ஊர்ப்புதினம்

ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன்

1 month ago

ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன்

September 26, 2025

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும் பெயரில் நீர்பாசனத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகளையும், தமிழர்களின் பூர்வீக கிராமங்களையும் அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள இந்தக் கிவுல் ஓயா திட்டத்தினை உடன் நிறுத்தி, தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு தன்னிறைவு பெறுவதற்கும் வழிவகைகளை ஏற்படுத்துமாறும் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (26) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகாவலி அதிகார சபையின் (எல்) வலயத்தால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தால் எமது தமிழ் மக்களுக்கு ஏற்படவுள்ள பாரிய பாதிப்பு நிலைதொடர்பிலும் இந்த உயரியசபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மாயா அல்லது பெரிய ஆறு மற்றும் சூரியன்ஆறு ஆகிய ஆறுகளை மறித்து பாரிய அணைக்கட்டு அமைக்கப்பட்டு கிவுல் ஓயாத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் 6000 ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வெலிஓயாவில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறாக கிவுல் ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியாவடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் பலவும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில் இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடை கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்து பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும்.

அதேவேளை தமிழர்களின் இதயபூமி எனப்படுகின்ற பூர்வீக மணலாற்றுப் பிரதேசத்தை வெலிஓயாவாக மாற்றிவிட்டு அங்கு அத்துமீறிக்குடியேற்றப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர்களே இந்த கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தால் பயன்பெறவுள்ளனர்.

அத்தோடு தற்போது ஆட்சி பீடத்தில் இருக்கின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை செயற்படுவதில் அதிக அக்கறையோடு செயற்படுவதாகவும் அறியமுடிகின்றது.

தமிழ் மக்களின் சிறிய பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்கள் என்பவற்றை விழுங்குகின்ற இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை தயவுசெய்து உடனடியாக நிறுத்துமாறு இந்த உயரியசபையினூடாக கோருக்கின்றேன்.

அத்தோடு மகாவலி அதிகார சபை இந்தத் திட்டத்திற்கென ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற தமிழர்களது பூர்வீக சிறிய விவசாய குளங்கள் மற்றும் அவற்றின் கீழான விவசாயநிலங்களையும், பூர்வீகத் தமிழ்க் கிராமங்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்த உயரிய சபையினைக் கோருகின்றேன்.

எமது தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு தன்னிறைவு பெறுவதற்கும் வழிவகைகளை ஏற்படுத்துமாறும் இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.

https://www.ilakku.org/stop-the-oya-project-immediately-ravikaran/#google_vignette

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

1 month ago

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM

ஆசிரியர் - Editor II

காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது 

மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்..

இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத  முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

17589412412_1080.jpg

17589412411_1080.jpg

1758941241-1000044948.jpg

555675813_819862003905473_54357913166456

https://jaffnazone.com/news/50768

LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஆதரவு

1 month ago

26 Sep, 2025 | 05:21 PM

image

நாட்டில் LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் உரிமைகள் அமைப்பான EQUAL GROUND  ஆல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை இலங்கை சுற்றுலா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

 EQUAL GROUND நிர்வாக பணிப்பாளர் ரோசன்னா ஃபிளேமர் - கால்டெராவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை சுற்றுலாத் தலைவர் புத்திக ஹேவாவசம் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளார்.

சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக இலங்கையை நிலைநிறுத்தவும் அதன் திறனை அங்கீகரித்துள்ளார்.

எங்கள் சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், இலங்கையை அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக நிலைநிறுத்தவும் இந்த திட்டத்தின் திறனை நாங்கள் அங்கீகரிக்கிறோம், என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி அதன் உலகளாவிய சுற்றுலா தடத்தை விரிவுபடுத்தும் இலங்கையின் மூலோபாய நோக்கங்களுடன் ஒத்துப்போவதாக அமைகிறது.

பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த திட்டத்தில், பங்குதாரர் ஈடுபாடு, பயிற்சி, விழிப்புணர்வு திட்டங்கள், வேலைவாய்ப்பு; மற்றும் சர்வதேச விளம்பர இணைப்புகள் போன்ற ஆறு விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா நடத்துபவர்கள், ஹோட்டல்கள், பயிற்சி நிறுவனங்கள், வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்பு கொண்டு, DE&I பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள EQUAL GROUND-க்கு இலங்கை சுற்றுலா அதிகாரம் வழங்கியுள்ளது.

மேலும், சர்வதேச சுற்றுலா மன்றங்கள், கண்காட்சிகள் மற்றும் டுபுடீவுஐஞ சுற்றுலா வலையமைப்புகளில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்துடன் இணைந்து EQUAL GROUND-பங்கேற்பதை இலங்கை சுற்றுலா வரவேற்றது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வெளியுறவு மற்றும் வெளிநாட்டலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரிடம் இந்த திட்டத்தை வழங்க EQUAL GROUND  விருப்பம் தெரிவித்ததை கடிதம் மேலும் ஒப்புக்கொண்டது. 

இந்த ஈடுபாடுகளை எளிதாக்குவதில் இலங்கை சுற்றுலா ஆதரவை உறுதி செய்துள்ளது.

இந்த முயற்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக EQUAL GROUND -உடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம், இது இலங்கையின் சுற்றுலா மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,என அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஆதரவு | Virakesari.lk

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

1 month ago

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் அண்மைக் காலமாக  இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது.  தொடர்ந்து  அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து  போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்க்ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது  யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (26) கொழும்பு நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர்  ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். எதிர்வரும் 18 ஆம் திகதியன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருடனும் மக்களோடு இணைந்து திருடனை பிடிப்பது போல தான் என்.பி.பி அரசாங்கமும் செயற்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள பலரின் சொத்து விபரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களே சுங்கத்திலிருந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்துள்ளனர்.  ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர்  கொள்கலன்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன  என்பது தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

குறித்த கொள்கலன்கள் சுங்கப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் பரிசோதிக்கப்பட இருந்ததுடன், சர்வதேச புலனாய்வு பிரிவிடம் இருந்தும் தகவல்களும் கிடைத்திருந்தன. இந்நிலையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தொடர்ந்தும் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து  போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்களையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது  யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் எம்மீது பழி சுமத்தி இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடத்தை எமது தரப்பை குற்றம்சாட்டியே கடந்து விட்டனர் மீதமுள்ள 4 வருடங்களையும் அவ்வாறே கடந்து விடுவார்கள். என்.பி.பி அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதை தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர் என்றார்.

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி

1 month ago

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி

26 Sep, 2025 | 04:16 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை  பதிவு செய்யப்படவில்லை. காணியும் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவில்லை. காணி குறித்து வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்படுகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை  ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்  நிலையியற் கட்டளையின் 27.2 பிரகாரம் அண்மையில் முன்வைத்த   கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை எனும் விகாரை ஒன்று உள்ளது. இந்த விகாரை பதிவு செய்யப்படவில்லை. இந்த விகாரையின் காணி தொடர்பான விடயங்கள் ஆராயப்படுகிறது.

இந்த பகுதியில் இடம்பெறும் போராட்டங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.  இந்த போராட்டங்கள் குறித்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை  அடிப்படையாகக் கொண்ட தகவல்களே உள்ளன.

இந்த விகாரை அமையப்பெற்றுள்ள காணியானது காணி அமைச்சினால் கைப்பற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படவில்லை. காணி அரசுடடையாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் பிரசுரிக்கப்படவில்லை.

இந்த காணி தொடர்பில் அமைச்சு மட்டத்தில் எவ்வித தீர்வும் எடுக்கப்படாத நிலையில், அடுத்தக்கட்ட  நடவடிக்கைகளுக்குரிய தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த காணி தமக்குரியது என்று போராடும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

ஜனாதிபதி எம்மை அழைத்து விரிவான கலந்துரையாடியுள்ளோர். யாழ் மாவட்ட சிவில்    சமூகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளோம். தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தையிட்டி பிரச்சினைக்கு ஒரு இடத்தில் மாத்திரம் தீர்வு காண முடியாது. புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு, காணி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் ஒன்றிணைந்தே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை  ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி | Virakesari.lk

காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி

1 month ago

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து  சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற  முடிவுக்கு  வந்ததற்கு காரணம் என்ன, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தவிர்ந்த பிறிதொரு  காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில்  மக்களின் காணிகளுக்கான  இழப்பீடுகள்  வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா இராமநாதன்  நெடுஞ்சாலைகள்  போக்குவரத்து, அபிவிருத்தி,  துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த சிறப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தங்களுடைய தலைமையில்  விவாதிக்கப்பட்ட விடயங்களில் இரண்டு முக்கியமான விடயங்கள் பொதுமக்களின் நலன் கருதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது. 

முதலாவது பலாலி விமான நிலையம். சர்வதேச விமான நிலையம் என்று தாங்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு இடம்.இரண்டாவது காங்கேசன் துறை இறங்கு துறை. அதை துறைமுகம் என்றும் பொருள் கொள்ளலாம்.

வடக்கு மாகாணத்தின் இவ்விருத்தியில் எந்த ஒரு நபருக்கும் இல்லாத அக்கறையை இந்த அரசாங்கம் செலுத்துவது கண்டுப்பூரிப்படைந்து தங்கள் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளை நினைத்து பூரிப்படையும் பாமர மக்களில் நானும் ஒருவன். 

ஆனால் வெறும் வாய்ப்பேச்சுகளால் ஒரு வருடத்தை கடந்து விட்ட அரசாங்கத்திடமிருந்து நிலையான அபிவிருத்தி ஒன்றை வடக்கு மாகாணத்துக்கு பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தங்களிடம் கேட்க வேண்டி இருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற பலாலி உள்நாட்டு வெளிநாட்டு விமான நிலைய அபிவிருத்திக்காக தங்களுடைய அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மொத்த பணம் எவ்வளவு? 

அதில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி  வரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதற்குரிய ஆதாரங்களை பாராளுமன்றத்தில் பொதுமக்களுக்காக சமர்ப்பிக்க முடியுமா?

வடக்கின் ஒரே ஒரு பொருளாதார துறைமுகமாக இருக்கும் காங்கேசன் துறை இறங்குதுறைஅபிவிருத்திக்காக தங்களுடைய 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதில் 2025 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி  வரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு?அதனை ஆதாரங்களுடன் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா?

வடக்கு மாகாணத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சிறு சிறு துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அவற்றில் செலவழிக்கப்பட்ட பணம எவ்வளவு?  கடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில்  அரசாங்க அதிபர் ம. பிரதீபன் வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணி தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்தக் கருத்துக்களுக்கு அமைய, பலாலி விமான நிலையத்தின் தற்போதைய நில அளவு எவ்வளவு? பலாலி விமான நிலையத்தில் சட்டரீதியாகஅரசாங்கம் கொண்டிருக்கும் நில அளவு எவ்வளவு?

விமான நிலையத்தில் சட்டரீதிய அல்லாத பொது மக்களின் கையகப்படுத்தப்பட்டு இருக்கும் காணி நில அளவு எவ்வளவு? பொது மக்களின் காணிகளில் இதுவரை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கம்பன்சேஷன் எத்தனை குடும்பங்களுக்குவழங்கப்பட்டது? எப்போது வழங்கப்பட்டது? யாரால் வழங்கப்பட்டது? அதன் மொத்த பெறுமதி எவ்வளவு?

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் இதுவரை   அரசாங்கம் விடுவித்திருக்கும் தனியார் நிலப்பரப்பு எவ்வளவு? உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத தனியார் விடுவிக்கப்பட்ட காணிகள் எவ்வளவு?

எத்தனை குடும்பங்கள்?, இலங்கையின் வடக்கு கிழக்கு தவிர்ந்த வேறு எந்த எந்த பகுதியில் ஆவது தனியார் காணிகள்விமான நிலைய அல்லது துறைமுக அபிவிருத்திக்காக உள்வாங்கப்பட்டு இதுவரை பணம் செலுத்தப்படாமல் இருக்கிறதா? அவ்வாறாயின் அவற்றின் விவரங்களை  சமர்ப்பிக்க முடியுமா?

காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற தங்களுடைய முடிவினை அவதானித்த பின்னர், அவ்வாறான ஒரு முடிவுக்கு தாங்கள் வந்தது என்ன

காரணம் என்பதை விளக்க முடியுமா? அவ்வாறாயின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த பணம், மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்த பணம் வீண் விரயம் செய்யப்படுகிறது என்று நீங்கள் கருதினால் பலாலி விமான நிலையத்தினால் பயனடைய போகும் சர்வதேச பயணிகளின் வருடாந்த வரவையும் அனுமானமாக அதனால் ஏற்படப் போகின்ற லாபத்தையும் சொல்ல முடியுமா?

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போது அதுவும் மத்தள விமான நிலையம் போன்று சர்வதேச விமானங்களில் வரவுகள் அற்ற ஒரு விமான நிலையமாக மாற்றமடையும் என்ற கருத்து பொதுமக்களிடையே இருப்பதால் விமான நிலையம் அபிவிருத்தி தவிர்ந்த வேறெதுவோ காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் பொது மக்களின் காணிகள் தகுந்த பண கொடுக்கல் வாங்கல் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா ?இன்றேல் ஏன்?

விமான நிலையம் மாத்திரம் அபிவிருத்தி செய்யப்படுவதும் காங்கேயன் துறை முகம் அபிவிருத்தி செய்யப்படாததும் இராணுவ அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்களின் காணிகள் பறிக்கப்படுகின்ற என்ற பொதுமக்களின் கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லை என்றால் ஏன்?  என்று கேள்வியெழுப்பினார்.

காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி | Virakesari.lk

பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்

1 month ago

(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்கள்  முன்வைக்கும்  கேள்விகளுக்கு  நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு  தெரிவித்து குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை  (26) நடைபெற்ற  அமர்வில் , நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் வடக்கில் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அமைச்சர் அதற்கு சரியான பதில்களை வழங்கவில்லை என்று அரச்சுனா  எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  அமைச்சர் சிரித்தவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்த பின்னர் மேலதிக கேள்விகளை எழுப்பிய அர்ச்சுனா, சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியன்தான். யாழ்ப்பாணம் என்பது  தேசிய மக்கள் சக்தியின் வெற்றிலை பெட்டி அல்ல. நான் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கேணும் பதில் வழங்கப்படவில்லை. வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் காணிகள் பெறப்படுகின்றன. அங்கே மக்கள் காணிகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பில் செய்த ஒரு வேலையை கூறுங்கள். கல் நடுவதாக ஆட்களை பேய் காட்டக்கூடாது. சும்மா ஆட்காட்டுதல், பேய் காட்டுதல் வேலையை யாழ்ப்பாணத்தில் வைக்க வேண்டாம். யாழ்ப்பாணம் உங்களின் வெற்றிலைப் பெட்டி இல்லை என்றார்.

இதன் பின்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதற்கு பதிலளிக்காமல் சபையின் தினப் பணிகளை முன்னெடுத்து அமைச்சின் அறிவித்தலொன்றை வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அர்ச்சுனா  தொடர்ந்தும் பதில் கூறுங்கள் என்று அமைச்சரை நோக்கி தெரிவித்துக்கொண்டே இருந்தார்.

இவ்வேளையின் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவும் ஏதோவொன்றை அமைச்சரை நோக்கி கூறினார். அந்த வாட்டுக்கே உங்களையும் அனுப்ப வேண்டி வரலாம் என்று சுஜீவ சேனசிங்கவை நோக்கி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சிரித்தவாறு  கூறினார்.

இதேவேளை அர்ச்சுனா  தொடர்ந்தும் சபைக்குள் கூச்சலிட்டுக்கொண்டிருந்த நிலையில் அமைதியான இருக்குமாறு சபாநாயகரும் தொடர்ந்தும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அர்ச்சுனா  அமைதியடையாமல் அமைச்சரை பார்த்து ஏதோவொன்றை கூறிக்கொண்டிருந்த போது ''நான் பாராளுமன்ற உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதிலளிப்பேன் ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன். தயவு செய்து என்னை பேசுவதற்கு இடமளியுங்கள். இல்லையென்றால் இங்கே இடையூறு ஏற்படுத்துபவரை வெளியே போடுங்கள்'' என்று அமைச்சர் கூறினார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த அர்ச்சுனா  அவர் பதிலை வழங்கவில்லை. அவர் இப்போது பைத்தியம் என்று கூறுகின்றார். அந்த வசனத்தை நீக்குமாறு கோருகின்றேன். என்றார்.

இதனை தொடர்ந்தும் அமைச்சர் அர்ச்சுனாவுக்கு பதிலளிக்காது,அமைச்சின் அறிவித்தலை வாசித்து அமர்ந்தார்.  

பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில் | Virakesari.lk

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை

1 month ago

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது.

சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள்

Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. 

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை | Countries With Best And Worst Quality Of Life 2025

இதில், 218.2 புள்ளிகளுடன் லக்சம்பர்க், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நெதர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், ஓமன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது. 

அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்... திடீரென உக்ரைனுக்கு ஆதரவு: என்ன காரணம்?

அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்... திடீரென உக்ரைனுக்கு ஆதரவு: என்ன காரணம்?

முதல் 10 இடங்களில், ஓமன் மட்டுமே ஐரோப்பிய நாடு இல்லாத நாடு ஆகும். 

இந்த பட்டியலில், 124.4 புள்ளிகளுடன் இந்தியா 62வது இடத்தில் உள்ளது. 

உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியா முன்னேறி இருந்தாலும், அதிக அளவிலான மாசுபாடு, மக்கள் தொகை அடர்த்தி, சுகாதாரப் பராமரிப்பில் சீரற்ற அணுகல், கடுமையான நகர்ப்புற கிராமப்புற வேறுபாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கின்றன. 

105.7 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 76வது இடத்தில் உள்ளது. 

4வது இடத்தில் இலங்கை

மோசமான வாழ்க்கை தரமுள்ள நாடுகளின் பட்டியலில், 15.6 புள்ளிகளுடன் நைஜீரியா முதலிடத்தில் உள்ளது.

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை | Countries With Best And Worst Quality Of Life 2025

வெனிசுலா 2வது இடத்திலும், வங்கதேசம் 3வது இடத்திலும் உள்ளது.

இதில், 82.8 புள்ளிகளுடன் இலங்கை 4வது இடத்தை பிடித்துள்ளது.

சமீபத்திய பொருளாதார மீட்சி, நிலையான வாழ்க்கை தரம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் வாழ்க்கை தரம் வடிவமைக்கபட்டுள்ளது. அதேவேளையில், அதிக கடன், பண வீக்கம் ஆகியவை மக்களின் வாழ்க்கைதரம் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை பாதிக்கின்றன. 

எகிப்து 5வது இடத்திலும், ஈரான் 6வது இடத்திலும், பெரு 7வது இடத்திலும், கென்யா 8வது இடத்திலும், வியட்நாம் 9வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 10வது இடத்திலும் உள்ளது. 

Lankasri News
No image previewமோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை...
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numb...

யாழில் தீலிபனின் நிகழ்வில் குழப்பம் : சர்ச்சையாகிய துண்டுப்பிரசுரம்

1 month ago

யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திலீபனின் நினைவுநாளின் இறுதி நாளான இன்று உணர்வு பூர்வமாக நிகழ்வுகள் தமிழர் பகுதியில் இடம்பெற்ற வேளையில் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் “அரசியல் கட்சிக்கான வேண்டுகோள்” என்ற தலைப்பிடப்பட்ட நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஆக்கப்பார்க்கும் சிலர்

அதில் “மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும்.

இச்சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும். சிலர் மக்களில் எல்லா விடயங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்து அதனை அரசியல் ஆக்கப்பார்க்கின்றனர்.

தற்போது இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி இதிலிருந்து உடன் வெளியேற வேண்டுமென வேண்டுகின்றோம்“ என்றும்

குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilwin
No image previewயாழில் தீலிபனின் நிகழ்வில் குழப்பம் : சர்ச்சையாகிய துண்டு...
யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்...

ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்!

1 month ago

New-Project-366.jpg?resize=750%2C375&ssl

ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம்.

சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும்.

அமெரிக்காவிற்கு தனது விஜயத்தின் போது நடைபெற்ற அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பினை ஜனாதிபதி வெளியிட்டார்.

https://athavannews.com/2025/1448672

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம்

1 month ago

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம்

September 26, 2025

555738878_826778803210918_1727361945227774849_n.jpg

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார் .

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே. ஜே. முரளிதரன் நேற்றைய தினம் முதல் பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜே. எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை 15.09.2025 அன்று அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.

இந் நியமனத்தினால் குறைந்த வயதில் அரசாங்க அதிபரானவர் என்ற பெருமையை ஜே.எஸ் அருள்ராஜ் பெற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர், 2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கிண்ணியா, சேருவில பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இருந்ததுடன், வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு விசேட சேவையை ஆற்றியிருந்தார்.

நேற்று (25) வரை கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமைபுரிந்து வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரும் பணியாற்றவுள்ளார்.

https://www.battinews.com/2025/09/blog-post_932.html

தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்து, மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? - ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திடம் கேள்வி

1 month ago

25 Sep, 2025 | 01:34 PM

image

(எம்.மனோசித்ரா)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? கடந்த காலங்களில் இந்த திட்டத்தை முன்வைத்தவர்கள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அரசாங்கத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள கஞ்சா உற்கபத்தி திட்டம் தொடர்பில் அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

2022 மற்றும் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த, மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட காரணி தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கஞ்சா உற்பத்தியை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டும் ஒரு வருமான மூலமாகப் பார்ப்பதை அங்கீகரிக்க முடியாது. அப்போதைய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதில் பிரதான காரண கர்த்தாவாக செயற்பட்டார். கடந்த அரசாங்கத்தால் இதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்ட போது மகா சங்கத்தினர் உட்பட சகல மதத் தலைவர்களும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இறுதியில் இந்த யோசனையை முன்வைத்தவர்கள் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர். இது குறித்து அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பினார். 'இந்த கஞ்சா உற்பத்தி வெற்றியளிக்கும் வேலைத்திட்டம் என நீங்கள் கூறினால் அதற்கான சந்தை என்ன எனக் கூறுங்கள்? , எந்தெந்த நாடுகள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றன? , எந்த அளவுகளில் அவர்கள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றனர்? , ஏதேனுமொரு வகையில் வெளிநாடுகள் இவற்றை கொள்வனவு செய்யாவிட்டால் உற்பத்திகளுக்கு என்னவாகும்?' என்ற கேள்விகளே அவரால் அப்போதைய அரசாங்கத்திடம் கேட்கப்பட்டன.

ஆனால் இதில் எந்தவொரு கேள்விக்கும் அன்று பதில் கிடைக்கவில்லை. இன்று நாம் அதே கேள்விகளை ஜனாதிபதி அநுரவிடம் கேட்கின்றோம். அன்று இந்த கேள்விகளை எழுப்பிய சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் இன்று நிறைவேற்றதிகாரம் கொண்;ட ஜனாதிபதியாவார். அன்று நிராகரிக்கப்பட்ட சடலங்களை இன்று மீண்டும் உயிர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா? தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகக் காணப்பட்டது. எனவே ஆட்சியாளர்கள் இதனை மறந்து விடக் கூடாது. நிராகரிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க தீர்மானித்தால் அரசாங்கம் அது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

எமக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் 7 நிறுவனங்களுக்கு இது குறித்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவற்றுடன் ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன. மீரிகம பிரதேசத்தில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு பகிரங்க கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் எமக்கு இது குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நாம் எமது போதை;பொருள் எதிர்ப்பு பிரிவுடன் சென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தோம். ஒரு இலை கூட வெளிச் செல்லாமல் கடுமையான பாதுகாப்புடனேயே இந்த உற்பத்தியை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எமது நாட்டுக்கு இது உகந்ததல்ல என்றால், ஏனைய நாடுகளுக்கு மாத்திரம் எவ்வாறு சிறந்ததாகும்? இது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா என நாம் அமைச்சிடம் கேட்டோம். எதற்காக நாம் தவறான முறைமையின் கீழ் வருமானம் ஈட்டுகின்றோம்? இந்த திட்டத்தை முன்வைக்கப்பட்டாதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த பெண் தற்போது அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றார். அவர் அதற்கு வாழ்;த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? எனவே தூய்மையாகக் கழுவிய ஆடையை மீண்டும் சேற்றில் இட வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/226048

பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசாங்கத்தின் திட்டம்

1 month ago

பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசாங்கத்தின் திட்டம்

25 September 2025

1758820639_5316184_hirunews.jpg

பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அதன்படி, பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில், சோடா மற்றும் குளோரின் உற்பத்தி ஆலையை மீண்டும் ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடும் நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதனூடான, சுமார் 95 நேரடி வேலை வாய்ப்புகளையும் சுமார் 2,000 மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

https://hirunews.lk/tm/422208/governments-plan-regarding-paranthan-chemical-factory

2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்

1 month ago

2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், 

"வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது. 

2019 தேர்தலில் சுமார் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். ஆனால் 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது. 

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. 

அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களை இலங்கை மக்கள் முதல் முறையாக வெளியேற்றினர். 

எங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று பொருளாதார நெருக்கடியைத் தணிப்பது. மற்றொன்று இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது. 

பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம். 

அனைத்து சர்வதேச அமைப்புகளும், மதிப்பீட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும், இலங்கை ஒரு நெருக்கடியின் போது விரைவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடாக இருந்ததாக அறிக்கைகளை வழங்கியுள்ளன. 

ஒரு பொருளாதாரம் இப்படி சரிந்தால், ஒரு நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

2022 ஆம் ஆண்டில் நாடு சரிந்திருந்தால், முந்தைய நிலைக்குத் திரும்ப 2032 ஆகும். 

ஆனால் நாடு சரிவதற்கு முன்பு 2019 இல் இருந்த பொருளாதாரத்தை அடுத்தாண்டு நாம் அடைய முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்றார்.

https://adaderanatamil.lk/news/cmg0a6sb300o8o29n0v72wr1x

லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு!

1 month ago

லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு!

adminSeptember 26, 2025

Neel-ithavela.jpeg?fit=1170%2C658&ssl=1

லஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஒரு விரிவுரை ஒன்றின் போதே அவர் இந்தனைக் குறிப்பிட்டார்.

இலங்கை நிர்வாக வல்லுநர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விரிவுரை, தேசிய வளர்ச்சிக்கான நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த நீல் இத்தவெல,

“2024 ஆம் ஆண்டில், தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம். 

அதில், பொதுமக்கள், இலஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகக்கூடிய நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்த 10 நிறுவனங்களைப் பற்றி நான் உங்களுக்குச் கூறுகிறேன். 

முதலாவது காவற்துறை, இரண்டு அரசியல், மூன்று சுங்கம். மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, பாடசாலை மற்றும் அமைச்சு. 

அத்துடன் காணிப் பதிவு அலுவலகங்கள், மாகாண சபைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச செயலகங்கள், பதிவாளர் நாயக அலுவலகம் போன்றவை பொதுமக்களின் கருத்தாகும். 

இருப்பினும், பொருளாதாரத்தை முக்கியமாக பாதிக்கும் 5 நிறுவனங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். 

ஒன்று சுங்கம், இரண்டாவது நிறுவனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி திணைக்களம். 

அதேபோன்று மதுவரித் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் வாகனப் பதிவு அலுவலகம். 

அதேபோன்று மேலும் நிறுவனங்கள் உள்ளன. தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம். 

இது போன்ற நிறுவனங்கள் மூலம் ஊழல் பரவலாம். இது போன்ற நிறுவனங்களில் ஊழலிக்கு மேல் ஊழல் இடம்பெறுகின்றன. அவற்றின் மூலம், ஊழல் செய்பவர்களுக்கு ஒரு புகலிடம் உருவாக்கப்பட்டு, பணமோசடிக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

பின்னர், நான் குறிப்பிட்ட கணக்கெடுப்பில், ஊழல் கலாச்சாரத்திற்கு பங்களிக்கும் காரணிகளாக பொதுமக்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர். 

நாட்டில் சரியான சட்டம் ஒழுங்கு இல்லாததே அதற்குக் காரணம். நாட்டில் ஊழல் கலாச்சாரம் உருவாகிறது. மேலும், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியதாக” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலஞ்சம் ஊழல்ஆணைக்குழு

https://globaltamilnews.net/2025/220819/

யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

1 month ago

யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

adminSeptember 26, 2025

0-6-2.jpg

பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ தலைமையில் சபை முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அஞ்சலிச்சுடரினை பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடந்து தவிசாளரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டது.

உறுப்பினர்களும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலீபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு பின்னரான சூழ்நிலையில் பொக்கணை வீதி காணப்படும் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவடுவதற்கும் அவ் வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக திலீபன் வீதி என மீளவும் மாற்றியமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தியாக தீபம் திலிபன் அவர்களுக்கு திருவுருவச் சிலையினை 1975 ஆம் ஆண்டின் 4 இலக்க காட்சிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி அமைச்சரின் அனுமதியைப் பெற்று நிறுவுவதெனவும் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் முன் வைக்கப்பட்ட தீர்மானமும் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

https://globaltamilnews.net/2025/220813/

பொலிஸுக்குள் நுழைந்த திருடர்கள்; கொழும்பில் சம்பவம்!

1 month ago

26 Sep, 2025 | 11:01 AM

image

கொழும்பு, கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் உள்ள கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் 6ஆவது மாடியில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி இது தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செப்டெம்பர் 24 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த திருட்டு சம்பவம் ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதிலும் திருடர்கள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடர்கள் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த திருடர்கள் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/226112

வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!

1 month ago

22-63182b888d450.webp?resize=600%2C375&s

வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெளிநாட்டில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மேலும் 14 இலட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் கணவர் அல்லது மனைவி தொழில் தொடங்குவதற்காக கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டு தொழிலாளர்கள் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை நாட்டிற்கு அனுப்பியிருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குள் இது 7.2 பில்லியன் டொலர்கள் வரை உயரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது 226,240 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1448549

சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

1 month ago

25 Sep, 2025 | 06:20 PM

image

(எம்.நியூட்டன்)

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது.

இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/226043

Checked
Sun, 11/02/2025 - 08:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr