(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கும் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீன அரசாங்கத்தின் ஒரே மண்டலம் ஒரே பாதை வேலைத்திட்டத்துக்கு இலங்கை முழுமையாக ஆதரவளிப்பதாகவும் அந்த வேலைத்திட்டத்துக்குள் அடங்கிய பல வேலைத்திட்டங்களை இலங்கைக்குள் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பது பாரிய விடயமாகும். ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்திய விஜயத்தின் பின்னர் வெளியிட்ட கூட்டு பிரகடனத்தில், இலங்கையின் பூமியை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகும் வரை வேறு எந்த நாட்டுக்கும் பயன்படுத்த இடமளிப்பதில்லை என தெரிவித்திருந்தார்.
அதேநேரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கும் பல்வேறு வாங்குறுதிகளை வழங்கியிருப்பதை பார்க்கும்போது, இலங்கைக்குள் பல்வேறு உலகளாவிய அரசியல் வேலைத்திட்டங்களுடன் இந்து சமுத்திரத்தில் செயற்பட்டுவரும் பல்வேறு அதிகாரம் படைத்தவர்களுக்கு, ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இலங்கை வாக்குறுதி வழங்கி வருகிறது. இது அரசியல் ரீதியில் மிகவும் எச்சரிக்கையான நடவடிக்கையாகும்.
இதன்மூலம் வலயத்தில் அதிகாரமுடையவர்கள் உலக அதிகாரம் படைத்தவர்களுக்கு ஏகாதிபத்தியவாதிகளுடன் ஏற்படுகின்ற சண்டையின்போது இலங்கை முழுமையாக ஈடுபட இடமிருக்கிறது.
யுத்தமொன்றுக்கு இலங்கை இலக்காக இடமிருக்கிறது. கூட்டு பிரகடனம் இரண்டையும் மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அம்பாந்தோட்டை மாவட்டம் உள்ளிட்ட தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
துறைமுகத்தை அண்மித்ததாக எண்ணெய் சுத்திகரிப்பு ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் கப்பல் மூலமான எண்ணெய் விநியோகம் முற்றாக சீனாவுக்கு செல்லும். தற்போதும் திருகோணமலை எண்ணெய் குதங்களில் இருந்து கப்பல் மூலம் எண்ணெய் விநியோகிக்கும் உரிமம் இந்தியாவுக்கே இருந்து வருகிறது.
இந்தியாவில் இருந்து திருகோணமலை வரை செல்லும் எண்ணெய் குழாய், கொழும்புவரை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்ட பின்னர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு இறங்குதுறை இந்தியாவிடமும் தெற்கு இறங்குதுறை சீனாவிடம் இருக்கும் நிலையில், கொழும்பு முறைமுகத்தின் இருந்தும் எங்களுக்கு கப்பல் மூலம் எண்ணெய் வருமானம் எங்களுக்கு இல்லாமல் போகிறது.
எனவே அம்பதந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய பின்னர், அவர்களின் யுத்தக்கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிப்பதை எங்களுக்கு தடுக்க முடியாது.
இந்தியாவுடன் இதனை பார்த்தால் அதே பிரச்சினை திருகோணமலை துறைமுகத்திலும் இடம்பெறும். எனவே இவ்வாறான இணக்கப்பாடுகள் மூலம் நாங்கள் மிகவும் பயங்கரமான உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் என்றார்.
https://www.virakesari.lk/article/204364