ஊர்ப்புதினம்

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

1 month ago

New-Project-374.jpg?resize=750%2C375&ssl

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது.

இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிரோண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி வீதி, அங்குலானை,வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவை மற்றும் பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாகி வருவதாகவும் NDDCB குறிப்பிட்டுள்ளது.

மேலதிகமாக, கண்டி மாவட்டத்தில் சில பகுதிகள் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் NDDCB தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை போதைப்பொருள் குற்றங்களுக்காக 206 சிறுவர்கள் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் சிறுவர்கள் 39 பேர் நன்னடத்தையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1448821

கால்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில் கைது செய்யப்பட்டபோது வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியும் தெரிவிப்பு

1 month ago

28 Sep, 2025 | 05:23 PM

image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, தான் சிறையில் இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய பங்களிப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து விசாரித்தார் என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226339

மன்னாரில் நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு

1 month ago

Published By: Digital Desk 3

28 Sep, 2025 | 03:09 PM

image

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது போக்குவரத்து கள் அனைத்தையும் நிறுத்தி,வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை யாற்றுகின்றவர்கள் நாளைய தினம் கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காலை திங்கட்கிழமை (29) காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும்.குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும்.பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும்.

குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும்.போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்படும்.

எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள்,வர்த்தகர்கள்,பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர்,உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/226328

உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனா விஜயம்

1 month ago

28 Sep, 2025 | 05:38 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

1995 உலக மகளிர் மாநாட்டின் 30ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பீஜிங்கில் உலக மகளிர் உச்சி மாநாட்டை நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த வாரம் இறுதியில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையின் நான்காவது உலக மகளிர் மாநாடு பீஜிங்கில் நடைபெற்றது. அந்த மாநாட்டைக் கொண்டாடுவதற்கும், பீஜிங் பிரகடனம் மற்றும் செயற்றிட்டத்தின்  அமுலாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சீன அரசாங்கமும் ஐ.நா. பெண்கள் அமைப்பும் இணைந்து நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.  

மேலும், 2025 ஆண்டில் மற்றொரு உலக மகளிர் உச்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முன்மொழிந்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பெண்களின் வளர்ச்சிக்கான முயற்சிகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டாலும், குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சீனா, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அனைத்து அம்சங்களிலான வளர்ச்சியை மேம்படுத்துவதில், சீனா ஒரு ஆதரவாளராக மட்டுமல்லாமல், ஒரு தீவிரமான செயல்படுத்துபவராகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226316

ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு

1 month ago

Published By: Vishnu

28 Sep, 2025 | 06:44 PM

image

ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226346

8 வருடங்களில் மின்சார சபைக்கு 594,368 மில்லியன் ரூபா நட்டம் கோப் குழுவில் தகவல்

1 month ago

28 Sep, 2025 | 02:21 PM

image

(இராஜதுரை ஹஷான்)

2014 முதல் 2022ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை 594,368 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் நடைமுறை செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை பரிசீலனை செய்வதற்காக கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீரவின் தலைமையில் குழு கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மின்சார சபையின் நட்டத்துக்கான பல காரணிகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் மின்சார சபையில் போதுமான சேவையாளர்கள் உள்ள நிலையில் ஒருசில கண்காணிப்பு நடவடிக்கைகள் வெளியக தரப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டமை நட்டத்துக்கான காரணிகளில் பிரதான ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார சபை தொடர்ச்சியான நட்டமடைந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மின்கட்டணம் ஒருகட்டமாக அதிகரித்ததால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். இருப்பினும் 2023 ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்சார சபை இலாபமடையும் நிலைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தினசரி 18 மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.மின்கட்டமைப்பின் சிக்கல்களினால் இவ்வாறு மின்விநியோகம் துண்டிக்கப்படவில்லை. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய கடனை உரிய காலப்பகுதியில் செலுத்ததாத காரணத்தால் மின்வியோகம் சிக்கலுக்குள்ளானது என்று அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்கள்.

மின்கட்டணத்தை அதிகரித்து 24 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்கியமை சந்தேகத்துக்குரியது என்று குழுவின் தலைவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

https://www.virakesari.lk/article/226318

ஈஸ்டர் தாக்குதல்: தீவிரவாதம் உலகமயமானதன் அச்சமூட்டும் அடையாளம் - அட்மிரல் அனில் குமார் சவ்லா

1 month ago

Published By: Digital Desk 3

28 Sep, 2025 | 10:21 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது. எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது என தெரிவித்த ஓய்வுப்பெற்ற இந்திய கடற்படை அதிகாரி அட்மிரல் அனில் குமார் சவ்லா, அனைத்துக் கடற்படைகளின் கூட்டு முயற்சி மற்றும் கடல்சார் இராஜதந்திரத்தின் தனித்துவமான அனுகூலங்களில் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற 'கடல்சார் உரையாடல்' மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அட்மிரல் அனில் குமார் சவ்லா மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கைக்குத் வருவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நாகரிகப் பிணைப்புகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. மேலும், இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் கிட்டத்தட்ட பிணைக்கப்பட்டவையாகும். கடல்சார் இராஜதந்திரம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புச் சவால்கள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாகும். கடல்சார் பாதுகாப்பும், பொருளாதாரப் பலன்களுக்காகக் கடலைப் பயன்படுத்துவதும் பிரிக்க முடியாதவை. எனவே பாதுகாப்பும், வளர்ச்சியும் கைகோர்த்து செல்ல வேண்டும். கடல்சார் வளங்கள் வரம்பற்றதல்ல என்பதையும், அவற்றின் நிலையான பயன்பாட்டை உறுதிசெய்வது அவசியம்.

மரபுசாராத கடல்சார் பாதுகாப்புச் சவால்கள் 21-ம் நூற்றாண்டில் அதிகரித்திருப்பதற்கான நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான குழுக்களும் கடல் பயணத்திற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு கடல்சார் நடவடிக்கைகள் அதிகரித்ததால், தாக்குதல் இலக்குகளும், ஆயுதங்களை விநியோகிக்கும் வழிமுறைகளும் பெருகின. பலவீனமான அரசுகள், அவற்றின் எல்லைக்குள் செயல்படும் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தத் தவறுவது ஒரு முக்கியக் காரணம். உதாரணமாக, செங்கடலில் ஹூத்தி குழுவினர் நடத்திய தாக்குதல்களை குறிப்பிடலாம்.

கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகியவை இனிமேல் சாதாரண குற்றங்கள் அல்ல. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக மாறிவிட்டன. இந்தக் குற்றங்களை எதிர்த்துப் போராட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மறுபுறம் தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது. எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது. உலகில் மிகப் பெரிய கடற்படை இருந்தாலும் அது சாத்தியமில்லை. அனைத்துக் கடற்படைகளின் கூட்டு முயற்சி இங்கு அவசியமாகிறது. கடற்படைகள், கடல்சார் இராஜதந்திரத்தில் தனித்துவமான அனுகூலத்தைக் கொண்டுள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/226287

நினைவுகூரலுக்கான சுதந்திரம் மேலும் வலுப்படுத்தப்படும் தீர்வை வழங்குவதற்கான அரசியல் தன்முனைப்பு தம்மிடம் உண்டு என்கிறார் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

1 month ago

28 Sep, 2025 | 10:49 AM

image

(நா.தனுஜா)

முன்னைய அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஜெனிவாவில் ஆரம்பமானது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் இலங்கை சார்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன், அவ்வலுவலகத்தின் உறுப்பினர் அஜித் தென்னக்கோன், ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து நிகழ்நிலை முறைமையில் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள், மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட நிராகரிப்பு, வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள், சத்துருக்கொண்டான் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகளின் மீள்விசாரணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குழுவில் அங்கம்வகிக்கும் அறிக்கையாளர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான அரசியல் தன்முனைப்பு தமது அரசாங்கத்திடம் இருப்பதாகவும், ஆகவே இதுபற்றி விசாரணைகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததுடன் அதற்கு உதாரணமாக அண்மையில் குருக்கள்மடத்தில் உள்ள மனிதப்புதைகுழியை தான் நேரடியாகச் சென்று பார்வையிட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று மனிதப்புதைகுழி அகழ்வைப் பொறுத்தமட்டில், அப்பணிகளுக்காகப் போதியளவு நிதியை ஒதுக்கீடு செய்து, அவற்றை உரியவாறு முன்னெடுத்துவருவதாகவும், இருப்பினும் நிபுணத்துவம் உள்ளிட்ட உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் சர்வதேச சமூகத்திடம் அதனைக் கோருவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை கடந்தகால அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

மேலும் கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் போன்றவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தன்முனைப்பு அரசாங்கங்களுக்கு இல்லாததன் காரணமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் செயற்திறன்மிக்கவகையில் இயங்குவதற்கு இடமளிக்கப்படவில்லை எனவும், ஆனால் தமது அரசாங்கத்திடம் அந்த அரசியல் தன்முனைப்பு இருப்பதன் காரணமாக மேற்படி கட்டமைப்புக்கள் உரியவாறு இயங்குவதற்கு அவசியமான வளங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/226291

52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர் ஆந்திராவிற்கு நாடு கடத்தப்பட்டனர்

1 month ago

Published By: Digital Desk 1

28 Sep, 2025 | 03:10 PM

image

யாழ்ப்பாண சிறையில் 52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், விடுவிக்கப்பட்ட இந்தியாவில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வீடு திரும்புவார்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு செப்டம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்கரையிலிருந்து காக்கிநாடாவுக்குப் புறப்பட்டது.

நான்கு மீனவர்களும் வெள்ளிக்கிழமை (26) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புதுடில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச பவனில் உள்ள மாநில அரச அதிகாரிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

இலங்கை கடலோர காவற்படை செப்டம்பர் 26 ஆம் திகதி மண்டபம் முகாமிலுள்ள இந்திய கடலோர காவற்படையிடம் மீனவர்களை ஒப்படைத்தது.

அங்கிருந்து அவர்கள் காக்கிநாடாவுக்குப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் ஒரு இரண்டாம் நிலை இழுவைமடி மீன்பிடி படகு வாங்க நாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தனர்.

ஆனால் வீடு திரும்பும் போது, தொழினுட்ப கோளாறு காரணமாக இலங்கை நீரில் மிதந்ததாக அறிக்கைகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஒகஸ்ட் 4 ஆம் திகதி இலங்கை கடற்படை மீனவர்களைக் கைது செய்தது.

அதன் பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செப்டம்பர் 12ஆம் திகதியன்று யாழ்ப்பாண நீதிமன்றம் ஆந்திர மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.

வெளியுறவு அமைச்சகத்திடம் இந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அவர்கள் திரும்புவதற்கான முயற்சிகளைத் ஆரம்பித்தது.

இலங்கை அரசாங்கத்துடனும், இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையின் ஆதரவுடனும், நான்கு மீனவர்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்பியதாகவும் உயர் ஸ்தானிகராலயம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226327

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசியர், பேராசிரியர் பதவி உயர்வுகளுக்குப் பேரவை அங்கீகாரம்

1 month ago

27 Sep, 2025 | 04:34 PM

image

( எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சையியல் துறை மற்றும் உடற்கூற்றியல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரையும், கலைப்பீடத்தின் புவியியல் துறை, இந்து கற்கைகள் பீடத்தின் சமஸ்கிருதத்துறை மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையட்டு விஞ்ஞான அலகைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கே பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் செப்ரெம்பர் 27 ஆம் திகதி சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன், பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சத்திரசிகிச்சையியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி, சிரேஷ்ட விரிவுரையாளரும், சத்திர சிகிச்சை நிபுணருமான சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா, உடற்கூற்றியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி துரைரட்ணம் செந்தூரன், புவியியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா, சமஸ்கிருதத்துறைத் தலைவரும்இ சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா மற்றும் விளையட்டு விஞ்ஞான அலகின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவநேசன் சபா ஆனந் ஆகியோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், விவசாய பீடத்தைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன் விவசாய உயிரியலில் சிரேஷ்ட பேராசியரகவும், மருத்துவ பீடத்தைச் சேர்நத சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி சிறுநீரகவியலில் பேராசிரியராகவும், சத்திர சிகிச்சை நிபுணர் சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா சத்திரசிகிச்சையியலில் பேராசிரியராகவும், உடற்கூற்றியல் துறைத் தலைவர் கலாநிதி துரைரட்ணம் செந்தூரன் உடற்கூற்றியலில் பேராசிரியராகவும், புவியியல் துறைத் தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா புவியியலில் பேராசிரியராகவும், சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா சமஸ்கிருதத்தில் பேராசிரியராகவும், விளையட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சிவநேசன் சபா ஆனந் உடற்கல்வியியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/226249

தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது - ஜப்பானில் ஜனாதிபதி

1 month ago

27 Sep, 2025 | 09:06 PM

image

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. இந்த கலாசார நிகழ்வைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இத் தருணத்தில், இலங்கை அதன் பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும், தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை, தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்புப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி வருவதாகவும், இந்த அபிவிருத்தியின் நன்மைகள் பரவலாகப் பகிரப்படும் என்றும், அந்த சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்வதாகவும் தெரிவித்தார்.

"எக்ஸ்போ 2025 ஒசாகா" கண்காட்சியில் இலங்கை மற்றும் ஜப்பானின் கண்காட்சி அரங்குகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், எக்ஸ்போ 2025 கண்காட்சி மூலம் இலங்கைக்கு தனது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கான உலகளாவிய தளத்தை உருவாகும் என்று தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில், கடினமான காலங்களில் ஆதரவளித்தும் வெற்றிகரமான காலங்களில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வலுவான பங்காளியாகவும் ஜப்பான் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு:

நட்புறவு என்பது மனிதகுலத்தின் மிகவும் விலைமதிப்பற்ற பிணைப்புகளில் ஒன்றாகும். இது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரங்களை இணைக்கிறது. எல்லைகளைக் கடக்கின்றது. மனித உறவுகளை வளர்க்கின்றது. மேலும்,  ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காக பொதுவான இலக்குகள் மூலம் நாடுகளை ஒன்றிணைக்கிறது.

 "எக்ஸ்போ 2025" கண்காட்சி இந்த இலட்சியத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். நட்புறவு மற்றும் பொதுவான இலக்குகளை கொண்டாடும் இந்த நேரத்தில், ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ஒசாகாவில் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் உங்களுடன் இணைவதை கௌரவமாகக் கருதுகிறேன். “எக்ஸ்போ 2025” என்பது 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர நட்புறவு, நல்லிணக்கம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து சமூகத்திலும் இருக்கும் மனித விழுமியங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் உலகளாவிய தளமாகும்.

இலங்கையின் பாரம்பரியத்தின் செழுமையை மாத்திரமன்றி, நிலைபேறான, வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசம் என்ற எமது தெளிவான நோக்கையும் இங்கு நாம் உலகிற்கு முன்வைக்கிறோம். எக்ஸ்போ போன்ற சர்வதேச தளங்களில் எமது பலம் மற்றும் திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம், உலகளாவிய சமூகத்தில் பொறுப்புக் கூறத்தக்க மற்றும் எதிர்கால நோக்கைக் கொண்ட பங்காளராக எமது வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எக்ஸ்போ 2025 இல் இலங்கையின் பங்கேற்பு, நவீன மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான பொருளாதார மாற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பை உலகின் ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதன்போது, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வர்த்தகம், விவசாயம் மற்றும் நமது ஏராளமான கடல் வளங்களின் நிலைபேறான பயன்பாடு உள்ளிட்ட அதிக திறன்  கொண்ட துறைகளை வளர்ப்பது தொடர்பான எமது தெளிவான கொள்கையை நன்கு பிரதிபலிக்கிறது.

"எக்ஸ்போ 2025" இன் தொனிப்பொருள் "நமக்கான எதிர்கால சமூகத்தை உருவாக்குதல்" என்பதாகும். எதிர்கால சந்ததியினருக்கு, குறிப்பாக நம் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதே இதன் நோக்காகும். உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இந்த சகாப்தத்தில், இலங்கை நமது பொருளாதார பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளது. தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட நாம், இப்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறோம். இதன்போது, அபிவிருத்தியின் பலன்கள் பரவலாகப் பகிரப்படுவதையும், அந்தச் சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதையும் உறுதிசெய்கிறோம். எக்ஸ்போ 2025 கண்காட்சி ஊடாக இலங்கை தமது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கு உலகளாவிய தளத்தை உருவாக்கும்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு பல நூற்றாண்டுகள் பழமையானது, சமீப காலங்களில் அது முன்பை விட வலுவடைந்துள்ளது. எமது நெருங்கிய நண்பராக, கடினமான காலங்களில் ஜப்பான் எமக்கு ஆதரவளிப்பதுடன், வெற்றியின் போது மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் எங்களுடன் இணைந்திருக்கும் பங்காளியாகவும் உள்ளது.

பல இலங்கையர்கள் இப்போது ஜப்பானில் வசிக்கின்றனர். இதன் மூலம், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.

இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும், எக்ஸ்போ 2025 கண்காட்சியில் உள்ள இலங்கை அரங்கம் நமது நாட்டின் விடாமுயற்சி, கலாசாரப் பெருமை மற்றும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்று எக்ஸ்போ 2025 ஐப் பார்வையிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கண்காட்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அரங்கையும் இலங்கை தின நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜப்பான் அரசும் எக்ஸ்போ 2025 சங்கமும் வழங்கிய ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் பண்டைய கலாசார பாரம்பரியம், இயற்கை அழகு, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள், அத்துடன் இலங்கைத் தேயிலை, இரத்தினக் கற்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பிரபலமான தயாரிப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த எமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன்போது பெளதிக முன்னேற்றத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல், மனித விழுமியங்களின் அடிப்படையில் ஒரு வளமான உலகத்தையும் அழகான எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

ஒவ்வொரு கனவும் நனவாகும், அனைவரும் பிரகாசிக்கக்கூடிய மற்றும் தேசத்திற்கு மகத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய உலகை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு உங்கள் அனைவருக்கு  அழைப்பு விடுக்கின்றேன்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா (Akio ISOMATA), ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-09-27_at_19.59.33.jp

WhatsApp_Image_2025-09-27_at_19.59.42.jp

WhatsApp_Image_2025-09-27_at_20.00.14.jp

WhatsApp_Image_2025-09-27_at_19.59.48.jp

WhatsApp_Image_2025-09-27_at_19.59.35.jp

https://www.virakesari.lk/article/226267

இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானில் ஜனாதிபதி

1 month ago

இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானில் ஜனாதிபதி

September 27, 2025

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. இந்த கலாசார நிகழ்வைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இத் தருணத்தில், இலங்கை அதன் பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும், தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்ட இலங்கை, தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்புப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி வருவதாகவும், இந்த அபிவிருத்தியின் நன்மைகள் பரவலாகப் பகிரப்படும் என்றும்,  அந்த  சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்வதாகவும் தெரிவித்தார்.

“எக்ஸ்போ 2025 ஒசாகா” கண்காட்சியில் இலங்கை மற்றும் ஜப்பானின் கண்காட்சி அரங்குகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், எக்ஸ்போ 2025 கண்காட்சி மூலம் இலங்கைக்கு தனது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கான உலகளாவிய தளத்தை உருவாகும் என்று தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில், கடினமான காலங்களில் ஆதரவளித்தும் வெற்றிகரமான காலங்களில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வலுவான பங்காளியாகவும் ஜப்பான் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு:

நட்புறவு என்பது மனிதகுலத்தின் மிகவும் விலைமதிப்பற்ற பிணைப்புகளில் ஒன்றாகும். இது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரங்களை இணைக்கிறது. எல்லைகளைக் கடக்கின்றது. மனித உறவுகளை வளர்க்கின்றது. மேலும்,  ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காக பொதுவான இலக்குகள் மூலம் நாடுகளை ஒன்றிணைக்கிறது.

“எக்ஸ்போ 2025” கண்காட்சி இந்த இலட்சியத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். நட்புறவு மற்றும் பொதுவான இலக்குகளை கொண்டாடும் இந்த நேரத்தில், ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ஒசாகாவில் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் உங்களுடன் இணைவதை கௌரவமாகக் கருதுகிறேன். “எக்ஸ்போ 2025” என்பது 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர நட்புறவு, நல்லிணக்கம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து சமூகத்திலும் இருக்கும் மனித விழுமியங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் உலகளாவிய தளமாகும்.

இலங்கையின் பாரம்பரியத்தின் செழுமையை மாத்திரமன்றி, நிலைபேறான, வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசம் என்ற எமது தெளிவான நோக்கையும் இங்கு நாம் உலகிற்கு முன்வைக்கிறோம். எக்ஸ்போ போன்ற சர்வதேச தளங்களில் எமது பலம் மற்றும் திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம், உலகளாவிய சமூகத்தில் பொறுப்புக் கூறத்தக்க மற்றும் எதிர்கால நோக்கைக் கொண்ட பங்காளராக எமது வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எக்ஸ்போ 2025 இல் இலங்கையின் பங்கேற்பு, நவீன மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான பொருளாதார மாற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பை உலகின் ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதன்போது, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வர்த்தகம், விவசாயம் மற்றும் நமது ஏராளமான கடல் வளங்களின் நிலைபேறான பயன்பாடு உள்ளிட்ட அதிக திறன்  கொண்ட துறைகளை வளர்ப்பது தொடர்பான எமது தெளிவான கொள்கையை நன்கு பிரதிபலிக்கிறது.

“எக்ஸ்போ 2025” இன் தொனிப்பொருள் “நமக்கான எதிர்கால சமூகத்தை உருவாக்குதல்” என்பதாகும். எதிர்கால சந்ததியினருக்கு, குறிப்பாக நம் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதே இதன் நோக்காகும். உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் இந்த சகாப்தத்தில், இலங்கை நமது பொருளாதார பயணத்தில் ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளது. தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட நாம், இப்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறோம். இதன்போது, அபிவிருத்தியின் பலன்கள் பரவலாகப் பகிரப்படுவதையும், அந்தச் சுபீட்சத்தின் மூலம் அனைத்துப் பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்பதையும் உறுதிசெய்கிறோம். எக்ஸ்போ 2025 கண்காட்சி ஊடாக இலங்கை தமது கலாசாரம், புத்தாக்கம் மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒளிமயமான எதிர்காலத்திற்கான நோக்கைப் பகிர்ந்து கொள்வதற்கு உலகளாவிய தளத்தை உருவாக்கும்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு பல நூற்றாண்டுகள் பழமையானது, சமீப காலங்களில் அது முன்பை விட வலுவடைந்துள்ளது. எமது நெருங்கிய நண்பராக, கடினமான காலங்களில் ஜப்பான் எமக்கு ஆதரவளிப்பதுடன், வெற்றியின் போது மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் எங்களுடன் இணைந்திருக்கும் பங்காளியாகவும் உள்ளது.

பல இலங்கையர்கள் இப்போது ஜப்பானில் வசிக்கின்றனர். இதன் மூலம், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.

இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும், எக்ஸ்போ 2025 கண்காட்சியில் உள்ள இலங்கை அரங்கம் நமது நாட்டின் விடாமுயற்சி, கலாசாரப் பெருமை மற்றும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்று எக்ஸ்போ 2025 ஐப் பார்வையிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கண்காட்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அரங்கையும் இலங்கை தின நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜப்பான் அரசும் எக்ஸ்போ 2025 சங்கமும் வழங்கிய ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் பண்டைய கலாசார பாரம்பரியம், இயற்கை அழகு, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள், அத்துடன் இலங்கைத் தேயிலை, இரத்தினக் கற்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பிரபலமான தயாரிப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த எமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன்போது பெளதிக முன்னேற்றத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல், மனித விழுமியங்களின் அடிப்படையில் ஒரு வளமான உலகத்தையும் அழகான எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

ஒவ்வொரு கனவும் நனவாகும், அனைவரும் பிரகாசிக்கக்கூடிய மற்றும் தேசத்திற்கு மகத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய உலகை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு உங்கள் அனைவருக்கு  அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

https://www.ilakku.org/sri-lanka-is-currently-rebuilding-a-sustainable-and-participatory-economy-president-in-japan/

“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார்

1 month ago

“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார்

28 Sep, 2025 | 09:12 AM

image

(நா.தனுஜா)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்துள்ளார்.

இலங்கை - சுவிஸ்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த 14 - 21 ஆம் திகதி வரை சுவிஸ்லாந்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வின் ஓரங்கமாக இலங்கையின் ஆளும், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்ற 13 உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இச்செயலமர்வில் பங்கேற்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவ்வேளையிலேயே நிஹால் அபேசிங்கவின் கருத்தை மறுத்ததுடன் தாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருவதாகவும் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்தார். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் இம்முயற்சியைத் தோற்கடிப்பதற்குத் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒருமித்து இயங்கவேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்

https://www.virakesari.lk/article/226278

ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி

1 month ago

ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

சிறுமியின் தந்தை வெளிநாட்டில்  வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமி அவரது தாய் மற்றும் இரட்டை சகோதரியும் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள்வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளதுடன் அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக கூறியுள்ளார்.

தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடைந்த சிறுமி வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை தன் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் பட்டியலில் மட்டக்களப்பு இரண்டாவதாக உள்ளதுடன் கடந்த வருடம் 2024ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை 48 பெண்கள் உட்பட 172 பேர்  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம்  ஆகஸ்ட் 31 ம் திகதி வரை  12 வயது சிறுவன் ஒருவர்,  26 பெண்கள் உட்பட 105 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின்  மாவட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஆடை-வாங்க-பணம்-தராததால்-உயிரை-மாய்த்த-சிறுமி/73-365398

சுமந்திரனை நிராகரித்த பிரித்தானியாவில் இருந்த வைத்தியர் மனோகரன்

1 month ago

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் வழக்கு விவகாரத்தை தாம் கையாள்வதாக சட்டத்தரணி சுமந்திரன் கேட்டபோது அந்த விடயத்தை வைத்தியர் மனோகரன் நிராகரித்துள்ளதாக கனடாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் றோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த வழக்கு விவகாரத்தை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையான மனோகரனே ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வைத்தியர் மனோகரனால் சுமந்திரன் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

https://tamilwin.com/

இலஞ்சம், ஊழலுடன் தொடர்புடைய பொது சேவைகளில் முதலிடத்தில் பொலிஸ் - இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்

1 month ago

27 Sep, 2025 | 05:02 PM

image

(எம்.மனோசித்ரா)

இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நிலைமை மாற்றப்பட்டால் மாத்திரமே இலஞ்ச, ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைகள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

கொழும்பில்  வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவு தொடர்புடையது பொலிஸார் என எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய பட்டியலில் முறையே பொலிஸார், அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள், காணி பதிவு அலுவலகம், மாகாணசபைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், பிரதேச செயலகம், பதிவாளர் நாயக அலுவலகம் மற்றும் நீதிமன்றம் என்பன காணப்படுகின்றன.

மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இவை இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய முதல் 10 நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய 5 பிரதான நிறுவனங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் முதலாவது சுங்க திணைக்களம், இரண்டாவது உள்நாட்டு வருமான திணைக்களம், கலால் வரி திணைக்களம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் என்பன முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

இவை தவிர மேலும் பல நிறுவனங்கள் பண சுத்தீகரிப்பிற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுகின்றன. எம்மால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் ஊழல், மோசடிகு ஏதுவான காரணிகளாக மக்கள் கூறியவற்றில் பல முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன.

அதற்கமைய நாட்டில் சட்டம், அமைதி முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை, மோசடி கலாசாரம் நாட்டில் தலைதூக்கியுள்ளமை, அரச சேவையில் வழங்கப்படும் மிகக்குறைந்த சம்பளம், இலஞ்சம் , ஊழல் தொடர்பில் மக்கள் உரிய நடவடிக்கை எடுக்காமை என்பனவாகும். எனவே இவற்றை இல்லாதொழிப்பதறக்கான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/226254

இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு மத நிகழ்ச்சித் தொடர் ஆரம்பம்

1 month ago

Published By: Vishnu

27 Sep, 2025 | 01:59 AM

image

இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சித் தொடர் இன்று, 2025 செப்டம்பர் 26, அன்று அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகியது.

இந்த மத நிகழ்ச்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ருவன்வெலி மகா சேய முன்பிருந்து ஆரம்பமாகிய இராணுவக் கொடிகளை ஏந்திய ஊர்வலம், ஜய ஸ்ரீ மஹா போதிக்குச் சென்று அங்கு ஆசீர்வாதங்களைப் பெற்றது.

இந்த மதச் சடங்குகள் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான (அடமஸ்தந்திபதி) பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரின் தலைமையில் நடைபெற்றன.

மேலும் இராணுவக் கொடிகளுக்கு ஆசீர்வாதம் பெறுவதற்காக வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் வளாகத்தில் இராணுவத் தளபதியின் தலைமையில் இந்து மத சடங்குகள் செய்யப்பட்டன.

பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்கள் சிகிச்சை பெறும் நல விடுதியான 'அபிமன்சல 1' நலவிடுதியினை சிறப்பு விஜயம் மேற்கொண்டு அவர்களின் நலம் குறித்து விசாரித்தார்.

இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்  நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

WhatsApp_Image_2025-09-26_at_18.17.12_c3

WhatsApp_Image_2025-09-26_at_18.17.11_04

WhatsApp_Image_2025-09-26_at_18.17.12_8a

WhatsApp_Image_2025-09-26_at_18.17.11_36

WhatsApp_Image_2025-09-26_at_18.17.10_b7

WhatsApp_Image_2025-09-26_at_18.17.10_13

WhatsApp_Image_2025-09-26_at_18.17.09_db

WhatsApp_Image_2025-09-26_at_18.17.08_34

WhatsApp_Image_2025-09-26_at_18.17.09_89

WhatsApp_Image_2025-09-26_at_18.17.08_24

WhatsApp_Image_2025-09-26_at_18.17.07_7a

https://www.virakesari.lk/article/226208

சீன மக்கள் குடியரசு - 76 ஆவது ஆண்டு நிறைவு

1 month ago

76 ஆவது ஆண்டு நிறைவு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இலங்கையில் அமைந்துள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த ஆண்டு விழா வரவேற்பு நிகழ்வில், இராஜதந்திரிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

https://web.facebook.com/Deranatamil/posts/1353905240072086?ref=embed_post

https://adaderanatamil.lk/top-picture/cmg0og7qk00nnqplpm1s73b58

நீங்கள் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி 10 ஆண்டுகளுக்கும் அதிகமா?

1 month ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளிலும், குளிரூட்டிகளினாலும் ஏற்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தக் கூடிய உரிய தரத்தில் இல்லை.

இதன் காரணமாக, மாதத்திற்கு 100 அலகுகளுக்கும் மேல் மின்சார நுகர்வு ஏற்படுகின்றது.

அத்துடன் இலங்கைக்குள் உரிய தரம் அல்லாத மின் உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகளுக்கும் இந்த விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக ஹர்ஷ விக்ரமசிங்க தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmg24f9ya00o3qplp4bk7xv0w

வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

1 month ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும்.

வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலமும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர் செலுத்தப்படும் தொகைகள், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், தாமதமான செலுத்துதல்களாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரியைச் செலுத்தாமல் விடுதல் அல்லது தாமதமாகச் செலுத்துதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmg1xxc3100p1o29nh1dwm90n

Checked
Sun, 11/02/2025 - 08:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr