புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
அவலை நினைத்து உரலை இடிப்பது என்ன பானை கிளாஸ் எல்லாம் இடித்து உடைக்கலாம் எனெனில் நாங்கள் பாதுகாப்பான மேற்குலக நாடுகளில் பவுத்திரமாக இருக்கின்றோம்

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

3 months ago
பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் அரை இறுதி போட்டிக்கு தெரிவாவ‌து ப‌க‌ல் க‌ன‌வு😁😛 அவுஸ்ரேலியா இங்லாந் இந்தியா நியுசிலாந் இந்த‌ 4அணிக‌ள் சிமி பின‌லுக்கு போவின‌ம் , மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் ஆர‌ம சுற்றுட‌ன் வெளிய‌..................தென் ஆபிரிக்கா ம‌க‌ளிரும் ந‌ல்லா விளையாடுகின‌ம் , பாப்போம் போட்டி முடிவில்.....................................

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months ago
இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை த‌மிழ‌க‌ வீர‌ர் அவ‌ரின் முத‌ல் டெஸ்ட் போட்டியில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி விட்டார்..................................

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

3 months ago
போட்டி ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும்...................காலி மைதான‌த்தில் டெஸ்ட் போட்டி ப‌ல‌ வ‌ருட‌மாய் ச‌ம‌ நிலையில் முடிந்த‌து கிடையாது 5வ‌து நாள் பிச் மாறு ப‌ட்டால் விக்கேட் விழ‌க் கூடும் இல்லையேன் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.......................

Demand justice for Tamil disappeared

3 months ago
https://chng.it/ZZCGSdj7Bn Justice for the Forcibly Disappeared: Ensure Truth, Justice, and Accountability for Chemmani and Beyond We, the undersigned, call upon the Government of Sri Lanka to take immediate, transparent, and meaningful action to address the long-standing issue of enforced disappearances and mass graves, including the recent discovery at Chemmani, Jaffna. The excavation at the Ariyalai Siththupaaththi Hindu Crematorium has already uncovered 19 bodies, including three infants. This painful discovery has reopened the wounds of thousands of families whose loved ones were forcibly disappeared during Sri Lanka’s brutal civil war. Chemmani is not just a site of unmarked graves—it symbolizes decades of state denial, coverups, and broken promises. மேலே உள்ள சுட்டியை அழுத்தி உங்கள் விபரங்ளை பதிந்து நீதி கேளுங்கள்.

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 months ago
யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கட்டி..எழுப்பும்போது...தயிட்டி விகாரை மாதி பத்தை கட்டிவிட்டல் ...கம்பீரமாக எழுந்து நிற்கும்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
அமெரிக்கா எடுத்த‌துக்கை எல்லாம் மூக்கை நுழைக்குதே குரு........................ சீனாவின் நோக்க‌ம் பொருளாதார‌த்தை க‌ட்டி எழுப்புவ‌து , அமெரிக்காவின் நோக்க‌ம் அடுத்த‌வ‌ன் நாட்டில் குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணி குளிர் காய்வ‌து........................... நான் உங்க‌ளுக்கு முன்பும் ஒரு முறை சொல்லி இருக்கிறேன் அமெரிக்க‌ன் விளையாட்டை நேசிக்கும் அள‌வுக்கு அமெரிக்கா அர‌சிய‌லை முற்றிலுமாய் வெறுக்கிறேன் என‌ அதுக்கு பல‌ கார‌ன‌ங்க‌ள் இருக்கு ஆமை புகுந்த‌ வீடும் அமெரிக்கா புகுந்த‌ நாடும் இந்த‌ உல‌கில் முன்னேறி இருக்கா😛......................... ஈரான் என்ர‌ நாட்டை அமெரிக்கா என்ர‌ ந‌ச்சு பாம்பு எவ‌ள‌வு கால‌த்துக்கு வ‌ஞ்சிக்குது..........................அந்த‌ நாட்டின் மீது பொருளாதார‌ த‌டை அதோட‌ அவ‌ர்க‌ள் அந்த‌ குண்டை செய்ய‌க் கூடாது இந்த‌க் குண்டை செய்ய‌க் கூடாது என்று சொல்ல‌ அமெரிக்காவுக்கு யார் அந்த‌ உரிமையை கொடுத்த‌து இவ‌ர்க‌ள் ம‌ட்டும் உல‌கை அழிக்கும் குண்டுக‌ள் போர் விமான‌ங்க‌ளை செய்து ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு விற்று காசு பாப்பின‌ம்...........................த‌ன‌து நாட்டின் இறையான்மைய‌ பாதுகாக்க‌ ஈரான் அணுகுண்டு செய்வ‌து இவ‌ர்க‌ளுக்கு உருத்துது..............................ஈரான் துணிவோட‌ அமெரிக்காவை தூக்கி எறிந்து விட்டின‌ம் , இனி எல்லாம் நீ சொல்வ‌தை கேட்க்க‌ முடியாது என்று.........................20வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ உல‌க‌ம் வேறு இப்ப‌ இருக்கும் உல‌க‌ம் வேறு.........................ஒரு வ‌ல்ல‌ர‌சு நாடு என்றால் எப்ப‌வும் ந‌டு நிலையா செய‌ல் ப‌ட‌னும் , த‌ன‌க்கு வேண்ட‌ ப‌ட்ட‌வ‌னுக்கு ம‌ட்டும் பின்னால் போய் க‌ழுவி விடுவ‌து தான் அமெரிக்காவின் செய‌ல் , ஒரு கோடி யூத‌ர்க‌ளுக்காக‌ எத்த‌னை கோடி ம‌க்க‌ளின் வெறுப்புக்கு இப்போது அமெரிக்கா ஆளகி இருக்கு.........................ஈரான் மீது அமெரிக்கா கைவைத்தால் ஈரானின் ந‌ட்பு நாடுக‌ள் வேடிக்கை பார்ப்பின‌மா.....................ஈரானின் ந‌ட்பு நாடுக‌ளிட‌மும் அதிக‌ ச‌க்தி வாய்ந்த‌ குண்டுக‌ள் இருக்கு அதை அவ‌ர்க‌ளும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ தொட‌ங்கினால் உல‌கில் அமைதி இருக்குமா............................. ஹாசாவில் அத்த‌னை ம‌ருத்துவ‌ம‌னைய‌ த‌க‌ற்க்க‌ ஆயுத‌ம் கொடுத்த‌ நாடு அமெரிக்கா , புது வ‌கை ஆயுத‌ங்க‌ளை ஹாசா ம‌க்க‌ள் மீது போட்டு ஆராச்சி ப‌ண்ணின‌வை அந்த‌ குண்டுக‌ள் எப்ப‌டி வெடிக்குது எப்ப‌டி க‌ட்டிட‌ம் இடிந்து விழுகுது என்று பார்க்க‌........................யாராவ‌து புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னையை தாக்குவார்க‌ளா...................மன‌ ந‌ல‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் அப்ப‌டி செய்வாங்க‌ள் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ந‌ங்கு பொருந்தும்😡.............................

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

3 months ago
ஈரானை அமெரிக்கா விமானங்களால் தாக்கும் நிலைமைக்கு இஸ்ரேல்-இரான் போர் விரிவடைந்தால் ஐரோப்பாவை தளமாக வைத்தே அந்த விமானங்கள் இயக்கப்படும். மாறாக அமெரிக்காவின் கட்டார் விமானத்தளம் பயன்படுத்தப்பட்டால் கட்டாரை இரான் பதிலுக்கு தாக்க முற்படும். இதனால் எண்ணை விநியோகம் தடைப்படுவதுடன் அமெரிக்காவின் இதர முஸ்லிம் கூட்டு நாடுகளும் இந்தப் போருக்குள் இழுத்து விடப்படும் அபாயம் உண்டு. போரை இரானுக்குள் மட்டும் நடத்தி அதை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு நாடுகளுக்கு பரவிவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதிலும் இஸ்ரேல் அமெரிக்க அணி ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 months ago
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! adminJune 20, 2025 வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது. முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது. வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது. இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட, மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/217092/

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
பையன் சார், அமெரிக்கா அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் புதிதாக எதுவும் இல்லை. பலரும் இப்படியே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போல. சாதாரண வேலிச் சண்டையிலேயே பக்கத்து வீட்டுக்காரர்களை பாம்பு கடிக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் நாங்கள். இவ்வளவு செய்யும் அமெரிக்காவை விட்டு விடுவோமா என்ன. அமெரிக்கா போக இன்னொருவர் அந்த இடத்திற்கு வரப் போகின்றார் என்றால், அந்த மாற்றம் நடக்காமலேயே இருக்கலாம். எந்த தனி வல்லரசுமே தர்மம் அற்றது, சுயநலம் மிக்கது. வேற்றுமையில் ஒற்றுமை தேடுவோம் என்ற அடிப்படை சீனாவிடமோ அல்லது ரஷ்யாவிடமோ கிடையாது, அதனாலேயே நாங்கள் அங்கே குடியேறுவது கிடையாது. மேற்கு நாடுகளில் சிலரிடமாவது இந்த இயல்புகள் உண்டு. அதனாலேயே நாங்கள் மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றோம். சைனா தனிப்பெரும் வல்லரசாவதும், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக வந்ததும் ஒரே மாதிரியான நிகழ்வுகள். அவலை நினைத்து உரலை இடிப்பது போல...................

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

3 months ago
இவர் தான் புத்தகோவில் விவகாரத்தில் அரசுக்கு சார்பாக போய் பார்த்து அங்கே எதுவுமே இல்லை என்று சொன்ன ஆளோ?
Checked
Thu, 09/25/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed