ஊர்ப்புதினம்

யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்!

2 weeks 2 days ago

யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்!

716019339.jpg

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி  நடைபெற்றது.


அக் கலந்துரையிடலில்  யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் அனுமதியுடன் அறவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாம் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வது தொடர்பில் எமது தொழிற்சங்களை அழைத்துக் கலந்துரையாடவேண்டும் என்றார். இதன் பின்னர் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர். புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வது தொடர்பில் முதலில் கள ஆய்வை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் , சி.சிறிதரன் மற்றும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

https://newuthayan.com/article/யாழ்._மத்திய_பேருந்து_நிலையக்_கடைகள்_மூலம்_இ.போ.ச_ரூ.9.45_இலட்சம்_வருமானம்!

பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை!

2 weeks 2 days ago

பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை!

கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட ஏராளமான சொத்துக்களைக் கைப்பற்ற தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 மற்றும் 2024 க்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களின் நிதி மதிப்பு 3902 கோடி ரூபா என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்த சொத்துக்களைக் கைப்பற்ற இலங்கை பொலிஸார் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளின் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களின் நிதி மதிப்பு குறித்த மதிப்பீட்டை முன்வைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் 354 பவுண் தங்கம், 72 வாகனங்கள், 35 வீடுகள்/சொத்துக்கள், 37 ஏக்கர் நிலம் மற்றும் சுமார் அறுபத்தேழு மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கத்தின் வசம் கொண்டு வருவதற்கு பொலிஸார் தற்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/பாதாள-குழு-முக்கியஸ்தர்க/

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்!

2 weeks 2 days ago

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்!

adminOctober 15, 2025

Sivaji.jpg

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.10.25) சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.


வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய தண்டபாணிக தேசிகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது , வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக எம். கே சிவாஜிலிங்கத்தின் பெயர் காணப்பட்டது

தேர்தல் முடிவுகளின் படி, பட்டியல் உறுப்பினராக பெண் உறுப்பினர்களையே தெரிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமையால்  தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக சிவாஜிலிங்கம் உறுப்பினராக முடியவில்லை.

இந்நிலையில் , வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ததன் ஊடாக அவரது வெற்றிடத்திற்கு , புதிய உறுப்பினராக சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/221521/

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

2 weeks 2 days ago

New-Project-175.jpg?resize=750%2C375&ssl

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இந்தப் பொதிகளில் மொத்தம் 670 கிலோ ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்), 156 கிலோ ஹெராயின் மற்றும் 12 கிலோ ஹாஷிஸ் ஆகியவை இருந்ததாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தப் போதைப்பொருள் தொகை, ‘உனகுருவே சாந்த’ என்று அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று கப்பல்கள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருள் தொகை கடத்த முயற்சிப்பது குறித்து கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி, கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ், தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டன் விளைவாக இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1450402

செம்மணி மனிதப்புதைகுழி: அடுத்த வழக்கு விசாரணை வரை குற்ற விசாரணைப்பிரிவினர் நாளாந்தம் கண்காணிப்பர் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

2 weeks 3 days ago

Published By: Vishnu

14 Oct, 2025 | 09:24 PM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அம்மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனவும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.  

செம்மணி மனிதப்புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் திங்கட்கிழமை (13) குறித்த பகுதிக்குக் களவிஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது செம்மணி மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற பகுதிகள் உரியவாறு மூடப்பட்டு, பாதுகாக்கப்படாததால் தற்போது பெய்துவரும் மழையினால் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி இருந்தமை அவதானிக்கப்பட்டது.

செம்மணி சதுத்து நிலத்தையும், களிமண் தரையையும் கொண்ட பகுதியாக இருப்பதனால் தொடர்ச்சியாக மழை பெய்தல், அப்பகுதி முழுவதும் வெள்ளநீரில் மூழ்கிவிடும். ஆகையினால் இன்னும் ஒருசில மாதங்களுக்கு அப்பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்வர் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று அடுத்தகட்ட அகழ்வுப்பணிகளுக்காக 19,106,000 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு நீதியமைச்சு ஒப்புதல் அளித்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தற்போதைய காலநிலை மற்றும் ஏனைய மனிதப்புதைகுழி வழக்குகள் உள்ளிட்ட தொடர் பணிகள் போன்றவற்றின் காரணமாக விசாரணை அதிகாரிகள் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைக் கட்டம் கட்டமாகப் பிரித்திருப்பதாக விளக்கமளித்துள்ளது.

https://www.virakesari.lk/article/227739

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!

2 weeks 3 days ago

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!

பலரிடம்  வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி  கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!

யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!

2 weeks 3 days ago


922641545.jpeg

யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன்

யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். 

இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.  

யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!

கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல - கோட்டாபய

2 weeks 3 days ago

4 Oct, 2025 | 01:04 PM

(  இணையத்தள செய்திப் பிரிவு )

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும்.

அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர்.

அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமும் வழங்கி உள்ளேன்.

அந்த கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ஜி ராஜபக்ஷ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணத்தில் எனது கையொப்பம் இல்லை. அந்த ஆவணத்தில் உள்ள எழுத்துக்களும் தெளிவற்று காணப்படுகிறது. 

எனவே கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல என நான் உறுதியாக கூறுகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.  

கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல - கோட்டாபய | Virakesari.lk


கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர்

2 weeks 3 days ago

14 Oct, 2025 | 05:28 PM

image

மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையில்  செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. 

இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக்கி தரப்படவில்லை. குறித்த பிரச்சினைக்கு எவ்வித தீர்வு கிடைக்கவில்லை.சின்னக்கடை வட்டாரத்தில் ஒரு இடத்திலேயே அகழப்படுகின்ற குப்பைகளை கொட்டி வந்தோம்.

அவ்விடத்தில் பாரிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவ்விடத்தில் குப்பை கொட்டுவது உடனடியாக நிறுத்தப் பட்டுள்ளது.

மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைகளை கொட்ட ஒரு இடம் ஒதுக்கி தருமாறு, மாவட்ட செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்களம்  வன பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

மக்களின் தேவைகளுக்காக இடம் ஒதுக்கி தர முடியாத நிலையில் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இடத்தை ஒதுக்குகிறார்கள். 

ஆனால் மன்னார் மக்களின் தேவைக்காக இடம் ஒதுக்க மறுக்கின்றார்கள்.குப்பை அகழ்வு செய்தாலும், கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை காணப்பட்டுள்ளது.

இதனால்  திங்கட்கிழமை (13) அகழ்வு செய்யப்பட்ட குப்பைகள் வாகனத்துடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (14) குப்பை அகழ்வு செய்யப்படவில்லை. நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மன்னாரில் கழிவு அகற்றல் இடம் பெறாது. 

இது வரை இடம் ஒதுக்கி தரவில்லை. மன்னார் மக்களின் தேவைகளுக்காக 2 ஏக்கர் நிலப் பரப்பை வழங்க முடியாத வன பாதுகாப்பு திணைக்களம் மன்னார் மக்களுக்கு இனியும் தேவைதானா? என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் 30 வருட யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து ஒரு அமைதியான சூழல் இந்த மன்னாரில் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு இவன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் போன்றவை காரணமாக அமையப் போகிறது.

கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எக் காரணம் கொண்டும் அவ்விடத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்றார். 

குறித்த பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,.

மன்னார் நகர சபை பிரிவில் கழிவகற்றல் பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகின்றது.ஏற்கனவே பாப்பாமோட்டை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மன்னார் நகர சபையினர் தமது பிரிவில் அகழ்வு செய்யப்பட்ட குப்பைகளை கொட்டி வந்தனர்.

குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக கொழும்பை தளமாக கொண்ட சூழலியல் அமைப்பு மேன்முறை நீதிமன்றத்தில் வளக்கு தொடுத்ததன் காரணமாக குறித்த இடத்தில் தற்போது கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மன்னார் நகர சபையினர் அண்மைக்காலமாக மன்னார் மையப்பகுதியில் ஒரு இடத்தில் கழிவுகளை கொட்டி வந்தார்கள். 

ஆனால் குறித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதோடு,சூழல் மாசடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால்  திங்கட்கிழமை (13) பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் குறித்த கழிவுகள் கொட்டும் இடத்தையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் குப்பை போட இடம் இல்லாத காரணத்தால் மன்னார் நகர சபையினர் கழிவுகளை சேகரித்த வாகனங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தியுள்ளனர்.

தற்போது சேகரிக்கும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சனை எழுந்துள்ளது.கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் கூடுதலான நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களம்  வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழ் இருப்பதன் காரணத்தினால் அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து அடையாளம் கண்டு அவ்விடத்தில் கழிவுகளை கொட்ட தீர்மானிக்கப்பட்ட போதும் கலப் பரிசோதனையின் போது இணக்கமான நிலை ஏற்படவில்லை.

வன பாதுகாப்பு திணைக்களத் தினால் முன் மொழியப்பட்ட இடத்தை நாங்கள் அடையாளம் காண முற்பட்ட போது குறித்த இடம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இடமாகவும், குறித்த இடம் மக்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட இடமாகவும் காணப்படுகின்ற மையினால் குறித்த இடம் பொறுத்தமற்ற இடமாக காணப்படுகின்றது.

இதனால் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சினை தற்போது காணப்படுகிறது.குறித்த பிரச்சினை குறித்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக சகல தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுவரை தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.தற்போது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு பகுதி அதில் ஏற்கனவே கழிவுகள் கொட்டப்படும் இடமாக காணப்படுகின்றது. குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அடையாளப்படுத்தப்பட்ட இடமாக உள்ளது.

அதை விட பாப்பாமோட்டை க்கு அருகில் உள்ள இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தற்போது உரிய தரப்பினர் ஊடாக அந்த இடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

குறித்த இடங்களை பார்வையிட்டு இனக்கமான முறையில் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தரமான குப்பைகளை கொட்ட முடியும்.

தற்போது மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளமையினால் மாவட்ட செயலக வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார். 

கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர்  | Virakesari.lk

ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.

2 weeks 3 days ago

ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.

செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM

ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.

வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை.

வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை  போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி திணைக்களத்தினால்  சேவையின் தேவை கருதிய  இடமாற்றத்தில் ஆசிரியர்கள் பழிவாங்கலால் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடையம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவதாக பதில் வழங்கினர்.

https://jaffnazone.com/news/51285

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2 weeks 3 days ago

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

14 Oct, 2025 | 12:11 PM

image

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14)  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு , யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டனர்.

நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றதோடு, நாளைய தினம் புதன்கிழமை குறித்த குழுவினர் நெடுந்தீவுக்கு செல்லவுள்ளனர். 

4__10_.jpg

4__9_.jpg

4__7_.jpg

4__5___1_.jpg

4__6___1_.jpg

4__1_.jpg

4__2___1_.jpg

4__4___1_.jpg

https://www.virakesari.lk/article/227684

திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம்

2 weeks 3 days ago

திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம்

884562549.jpg

தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப் பொலிஸாரும் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை காலை பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவத்தை நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றுக் காலை 6.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட பிக்குமார்கள், சிங்கள் மக்கள். பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக மாற்றுப் பாதை ஊடாக விகாரையை நோக்கிச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டுப் பின்னர் அதேபாதையால் திரும்பிச் சென்றனர்.

போராட்டம் காரணமாகத் தையிட்டி திஸ்ஸவிகாரைச் சூழலிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரையில்_கயல்_மஹா_உற்சவம்;_காணி_உரிமையாளர்கள்_எதிர்த்துப்_போராட்டம்

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!

2 weeks 3 days ago

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா தனது பயண ஆலோசனை மூலம் தெரிவித்துள்ளது.

https://www.samakalam.com/இலங்கை-வரும்-வெளிநாட்டவ-2/

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம்

2 weeks 3 days ago

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம்

adminOctober 13, 2025

semmani.jpg?fit=1170%2C878&ssl=1

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது , அகழ்வு பணிக்காக பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோர பட்ட நிதியை நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்று நேரில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மன்றில் தெரிவிக்கப்பட்டு , இன்றைய தினம் மாலை 03 மணியளவில் புதைகுழி பகுதிக்கு நீதிபதி தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது, யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக புதைகுழி காணப்படும் இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் , அப்பகுதிகள் சதுப்பு நிலமாகவும் காட்சியளித்தன.

அதனால் , அகழ்வு பணிகளை தற்போது முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பில் தீர்மானிக்க எதிர்வ்ரும் 03ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 240 மனித என்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 239 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட 45 நாட்கள் நிறைவடைந்தமையால் , அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் , புதைகுழி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் மற்றும் நிபுணத்துவ அறிக்கைகளின் பிரகாரம் அப்பகுதியில் மேலும் மனித என்பு கூட்டு எச்சங்கள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதனால் , குறித்த பகுதியில் மேலும் அகழ்வு பணிகளை முன்னெடுக்க 08 வார கால பகுதி அனுமதிக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் கோரியதன் அடிப்படையில் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டை மன்றில்  சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டதை அடுத்து , பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு , தற்போது நீதி அமைச்சினால் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

semmani76.jpg?resize=800%2C600&ssl=1

https://globaltamilnews.net/2025/221463/

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்

2 weeks 3 days ago

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்

adminOctober 13, 2025

sankupitty.jpg?fit=860%2C460&ssl=1

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான  சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் போது குறித்த பெண்ணின் தலையில் பலமாக  தாக்கப் பட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதுடன் , முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிய கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகிறது.

அவரது நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் ,  ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அறிக்கையின் பிரகாரம் பெண்ணின் முகத்தில் எரிய ஊட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை குறித்த பெண் தனது கணவருக்கு வவுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்றதாகவும் , வீட்டை விட்டு அவர் செல்லும் போது சுமார் 10 பவுண் நகைகளை அணிந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சடலமாக மீட்கப்பட்ட வேளை அவரது சடலத்தில் நகைகள் எவையும் காணப்படவில்லை. குறித்த கொலை சம்பவம் நகைக்காக மாத்திரம் நடைபெற்றதா ? அல்லது வேறு பின்னணிகள் உள்ளனவா என பூநகரி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை குறித்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு  உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாதுள்ளதாகவும் ,  சடலம் நீண்ட நேரம் நீரில் மிதந்தமையால் அவற்றை உறுதியாக கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2025/221460/

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 3 days ago

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சஞ்சீவ படுகொலை

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். 

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது | Ishara Sevvanthi Arrested Ganemulla Sanjeewa

இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Tamilwin
No image previewஇஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது - தமிழ்வின்
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தே...

இலங்கை, பூட்டான், நேபாளத்துக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதி ! - இந்திய ரிசர்வ் வங்கி

2 weeks 4 days ago

Published By: Digital Desk 3

13 Oct, 2025 | 05:05 PM

image

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகள், 2018-ல் முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம், 1999 இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் (அத்துடன் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளும்) இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்கலாம்.

இந்தக் கடன் வழங்குதல் எல்லை தாண்டிய வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காக (cross-border trade transactions) அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இலங்கையில் உள்ள வணிகங்களுக்குக் கடன் பெறுதலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடன்கள் இந்திய ரூபாயில் வழங்கப்படுவதால், இலங்கை வணிகங்கள் அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் குறைத்துக்கொள்ள முடியும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவும்.

https://www.virakesari.lk/article/227631

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது - ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!

2 weeks 4 days ago

13 Oct, 2025 | 02:40 PM

image

செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது. 

செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள் ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை, அவ்வாறு வெளிப்படுவது, படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

இதனாலேயே, நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு ஞாயிற்றுக்கிழமை (12) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கு, அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

செம்மணியில் கிரிசாந்தி கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் தவிர்க்க முடியாமல் விசாரணைகளை முன்னெடுத்தது.

இவ்வழக்கில் இராணுவச் சிப்பாய் சோமரட்ண ராஜபக்ச சாட்சியமளித்தபோது தங்களால் 400பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் புதைகுழிகளைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியபோதும் புதைகுழிகளைத் தொடர்ந்து அகழ்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. அதற்குவேண்டிய போதுமான அழுத்தங்களை எமது தலைமைகளும் அரசாங்கத்துக்குக் கொடுக்கவில்லை. இப்போது, சிந்துபாத்தி மயானத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அகழப்பட்ட இடத்தில் தற்செயலாக வெளிப்பட்ட எலும்புக்கூடே இதுவரையில் இருநூறுகளுக்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கான கதவுகளை முள்ளிவாய்க்கால் பேரவலம் திறந்து விட்டிருந்தது. ஆனால், அவற்றைத் தமிழ்த் தலைமைகள் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசாங்கத்துக்குச் சர்வதேச அரங்கில் பிணையெடுத்துக் கொடுக்கும் வேலைகளிலேயே ஈடுபட்டன. இப்போது, இனவழிப்பின் சாட்சியங்களாக செம்மணிப் புதைகுழிகளில் இருந்து

இருநூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பு நிகழ்ந்தது என்பதற்கான சாட்சிகள் பலர் இன்னமும் உள்ளனர். அவர்களால் பயத்தின் காரணமாகத் தங்களை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால், உயிருள்ள அந்த சாட்சியங்களைவிட உயிர் இல்லாத எலும்புக்கூடுகள் வலுவான சாட்சியங்களாக இன்று எழுந்து நிற்கின்றன. காலம் எங்களுக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்பையாவது எமது தமிழ்த் தலைமைகள் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

03__1_.jpg

01.jpg

06__1_.jpg

08.jpg

09__1_.jpg

07__1_.jpg

https://www.virakesari.lk/article/227614

இணைய நிதி மோசடிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2 weeks 4 days ago

13 Oct, 2025 | 11:57 AM

image

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார்.

இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையாள அட்டை விபரங்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227594

மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம்

2 weeks 4 days ago

மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம்

திங்கள், 13 அக்டோபர் 2025 06:05 AM

மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம்

மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன.

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சியின் முன்னாள் எம். பி.க்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாணசபை முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர் . இதுபற்றிக் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. 

கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பி.க்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பி.க்கள் போட்டியிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

https://jaffnazone.com/news/51231

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr