ஊர்ப்புதினம்

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!

3 months 1 week ago

South-Korea-Visa-.webp?resize=750%2C375&

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!

கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் கடந்த  2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் பிராந்தியத்தில் விவசாயக் கிராமங்களில் பணியாற்றி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும், எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440153

இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்

3 months 1 week ago

0x0.webp?resize=750%2C375&ssl=1

இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்.

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று (22) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் AI Singapore திட்டத்துடன், இலங்கையின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டு, இந்த ஒத்துழைப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இடையே MoU ஒன்றை கையெழுத்திட ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440134

இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் முன்னிடம்!

3 months 1 week ago

இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் முன்னிடம்!

1205990919.jpeg

இலங்கையில் ஆண்களை விட பெண்கள் வீதம் அதிகரித்துள்ளதாக வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறினார்.

https://newuthayan.com/article/இலங்கையின்_சனத்தொகையில்_பெண்கள்_முன்னிடம்!

வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 234 ஏக்கர் காணியில் மக்களை மீள் குடியேற்ற பேச்சு!

3 months 1 week ago

வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 234 ஏக்கர் காணியில் மக்களை மீள் குடியேற்ற பேச்சு!

adminJuly 22, 2025

5-2.jpg?fit=1170%2C780&ssl=1

விவசாய நடவடிக்கைகளுக்காக எனும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களை நிரந்தமாக குடியமர்த்த யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை அவரது அலுவலகத்தில் சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக  கலந்துரையாடினர்.

மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதன் அங்கமாக, மாவட்ட செயலரை சந்தித்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்த தன்மையை வெளிக்காட்டி அதனை வர்த்தமானி அறிவித்தலில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கையை முன்வைத்தனர்.

அதன் போதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்,

காணி விடுவிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், அதற்கமாய கட்டம் கட்டமாக காணி விடுவிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதாகவும், மற்றும் பலாலி வீதியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டதற்கமைய, அவ்வீதித் தடை அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு திறக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த 234 ஏக்கர் காணிகள் விவசாய தேவைகளுக்காக மாத்திரம் விடுவிக்கப்பட்டிருப்பதாவும், குடியிருப்புக்காக அந்த காணிகளை விடுவிப்பதற்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடி தொடர் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் (காணி) திரு. பா.ஜெயகரன், மீள்குடியேற்ற கிளை உத்தியோகத்தர்கள், மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதியாக இருந்த கால பகுதியில் வலி. வடக்கில்  234 ஏக்கர் காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது.

குறித்த காணிகள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் காணிகளுக்கு காலையில் சென்று மாலையில் திரும்பி விடவேண்டும், அக்காணிகளில் தங்கி நிற்பதற்கோ , தற்காலிக கொட்டகைகளையோ அமைக்க இராணுவத்தினர் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/218196/

உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் யாழ் . பழைய கச்சேரியை பார்வையிட்டனர்!

3 months 1 week ago

உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் யாழ் . பழைய கச்சேரியை பார்வையிட்டனர்!

adminJuly 22, 2025

4-1-5.jpg?fit=960%2C540&ssl=1

மரபுச் சுற்றுலா மேம்பாடு  மற்றும் தொடர்ச்சியாக பேணுதல்  என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை (21.07.25) பழைய கச்சேரியினை பார்வையிட்டு  ஆராய்ந்தனர்.

இதற்கு முன்னராக  மாவட்டச் செயலகத்தில் உலக வங்கி குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில்              சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பின் அவசியம் தொடர்பாக  – உலக வங்கி குழுவினரிடம் மாவட்ட செயலரினால்  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்நிலையிலேயே உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பழைய கச்சேரி கட்டடத்தினை பார்வையிட்டுள்ளனர்.

மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில்  உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்தல் தொடர்பிலான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, கடந்த இரு மாதங்களாக வடக்கின அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் செயற்றிட்டங்களையும் அதன் சாத்தியநிலைமைகள் தொடர்பில்  ஆராய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/218199/

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்!

3 months 1 week ago

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்!

adminJuly 22, 2025

Thaiyiddi-Viharai.jpg?fit=840%2C560&ssl=

ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

தையிட்டியில் உள்ள தனது காணியில் அடாத்தாக சட்டவிரோத கட்டடம் ஒன்றினை அமைத்து வருவதாக  எமக்கு ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

எனவே முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ள காணியில் , தங்களுக்கு சட்ட ரீதியான உரித்து காணப்பட்டால் , அவற்றுக்கான ஆவணங்களை பிரதேச சபையில் சமர்ப்பிக்கவும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அக்காணியில் இருந்து வெளியேற வேண்டும். தவறின் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு தவிசாளர் சோ. சுகிர்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2025/218206/

‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என அழைப்பு!

3 months 1 week ago

‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என அழைப்பு!

adminJuly 22, 2025

Gajan-Selva.jpeg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் (21.07.25) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“ஜூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒரு நாள். 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாரிய இனப்படுகொலையை மறைப்பதற்கும், அதன் வரலாற்றை மழுங்கடிப்பதற்கும் அநுர அரசு ஒரு சதித்திட்டத்தை மிகச் சாதுர்யமாக முன்னெடுக்க முயல்கிறது.

இதற்காக, தென்னிலங்கையில் இருந்து ஒரு தொகுதி நபர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து, அநுர அரசின் ஆதரவாளர்களைப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி ‘நட்புறவுப் பாலம்’ என்ற நிகழ்வை நடத்த திட்டமிடுகிறது.

எனவே தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தென்னிலங்கையிலிருந்து வரவுள்ளவர்களுடன் இணைந்து அநுர அரசின் ஆதரவாளர்களின் இந்த முயற்சியில் தமிழ் மக்கள் பங்கேற்கக் கூடாது. அந்த நாளை ஒரு கறைபடிந்த நாளாகக் கருதி, கறுப்புக் கொடி கட்டி எமது துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/218208/

அமெரிக்க மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்!

3 months 1 week ago

New-Project-255.jpg?resize=750%2C375&ssl

அமெரிக்க மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்!

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் பிற வர்த்தக பங்காளிகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையின் அடிப்படையில் பரஸ்பர வரிகளை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

இதனால், இலங்கை உட்பட பல நாடுகள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இணைந்து கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44% வரி விகிதத்தை அறிவித்த போதிலும், அது எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போது 30% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கட்டண விகிதத்தை மேலும் குறைக்கும் முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் விவாதங்களை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எண்ணெய் கொள்முதல் செய்யும் போது டெண்டர் செயல்பாட்டில் அமெரிக்க WTI மசகு எண்ணெயை சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் டாக்டர் மயூரா நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கை, வளைகுடா பிராந்தியத்திலிருந்து மசகு எண்ணெய் இருப்புக்களை கொள்முதல் செய்கிறது என்றும், இருப்பினும், WTI மசகு எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை எதிர்கால டெண்டர் செயல்பாட்டில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இருப்பினும், விலைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு எந்த வகையான மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்கா தனது கட்டண விகிதங்களைக் குறைக்க முடிவு செய்தால், அது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரஸ்பர கட்டணங்களை மேலும் குறைப்பதற்கான தகுதியாக வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்காக அமெரிக்காவிலிருந்து (அமெரிக்கா) எண்ணெய் கொள்முதல் செய்வதை பரிசீலிக்க இலங்கை தயாராக உள்ளது என்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைப்பிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோவின் தகவலுக்கு அமைவாக, கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த எரிபொருள் இறக்குமதி 4.3 பில்லியன் டொலர்களாக இருந்தது.

அமெரிக்கா தனது சந்தையில் நுழையும் இலங்கைப் பொருட்கள் மீது 30 சதவீத வரிகளை விதித்துள்ளது.

இருப்பினும், இந்த விகிதத்தை மேலும் குறைப்பதற்காக ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை இலங்கை பேச்சுவார்த்தை நடத்த கதவுகள் திறந்திருக்கும்.

2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதி மொத்தம் 3 பில்லியன் டொலர்களாக இருந்தது.

அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை 368.2 மில்லியன் டொலர்களாக இருந்தன.

இதன் விளைவாக இலங்கைக்கு ஆதரவாக 2.6 பில்லியன் டொலர் வர்த்தக உபரி ஏற்பட்டது.

அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும், இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 27% ஆகும்.

அமெரிக்காவிற்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதிகளில் ஆடைகளும் அடங்கும்.

https://athavannews.com/2025/1440003

போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது!

3 months 1 week ago

New-Project-266.jpg?resize=750%2C375&ssl

போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது!

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவின் பேரிலும், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஒருங்கிணைப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையில் 254,679 மில்லி கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), 112,567 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 3,738,356 மில்லிகிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21,132 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், 7,922 வாகனங்கள் மற்றும் 6,545 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://athavannews.com/2025/1440099

2025 இல் இலங்கைக்கு 569 மில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

3 months 1 week ago

New-Project-262.jpg?resize=750%2C375&ssl

2025 இல் இலங்கைக்கு 569 மில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

இந்த ஆண்டு (2025) இதுவரை 57 திட்டங்களுக்கு முதலீட்டு வாரியம் (BOI) ஒப்புதல் அளித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு 569 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், அதில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீடுகள் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த புள்ளிவிவரங்கள் 101% அதிகரிப்பைக் குறிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஸ்திரத்தன்மையிலிருந்து வளர்ச்சிக்கு மாறி வருவதாகவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் வருகையை அனுமதிக்கும் வணிகத்தை எளிதாக்குவதில் அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஜூன் மாதத்தில் இலங்கையின் பிரதான பணவீக்கம் சற்று குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் 0.6% ஆக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 0.3% ஆகக் குறைந்துள்ளது.

மே மாதத்தில் 5.9% ஆக இருந்த உணவுப் பணவீக்கமும் ஜூன் மாதத்தில் 4.2% ஆகக் குறைந்துள்ளது.

https://athavannews.com/2025/1440066

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

3 months 1 week ago

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

July 21, 2025 10:17 pm

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷைத் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

https://oruvan.com/rehabilitated-ltte-member-arrested-with-gun-in-colombo/

தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க அதிபருக்கான நோபல் பரிசுக்காக 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுவோம் - காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

3 months 1 week ago

21 JUL, 2025 | 05:34 PM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சங்கத்தினரால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், 

IMG_20250721_130005.jpg

1948 முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல், கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்பட்டன. 

அந்த வகையில் பல உலகத் தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், இன்று ஒரே ஒரு தலைவருக்கு மட்டுமே செயற்பட தைரியமும் தெளிவும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும்போது உலகம் அதை கேட்கிறது. சிலர் மரியாதைக்காகவும், மற்றவர்கள் பயத்திற்காகவும் அதனை கேட்கின்றனர். ஆனால், அவர் காரியங்களைச் செய்து முடிக்கிறார்.

ஜனாதிபதி டிரம்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் தமிழர்களுக்கு நீதியை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். 

தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், உலகெங்கிலும் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரைக்கும் வண்ணம் ஐந்து மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்போம் என உறுதியளிக்கிறோம். உலகம் ஒருபோதும் எதிர்பார்க்காத அமைதித் தூதராக டிரம்ப் மாறட்டும் என்றனர்.

IMG_20250721_130158.jpg

IMG_20250721_125526.jpg

IMG_20250721_125633.jpg

IMG_20250721_125655.jpg

IMG_20250721_125711.jpg

IMG_20250721_125818.jpg

IMG_20250721_125843.jpg

IMG_20250721_125945.jpg

IMG_20250721_130147.jpg

https://www.virakesari.lk/article/220562

மனித புதைகுழிகளை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் தொழில்நுட்பத்தை வழங்குங்கள் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை ஏற்றுக்கொள்வது குறித்து ஆராயுங்கள் - அரசாங்கத்திற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை

3 months 1 week ago

Published By: RAJEEBAN

21 JUL, 2025 | 04:12 PM

image

மனிதபுதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்கவேண்டும் என பரிந்துரைத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம்சட்டத்தினை  ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை ஆராயவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது-

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவிடம் தனது  அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது.

இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் 25 பக்க அறிக்கை முன்வைக்கின்றது.

நபர் ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் மனித உரிமையை மிக மோசமாக மீறும் செயல் என்பதை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து சமூகங்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக தெற்கில் கிளர்ச்சி வடக்குகிழக்கில் ஆயுத மோதல்கள் குறித்த சூழமைவின் பின்னணியில்.

பல ஆண்டுகளாக பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதில் குடும்பங்கள் ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் முக்கிய முயற்சிகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கீகரிக்கின்றது.

பொருளாதார சவால்கள் மற்றும் பராமரிப்பு பொறுப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைச் சமாளிக்க வேண்டியிருந்த போதிலும் இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடவும் பெண்கள் முயற்சிகளை வழிநடத்தியுள்ளனர் என்பதை இது குறிப்பாக அங்கீகரித்தது

இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில்   மனிதஉரிமைகள் ஆணையத்தின் அறிக்கை கடந்த கால விசாரணை ஆணையங்களால் 27000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன என்பதையும் காணாமல் போனோர் தொடர்பான 21000க்கும் மேற்பட்ட புகார்களை காணாமல்போனோர் அலுவலகம்  பெற்றுள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தது.

மே 17 மற்றும் 18 2009 அன்று பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்த பின்னர் 1000க்கும் மேற்பட்ட காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கண்டுபிடிப்புகளையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டியது.

மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இலங்கையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பிரச்சினையை குறிப்பாக எடுத்துக்காட்டியது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

வழமையான சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து சுயாதீனமான இபலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்கான குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கான பரந்துபட்டஅதிகாரங்களை கொண்ட புதிய நிரந்தர நிறுவனமொன்றை உருவாக்கவும்

ஆட்கொணர்வு வழக்குகள்பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் சட்டத்தின் கீழ் உள்ள  வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவற்றின் விரைவான முடிவை உறுதி செய்வதற்குத் தேவையான சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்

வலுக்கட்டாயமாக காணாமல் போதல் சட்டத்தின் கீழ் ‘பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலை  ஒரு குறிப்பிட்ட குற்றமாகச் சேர்க்கவும்

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டதால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பண பணமற்ற மற்றும் முன்மாதிரியான சேதங்களுக்கு இழப்பீட்டு வழிகாட்டுதல்களை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில்வகுத்தல்;

ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வலுவான விசாரணை இடம்பெறுவதையும் உறுதி செய்வதற்காக மனித புதைகுழிகளில் உள்ள மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமானநிதி உதவி தொழில்நுட்ப உதவி ஏனைய வளங்களை வழங்குங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் ஒரு தரப்பினராக மாறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.  இது பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலைமனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக பட்டியலிடுகிறது.

https://www.virakesari.lk/article/220545

இந்தியா – வடக்கு ஊடகத் துறைக்கு தொடர்ந்த ஒத்துழைப்பு வழங்கும் : இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2

21 JUL, 2025 | 01:43 PM

image

வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்திய தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். 

இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்: பத்திரிகைத் துறை, கதையாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய உரையாடல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த 19ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது. 

அதில் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவியல் துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

குறித்த நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றும் போதே துணைத்தூதுவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தில் இந்தியா வைக்கும் நம்பிக்கையை வலியுறுத்தினார். 

அத்துடன் தொழில்முறை மேம்பாடு மற்றும் திறன்மூட்டலுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்த அக்கறையுடன் செயல்படுவதாக உறுதிபட தெரிவித்தார். 

மேலும் வடமாகாணத்தில் இந்தியா மேற்கொள்ளும் விரிவான ஒத்துழைப்பு முயற்சிகளில் இந்திய வீடமைப்பு திட்டம், பண்டைய கோயில்களின் மறுசீரமைப்பு, புகையிரத உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின் திட்டங்கள், பல்கலைக்கழக கட்டிடங்கள், மற்றும் யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் போன்ற இந்தியாவின் பன்முக செயல்பாடுகள் மானுடய உதவி, கல்வி ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பட்டறைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்றார்.

குறித்த பயிற்சி பட்டறையில், இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ‘பிஹைண்ட்வுட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சிவதனுஷ் மற்றும் கிருத்திகா மருதநாயகம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டதுடன், ‘தி ஹிந்து’ பத்திரிகையின் பிரதான நிருபர் (தரவுப் பத்திரிகைத் துறை) விஞ்ஞேஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் ‘பிபிசி தமிழ்’ ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் பிரபுராவ் ஆனந்தன் ஆகியோர் மெய்நிகர் ஊடாக கலந்துகொண்டனர். 

அவர்கள் தமது ஊடகத் துறையின் நடப்பு போக்குகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பயிற்சி பட்டறையின் நிறைவில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை இந்திய துணை தூதுவர் வழங்கி வைத்தார். 

IMG_5560__1_.jpegIMG_5558__1_.jpegIMG_5557__1_.jpeg

https://www.virakesari.lk/article/220533

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான திகதி நிர்ணயம்!

3 months 1 week ago

New-Project-1-15.jpg?resize=600%2C300&ss

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான திகதி நிர்ணயம்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம்  நிர்ணயித்துள்ளது.

போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, முந்தைய அரசாங்க காலத்தின் போது, அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனப் பங்குகளை போலி அதிகார பத்திர உரிமம் தயாரித்து முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மீது இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440017

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

3 months 1 week ago

saro.jpg?resize=720%2C375&ssl=1

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்.

”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

“சிறுவர்கள்  உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில்  விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில்   கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஆரம்ப வயதுகளில் குழந்தைகள் திரைச் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், கற்றல், சமூக தொடர்பு, மற்றும் விளையாட்டு போன்ற பன்முகவளர்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கான வளர்ச்சி சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

சிறுவர்களின் மனநலத்தையும், உடல் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்” இவ்வாறு  அமைச்சர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1439988

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

3 months 1 week ago

Chemmani_Kumanan.jpeg?resize=750%2C375&s

செம்மணி செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

அப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.பின்னர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகி ஜூன் மாதம் 7ஆம் திகதியோடு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தன.

மொத்தமாக 9 நாட்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணியில் 19 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் மேற்கொள்வது எனவும், 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிய இடைநிறுத்தல்களுடன் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது எனவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட முதல் 15 நாட்களுக்கான அகழ்வுப் பணிகள் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை என 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக 24 நாட்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பாடசாலை புத்தகப்பை, சிறுமிகளின் ஆடைகள், பாதணிகள், காற்சங்கிலிகள், சிறிய பிளாஸ்டிக் வளையல்கள், பிளாஸ்டிக் பூமாலை உட்பட பல்வேறு சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று காலை மீள ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439979

கசூரினா கடற்கரையில் பாரிய தீ விபத்து!

3 months 1 week ago

00-1.jpg?resize=750%2C375&ssl=1

கசூரினா கடற்கரையில் பாரிய தீ விபத்து!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம்(21) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள் , பனை மரங்கள் என்பன தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1439919

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு

3 months 1 week ago

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு

July 21, 2025 10:50 am

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21.08.2025) காலை இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/annual-festival-of-nallur-kandaswamy-temple/

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம்

3 months 1 week ago

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம்

anura-1-780x470.jpg

அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும்.

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.

இருப்பினும், அரசியலமைப்பு வரைவுக் குழுவை நியமிப்பதோ அல்லது அது தொடர்பான எந்தவொரு ஆரம்ப வேலைகளோ இதுவரை செய்யப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சி ஏற்கனவே அந்த திட்டத்தை ஒரு தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

https://akkinikkunchu.com/?p=333556

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr