ஊர்ப்புதினம்

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்!

3 weeks 1 day ago

Srilanka-Police-1.jpg?resize=720%2C375&s

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்!

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக இலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (23) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குற்றச் செயல்கள் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துச் சட்டத்தின்படி இந்த விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (PCID) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த புதிய விசாரணைப் பிரிவு, பொலிஸ்மா அதிபரின் தலைமையில் பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1444403

உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டும் ; வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை

3 weeks 1 day ago

23 AUG, 2025 | 03:34 PM

image

(எம்.நியூட்டன்)

உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பெய்ரூன் தலைமையிலான குழுவினர், ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (22)  மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். 

தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து முன்னணியில் உள்ளமையை சுட்டிக்காட்டினார். 

மிக நீண்டகால அனுபவம் உள்ள தாய்லாந்து இது தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணம் விவசாய மற்றும் கடலுணவு உற்பத்திகளில் போதிய திறனைக் கொண்டுள்ளபோதும் இரு துறைகளில் விலைத்தளம்பல் இருக்கின்றது என்று ஆளுநர் குறிப்பிட்டார். 

இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமையும் இருக்கின்றது என்றும் தெரிவித்தார். இதை மாற்றியமைப்பதற்கு உற்பத்திப் பொருட்கள் அதிகளவில் கிடைக்கப்பெறும்போது அதை பதப்படுத்துவதற்கோ அல்லது பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கோ உரிய வாய்ப்புக்கள் இல்லை என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். 

இந்த விடயத்தில் அனுபவமுள்ள தாய்லாந்து முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதன் ஊடாக பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார். 

இந்த விடயத்தை சாதகமாக அணுகுவதாக தூதுவர் பதிலளித்தார். அத்துடன் வேலை வாய்ப்பு தொடர்பான விடயத்தில், தாய்லாந்தில் பல இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்ட தூதுவர் வடக்கு மாகாண இளையோரும் அந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். 

மேலும், சுற்றுலாத்துறை தொடர்பிலும் தாய்லாந்து தூதுவர் கவனம் செலுத்தினார். அதற்கான உட்கட்டுமானங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார். 

வடக்கு மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த கால போர் காரணமாக அந்த மாவட்டம் மேலெழுந்து வருவதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். 

போதுமான வளங்கள் அந்த மாவட்டத்திலுள்ளபோதும் அதைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளமையும் தெளிவுபடுத்தினார். 

IMG-20250823-WA0008.jpg

IMG-20250823-WA0012.jpg

IMG-20250823-WA0010__1_.jpg

https://www.virakesari.lk/article/223176

"நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

3 weeks 2 days ago

23 AUG, 2025 | 02:16 PM

image

(எம்.நியூட்டன்)

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்"  கையொப்பப் போராட்டம்  சனிக்கிழமை (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.

தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம்" எனும்,  கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம்  காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி  பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர்  ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின்  ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும்.  

இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250823-WA0027.jpg

IMG-20250823-WA0014.jpg

IMG-20250823-WA0024.jpg

IMG-20250823-WA0016.jpg

IMG-20250823-WA0015.jpg

IMG-20250823-WA0018.jpg

https://www.virakesari.lk/article/223185

சிறுவர் பாதுகாப்பு வாரம் - சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு நடைபவனி

3 weeks 2 days ago

சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடைபவனி

23 AUG, 2025 | 11:18 AM

image

முல்லைத்தீவு முத்தையன்கட்டு -  ஜீவநகர் கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக  வெள்ளிக்கிழமை (22) சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. 

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு "நாம் சிறுவர் எம்மை காப்பீர்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா ஆரம்பித்து வைத்திருந்தார்.

முத்தையன்கட்டு ஜீவநகர்  பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக  ஆரம்பித்த குறித்த பேரணியானது நடைபவனியாக சென்று ஜீவநகர் சமாதான சுவிஷேச தேவாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது. 

ஜெபஆலயமிஷன் திருச்சபையின் கீழ் இயங்கும் பெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றிருந்தது. 

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை பாதுகாப்போம் , சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மன்னிப்பு இல்லை, குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம், அமர்த்தாதே அமர்த்தாதே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புவோம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது.  

குறித்த பேரணியில் முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா, வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் காலேப் மற்றும் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1000495455.jpg

1000495451.jpg

1000495452.jpg

1000495440.jpg

1000495456.jpg

1000495444.jpg

1000495443.jpg

https://www.virakesari.lk/article/223160

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 weeks 3 days ago

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Published By: Vishnu

23 Aug, 2025 | 12:52 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

காணிகள் விடுவிப்பு,காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும்   தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம்  தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு , இரண்டு மாதங்களுக்குள் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும்.

அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது ஒரு சிலர் கூறுவது போல இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக் குறியாகி இருக்கின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி யுள்ளது.

 1981 ஆம் ஆண்டு நாட்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்று 16, 18இலட்சம்  மக்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள். 

தற்போது அங்கு ஆறு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயம். அன்று 11 பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள். அடுத்து அதுவும் குறைவடையலாம். அந்த வகையில் அரசியல் ரீதியான இருப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.

அந்த  மக்களின் வெளியேற்றமே இந்த கேள்விக்குறிக்கான காரணம். கடந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். அதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மக்கள் இழக்கப்பட்டுள்ளார்கள். 

இப்போதும் மாணவர்கள், புத்திஜீவிகள் அங்கிருந்து வெளியேறும் மனநிலை அதிகரித்திருக்கின்றது.

ஒரு காலத்தில் கல்வி ரீதியில் பெரும்  முன்னேற்றமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்கியது. எனினும் கடந்த 10 வருடங்களைப் பார்க்கும் போது கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. இம்முறை அது ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளது. 

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் ஆற்றப்படவில்லை. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணையை ஸ்ரீதரன் எம்பி சபையில் முன் வைத்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வெளியேறுவார்களானால் இன்னும் சில காலங்களில் மக்கள் இல்லாத யாழ்ப்பாணமே இருக்கும். இந்த நிலைமையில் இருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் சிந்திக்கின்றோம். அதற்காகவே அரசாங்கம் வடக்கிற்கான துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது. 

அந்த வகையில் பல திட்டங்கள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று தொழில்பேட்டைகளை அங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  காங்கேசன்துறை, பரந்தன்,மாங்குளம் பகுதிகளில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையம் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கை தரும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 

இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழவேண்டும். அதன் பின்னரே சுய நிர்ணய உரிமைக்காக  போராடுவதா அல்லது தனி நாட்டுக்காக போராடுவதா என்பதை தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும் என்றார். 

https://www.virakesari.lk/article/223146

யாழில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

3 weeks 3 days ago

செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்பப்பாண மாவட்ட செயலகத்தின் கச்சேரி - நல்லூர் வீதியின் பக்கமாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கென பிரத்தியேகமான கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

வாக்குறுதியளித்த ஜனாதிபதி

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்று நிறுவப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

யாழில் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம் | Passport Distribution Begins In Jaffna September

இதேவேளை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் யோசனை சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/passport-distribution-begins-in-jaffna-september-1755849582

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொல்லை சட்ட ஆவணங்களில் சேர்க்கத் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - விஜித்த ஹேரத்

3 weeks 3 days ago

22 AUG, 2025 | 04:17 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (22)  நடைபெற்ற  அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மலையக மக்கள் பிரத்தியேக கலாச்சாரங்களை கொண்ட மக்கள்  என்று ஏற்றுக் கொண்டுள்ளோம். அது எங்களின் கொள்கையாகும். ஹட்டன் பிரகடனத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி அந்த மக்கள் மலையக தமிழ் மக்கள் என்று இன்றைய பிரேரணையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் அவ்வாறு இந்த மக்களை அழைப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்ததாக சட்ட ஆவணங்களிலும் இந்த வசனம் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்காக சில சட்டத்திருத்தங்களை  மேற்கொள்ளவுள்ளோம். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் இந்த வசனத்தை பயன்படுத்த தேவையான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம்.  சில தரப்பினர் இணங்காமல் இருந்தாலும் அவர்களையும் இணங்கச் செய்து அதனை செய்வோம்.

மலையக மக்கள் இலங்கையர்களே. அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் உரிமைளை பாதுகாக்க வேண்டியது எங்களின் பொறுப்பாகும். அவர்களுக்கென காணிகள்,வீடுகள் இருக்க வேண்டும். அத்துடன் சிறந்த கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதன்படியே ஹட்டன் பிரகடனத்தை நாங்கள் முன்வைத்தோம். இவர்களே இந்த நாட்டில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/223118

"கோட்டாபய ஒரு கொடுமைக்காரன்"? - ரிஷாத் அதிரடி பேச்சு

3 weeks 3 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில்தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

https://adaderanatamil.lk/news/cmemsee2i0015qpu7mprjjq6q

சத்துருக்கொண்டான் படுகொலை : புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்

3 weeks 3 days ago

சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம் 

22 AUG, 2025 | 03:37 PM

image

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG_6276.JPG

மட்டக்களப்பு மாநகர சபையின் 3வது மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (21) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரி, புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரேரணை ஒன்றை கொண்டுவந்து முன்வைத்தார்.

அந்த பிரேரணையின்படி, 

1990.9.9 அன்று இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை என்பது இந்த மாவட்டத்தில் பாரிய தமிழினப் படுகொலை நடந்தேறியது. குறிப்பாக யுத்த காலப்பகுதிகளிலே எங்களுடைய மாவட்டத்தில் அப்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் சத்துருக்கொண்டான் கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நகரில் தஞ்சமடைந்து முகாம்களில் தங்கியிருந்தனர்.

இவர்கள் பகலில் தமது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வந்த நிலையில், 1990-9-9 அன்று மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கிருந்த சிறியோர் தொடக்கம் முதியோர் வரை 186 பேரை ஒன்றுகூடல் என தெரிவித்து சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று, அங்கே, இராணுவத்தினருடன் ஊர்காவல் படையினர் இணைந்து இராணுவ முகாமின் தளபதி வர்ணகுலசூரிய என்பவரின் தலைமையில் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.

இந்த படுகொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை குழுவிற்கு தப்பி வந்தவர் உட்பட உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் சாட்சியங்கள் அளித்து, இந்த படுகொலை நிரூபிக்கப்பட்ட படுகொலையாக காணப்பட்டது.

இந்த படுகொலை இடம்பெற்று, எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி 35 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த படுகொலைக்கான நீதி இதுவரை மறுக்கப்பட்டது. இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை அனுஷ்டிக்க அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபிக்கு வரும்போது பொலிஸார், இராணுவத்தினர் சுற்றிவளைத்து அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. 

இருந்தபோதும் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி தற்போது செம்மணி புதைகுழி மற்றும்  ஊழல் மோசடிகளை அழிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் அதேபோல் ஜ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்து செம்மணிக்குச் சென்று இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார்.

IMG_6278.JPG

ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். இருந்தபோதும் இந்த படுகொலையில் நானும் இறந்திருக்க வேண்டியவள். அப்போது எனக்கு 4 வயது. அன்றைய தினம் எனது பெற்றோர்  சுற்றிவளைப்பில் முதல் ஒருசில மணித்தியாலத்துக்கு முன்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி நகரிலுள்ள நலன்புரி முகாமிற்கு சென்றுவிட்டதால் தப்பிக்கொண்டேன்.

எனவே, உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி இன்று தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடம் தோண்டப்பட வேண்டும் என்ற இந்த தீர்மானம் எமது உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு இந்த தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், ஜ.நா மனித உரிமை ஆணையம், அனுப்பப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் என பிரேரணையை முன்வைத்தார்.

இந்த பிரேரணைக்கு சபையில் இருந்த முழு உறுப்பினரது ஆதரவு வழங்கப்பட்டு, சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

WhatsApp_Image_2025-08-22_at_10.04.35.jp

https://www.virakesari.lk/article/223114

பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

3 weeks 3 days ago

Human-Rights-Watch.GettyImages.jpg?resiz

பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள்  பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான, கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது, கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும்
இந்த அச்சுறுத்தல்கள், குறையவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

https://athavannews.com/2025/1444285

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!

3 weeks 3 days ago

images-5.jpg?resize=300%2C168&ssl=1

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!

நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும்  முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று  கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”” குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல. குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1444246

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

3 weeks 3 days ago

New-Project-211.jpg?resize=750%2C375&ssl

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இது குறித்து மேலும் உரையாற்றிய அவர்,

அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம்.

இந்தக் குழு பலமுறை கூடி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடர்புடைய திருத்தங்கள் தொடர்பான பணிகள் நிறைவடையும்.

அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்த வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டம் அடுத்த மாதம் இரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

https://athavannews.com/2025/1444219

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்பு!

3 weeks 3 days ago

0d018a3c-f10b-4adc-9a55-8a3e088e5862-1.j

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக, 30 துப்பாக்கிகள் மீட்பு!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0d018a3c-f10b-4adc-9a55-8a3e088e5862.jpg?resize=600%2C450&ssl=1 28f6889a-35a0-4cf9-a643-c3604995c15c.jpg?resize=451%2C600&ssl=1 256d74c3-5842-43a6-aa97-8cd4681e9558-1.jpg?resize=600%2C450&ssl=1 256d74c3-5842-43a6-aa97-8cd4681e9558.jpg?resize=600%2C450&ssl=1 33256f9b-25b8-4938-9878-c86e637da2a0.jpg?resize=451%2C600&ssl=1 92006c96-042f-4fa3-aa70-80c3e5f603b0.jpg?resize=451%2C600&ssl=1 756991d8-6316-4f7f-941d-c9bf22daf39a.jpg?resize=451%2C600&ssl=1 a1bd7c74-074e-4510-916e-3838d604c9d6.jpg?resize=451%2C600&ssl=1 a46ca026-105f-4b15-87f8-019deda0dc91-1.jpg?resize=451%2C600&ssl=1 a46ca026-105f-4b15-87f8-019deda0dc91.jpg?resize=451%2C600&ssl=1 bbffa470-be0b-4b98-ab95-c3199e1aca30.jpg?resize=451%2C600&ssl=1 d0fd878d-cb65-460e-8eef-98cabe5ca7f7.jpg?resize=450%2C600&ssl=1

https://athavannews.com/2025/1444233

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா!

3 weeks 3 days ago

IMG_7536.jpeg?resize=750%2C375&ssl=1

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன.

நாளைய தினம் சனிக்கிழமை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_7540.jpeg?resize=400%2C600&ssl=1 IMG_7539.jpeg?resize=600%2C400&ssl=1 IMG_7537.jpeg?resize=600%2C400&ssl=1 IMG_7536.jpeg?resize=600%2C400&ssl=1 IMG_7538.jpeg?resize=600%2C400&ssl=1 3-6-1.jpg?resize=600%2C337&ssl=1 3-5-3.jpg?resize=600%2C345&ssl=1 3-3-1.jpg?resize=600%2C303&ssl=1 3-2-1.jpg?resize=600%2C318&ssl=1 3-1-2.jpg?resize=600%2C322&ssl=1

https://athavannews.com/2025/1444272

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

3 weeks 3 days ago

Published By: DIGITAL DESK 3

22 AUG, 2025 | 02:19 PM

image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223100

பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

3 weeks 3 days ago

குடும்பங்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன; பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

21 AUG, 2025 | 06:01 PM

image

(நா.தனுஜா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் பாதுகாப்புப் படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன், மறுசீரமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பிரயோகிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்கும் ஐ.நா கொண்டிருக்கும் உரிமையை மனித உரிமைகள் பேரவை மீளப்புதுப்பிக்கவேண்டும்.

அதேபோன்று மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கத்தக்க கொள்கைகள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், அதனை முன்னிறுத்தி, குறிப்பாக கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டளவிலான மாற்றமே அடையப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புகளைப் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இன்னமும் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவரும் அதேவேளை, இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளன.

இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பக்கூடியவகையில் அண்மையில் சிறுவர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோரின் மனித எச்சங்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதிக்குக் கடந்த ஜுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அதுமாத்திரமன்றி இம்மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரக்கூடிய தடயவியல் நிபுணர்கள் உள்ளடங்கலாக சுயாதீன வல்லுனர்களின் பங்கேற்புடன் வலுவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அதேவேளை யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைக் கண்காணித்து ஒடுக்க முற்படும் பொலிஸ் மற்றும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளின் ஆளுகை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் குறையவில்லை என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/223038

யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

3 weeks 3 days ago

யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

22 Aug, 2025 | 11:10 AM

image

பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வருமாறு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை  (25) கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (22) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட உள்ளது.

01) வின்சன்டி போல் டக்ளஸ் போல் நகர பிதா பருத்தித்துறை நகர சபை.  

02) தம்பிராசா சந்திரதாஸ் தலைவர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்.  

https://www.virakesari.lk/article/223080

நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது!

3 weeks 3 days ago

நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது!

adminAugust 22, 2025

நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள்  பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (21.08.25)  வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை, அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர்.

அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்த காவற்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் காவற்துறையினர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் காவற்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

https://globaltamilnews.net/2025/219514/

தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்!

3 weeks 3 days ago

தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்!

adminAugust 22, 2025

சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள்   பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என கூறி , அதற்கான துண்டு சீட்டுக்களும் ஒட்டப்பட்டு ,   சிற்றிக் அமிலம்   கரைசலை 4 லீற்றர் கொள்கலன்களில் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வந்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர்  செபமாலை பிறின்சன் அவற்றில் இருந்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்டு வந்த சிற்றிக் அமிலம் கொள்கலன்களை மீட்டு , நிறுவனத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு  தாக்கல் செய்தார்.

அதனை அடுத்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்ட சிற்றிக் அமிலம் கொள்கலன்களை , அரச பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு மன்று பணித்தது.

பகுப்பாய்வு அறிக்கையில், அவ்கரைசல்  தனியே  சிற்றிக் அமிலம் என்பதுடன் முழுவதும் கிருமித்தொற்றுடனும் மனித பாவனைக்கு உகந்ததல்லாதகாவும் இருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, குறித்த நிறுவன உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

இயற்கை பழச்சாறு என விற்கப்பட்ட பானங்கள் இந்த கரைசலை பயன்படுத்தியே தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/219516/

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

3 weeks 3 days ago

download.png?resize=750%2C375&ssl=1

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு,  கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை  விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாகும். அத்துடன், 165 மில்லியன் ரூபா செலவில் யாழ். கொழும்புத் துறையிலுள்ள துறைமுகத்தையும் நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத குறைப்பாடு காணப்படுகின்றது. வாழைச்சேனை துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

ஏனெனில் ஒலுவில் துறைமுகம் இன்று செயல் இழந்து காணப்படுகின்றது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின்றி கட்ட வேண்டும் என்பதற்காகவே குறித்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாழைச்சேனை துறைமுகத்தை நோக்கியே மீனவர்கள் படையெடுத்து வருகின்றனர். எனவே, வாழைச்சேனை துறைமுகத்தை மேலும் விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 1, 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மன்னார், பேசாலையில் இறங்குத்துறையை அமைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேசாலையில் வாழும் மக்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் குறைப்பாடுகளை தீர்த்து, பேசாலையிலும் துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ். குருநகர் பகுதியில் இறங்குத்துறைமுகமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது. இப்பணி முடிந்த பின்னர் நிதி ஒதுக்கப்படும்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1444114

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr