புதிய பதிவுகள்2

கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship

2 months 4 weeks ago
நம்ம முயற்சிதான் மறுப்பதற்கில்லை. ஆனால் கொஞ்சம் அளவு சின்னதாக, ஹவுஸ்போர்ட் போல செய்து விலையும் குறைவாக விற்றால் கிராக்கி இருக்கலாம். மோட்டோர்ஹோம், ஹவுஸ் போர்ட் இன்னும் இலங்கையில் பெரிதாக வளராத ஆனால் வாய்புள்ள விடயங்கள்.

கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship

2 months 4 weeks ago
ஒரு திறமையான முயற்சி ஆதரவு கிடைத்தால் இன்னும் பெரிய சொகுசுக்கப்பல்களை ஓட விடலாம்

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

2 months 4 weeks ago
யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது 😂

யாழில் கரை ஒதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

2 months 4 weeks ago
சில மாதங்களுக்கு முன்னர் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்த அந்த நாட்டின் குடிமக்கள் சிலரை நாடு கடத்தியதாகக் ??? கேள்விப்பட்டேன். அதேபோல இந்தச் சிலையையும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்🤪

திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

2 months 4 weeks ago
பொத்துவில் பக்கம் எண்டதும் உங்கட எண்ணம் “அங்க” ஓடுது போல😂. பொலவந்தலாவ, எருவிலில் திருமணம் எண்டால் தமிழராக இருக்கவே வாய்ப்பு என நினைக்கிறேன். கவனம் 😂. பிகு வீடியோ பார்த்தனான். இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.

குட்டிக் கதைகள்.

2 months 4 weeks ago
தினமும் ஒரு வரி தத்துவம் · Suivre onsertSpdolc666m7t7fg19t30uah2m4h6141c2cm5tf 0mm2mg3a41t6cfi · படித்து பகிர்ந்து 🌹 தினம் ஒரு குட்டிக்கதை - வாய்ப்புகள் ஏராளம்... ஒரு ஊரில் தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரை பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிடுவார். அவருடைய கை, கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்தியபோது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளியே வந்தார். இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்தபோது அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அறைக்கதவை திறந்து வெளியே வந்தார். அவர் எப்படி இதனை செய்கிறார்? என்ன யுக்திகளை மேற்கொள்கிறார்? என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்க முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது. இதுவரை அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர்கூட தப்பித்தது இல்லை என்னும் சான்றும் பெற்றது அந்த சிறைச்சாலை. இதனை கேள்விப்பட்ட அந்த மாயாஜால கலைஞர் தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும் படியும், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு வெளிக்காட்டுகிறேன் என்றும் கூறினார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், அவரை சிறைச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை மூடினர். உள்ளே சென்று அவர் முதலில், தான் அணிந்திருந்த இடுப்பு பட்டையில் ஒளித்து வைத்திருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார். பின்னர் அந்த கம்பியை வைத்து கதவில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பூட்டை திறக்க முற்பட்டார். அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து இரண்டு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மை பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவை கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார். கதையின் நீதி:- நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில் வாய்ப்புகள் இல்லை என்று பூட்டு போட்டுக்கொண்டு உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளம். அந்த வாய்ப்புகளை தேடி நாம் சென்றோம் என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். படித்ததில் பிடித்தது. ~மகிழா. 💃" - மீள் பதிவு. 🌹 Voir la traduction

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

2 months 4 weeks ago
மன்னிப்பு கேட்டதாகவும் செய்தி வருகுது....மைதானத்தில் நல்ல பிள்ளையாக இருந்த பும்ரா ...ஆசியகப் ..பாகிஸ்தான் மச்சிலிருந்து ...குளப்படி காரனாக மாறியிருக்கிறார் இந்தியாவின் பிச் விளையாட்டு இந்தியாவையே பிச்சு விட்டுது...இந்தியாவின் இறுதி இன்னிச் துடுப்பாட்டத்தை..பார்க்கையில்...பனங்காணிக்குள் ரப்பர் பந்தில் விளையாடிய கிரிக்கட்டுப் போல இருக்குது..

கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!

2 months 4 weeks ago
கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றிய விளக்கம் இந்திய தமிழ் படங்களில் வந்திருக்கும்.

திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

2 months 4 weeks ago
கைது செய்தவர் படம் காட்டுறியள்... வயது போடுறியள்...இடம் போடுறியள் ...ஏன் ..பெயர் ,இனத்தை மறைக்கிறியள்

கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship

2 months 4 weeks ago
ஒரு வருடத்தில் 50 இலட்சத்துக்கு வரும் எண்டால் வாங்கி பண்ணை கடலில் கட்டி விடலாம் என உள்ளேன்😂. ஓடவிட்டுப்பார்த்தேன்…படுக்கை அறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை - ஒரு 4birth cruiser போல இதை மாற்றினால் - வாடகைக்கு விட்டு காசு பார்க்க முடியும்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 4 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......! Englishதமிழ் பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே பெண் குழு : இளமை……இளமை……இனிமை இது புதுமை ஆண் : நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே போதை தரும் நாதஸ்வரம்….. பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ….. பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம்…. ஆண் : பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே….. பெண் : மேகலை வாட்டியது அதை மேனியில் காட்டியது ஆண் : சிறு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் குறி போடல் சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே பெண் : அறிமுகம்…..அனுபவம்…..அது சுகம் அழகன் மடியில் எனது உலகம் பெண் : மாலை வரும் வரும்……. மாலை தரும் தரும்….. மாவிலை பின்னிய தோரணங்கள்…… ஆண் : மங்கல வாத்தியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்…. பெண் : ஒரு வானம் கரு மேகம்….. மழை போலும் மலர் தூவும் மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள்….. குழு : முதல் முதல் இரவென்ன வருவது மகிழ மனது நெகிழ வருக ஆண் : தந்தோம் தனம் தனம்… தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன…. தந்தோம் தனம் தனம்… தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன…. ஆண் : அது என்ன நூதனமோ…….. உங்கள் ஆசையின் சாதனமோ…… அது என்ன நூதனமோ…….. உங்கள் ஆசையின் சாதனமோ…… ஆண் : மனம் தந்தும் தனம் தந்தும் இதழ் சிந்தும் ரசம் தந்தும் தரும் இன்பம் பல தந்தும் வரும் சொந்தம் இவள் சீதனமோ பெண் : பலவித சுகங்களின் தரிசனம் விழியும் மனமும் உருக வருக ஆண் : போதை தரும் நாதஸ்வரம்….. பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ….. பெண் : பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம்…......! --- நான் ஒரு பொன்னோவியம் ---
Checked
Tue, 02/17/2026 - 12:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed