாது. இந்த தோல்விக்குப் பிறகு அணி நிர்வாகம் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. நான்காவது இன்னிங்ஸில் 230 ரன்களை சேஸ் செய்வது அவ்வளவு கடினம் அல்ல என்று கேப்டன் ரோகித் சர்மா உணர்ந்தார். ஆனால், அவரது பேட்ஸ்மேன்கள் தைரியத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் என்ற இலக்கை பேட்ஸ்மேன்கள் எட்டியிருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பினார். ஏனெனில், இந்தியாவில் கடைசி இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது சவாலானது. ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் எப்படி இருக்கு? பட மூலாதாரம்,REUTERS போட்டி முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஷுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்பாக பயிற்சியாளர் டிராவிட்டிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த வீரர்கள் ஹைதராபத்தில் நடைபெற்ற இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களிலியே அவுட் ஆகி வெளியேறினர். அதேபோல, சமீபத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இந்த இரண்டு வீர்களின் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளி விவரங்களைப் பார்த்தால், அவர்களே அதிர்ச்சியடைவார்கள். விசாகப்பட்டினத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அணியில் மாற்றம் செய்து, இந்த இரண்டு வீரர்களில் ஒருவரை உட்கார வைத்து, ரஜத் பட்டிதாரை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறைாக களமிறக்கினால், அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி சொல்லும் செய்தி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியதன் மூலம், எப்போதும் எதிர் அணியினரை இலகுவாகப் பார்ப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்ற செய்தியை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு கூறியுள்ளது. இங்கிலாந்து தனது வலிமையான எதிரியை தோற்கடித்த விதம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியதை நினைவுபடுத்தியது. ரஹானே அணி முதலில் காபாவில் நடந்த டெஸ்டில் எளிமையாக வெற்றி பெற்றது. பின்னர் தொடரையும் வென்றது. இங்கிலாந்து 2012ல் செய்த அதே சாதனையை மீண்டும் செய்ய முடியுமா? இந்திய மண்ணில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமா? இது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஏனென்றால் 2017-ல் இதேபோல் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்லும் கனவு தகர்ந்துவிட்டது. இந்த தொடரில் இந்தியாவின் சாதனையை எப்படியும் தக்க வைக்க ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு அழுத்தங்கள் இருக்கும். இந்தியா மீண்டும் களமிறங்கி இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வெற்றி பெற்றால், இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற மற்ற அணிகளின் ஆசை இன்னும் சில ஆண்டுகளுக்கு நிறைவேறாது என்று அர்த்தம். https://www.bbc.com/tamil/articles/c51w6wxxwndo

தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்

3 months 2 weeks ago
https://www.nillanthan.com/180/ அரசியல் கட்டுரைகள் By Nillanthan - 10 years ago 714 Less than a minute Google+WhatsappShare via Email சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஷ்டி எனலாம். அதுபோலவே தமிழர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு வார்த்தை தேசியம் எனலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளின் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. இப்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும் தேசியம் என்ற வார்த்தை அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள தீவிரமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் பற்றிக் கதைக்கிறார்கள். மிதமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் கதைக்கின்றார்கள்.குறிப்பாக இணையத் தளப் பிரசாரங்களில் ‘‘தேசியம் வெல்ல வாக்களிப்போம்” என்றெல்லாம் சுலோகங்கள் வருகின்றன. சில மாதங்களிற்கு முன்பு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவு நாள் கொண்டாடப்பட்டபோது யாழ். நகரில் அவருடைய நினைவுத்தூபியைச் சுற்றியிருக்கும் மதிலில் கட்டப்பட்டிருந்த ஒரு பதாகையில் ‘‘தேசியத் தந்தை” என்று எழுதப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்த சில இளம் ஊடகவியலாளர்களிடம் ஒரு நாள் கேட்டேன், உங்களுடைய ஊடகக் கொள்கை எது என்று. தேசியத்தைப் பாதுகாத்தால் சரி என்று சொன்னார்கள். நான் தொடர்ந்து கேட்டேன், ‘‘தேசியம்” என்றால் என்ன? என்று. அவர்களால் துலக்கமான பதிலைச் சொல்ல முடியவில்லை. அவர்கள் மட்டுமல்ல இன்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தீவிர தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் பலரிடமும் இக்கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். தேசியம் என்றால் என்ன? என்று. அவர்கள் கூறிய பதில்கள் வருமாறு…….. ஒரு பகுதியினர் சொன்னார்கள் அது ஒரு இனமான உணர்ச்சி என்று. இன்னொரு பகுதியினர் சொன்னார்கள், அது அடக்குமுறைக்கு எதிரான இன எதிர்ப்புணர்ச்சி என்று. வேறு சிலர் சொன்னார்கள் அது தம்மை ஒரு தேசமாகக் கட்டமைத்துக் கொள்ள முற்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் திரட்டப்பட்ட உணர்ச்சி என்று. மேற்கண்ட பதில்களனைத்தையும் தொகுத்து அவற்றின் சாராம்சத்தின் அடிப்படையிற் கூறின் தேசியம் என்று அவர்கள் விளங்கி வைத்திருப்பது இனமானம் சார்ந்த ஒரு கூட்டு எதிர்ப்புணர்ச்சிதான். இது சரியா? அல்லது தேசியம் எனப்படுவது அதைவிட அழமானதா? தேசியம் எனப்படுவது அதைவிட ஆழமானதுதான். அது அதிக பட்சம் அறிவுபூர்வமானது. அதைவிடக் குறைந்த அளவே உணர்சசிகரமானது. ஆனால், பிரயோக நிலையில் அது அதிகபட்சம் உணர்ச்சிகரமானதாகவே காணப்படுகிறது. இக்கட்டுரையானது தேசியம் தொடர்பான புலமைசார் கோட்பாடுகளிற்குள் அதிகம் இறங்கப்போவதில்லை. ஒரு வாரப் பத்திரிகை அதற்குரிய இடமுமல்ல. பதிலாக, தேசியத்தை அதன் பிரயோக வடிவத்தில் வியாக்கியானம் செய்யும் அல்லது வரை விலக்கணம் செய்யும் ஒரு முயற்சியே இது. தூயதேசியம் பற்றியல்ல பிரயோக தேசியம் பற்றியே இங்கு உரையாடப்படுகின்றது. ஒரு தொடர் விவாதத்திற்கான தொடக்கப்புள்ளியாக இதை எடுத்துக் கொள்ளலாம். சரி. தேசியம் என்றால் என்ன? தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப் பிரக்ஞை ஆகும். எந்தவொரு பொது அடையாளத்தின் நிமித்தம் ஒரு மக்கள் கூட்டம் பெருமைப்படுகின்றதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பேரால் ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு அரசியற் சக்தியாகத் திரட்டக் கூடியதாக உள்ளதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பெயரால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகின்றதோ அல்லது அவமதிக்கப்படுகின்றதோ அந்த ஒரு அல்லது பல பொது அடையாளங்களின் பாற்பட்ட ஒரு கூட்டுப் பிரக்ஞையே தேசியம் என்பதாக பிரயோக நிலையில் காணப்படுகின்றது. 19ஆம் நூற்றாண்டின் மேற்கத்தையே நாகரிகத்தை அங்கு தோன்றிய தேசிய அலைகளே பெரிதும் வடிவமைத்தன. கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட தொடர் வளர்ச்சிகள் காரணமாக போக்குவரத்துத் துறையில் வசதிகள் பெருகின. இதனால் வாழ்க்கை இலகுவாக்கப்பட்டது. சமுகம் ஒன்று திரட்டப்பட்டது. அச்சு இயந்திரத்தின் வருகையோடு அறிவும் தகவல்களும் முன்னெப்பொழுதையும்விட அதிகரித்த அளவிலும் அதிகரித்த வேகத்திலும் பரிமாறப்பட்டன, மக்கள் மயப்பட்டன. இவ்விதமாக தகவலும், அறிவும் மக்கள் மயப்பட்டு வந்த ஒரு பின்னணியில் சமூகமானது விரைவாக ஒன்று திரட்டப்பட்டு, சமூக ஊடாட்டம் முன்னெப்பொழுதையும் விட வேகமாக நிகழ்ந்தபோது அங்கெல்லாம் தேசிய அலைகள் எழுச்சி பெறலாயின. அதாவது மக்களின் கூட்டுப் பிரக்ஞையானது விழிப்படைந்து சிலிர்த்தெழலாயிற்று. அமெரிக்க சுதந்திரப் போர், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தோன்றிய மூன்றாவது நெப்போலியனின் ஆட்சிக் காலம், இத்தாலியின் ஒருங்கிணைப்பு, ஜேர்மனியின் ஒருங்கிணைப்பு மற்றும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட நவீன மயமாக்கல் செயற்பாடுகள் போன்ற திருப்பகரமான மாற்றங்கள் எல்லாவற்றையும் அங்கு தோன்றிய தேசிய அலைகளே பெரிதும் வழி நடத்தின. ஒருங்கிணைக்கப்பட்ட ஜேர்மனியும், இத்தாலியும் ஐரோப்பாவில் இரு பெரும் புதிய சக்திகளாக எழுச்சி பெற்றன. இதனால் ஐரோப்பாவின் வலுச் சமநிலை குலையலாயிற்று. இருபதாம் நூற்றாண்டில் வெடித்த இரு உலகமகா யுத்தங்களிற்கு இதுவும் ஒரு காரணம். மேலும் நாஸிஸம், பாஸிஸம் போன்ற விகார வளர்ச்சிகளையும் இந்தப் பின்னணியில் வைத்து வியாக்கியானம் செய்வோரும் உண்டு. மேற்கைரோப்பாவானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட யுத்தங்களிற்; கூடாக தேசிய அலைகளைக் கடந்து வந்தபோதிலும்கூட அதை அதன் சரியான பொருளிற் கூறின் இரண்டாம் உலக மகா யுத்தத்துடன்தான் அது பெருமளவுக்குச் சாத்தியமாகியது எனலாம். ஆனால், கிழக்கைரோப்பாவானது அதற்கும் பல தசாப்தங்களின் பின்னரே அதைக் கடந்தது. மார்க்சியத்தின் எழுச்சியையடுத்து தேசிய அரசுகளைக் கடந்து சர்வதேசியம் பற்றிய ஒரு சிந்தனை பலமாகவும் தூலமாகவும் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதற்கும் பின்னரே கிழக்கைரோப்பா அதன் தேசிய அலைகளைக் கடந்துவந்தது. கெடுபிடிப் போரின் முடிவையடுத்து கிழக்கைரோப்பாவில் தோன்றிய தேசிய அலையானது ஒருபுறம் அங்கே புதிய அரசுகளைத் தோற்றுவித்தது. மறுபுறம் மிகப்பயங்கரமான கொலைக் களங்களைத் திறந்துவிட்டது. முடிவில் நேட்டோ விரிவாக்கத்தின் பின்னணியில் அங்கு பெருமளவிற்குத் தேசிய அலைகள் கடக்கப்பட்டுவிட்டன. ஆனால், அமெரிக்க ஐரோப்பிய அனுபவமும் ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க அனுபவங்களும் ஒன்றல்ல. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இப்பொழுதும் தேசிய உணர்ச்சிகள் எரிபற்று நிலையிற்தான் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் தேசிய அலையெனப்படுவது அதன் இயல்பான சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் திரண்டெழுந்த ஒன்றாகும். ஆனால், ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளின் நிலைமை அவ்வாறில்லை. இங்கெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் தேசிய எழுச்சிகளில் அநேகமானவை வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு எதிரானவைதான். அதாவது காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள்தான். ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க அனுபவங்களைப் பொறுத்தவரை இங்கு தோன்றிய அநேகமான தேசிய எழுச்சிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவை அல்லது ஒடுக்குமுறைக்கு எதிரானவை என்பதற்காக முற்போக்கானவைகளாகக் கருதப்பட்டன. எனினும்;, தேசிய எழுச்சிகளுக்குப் பின்னாலிருந்த கூட்டுப் பிரக்ஞைகள் யாவும் எல்லாக் களங்களிலும், எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைமைகளின்போதும் முழு அளவிற்கு முற்போக்கானவைகளாகத்தானிருந்தன என்பதற்கில்லை. ஏனெனில், ஒரு மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையானது அதன் வேர் நிலையில் முற்போக்கானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதிற்கில்லை. அது குறிப்பிட்ட சமூகத்தின் சமூகப் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகளின் பாற்பட்ட ஒன்றாகும். சில சமூகங்களில் அக்கூட்டுப் பிரக்ஞையானது ஒரு இனப்பிரக்ஞையாகவோ அல்லது மொழிப் பிரக்ஞையாகவோ இருந்தது. சில சமூகங்களில் அது மதப் பிரக்ஞையாகவோஅல்லது பிராந்தியப் பிரக்ஞையாகவோ காணப்பட்டது.அதன் வேர்கள் மிகப்புராதன காலமொன்றின் இருண்ட இடுக்குகளிற்குள்ளிருந்து புறப்பட்டு வரக்கூடும். அந்தந்தக் களத்திற்குரிய தனித்துவமான தேசிய சூழலுக்குட்பட்டு சில சமயங்களில் அது இனவெறியாகவோ, மொழிவெறியாகவோ அல்லது மதவெறியாகவோ அல்லது வேறெந்த வெறியுமாகவோ உருவாக முடியும். ஒரு சமூகத்தின் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழலே அதைப் பெரிதும் தீர்மானிக்கின்றது. ‘‘கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்” என்று மார்க்சியர்கள் கூறுவார்கள். ஆனால், கசப்பான யதார்த்தம் எதுவென்றால், கருத்து மக்களைப் பற்றிக்கொள்ள முன்பு, மதம், மொழி, இனம் போன்ற இன்னோரன்ன எப்பொழுதும் எரிபற்று நிலையிலிருக்கும் விவகாரங்கள் விரைவாக பொதுசனங்களைப் பற்றிக் கொள்கின்றன என்பதுதான். குறிப்பிட்ட சமூகத்தின் அகஜனநாயகச் சூழல் பண்பாட்டுச் செழிப்பு மற்றும் அடக்கு முறையின் தீவிரம், அனைத்துலகச் சூழல் போன்ற காரணிகள் இதைப் பெரிதும் தீர்மானிக்கின்றன. எனவே, ஒரு தேசிய பிரக்ஞையானது பொதுவாக அதன் வேரில் அதிகபட்சம் உணர்ச்சிகரமான விவகாரங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த இடத்தில்தான் குறிப்பிட்ட தேசிய பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்பு அல்லது கட்சியின் முக்கியத்துவம் பற்றிக் கூறவேண்டியிருக்கிறது. பொதுசனங்கள் எப்பொழுதும் உணர்ச்சிகரமான விவகாரங்களின் பின்தான் செல்கின்றார்கள். சிக்கலான கோட்பாடுகளை விடவும் உணர்ச்சிகரமான சுலோகங்கள் அவர்களை இலகுவாகப் பற்றிக்கொள்கின்றன. இடதுசாரி அரசியலிலும் இதுவே நடந்தது. ஆனால், அந்த அரசியலுக்குத் தலைமை தாங்கும் அமைப்பும், அதன் பிரதானிகளும் கோட்பாட்டு விளக்கத்துடனிருக்க வேண்டும். கோர்பச்சேவ் ஒரு முறை சொன்னார். லெனினிற்குப் பின் சோவியத் யூனியனின் உயர் பீடத்தில் லெனின் அளவுக்கு புத்திஜீவிகள் தலைமைப் பொறுப்பிலிருக்கவில்லை என்று. இந்த உலகத்தின் அறிவனைத்தையும் கிரகித்துக் கொண்டால் தவிர ஒரு மார்க்சிஸ்டாக இருக்க முடியாது என்று மாரக்;சிய மூலவர்கள் கூறுவதுண்டு. சாதாரண ஜனங்களால் இது முடியாது. அவர்களை இயன்றளவுக்கு அரசியல் மயப்படுத்தலாம். ஆனால், தலைமைத்துவம் கட்டாயமாக கோட்பாட்டுத் தெளிவுடன் இருக்க வேண்டும். பிளாட்டோ இதைத்தான் வேறு வார்த்தைகளில் ‘‘ஞானிகளே தலைவர்களாக இருக்க வேண்டும்” என்றார். எனவே, ஒரு சமூகத்தின் தேசியப் பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்பானது குறிப்பிட்ட கூட்டுப் பிரக்ஞை அதன் வேர் நிலையில் எவ்வளவுதான் பிற்போக்கானதாக காணப்பட்டாலும் அதை முற்போக்கானதாக பண்பு மாற்றம் செய்ய வேண்டும். அதாவது கிழிருந்து மேலெழும் உணர்ச்சிகரமான அடி நிலைத் தேசிய உணர்வை மேலிருந்து கிழிறக்கப்படும் ஜனநாயக ஒளியின் மூலம் இருள் நீக்கம் செய்ய வேண்டும். வேர் நிலை உணர்ச்சிகரமான மூலக் கூறுகளை சாத்தியமான அளவு ஜனநாயக உள்ளடக்கத்தால் பிரதியீடு செய்யவேண்டும். அதாவது, மேற்கத்தைய அறிஞர்கள் கூறுவதுபோல், ‘‘தேசியததின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும்”. இதை இன்னும் அழுத்தமாக செய்முறை விளக்கமாகக் கூறின் ஒரு சமூகத்தின் தேசிய அரசியலை முன்னெடுக்கும் அமைப்பு அல்லது கட்சியானது அந்த அரசியலின் அடித்தளம் ஜனநாயகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தேசியப் பிரக்ஞையும் அதன் வேரில் இனமானம், இனத்தூய்மைவாதம்,இன மேலாண்மை வாதம், இனவீரம், இன எதிர்ப்பு, மொழித்தூய்மை, மதத் தூய்மை, சாதி அசமத்துவம், பால்அசமத்துவம் போன்ற இன்னோரன்ன உணர்ச்சிகரமான அம்சங்களின் சிக்கலான கலவையாகவே காணப்படுவதுண்டு. ஆனால், இந்த உணர்ச்சிகரமான அம்சங்களை அறிவினால் அதாவது சாத்தியமான அளவு ஜனநாயகத்தால் பிரதியீடு செய்ய வேண்டிய பொறுப்பு, அத்தேசியப் பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்புக்கே உரியது. நோய்க்கூறான அம்சங்களை ஒரு ஜனநாயக இடை ஊடாட்டப் பரப்பிற் கூடாகத்தான் கடந்து செல்ல முடியும். அத்தகைய ஜனநாயகத்தை உள்ளடக்கமாகப் பெற்ற ஒரு தேசிய அரசியல்தான் அதன் ஒரு கட்ட முதிர்ச்சிக்குப் பின் சர்வதேசியமாக விரியும். இல்லையெனில் அது தானே தன்னுள் உட்சுருங்கும் குறுத்தேசிய வாதமாகத் தறுக்கணித்துப்போய்விடும். இதெல்லாம் குறிப்பிட்ட தேசிய உணர்சசிக்குத் தலைமை தாங்கும் அமைப்பு அல்லது கட்சியின் ஜனநாயக உள்ளடக்கத்திற்தான் பெருமளவுக்குத் தங்கியிருக்கின்றது. அந்தக் கட்சியிடம் இல்லாதது அது முன்னெடுக்கும் அரசியலிலும் இருக்காது. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே தமிழ்த் தேசியத்தையும் பார்க்க வேண்டும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் இறந்த காலத்தையும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதிலிருந்து பாடங்களைக் கற்கத் துணிய வேண்டும். தேசியத்திற்கும் ஜனநாயகத்திற்குமிடையிலான பிரிக்கப்பட முடியாத வேர் நிலை உறவு குறித்து தமிழில் மிக அரிதாகவே நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 1999இல் மு. திருநாவுக்கரசு எழுதிய நூலைத் தமிழ்த் தேசியர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். ‘‘தேசியமும் ஜனநாயகமும்” என்ற அந்த நூல் ஈழத்தமிழ் வாசகர்களை அதிகம் வந்தடையவில்லை என்றே தெரிகிறது. அந்நூலில் மு. திருநாவுக்கரசு பின்வருமாறு கூறுகிறார். ‘‘தேசியம் என்பது வரலாற்றில் ஒரு புது அம்சமாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழத்தொடங்கியது. அதாவது இனம் பழையது அது முன்னரே இருந்தது. மொழி பழையது அதுவும் முன்னரே இருந்தது. அவ்வாறு முன்னரே பழமையதானதாயிருந்த அந்த இனத்தோடு அல்லது மொழியோடு ஜனநாயகம் எனும் புதிய அம்சம் சேரும்போது அது தேசியம் என்றாயிற்று. அதலால் தேசியம் என்பது ஜனநாயகம் என்னும் புதிய அம்சத்தின் வரவைத் தன் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர வரலாற்று அம்சமாகும். ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டம் ஆகும். தேசிய வாதமானது ஜனநாயகத்தை அடைவதற்கான ஒரு வடிவமும் ஜனநாயகத்தைக் காவிச் செல்லும் ஒரு வாகனமும் ஆகும்” எனவே, தேசியம் தொடர்பில் உணர்ச்சிகரமான ஒரு சித்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் குறிப்பாக, அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்ற அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினராகக் காணப்படும் அனைவரும் தமிழ்த் தேசியம் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விவாதக் களங்களைத் திறக்க முன்வர வேண்டும். அவை விவாதக் களங்களாகவும், அதேசமயம் பிரேத பரிசோதனைக் களங்களாகவுமிருக்க வேண்டும். ஏனெனில், இறந்த காலத்தை வெட்டித் திறந்து பார்க்கவில்லை என்றால், இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்கவில்லையென்றால் தமிழ்த் தேசியம் எனப்படுவது செயலுக்குப் போகத் திராணியற்ற நடிப்புச் சுதேசிகள் பயன்படுத்தும் வெற்றுச் சுலோகமாகச் சுருங்கிப்போய்விடும். 15-08-2013.

மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் போரா? ஆதிக்கம் செலுத்தப்போகும் நாடு எது?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருக்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோஸ் கார்லோஸ் கியூட்டோ பதவி, பிபிசி உலக செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், காஸா போர், மறுபுறம் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் என ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டிருக்கும்போது, ஜோர்டான் எல்லை அருகே சிரியாவில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர். இப்படி பதற்றம் அதிகரித்து வருவது மத்திய கிழக்கு என்று அழைக்கப்படும் மேற்கு ஆசியாவில் பெரிய போருக்கு வழிவகுக்குமோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. இதில் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்கான தொடக்க அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதைத் தவிர இந்த பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெவ்வேறு மோதல்கள் காரணமாக இப்பிராந்தியமே ஆட்டம் கண்டுள்ளது. அதில், இஸ்ரேல் - லெபனானின் ஹெஸ்புலா குழு மோதல்,மேற்குலகத்திற்கு எதிரான யேமனின் ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல், இராக்,சிரியா, பாகிஸ்தானுக்கு எதிரான இரானின் தாக்குதல், மற்றும் இதர இரான் ஆதரவு குழுக்களால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பட மூலாதாரம்,PLANET LABS/AP படக்குறிப்பு, தங்களது படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தரப்போவதாக அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். இப்படியொரு சூழலில் அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல், "இரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களால் நடத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் பதிலடி கொடுப்போம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த வன்முறை போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் எழுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் இப்பிராந்தியத்தில் பாரம்பரியமாக அதிகாரம் செலுத்தி வரும் கூட்டணிகளும் மாறலாம் என்ற நிலை எழுந்துள்ளது. தற்போது மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் பிரச்னைகளை இரண்டாக பிரித்து சொல்ல வேண்டுமெனில், ஒன்று இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் மோதல்போக்கு. மற்றொன்று இப்பிராந்தியத்தில் தன்னை முன்னணி சக்தியாக கருதிக்கொள்ளும் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சன்னி மற்றும் இரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவினருக்கு இடையே நிலவும் மோதல் ஆகும். அதே சமயம் இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள், சமீப காலமாக மதநம்பிக்கை சார்ந்த மோதல்கள் குறைந்துள்ளதாகவும், தற்காலிக அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி சார்ந்த காரணங்களே மோதல்போக்குக்கு அதிக காரணமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எதிர்ப்பின் அச்சு குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று" இரான் மற்றும் நாடற்ற ஆயுத குழுக்கள் ஜனவரி மாதம் 15 முதல் 17 ஆகிய மூன்றே நாட்களில் சிரியா, பாகிஸ்தான் மற்றும் இராக் ஆகிய மூன்று நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் இராக்கில் உள்ள இஸ்ரேலிய உளவு அமைப்பின் தளம் மற்றும் பாகிஸ்தான், சிரியாவில் உள்ள எதிர் இஸ்லாமிய குழுக்கள் ஆகியவற்றின் தளங்கள் என குறிப்பிட்ட தளங்களை குறி வைத்து நடத்தப்பட்டது என்றாலும், தற்போதைய கொந்தளிப்பான சூழலில் தங்களின் பலத்தை காட்டுவதே இரானின் விருப்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து தாங்கள் புதிய மோதல்கள் எதிலும் ஈடுபட விரும்பவில்லை என்று தெஹ்ரான் சொல்லிக்கொண்டாலும், அதன் ஆதரவு பெற்றதாக அறியப்படும் குழுவான “எதிர்ப்பின் அச்சு” (axis of resistance) சமீப வாரங்களாகவே மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழுவானது லெபனானின் ஹெஸ்புலா, இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஷியா போராளிகள், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இதர போராளி குழுக்கள் மற்றும் யேமனின் ஹூதி குழுக்கள் என அனைவராலும் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகும். இந்த குழுவின் சித்தாந்தம் “குறிப்பிடத்தகுந்த அமெரிக்க எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு” என்று விவரிக்கிறது பிபிசியின் பெர்சிய சேவை. இவர்கள் அனைவருமே அக்டோபர் மாதத்தில் காஸாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் விவரித்துள்ள எல்கானோ ராயல் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த மத்திய கிழக்கு நிபுணர் ஹைசம் அமிரா-ஃபெர்னாண்டஸ், “இந்த 'எதிர்ப்பின் அச்சு' குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று என்று” குறிப்பிடுகிறார். “1979இல் நடந்த இரான் புரட்சியின் விளைவாக உருவான இந்த கூட்டணி, அதன் அரசியல் கொள்கைகளையும், வடிவத்தையும் பிற நாடுகளுக்கும் பரப்புவதற்காக இயங்கி வருகிறது” என்கிறார் லினா கதீப். இவர் லண்டனை தளமாக கொண்டு இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனராக உள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தன்னை ஒரு நடுநிலை மத்தியஸ்தராக நிலைநிறுத்திக் கொள்ள தெளிவான உத்தியை பின்பற்றி வருகிறது கத்தாரின் அல் தானி அரசு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த குழுக்கள் தத்தமது நாடுகளில் நிலவி வந்த அரசியல் சூழலினால் உருவானவை. அதை இரான் தனது பிராந்திய செல்வாக்கை விரிவுபடுத்த பயன்படுத்தி கொண்டது. பிபிசி பெர்சிய சேவையின் செய்தியாளர் கெய்வான் ஹொசைனி, இந்த குழுக்கள் இரானிடமிருந்து “தளவாடம், பொருளாதாரம் மற்றும் சித்தாந்த ரீதியான உதவிகளை” பெற்று வருவதாக, 2020ஆம் ஆண்டு பிபிசி முண்டோவில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதே போல் இந்த பிரச்னையில் மதரீதியான காரணங்கள் இருப்பதையும் ஒதுக்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார் தெற்காசியாவில் இருக்கும் வில்சன் மையத்தின் இயக்குநரான மைக்கேல் ககுல்மேன். இதற்கு உதாரணமாக ஷியா குழுக்களுடன் இரானின் நெருக்கத்தையும், அதற்கு எதிரில் சௌதியின் சன்னி ஆதரவையும் சுட்டுகிறார் அவர். ஆனால், அதே சமயம் தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருப்பதையும் குறிப்பிடுகிறார் அவர். ஹமாஸ் இயக்கம் இஸ்லாத்தின் சன்னி பிரிவை சேர்ந்ததாக இருந்தாலும் அந்த இயக்கத்துக்கு இரானிய ராணும் ஆதரவளிப்பதை வைத்து இந்த கூற்றை புரிந்து கொள்ளலாம், அல்லது குறிப்பிட்ட மோதலில் ஒரே கூட்டணியை சேர்ந்த குழுக்கள் அந்த பிரச்னையை பொறுத்து இரண்டு பக்கங்களுக்கு ஆதரவளித்ததை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக , சிரிய போரின்போது ஹமாஸ் மற்றும் ஹெஸ்புலா ஆகிய குழுக்கள் எதிர் எதிர் நிலையை எடுத்தன. ஆனால் இஸ்ரேலுக்கு முடிவு கட்டுவதில் இரண்டும் இணைந்து விட்டன. சிரியாவின் பஷார் அல் அசாத் ஆட்சியைத் தவிர மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் இரான் வலுவான கூட்டணியில் இல்லாததற்கு இரண்டு முக்கிய காரணிகளை முன் வைக்கின்றனர் நிபுணர்கள். இதுகுறித்து நிபுணர் அமிரா- பெர்னாண்டஸ் கூறுகையில், முதல் காரணம் “இஸ்லாமிய புரட்சி வடிவத்தை மற்ற நாடுகளுக்கும் பரப்ப நினைப்பது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகள் மற்றும் இந்த பிராந்தியத்தின் இதர நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது” என்கிறார். இரண்டாவது, வரலாற்று ரீதியாகவே தனது நாடு, தங்களது வளங்கள், மக்கள் தொகை மற்றும் பெர்சிய பேரரசின் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் இரான் தன்னை இந்த பிராந்தியத்தின் மேலாதிக்க சக்தியாக கருதி வருகிறது என்கிறார் அவர். “இந்த காரணங்களே இதர நாடுகளின், குறிப்பாக சௌதி அரேபியாவின் நோக்கங்களோடு முரண்படுவதாக” அவர் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது. சௌதி அரேபியா தலைமையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு அரபு உலகின் தலைமையாக தன்னை நிறுவ சமீப ஆண்டுகளில் சௌதி அரேபியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் இந்த பிராந்தியத்தின் வலிமையான மக்கள்தொகை, அரசியல், கலாச்சாரத்தை கொண்டிருந்த எகிப்து தான் சில தசாப்தங்களுக்கு முன்பு அரபு நாடுகளின் மையமாக பார்க்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது. இந்த நாடுகளில் இருந்த அதிகளவிலான ஆற்றல் வளங்கள் செல்வமாக மாற்றப்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் செல்வாக்காக மாறியது. சிறிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் அல்லது கத்தார் போன்ற நாடுகள் முதலில் தனித்து நின்றன. ஆனால் பின்னர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதவிக்கு வந்தவுடன், "சௌதி அரேபியா உள்நாட்டளவிலும், உலகளவிலும் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்தது." பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். நிபுணர் அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இதன் வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அதன் செழிப்பான ஹைட்ரோகார்பன் பொருளாதாரம். மற்றொன்றுஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த சமயத்தில் இரானுக்கு எதிரான நடவடிக்கையாக சௌதிக்கு வழங்கிய ஆதரவு.” பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். “பொதுவாகவே ஒவ்வொரு நாடுகளுக்கும் தனிப்பட்ட லட்சியங்கள் இருந்தாலும் கூட, எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் தங்களை நிலைநிறுத்தி கொண்டும், சௌதி அரேபியா உருவாக்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றியும் வருகின்றன” என்கிறார் கதீப். சில நிபுணர்கள் விவரிப்பது போல் “புதிய மத்திய கிழக்கு பனிப்போர்” என்ற மோதல்போக்கை கடந்த 40 ஆண்டுகளாகவே சௌதி அரேபியாவும் இரானும் வெளிப்படையாகவே கடைபிடித்து வந்தன. ஆனால், இது தற்போது இந்த பிராந்தியத்தை சேர்ந்த பலரும் ஈடுபட்டுள்ள மோதலாக மாறி மோசமடைந்து விட்டது. 2015ஆம் ஆண்டிலிருந்தே ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக் குழுவுக்கு எதிரான உள்நாட்டுப்போரில் அரசு படைகளுக்கு ஆதரவளித்து வருகிறது சௌதி அரேபியா. அதே சமயம் சௌதி மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் இந்த குழுவிற்கு இரான் ஆயுதம் மற்றும் ஆதரவு வழங்குவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது இரான். ஷியா கிளர்ச்சியாளர்கள் அதிக அரசியல் மற்றும் ராணுவ பலம் கொண்டுள்ள லெபனான் மற்றும் இராக்கிலும் இரான் தலையிடுவதாக சௌதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. இதில் சில குழுக்கள் சௌதி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மார்ச் 2023 இல், சீனாவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலமாக இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குதல், பாதுகாப்பை புதுப்பித்தல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை புதுப்பித்தல் என சௌதி-இரானிய உறவு ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்தது. பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள் எச்சரித்தபடியே, மத்திய கிழக்கில் உள்ள அதிகார உறவுகளில் நிலவும் நிலையில்லா தன்மை மற்றும் சிக்கலுக்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர். மத்தியஸ்தம் செய்வதன் மூலம் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் கத்தார் கத்தாரை சௌதி அரேபியாவின் தலைமையிலான குழுவின் பக்கம் உள்ள நாடாக கருதுவதை கதீப் மற்றும் அமிரா-பெர்னாண்டஸ் ஆகிய இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். அதே சமயம் அதை இந்த பிராந்தியத்தில் தனித்துவமாக காட்டும் அதன் மத்தியஸ்தர் பாத்திரத்தையும் குறிப்பிடுகிறார்கள். தற்போதைய சூழலில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர். பணக்கார வளைகுடா நாடான கத்தார் பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் அல்லது இரான் போன்ற நாடுகளுடன் நல்லுறவை பேணி வருகிறது. மேலும், அதன் அரசியல் குழுக்களுக்கான ஆதரவு , அதன் அண்டை நாடுகளை விட முற்றிலும் மாறானதாக இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலும் சௌதியின் பழைய எதிராளிகளான ஹமாஸ் அல்லது சன்னி ஆதரவு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு(muslim brotherhood) உள்ளிட்ட இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது கத்தார். கத்தாரின் இது போன்ற அணுகுமுறைகள் அதன் அண்டை நாடுகளால் வரவேற்கப்படவில்லை. இதுகுறித்து நினைவுகூர்ந்த கதீப், "2017இல் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதாக கூறி சௌதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஏமன், லிபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தால் கத்தார் தடை செய்யப்பட்டதாக” தெரிவிக்கிறார். கத்தார் ஒரு மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்தாலும் கூட, அது சிறிய நாடாகும். எனவே அந்நாட்டை அபாய நிலைக்கு தள்ளும் காரணியாக அதுவே அமைந்துள்ளது. 'கத்தார் : சிறிய நாடு, பெரிய அரசியல்' என்ற தனது புத்தகத்தில் அரசியல் ஆய்வாளர் மெஹ்ரான் கம்ரவா கூறியுள்ளது போல், தனது "பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர அந்தஸ்தை உயர்த்தி கொள்ள” அந்நாடு பல மற்றும் மாறுபட்ட கூட்டணிகளை அடைய வேண்டும். 2021இல் கத்தார் மீதான தடைகள் நீக்கப்பட்டன. அதன் பிறகு அண்டை நாடுகள், குறிப்பாக சௌதி அரேபியாவுடன் அதன் உறவுநிலை நட்பு அடிப்படையில் நீடித்து வருகிறது. கண்டிப்பாக கத்தார் “இன்னமும் தன்னை மேலும் சிறந்த மத்தியஸ்தம் மற்றும் சமரசம் செய்யும் நாடாக” நிலைநிறுத்த விரும்புவதாக அழுத்தி கூறுகிறார் கதீப். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது. மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன? இஸ்ரேலின் பிரச்னையை இந்த பிராந்தியத்தின் கூட்டணியில் “அசாதரணமான” ஒன்றாக வரையறுக்கிறார் அமிரா-பெர்னாண்டஸ். மேலும் கதீப்போ, இஸ்ரேல் எந்த நாட்டின் கூட்டணியையும் சேராதது போல் நடந்து கொள்வதாக கூறுகிறார். இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது இஸ்ரேல், அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது. அங்கெல்லாம் மோதல் வெளிப்படையான அல்லது முழுமையான நிலையை எட்டாமல் சிறிய அளவிலான புகைச்சல் நீடித்து கொண்டே இருக்கிறது. மேலும் இஸ்ரேலுக்கு அரபு அண்டை நாடுகளுடனும் நல்லுறவு இல்லை. ஒரு நாடாக மிகக் குறைந்த அங்கீகாரமே பெற்றுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், துருக்கி மற்றும் இரான் மட்டுமே அரபு அல்லாத நாடுகளாகும். அரபு நாடுகளில் 1979லிருந்து எகிப்தும், 1994லிருந்து ஜோர்டானும், 2020லிருந்து ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலை நாடாக அங்கீகரித்து வருகின்றனர். அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இஸ்ரேலின் அரபு-முஸ்லீம் அண்டை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, பாலத்தீனத்துடனான மோதல் போக்கால் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக தெரிவதே” இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த அக்டோபர் 7 இல் போர் ஆரம்பிப்பதற்கு சிறிது காலம் முன்பு கூட, சௌதி அரேபியாவுடனான உறவை இயல்பாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது இஸ்ரேல். அது வெற்றியடைந்திருந்தால் யூத அரசிற்கு பெரும் முன்னேற்றமாக இருந்திருக்கும். ஆனால், தாக்குதல் குறித்த தகவல் வந்த உடனேயே இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்காவிடம் சொல்லி விட்டனர் சௌதி அதிகாரிகள். பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, பாலத்தீனத்துடனான மோதல் போக்கை கைவிடும் வரை, இஸ்ரேலுடனான கூட்டணி நாடுகள் மற்றும் உறவுகளில் நிலவும் அசாதாரணத்தன்மை முடிவுக்கு வர வாய்ப்பில்லை. https://www.bbc.com/tamil/articles/c6pq69vgn9do

மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் போரா? ஆதிக்கம் செலுத்தப்போகும் நாடு எது?

3 months 2 weeks ago
கத்தார் - சௌதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருக்கிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோஸ் கார்லோஸ் கியூட்டோ
  • பதவி, பிபிசி உலக செய்திகள்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், காஸா போர், மறுபுறம் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் என ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டிருக்கும்போது, ஜோர்டான் எல்லை அருகே சிரியாவில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர்.

இப்படி பதற்றம் அதிகரித்து வருவது மத்திய கிழக்கு என்று அழைக்கப்படும் மேற்கு ஆசியாவில் பெரிய போருக்கு வழிவகுக்குமோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதில் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்கான தொடக்க அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர இந்த பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெவ்வேறு மோதல்கள் காரணமாக இப்பிராந்தியமே ஆட்டம் கண்டுள்ளது.

அதில், இஸ்ரேல் - லெபனானின் ஹெஸ்புலா குழு மோதல்,மேற்குலகத்திற்கு எதிரான யேமனின் ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல், இராக்,சிரியா, பாகிஸ்தானுக்கு எதிரான இரானின் தாக்குதல், மற்றும் இதர இரான் ஆதரவு குழுக்களால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு

பட மூலாதாரம்,PLANET LABS/AP

படக்குறிப்பு,

தங்களது படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தரப்போவதாக அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

இப்படியொரு சூழலில் அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல், "இரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களால் நடத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் பதிலடி கொடுப்போம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த வன்முறை போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் எழுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் இப்பிராந்தியத்தில் பாரம்பரியமாக அதிகாரம் செலுத்தி வரும் கூட்டணிகளும் மாறலாம் என்ற நிலை எழுந்துள்ளது.

தற்போது மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் பிரச்னைகளை இரண்டாக பிரித்து சொல்ல வேண்டுமெனில், ஒன்று இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் மோதல்போக்கு.

மற்றொன்று இப்பிராந்தியத்தில் தன்னை முன்னணி சக்தியாக கருதிக்கொள்ளும் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சன்னி மற்றும் இரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவினருக்கு இடையே நிலவும் மோதல் ஆகும்.

அதே சமயம் இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள், சமீப காலமாக மதநம்பிக்கை சார்ந்த மோதல்கள் குறைந்துள்ளதாகவும், தற்காலிக அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி சார்ந்த காரணங்களே மோதல்போக்குக்கு அதிக காரணமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"எதிர்ப்பின் அச்சு குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று"

இரான் மற்றும் நாடற்ற ஆயுத குழுக்கள்

ஜனவரி மாதம் 15 முதல் 17 ஆகிய மூன்றே நாட்களில் சிரியா, பாகிஸ்தான் மற்றும் இராக் ஆகிய மூன்று நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் இராக்கில் உள்ள இஸ்ரேலிய உளவு அமைப்பின் தளம் மற்றும் பாகிஸ்தான், சிரியாவில் உள்ள எதிர் இஸ்லாமிய குழுக்கள் ஆகியவற்றின் தளங்கள் என குறிப்பிட்ட தளங்களை குறி வைத்து நடத்தப்பட்டது என்றாலும், தற்போதைய கொந்தளிப்பான சூழலில் தங்களின் பலத்தை காட்டுவதே இரானின் விருப்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து தாங்கள் புதிய மோதல்கள் எதிலும் ஈடுபட விரும்பவில்லை என்று தெஹ்ரான் சொல்லிக்கொண்டாலும், அதன் ஆதரவு பெற்றதாக அறியப்படும் குழுவான “எதிர்ப்பின் அச்சு” (axis of resistance) சமீப வாரங்களாகவே மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவானது லெபனானின் ஹெஸ்புலா, இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஷியா போராளிகள், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இதர போராளி குழுக்கள் மற்றும் யேமனின் ஹூதி குழுக்கள் என அனைவராலும் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகும்.

இந்த குழுவின் சித்தாந்தம் “குறிப்பிடத்தகுந்த அமெரிக்க எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு” என்று விவரிக்கிறது பிபிசியின் பெர்சிய சேவை. இவர்கள் அனைவருமே அக்டோபர் மாதத்தில் காஸாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் விவரித்துள்ள எல்கானோ ராயல் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த மத்திய கிழக்கு நிபுணர் ஹைசம் அமிரா-ஃபெர்னாண்டஸ், “இந்த 'எதிர்ப்பின் அச்சு' குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று என்று” குறிப்பிடுகிறார்.

“1979இல் நடந்த இரான் புரட்சியின் விளைவாக உருவான இந்த கூட்டணி, அதன் அரசியல் கொள்கைகளையும், வடிவத்தையும் பிற நாடுகளுக்கும் பரப்புவதற்காக இயங்கி வருகிறது” என்கிறார் லினா கதீப். இவர் லண்டனை தளமாக கொண்டு இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனராக உள்ளார்.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தன்னை ஒரு நடுநிலை மத்தியஸ்தராக நிலைநிறுத்திக் கொள்ள தெளிவான உத்தியை பின்பற்றி வருகிறது கத்தாரின் அல் தானி அரசு

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த குழுக்கள் தத்தமது நாடுகளில் நிலவி வந்த அரசியல் சூழலினால் உருவானவை. அதை இரான் தனது பிராந்திய செல்வாக்கை விரிவுபடுத்த பயன்படுத்தி கொண்டது.

பிபிசி பெர்சிய சேவையின் செய்தியாளர் கெய்வான் ஹொசைனி, இந்த குழுக்கள் இரானிடமிருந்து “தளவாடம், பொருளாதாரம் மற்றும் சித்தாந்த ரீதியான உதவிகளை” பெற்று வருவதாக, 2020ஆம் ஆண்டு பிபிசி முண்டோவில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதே போல் இந்த பிரச்னையில் மதரீதியான காரணங்கள் இருப்பதையும் ஒதுக்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார் தெற்காசியாவில் இருக்கும் வில்சன் மையத்தின் இயக்குநரான மைக்கேல் ககுல்மேன். இதற்கு உதாரணமாக ஷியா குழுக்களுடன் இரானின் நெருக்கத்தையும், அதற்கு எதிரில் சௌதியின் சன்னி ஆதரவையும் சுட்டுகிறார் அவர்.

ஆனால், அதே சமயம் தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருப்பதையும் குறிப்பிடுகிறார் அவர்.

ஹமாஸ் இயக்கம் இஸ்லாத்தின் சன்னி பிரிவை சேர்ந்ததாக இருந்தாலும் அந்த இயக்கத்துக்கு இரானிய ராணும் ஆதரவளிப்பதை வைத்து இந்த கூற்றை புரிந்து கொள்ளலாம், அல்லது குறிப்பிட்ட மோதலில் ஒரே கூட்டணியை சேர்ந்த குழுக்கள் அந்த பிரச்னையை பொறுத்து இரண்டு பக்கங்களுக்கு ஆதரவளித்ததை எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக , சிரிய போரின்போது ஹமாஸ் மற்றும் ஹெஸ்புலா ஆகிய குழுக்கள் எதிர் எதிர் நிலையை எடுத்தன. ஆனால் இஸ்ரேலுக்கு முடிவு கட்டுவதில் இரண்டும் இணைந்து விட்டன.

சிரியாவின் பஷார் அல் அசாத் ஆட்சியைத் தவிர மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் இரான் வலுவான கூட்டணியில் இல்லாததற்கு இரண்டு முக்கிய காரணிகளை முன் வைக்கின்றனர் நிபுணர்கள்.

இதுகுறித்து நிபுணர் அமிரா- பெர்னாண்டஸ் கூறுகையில், முதல் காரணம் “இஸ்லாமிய புரட்சி வடிவத்தை மற்ற நாடுகளுக்கும் பரப்ப நினைப்பது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகள் மற்றும் இந்த பிராந்தியத்தின் இதர நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது” என்கிறார்.

இரண்டாவது, வரலாற்று ரீதியாகவே தனது நாடு, தங்களது வளங்கள், மக்கள் தொகை மற்றும் பெர்சிய பேரரசின் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் இரான் தன்னை இந்த பிராந்தியத்தின் மேலாதிக்க சக்தியாக கருதி வருகிறது என்கிறார் அவர்.

“இந்த காரணங்களே இதர நாடுகளின், குறிப்பாக சௌதி அரேபியாவின் நோக்கங்களோடு முரண்படுவதாக” அவர் தெரிவிக்கின்றார்.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது.

சௌதி அரேபியா தலைமையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு

அரபு உலகின் தலைமையாக தன்னை நிறுவ சமீப ஆண்டுகளில் சௌதி அரேபியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்த பிராந்தியத்தின் வலிமையான மக்கள்தொகை, அரசியல், கலாச்சாரத்தை கொண்டிருந்த எகிப்து தான் சில தசாப்தங்களுக்கு முன்பு அரபு நாடுகளின் மையமாக பார்க்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது. இந்த நாடுகளில் இருந்த அதிகளவிலான ஆற்றல் வளங்கள் செல்வமாக மாற்றப்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் செல்வாக்காக மாறியது.

சிறிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் அல்லது கத்தார் போன்ற நாடுகள் முதலில் தனித்து நின்றன. ஆனால் பின்னர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதவிக்கு வந்தவுடன், "சௌதி அரேபியா உள்நாட்டளவிலும், உலகளவிலும் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்தது."

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

நிபுணர் அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இதன் வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அதன் செழிப்பான ஹைட்ரோகார்பன் பொருளாதாரம். மற்றொன்றுஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த சமயத்தில் இரானுக்கு எதிரான நடவடிக்கையாக சௌதிக்கு வழங்கிய ஆதரவு.”

பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

“பொதுவாகவே ஒவ்வொரு நாடுகளுக்கும் தனிப்பட்ட லட்சியங்கள் இருந்தாலும் கூட, எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் தங்களை நிலைநிறுத்தி கொண்டும், சௌதி அரேபியா உருவாக்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றியும் வருகின்றன” என்கிறார் கதீப்.

சில நிபுணர்கள் விவரிப்பது போல் “புதிய மத்திய கிழக்கு பனிப்போர்” என்ற மோதல்போக்கை கடந்த 40 ஆண்டுகளாகவே சௌதி அரேபியாவும் இரானும் வெளிப்படையாகவே கடைபிடித்து வந்தன. ஆனால், இது தற்போது இந்த பிராந்தியத்தை சேர்ந்த பலரும் ஈடுபட்டுள்ள மோதலாக மாறி மோசமடைந்து விட்டது.

2015ஆம் ஆண்டிலிருந்தே ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக் குழுவுக்கு எதிரான உள்நாட்டுப்போரில் அரசு படைகளுக்கு ஆதரவளித்து வருகிறது சௌதி அரேபியா.

அதே சமயம் சௌதி மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் இந்த குழுவிற்கு இரான் ஆயுதம் மற்றும் ஆதரவு வழங்குவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது இரான்.

ஷியா கிளர்ச்சியாளர்கள் அதிக அரசியல் மற்றும் ராணுவ பலம் கொண்டுள்ள லெபனான் மற்றும் இராக்கிலும் இரான் தலையிடுவதாக சௌதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. இதில் சில குழுக்கள் சௌதி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2023 இல், சீனாவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலமாக இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குதல், பாதுகாப்பை புதுப்பித்தல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை புதுப்பித்தல் என சௌதி-இரானிய உறவு ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்தது.

பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள் எச்சரித்தபடியே, மத்திய கிழக்கில் உள்ள அதிகார உறவுகளில் நிலவும் நிலையில்லா தன்மை மற்றும் சிக்கலுக்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

மத்தியஸ்தம் செய்வதன் மூலம் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் கத்தார்

கத்தாரை சௌதி அரேபியாவின் தலைமையிலான குழுவின் பக்கம் உள்ள நாடாக கருதுவதை கதீப் மற்றும் அமிரா-பெர்னாண்டஸ் ஆகிய இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். அதே சமயம் அதை இந்த பிராந்தியத்தில் தனித்துவமாக காட்டும் அதன் மத்தியஸ்தர் பாத்திரத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

தற்போதைய சூழலில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

பணக்கார வளைகுடா நாடான கத்தார் பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் அல்லது இரான் போன்ற நாடுகளுடன் நல்லுறவை பேணி வருகிறது. மேலும், அதன் அரசியல் குழுக்களுக்கான ஆதரவு , அதன் அண்டை நாடுகளை விட முற்றிலும் மாறானதாக இருக்கிறது.

குறிப்பாக பெரும்பாலும் சௌதியின் பழைய எதிராளிகளான ஹமாஸ் அல்லது சன்னி ஆதரவு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு(muslim brotherhood) உள்ளிட்ட இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது கத்தார்.

கத்தாரின் இது போன்ற அணுகுமுறைகள் அதன் அண்டை நாடுகளால் வரவேற்கப்படவில்லை.

இதுகுறித்து நினைவுகூர்ந்த கதீப், "2017இல் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதாக கூறி சௌதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஏமன், லிபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தால் கத்தார் தடை செய்யப்பட்டதாக” தெரிவிக்கிறார்.

கத்தார் ஒரு மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்தாலும் கூட, அது சிறிய நாடாகும். எனவே அந்நாட்டை அபாய நிலைக்கு தள்ளும் காரணியாக அதுவே அமைந்துள்ளது. 'கத்தார் : சிறிய நாடு, பெரிய அரசியல்' என்ற தனது புத்தகத்தில் அரசியல் ஆய்வாளர் மெஹ்ரான் கம்ரவா கூறியுள்ளது போல், தனது "பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர அந்தஸ்தை உயர்த்தி கொள்ள” அந்நாடு பல மற்றும் மாறுபட்ட கூட்டணிகளை அடைய வேண்டும்.

2021இல் கத்தார் மீதான தடைகள் நீக்கப்பட்டன. அதன் பிறகு அண்டை நாடுகள், குறிப்பாக சௌதி அரேபியாவுடன் அதன் உறவுநிலை நட்பு அடிப்படையில் நீடித்து வருகிறது.

கண்டிப்பாக கத்தார் “இன்னமும் தன்னை மேலும் சிறந்த மத்தியஸ்தம் மற்றும் சமரசம் செய்யும் நாடாக” நிலைநிறுத்த விரும்புவதாக அழுத்தி கூறுகிறார் கதீப்.

 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேல் இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது.

மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன?

இஸ்ரேலின் பிரச்னையை இந்த பிராந்தியத்தின் கூட்டணியில் “அசாதரணமான” ஒன்றாக வரையறுக்கிறார் அமிரா-பெர்னாண்டஸ். மேலும் கதீப்போ, இஸ்ரேல் எந்த நாட்டின் கூட்டணியையும் சேராதது போல் நடந்து கொள்வதாக கூறுகிறார்.

இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது இஸ்ரேல், அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது. அங்கெல்லாம் மோதல் வெளிப்படையான அல்லது முழுமையான நிலையை எட்டாமல் சிறிய அளவிலான புகைச்சல் நீடித்து கொண்டே இருக்கிறது.

மேலும் இஸ்ரேலுக்கு அரபு அண்டை நாடுகளுடனும் நல்லுறவு இல்லை.

ஒரு நாடாக மிகக் குறைந்த அங்கீகாரமே பெற்றுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், துருக்கி மற்றும் இரான் மட்டுமே அரபு அல்லாத நாடுகளாகும்.

அரபு நாடுகளில் 1979லிருந்து எகிப்தும், 1994லிருந்து ஜோர்டானும், 2020லிருந்து ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலை நாடாக அங்கீகரித்து வருகின்றனர்.

அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இஸ்ரேலின் அரபு-முஸ்லீம் அண்டை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, பாலத்தீனத்துடனான மோதல் போக்கால் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக தெரிவதே” இதற்கு முக்கிய காரணமாகும்.

கடந்த அக்டோபர் 7 இல் போர் ஆரம்பிப்பதற்கு சிறிது காலம் முன்பு கூட, சௌதி அரேபியாவுடனான உறவை இயல்பாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது இஸ்ரேல். அது வெற்றியடைந்திருந்தால் யூத அரசிற்கு பெரும் முன்னேற்றமாக இருந்திருக்கும்.

ஆனால், தாக்குதல் குறித்த தகவல் வந்த உடனேயே இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்காவிடம் சொல்லி விட்டனர் சௌதி அதிகாரிகள்.

பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, பாலத்தீனத்துடனான மோதல் போக்கை கைவிடும் வரை, இஸ்ரேலுடனான கூட்டணி நாடுகள் மற்றும் உறவுகளில் நிலவும் அசாதாரணத்தன்மை முடிவுக்கு வர வாய்ப்பில்லை.

https://www.bbc.com/tamil/articles/c6pq69vgn9do

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்

3 months 2 weeks ago
@விசுகு நான் என்ன கூறினேன் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? அறிவுள்ளவன் என்று என்னை நான் பீத்திக் கொள்ள வில்லை. இன்றைய நாடுகளின் தமது நலன் சார் அரசியலில் சர்வதேச விசாரணைக்கான சாத்தியப்பாடு மிகக் குறைவானது என்பதை பொது அரசியல் அறிவுடையோர் எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றே கூறினேன். உங்களுக்கும் அது தெரியும். நடைமுறை சாத்தியம் குன்றிய ஒன்றில் எமது மக்களின் அரசியல் முழுமையாக தங்கி இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை எனபதை புரிந்தும், சர்வதேச விசாரணை மூலம் தமிழர் பிரச்சனையை தீர்க்கலாம் என்று சுத்து மாத்து காட்டும் சுயநல அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில் மாயை அரசியலை நம்புபவர்கள் உண்மையில் பைத்தியக்காரர்கள் தான்.

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்

3 months 2 weeks ago
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வை பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள போதிலும் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இதற்கு 30 வருட குத்தகைக்கு புதிய காணியை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 30 வருடத்துக்கான குத்தகை தொகையையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். கிழக்கு ஆளுநரின் இந்த செயற்பாட்டை வரவேற்றுள்ள பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பாடசாலைக்கு காணி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்த பாடசாலையில் நீண்டகாலமாக காணிப்பிரசினை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை எனவும், பாடசாலைகளுக்கான காணியை உடனடியாக பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழரசு கட்சியின் செயலாளர் குகதாசன் ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்து இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்வினை வழங்கினேன் என செந்தில் தொண்டமான் தனது உரையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289770