ஊர்ப்புதினம்

எதிர்காலத்தில் அபாயகரமான நிலை உருவாகும் : கருணா

3 months ago

எதிர்காலத்தில் அபாயகரமான நிலை உருவாகும் : கருணா

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக  செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை காணப்படும். எனவே, கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான கருணா அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கிழக்கு தமிழ் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கம் வெறும் பதவி பட்டங்களுக்காக அல்ல. எங்களது கிழக்கு மாகாண மக்கள் உரிமையுடனும் தற்துணிவுடன் காத்திரமான தியாகத்துடன் வாழவேண்டும் என்பதற்காக.

கிழக்கு மாகாணம் மூவினங்களும் செறிந்து வாழும் இடம். எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் நிச்சயமாக ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாது. ஆகவே தான் கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுள்ளோம்.

இப்போது அரசாங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. எனவே யார் முன்வருகின்றார்களோ, எங்களுக்கு சாதகமான பேச்சுவார்த்தை நடாத்தி நாங்கள் அந்த ஆட்சியை அமைப்பதற்கு உதவி செய்வோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வட மாகாணத்தை எடுத்துக்கொண்டால் இன்று ஆட்சி அமைப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த கஜேந்தரகுமாரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது. அவ்வாறே டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் சந்தித்துள்ளார். அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் வேடிக்கையான விடயம் ஒட்டுக்குழு, தலைவரை சந்தித்ததாக கூறப்பட்டதேயாகும்.

அவரும் மக்களுக்காக போராட்டத்துக்காக ஆயுதம் தூக்கி வந்த தலைவர்தான். அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து சேவையாற்றி வந்தவர். ஆகவே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிவஞானம் துணிந்து சென்று டக்ளஸுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை வரவேற்கின்றோம். இது போன்று எதிர்காலத்தில் நாங்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

அதை தான் கிழக்கு மாகாணத்தில் எதிர்பார்க்கின்றோம். வேடிக்கை என்னவென்றால் யுத்தம் நடந்த காலத்தில் யுத்தத்தை விமர்சித்தவர்கள் அல்லது யுத்தத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள் தற்போது தேசியவாதிகளாக மாற்றமடைந்துள்ள அவர்கள்தான் தேசியத்தை பற்றி அதிகமாக பேசுகின்றனர்.  

உண்மையில் களத்தில் இருந்த போராளிகள் இன்று துரோகிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். எனவே களத்தில் நின்ற எத்தனையோ போராளிகள் கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் வெற்றி அடைந்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றார்.  R

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எதரகலததல-அபயகரமன-நல-உரவகம-கரண/73-358894

நாட்டின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார் சுகாதார அமைச்சர்

3 months ago

Published By: DIGITAL DESK 3

09 JUN, 2025 | 05:45 PM

image

நாட்டிலேயே மேற்கத்திய மருந்துகளுக்கான மிகப்பெரிய உள்ளூர் உற்பத்தி ஆலையின் கட்டுமானம் சுகாதார அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.

இந்த மருந்து உற்பத்தி ஆலையில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்குவதன் மூலம், நாட்டின் மருந்து உற்பத்தித் துறையில் ஒரு பெரிய புரட்சி தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

பிங்கிரியா ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு அடிப்படை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும், நாட்டின் மிகப்பெரிய மேற்கத்திய மருந்து உற்பத்தியாளரான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், (Synergy Pharmaceuticals Corporation Private Limited) சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் ஆய்வு செய்யப்பட்டது.

பிங்கிரியா ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 15 ஏக்கர் பரப்பளவில் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (USD 120M) நிதி முதலீட்டில் சர்வதேச தரத் தரங்களின்படி கட்டப்பட்டு வரும் இந்த மருந்து தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப நிறுவப்பட்ட அதிநவீன மருந்து உற்பத்தி இயந்திர அமைப்பு மற்றும் இங்குள்ள அடிப்படை மருந்து உற்பத்தி நடவடிக்கைகள் ஆகியவற்றை சுகாதார அமைச்சர் ஆய்வு செய்தார்.

8607abb6-283e-47ab-a680-54950ea76bda.jpg

மருந்து உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட ஊழியர்களை தங்க வைப்பதற்காக கட்டப்பட்டு வரும் தங்குமிட கட்டிடத்தையும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆய்வு செய்தார். தற்போது இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள நாட்டிற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் உற்பத்தி செய்ய உள்ளது. கூடுதலாக, சினெர்ஜி இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்ப மருந்து உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. செனுரா சிவில் இன்ஜினியரிங் (பிவிடி) லிமிடெட் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மருந்து உற்பத்தி ஆலையை ஆய்வு செய்த பின்னர் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த மருந்து உற்பத்தி ஆலை திறக்கப்படுவது நாட்டின் மருந்து உற்பத்தி துறையில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், இந்த மருந்து உற்பத்தி ஆலை நவீன மருந்து உற்பத்தித் துறையில் புரட்சியை முன்னோடியாகக் கொள்ள முடியும் என்றும் கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த ஆலையால் உற்பத்தி செய்யப்படும் சர்வதேச தரத்திலான மருந்துப் பொருட்கள் அரசு மருத்துவமனைகளிலும் சந்தையிலும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து குடிமக்களுக்கும் தற்போது கிடைக்காத அனைத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளையும் உயர் தரத்தில் வழங்குவதே தனது இலக்கு என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில் மருந்துத் துறையில் இருந்த பிரச்சினைகள் காரணமாக, இந்தப் பிரச்சினையை இன்னும் பல மாதங்களுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், அடுத்த ஆண்டு முதல் மருத்துவமனை அமைப்புக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளில் குறைந்தது 95 சதவீதத்தையாவது தொடர்ந்து வழங்க சுகாதார அமைச்சகம் நம்புகிறது என்றும் அவர் கூறினார்.

மக்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 200 பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாகவும், அரசாங்கம் எவ்வளவு பணம் ஒதுக்கினாலும், விநியோகச் சங்கிலியில் உள்ள பலவீனங்கள் காரணமாக மக்களுக்கு மருந்துகளை சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை என்று அரசாங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மிகச் சரியான பதில், நாட்டில் மருந்துகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

54702a3a-b7b4-407e-a167-4ebed8e778d6.jpg

இதற்குத் தேவையான பல மருந்துகளை அதிக நிதி முதலீட்டில் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்றும், இந்த மருந்து உற்பத்தி ஆலையின் தயாரிப்புகள் எப்போதும் உயர் தரத்திலும் சர்வதேச தரத்தின்படியும் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் மருந்து உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாட்டிற்கு அதிக முதலீட்டாளர்களை பெரிய அளவில் கொண்டு வருவது புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் கூறினார். உள்ளூர் உற்பத்தியாளர்கள் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்தால், அவர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் கூறினார்.

பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தை நாட்டின் ஒரு பெரிய பொருளாதார வலயமாக மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்குள் இந்த மருந்து உற்பத்தி ஆலை நிறுவப்படுவதன் மூலம், நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் பலப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் ஏராளமான மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழிற்சாலையில் மட்டும் சுமார் 2,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சந்தர்ப்பத்தில், சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரவி விஜேரத்ன, நிர்வாக இயக்குநர் ரோஹன் விஜேசூரியா, தலைமை இயக்க அதிகாரி இந்திய நாட்டவர் ஆர்.கபாதாஜி, முதலீட்டு வாரியத்தின் தலைவர் அர்ஜுன ஹேரத், மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஒழுங்குமுறை இயக்குநர் அர்ஜுன பத்மகுமார, மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்குமுறைத் தலைவர் வசனா வெலிபிட்டிய, இலங்கை வங்கியின் துணைப் பொது மேலாளர் சம்பத் பெரேரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/217047

இந்த வருடத்தில் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஐ ஈட்ட முடிந்துள்ளது – மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 2

09 JUN, 2025 | 05:54 PM

image

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104%ஐ ஈட்டமுடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.

2025ஆம் ஆண்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் ரூபா 240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும், ரூபா 2 பில்லியனை பீடியிலிருந்தும் ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஷர்ஷன சூரியப்பெரும தலைமையில் வழிவகைகள் பற்றிய குழு கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்த விடயங்களைத் தெரிவித்தனர்.

மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் முகாமைத்துவம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இக்குழு கூடியிருந்தது.

கடந்த வருடத்தில் மே 31ஆம் திகதி வரையாகும்போது மதுவரி வருமானம் ரூபா 88 பில்லியன் என்றும், இதற்கு அமைய இந்த வருடத்தில் வருமானம் ரூபா 10 பில்லியனால் ஏற்கனவே அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோதமான மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பலர் விலகியிருப்பது, அரங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என்றும், இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டுடன் கூடிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கையடக்கத்தொலைபேசிகளில் உள்ள செயலியின் மூலம் ஸ்கான் செய்து போலியான மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் கேள்வியெழுப்பினார். இச்செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டினர்.

2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய QR குறியீட்டு ஸ்டிக்கர் முறையின் பின்னர் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள QR குறியீட்டின் மூலம் மதுபானப் போத்தல்களின் உண்மைத் தன்மையைப் பரிசீலிக்கும் திட்டம் எதிர்காலத்தில் பொதுமக்களுக்களுக்கும் திறக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதியமைச்சர் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய செயற்றிட்டத்தைப் பயன்படுத்தி சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவற்றில் போலியான மதுபானப் போத்தல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வது மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மதுவரித் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மதுபானத்தின் விலை அதிகமாக இருப்பதால் சட்டவிரோதமான மதுப்பாவனை அதிகரிப்பதாகவும், இதற்குத் தீர்வாக நியாயமான விலையில் தரமான மதுபானத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வரி செலுத்தும் நடைமுறையில் சகல பிரஜைகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும், பொது மக்களின் வரிப்பணத்தை ஒரு ரூபா கூட வீண்விரயமாக்காமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம் என்றும் வலியுறுத்தினார்.

பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக சபுமல் ரண்வல, அஜித்.பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் சட்டத்தரனி ஹசாரா லியனகே உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-09_at_15.54.22.jp

WhatsApp_Image_2025-06-09_at_15.54.23.jpWhatsApp_Image_2025-06-09_at_15.54.23__1WhatsApp_Image_2025-06-09_at_15.54.21.jp

https://www.virakesari.lk/article/217043

இணுவில் - காரைக்கால் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் போராட்டம்

3 months ago

09 JUN, 2025 | 04:25 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம், இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது.

அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும் சந்தித்தவண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

IMG-20250609-WA0004.jpg

IMG-20250609-WA0005.jpg

IMG-20250609-WA0003.jpg

IMG-20250609-WA0002.jpg

https://www.virakesari.lk/article/217022

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

3 months ago

09 Jun, 2025 | 05:30 PM

image

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர்.

தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.

இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர்.

இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1000442139.jpg

1000442144.jpg


வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி  | Virakesari.lk

இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் !

3 months ago

09 Jun, 2025 | 05:10 PM

image

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. 

இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் ! | Virakesari.lk

கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு!

3 months ago

உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.  

இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு! | Virakesari.lk

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

3 months ago

09 JUN, 2025 | 11:44 AM

image

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.எஸ்.கே பண்டார அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/216991

”யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும்”- எம்.ஏ.சுமந்திரன்

3 months ago

”யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும்”- எம்.ஏ.சுமந்திரன்

யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை.

சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம். 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன். மக்கள் தவறாக முடிவெடுப்பதில்லை. என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம்.

ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ஆம் ஆண்டிலேயே சொல்லி இருக்கிறோம்.

சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன. நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம்.

எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை. மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தை கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை.

தமிழ் மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம் எனத் தெரிவித்தார்.

https://www.samakalam.com/யாழில்-17-சபைகளிலும்-இலங்க/

சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு!

3 months ago

சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு!

adminJune 9, 2025

Police-militry.jpeg?fit=1170%2C658&ssl=1

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை காவற்துறை சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

https://globaltamilnews.net/2025/216546/

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 1 week ago

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

adminJune 8, 2025

3-3.jpg

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர்,  யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான   க.இளங்குமரன்,  ஜெ.ரஜீவன்,  ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

https://globaltamilnews.net/2025/216534/

கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள்; பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க

3 months 1 week ago

08 JUN, 2025 | 12:27 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற தொழிற்றுறை நிபுணர்களுடான கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. முறையற்ற வகையில் ஒரு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அதனூடாக அரச நிதி மோசடி செய்யும் அல்லது வீண்விரயம் செய்யும் சூழலே காணப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழலுடன் தொடர்புடைய கைதுகள் அனைத்தும் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிபலனாகும். இக்காலப்பகுதியில் புதிதாக வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. 2023 ஆம் 09 இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒருசில அரச நிறுவனங்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் விருப்பம் கொள்வதில்லை. சுங்கத் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம், மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகிய அரச நிறுவங்களின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கிளைகளை திறக்க தயார், ஆனால் அதன்பின்னர் அங்கு ஒருசிலர் பணியில் ஈடுபடமாட்டார்கள்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம். ஊழல் மோசடிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடுகள் கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/216921

அர்ச்சுனா எம்.பி குறித்து அரசின் நடவடிக்கைகள் அதிருப்திக்குரியவை சரத் வீரசேகர தெரிவிப்பு

3 months 1 week ago

08 JUN, 2025 | 12:25 PM

image

(இராஜதுரை ஹஷான்)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு தொடர்ச்சியாக குறிப்பிடுவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்திக்குரியன. முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்களால் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்கு தடையாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட 300 கொள்கலன்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இது அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது.

அர்ச்சுனாவின் கருத்துக்களை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது. ஆனால் இது இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும். 300 கொள்கலன்களில் பிரபாகரின் ஆயுதங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தமிழ் டயஸ்போராக்களிடமிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது. அர்ச்சுனா குறிப்பிட்டுள்ள விடயங்கள் முன்னாள் போராளிகளுக்கும் உத்வேகமளிக்கும் வகையில் அமையும். நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதை கோடரியால் வெட்டி வீழ்த்தும் நிலையை அரசாங்கம் உருவாக்க கூடாது.

அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்கள் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்புக்கு தடையாக அமையலாம். விடுதலை புலிகள் அமைப்பினை இவர் தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும், பிரபல்யத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்வது தெளிவாக விளங்குகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/216916

ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

08 JUN, 2025 | 10:11 AM

image

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்  மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் மாணவனை தண்டித்துள்ளார். 

அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

தண்டனை வழங்கிய குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டவர் என அறியவருகிறது.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர்  மாணவனைப் பேசியதாகவும் பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து  அருந்தியதாக அறிந்ததாக தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/216898

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

3 months 1 week ago

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

June 8, 2025 10:13 am

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கங்களின் போது சபாநாயகராகவும், சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு நடத்தும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 மே ஒன்பதாம் திகதி நடந்த கலவரத்தில் திஸ்ஸமஹாராம, மாகம பகுதியில் உள்ள தனது சொத்து சேதமடைந்ததாகக் கூறி அரசாங்கத்திடம் இருந்து 15.2 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்ற விவகாரத்தில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைகளில் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது இல்லை எனவும், அங்கு வசிப்பிட கட்டமைப்பு எதுவும் இல்லை எனவும், வெறுமனே ஒரு நெல் சேமிப்பு களஞ்சியம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

சொத்து தனது கட்டுப்பாட்டில் உள்ளதாக ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம் செய்து அளித்திருந்த போதிலும், மேற்கொண்ட விசாரணைகளில் அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

2023 ஜூலை மாதம் வெளியான மதிப்பீட்டு அறிக்கையில், அந்த இடத்தில் 14.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு இருந்ததாகவும், நெல் களஞ்சியத்துக்கு 222,600 ரூபா சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பொது நிர்வாக அமைச்சு, தங்கள் அதிகார வரம்பில் இந்த இழப்பீடு வழங்கப்பட முடியாது என தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. இருப்பினும், முழு தொகையும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், குறித்த மோசடி குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சமல் ராஜபக்ச விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த நிதியை செலுத்துவது தொடர்பான சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரச அதிகாரிகள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://oruvan.com/chamal-rajapaksa-may-be-arrested-at-any-time-state-media-reports/

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

3 months 1 week ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

08 Jun, 2025 | 10:13 AM

image

(நா.தனுஜா)

வட, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த்தேசிய கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு  வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைவரம் என்பன தொடர்பில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், தாம் அம்மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அவ்வாறான திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் இருப்பின், அதனைத் தம்மிடம்

வழங்குமாறும், அதுபற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் பின்னரான தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய உயர்ஸ்தானிகருக்குப் பதிலளித்த சுமந்திரன், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றத்திலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத் தாம் முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு முரணாக இரு கட்சிகள் கூட்டணி அமைத்து தம்வசமே அதிக ஆசனங்கள் இருப்பதுபோல் காண்பித்துக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒரே கொள்கையையே கொண்டிருப்பதாகவும், அணுகுமுறைகளே மாறுபட்டவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் அதனை கஜேந்திரகுமார் மறுப்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் தயாரித்த அரசியலமைப்பு வரைபு சிறந்த பல கூறுகளைக் கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதிலுள்ள குறைபாடுகள் பற்றி சகலரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை முற்றாக நிராகரிக்கவேண்டும் என கஜேந்திரகுமார் கூறிவருவது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/216895

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

3 months 1 week ago

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. 

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன. 

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப்போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்கி வருகிறது. 

ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

தற்போது, பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல், சமூக மேடைகளிலான வசைபாடுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம் கடுமையாகக் கண்டிக்கின்றது. 

அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுவதாக எமது சங்கம் தெளிவாக அறிந்து வருகின்றது. 

இச்சவாலுக்கு உரிய சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல அதுவே நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு இடமளிக்கும் நிலை ஆகும். 

இந்நிலையில், வைத்திய நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய களங்கப்படுத்தல் ஆனது, ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது. 

அத்துடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. 

எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது. 

மேலும் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும். 

நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனி நபர்களை காப்பது மட்டுமல்ல நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmbn64q8c01joqpbs833pk06z

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை

3 months 1 week ago

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை; உண்மை எதுவென தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் நிசாம் காரியப்பர்

07 JUN, 2025 | 10:28 PM

image

நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப" இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகின்றன. மன்னிப்பின் சட்டப்பூர்வ நிலை பற்றி தெளிவாக தகவல் இல்லாத சூழ்நிலையில், மக்கள் யாரை நம்புவது?

சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. குற்றங்களை விட, அவற்றை மறைத்தல் மிகப்பெரிய சமூகத் தீமையாகும்.

எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/216886

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக தேக்கு மர குற்றிகளை ஏற்றி சென்ற லொறியின் சாரதி கைது

3 months 1 week ago

07 JUN, 2025 | 05:43 PM

image

சாவகச்சேரியில் கருங்கற்களுக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மர குற்றிகளை கொண்டு சென்ற போது சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தேக்கு மர குற்றிகள் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/216878

இந்திய நிறுவனங்களின் ஏற்பாட்டில் பொருளாதாரக் கலந்துரையாடல்

3 months 1 week ago

07 JUN, 2025 | 10:32 PM

image

(எம்.மனோசித்ரா)

'கடன் மற்றும் மூலதனம் குறித்த உரையாடல் : மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (06) கொழும்பிலுள்ள ரத்னதீபா ஹோட்டலில் விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா, பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம், இந்திய அரசாங்கம், என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றம், கேர்எட்ஜ் குளோபல் ஆகியவை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தோ - இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, டி.டபிள்யு க்ரோப் (பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார்.

மேலும் இந்திய மற்றும் இலங்கை வங்கிகள், பல்வேறு வர்த்தக சபைகளின் உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்புரையாற்றியதோடு, குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் நிர்வாக பணிப்பாளர் பிரதீப் ராமகிருஷ்ணன், கேர்எட்ஜ் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி பராக் கஸ்தூர் மற்றும் என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடரமணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கிப்ட் சிட்டி சுற்றுச்சூழல் அமைப்பு, கடன் மதிப்பீட்டு வழிமுறைகள் மற்றும் அதன் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்திய சமீபத்திய ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதன் போது கிப்ட் சிட்டி மூலம் சர்வதேச மூலதன சந்தைகளை அணுக விரும்பும் நிறுவனங்களுக்கான பட்டியலிடல் தேவைகள் பற்றிய கண்ணோட்டத்தையும் தேசிய பங்குச் சந்தை வழங்கியது.

மேலும் நிதி மற்றும் முதலீடு தொடர்பான களங்களில் கூட்டு முயற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கு இந்த நிகழ்வு ஒரு ஊக்கியாக அமைந்தது.

https://www.virakesari.lk/article/216876

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr