ஊர்ப்புதினம்

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்க முழு மனதுடன் உறுதியெடுப்போம் : ஐ.நா.பொதுச் சபையில் ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு அழைப்பு - முழுமையான உரை

1 month ago

25 Sep, 2025 | 11:48 AM

image

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்போது, ஒருவருக்கொருவர் எதிராகச் செல்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கைகோர்த்துச் செல்லும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வு, நியூயோர் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமானதுடன், இலங்கை நேரப்படி இன்று (25) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமர்வில் உரையாற்றினார்

காசா பகுதியில் தொடர்ந்து இடம்பெரும் கொடூரமான பேரழிவு குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் இரு தரப்பும் உடனடியாக போர்நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி வழங்கவும், அனைத்து தரப்பிலிருந்தும் பணயக்கைதிகளை விடுவிக்க குரல் எழுப்புவதாகவும் வலியுறுத்தினார். இந்த கொடூரமான கொலைகளை நிறுத்துவதற்கு வலுவான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனிற்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், பல உலகளாவிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ள வறுமை குறித்து தனது உரையில் சிறப்பு கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சமத்துவமின்மை மற்றும் வறுமையை உலகளாவிய பேரழிவாகக் கருதி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ள உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளையும் இங்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் உலக நல்வாழ்விற்கு சவாலாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உலகத் தலைவர்கள் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவது, அவ்வாறான கடத்தல்காரர்கள் அந்தந்த நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் போதைக்கு அடிமையான புனர்வாழ்வு நிலையங்களை உருவாக்குவது குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உலகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சமூகத்தில் பாரிய அழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தும் ஊழல், அபிவிருத்திக்கு தடையாக இருப்பதுடன் ஜனநாயகம் மற்றும் உலக நலனுக்கு தீர்க்கமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கும் காரணமாகின்றன என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமான நடவடிக்கையாக இருந்தாலும், அடுத்த தலைமுறைக்காக இலங்கை அதை ஆரம்பித்துள்ளதுடன், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இலங்கை மக்கள் இன்று ' வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வையைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த வரலாற்றுச் சாதனையை நனவாக்க, ஊழலற்ற நெறிமுறைமிக்க நிர்வாகம், வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகிய முக்கிய துறைகளில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதனுடன் இணைந்தவகையில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், படிப்படியாக அவை அனைத்தும் வெற்றிகொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை கீழே பின்வருமாறு,

தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, அதிதிகளே,

உலக நாடுகளிடையே நீதியான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்டிப் பேணுவதை உன்னத குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான அமைப்பின் 80 ஆவது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஐரோப்பாவின் மையப்பகுதியில் உள்ள அற்புதமான ஜெர்மனியைச் சேர்ந்த அதிமேதகு அந்தெலேனா பெயபெராக் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகையே வியக்க வைக்கும் புவியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை கொண்ட நாடான கேமரூனின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு பிலிமோன் யாங் வழங்கிய தலைமைத்துவத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

அமைதியும் ஜனநாயகமும் நிறைந்த அழகிய உலகத்திற்காக எட்டு தசாப்தங்களாக தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு அமைப்பின் பல்தரப்புப் போக்கிற்கும் எதிர்காலத்திற்கும் திட்டங்கள் வகுக்கப்படும் இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் ஜனாதிபதி என்ற முறையில் முதல் தடவையாக இந்த கௌரவமான சபையில் உரையாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த உலகின் பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள். எனது நாடான இலங்கையைப் போலவே, ஏனைய எல்லா நாட்டு மக்களாலும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த உலகில் எங்கேனும் வாழும் அனைவரையும் பாதிக்கிறது. அந்த முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்தும் உலகின் எதிர்கால இருப்பிற்கு ஒரு தீர்க்கமான பங்களிப்பைச் செய்கின்றன.

மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்து எதிர்கொள்ளும் மிகக் கடுமையான துயரமாக வறுமையை அறிமுகப்படுத்தலாம். அந்தப் பாரிய பேரழிவின் விளைவாக எழுந்த பல கடுமையான பிரச்சினைகள் நம் முன் ஒரு இருண்ட துயரத்தை உருவாக்கியுள்ளன.

இந்த சிறப்பு மாநாட்டின் கவனம் அதில் குவிய வேண்டும் என்று என் மனசாட்சி உரக்கச் சொல்கிறது. பெரும்பாலும் இவை அனைத்தும் உங்கள் மனசாட்சியை ஓரளவுக்கேனும் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, வறுமை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் ஒரு தொடர்ச்சியான மற்றும் மிகவும் வேதனையான போராட்டமாக அடையாளப்படுத்தலாம். இது பல வடிவங்களில் வரும் ஒரு பயங்கரமான எதிரி, இந்த மாநாட்டில் நாங்கள் கூடியிருக்கும் தருணத்தில் கூட, நான் உட்பட இந்த ஒவ்வொரு பிரதிநிதிகளின் நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள். அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படை மனித உரிமையாகும். ஆனால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஏழ்மை மற்றும் வறுமை காரணமாக இந்த உரிமை மறுக்கப்படுகிறார்கள்.

தொழில்நுட்பம் நிறைந்ததாக பெருமை பேசும் உலகில், குழந்தைகள் பாடசாலைக் கல்வியை இழப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது? ஒவ்வொரு பாரிய தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் கல்வி ஆகும். எதிர்கால உலகின் இருப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். கல்வியில் முதலீடு செய்வதை உலக முன்னேற்றத்திற்கான முதலீடாக நாங்கள் கருதுகிறோம். பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமையை நிவர்த்தி செய்வதில், முன்னேற்றத்திற்கு கடன் சுமைகள் தொடர்ந்து தடையாக உள்ளன. பொதுவாக, குறைந்த வருமான நாடுகள் சுகாதாரம் அல்லது கல்வி சேவைகளை விட நிகர வட்டி செலுத்துதல்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குகின்றன. பிரஜைகளாகவும் நாடுகளாகவும் நாம் கடன் பொறிகளில் சிக்கிக் கொண்டுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஒரு சாதகமான தீர்வு அவசியம். நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல், யாரையும் கைவிடாது என்றும் முதலில் பின்தங்கியவர்களை சென்றடையவும் உறுதியளிக்கிறது.

இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உலகளாவிய சவாலான வறுமையை ஒழிக்கும் சவாலை நிலைபெறு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் அடையாளம் கண்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற சமூக அபிவிருத்திக்கான உலக உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இருப்பினும், எதிர்பாராத யுத்தங்கள், அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் உலகமே புயலில் சிக்கிய கோவிட் தொற்றுநோய் ஆகியவை இலட்சிய நிகழ்ச்சி நிரலை சீர்குலைத்துள்ளன. எனவே, ஏழை பணக்காரர் இடைவெளி மற்றும் வறுமையை ஒரு உலகளாவிய பேரழிவாக நாம் கருத வேண்டும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, கௌரவ விருந்தினர்களே, இந்த அற்புதமான உலகை சீர்குலைத்து, குழப்பும் புதிய பிரச்சனையாக போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண முடியும். ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அதன் 2025 உலக போதைப்பொருள் அறிக்கையில் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. நாளுக்கு நாள், போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உலக சந்தையை வேகமாக ஆக்கிரமித்துள்ளன. போதைப்பொருள் வர்த்தகமும் அதன் மூலம் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமும் பல உலக நெருக்கடிகளுக்கு வழி வகுத்துள்ளன.

இவற்றில் ஈடுபட்டுள்ள குழுக்கள் நாடுகளை இரையாக மாற்றுகின்றன. இந்த கொள்ளைநோய் உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் இறுதியாக உலக நல்வாழ்வுக்கு எதிரான ஒரு பெரிய போக்காக மாறியுள்ளது. இலங்கையில் இந்த பெரும் கொள்ளைநோயை ஒழிப்பதற்கான ஒரு சாத்தியமான திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், மேலும் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துமாறு நான் உங்களை கௌரவத்துடன் அழைக்கிறேன். இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துதல், அத்தகைய கடத்தல்காரர்கள் தத்தமது நாடுகளுக்கு குடிபெயர்வதைத் தடுத்தல் மற்றும் இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையங்களை நிறுவுதல் போன்ற அநேக விடயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்:

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்

கௌரவ தலைவர் அவர்களே, மதிப்புமிக்க விருந்தினர்களே, ஊழல் என்பது சமூகத்தில் பரவலான அழிவு மற்றும் சோகத்தை ஏற்படுத்தும் ஒரு நயவஞ்சக தொற்றுநோய் என்று நாங்கள் கருதுகிறோம். ஊழல் என்பது அபிவிருத்திக்கு ஒரு தடையாக இருப்பது எங்கள் நிலைப்பாடு. இது ஜனநாயகம் மற்றும் உலக நல்வாழ்வுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கு ஒரு காரணம் என்பது எமது நிலைப்பாடாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது. ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடாதிருப்பது இன்னும் ஆபத்தானது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனம் உலகில் மனித சமூகத்திற்கு ஒரு பெரிய வெற்றியைக் கொண்டு வந்தது. மனித நாகரிகத்தின் பல்வேறு சாதனைகள் ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. இவை அனைத்தும் மகத்தான தியாகம் மற்றும் விடாமுயற்சியின் பெறுபேறுகள். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு கடினமான முன்னெடுப்பாகும். ஆனால் நாம் அந்த முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முதல் படி கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் படி சரியானதாக இருந்தால், அதனை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பல படிகள் எடுத்துவைக்கப்படும் என்று நான் நம்புகிறேன். தைரியமாக இருங்கள் எஞ்சிய அனைத்தும் தானாக நடக்கும் என்ற ஜவகர்லால் நேருவின் கருத்தை இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன்.

நான் சுமார் 22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய, பிரகாசமான தீவை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இலங்கையின் மக்கள் தொகை மொத்த உலக மக்கள்தொகையில் சுமார் 0.3% ஆகும். நமது நாட்டின் மக்கள் தொகை அளவு மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறியது என்பது உண்மைதான். ஆனால் நமது நாட்டிற்காகவும் உலகத்திற்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.

நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைத்து பிரதிநிதிகளும் யுத்தத்தை நிராகரிப்பதில் என்னுடன் கைகோர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகில் யுத்தத்தை விரும்பும் எந்த தேசமும் கிடையாது.எங்காவது எப்படியாவது யுத்தமோ அல்லது

மோதலோ ஏற்படும் போதெல்லாம் அது ஒரு துயரம் என்பதை நாங்கள் அறிவோம். இப்போதும் கூட, அந்த துயரத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகிறது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாம் நன்கு அறிவோம். யுத்தத்தினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களுக்கு வரும், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியர் எழுப்பும் வேதனையான வேண்டுகோள்களைப் பார்க்கும் எவரும், யுத்தத்தைப் பற்றி கனவு காணக்கூட தயங்குகிறார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் நம் இரு கண்களால் பார்த்திருக்கிறோம். மோதல்களால் ஏற்படும் துன்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டவில்லை என்றாலும், மில்லியன் கணக்கான மக்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர தவறி பெரும்பாலும் சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராகவே இருந்து வருகிறது.

குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை ஒரு கால்பந்தாட்டமாக மாற்றுவது சந்தர்ப்பவாத அதிகார அரசியலின் துயரமாகும். மற்றவர்களின் வாழ்க்கையை தங்கள் அதிகாரத்தை அதிகரிக்க செல்வாக்கு செலுத்தவும் ஒடுக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. ஆட்சியாளர்களின் பங்கு உயிர்களை அழிப்பது அன்றி, உயிர்களைப் பாதுகாப்பதாகும்.

காஸா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு எங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காஸா பகுதி ஒரு வேதனையான மற்றும் சோகமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அவலக் குரல்கள் நாளாபக்கமும் கேட்கின்றன . ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினர்களின் உடன்பாட்டின் படி, இரு தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும். அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி அணுக வேண்டும். அனைத்து தரப்பினரும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

பலஸ்தீன நாடொன்றுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதே போன்று இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை அடையாளங் காண வேண்டும் . 1967 எல்லைகளில் இரண்டு நாடுகள் அருகருகே இருப்பதற்கான அடிப்படையை வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைத் தேடுவதில் நாம் இணைய வேண்டும். அர்த்தமற்ற போர் காரணமாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வேதனைக்கு முன்பாக வெறும் பார்வையாளராக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு முக்கியமான தருணத்தை நாம் அடைந்துவிட்டோம். உலகைப் பாதிக்கும் யுத்த மோதல்களுக்கு மத மற்றும் இனவாதம் பாரதூரமான காரணிகளாக உள்ளன.

அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுகள் கடந்த பிறகும், இனவெறியின் விஷம் இன்னும் ஆங்காங்கே உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும். தீவிரவாத மற்றும் இனவாதக் கருத்துக்கள் கொடிய தொற்றுநோய்களைப் போலவே கொடியதாக மாறிவிட்டன. இவ்வளவு முற்போக்கான உலகில் கூட, இந்த இனவெறி மற்றும் இனவாதக் கருத்துக்கள் சாம்பலுக்கு அடியில் உள்ள தீப்பொறிகள் போல இருப்பது நகைப்பிற்கும் ஆச்சரியத்திற்கும் உரிய விடயமாகும். மிகவும் பயங்கரமான சூழ்நிலை என்னவென்றால், அந்த தீப்பொறிகள் அவ்வப்போது, சந்தர்ப்பவாதமாக, பிரபஞ்சத்தின் நல்வாழ்வுக்கு எதிராக பெரும் தீப்பிழம்பாக மாற்றப்படுகின்றன.

உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாறுவோம்.

ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுக்குள் நாம் பிரவேசிக்க வேண்டும். மில்லியன் கணக்கான குழந்தைகள் பசியால் இறக்கும் உலகில், நாம் பில்லியன் கணக்கான பணத்தை ஆயுதங்களுக்காக செலவிடுகிறோம். சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் மில்லியன் கணக்கான மக்கள் மரணத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அர்த்தமற்ற போர்களுக்கு பில்லியன்களை செலவிடுகிறோம்.

இலட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி எனும் சிறகுகள் கிடைக்காமல் பெருமூச்சு விடும்போது, நாம் மில்லியன் கணக்கில் நில ஆக்கிரமிப்புகளுக்கு செலவிடுகிறோம். உண்மையில், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு அங்குல நிலத்தையும் அமைதி எனும் குடியேற்றமாக மாற்ற முடிந்தால், அந்த உலகம் ஒரு அற்புதமான உலகமாக மாறும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். இந்த மாநாட்டில் இணைந்த நாம் அனைவரும் உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.

ஒரு வரலாற்று முக்கியமான தேர்தலில், இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் மனதில் இருந்த ஒரு கனவிற்காக தீர்மானம் எடுத்தார்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதன் விளைவாக சட்டவாக்கம் பன்முகத்தன்மை கொண்டது . ஒருபுறம், நாட்டின் முழு மக்களும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். மறுபுறம், கட்புலனற்ற பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களின் பிரதிநிதித்துவம் ஒரு வரலாற்று மைல்கல்லை உருவாக்கியது. பாராளுமன்றத்தில் உள்ள இந்த பன்முகத்தன்மை இலங்கையின் ஆட்சியில் இன பன்முகத்தன்மையை உறுதி செய்கிறது .அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் என்பது பொதுமக்களுக்காக சேவையாற்றும் ஊழியர்கள் அன்றி தேவையற்ற சலுகைகளைப் பெறுபவர்கள் அல்ல என்பதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த நமது நாட்டு மக்கள், 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வைக்கு தங்கள் ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளனர். இந்த வரலாற்று சாதனையை நனவாக்க, ஊழல் இல்லாத நெறிமுறையான ஆட்சி, வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுத்தமான நாடு ஆகிய முக்கிய துறைகளில் எங்கள் கவனத்தை செலுத்தியுள்ளோம். அதனுடன் இணைந்ததாக , கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அவை அனைத்தையும் படிப்படியாக வென்று வருகிறோம்.

இன்று, டிஜிட்டல் ஜனநாயகம் எங்கள் புதிய இலக்காகும். ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு நாடும் டிஜிட்டல் யுகத்தின் வாய்ப்புகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதே உலகின் முன் உள்ள சவாலாகும். அதில் நாம் வெற்றி பெற்றால், தொழில்நுட்பத்திற்கான பிரவேசம் திறக்கப்படுவதையும் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படுவதையும் ஆட்சி பலப்படுத்தப்படுவதையும் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் அவ்வாறு செய்யத் தவறினால், தொழில்நுட்பம் சமத்துவமின்மை, பாதுகாப்பின்மை மற்றும் அநீதிக்கு வழிவகுக்கும் மற்றொரு சக்தியாக இது மாறும் என்று நாங்கள் கருதுறோம்.

டிஜிட்டல் கருவிகளை அணுக முடியாத நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பிளவு தெளிவாகத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்னும் பாரிய இடைவெளி உருவாகி வருகிறது. இலங்கை உட்பட தெற்காசியாவின் பல நாடுகளிலும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும், அபிவிருத்திக்கான கருவியாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது தடையாக உள்ளது.

மிகச் சிறந்த உலகத்தை உருவாக்குவோம்

நாம் மிகச் சிறந்த உலகத்தை, மனிதர்களின் நித்திய கௌரவத்தை மதிக்கும் உலகத்தை உருவாக்க வேண்டும். இந்த மாநாட்டின் உறுப்பினர்களான நீங்கள், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான சிற்பிகளாக இருக்க வேண்டும். 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையை நிறுவும் சாசனத்தில் கையெழுத்திட்டபோது அமெரிக்க ஜனாதிபதி எஹரி எஸ். ட்ரூமன் கூறியது போல், நமது எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. நாம் அச்சம் அல்லது கடப்பாட்டுக்கு உட்படாமல் நம்பிக்கையை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள ஒரு தலைமுறையாக மாற இந்த உச்சிமாநாட்டில் தீர்மானிப்போம்.

இறுதியாக, எனக்கு என் நாட்டின் மீது நம்பிக்கையின் கனவு இருக்கிறது. உங்களுக்கும் உங்களுடைய நாடுகள் தொடர்பில் நம்பிக்கையின் கனவு இருக்கிறது. எனது ஒரே கனவு, என் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வழங்குவதுதான். உங்கள் நாட்டு மக்களுக்கும் இதே போன்ற வாழ்க்கையை வழங்குவதே உங்கள் கனவு என்று நான் நம்புகிறேன். அந்தக் அனைத்துக் கனவுகளுக்காகவும் நம்மைப் பிரிக்கும் பயணத்திற்குப் பதிலாக, கைகளை இணைக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆரோக்கியமான பூகோளத்தில் அமைதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கு அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தை உண்மையாகவே மாற்றியமைப்பவர்களாகுவோம் என நான் உங்களை மரியாதையுடன் அழைக்கிறேன். மிக்க நன்றி.

https://www.virakesari.lk/article/226038

இந்திய பெருங்கடல் அமைவிட சிறப்பை இலங்கை ஆக்கிரமித்துள்ளது : அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலக்கு - பிரதமர் ஹரிணி

1 month ago

Published By: Digital Desk 1

25 Sep, 2025 | 08:12 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும்.  அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்ல, நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியப் பெருங்கடல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நியாயம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும் என்றும் குறிப்பிட்டார். 

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கலந்துரையாடலான 12 ஆவது காலி கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

இந்திய பெருங்கடலின் எதிர்காலத்தைப் பற்றிய கலந்துரையாடலுக்கான ஒரு தளத்தை ஒன்றிணைப்பதில் இலங்கை கடற்படையின் தொலைநோக்குப் பார்வையையும், தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன். இது உலகளாவிய கடல்சார் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை பலப்படுத்துகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'மாறிவரும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் கண்ணோட்டம்' என்பது காலத்திற்கு ஏற்றதும் முக்கியமானதும் ஆகும். இந்தியப் பெருங்கடல் உலகின் மிகவும் நீட்டிக்கப்பட்ட மூலோபாய கடல்சார் களங்களில் ஒன்றாகும், இது வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய உயிர்நாடியாகவும் உள்ளது. 

ஆயினும் அது புவிசார் அரசியல் போட்டிஇ சுற்றுச்சூழல் அழுத்தம், ஒழுங்கற்ற குடியேற்றம் மற்றும் நிர்வாக சவால்களிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களை இந்த பிராந்தியம் எதிர்கொள்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியப் பெருங்கடல் நாகரீகங்களின் ஒரு மையமாக இருந்து வர்த்தகம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாத்தியமாக்கியுள்ளது. இன்று, மூலோபாய நலன்கள் ஒன்றிணையும் ஒரு அரங்கமாக உள்ளது. இதனால் இது போட்டியின் அரங்கமாகவும் ஒத்துழைப்புக்கான ஒரு தளமாகவும் அமைகிறது.

இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும்.  அந்த இடத்தை நாம் ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்லஇ நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியப் பெருங்கடல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நியாயம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும். 

இந்திய பெருங்கடல்  முன்னோடியில்லாத அழுத்தத்தில் உள்ளது. காலநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு, அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவை பல்லுயிர், மனித பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைதிக்கு அச்சுறுத்தல் விடுகின்றன. கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தேசிய உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமானது. அதனால்தான், வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம் மற்றும் நாடுகளிடையே ஆழமான அறிவியல் ஒத்துழைப்புக்கு அழைக்கிறோம்.

பயனுள்ள கடல்சார் நிர்வாகம் சமமாக முக்கியமானது. பாரம்பரிய அச்சுறுத்தல்களுக்கு அப்பால், போதைப்பொருள் கடத்தல் உட்பட பாரம்பரியமற்ற சவால்களையும் இலங்கை எதிர்கொள்கிறது. இது நமது கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட முன்முயற்சி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. 

மாறிவரும் கடல்சார் பாதுகாப்பு நிலை மற்றும் இலங்கை கடற்படையின் முக்கியப் பங்கைப் அங்கீகரிக்கும் வகையில், 2025 பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் கடற்படைக்கு 92.5 பில்லியன் இலங்கை ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12 சதவீதமான அதிகரிப்பாகும். இந்த முதலீடு தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நமது கடல்சார் களத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வழக்கமான ரோந்துப் பணி, ஆய்வு மற்றும் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, கப்பல்களை இடைமறித்து, கடத்தல்காரர்களைக் கைது செய்து, அதன் மூலம் கடல்சார் களத்தை  பாதுகாப்பதில் இலங்கை கடற்படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். ஆயினும், இந்த சவால்களை இலங்கை மட்டும் சமாளிக்க முடியாது. இந்தியப் பெருங்கடலில் பயனுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு மற்ற நாடுகளின் தீவிர ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. 

கப்பல் போக்குவரத்து சுதந்திரம், சர்வதேச சட்டத்திற்கு மரியாதை மற்றும் கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் ஒழுங்கற்ற குடியேற்றத்திற்கு பதிலளிப்பது ஆகியவை தகவல் பகிர்வு, கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தது. கடலில் ஒரு விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு ஸ்திரத்தன்மையின் மூலக்கல்லாக இருக்க வேண்டும். கப்பல் போக்குவரத்து, மீன்வளம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் நீலப் பொருளாதாரம் வாய்ப்புகளை வழங்குகிறது. 

இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம் அதன் கரைகளுக்கு அப்பால் பரந்து விரிந்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஓட்டங்களுக்கு மையமானது. இது பிராந்திய சக்திகள் மற்றும் உலகளாவிய கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அவசியமாக்குகிறது. ஒத்துழைப்பின் மூலம்இ கடற்படைகள் கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கலாம்இ ஆக்கிரமிப்பைத் தடுக்கலாம், சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடலாம் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பதிலளிக்கலாம். உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு பங்களிக்குமாறு இலங்கை அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறது. 

ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இந்தியப் பெருங்கடல் அமைதி, செழிப்பு மற்றும் வாய்ப்புகளின் களமாக இருக்க முடியும். சவால்கள் வலிமையானவைஇ ஆனால் செய்தி தெளிவாக உள்ளது. எந்தவொரு நாடும் தனியாக அவற்றை எதிர்கொள்ள முடியாது. அவர்களுக்கு பல்தரப்புவாதம், கூட்டாண்மை மற்றும் கடற்படைகள், அரசாங்கங்கள், தொழில் மற்றும் சிவில் சமூகங்களுக்கு இடையிலான ஈடுபாடு தேவை. “காலி கலந்துரையாடல்”  இந்த உணர்வை உள்ளடக்கியது என்றார். 

WhatsApp_Image_2025-09-25_at_07.03.27.jp

WhatsApp_Image_2025-09-25_at_07.03.30.jp

https://www.virakesari.lk/article/226018

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை

1 month ago

Published By: Digital Desk 1

25 Sep, 2025 | 09:23 AM

image

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ்  அதிகாரியை  தமிழகம் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ்   நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த 5.9.2020-ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன்  பொலிஸ் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கொழும்பில் கைப்பற்றப்பட்டு துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர்  இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.

ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸாரால் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர்.

விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது  சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான விசேட முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டாரே ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த நிலையில் இவ் வழக்கில்  நேற்று புதன்கிழமை (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள்,அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தினார்.

விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் விசேட முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

WhatsApp_Image_2025-09-25_at_6.07.21_AM.

WhatsApp_Image_2025-09-25_at_6.07.20_AM.

https://www.virakesari.lk/article/226023

எதுவும் கல்லில் எழுதப்படவில்லை: பிராந்திய பிரச்சினைகளுக்கு மூன்றாம் தரப்பு தீர்வு மோதல்களுக்கு வழிவகுக்கலாம் - இந்திய கடற்படை அதிகாரி

1 month ago

Published By: Digital Desk 1

25 Sep, 2025 | 08:10 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி  புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் உள்ளன. எனவே கவனமாக  இருக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கூடுதல் பிராந்திய சக்திகள் இருப்பதால் அது ஒரு வகையான சமநிலைக்கு வழிவகுக்கும் என்ற கருத்துடன்  உடன்பட்டாலும்,  பிராந்திய பிரச்சனைகளுக்கு பிராந்திய தீர்வுகளை  கண்டுபிடிக்க வேண்டும்.  மேலும் அந்த தீர்வுகளைக் கண்டறிய பிராந்தியத்திற்குள் போதுமான திறன் உள்ளது. எதுவும் கல்லில் எழுதப்படவில்லை. எனவே வேறு எந்த பயனரிடமிருந்தும் உதவி அல்லது ஆலோசனை பெற்றால் மோதலுக்கு வழிவகுக்க கூடும் என இந்திய கடற்படை அதிகாரி  அட்மிரல்  தினேஷ் கே. திரிபதி தெரிவித்தார்.

12 ஆவது காலி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துக்கொண்டு  உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

பிராந்திய  பிரச்சனை என்னவென்றால், அதிக அளவு எரிசக்தி, அதிக அளவு வர்த்தகம், பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி  புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் உள்ளன. எனவே, கவனமாக  இருக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கூடுதல் பிராந்திய சக்திகள் இருப்பதால், அது ஒரு வகையான சமநிலைக்கு வழிவகுக்கும் என்ற கருத்துடன்  உடன்படுகிறேன். மேலும், நாம் அனைவரும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைவரும், பிராந்திய பிரச்சனைகளுக்கு பிராந்திய தீர்வுகளை  கண்டுபிடிக்க வேண்டும்.  மேலும், அந்த தீர்வுகளைக் கண்டறிய பிராந்தியத்திற்குள் போதுமான திறன் உள்ளது. அதுவே முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழியாகும். ஆனால், எதுவும் கல்லில் எழுதப்படவில்லை. எனவே, கடல்களின் வேறு எந்த பயனரிடமிருந்தும் உதவி அல்லது ஆலோசனை தேவைப்பட்டால், அது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாததாகி,  மோதலுக்கு வழிவகுக்கக்கூடாது.

“உரையாடல்” என்பது ஒன்றாகச் சிந்திக்கும் கலை என்று வில்லியம் ஐசக்ஸ் கூறியுள்ளார். அந்த வகையில்,  பல்வேறு பங்கேற்பாளர்களுக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்திருக்கும்  அனைவருக்கும், போட்டியிடும் நிலைகளிலிருந்து ஒரு பகிரப்பட்ட புரிதலுக்கு செல்ல இந்த கலந்துரையாடல் உதவுகிறது.  இன்றைய விவாதத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, வெளிப்படையாகத் தோன்றும் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் மாறிவரும் இயக்கவியல் என்ன?

இந்தியப் பெருங்கடல் பார்வை என்பது வர்த்தகம், செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஒன்றிணையும் இடமாகும். அது பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, புவியியலின் தன்மையின் காரணமாக உலகம் முழுவதற்கும் முக்கியமானது. எனவே, ஒன்றிணைதல் என்பது, வளங்கள், செழிப்பான பொருளாதாரங்கள், வர்த்தகப் பாதைகள், பல்வேறு கடலோர நாடுகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், இவை அனைத்தும் பல சிக்கலான புள்ளிகளில் நமக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இது அதிக மக்கள் தொகையையும் குறிப்பிடுகிறது. உலகின் மக்கள் தொகையில் சுமார் 35 முதல் 40ம% பேர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். 

எனவே, இங்கு ஒரு வாய்ப்பும் உள்ளது, ஒரு சவாலும் உள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய இயக்கவியல்கள் என்ன என்பதை கூறுகிறேன்.  முதலாவதாக, வெளிப்படையாக, சிந்தனையின் வேகத்தில் வேகமாகப் பாயும் தொழில்நுட்பமாகும். இதுதான் எங்கும் ஆபத்தின் கணக்கீட்டை எழுதுகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், குறைந்த விலை வணிக ரீதியாக கிடைக்கும் ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா அமைப்புகள் அரசு சாரா சக்திகளின் கைகளில் இருப்பது, மக்களை அச்சுறுத்துகிறது. 

உங்களுக்கு முன்வைக்க விரும்பும் இரண்டாவது இயக்கவியல், செல்வாக்கின் சங்கமம் என்று அழைப்பது. ஏனெனில், நாடுகளின் மூலோபாய நலன்கள் உருவாகி வருகின்றன. மேலும், வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒரு போட்டி உள்ளது. இது வெளிப்படையாக, மாநிலங்களுக்கு இடையில், பிராந்திய மற்றும் கூடுதல் பிராந்திய ரீதியாக உள்ளது. எனவே, நிலப்பரப்பு, அல்லது  கடல் அளவைப் பயன்படுத்தலாம், இது சிக்கலான தன்மை மற்றும் போட்டியால் குறிக்கப்பட்டுள்ளது. வெள்ளை கப்பல் போக்குவரத்து குறைந்து வருவதைக் காண்கிறோம். நான் என்ன பேசுகிறேன் என்பதை பல்வேறு சர்வதேச எதிர்கால மையங்கள் பாராட்டும் என்று நம்புகிறேன். 

மேலும், மூன்றாவது இயக்கவியல் காலநிலை மாற்றம் ஆகும். புயல்கள் மிகவும் வன்முறையாகவும் கணிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகள் வேகமாக அழுத்தத்தில் உள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கடந்த 50 ஆண்டுகளில் கடல்சார் உயிரினங்களில் 60மூ சரிவை சுட்டிக்காட்டுகிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடையேயான குழு, உலக வெப்பமயமாதல் 1.5 டிகிரி சென்டி கிரேடுக்கு உள்ளேயே பவளப் பாறைகளில் 70 முதல் 90% இறந்துவிடும் என்று கணித்துள்ளது. கிட்டத்தட்ட 330 மில்லியன் மக்கள் கூறிய அனைத்தாலும் பாதிக்கப்படுவார்கள். எனவே, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35% பேருடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருக்கிறோம். தாமதமாக வெடிக்கக் கூடிய குண்டில் அமர்ந்திருக்கிறோம்.  

இந்தியாவின் மிக உயர்ந்த பார்வை, ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது  நாகரீக தர்மமான ஒரு குடும்பம் என்ற உணர்வோடு ஒத்திருக்கிறது.  உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்பும் மூன்று வழிகள் உள்ளன. முதலாவது, நாம் உண்மையிலேயே உள்ளடக்கிய கடல்சார் கள விழிப்புணர்விற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் நாம் உறுதி செய்ய வேண்டிய முதல் விஷயம். இதற்கு உள்நாட்டு அளவில் தொடர்பு மற்றும் தகவல் பகிர்வு வலைப்பின்னல்கள் தேவை.

இரண்டாவதாக,  நெகிழ்வான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும்இ கடல்சார் கேபிள்கள் மற்றும் எரிசக்தி குழாய்களை முக்கியமான பகிரப்பட்ட உலகளாவிய உள்கட்டமைப்பாக அங்கீகரிக்க வேண்டும். அதில் எந்த விவாதமும் அல்லது சந்தேகமும் இருக்க முடியாது. மேலும், இணைய அச்சுறுத்தல்கள், கடற்கொள்ளை, கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக ஒரு கூட்டுப் பாதுகாப்பையும்  கொண்டிருக்க வேண்டும். காலநிலை சார்ந்த பேரழிவுகளுக்கு எதிராக நெகிழ்வாக இருக்க வேண்டும். மேலும், பேரழிவுக்கான நெகிழ்வான உள்கட்டமைப்பிற்கான கூட்டணியை முன்மொழிகிறேன்.

https://www.virakesari.lk/article/226017

மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை

1 month ago

Published By: Vishnu

25 Sep, 2025 | 06:53 PM


யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (25) மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.

IMG_9713.jpeg

 அதன்போது,  நிலையத்தின் செயற்பாடுகளை  எதிர்வரும் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பது குறித்து பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலர்;

பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் குறித்தும் அதன் இட அமைவு தொடர்பாகவும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டதுடன், பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தொடர்ந்து இயக்குவதற்கான தேவைபாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.மேலும், இந் நிலையத்தின் செயற்பாடுகளை இந்த மாதம் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூகத்துக்கு பயனுள்ள வகையில் இந்நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரதும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர் , சாவகச்சேரி பிரதேச செயலாளர், கணக்காளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் கலந்துகொண்டனர். மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை | Virakesari.lk

விலங்கு கணக்கெடுப்புக்காக 39 இலட்சத்து 16314 ரூபா செலவு - நாமல் கருணாரத்ன

1 month ago

25 Sep, 2025 | 05:22 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

விலங்கு கணக்கெடுப்புக்காக 39  இலட்சத்து 16314 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இதற்கமைய இலங்கையில் 51 இலட்சத்து 97517 ஆயிரம் மந்திகள், 17 இலட்சத்து 47623  குரங்குகள், 26 இலட்சத்து 66630 மர அணில்கள்,42 இலட்சத்து 85745 மயில்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என  விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான  வேளையின் போது  புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் விலங்குகள் கணக்கெடுப்பு 2025.03.15 ஆம் திகதியன்று யாழ்மாவட்டத்தில் நெடுந்தீவை தவிர்த்து ஏனைய சகல  கிராம சேவகர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.இந்த கணக்கெடுப்புக்கு 39 இலட்சத்து 16,314 ரூபாய் செலவிடப்பட்டது. இந்த விலங்கு கணக்கெடுப்புக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

விலங்கு கணக்கெடுப்பின் பெறுபேறு கடந்த ஏப்ரல் சகல பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக  விவசாயத்துறை அமைச்சுக்கு  கிடைக்கப்பெற்றது.இதற்கமைய இலங்கையில் 51 இலட்சத்து 97517 ஆயிரம் மந்திகள், 17 இலட்சத்து 47623  குரங்குகள், 26 இலட்சத்து 66630 மர அணில்கள், 42 இலட்சத்து 85745 மயில்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கையில் கடந்த காலங்களில் விலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் காட்டு விலங்குகளால் பயிர்செய்கைகளுக்கு ஏற்படும் விளைவை மதிப்பிடுவதிலும், விலங்குகளை கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் காணப்பட்டது.காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கணக்கெடுப்பின் தரவுகள் 50 சதவீதளமவில் உறுதியானதாக அமையாது என்பதை அறிவோம்.இருப்பினும் மிகுதி 50 சதவீதமான  தரவுகள் உறுதியானவை. முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்து.இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு  காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த தொழில்நுட்ப ரீதியில் உரிய நடவடிக்கைகள் விவசாயத்துறை மற்றும் வனவளத்துறை திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

விலங்கு கணக்கெடுப்புக்காக 39 இலட்சத்து 16314 ரூபா செலவு - நாமல் கருணாரத்ன | Virakesari.lk

ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்

1 month ago

25 Sep, 2025 | 07:32 PM

image

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு  விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று வியாழக்கிழமை இரவு (25) நடைபெறும். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியாழக்கிழமை (25) அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க உள்ளார்.

இதேவேளை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இன்று பல இராஜதந்திர சந்திப்புகளில் பங்கேற்க இருக்கிறார்.

ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார் | Virakesari.lk

7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்

1 month 1 week ago

7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்

25 Sep, 2025 | 12:15 PM

image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான, பாதிக்கப்பட்ட சிறுமியின்  சித்தப்பாவுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். 

அதன்படி, குறித்த நபருக்கு, அவர் செய்த முதலாவது குற்றத்துக்கு  2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றத்துக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2007இல் 7 வயது சிறுமியினது தந்தையின் சகோதரனான 32 வயதுடைய சித்தப்பா, அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில், அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

குறித்த நபர், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்றமை, பாலியல் துஷ்பிரயோகம்  செய்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டு, அந்த நபர் குற்றவாளியாக கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து, இவ்வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/226041

கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

1 month 1 week ago

New-Project-337.jpg?resize=750%2C375&ssl

கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த துறவிகளில் மூன்று வெளிநாட்டு துறவிகளும் நான்கு இலங்கை துறவிகளும் அடங்குவதாக பன்சியகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்து நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வன மடத்தில் தற்போது பல வெளிநாட்டு துறவிகள் வசித்து வருவதாகவும் ஊடகப் பிரிவு கூறுகிறது.

துறவிகள் கேபிள் காரில் ஏறி மலை உச்சியில் உள்ள தியான பீடங்களுக்கு செல்ல புறப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பன்சியாகம போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1448454

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!

1 month 1 week ago

1715672492-AL-6.jpg?resize=650%2C375&ssl

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

இதேவேளை, மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்க்கவும், நல்ல இசையைக் கேட்கவும், கடற்கரைகளுக்குச் செல்லவும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விஷயத்தைப் பற்றி தான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன், என்று அவர் கூறினார்.

இந்த ஒதுக்கீடு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1448480

இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை

1 month 1 week ago

இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை

Editorial   / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 10:19

தனது 7 மற்றும் 8 வயது மகள்களை  2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இருகுற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும்பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறுமட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன்   தீர்ப்பளித்தார்.

மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை  உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒருமகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல்துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ்பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில்  குறித்த நபருக்கு எதிராக 16 வயதுக்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கைமூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 27 ம் திகதி இனம் காணப்பட்டார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது 8 வயதுசிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றத்துக்காக 10 ஆயிரம், தண்டப்பணம்செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டார்.

அடுத்து பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவும், நான்காவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாகசெலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் இரு 20 வருட கடூழியசிறைத்தண்டனை சமகாலத்தில் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்ததுதீர்ப்பளித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இரு-மகள்களை-பாலியல்-துஷ்பிரயோகம்-தந்தைக்கு-20-வருட-கடூழிய-சிறை/175-365258

மருத்துவத் தவறால் கை அகற்றம் தாதிய உத்தியோகத்தர் கைது; நாட்டைவிட்டு வெளியேறத் தடை

1 month 1 week ago

மருத்துவத் தவறால் கை அகற்றம் தாதிய உத்தியோகத்தர் கைது; நாட்டைவிட்டு வெளியேறத் தடை

1624010106.jpeg

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.

இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உசைன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான கு.புரந்திரன்,செ.லக்சன் ஆகியோர் பல்வேறு விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.வழக்கின் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிவான், இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறும். விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, அந்தத் தாதிய உத்தியோகத்தர் சிறுவர், பெண்கள் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அந்தத் தாதிய உத்தியோகத்தருக்குப் பிணை வழங்கிய நீதிவான், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு பயணத்தடையையும் விதித்துள்ளார்.

https://newuthayan.com/article/மருத்துவத்_தவறால்_கை_அகற்றம்_தாதிய_உத்தியோகத்தர்_கைது;_நாட்டைவிட்டு_வெளியேறத்_தடை#google_vignette

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

1 month 1 week ago

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

adminSeptember 25, 2025

judgement.jpg?fit=990%2C660&ssl=1

நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.  யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

அவரது பதவி விலகலை, நீதி சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை , அடுத்து , நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு   சென்ற  நிலையில், நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பன மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதவான், நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.

https://globaltamilnews.net/2025/220774/

லொறியும்  வானும்  நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு

1 month 1 week ago

லொறியும்  வானும்  நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு

adminSeptember 25, 2025

thalava.jpeg?fit=1170%2C658&ssl=1

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும்  வானும்  நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட  விபத்தில்  நால்வா்  உயிரிழந்துள்ளனா்.  அந்த விபத்து இன்று (25) அதிகாலை  இடம்பெற்றதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வானும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வான் ஜா-எலயில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது எனவும்  உயிாிழந்தவா்களில் வான் சாரதியும் உள்ளடங்குவதாகவும் வான் சாரதியின்   தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்   தலாவ  காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.  இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் காவல்துறையினா் குறிப்பிட்டுள்ளனா்.

https://globaltamilnews.net/2025/220791/

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு

1 month 1 week ago

24 Sep, 2025 | 05:16 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையில் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது  ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினக்கு  எதிராகவோ   நடவடிக்கைகளை மேற்கொள்ளும்   இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற  தண்டனைச் சட்டக்கோவை  (திருத்தச்)  சட்டமூலம் மீதான விவாதத்தின் போது  ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது உரையில் தேசிய மக்கள் சக்தியின்  மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிட்டார். வெளிப்படையாக பேச வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு ' பி' அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்கடை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளேன்.அந்த அறிக்கையில் இறுதி பந்தியை வாசிக்கிறேன்.

'1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவையின் திருத்தச் சட்டத்தின் 308 ஆம் உறுப்புரை மற்றும்  சாட்சி தண்டனைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் பிரகாரம் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது  ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கோ எதிராக  நடவடிக்கைகளை மேற்கொள்ளும்   இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இங்கு இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார்கள்.இது தவறானதொரு எடுத்துக்காட்டு என்றார்.

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை: சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைப்பு | Virakesari.lk

ஜனாதிபதி அநுரகுமார - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு

1 month 1 week ago

24 Sep, 2025 | 05:24 PM

image

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி ) இடம்பெற்றது.

இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு  கலந்துரையாடல் ஆரம்பமானதோடு   இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி  ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்  சிரேஸ்ட அதிகாரிகள்  இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.  

WhatsApp_Image_2025-09-24_at_16.56.12.jp

WhatsApp_Image_2025-09-24_at_16.56.11__1

WhatsApp_Image_2025-09-24_at_16.56.09.jp

WhatsApp_Image_2025-09-24_at_16.56.10.jp

WhatsApp_Image_2025-09-24_at_16.56.10__1

WhatsApp_Image_2025-09-24_at_16.56.13.jp

https://www.virakesari.lk/article/225980

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்

1 month 1 week ago

24 Sep, 2025 | 05:09 PM

image

தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை

கடந்த காலங்களில் ஆட்சியில் பங்களித்து எமது மக்களின் அபிலாசைகளுக்காக மானசீகமாக உழைக்கின்ற தரப்பு என்ற அடிப்படையில் எமக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன.

தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் தவறு நிவர்த்திக்கப்படும் என்று உறுதியளிக்கின்ற போதிலும், இதுவரை தவறுகள் நிவர்த்திக்கப்படவில்லை.

இவை, தொல்லியல் திணைக்களத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறான சூழலில், எமது தாயக பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீகத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், சிதைவடைந்த சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதுடன், யாழ் மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி தமிழ் மன்னர் களின் சிலைகள், தனிநாயகம் அடிகளாருக்கு சிலை, யாழ் பண்ணையில் தமிழ் மங்கையின் சிலை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, எமது மரபுரிமை சின்னங்களை அழிப்பதில் சில கோடாரிக் காம்புகளும் பின்னணியில் செயற்படுகின்றன என்பதுதான வேதனையான விடயம்.

குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் மாறி மாறி அதிகாரத்திற்கு வருகின்ற தரப்புக்களுடன் தனக்கு உறவு இருப்பதாக வெளிப்படுத்தி தன்னுடைய வர்த்தகத்தினை வளப்படுத்துவதில் விண்ணாதி விண்ணனான ஒரு வர்த்தகர், மந்திரிமனை அழிவிற்கும் காரணமாக இருக்கின்றார்.

மந்திரிமனை வளாகத்தில் நீண்டகாலமாக காணப்படுகின்ற குறித்த வர்த்தகரின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களினால் ஏற்படும் அதிர்வுகளும் மந்திரிமனை அழிவிற்கு காரணமாக இருக்கின்றது என்று பல வருடங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உள்நோக்கம் காரணமாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, ஊழல் அற்ற ஆட்சி, அனைவருக்கும் சமத்துவமான எதிர்காலம் போன்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கு, காணப்படும் தடைகள் மற்றும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/225975

ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

1 month 1 week ago

உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது.

டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது.

இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இதில் அடங்கும்.

டைம் அவுட்டின் படி, இந்த இடங்கள் அவற்றின் பருவகால வசீகரம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. 

Tamilmirror Online || ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

கீரைப்பிடி 200 ரூபா

1 month 1 week ago


326418021.jpg

யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன்

கீரைப்பிடி 200 ரூபா

மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளதால், சந்தைகளில் கீரைப்பிடியின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த கீரை வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைகளில் கீரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கீரைப்பிடி ஒன்றின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது.

கீரைப்பிடி 200 ரூபா

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

1 month 1 week ago

Published By: Vishnu

24 Sep, 2025 | 07:06 AM

image

இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது. அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது.

ஓமான் மற்றும் மாலைத்தீவின் வான் பரப்புகளில் இஸ்ரேல் விமானங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக கொழும்பை வந்தடைய  உள்ளது. பின்னர் மீண்டும் டெல் அவிவ் நோக்கிப் புறப்படும். இப்பயணத்துக்கு சுமார் 9.15 மணித்தியாளங்கள் ஆகக் கூடும்.  அதற்கமைய புதன்கிழமை (24) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 22.30 மணியளவில் பயணிக்கவுள்ள விமானம் மறுநாள் காலை (25) 5.30 மணியளவில் டெல் அவிவ் விமான நிலையத்தை வந்தடையும்.

இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்படி விமான சேவை வாரத்திற்கு ஒரு முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை | Virakesari.lk

Checked
Sun, 11/02/2025 - 08:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr