ஊர்ப்புதினம்

தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)

3 weeks 4 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆகாயத்தில் இருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' கடந்த முதலாம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நாட்டின் சிறுவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமான பயணத்தில் பங்கேற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 250 ஆகும்.

'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தற்போது டி.வி தெரணவில் காணலாம்.

https://adaderanatamil.lk/news/cmgemvr3e00upo29n4hy1mbv1

பௌர்ணமி தினமான இன்று வானில் அதிசய நிகழ்வு தென்படும்

3 weeks 4 days ago

Published By: Digital Desk 3

06 Oct, 2025 | 02:28 PM

image

பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon) தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது.

பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன.

இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கத்தை விட சற்று அதிக அலை எழுச்சியை சந்திக்க நேரலாம். மேலும், இன்றிரவு பிரகாசமான முழு நிலவுக்கு அருகில் சனி கிரகம் நிலைநிறுத்தப்படுவதைக் காண வானியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

பௌர்ணமி தினத்தைக் குறிக்கும் போது வானியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வைக் காண சூப்பர் மூன் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

https://www.virakesari.lk/article/227019

நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன்

3 weeks 4 days ago

நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன்

06 Oct, 2025 | 10:34 AM

image

நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05)  இடம்பெற்ற சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினநிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேரமுகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

சர்வதேச ரீதியாக சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினம் என உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வுகளை இந்தக் கிராமத்தில் ஒழுங்குசெய்து சிறார்கள் மற்றும் முதியவர்களை அழைத்து மதிப்பளிப்பது உண்மையிலே ஒரு சிறப்பான விடயம். அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாதனையாளர்களும் மதிக்களிக்கப்படுகின்றனர்.

அந்தவகையிலே எமது வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது மிக மிக முக்கியமானது என்பதை சிறார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவராக நான் பத்துவருடங்கள் இருந்தேன். 

அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் எமக்கு நேரமுகாமைத்துவத்தில் முன்னோடியாக இருந்தார். அந்தவகையில் தற்போதும் எம்மால் மிகச் சிறப்பாக பின்பற்ற முடிகின்றது.

இவ்வாறாக நேரமுகாமைத்துவம் உட்பட அனைத்துப் பண்புகளையும் பின்பற்றிக்கொண்டு சிறார்கள் அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடையவேண்டும்.

எமது பிள்ளைகள் அனைவரும் சிறப்பான முறையில் கற்றல்செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். தற்போது எமது மாவட்டம் கல்வியில் 25ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆனால் வறுமையில் முதல்நிலையிலுள்ள மாவட்டமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எமது மாவட்டங்களுக்கு கல்விக்கான வளப்பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்யுமாறு உரியவர்களைக் கோரியிருக்கின்றேன்.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம்தான் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த குளிரூட்ட சொகுசு பேருந்து சேவையை விரைந்து ஆரம்பிக்குமாறு உரிய அமைச்சிடம் கோரியிருக்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொகுசுப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் வட்டுவாகல் பாலத்தினை அமைக்குமாறு தொடர்ச்சியாக கோரியதற்கு அமைவாக அந்தப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அடுத்ததாக கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன்.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தினை அமைத்துத்தருவதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக எமது மக்களின் கோரிக்கைகளையே நாம் உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று நிறைவேற்றுக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டுவருகின்றோம்.

இந்நிலையில் பின்தங்கியுள்ள எமது முல்லைத்தீவு மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே நாம் முன்கொண்டுசெல்லமுடியும்.

எனவே சிறுவர்கள் அனைவரும் நல் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். தற்போது எமது சமூகங்களில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்றுவருகின்றன. 

குறிப்பாக போதைப்பொருள் ஊடுருவல்களும் அவற்றால் ஏற்படும் சீர்கேடுகளும் மிகப் பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறான சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துமாறு தொடர்சியாகக் கோரிவருகின்றோம். 

அந்தவகையில் அனைத்து வகையான சீர்கேடுகளும் கட்டுப்படுத்தப்படுமென உரியவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்நிலையில் இவ்வாறான சமூகச்சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகின்றோம்.

அத்தோடு நிச்சயமாக எமது மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே உயர்த்த முடியும். நாம் தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தரை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்தநிலை மாறவேண்டும். முல்லைத்தீவை முல்லைத்தீவு பிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். 

வவுனியாவினை வவுனியாபிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். மன்னாரிலும் அந்த நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆட்சிசெய்வதென்றால் அரசியல் ரீதியாக ஆட்சிசெய்வதை நான் இங்கு குறிப்பிடவில்லை. 

சிறார்கள் அனைவரும் நல்லமுறையில் கல்விகற்று அந்தந்த மாவட்டங்களில் திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை தாமே நிரப்பக்கூடிய நிலையை ஏற்படுத்தவேண்டுமென்பதையே தெரிவிக்கின்றேன். இந்தநிலை ஏற்பட்டால் வன்னியும், முல்லைத்தீவும் தன்னிறைவுபெறும் என்றார்.

https://www.virakesari.lk/article/226999

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

3 weeks 4 days ago

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

06 Oct, 2025 | 10:41 AM

image

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைக்கும் பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குகின்றன.

பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரியவருகின்றது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்றது. அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/227005

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

3 weeks 5 days ago

பெரும் மக்கள் கூட்டத்தையும் பெரும் கல்விசமூகத்தையும் கொண்டிருக்ககூடிய வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சியின் தெரிவு அல்லத அதில் உள்வாங்கியவர்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியாக மாறியதாக கருதப்படுகின்றது.

இந்தநிலையில் தமிழர் பகுதிகளில தமிழ் கட்சிகள் வென்றிருந்தால் ஐ.நா ஆணையாளரின் வருகை கூட மாறியிருக்கும் என்று பிரித்தானிய தமிழர்பேரவையின் மனிதஉரிமைகள் இணைப்பாளர் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஐ.நாவில் தமிழ் மக்களுக்கான பின்னடைவிற்கான முழுபொறுப்பையும் தமிழரசுக்கட்சி ஏற்க வேண்டும்.

தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த சம்பந்தன் பல விடயங்களை கட்டுப்படுத்தியிருந்தால் தமிழினத்திற்கு இவ்வாறான விடயங்கள் நடைபெற்றிருக்காது என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பிலும், சுமந்திரனின் நிலைபாடு தொடர்பிலும் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...


https://tamilwin.com/

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு!

3 weeks 5 days ago

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு!

Published By: Digital Desk 1

05 Oct, 2025 | 02:22 PM

image

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா? இல்லையா? என்று ஒரு ஆய்வு செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்திடம் கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

நாங்கள் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள். எங்களுக்கு கடல் மீதும் எங்களது சுற்றுச்சூழல் மீதும் உள்ள அக்கறையின் வெளிப்பாடாகத்தான் இந்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு; வலியுறுத்தி வந்தோம்.

ஆனால் கடந்த மாதம் கடற்றொழில்சார் திணைக்களங்களும் அதன் அதிகாரிகளும், கடல் அட்டையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கடல் வளங்கள் அழிகின்றதென நாங்கள் கூறும் போதும் மௌனம் காத்த யாழ் பல்கலைக்கழகம் இப்போது அந்த கடல் அட்டையை காப்பாற்ற வேண்டும் என கூட்டம் போடுகிறது. இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து வடக்கு கடல் தொழிலாளர்களை அழிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முயற்சிக்கிறதா? என நாங்கள் பல்கலைக்கழகத்தை பார்த்து கேட்கின்றோம்.

இந்தக் கூட்டத்திற்கு, பாதிக்கப்பட்ட சிறு மீனவர்களையும், பாதிக்கப்பட்ட எவரையும் அழைக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்திலே 62 சதவீதத்திற்கு மேற்பட்ட கடற்பரப்பு தமிழர்களின் கைகளில் இருக்கின்றது.

தமிழர்களுடைய கையில் இருக்கின்ற கடற்பரப்பையும் கடற்றொழிலாளர்களையும் அழிக்கின்ற, ஆட்சிசெய்த, ஆளுகின்ற அரசாங்கங்களின் கீழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடமும் செயப்படுகின்றதா? என்று கேள்வியும் ஐயமும் எமக்கு எழுகின்றது.

எதிர்கால சந்ததிக்காக கடலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அந்தப் பொறுப்பு குறித்தும் நீங்கள் கரிசினை கொள்ள வேண்டும். எதையும் அழிப்பதற்காக நாங்கள் எதிர்த்து கருத்துக்கு கூறவில்லை. எங்களுடைய சூழலும் வளமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.

பதவியில் இருப்பவர்கள் தங்களது கதிரைகளை காப்பாற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று அரசாங்கத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டு, அந்த அறிக்கையினூடாக கடற்றொழிலாளர்களுடைய கருவை அழிக்கின்றீர்கள் என்பது எமது குற்றச்சாட்டாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/226947

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

3 weeks 5 days ago

05 Oct, 2025 | 04:38 PM

image

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள்  ஞாயிற்றுக்கிழமை (05) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் பயனாளிக்கு ஒருவருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை  உறுப்பினர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

01__3_.jpg

01__7_.jpg

01__5_.jpg

01__2___1_.jpg

https://www.virakesari.lk/article/226960

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் நாளாந்தம் சேவையில்

3 weeks 5 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்தது.

இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாட்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmgddchlq00u9o29nctfufdu1

மாங்குளத்தில் மனித எச்சம் கண்டுபிடிப்பு

3 weeks 5 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (4) அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் அங்கிருந்து இந்த மனித எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிக்கு சென்ற ஒருவர் இதனை அவதானித்த நிலையில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

https://adaderanatamil.lk/news/cmgdawx2t00teqplpu9uy34pe

சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

3 weeks 5 days ago

murder-girl.jpg?resize=750%2C375&ssl=1

சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் மிக்சருக்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சிங்காராவேல் தானவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1449571

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் : வாக்கெடுப்பைத் தவிர்க்க அமெரிக்கா, நோர்வேயிடம் ஆதரவு கோரிய அரசு

3 weeks 5 days ago

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் : வாக்கெடுப்பைத் தவிர்க்க அமெரிக்கா, நோர்வேயிடம் ஆதரவு கோரிய அரசு

05 Oct, 2025 | 09:35 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் மீது, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான பின்னணியில், அரசாங்கம் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழு, அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்புக் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கையின் நிலை குறித்து ஆராயும் விதமாக, அக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்ற பின்னணியில் அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகளிடம் அரசாங்கம் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு, ஜெனிவா விவகாரத்தில் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த இராஜதந்திர நகர்வை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

குறிப்பாக இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளுடன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உள்ளிட்ட இலங்கையின் இராஜதந்திரிகள் பங்கேற்றிருந்தனர்.

புதிய தீர்மானத்தின் மூலமாக முன்வைக்கப்பட்ட பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு போன்ற விடயங்களில் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை எதிர்கொண்டு, தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அநுரவின் தூதுக்குழு நோர்வேயிடம் முக்கிய வாக்குறுதிகளையும் உத்தரவாதங்களையும் அளித்துள்ளது. அதாவது, தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு சட்டம், பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், இந்தச் சட்டத்தை கூடிய விரைவில் இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்தது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. காணாமலாக்கப்பட்டோர் குழுவின் 29 ஆவது அமர்வில் தெளிவுபடுத்தியிருந்தார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டுச் சட்டம், உள்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு, இந்தச் செயலை முற்றிலுமாக தடைசெய்துள்ளதாக குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அங்கீகாரமும் மரியாதையும் தேவை என வலியுறுத்தியதுடன், நீண்ட கால ஆதரவு, நியாயமான நிதி இழப்பீடு, தொழில் கல்வி மற்றும் சமூகப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் புதிய இழப்பீட்டு அமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார உறுதியளித்தார்.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு வரும்  8 ஆம் திகதி புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான முடிவுகள் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/226916

ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசு ; நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாக ரணில் சாடல்

3 weeks 5 days ago

ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசு ; நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாக ரணில் சாடல்

05 Oct, 2025 | 11:28 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.

எதிரணியினருடன் அரசியல் ரீதியான எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் மேடைகளில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு வரலாற்று உதாரணங்களைக் கொண்டு பலத்த கண்டனம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

1933 ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தபோது, அவருக்கு 50 வீதத்திற்கும் அதிகமான ஆதரவு ,ருக்கவில்லை. ஹிட்லரின் கட்சி வெறும் 44 வீதமான வாக்குகளையே பெற்றது. எனவே, தனது அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஹிட்லர் அன்று எதிர்க்கட்சிகளை அழித்தார்.

கட்சிகளை மாத்திரமல்லாமல் எதிர்க்கட்சி அலுவலகங்களையும் இல்லாதொழித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், செக்கோஸ்லோவியா மற்றும் ஹங்கேரியைக் கைப்பற்ற வேண்டிய தேவை கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. அங்கு சோவியத் படை மிக வலுவாக வேரூன்றி இருந்தது. இருப்பினும் செக்கோஸ்லோவியா நிறுவனரின் புதல்வர் வெளியுறவு அமைச்சகக் கட்டிடத்தில் நான்காவது மாடி ஜன்னலிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த விடயம் அன்றைய எதிர்க்கட்சி பாராளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

ஜனாதிபதியும் அவரது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ,லங்கையில் தற்போது செய்வது என்ன? ஜனாதிபதி அநுரவுக்கு வெறும் 44 வீதமான வாக்குகளே உள்ளன. மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. ,தனைத் தடுக்கவே அவர் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரவின் மற்றொரு முயற்சி நீதித்துறையை அடிபணியச் செய்வதாகும். குறைந்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க எதிர்க்கட்சிகளை ஒழித்தது போலவே, தேசிய மக்கள் சக்தியும் அதே வழியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாகவும், நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார்.

https://www.virakesari.lk/article/226927

ஸ்டாலின், விஜய்க்கு எதிராக போராட்டம் - வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் எச்சரிக்கை

3 weeks 5 days ago

05 Oct, 2025 | 07:07 AM

image

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் மிக விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்குமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார்.

முதலமைச்சரே, நல்லெண்ண அடிப்படையில் வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த 2023ஆம் ஆண்டு மூன்று மகஜர்களை உங்களுக்கு அனுப்பியது. அதற்கு நீங்கள் எதுவித பதிலும் வழங்கவில்லை. ஆனால் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை தூக்கி வைத்து வடக்கு கடற்றொழிலாளர்களை பகைக்கின்ற ஒரு விடயத்தை நீங்கள் செய்கின்றீர்கள்.

கச்சதீவினால் தான் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக உங்களது அரசியல் இருப்புக்காக பொய்யான ஒரு குற்றச்சாட்டை தமிழ்நாட்டிலே நீங்கள் பேசாதீர்கள்.

வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டு அரசுக்கோ எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் பாரிய அளவில் முன்னெடுக்கவில்லை.

தொடர்ச்சியாக இவ்வாறு பேசி தமிழ்நாட்டு மீனவர்களை வடக்கு மீனவர்களுக்கு எதிராக தூண்டுவீர்களாக இருந்தால் வடக்கு கடற்றொழில் சமூகமாகிய நாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம்.

அதுபோல தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை பேசுகின்றார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முதலே, இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனையை சமூகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என்று விஜய்க்கும், சீமானுக்கும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

கச்சதீவு விவகாரத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக ஒருபோதும் வரலாறு இல்லை. உலகத்திலேயே தடை செய்யப்பட்ட, கடல்வளத்தை கருவறுக்கின்ற இரட்டை இழுவைமடி தொழிலைத்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்கின்றனர்.

நீங்கள் இந்த இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு மாற்றுமுறை தொழிலை செய்யுங்கள். இதன்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்கின்றோம்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இலங்கையின் சட்டத்தின்படி, எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது வடக்கு கடற்றில் சமூகத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் தொழில் செய்வது குறித்து சிந்திப்பதற்கு கடற்றொழில் சமூகம் தயாராக இருக்கின்றது.

இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என்பது எமது விருப்பம். அதைவிடுத்து வடக்கு மாகாண மக்களுக்கு சொந்தமான கச்சதீவு குறித்து அரசியல் மேடைகளில் பேசி மீனவர்களை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரதூரமாக இருக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/226902

'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை

3 weeks 5 days ago

'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை

Published By: Digital Desk 1

04 Oct, 2025 | 01:23 PM

image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் இன்று சனிக்கிழமை(04) காலை நடைபெற்றது.

இதன்போது ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் ஓர் விடயத்தைக் கூறுவார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத்துறையின் அமைச்சராக இருக்கும்போது வடக்குக்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எந்தத் திட்டம் வரும்போதும் அதில் வடக்கு மாகாணத்தையே முதன்மைப்படுத்துவார் என்று அவர் கூறுவார். அது உண்மை.

நான் யாழ்ப்பாண மாவட்டச் செயலராக இருந்தபோது குறிகாட்டுவான் வீதிப் புனரமைப்பு மற்றும் இறங்குதுறை புனரமைப்புக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அது கைகூடவில்லை. இப்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றது. இது மிகச் சிறப்பான தருணம். இந்த அரசாங்கம் சொல்லில் அல்ல செயலில் நிரூபித்து வருகின்றது. வடக்கு மாகாணத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன.

பல அமைச்சர்கள் வடக்கு மாகாணம் தொடர்பான விடயங்களை சாதகமாகவே அணுகுகின்றார்கள். அது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவற்றுக்கு மேலாக, நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக முதலில் நியமிக்கப்பட்டேன். அந்தப் பிரதேச மக்களின் வலிகள் தெரியும். அந்தப் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது சிறப்பானது. இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ் மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்திப் பணி 299 மில்லியன் ரூபா செலவில் முதல் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதேநேரம், 800 மில்லியன் ரூபா செலவில் குறிகாட்டுவான் இறங்குதுறையும் மறுசீரமைக்கப்படவுள்ளது. 

அத்துடன், குறிகாட்டுவான் வரையிலான பிரதான வீதியில் 3.2 கிலோ மீற்றர் அடுத்த வருடம் புனரமைக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

01__1_.jpg

01__9_.jpg

01__10_.jpg

https://www.virakesari.lk/article/226871

புதிய அரசியலமைப்பு விரைவில் கொண்டுவரப்படும் - கடற்றொழில் அமைச்சர்

3 weeks 5 days ago

04 Oct, 2025 | 01:12 PM

image

புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் "புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.

புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம்தான் நிறைவடைந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பார்கள்.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்த நாட்டு மக்களுடைய சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில், நீண்டு நிலைக்கக்கூடிய ஒரு சட்டமாக விரைவில் கொண்டுவரப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/226869

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

3 weeks 6 days ago

04 Oct, 2025 | 02:17 PM

image

கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா  வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி   பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டார்.

இப்பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன.  

முதலாம் நாளின் சனிக்கிழமை (04)  முதலாவது அமர்வின் போது  சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது அமர்வின் போது 345, மூன்றாவது அமர்வின் போது 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இரண்டாம் நாள் (05) நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன  பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை,  தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள்   வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.

7__1_.jpg

16.jpg

6__2_.jpg

5__2_.jpg

3.jpg

https://www.virakesari.lk/article/226874

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - பொலிஸ்

3 weeks 6 days ago

Published By: Digital Desk 1

04 Oct, 2025 | 10:02 AM

image

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவல் குறித்து பொலிஸாருக்கு நேரடி தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் முன்னதாக, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் நேற்று வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றிற்கு தொடர்பினை ஏற்படுத்தி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கலாம் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதில் பொதுமக்களின் ஆதரவு பெரிதும் பாராட்டப்படுவதாகவும், பொதுமக்களால் வழங்கப்படும் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் பாடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226852

Telephone Index

https://www.police.lk/?page_id=1301

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

3 weeks 6 days ago

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றததாக மக்கள்  விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று(3) அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது. பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து ஆனது மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது.

பயணிகள் சிரமம்

பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்துள்ளது.

இதனால் குடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்ல வேவண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்! | Vadamaratchi East Push Broken Government Bus

அண்மையில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பேசப்பட்டபோது 750. வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் நல்ல நிலையிலுள்ள பேருந்தை வடமராட்சி கிழக்கிற்க்கான சேவையிலீடுபடுத்துமாறு வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஒருங்கிணைப்பு தலைவருமான றஜீவன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை இதனால் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன.

 இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட வழிவகை செய்யுமாறு நாளை பருத்தித்துறைக்கு வரவிருக்கும் போக்குவரத்து அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://tamilwin.com/

யாழ். இளைஞர்களை நேர்மை மற்றும் ஒழுக்கமிக்க நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது ; ஸ்ரீ பவானந்தராஜா

3 weeks 6 days ago

04 Oct, 2025 | 11:38 AM

image

கல்வி, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், உழைப்பு போன்றவற்றிற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு காலத்தில் பெயர் போனவர்கள். ஆனால் கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கம், தொலைபேசி பாவனை காரணமாக இளைஞர்கள் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்ன நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் - சங்கானை வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (03)  நடைபெற்ற நடைபெற்ற நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அனைவருக்கும் தெரியும். ஒழுக்கமின்மையே இதற்கெல்லாம் காரணம். ஒழுக்கமானது குடும்பத்தில் ஆரம்பித்து, பின்னர் கிராமத்திற்கு பரப்பப்பட்டு, அது நாடு நோக்கி நகர வேண்டும். பழைய அரசாங்கங்களின் செயற்பாடுகளால் அவை தலை மாறி போயிருக்கின்றன. 

கடந்த கால அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை அரசியல்வாதிகள் பெற்று கிளிநொச்சியிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி மதுபானசாலைகளை திறந்து இருக்கின்றார்கள். சாப்பாட்டுக் கடைகளை விட மதுபானசாலைகளே அதிகமாக இருக்கின்றன.

பெரிய ஒரு அரசியல் கட்சியின் ஆதாரவாளர்கள் ஒரு போதைப்பொருள் தொழிற்சாலையையே உருவாக்கும் அளவிற்கு போதைப் பொருட்களை கொண்டு வந்து தெற்கில் வைத்திருக்கின்றார்கள். 

இதனைக் கடந்த அரசாங்கங்கள் கண்டும் காணாமல் தான் விட்டிருந்தன.  ஆனால் எமது ஜனாதிபதி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளார். 

இவ்வாறானவர்கள் உண்மையிலேயே 15-20 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கைது செய்யாமையால்தான் அவர்கள் போதைப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் அளவிற்கு திறமை பெற்றிருக்கின்றார்கள். 

ஒரு அரசாங்கத்திற்கு நிழல் அரசாங்கமாக செயல்படும் அளவிற்கு அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். எனவே அவர்களை அடக்குவது எமது அரசாங்கத்தின் கடமை. அதனை நாங்கள் செய்வோம் என்றார்.

IMG-20251003-WA0046.jpg

IMG-20251003-WA0045.jpg

IMG-20251003-WA0049.jpg

IMG-20251003-WA0048.jpg

IMG-20251003-WA0047.jpg

https://www.virakesari.lk/article/226863

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

3 weeks 6 days ago


மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் செப்டம்பர் 24 அன்று தெரிவித்ததாகவும் கமகே மேலும் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பயணிகள் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த நிலைமை மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1449531

Checked
Sat, 11/01/2025 - 02:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr