ஊர்ப்புதினம்

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர் அநுர கருணாதிலக விஜயம்!

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2   18 JAN, 2025 | 12:41 PM

image

கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு  நகர அபிவிருத்தி,நிர்மாணத்துறை, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைசசர் ரி.பி சரத் ஆகியோரின் விஜயம் நேற்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.

இதன் போது, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் நீர் வழங்கல் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் (WaSSIP கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும், அதன் செயற்பாடுகளையும் அமைச்சர், பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன், மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர், உதவி பொது முகாமையாளர், பொறியியலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

WhatsApp_Image_2025-01-18_at_10.26.41_6a

WhatsApp_Image_2025-01-18_at_10.26.40_a5WhatsApp_Image_2025-01-18_at_10.26.38_64

https://www.virakesari.lk/article/204139

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா

3 months 1 week ago

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா 18 Jan, 2025 | 05:13 PM
image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை (18) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இதில் பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் சுனில் செனவி, கடல் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் சரோஜா போல் ராஜ் பிரதி அமைச்சர் கமகதர திசாநாயக்க, பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின்   யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ஶ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்டோர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

d2662f82-4207-44e4-9371-aa5625bb6333.jpg

ace64d6f-030b-4dae-b462-4bcc71133f15.jpg

5c043103-51d2-487e-8406-c98423c735b5.jpg 

IMG_5996.jpeg

1a868ddb-a81e-40b7-9eb5-654faafa3871__1_
 

https://www.virakesari.lk/article/204173

அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது

3 months 1 week ago

அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது
அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது

அறுகம்பேவில் தாக்கல் நடத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பயங்கரவாத விசாரணை பிரிவு, இந்த விடயத்தை தெரிவிதுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி  சிறையில் இருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் ஊடாக இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது.

அறுகம்பே விவகாரத்துடன் தொடர்புடைய 7 பேர் கைதுசெய்யப்பட்டு 90 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

https://oruvan.com/the-plan-to-carry-out-an-attack-in-arugam-bay-was-hatched-in-prison-itself/

காணி மாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது - சாணக்கியன்

3 months 1 week ago

 

காணி மாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது 1737112854-sanakiyan-2-780x470.jpg

பரம்பரையாக மேய்ச்சல் தரைகாணியாக பயன்படுத்திவந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச காணி உத்தியோகத்தர்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள்,பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக கால்நடை மேய்ச்சல் தரை அழிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பகுதிக்குள் கால்நடைகள் சென்றால் பண்ணையாளர்களை தாக்குவதாகவும் சிலரை பிடித்து பணம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு வன பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் மங்கலகம பொலிஸார் தங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்களை செய்வதாகவும், லஞ்சமாக பணம் மற்றும் மதுசாரம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை சுருக்கு வைத்து பிடிப்பதாகவும் சில சமயங்களில் கால்நடைகளை கொல்வதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் சுமார் 150, 000 இற்கும் மேற்பட்ட தங்களது கால்நடைகளை கொண்டு செல்வதாகவும் தாங்கள் பரம்பரை பரம்பரையாக இப்பகுதியிலே கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருவதாகவும் கடந்த சில வருடங்களாக இவ்வாறானவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பண்ணையாளர்கள் சிறிய கத்தியினை கையில் வைத்திருந்தாலும் கூட வன பாதுகாப்பு திணைக்களத்தினர் அவர்களை பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தங்களுக்கான தற்காலிக கொட்டில்களை கூட அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் ஆனால் பெரும்பான்மை சமூகத்தினருக்கு இயந்திரங்களைக் கொண்டு காடுகளை அழிப்பதற்கும் கட்டிடங்களை அமைப்பதற்கும் எதுவித தடைகளும் விதிப்பதில்லை எனவும் இதன் போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த கலந்துரையாடலின் போது அப்பகுதியில் அத்துமீறி பயிற்சிகள் ஈடுபடும் நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியபோது தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை வைத்துக் கொண்டு தாங்கள் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் இணைந்து அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காக அவற்றை எதிர்வரும் வாரம் கிராம சேவகர்களின் ஊடாக வழங்கி அவற்றை உறுதி செய்ய வேண்டுமென பயிர்ச்செய்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதுடன், பண்ணையாளர்கள் மீது அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

“உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக மேய்ச்சல்தரைக்காணியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன்” என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியே இந்த கெவிலியாமடு இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெயர் தெரியாதவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து அடைத்து விவசாயம் செய்து கட்டிடங்களை அமைத்து பாரிய அளவில் பண்ணைகளாக மாற்றி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இவை அனைத்தும் வன பரிபாலன சபைக்கு சொந்தமான காணிகள். இன்று வட கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளுக்குள் தமிழ் பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் விவசாயிகள் சிறிய கத்தியை எடுத்துக்கொண்டு சென்றாலும் கூட உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து பாரிய நெற்குவாரங்களை கொடுக்க வன பாதுகாப்பு திணைக்களம் இந்த பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தனியார் ஒருவர் யானை வேலி கூட அமைத்து வைத்திருக்கின்றார். இவை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பட்டிப்பளை எல்லையிலே இந்த காணி அவகரிப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வந்து விடையங்கள். அந்த நேரத்தில் நாங்கள் வந்து பார்வையிட்டத்தின் பின்பு ஒரு சில விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும் கூட அந்த நேரத்தில் இருந்து பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் இந்த விடயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக மறுத்தார்கள். ஏனென்றால் பெரும்பான்மை சமூகத்தினுடைய குடியேற்ற திட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. இன்று புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கூட இந்த மேய்ச்சல் தரைக்குள் இவ்வாறான அடாவடித்தனமாக பயிர்கள் செய்வார்களா இருந்தால் கால்நடை வைத்திருக்கின்ற பண்ணையாளர்கள் அடுத்த கட்டமாக எங்கே போவது.

அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய அரசாங்கத்தின் கீழே இந்த விடயங்கள் தொடருமாக இருந்தால் இன்று வடக்கு கிழக்கிலும் சரி இனி இடங்களிலும் சரி அனைத்து மக்களையும் சரிசமமாக பார்த்து செயல்படுவார் என நினைத்து வாக்களித்தாலும் கூட அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த விடயங்கள் தொடர்கின்றது.

சிலர் கூறலாம் அவர் ஆட்சிக்கு வந்து இப்போது தான் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என்று ஆனால் இந்த விடயங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டு. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் கூட இந்த விடயம் இன்று வரை அவ்வாறாகவே கண்முன்னாக இருக்கின்றது.

அந்த வகையில் இது உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் போடப்பட்ட யானை வேலிக்கு உள் காணியினை சுத்தப்படுத்தி விவசாயம் செய்கின்றார்கள். யானை வேலி போடுவதன் நோக்கமே இதற்கு மறுபக்கம் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தம் என்பதனால்.

இந்த யானை வேலைக்கு உட்பகுதியில் வந்து அவர்கள் விவசாயம் செய்திருப்பதனால் தாங்களாகவே யானை வேலிகளை அமைத்திருக்கின்றார்கள்.

எமக்கு இங்கே இருக்கின்ற பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள் இந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தினையும் ஒளித்து வைத்திருப்பதாக. அதனை வைத்து தான் காட்டை ஒதுக்குகிறார்கள். சாதாரணமாக தமிழர்கள் ஒருவர் ஒரு சிறிய கத்தியை காட்டுப்பகுதிக்குள் கொண்டு போக முடியாத நிலையிலே இன்று எஸ்கவேட்டர் இயந்திரத்தின் மூலம் காடுகளை அழித்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை இல்லாமல் செய்து காணிகளை அபகரிப்பு செய்யும் வரைக்கும் இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று எமக்கு பாரிய சந்தேகம் இருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பி வன பாதுகாப்பு திணைக்களம் தூங்குகின்றதா என்ற கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டும். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் நீதி ஒரு மாதிரியாக செயற்படுகின்றது.

இங்கே இருப்பவர்கள் மாபியாக்கள். இங்கு இருப்பவர் ஒருவர் கூறுகின்றார் இந்த பகுதியில் தனக்கு பல ஏக்கர் காணிகள் இருப்பதாகவும் இப்பகுதியில் மாமரம் மற்றும் கொய்யா மரம் போன்றவை பயிரிட்டு இருப்பதாகவும் வயல் செய்வதாகவும் கூறுகின்றார் ஒரு தனி நபர். இவர் அம்பாறையில் இருந்து வந்து இங்கு செய்கின்றார். இங்கு சிங்களவர்கள் வந்து 10 அல்லது 15 பேர்ச் எடுத்து செய்யவில்லை. இந்த பிரதேசத்தில் காணிமாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் மூன்று மாடி கட்டிடம் கூட அமைத்திருக்கின்றார்கள். இந்த கட்டிடம் அமைக்கும் வரைக்கும் வன பாதுகாப்பு திணைக்களம் எதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் உடனடியாக சட்டவிரோதமான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக இருந்தால் இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன் என தெரிவித்தார்.


https://akkinikkunchu.com/?p=308400

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!

3 months 1 week ago

இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!
Vhg ஜனவரி 18, 2025
1000421686.jpg

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(18-01-2025) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

https://www.battinatham.com/2025/01/blog-post_599.html

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளி ; கஜேந்திரகுமார் நம்பிக்கை

3 months 1 week ago

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளி ; கஜேந்திரகுமார் நம்பிக்கை 18 Jan, 2025 | 11:17 AM
image

(எம். நியூட்டன்) 

தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளியாக, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.   

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்ததாவது:

சில கட்சிகள், தங்களது தேவைக்காக அல்லது புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்து, தனித்து செயல்பட முயல்கின்றன. 

ஆனால், கடந்த பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற குழுத் தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடந்தது. அது, அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கவேண்டிய நோக்கில் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில், பாராளுமன்ற குழுத் தலைவர்களைத் தாண்டி, கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதோடு, இனப்பிரச்சினை தொடர்பாக அறிவியல் மற்றும் அதிகார ரீதியான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நபர்களையும் இணைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 

இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். கட்சி ரீதியாக பேசப்பட்டு, ஒருமித்த முடிவுக்கு வரவேண்டியது அவசியம். 

நாம் கலந்துரையாடிய பிறகு, கட்சியின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதே முறையாகும். எந்த ஒரு குழுவும் கட்சியின் அனுமதியின்றி செயல்படக்கூடாது.

எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் சந்திப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும். அரசாங்கம் தனது வசதிக்கேற்ப தமிழ்த் தேசிய அரசியலை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தும் தரப்புக்கள் ஒன்று கூட வேண்டும். 

தமிழர்களின் பாரம்பரிய அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் தேசிய அரசியல், உரிய கௌரவத்துடன், எதிர்காலம் நோக்கி முன்னேற, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை உணர்ந்து செயற்படுவதற்காகவே, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.  
 

https://www.virakesari.lk/article/204131

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்

3 months 1 week ago

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம் 18 Jan, 2025 | 12:44 PM
image

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என இன்று  சனிக்கிழமை (18)  பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  

திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. 

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

e74d41e9-a992-459c-a1fa-2f672aa745b1.jpe

d2d5b350-b2ae-422a-9b15-3ef3b080abe2.jpe

2ea8511e-4e71-47eb-bf60-6394eed7949d.jpe
https://www.virakesari.lk/article/204144

இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

3 months 1 week ago

 

இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்  Freelancer   / 2025 ஜனவரி 18 , மு.ப. 03:48 - 0    


இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அவர் நேற்று மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது வடக்கு சமாசத்திற்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கும் வைபவத்திலும் கலந்துகொண்டார்.

இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றில் அவர் கலந்துகொள்வார்.

இதேநேரம் இன்று மதியம் தெல்லிப்பழையில் நடைபெறும் தேசிய பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றுவிட்டு கொழும்பு திரும்புவார். (a)

image_e922e3b43f.jpg



https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்தியத்-தூதுவர்-யாழ்ப்பாணத்துக்கு-விஜயம்/175-350491

 

ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை!

3 months 1 week ago

 

ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை!
1001738354.jpg

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில்  ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கையில், 

இந்த ரயில் சுற்றுலாவுக்காக தனியார் நிறுவனம் ஒன்றினாால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களை கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்குவது குறித்து திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

வழக்கமாக சேவையில் ஈடுப்படும் பயணிகள் ரயிலில் இந்த சம்பவம் நடைபெறவில்லை. விசாரணை நடந்து வருகிறது, மேலும் சுற்றுலாப் பொலிஸாரையும் ஈடுபடுத்தியுள்ளோம். ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் பொறுப்பானவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

https://newuthayan.com/article/ரயிலில்_சுற்றுலாப்_பயணிகளுக்கு_மசாஜ்_;_ரயில்_திணைக்களம்_விசாரணை!
 

 

 

’அரசியல் கைதிகள் விடயத்தில் இனவாதம்’! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3 months 1 week ago

’அரசியல் கைதிகள் விடயத்தில் இனவாதம்’! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
2083361759.jpeg

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி நிற்கின்றது.

இதனை வலியுறுத்தி கையொப்ப போராட்டம் ஊடாகவும், வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கூறுகிறார். அவர் அதனை சொல்வதற்கு அரசியல் பின்னணிதான் காரணம்.  ஏனெனில் இதற்கு முதல் அவருடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வந்த பொது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று பேசியிருந்தார்.

ஆனால், தற்பொழுது நீதியமைச்சர் அந்த விடயத்திலிருந்து பின்வாங்குகின்றார். ஆனால் அதுவொரு அரசியல் காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான். இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் என்றார். 
 

 

https://newuthayan.com/article/’அரசியல்_கைதிகள்_விடயத்தில்_இனவாதம்’!

ஊழியர் சேமலாப நிதி கட்டப்படுவதில்லை; தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு - யாழில் தனியார் துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 7   17 JAN, 2025 | 05:22 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு  ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம், சம்பளத்திலிருந்து பெறப்பட்டாலும், கட்டியதற்கான பற்றுச்சிட்டுகளோ, அல்லது வைப்பிலிட்டமைக்கான ஆதாரங்கள் வழங்காது  ஊழியர்களை ஏமாற்றி அவர்களிடம் வேலை வாங்கி வருவதாக ஊழியர்கள் பலர்  ஊழியர் சேமலாப நிதியம்  உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்கள்.

குறித்த விடயங்கள் தொடர்பில் ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

“யாழ்ப்பாணத்தில் நாம் ஒரு நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்து வந்தோம். எமக்கு  வேலை தரும்  போது  ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதாக கூறினார்கள். அதுமட்டுமன்றி மாதாந்த சம்பளம் வைப்பிலிட்டதாக கூறினார்கள்.

ஆனால் சம்பளம் மட்டும் வங்கியில் வைப்பிலிட்டார்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டவில்லை. அதற்கான விண்ணப்பம் நிரப்பப்படவில்லை. ஆனால் எமது சம்பள பணத்தில் அதற்கான பணத்தை கழித்து வருகிறார்கள். எமக்கு  சம்பள பட்டியல் தருவதில்லை. வங்கியில் பார்ப்பதன் மூலம் எமக்கான சம்பளம் கிடைத்துள்ளது தெரியவரும்.

நாம் எதைக் கேட்டாலும்  எமக்கு காரணம் கூறி சமாளித்து விடுவார்கள். எனக்கு மட்டுமன்றி  எம்மோடு வேலை செய்த பலருக்கும் இதே நிலைதான். சிலர் ஐந்து வருடமாக வேலை செய்த போதும் அவர்களில் சிலருக்கு ஒரு சில மாதங்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டியுள்ளார்கள். அதற்கு பலருக்கு விவரங்கள் வழங்கப்படவில்லை.  சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் முறைப்படியாக எவருக்கும் சில நிறுவனங்கள்  வர்த்தக நிலையங்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதில்லை. நிறுவனத்தில் ஒருவர் வேலை செய்தால் இரண்டு வாரத்தில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு அறிவிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள விதிமுறையாகும். இதை யார் நடைமுறைப்படுத்துகிறார்கள், யார் கண்காணிப்பது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் குறித்த தொழில் திணைக்கள அதிகாரிகள் சில வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஊழியர்கள் நலன்கள் சம்பள விவரங்கள், ஊழியர் விவரங்கள் போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. தற்போது அவை நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

இதேவேளை பாதுகாப்பு சேவையில் ஈடுபடும் நிறுவனங்களிலும் இத்தகைய ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவதாக கூறுகின்றபோதும் முறையான விபரங்கள் பாதுகாப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. அவர்களது வேலை நேரத்திலும் பல பிரச்சினைகள் காணப்படுகிறது. 

குறிப்பாக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவைக்கு ஆட்களை நியமிக்கும் போது அதிகளவான பணத்தை பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வேலை செய்யும் ஊழியருக்கு முழுமையான நிதியை வழங்குவதில்லை. இத்தகைய நிறுவனங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு பல்வேறுவிதமாக அரச சலுகைகள் கிடைக்கின்ற போதும்  அரச சார்பற்ற தனியார், தனிநபர்களுக்கான சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

ஓய்வுகால நிதியாக ஊழியர்களுக் இத்தகைய நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஆட்சியில் உள்ளவர்கள், வடக்கு மாகாண ஆளுநர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என மேலும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/204021

என்னுடைய ஆதங்கம் செய்தியாக வந்துள்ளது.

தனியார் ஊழியர்களுக்கு முதுமையில் பாதுகாப்பாக அமையும்.

சிறுவர்களிடையே உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிப்பு ; வைத்திய நிபுணர் எச்சரிக்கை

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   17 JAN, 2025 | 04:34 PM

image

நீரிழிவு நோய் வகை 2, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் பாடசாலை சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாடு பாடசாலை சிறுவர்களிடையே உடல்நலப்பிரச்சினைகளில் ஒரு சிக்கலான அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சிறுவர் நல வைத்திய நிபுணர் ருவந்தி தெரிவிக்கையில்,

12, 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே தொற்று நோய் அல்லாத குறிப்பாக நீரிழிவு நோய் வகை 2 அதிகமாக காணப்படுவது கவலை அளிப்பதோடு, அபாய எச்சரிக்கையை தூண்டியுள்ளது.

இதேவேளை,  கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்களும் அதிகரித்துள்ளது. இது சுகாதார அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, இந்த நிலைமைகள் பொது சுகாதாரத்தில் சவாலை உருவாக்கி வருகின்றன.

இந்த  நோய் நிலைமைகளை குறைப்பதற்கு "சிறுவர்களுக்கு தேவையான சுகாதார அறிவை வழங்குவதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமானவற்றை தெரிவு செய்ய அவர்களுக்கு உதவ முடியும். அத்தோடு, நோய்கள் அதிகரிப்பதை குறைக்க முடியும்.

சிறுவர்களிடையே உயர் இரத்த அழுத்தம் நோய்  அதிகரித்து வருவது மேலும் கவலை அளிக்கின்றது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை மற்றும் பிற நடத்தை மாற்றங்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களே நோய்கள் அதிகரிப்புக்கு காரணமாகும்.

இந்த நோய்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் பாடசாலை சிறுவர்களிடையே சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிப்பதில் சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர் என்றார்.

https://www.virakesari.lk/article/204092

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் செயற்படுவார்களென நம்புகிறோம் - ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு

3 months 1 week ago

Published By: PRIYATHARSHAN   17 JAN, 2025 | 04:35 PM

image

வீ.பிரியதர்சன்

இலங்கையின் ஜனநாயகத்தின் மீள் தன்மையை ஜனாதிபதித் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேலும் சீர்திருத்தங்களை ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் செயல்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள நிலையில், இலங்கையை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதென ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் குறித்த தனது இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புத் தூதுக்குழு இன்று வெள்ளிக்கிழமை (17) வெளியிட்டது. 

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தல் குறித்த இறுதி அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர்,

WhatsApp_Image_2025-01-17_at_2.55.27_PM.

“ ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிக்கையானது நாடு தழுவிய ரீதியில் 9 மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு மாத காலத்தில் இந்த அறிக்கை பூரணப்படுத்தப்பட்டது. முழு தேர்தல் செயல்முறையின் விரிவான பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது. 

இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, ஜனநாயகத் தேர்தல்களுக்கான இலங்கையின் சர்வதேச உறுதிப்பாடுகளுக்கு ஏற்ப, எதிர்கால தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்துவதையும் செம்மைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 16 பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இலங்கையின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லையும் அறகலய போராட்டத்திற்கு பின்னரான  அரசியல் இயல்புநிலையை மீட்டெடுத்தமையையும் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் குறித்து நிற்கின்றது.

பொதுமக்கள் ஜனநாயக செயல்முறைக்கான தங்கள் அர்ப்பணிப்பை இதன்போது வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து முக்கிய தேர்தல் கால கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்துள்ளது.

தேர்தல் காலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவானது சுயாதீனமாகவும் உறுதியுடனும் செயல்பட்டது. தேர்தல் அமைதியாக இடம்பெற்றமையும் வேட்பாளர்கள் முடிவுகளை ஏற்றுக்கொண்டமையும் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் சக்தியை அடிக்கோடிட்டுக் காட்டியது.

தேர்தல் பிரச்சார நிதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இளைஞர்களை அதிக அளவில் இணைப்பது உள்ளிட்ட பல சிறந்த முன்னேற்றங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக, தேர்தல் சட்ட கட்டமைப்பு நன்கு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூகத்தின் கூட்டு ஈடுபாடு தேர்தலுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளமை அறிக்கையின் மூலம் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.

தேர்தல் பிரச்சார காலங்களில் அடிப்படை சுதந்திரம் மதிக்கப்பட்டதுடன் வாக்காளர்கள் தங்களது விருப்பத்திற்கமைய வேட்பாளர்களை தெரிவு செய்ய உண்மையான அரசியல் மாற்று வழிமுறைகளைக் கொண்டிருந்தனர்.

இலங்கையின் ஜனநாயகத்தின் மீள்தன்மையை ஜனாதிபதித் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேலும் சீர்திருத்தங்களை ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் செயல்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள நிலையில், இலங்கையை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது.

அரசியலில் பெண்களின் பங்கேற்பை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்துவதையும், அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக அமுலாக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாட்டுச் சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தவும் இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

இதேவேளை, வெளிப்படைத்தன்மை மற்றும் கருத்துசு் சுதந்திரத்தின் மூலம் ஜனநாயகம் செழித்து வளர்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு தூதுக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தேர்தல் ஆணையக்குழுவினால் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நாட்டில் தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டது. இது நாட்டின் 9  மாகாணங்களிலும் 70 க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்களை நியமித்து கண்காணிப்பு கடமைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

3__3_.jpg

https://www.virakesari.lk/article/204091

கொழும்பில் கட்டப்பட்டுவரும் பல மாடி ஆடம்பர ஹோட்டலிற்கும் இந்தியாவில் இடம்பெற்ற பாரிய பணமோசடிக்கும் தொடர்பா? இந்தியாவில் விசாரணைகள் ஆரம்பம்

3 months 1 week ago
17 JAN, 2025 | 03:19 PM
image
 

கொழும்பில் பல வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்னமும் பூர்த்தியடையாத நிலையில்உள்ள  பலமாடி ஆடம்பர  ஹோட்டலிற்கும் இந்தியாவில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கும் தொடர்புள்ளதா என இந்தியாவில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பணமோசடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் அன்னியசெலாவணி மோசடி போன்ற குற்றங்களை விசாரணை செய்யும் இந்திய அரசாங்கத்தின் அமைப்பு 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களின் ஒரு பகுதியே இலங்கையில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஆடம்பர ஹோட்டல் என தெரிவித்துள்ளது 

இந்த சொத்து இந்தியாவின் வர்த்தகர் அமிட்கட்யாலின் கிரிஸ்ரியல்டெக் நிறுவனத்திற்கு சொந்தமானது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் கொழும்பு ஒன்றில் உள்ள நான்கு ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் ஆடம்பர ஹோட்டல் மற்றும் குத்தகை உரிமையை இந்த வழக்குடன் இணைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக இந்தியாவின் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வர்த்தகர் அமிட்கட்யாலிற்கு எதிராக புதுடில்லி மற்றும் குருகிராம் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலேயே  இது  குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கிரிஸ்ரியல் டெக் பல முதலீட்டாளர்களை ஏமாற்றியது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

https://www.virakesari.lk/article/204080

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க அனுமதி : பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   17 JAN, 2025 | 02:50 PM

image

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

எதிர்வரும் 6 மாத காலத்தை வரையறுத்து 20 வீத மின்கட்டண குறைப்பை இன்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, ஹோட்டல் மற்றும் அதனுடனான தொழிற்றுறையின் மின்கட்டணத்தை 31 சதவீத்ததால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/204069

அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?

3 months 1 week ago

அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? shathivel.jpg

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்ட கால அரசியல் கோரிக்கையாகும்.

தமிழர் தாயக மண்ணான வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் நின்று தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என உறுதியளித்து சென்றதன் ஈரம் காயும் முன்னே அவர் அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை குறிப்பிட்டுள்ளமை, அவர்களின் அரசியல் அநாகரித்தை அம்பலப்படுத்தி உள்ளதோடு வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வோம் என்று கூறி பதவிக்கு வந்ததும் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார் ?

இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே குறிப்பிட்டிருந்தார்.

அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை.

இது அரசாங்கத்திற்குள் பிளவையே வெளிபடுத்துகின்றது? தமிழர்களின் அரசியல் சார்ந்த விடயங்களில் எந்த ஒரு துளி நகர்வையேனும் தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளப் போவதில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் பேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களின் அரசியலை பயங்கரவாதத்திற்குள் முடக்கி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுக் கொடுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை மகிழ்விக்கவே முன் நிற்கின்றது என்பது தெளிவாகின்றது.

தற்போது சிறைகளில் 10 பேரும் குறைவான அரசியல் கைதிகளை உள்ளனர். இவர்களில் மரண தண்டனை கைதிகளும் உள்ளனர். இவர்களை பயங்கரவா தடை சட்டத்திற்கு வெளியே எடுத்து விடுதலை செய்யக்கூடாது என்பதில் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ளதோடு; தண்டனை காலத்தையும் கடந்து சிறையில் வாடும் அவர்களின் வாழ்வை சிறைக்குள்ளேயே கொலை செய்வதற்கும் முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது.

கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறைக்குள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தையும் தொடர்ந்தனர். இவர்களின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும் கொழும்பிலும் சிங்கள மக்களின் ஆதரவோடு பல்வேறு வடிவங்களில் விடுதலைக்கான முயற்சிகள் மேற்கண்ட போதும் அது என்னால் வரை பலன் அளிக்கவில்லை.

நல்லாட்சி எனக்கூறப்படும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்தில் அமைச்சி பதவிகள் இருந்த தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சியில் அமர்ந்து அரச சுகபோகங்களை அனுபவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதை வேதனையோடு மீண்டும் வெளிப்படுத்துவதோடு, அரசியல் கைதிகள் விடயத்தில் இவர்களும் ஆட்சியாளர்களின் சிந்தனையிலேயே இருந்தனர் என்பதே உண்மை.

விடுதலைக்கான நீலி கண்ணீரையே வடித்தனர். தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஊடகங்களுக்கு கூறுவது அரசியல் ஏமாற்று நாடகமே.

தமிழர் அரசியல் விடுதலைக்கான செயற்பாட்டினை போராளிகளும், மாவீரர்களும், அரசியல் கைதிகளும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.இன்றும் வைத்திருக்கின்றனர்(சோரம் போனவர்களைப் தவிர ஏனையோர்) என்பதை மறக்க முடியாது. இவர்களைத் தவிர்த்து அல்லது மறந்து விடுதலை அரசியல் செய்வது என்பது அரசியல் கொலைக்கு ஒப்பாகும்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடகிழக்கு எங்கும் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் மேலும் வலுப்பெறல் வேண்டும். இது குறுகிய அரசியல் நோக்கத்திற்கு அப்பால் நிகழ் வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

இதற்கு வடக்கு கிழக்கை பிரதிதித்துவப்படுத்துபடுத்தி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து விடுதலையை துரதப்படுத்தல் வேண்டும் எனவும் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட வேண்டாம் எனவும் கோட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவென பல்வேறு நாடுகளிடம் மண்டியிட்டு நாட்டின் இறைமையை, அரசியலை, வளங்களை தாரை வார்த்து சமரசம் பேசி பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் ஆட்சியாளர்கள் (மிக அன்மையில் இந்தியாவோடும் தற்போது சீனாவுடன் செய்து கொண்டிருக்கின்ற பந்தங்கள் உட்பட) இந்நாட்டில் மிக நீண்ட கால வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட தேசிய இனமான தமிழர்களோடு அரசியல் ஒப்பந்தம் செய்ய தயங்குவது ஏன்? நாட்டின் எதிர்காலம் நலன் கருதி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளோடு முன் செல்ல அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்து ஆட்சியாளர்கள் தம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்கின்றோம்.
 

https://akkinikkunchu.com/?p=308316

 

மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமைந்துவிடக்கூடாது – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

3 months 1 week ago

மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமைந்துவிடக்கூடாது – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
January 17, 2025

மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்  217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர்,  ‘ கல்வி வாழ்க்கைக்கு முக்கியமானது. கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதமைக்கு சமனானவர்கள். நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் என்னை சந்திக்க வந்திருக்கின்றார்கள். பிள்ளைகள் கற்பதற்கு ஆர்வமாக இருந்தபோதும் அவர்களுக்கு சீருடைகள், கற்றல் உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கல்வியைக் கைவிடக்கூடாது. வறுமையிலிருப்பவர்களுக்கு உதவுவதற்கு எமக்கு எந்தவொரு சுற்றறிக்கைகளும் தடையாக இருக்கப்போவதில்லை. நாம் சரியானதை சரியாகச் செய்தால் எதற்கும் பயப்படதேவையில்லை. யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்சன், ஏனைய பிரதேச செயலர்களிலிருந்து வித்தியாசமானவர். இன்று உங்களுக்கான கற்றல் உபகரணங்களை அவர் பெற்றுத் தந்திருக்கின்றார். வறுமையைப்போக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பானவை.

கல்வியில் சிறந்த நிலைக்கு நீங்கள் வருவதே, இன்று நீங்கள் பெற்றுக்கொள்ளும் உதவிக்கு பிரதியுபகாரமாக அமையும். அவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்து ஏனையவர்களுக்கு உதவி செய்யவேண்டும். கடினமாக உழைத்தால் எதையும் செய்ய முடியும். உங்களால் முடியும் என்று நினைத்து எதையும் செய்யுங்கள். நீங்கள் வெற்றியடைந்தவர்களாக மாறலாம், என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
 

https://www.ilakku.org/மாணவர்களின்-கல்விக்கு-வற/

 

தவறான உறவுக்காக கசையடி வழங்கிய பள்ளிவாசல் - 6 பேர் கைது, இலங்கையில் சம்பவம்

3 months 1 week ago

(எப்.அய்னா)

 

 

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

 

 

 

திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண் ஒரு­வ­ரையும் ஆண் ஒரு­வ­ரையும், வாழைச்சேனை பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு அழைத்து அங்கு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

 

பெண்­ணுக்கு 50 கசை­ய­டியை ஒத்த தண்­ட­னையும், ஆணுக்கு 100 கசை­ய­டியை ஒத்த தண்­ட­னையும் பள்­ளி­வா­சலில் வைத்து வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில், இது குறித்து வாழைச்­சேனை பொலி­சா­ருக்கு கிடைத்த தகவல் மற்றும் முறைப்­பாட்­டுக்கு அமைய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

 

இதன்­போதே, குறித்த நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­பட்ட 6 பேரை வாழைச் சேனை பொலிசார் கைது செய்­துள்­ள­துடன், அவர்கள் தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வாழைச்­சேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கூறினார்.

 

இந்த சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.- Vidivelli

https://www.jaffnamuslim.com/2025/01/6_17.html

கோட்டாபய சிஐடியில் ஆஜர்

3 months 1 week ago

கோட்டாபய சிஐடியில் ஆஜர்
கோட்டாபய சிஐடியில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார்.

கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற சிஐடி விடுத்த அழைப்பின் பேரிலேயே கோட்டாபய ராஜபக்ச, ஆஜராகியுள்ளார்.
 

https://oruvan.com/gotabaya-appears-before-cid/

அநுரவின் சீன பயணத்தில் நடத்தப்பட்ட சந்திப்புகளும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும்

3 months 1 week ago

அநுரவின் சீன பயணத்தில் நடத்தப்பட்ட சந்திப்புகளும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும்
அநுரவின் சீன பயணத்தில் நடத்தப்பட்ட சந்திப்புகளும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 14ஆம் திகதிமுதல் 17ஆம் திகதிவரை சீனாவுக்கு மேற்கொண்ட நான்கு நாள் அரசுமுறை பயணத்தில் பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. 

குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்க 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு மேற்கொள்ளும் ஒப்பந்தமொன்று இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சீனா மேற்கொள்ளும் 3.7 பில்லியன் டொலர் முதலீடானது இலங்கை வரலாற்றில் சீனா மேற்கொள்ள உள்ள பாரிய முதலீடாகும். இதற்கு முன்பு போர்ட் சிட்டி, ஹம்பாந்தோட்டை துறைமுகம், தாமரை தடாகம் என பல முதலீடுகள் சீனாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் ஒரே தடவையில் மேற்கொள்ளும் பாரிய முதலீடாக 3.7 பில்லியன் அமைய உள்ளது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனப் பயணம் தொடர்பில் இருநாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை வருமாறு,  

  1. சீன மக்கள் குடியரசுத் தலைவர் ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
  2. இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதுடன், அரச சபைப் பிரதமர் லீ சியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரைச் சந்தித்தார். ஒரு சுமூகமான மற்றும் நட்பு சூழ்நிலையில், இரு தரப்பினரும் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படடுத்துதல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே உயர்தர பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் (ஒரே எண்ணக்கருவுடனான ஒரே பாதை), பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டதுடன், அவை தொடர்பில் விரிவானதும் பொதுவானதுமான புரிதல்களை எட்டினர்.
  3. வெவ்வேறு அளவிலான பரிமாணங்களைக் கொண்ட நாடுகளான சீனாவும் இலங்கையும்  68 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளில்  தொடர்ந்து ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் சமமாக நடத்தி, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளதுடன், நட்புரீதியான தொடர்புகள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்னும் பெருமையை இருதரப்பினரும் பகிர்ந்துகொள்கின்றனர். இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தில் பொதிந்துள்ள, சுயாதீனத்துவம், தன்னிறைவு நிலை, கூட்டுணர்வு மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் உணர்வை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர ஆதரவு, இருதரப்பினதும் வெற்றிக்கான ஒத்துழைப்பு மற்றும் பொதுவான வளர்ச்சி ஆகிய கொள்கைகளைப் பின்பற்றவும், நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் என்றென்றும் நீடிக்கும் நட்பின் அடிப்படையில் சீன-இலங்கை மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் உறுதியாக இருக்கவும், இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் அதிக நன்மைகளை பயக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன-இலங்கை சமூகத்தை கூட்டாகக் கட்டியெழுப்பவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
  4. இருதரப்பு உறவுகள் தொடர்பில், இரு நாடுகளின் தலைவர்களினதும் வலுவான மூலோபாய வழிகாட்டுதலைப் பேணுவதற்கும், இரு அரசுகள், சட்டமன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியலில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், ஒருவருக்கொருவர் ஆட்சி மற்றும் அபிவிருத்திக்கான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், அவற்றின்மூலம் கற்றுக்கொள்வதற்கும், சீன-இலங்கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் இணங்கினர்.
  5. இரு தரப்பினரும், தமது முக்கிய நலன்கள் மற்றும் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளில், தமது பரஸ்பர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் அதிகாரத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சீன மக்கள் குடியரசின் அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தாய்வான் சீனப்பிரதேசத்தின் பிரிதத்தெடுக்க முடியாத பகுதியாகும் என்பதையும் அங்கீகரித்து, ஒரே சீனா கொள்கைக்கான தனது, வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைவதற்கான சீன அரசின் அனைத்து முயற்சிகளையும் இலங்கை உறுதியாக ஆதரிப்பதுடன், “சுயாதீன தாய்வான்” எண்ணக்கருவின் எவ்வித நிலையும் எதிர்த்து நிற்கிறது. சீனா தொடர்பிலான எந்தவொரு எதிர் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கும் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஷிசாங் மற்றும் ஷின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை உறுதியாக ஆதரிக்கும் என்றும் இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கையை தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாகவும், அதன் தேசிய நிலவரங்களுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை சுயாதீனமான தெரிவுகளில் இலங்கைக்கு மதிபளித்து, அவற்றுக்கு ஆதரிப்பதாகவும் சீனா மீண்டும் வலியுறுத்தியது. சுதந்திரமானதும் அமைதியானதும் வெளியுறவுக் கொள்கைக்கான அதன் உறுதிப்பாட்டை சீனத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. சுயாதீனமான அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது.
  6. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இலங்கைக்கு சீனா வாழ்த்து தெரிவித்ததோடு, இலங்கையின் புதிய அரசாங்கம், இலங்கை மக்களை பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் முன்னோக்கி அழைத்துச் சென்றமைக்காக தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தது மட்டுமால்லாமல் இலங்கை அரசாங்கம் நாட்டின் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அயராது உழைக்கும் தருணத்தில், சீனா தனது தீவிர ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. புதிய சகாப்தத்தில் சீனாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை இலங்கை பாராட்டியதுடன், அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகின்ற நவீன சோசலிச நாடொன்றைக் கட்டியெழுப்பவும், சீன நவீனமயமாக்கல் பாதையின் மூலமான சீன தேசத்தின் புத்துணர்ச்சியை மேம்படுத்தவும் சீனாவுக்கான தனது ஆதரவைத் தெரிவித்தது. சீர்திருத்தங்களை விரிவுபடுத்தவும், மேலும் ஆழப்படுத்தவும், உயர்தரத்திலான வெளிப்படைத்தன்மையை   ஊக்குவிக்கவும், சீனாவின் உந்துதல் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும் என இலங்கை நம்புகிறது.
  7. இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலின் கீழ், சீனாவும் இலங்கையும் பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பில் பலனுறுதிமிக்க பெறுபேறுகளை உருவாக்கியுள்ளன. இலங்கை, அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியிலும், தனது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பின் முக்கிய பங்கைப் பாராட்டுகிறது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து முக்கிய திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கக்க்கூடிய செயற்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும், பட்டுப்பாதைச் செயற்பாட்டுத்திட்டம் போன்ற தளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், வாழ்வாதாரத்திற்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கமைவாக ஒன்றாகத் திட்டமிடுதல், ஒன்றாகக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றாக பயனடைதல், திறந்ததும், பசுமையானதும் மற்றும் அர்ப்பணிப்புமிக்கதுமான ஒத்துழைப்பு, உயர்தரத்திலான, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் வளங்குன்றாத நிலையான வளர்ச்சியுடன்கூடிய உயர்தர பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக ஜனாதிபதி ஷி ஜின்பிங் அறிவித்த எட்டு முக்கிய படிகளைப் பின்பற்றுவதற்கும் இரு தரப்பினரும் இணங்கினர். சீனா-இலங்கை உயர்தர பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், உயர் தர, வலுவான மீள்தன்மை மற்றும் அதிக நிலைத்தன்மையினூடான இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக் கொண்ட  மேம்பாட்டிற்கான புதிய இடத்தை கூட்டாகத் திறப்பதற்கும், பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்புத் திட்டத்தில் கைச்சாத்திடுவதில் இரு தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர்.
  8. கடன் பிரச்சினையை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு வலுவான ஆதரவாக விளங்கிய சீனா, கடன்களை மறுசீரமைப்பதில் வழங்கிய முக்கிய உதவி உட்பட, நிதிசார் நெருக்கடி மிகுந்த காலங்களில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற பெறுமதிமிக்க ஆதரவிற்கு இலங்கை தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தது. இலங்கை, சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொள்ளப்பட்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்தில் சீனா தொடர்ந்து நேர்மறையான பங்கை வகிப்பதுடன், இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்கவும், கடன்படு நிலையில் நீடிப்புத்திறனைப் பேணவும் உதவும் வகையில், ஏனைய கடன் வழங்குநர்களுடன் நட்புரீதியான தொடர்பைப் பேணுகிறது. இலங்கை மத்திய வங்கியும், சீன மக்கள் வங்கியும் தங்கள் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதுடன், நிதிசார் ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளன.
  9. பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து, இரு தரப்பினரும் திருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு வழிகளில் இலங்கையிலிருந்தான, இறக்குமதியை ஊக்குவிப்பதற்காக சீனா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இலங்கை தெரிவித்தது. தேயிலை, இரத்தினக்கல் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சீன இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளிக்கவும், சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி, சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கண்காட்சி, சீன-தெற்காசிய கண்காட்சி மற்றும் இலத்திரனியல் வணிகத் தளங்கள் போன்றவற்றில் இலங்கை பங்கேற்பதை எளிதாக்கவும், பரஸ்பர நன்மை மற்றும் இருதராப்பினரதும் வெற்றிக்கான பெறுபேற்று அடிப்படையில் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் சீனா தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது. சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக்கொண்ட  கொள்கைகளுக்கு இணங்க, சகலதும் அடங்கிய தொகுப்பொன்றில் விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இலங்கை சீனாவிலிருந்து அதிக வணிக முதலீட்டை வரவேற்பதுடன், இந்நோக்கத்திற்காக உகந்ததொரு  முதலீடு மற்றும் வணிக சூழலை வழங்கும். இலங்கையில் பொருளாதார மாற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தியை எளிதாக்குவதற்காக இலங்கையில் முதலீடு செய்வதில், சீனாவானது அதன் நிறுவனங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும். உயர்தர மற்றும் பரஸ்பர நன்மை பயக்குகின்ற செயற்பாட்டு ரீதியிலான, ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, ஏற்பாட்டியல், வளங்குன்றாத அபிவிருத்தி மற்றும் இலத்திரனியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் இணங்கினர்.

  1. விவசாயம் தொடர்பான பரந்த அளவிலான ஒத்துழைப்பு மற்றும் ஆழமான பரிமாற்றங்கள் குறித்த நேர்மறையான மதிப்பீடுகளை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். இலங்கையின் நிலையானதும், வளங்குன்றாததுமான விவசாய வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெப்பமண்டல பயிர்களுக்கான உயிரியற் தொழில்நுட்பங்கள், தாவரப் பெருக்கம்  பயிர்ச்செய்கை மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடன் பயிற்சி மற்றும் செயல்விளக்கத் திட்டங்களை மேற்கொள்வதற்கான தனது தயார்நிலையை சீனா தெரிவித்தது; மேலும் தேயிலை, பழங்கள், இலவங்கப்பட்டை மற்றும் நீர்வள உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட தனித்துவமான பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை இலங்கை மேலும் விரிவுபடுத்துவதை வரவேற்றது. வறுமைக் குறைப்பு மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சியில் உன்னிப்பாகக் கவனம் செலுத்துவதன் மூலம் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தயார்நிலையை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். தொடர்புடைய துறைகளில் பணியாளர்களின் திறனை வலுப்படுத்த இலங்கைக்கு உதவ சீனா தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது.
  2. இரு தரப்பினரும் காலநிலை மாற்றத்தை மனித சமூகத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகவும், சீனா மற்றும் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றது என்பதை ஏற்றுக்கொண்டனர். காலநிலை மாற்றத்தில், தொடர்ந்தும் தீவிரமாக இணைந்து பணியாற்ற இணங்கினர். கடுமையான வெள்ளப்பெருக்க்கின்போதான, சீனாவின் மனிதாபிமான நிவாரணத்திற்காக இலங்கை நன்றி தெரிவித்தது. பேரிடர் தடுப்பு, அனர்த்தங்களுக்கெதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மீட்பு போன்ற துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அதன் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இலங்கையின் அவசரகால முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதில் பயிற்சி அளிக்கவும் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஐக்கிய நாடுகளின் 2030 இற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான கூட்டு முயற்சியின், பகுதியொன்றாக, பெல்ட் அண்ட் ரோட் சர்வதேச வளங்குன்றாத நிலையான அபிவிருத்திக் கூட்டணி மற்றும் ஏனைய தளங்களின் தொடர்புடைய நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்பை சீனா வரவேற்கிறது.
  3. சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கடல்சார் ஒத்துழைப்பைத் தொடரவும், கடல்சார் விவகாரங்களில் தொடர்ந்து இருதரப்பு ஆலோசனைகளை நடத்தவும் இரு தரப்பினரும் விரும்புகின்றனர். கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல், கடல்சார் கள விழிப்புணர்வு, கடல்சார் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்சார் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய கடல்சார் சமூகத்தை உருவாக்க தங்கள் பலத்தை திரட்டவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான கடல்சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இரு தரப்பினரும் இணங்கினர்.
  4. கல்வித்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். புரிதல் மற்றும் நட்பை அதிகரிப்பதற்கு கல்வித்துறையிலான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் முழுமையாக அங்கீகரித்ததுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றங்களை மேலும் மேம்படுத்துவதற்கான தயார்நிலையை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். மேலும் அர்ப்பணிப்புள்ள மாணவர்கள் சீனாவில் மேற்படிப்பைத் தொடர்வதனை சீனா வரவேற்று, ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு  அரசாங்க புலமைப்பரிசில்களுடன்கூடிய ஆதரவை அளிக்கத் தயாராக உள்ளது. லூபன் செயற்பாட்டு அமர்வினூடே சிறப்பான பலனை அளிக்கவும், இலங்கைக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மூலம் அதிகபடியான தொழில்வாண்மையாளர்களை வளர்க்கவும், சீனா இலங்கையுடன் இணைந்து செயற்படும். கல்வித்துறையில் சீனாவின் உதவியை இலங்கை பாராட்டுவதுடன், சீனாவுடன் இணைந்து டிஜிட்டல் வகுப்பறை செயற்திட்டத்தின் வெற்றிக்காகச் செயற்படும். இலங்கையில் சீன மொழிக் கல்வியை ஊக்குவிக்கவும், இலங்கையில் உள்ள சீன கலாச்சார மையத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் தயார்நிலையில் உள்ளனர். சீன அறிவியல் கல்வி நிறுவனத்தின் கீழுள்ள, சீன-இலங்கை கூட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து பணியாற்றுவது மட்டுமின்றி, அதனை மேம்படுத்துவதுடன், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் கல்வித்துறையை வலுப்படுத்துவதில் ஈடுபாட்டுடன் செயற்படுவர்.
  5. இரு தரப்பும் தமது, நீண்டகால நட்பை முன்னெடுத்துச் செல்லவும், தங்கள் மக்களை நெருக்கமாகக் கொண்டுவரவும் தயாராக உள்ளனர். பரஸ்பர சுற்றுலா மற்றும் விமானமார்க்க தொடர்புகளை ஊக்குவிக்க இரு தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். பட்டுப்பாதை நகரங்களின் சர்வதேச சுற்றுலா கூட்டணியில் இணைத்துள்ள இலங்கை நகரங்களை சீனா வரவேற்கிறது. சீனா மற்றும் இலங்கையில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பர்.
  6. இளைஞர்கள், சிந்தனையாளர்கள், விளையாட்டு மற்றும் ஊடகங்கள் போன்ற துறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புத்தமதப் பரிமாற்றங்களின் பிணைப்பைக் கட்டமைக்கவும், மக்களிடையேயும் சகோதர நகரங்களுக்கிடையிலான பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர்.
  7. இலங்கையில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும். சீனாவின் யூனான் மாகாணம், ப்ரைட்னஸ் ஆக்‌ஷன் திட்டத்தை செயல்படுத்த இலங்கைக்கு மருத்துவக் குழுக்களை தொடர்ந்து அனுப்பும்.
  8. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான ஆசிய முன்முயற்சி மற்றும் ஆசியாவில் கலாச்சார பாரம்பரியத்திற்கான கூட்டணி போன்றவற்றில் பங்கேற்பதற்கான இலங்கையின் நேர்மறையான பதிலை சீனத் தரப்பு பாராட்டுகிறது. இக்கூட்டணியின் கீழ் இலங்கையுடன் இருதரப்பு கலாச்சார பாரம்பரிய ஒத்துழைப்பை சீனா மென்மேலும் ஊக்குவிக்கும்.
  9. நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய அங்கம் என்பதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வதுடன், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள சூதாட்டம் போன்ற நாடுகள் கடந்த குற்றங்களை கூட்டாகக் கட்டுப்படுத்தத் தயாராக உள்ளனர். இலங்கையின் நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் திறன் மேம்பாட்டை ஆதரிக்கவும், காவல் துறைக்கு உதவி வழங்கவும் சீனா தன்னால் இயலுமான அனைத்தையும் செய்யத் தயாராகவுள்ளது.
  10. ஜனாதிபதி ஷீ ஜின்பிங் முன்மொழிந்த உலகளாவிய அபிவிருத்திக்கான முயற்சி, உலகளாவிய பாதுகாப்பு முயற்சி மற்றும் உலகளாவிய நாகரிக முயற்சி ஆகிய மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், அவ்வளர்ச்சியில் தீவிரமாக பங்கேற்பதற்கும் இலங்கை தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலகட்டத்தில் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையானது, 2025 ஆகிய இவ்வாண்டில், தனது 80 வது ஆண்டு நிறைவைக் குறித்து நிற்கிறது. ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச முறைமை, சர்வதேச சட்டத்தால் ஆதரிக்கப்படும் சர்வதேச ஒழுங்கு மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளுகிணங்க  சர்வதேச முறைமையொன்றை  நிலைநிறுத்துவதற்கான தனது இணைந்த உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு தரப்பினரும் அமைதியான சகவாழ்விற்கான ஐந்து கொள்கைகளை கடைபிடிப்பதுடன், சமமான மற்றும் சீரான பன்முக உலகம் மற்றும் உலகளாவிய அடிப்படையில் நன்மை பயக்கும் மற்றும் அனைத்தும் உள்ளடங்கலான பொருளாதார உலகமயமாக்கலை கூட்டாக ஆதரிப்பது மட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் அமைதி, பாதுகாப்பு, செழுமை மற்றும் முன்னேற்றத்துடனான பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செயற்படுவர்.
  1. இவ்விஜயத்தின் போது, விவசாயம், சுற்றுலா, வாழ்வாதார உதவி, ஊடகம் மற்றும் ஏனைய துறைகளில் இரு தரப்பினரும் ஒத்துழைப்பு ஆவணங்களில் கைச்சாத்திட்டனர்.
  2. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், சீனத் தலைமையை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி விடுத்த அன்பான அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் இராஜதந்திர ரீதியில் சிறப்பான தொடர்புகளைத் தொடர்ந்தும் சிறப்பாகப் பேண இணங்கினர்.
     

https://oruvan.com/meetings-held-and-decisions-taken-during-anurags-visit-to-china/

Checked
Sat, 04/26/2025 - 00:24
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr