2 months 4 weeks ago
“இந்த தீர்ப்பு பாரபட்சமானது ; அரசியல் உள்நோக்கம் கொண்டது” - ஷேக் ஹசீனா 17 Nov, 2025 | 06:02 PM டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் 2024ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களின்போது ஷேக் ஹசீனா தனது அரசியல் மற்றும் பதவி பலத்தை பிரயோகித்து பிறப்பித்த கடுமையான உத்தரவுகளால் பல வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக இன்று (17) டாக்கா நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது. அத்துடன் அவர் பதவி நீக்கப்பட்டது முதல் இந்தியாவில் தலைமறைவாகியிருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளின்போதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் தலைமறைவாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு எதிராக டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விதித்த மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “நான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. எனக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தீரப்பு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாரபட்சமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. கடந்த ஆண்டு போராட்டம் நடந்தபோது நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம். எனவே, அதனை குடிமக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல் என்று வகைப்படுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230607
2 months 4 weeks ago
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை Nov 17, 2025 - 06:45 PM இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு இன்று (17) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழக மீனவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த ஏனைய 28 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதுவும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10 வருட காலப்பகுதிக்குள் மீண்டும் எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்படும் காலப்பகுதியில் விதிக்கப்படும் தண்டனையுடன், 18 மாத சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படகின் உரிமையாளர்களுக்கு படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 31 மீனவர்களும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஊடாக மீரிகம முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmi363s8201puo29nc77e8eh5
2 months 4 weeks ago
பாராட்டுக்கள்! ஆனால், சரியாக ஒரு வருடம் கழித்து இந்த யூ ரியூபர் இதே படகைச் சென்று பார்த்து வீடியோ போட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். படகின் உள்ளக வர்ணத்தை நம் ஊரின் சூழ்நிலை தெரியாமல் வெள்ளையாக ஆக்கியிருக்கிறார்கள். என்ன ஆகுமோ தெரியவில்லை😂!
2 months 4 weeks ago
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - இந்தியாவுக்கு வங்கதேசம் விடுத்த கோரிக்கை பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தார் 17 நவம்பர் 2025, 09:45 GMT வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது. டாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார். இதனிடையே, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு இந்திய அரசும் பதிலளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் 453 பக்க தீர்ப்பை வாசித்த நீதிபதி முகமது குலாம் முர்தாசா மஜும்தார், இது ஆறு பகுதிகளாக வழங்கப்படும் என்று கூறினார். தீர்ப்பு அறிவிப்பு வங்கதேச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஜூன் மாதம் வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக ஐந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. இதன் அடிப்படையில், ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோருக்கு எதிராகவும் தீர்ப்பாயம் கைது வாரண்டுகளை பிறப்பித்தது. கடந்த ஆண்டு, வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது தொடர்ச்சியான வன்முறைகள் நடந்தன. அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஷேக் ஹசீனா ஆட்சியை இழக்க வேண்டியிருந்தது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டிலிருந்து தப்பிக்க நேர்ந்தது. அப்போதிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். படக்குறிப்பு, திங்கள் கிழமை தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'உடனடியாக ஷேக் ஹசீனாவை அனுப்புக' - இந்தியாவுக்கு கோரிக்கை தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரியுள்ளது. வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது . அதில், "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தப்பியோடிய ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது. "மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களுக்கு எந்த நாடு அடைக்கலம் வழங்கினலும் அது நட்பற்ற நடத்தையாகவும், நீதியை அவமதிக்கும் ஒரு செயலாகவும் இருக்கும்." "இந்திய அரசாங்கம் உடனடியாக இரு குற்றவாளிகளையும் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் பொறுப்பாகும்" என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வங்கதேச வெளியுறவு ஆலோசகர், அவர்களை திருப்பி அனுப்பக் கோரி வங்கதேசம் பலமுறை கடிதங்களை அனுப்பியதாகவும், ஆனால் இந்தியாவிடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். இந்திய அரசின் பதில் என்ன? இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து அந்நாட்டின் "சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்" வழங்கிய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். நெருங்கிய அண்டை நாடாக, இந்தியா அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை உள்ளிட்ட வங்கதேச மக்களின் நலன்களுக்கு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா எப்போதும் அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலவிய சூழல் டாக்காவில் உள்ள பிபிசி செய்தியாளர் அருணோதய் முகர்ஜி நீதிமன்றத்தில் நிலவிய சூழல் குறித்து விவரித்துள்ளார். அதன்படி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த பலர் கொண்டாடியுள்ளன. சிலர் அவரை "தூக்கில் போட வேண்டும்" என முழக்கமிட்டதை பிபிசி செய்தியாளர் பார்த்துள்ளார். இது சில நொடிகள் நீடித்த நிலையில், பின்னர் அவர்களை கண்ணியம் காக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், "கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்" என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது. ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. "ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை 'ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்' என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார். வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் ஒரு இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது. படக்குறிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதே தீர்ப்பாயத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், "குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்." என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது. ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷேக் ஹசீனா கூறியது என்ன? நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். "அவாமி லீக்கை ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த வழக்கு ஓர் 'கேலிக்கூத்து' என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். மேலும், "சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gw1yn0037o
2 months 4 weeks ago
17 Nov, 2025 | 01:57 PM (ஸ்டெப்னி கொட்பிறி) மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை கோபுரத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 21 ஆம் திகதி மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மீன்பிடித்துறையையும் நீரியல் வளத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், நவம்பர் 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள தாமரை கோபுர வளாகத்தில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 'அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டில் உள்ள மீன் வளத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசமாகும். சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிய வகை மீன்களை மக்கள் பார்வையிட முடியும். நாட்டின் நீரியல் துறையை அபிவிருத்தி செய்வதற்கும் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுக்கும் முயற்சியின் ஒரு பங்காக இந்த கண்காட்சி உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230563
2 months 4 weeks ago
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் சங்கக்கார! Nov 17, 2025 - 01:19 PM இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய குமார் சங்கக்கார வழிநடத்தலில் சஞ்சு செம்சுன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் 2024 உலகக் கிண்ண வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார். ஆனால் சஞ்சு செம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார். இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வழிநடத்துவதற்காக மீண்டும் குமார் சங்கக்கார தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக சங்கக்கார நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI வீடியோவை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை AI மூலமாக சங்ககாரா நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர். ஹுகும் பாடலின் இந்தி வெர்சனை இந்த எடிட் வீடியோவிற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmi2uflpf01p5o29n77iwr40o
2 months 4 weeks ago
மருதமுனை ஆளெண்டபடியால் மடவள நியூஸ், ஜப்னா முஸ்லிம் போன்ற இணையத் தளங்கள் அடக்கி வாசிக்கின்றன. ஒரு தமிழனா இருந்திருந்தால் இப்ப பெயர் விபரம் அட்ரஸ் எல்லாம் வந்திருக்கும்.
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
17 Nov, 2025 | 04:18 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (17) காலை முன்னெடுத்துள்ளனர். கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தவிசாளர் உடனடியாக மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்! | Virakesari.lk
2 months 4 weeks ago
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான நெதர்லாந்து பெண் ஒருவரை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததையடுத்து, குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிஸார் வெளியிட்டு அவர் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து குறித்த நபர் தொடர்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) திருக்கோவில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொகலந்தலாவையைச் சேர்ந்தவர் எனவும், களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடமாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்ட போது அவர் அங்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் மருதமுனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைத்துக்கு அருகில் தனது தலையை மொட்டையடித்து, தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இருந்தபோது அங்கு வைத்து குறித்த நபரை கைது செய்து பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை (17) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
2 months 4 weeks ago
17 Nov, 2025 | 04:31 PM யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்று திங்கட்கிழமை (17) குறித்த சிலை கரை ஒதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில் , அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரை ஒதுங்கி இருக்கின்றன. அவ்வாறே சேதமடைந்த சிலையை கடலில் போட்ட நிலையில் அந்த சிலை வளலாய் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த சிலை தற்போது வளலாய் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலை கரையொதிங்கியமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் கரை ஒதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை | Virakesari.lk
2 months 4 weeks ago
இந்த கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று யாருக்காவது தெரியுமா? கழிவிலிருந்து உயிர்வாயு (Biogas) எனப்படும் மீதேன் வாயுவை உற்பத்தியாக்கி, அதன் மூலம் நீராவி உருவாக்கி மின்சாரமா? மீதேன் வாயு, காபனீரொட்சைட்டை விட 6 மடங்கு மோசமான ஒரு பச்சை வீட்டு விளைவு வாயு. இதனால் சூழல் மாசடைதல் மோசமாகாதா?
2 months 4 weeks ago
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சட்டம் - ஒழுங்கு காக்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால 17 Nov, 2025 | 02:07 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) திருகோணமலை பகுதியில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பாக இரவு பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து புத்தர் சிலை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் திருகோணமலை நகரில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வில் போது திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தமையால் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து சபைக்கு அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, திருகோணமலை கோட்டை சம்போதிதாகம் பாடசாலையின் சம்புத ஜயந்தி விகாரையுடன் தொடர்புடைய சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை தொடர்பாக இரவு பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தக்கூடிய நாசகார செயற்பாடு தொடர்பாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொலிஸார் குறித்த புத்தர் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். அவசரமாக புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அங்கே பிரச்சினை எழுந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த புத்தர்சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து இது தொடர்பில் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அங்கே சிற்றுண்டிச்சாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதனால் நீதிமன்ற தீர்ப்புக்கு அமையவே செயற்பட வேண்டும். இவ்வாறான நிலைமையில் அங்கே புத்தர் சிலை தொடர்பில் எழுந்த பிரச்சினைகளால் அதன் பாதுகாப்பு கருதி அந்த புத்தர்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அது இன்று (நேற்று) காலையில் விகாரையில் தாகம் பாடசாலை பகுதியில் பிரதிஸ்டை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காணி தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்து நீதிமன்ற தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் விடயங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும். எவ்வாறாயினும் புத்தர்சிலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் துரதிஸ்டவசமான சம்பவங்கள் திருகோணமலை நகரில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சட்டம் - ஒழுங்கு காக்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால | Virakesari.lk அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்! அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்! அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. தே. ம. சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் - சுமந்திரன் சீற்றம்!
2 months 4 weeks ago
முல்லைத்தீவு கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம் 17 Nov, 2025 | 06:47 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலே கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்ல பிரதேசத்தை அண்டிய அயல் கிராமங்களில் உள்ள மக்கள் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அனைவரையும் குறித்த சிரமதான பணிக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் பணிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம் | Virakesari.lk
3 months ago
3 months ago
ஈழத்தமிழர்களும் அவர்களது பிரச்சினையும் தான் "உலகத்தின் மையம்" என்ற நினைவில் நிக்சன் சீனாவில் நடக்கும் "சட்ட ஆட்சி"😎 யை விபரித்திருக்கிறார் என நினைக்கிறேன். நிக்சனின் இந்த விதந்துரைப்பை திபெத்தியர்களிடமும், சிங்ஜியாங் பிரதேச முஸ்லிம் சீனர்களிடமும் காட்டினால் சக துவாரங்களாலும் சிரிப்பார்கள் என நினைக்கிறேன்!
3 months ago
ரேடியோவுக்குள்.... எப்படி பேசும் ஆள், உள்ளே போனார். நல்லது செய்தால், நல்லது நடக்கும். இப்ப தான் தெரியுது எவ்வளவு பொய் அது. வெத்தலை போட்டால்... கோழி கொத்தும். பணம், பதவி... படைத்தவன் பொய் சொல்ல மாட்டான். அவன் நல்லவன். பணக்காரர்களுக்கு தான்.... Sugar, B P நோய் எல்லாம் வரும். பொய் சொன்ன வாய்க்கு, போஜனம் கிடைக்காது. பல்லு விழுந்த உடனே... அதை மண்ணிலே புதைக்காமல் விட்டால், அது திரும்ப முளைக்காது. தப்பு செய்தால்... சாமி கண்ணை குத்தும். நான் உங்களை மட்டும் தான், love பண்ணுறேன். டிகிரி படித்தவுடன் வேலை கிடைத்து விடும் என்று நம்பியது. மழையும் வெயிலும் ஒரு சேர வந்தால்... யானைக்கும், பூனைக்கும் கல்யாணம் நடக்கும். எம். ஜி. ஆர். அணியும், கூலிங் கிளாஸ் வழியாக பார்த்தால்... "ஆண், பெண் அனைவரும் ஆடை இல்லாமல் தெரிவார்கள்!"
3 months ago
கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் இந்தியாவுக்கு போகும் விமானங்களில் கொழும்பிலிருந்து கூடுதலான நிறையுடைய பொதியையும் யாழிலிருந்து குறைவான பொதியையுமே கொண்டுபோக அனுமதிக்கிறார்கள். ஒரே நிறையுடைய பொதிகளைக் கொண்டுபோக விட்டால் பல தமிழ் சிங்கள மக்கள் யாழ் விமானநிலையத்தையே விரும்பி பாவிப்பார்கள் என்கிறார்கள்.
3 months ago
17 Nov, 2025 | 07:13 PM திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (17) தனது பாராளுமன்ற உரையில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்... திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை ஞாயிற்றுக்கிழமை (16) அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள். இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். நீங்கள் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!! அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது. உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள். என, நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது திருமலை சட்ட விரோத விகாரை அமைப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் உரையாற்றினார். "உங்களை நம்பி, நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி, உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள்" - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk
3 months ago
Checked
Tue, 02/17/2026 - 12:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed