ஊர்ப்புதினம்

சிறுவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் - பொலிஸ்

1 month ago

01 Oct, 2025 | 02:41 PM

image

அனைத்து சிறுவர்களுக்கும் அன்பும் பாதுகாப்பும் நிறைந்த, வளமான வாழ்க்கையை உருவாக்குவதற்காக தொடர்ந்து பாடுபடுவது எமது கடமையாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து சிறுவர்களுக்கும் உலக சிறுவர் தின வாழ்த்துக்களை முன்வைத்து பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் நமது எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பும் நலனும் நமது முக்கிய பொறுப்பாகும். சிறந்த கல்வி, பாதுகாப்பான சூழல், நற்பண்பு வளர்ச்சிக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவதே இலங்கை பொலிஸின் நோக்கம்.

எல்லா சிறுவர்களும் நலமுடன், பாதுகாப்புடன் வளர வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கமாகும். சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்கள் கனவுகள், ஆசைகள் நிறைவேற உதவுவதே எமது கடமை.

இன்று சிறுவர் தினத்தில், நாம் அனைவரும் குழந்தைகளுக்கு ஒரு நன்மையான, அன்பான, பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைந்திட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே நோக்கத்தில், சமூகத்துடன் இணைந்து, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/226584

எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

1 month ago

New-Project-10.jpg?resize=750%2C375&ssl=

எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2025 ஜூன் மாதத்துக்கான இலங்கையின் வெளிநாட்டுத்துறை செயலாற்றம் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது, $255.7 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு கீழே காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி – 29.1 மில்லியன் டொலர்கள்

பெப்ரவரி – 22.3 மில்லியன் டொலர்கள்

மார்ச் – 54.0 மில்லியன் டொலர்கள்

ஏப்ரல்- 145.6 மில்லியன் டொலர்கள்

மே – 125.2 மில்லியன் டொலர்கள்

ஜூன் – 169.6 மில்லியன் டொலர்கள்

ஜூலை- 206.0 மில்லியன் டொலர்கள்

ஆகஸ்ட்- 255.7 மில்லியன் டொலர்கள்.

https://athavannews.com/2025/1449203

யாழில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

1 month ago

ss.jpg?resize=750%2C375&ssl=1

யாழில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.

இறுதி நாளான இன்று  சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம், படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ள அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினைக் காப்பாற்றும் வகையில் ஐ.நா வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படப்போவதில்லை எனும் அடிப்படையில் குறித்த அறிக்கை போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ss.jpg?resize=600%2C304&ssl=1 sg.jpg?resize=600%2C281&ssl=1 fs.jpg?resize=600%2C365&ssl=1

IMG-20251001-WA0036.jpg?resize=600%2C338&ssl=1 IMG-20251001-WA0050.jpg?resize=600%2C338&ssl=1 IMG-20251001-WA0043.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1449225

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

1 month ago

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

01 Oct, 2025 | 12:46 PM

image

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, ஜோதிட நிலையம் நடத்திவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பருத்தித்துறை பகுதியில், இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்து ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (30) சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளை என்பதும் அவர்கள் இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, பருத்தித்துறை பகுதிக்குச் சென்று விடுதி ஒன்றில் தங்கி, ஜோதிடம் கூறி வந்த நிலையில், அண்மையில் தும்பளை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று, அங்கு குடியமர்ந்து, அவ்வீட்டை ஜோதிட நிலையமாக மாற்றி ஜோதிடம் கூறி வந்ததாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட மூவரிடமும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/226569

தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு!

1 month ago

தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு!

adminOctober 1, 2025

Sambath.jpeg

தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லொறியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, அதற்கான பிடியாணையை செவ்வாய்க்கிழமை (30.09.25)  பிறப்பித்தார்.

மித்தெனிய பகுதியில் இரண்டு ஐஸ் கொள்கலன்களை மறைத்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான சம்பத் மனம்பேரி, கொழும்பு  மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதை அடுத்து நீதிபதி இந்த பிடியாணையை பிறப்பித்தார்.

2009 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் நாரஹேன்பிட்ட சந்திக்கு அருகில் கொள்ளையடிக்கும் பொதுவான நோக்கத்துடன் ஒரு சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாகக் கூறி, காவற்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு, செல்லதுரை கொலவேந்நாதன் என்ற தொழிலதிபரை மிரட்டி, அவரது வசம் இருந்த சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அரிசி லொரி, பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சம்பத் மனம்பேரி மற்றும் நெரஞ்சன் பெரேரா ஆகியோரைத் தவிர வேறு நான்கு பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கல்ப பெரேரா, தனது கட்சிக்காரர் தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் உள்ளதாகவும், அதனால் இன்று  (30.09.25)நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் கூறினார்.

அவர் சிறையில் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த அறிக்கையை வழங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார்.

நான்காவது குற்றவாளியான நெரஞ்சன் பெரேரா சார்பில் முன்னிலையான  வழக்கறிஞர் ராகுல் ஜெயதிலகே, தனது கட்சிக்காரர் ஐஸ் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

சம்பத் மனம்பேரி

https://globaltamilnews.net/2025/221001/

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

1 month ago

a61d1bf2-5e49-4af1-b43c-a94c2c7ec609.jpg

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.

டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1efbeedd-f355-437f-a68e-e7eef0714840-486x600.jpg?resize=375%2C463&ssl=1  949be411-4777-43cb-999e-4194e89ba92d.jpg?resize=615%2C463&ssl=1 06123f24-0092-49d8-9740-7ca7c2262047.jpg?resize=600%2C526&ssl=1 a61d1bf2-5e49-4af1-b43c-a94c2c7ec609.jpg?resize=600%2C330&ssl=1

5a1d72d6-3adf-4c4b-bd78-af7c1dddca7b.jpg?resize=445%2C600&ssl=1

https://athavannews.com/2025/1449151

குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது

1 month ago

குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது

ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது.

ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள்.

தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, அவரின் காதலியின் வீடு சென்று; “எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள்” என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என, விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குழந்தையின் தந்தை – அவரின் சின்னம்மா (தாயின் சிறிய சகோதரி) ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, களியோடை ஆற்றுப் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன்; உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே, இந்தக் குழந்தையை வளர்ப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் சின்னம்மாவும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்ட பகுதிக்கு, முறையாக சிகிச்சையளிக்கப்படாமையினாலும், அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததாலும், ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை அவர்கள் கொண்டு சென்றனர்.

இதனையடுத்தே, ‘குழந்தையொன்று ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக’ கதை பரவியது.

இந்தப் பின்னணியில்தான், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து, தற்போது – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

முன்னராக, குறித்த குழந்தை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவருடையதாக இருக்கலாம் என – சமூக ஊடகங்களில் சிலர் அபாண்டமாக எழுதியிருந்தனர். அவ்வாறு எழுதப்பட்டமையைக் கண்டித்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அவ்வாறு எழுதியவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.


உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!

1 month ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். 

முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பயனளிக்காமல் நேற்று (29) இரவு உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கடந்த வருடம் உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் பலருடனும் மிகவும் பண்பாக பழகும் ஒரு மாணவனான இவனது இழப்பு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

https://adaderanatamil.lk/news/cmg6874nz00prqplpy9mk2wom

தாஜுதீன் கொலை வழக்கில் 'கஜ்ஜா'வின் ஈடுபாடு உறுதி

1 month ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.

இன்று (30) பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmg6kzasy00rao29nd1r2xywx

பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு

1 month ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.
 
ஆதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும்.
 
மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.
 
இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmg6pk33500rdo29nfpamg16x

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

1 month ago

30 Sep, 2025 | 03:01 PM

image

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் செவ்வாய்க்கிழமை (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்  அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி  அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்,    நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன்போது உரையாற்றிய அமைச்சர் கூறியவை வருமாறு,

பொருளாதார ரீதியில் இலங்கை வேகமாக முன்னேறி வருகின்றது என தரவுகள் கூறுகின்றன. அதேபோல இலஞ்ச, ஊழல் ஒழிக்கப்பட்டு வருகின்றது.  இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது.

இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும். அவ்வாறு நடந்தால் இலகுவில் முன்னோக்கி சென்று விடலாம். இதனையே எமது ஜனாதிபதி தோழர் எல்லா இடங்களிலும் வலியுறுத்தி வருகின்றார்.

எனவே,  இந்த  இனவாதம் என்ற பிசாசுக்கு எமது நாட்டில் நிரந்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்கும் போது பழைய பிசாசுகள் மீண்டெழுவதை காண முடிகின்றது.

 பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். அதிகாரத்துக்கா சதி மற்றும் சூழ்ச்சிகளை செய்ய முடியுமா என்பது பற்றி ஆராய்கின்றனர். 

இனவாதத்தை தூண்டியேனும் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது பற்றியும் கதைக்கின்றனர். இது பற்றியே ரணிலும், மஹிந்தவும் அவரது வீட்டில் மந்திராலோசனை செய்கின்றனர். 

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள். கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்தான் ரணில். இந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாத்தவர்தான் ராஜபக்ச.

எனவே, இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்  என்றார்.


ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு | Virakesari.lk

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது - வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன்

1 month ago

30 Sep, 2025 | 03:44 PM

image

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் – ஸ்ரீ லங்கா Women's Corps - Sri Lanka) அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள நன்றிசொல்லும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அண்மையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேற்குறித்த இத்தீர்மானம் எடுக்கப்பட்டதானது இன ரீதியாக சிந்திப்பவர்களுக்கு பலத்த அடியாகும் என்பதோடு முஸ்லிம் மாணவிகள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் இந்த அரசின் மீதான நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்பத்தியுள்ளது. இத் தீர்மானத்திற்காக தங்களுக்கு இந்த நாட்டின் முஸ்லிம் மாணவிகள் மற்றும் பெண்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் சட்டங்கள் இருந்தாலும் கடந்த காலங்களில் பல்வேறான அசௌகரியங்களை பரீட்சைகளின் போதும் கல்வி கற்றலின் போதும் இம்மாணவிகள் எதிர்நோக்கி வந்தமையை நாம் மறந்துவிட முடியாது.

சில சமூகம் சார்ந்த மற்றும் நாட்டின் நன்மை கருதி தங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பார்க்கும் போது மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயம் தங்கள் மீது தோன்றியிருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது எனவும் அவரது  நன்றிசொல்லும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது - வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன் | Virakesari.lk

பரஸ்பர மரியாதையுடன் கலாசாரத்தில் சமகாலத்தவர்கள்– மஹிந்த ராஜபக்ஷ

1 month ago

30 Sep, 2025 | 05:20 PM

(எம்.ஆர்.எம்.வசீம்)

பரஸ்பர மரியாதையை தொடர்ந்து பேணிச்செல்ல முடியுமான  அரசில் கலசாரத்தில் நாங்கள் இருவரும் சமகாலத்தவர்கள் என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அவரது கால்டன் இல்லத்திற்கு வந்து சந்தித்து சென்றமை தொடர்பில் அவரது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்குமிடையில் சந்திப்பொன்று தங்கல்லை கால்டன் இல்லத்தில் இடம்பெற்றது. அங்கு  நாங்கள் இருவரும் மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டருந்தோம். 

அரசியல் ரீதியில் நாங்கள் இருவரும் வேறு நிலைப்பாட்டை வகித்தபோதும் தேசியப் பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளையில் பரஸ்பர மரியாதையைப் பேணக்கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தின் சமகாலத்தவர்கள்.

அன்புக்குரிய ரணில் விக்ரமசிங்கவின் வருகை தொடர்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று மைத்திரி விக்ரமசிங்கவையும்  மரியாதையுடன் நினைவு கூருகிறேன்.

பரஸ்பர மரியாதையுடன் கலாசாரத்தில் சமகாலத்தவர்கள்– மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

1 month ago

30 Sep, 2025 | 07:36 PM

image

பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கக்கூடும் என்று அந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது.

அதன்படி, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, மேலும் மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க முடியும்

பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை | Virakesari.lk

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 month ago

New-Project-396.jpg?resize=750%2C375&ssl

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (30) புதிய சாதனை உச்சத்தை எட்டியது.

அமெரிக்க அரசாங்க முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் பாதுகாப்பான புகலிட உலோகத்திற்கான தேவையை அதிகரித்தன.

அதன்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,865.73 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.

அதே நேரத்தில் தங்க எதிர்காலம் ஒரு அவுன்ஸ் 3.893.72 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.

மூன்றாம் காலாண்டில் மஞ்சள் உலோகத்தின் வி‍லை சுமார் 17% சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏனெனில் பல காரணிகள் மஞ்சள் உலோகத்தின் விலை உயர்வுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன.

அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்க முடியாது என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், தங்கத்திற்கான தேவை இந்த வாரம் அதிகரித்துள்ளது.

செலவு சட்டமூல நிறைவேற்றவும் நூற்றுக்கணக்கான கூட்டாட்சி நிறுவனங்கள் மூடப்படுவதைத் தவிர்க்கவும் செப்டம்பர் 30 (புதன்கிழமை 0400 GMT) நள்ளிரவு வரை காங்கிரஸ் அவகாசம் அளித்துள்ளது.

குடியரசுக் கட்சி ஆதரவுடன் கூடிய செலவு சட்டமூலம் அண்மையில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

ஆனால் இப்போது செனட்டில் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

குடியரசுக் கட்சியினர் செனட்டில் 53 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர்.

ஆனால் செலவு சட்டமூலத்தை அங்கீகரிக்க குறைந்தது 60 வாக்குகள் தேவை.

சுகாதாரச் செலவுகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்ட அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகள் சிறிதும் முன்னேற்றமில்லை என்று தெரிகிறது.

அரசாங்க முடக்கம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், இது வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முடக்கம் ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான அரசு வேலைகள் பறிக்கப்படலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்தது – இது தொழிலாளர் சந்தையில் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலை.

இலங்கை விலை விபரம்;

கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 306,000 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 282,000  ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1449028

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

1 month ago

1755064640-US-State-Department-Sri-Lanka

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களம்.

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமையினால் நிறுவன ஊழல் தொடர்ந்து நிலவுவதாகவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது 2025 முதலீட்டு சூழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் லஞ்சக் கோரிக்கைகள் குறைவடைந்துள்ள போதிலும் சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்படும் துறைகளில் ஊழல் நீடிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேவையற்ற விதிமுறைகள், சட்ட நிச்சயமின்மை, அதிகாரிகளின் பலவீனங்கள் முதலீட்டாளர்களுக்கு சவாலாக உள்ளதாகவும்; குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் தனியார்துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை விமர்சித்துவருவதுடன் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் உட்கட்டமைப்பு துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவுனங்கள் பெரும்பாலும் இல்லை என்பதனையும் தெரிவித்துள்ளது

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்கியிருந்தாலும், ஆரம்பகாலம் முதல் உள்ள இந்த அரசாங்கத்தின் மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச சித்தாந்தங்கள் காரணமாக பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 400 மில்லியன் டொலர் பெறுமதியிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திலிருந்து இந்திய அதானி கிரீன் எனர்ஜி விலகியதனையும் மேற்கோள்காட்டி  குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலவீனமாக அதிகாரிகள் நிச்சயமற்றதன்மை தேவையற்ற விதிமுறைகள் ஆகியன இலங்கையில் முதலீடு செய்வதற்கான ஏனைய சவால்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கும் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் லஞ்சம் குறைவடைந்துள்ளமை   கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1449036

ஏ9 வீதியில் பஸ் விபத்து ; மூன்று பேர் காயம்!

1 month ago

ஏ9 வீதியில் பஸ் விபத்து ; மூன்று பேர் காயம்!

30 Sep, 2025 | 12:04 PM

image

ஏ9 வீதியில் அநுராதபுரம், மிஹிந்தலை , பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/226478

வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக இலங்கை மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு

1 month ago

வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக இலங்கை மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், தனியார் துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைத்து முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தாலும், அரசாங்கத்தின் பழைய மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச செல்வாக்கு கொண்ட சித்தாந்தங்கள் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் சந்தேகத்துடன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

அத்துடன், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாகக் கூறும் அமெரிக்கா, இலங்கை முதலீட்டுச் சபை பிரதான முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் என்ற போதிலும், அவர்களுடன் நிலையான மற்றும் வெளிப்படையான உரையாடலை பேணுவது சவாலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே,தேவையற்ற கட்டுப்பாடுகள், சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகாரிகளின் பலவீனமான பதிலளிப்பு போன்றவையும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு உள்ள ஏனைய பிரச்சினைகளாக அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

இதேவேளை, இந்திய நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி (Adani Green Energy), இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து 400 மில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் இருந்து விலகியதை அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குக் காரணம், முன்னர் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகளே என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும், புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் கையூட்டல் கோரிக்கைகள் குறைந்துள்ளதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறிப்பாக சில சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்பட்ட துறைகளில் நிறுவன ரீதியிலான ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.samakalam.com/இலங்கை-மீது-அமெரிக்கா-கட-2/

தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல! - சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

1 month ago

தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல! - சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும், கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் எத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளும் மக்களின் வளமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கையில் மாற்று வலுசக்தியை வலுப்படுத்துமுகமாக காற்றாலை மின்கோபுரங்கள் சூரிய சக்தி மின் ஆலைகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக மன்னார் தீவுப்பிரதேசத்தில் அப்பிரதேசம் சுற்றிவர கடலைக் கொண்டிருப்பதன் காரணமாக பாரிய காற்றாலைகளை அமைக்க அரசாங்கம் தனியார் துறைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது.

மன்னார் மக்கள் இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். ஒன்று கனியவளமிக்க மண் கொள்ளையிடப்படுகின்றது. மக்கள் செரிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

மன்னார் தீவில் ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் அதனுடைய இரைச்சல் ஒலி என்பது மக்களையும், மாணவர்களையும் வெகுவாக பாதித்து வருவதாக மக்கள் ஏற்கனவே முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

மேலதிகமாக இன்னும்பல காற்றாலைகளை அமைக்க நிறுவனங்கள் முயற்சிப்பதானது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மேல் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

மாற்றுவலுசக்திகள் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காற்றாலை மின் உற்பத்தியும் மின்உற்பத்திக்கான மாற்றுவழி என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மக்கள் செரிவாக வாழும் பிரதேசங்களில் மிக அதிகப்படியான காற்றாலைகளை நிறுவுவதானது மக்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

என்பதும் உண்மையானது. இவை ஒருபுறமிருக்கரூபவ் ஒவ்வொரு காற்றாலை மின்கோபுரத்தை நிறுவும்பொழுதும் எழுபதடிக்குமேல் நிலம் தோண்டப்படுகின்றது. இதன் காரணமாக கடல்நீர் ஊருக்குள் வரக்கூடிய வாய்ப்பும் மழைநீர் மண்ணுக்குள் சேகரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலத்தடிநீர் மாசுபடுவதென்பதும் கடல்நீர் உட்புகுவதும் வெறுமனே மன்னார் தீவை மட்டும் பாதிக்கின்ற விடயமல்ல. அது மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நிலத்தடிநீரை பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது. இதற்கெதிராகத்தான் மன்னார் தீவுப்பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

தேர்தலின் போது இவை அனைத்தும் நிறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும் இந்த வேலைத்திட்டத்தைத் தொடரும்படி ஜனாதிபதி இப்பொழுது உத்தரவிட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வியல் உரிமைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் அவை பாதித்துவிடக்கூடாது.

இந்த விடயத்தில் அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஏற்கனவே முப்பது காற்றாலைகளை நிறுவும்பொழுது மக்கள் அதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அதனால் இன்று ஏற்படுத்தப்படும் இரைச்சலினால் நிகழும் ஒலி மாசுபாடானது மக்களுக்கு பெரும்பிரச்சினையாக இருக்கின்றது என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

எனவே மேற்கொண்டு காற்றாலை மின்கோபுரங்களை அமைக்க வேண்டாம் என்பதுதான் மன்னார் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதனை அரசு கவனத்துடன் பரிசீலப்பதை விடுத்து இதற்கெதிராகப் போராடுபவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் சிறையிலடைப்பதும் ஜனநாயக விரோதமானதும் சர்வாதிகார அணுகுமுறையுமாகும்.

அரசாங்கம் இவற்றைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் மன்னார் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்து ஏனைய காற்றாலை மின்கோபுர அமைப்புகளை வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதே சிறந்ததெனக் கருதுகிறோம். அத்தகைய முடிவெடுப்பதானது மன்னார் மக்கள் அமைதியாகவும் தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து வாழவும் வழிவகுக்கும் எனக் கருதுகின்றோம் என தெரிவித்தார்.

https://www.samakalam.com/தமிழ்-மக்கள்-அபிவிருத்தி/

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

1 month ago

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

adminSeptember 30, 2025

01-1.jpg?fit=968%2C720&ssl=1

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோப்பாய் நன்னீர் திட்டம் , விவசாய நிலங்களுக்கு அருகாமையில் , உள்ள வெற்றுக்காணிக்குக்குள் வைத்தியசாலைக்கு சொந்தமான வாகனத்தில் , வைத்தியசாலையின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.

அதனை அவதானித்த ஊரவர்கள் , கழிவுகளை கொட்டுவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் போது தாம் நீதிமன்ற அனுமதி பெற்றே நாம் இவ்விடத்தில் கழிவுகளை கொட்டுவதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதி மக்கள் அது தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபைக்கும் அறிவித்துள்ளனர்.

அதற்கு கழிவுகளை கொட்டியவர்கள் அதற்கு தீ வைத்து விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்து , சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

https://globaltamilnews.net/2025/220960/

Checked
Sat, 11/01/2025 - 17:30
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr