புதிய பதிவுகள்2

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months ago
18 ஆண்டு ஏக்கத்தை தீர்க்குமா இந்திய இளம் படை? அணியில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் (5 போட்டிகள்) இன்று பிரிட்டனின் ஹெடிங்லியில் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை தொடங்குகிறது. 25 வயது ஆகிய சுப்மான் கில் 21-ம் நூற்றாண்டு இந்திய அணியின் இளம் கேப்டனாக உருவெடுத்துள்ளார். 18 ஆண்டுகள் வறட்சி 2007- ஆம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபின் 18 ஆண்டுகளாக பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருக்கிறது. ஆதலால், இந்த முறை இளம் கேப்டன் சுப்மன் கில் மீதும், இளம் வீரர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியில் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் முற்றிலும் இளமையான அதே நேரத்தில் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை அணுகுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை இன்று பிரிட்டனில் நடைபெறுகிறது டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று அது மட்டுமல்லாமல் 2025-27-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று இந்த டெஸ்ட் தொடரிலிருந்து தொடங்குவதால் இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் தொடரை முடிக்கவும் தீர்மானமாக இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணி 3-வது இடத்தையும், இங்கிலாந்து அணி, 22 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் 5-வது இடத்தையும் பிடித்தன. இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்றும், பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இழந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு டெஸ்ட் தொடர் தோல்விகள் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறின. 23 ஆண்டுகளுக்குப்பின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணியால் டெஸ்ட் வெற்றியைப் பெற முடியவில்லை. கடைசியாக 2021-ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்களில் இந்திய அணி தோற்றது. ஆதலால், இந்திய அணி இந்த மைதானத்தில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்றால்கூட கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் கழித்து கிடைத்த வெற்றியாகவே வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய கிரிக்கெட் அணி (கோப்புப் படம்) கில் தலைமைக்கு பரிசோதனை சுப்மன் கில் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி இதற்கு முன் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடருக்கு முதல்முறையாக கில் தலைமை ஏற்றுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் 5 முதல் தரப்போட்டிகளில் கில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், ரஞ்சிக் கோப்பையில் ஒரு முறை கேப்டன்ஷிப் செய்துள்ளார். ஒருநாள்போட்டி, டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது டெஸ்ட் கேப்டன்ஷிப். சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். ஐபிஎல் டி20 தொடரில் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார். சுப்மன் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கில் கேப்டன்ஷி செய்யும்போது பார்த்தேன், என்னை அவர் ஈர்த்துவிட்டார். அவரின் அமைதி, வியூகம் அமைக்கும் முதிர்ச்சி, முடிவெடுக்கும் திறன் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது," எனத் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த சாய் சுதர்சன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருப்பது கில்லுக்கு கூடுதல் பலத்தையும், எளிமையாக பணியைச் செய்யவும் வழிவகுக்கும். இவர்கள் தவிர ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட், கருண் நாயர் ஆகியோரும் டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரும் உள்ளனர். இங்கிலாந்து அணி ப்ளேயிங் லெவனை அறிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியில் இன்னும் ப்ளேயிங் லெவன் அறிவிக்கப்படவில்லை. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா - இவர்கள் உத்தேச ப்ளேயிங் லெவனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரில் சுப்மான் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார் சுப்மான் கில் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அருமையான தொடக்கத்தை அளித்த கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது வீரராக கருண் நாயர், அன்கேப்டு வீரர் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஐபிஎல் தொடரில் கலக்கலாக ஆடிய சுதர்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், 3வது இடம் யாருக்கு என்பது குழப்பமாக இருக்கிறது. விராட் கோலி களமிறங்கும் 4-வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார் என்பதால் அந்த இடம் நிரப்பப்பட்டுவிட்டது. 3-வது இடம் கருண் நாயருக்கு வழங்கப்பட்டால், அடுத்ததாக ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் சாய் சுதர்சனா அல்லது ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியா என்ற கேள்வி எழுகிறது. பந்துவீச்சிலும் 5வது பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்வதா அல்லது நிதிஷ் ரெட்டியை தேர்வு செய்வதா என்ற கேள்வியும் எழுகிறது. பிரிட்டன் மண்ணில் பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியதில் நிதிஷ் ரெட்டியை விட ஷர்துல் தாக்கூர் சிறப்பாக செயல்படுவார். பேட்டிங்கிலும் ஓரளவு நன்றாக செயல்படுவார் என்பதால் 8-வது வீரராக ஷர்துல் தாக்கூர் வரவும் வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சு வரிசையில் ஜடேஜா தவிர்த்து பேட்டிங்கில் வலுசேர்க்க வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் குல்தீப் யாதவ் களமிறங்கக்கூடும். வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ராணா ஆகியோரில் ஒருவர் களமிறங்கலாம். பிரிட்டன் பருவநிலைக்கு ஏற்றார்போல் ராணாவை விட பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்விங், பவுன்ஸர் இருக்கும் என்பதால், இருவரில் ஒருவர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இதில் இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வலைப்பயிற்சியில் கருண்நாயர் இவர்கள் இல்லை இந்திய அணி கடைசியாக 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் இருந்த விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா, புஜாரா, ஷமி, ரஹானே, அக்ஸர் படேல், இசாந்த் சர்மா, சூர்யகுமார், விஹாரி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் இந்த அணியில் இல்லை. 2022-ஆம் ஆண்டு 5வது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டன்ஷியில் இந்திய அணி ஆடியது. இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் சதம் விளாசினர். 98 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிம்மசொப்னாக திகழ்ந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி 378 ரன்களைத் துரத்தியதில் ரூட், பேர்ஸ்டோவின் சதம் வெற்றியைத் தேடித்தந்தது. மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து பிரன்டென் மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியிலும் ஆக்ரோஷமான 'பாஸ்பால்' ஆட்டத்தை விளையாடுகிறது. இங்கிலாந்து அணி, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் தொடரை அணுகுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். துணைக் கேப்டனாக ஓலே போப் நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், போப், ஸ்டோக்ஸ் என வலுவான வரிசை இருக்கிறது. இதில் ஜோ ரூட்டுக்கு மட்டுமே இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. பந்துவீச்சில் காயம் காரணமாக 6 மாதங்கள் ஓய்வில் இருந்த கிறிஸ் வோக்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார், அவர் தவிர்த்து பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகிய வேகப்பந்துவீச்சாளரும், ஷோயிப் பஷீர் சுழற்பந்துவீச்சாளரும் உள்ளார். இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் ஆட்டத்தை எந்தநேரத்திலும் திருப்பக்கூடியவர்கள் என்பதால், இந்திய அணி நடுவரிசை விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், கார்ஸ், டங் ஆகிய 4 வீரர்கள் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக களமிறங்குகிறார்கள். இவர்களின் பேட்டிங், பந்துவீச்சு குறித்து இந்திய வீரர்களுக்கும் தெரியாது, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சு குறித்தும் இவர்களுக்கும் தெரியாது என்பதும் சவாலாக இருக்கும். டாப் ஆர்டர் பேட்டர்கள் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டால் நடுவரிசை பேட்டர்கள் ஆட்டத்தை கையில் எடுத்துவிடுவார்கள், இதற்கு வாய்ப்பளிக்காமல் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட வேண்டும். இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஓலே போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேம் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க், ஷோயிப் பஷீர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். ஆடுகளம் எப்படி? ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது. பிரிட்டனில் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயில் நன்றாக இருக்கும் என்பதால், தொடக்கத்தில் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஓரளவுக்கு பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும். ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ராபின்ஸன் அளித்த பேட்டியில் "வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை பேட்டர்கள், பந்துவீச்சாளர்களுக்கு சமமாக இருக்கும் வகையில் மாற்றியிருக்கிறோம். புற்களை அதிகமாக விட்டு வைக்காமல் குறைத்துவிட்டோம். ஆதலால், ஸ்விங், பவுன்ஸ் இருக்கும், பேட்டிங்கும் நன்றாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்கலாம். முதல் 3 நாட்கள் வெயில் இருக்கும் என்பதால் முதல் இன்னிங்ஸில் பேட்டர்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் கடைசி இரு நாட்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதால், குளிர்ந்த சூழல், காற்றின் வேகம், ஆடுகளத்தின் தன்மை ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது (கோப்புப்படம்) இதுவரை இங்கிலாந்து-இந்தியா இந்திய அணி கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன் 2007-ம் ஆண்டு திராவிட் தலைமையில் டெஸ்ட் தொடரை பிரிட்டன் மண்ணில் வென்றது. அதேபோல ஹெடிங்லி மைதானத்தில் கடைசியாக 2002ல் வென்றது, 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி வெல்லவில்லை. முதல் போட்டியில் வெற்றியும், டெஸ்ட் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு வரலாறாக இருக்கும். இரு அணிகளும் கடந்த 1932ம் ஆண்டிலிருந்து 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 51 வெற்றிகளும், இந்திய அணி 35 வெற்றிகளும் பெற்றுள்ளன, 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 2024ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து சென்றது. இந்திய அணியும் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் செய்து 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தொடக்கத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வெல்லும் சூழலில் இருந்தது, ஆனால், கொரோனா தொற்று காரணமாக 2022 ஜூலை மாதம் டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g8mmr7ln4o

தினக்குரல் ''கார்ட்டூனிஸ்ட்'' மூர்த்தி காலமானார்

3 months ago
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:56 PM தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார். அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருதுகளையும் 2 கலசப்பதக்கங்களையும் பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/217990

சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் டில்வின் சில்வா

3 months ago
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாடு திரும்பினார் 20 JUN, 2025 | 10:43 AM சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China) அழைப்பின் பேரில் சீனாவுக்கு 10 நாட்கள் விஜயம் மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று வியாழக்கிழமை (19) மாலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார். சீனாவின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலாத் தளங்களை பார்வையிடும் நோக்கமாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. டில்வின் சில்வாவுடன் சுமார் 29 பேர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட 29 பேர் நேற்று மாலை 06.20 மணியளவில் சீனா விமான சேவையின் எம்.யு - 231 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த விஜயத்தின் போது இலங்கையின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217968

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

3 months ago
எவ்வளவு நிதானமாக மரியாதையான சொற்களுடன் உங்களுக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இதற்கு மேல் நற்சொற்கள் வராது என்று தெரியும். சக மனிதர்களை அற்பர்கள் என்றபடி அறிவு மற்றும் விழிப்புணர்வு பற்றி பேசும் தகுதியுடையவர்கள் அன்று. அவர்களுக்கு வேறு பெயர்.

விந்தணு ஒவ்வாமை: விந்து பட்டவுடன் சில பெண்களின் உடலில் கடும் பாதிப்பு ஏற்படுவது ஏன்?

3 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டின் ரோ பதவி, 20 ஜூன் 2025, 02:05 GMT எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார். அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார். "(பாதுகாப்பற்ற) பாலுறவுக்குப் பிறகு என் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டதை நான் கவனித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். மௌரா (தனியுரிமையைப் பாதுகாக்க அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது துணையிடம் இதைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை. எனவே, அவர் வெளியேறும் வரை காத்திருந்து, பின்னர் தன்னை நன்கு சுத்தப்படுத்திக் கொள்வார். சோப்பு முதல் லூப்ரிகன்ட் (Lubricant) வரை தான் பயன்படுத்தும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை மாற்ற முயன்றார். ஆனால் பிரச்னை தீவிரமடைந்தது, வீக்கம் மற்றும் சிவந்து போகுதல் என அது தொடர்ந்தது. குறிப்பாக, விந்துவுடனான தொடர்புக்கு பிறகுதான் இதெல்லாம் நடந்தது. விந்து ஒவ்வாமை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசியில் மௌரா அந்தத் துணையிடமிருந்து பிரிந்து, ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கும் இருக்கும் ஒருவரை விரும்பத் தொடங்கினார். "சில நாட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஒரு இரவில் உடலுறவுக்குப் பிறகு நாங்கள் படுக்கையில் படுத்திருந்தபோது, என் நாக்கு திடீரென்று வீங்கத் தொடங்கியது," என்று மௌரா நினைவு கூர்ந்தார். "என்ன நடக்கிறது என்பதைக் கண்ட என் துணை, 'உனக்கு மூச்சுத் திணறுகிறது!' என்று கத்தினார். என் இன்ஹேலரை தேடி எடுத்து, என் வாயில் திணித்து, அதை இயக்கினார். அதிர்ஷ்டவசமாக, மருந்து என் நுரையீரலுக்குள் செல்லும் அளவுக்கு நான் சுவாசித்துக் கொண்டிருந்தேன்." ஆஸ்துமா மற்றும் பல ஒவ்வாமைகளைக் கொண்ட மௌரா, ஆணுறையில் கசிவு ஏற்பட்டதாக நம்புகிறார். அவரும் அவருடைய நீண்டகால துணைவரும் இப்போது ஆணுறை பயன்பாட்டில் இன்னும் கவனமாக இருக்கிறார்கள். இத்தகைய அனுபவத்தை எதிர்கொள்ளும்வரை, விந்து ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தனக்குத் தெரியாது என்று அவர் கூறுகிறார். மிகவும் அரிதானவை என்றாலும், சிலருக்கு மற்றவர்களின் உடல்களுடன் தொடர்பு ஏற்படும்போது, கடுமையான நோயெதிர்ப்பு எதிர்வினைகளால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் இத்தகைய நிலைமைகள் ஒருவரின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வேலை, உறவுகள் மற்றும் பொதுவாக ஒருவர் உலகில் எவ்வாறு வாழ்கிறார் என்பதையும் பாதிக்கலாம். ஆனால் இந்த எதிர்வினைகள் எவ்வாறு வெளிப்படுகின்றன, அவற்றுக்கு சரியான காரணம் என்ன என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது. அவை உண்மையான ஒவ்வாமைகளா, அல்லது வேறு ஏதாவது? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விசித்திரமான எதிர்வினைகள், மனித நோயெதிர்ப்பு மண்டலத்தின் தனித்தன்மைகள் மற்றும் நமது உடலின் வேதியியல் பற்றிய நுண்ணறிவுகளை விஞ்ஞானிகளுக்கு வழங்குகின்றன. பெரும்பாலும், மற்றொரு நபரின் உடல் தொடர்பான உணர்திறன் (Sensitivity) என்பது, அந்த உடலில் இருக்கக்கூடிய வெளிப்புறப் பொருட்களுடன் தொடர்புடையது. உதாரணமாக, அது டியோடரன்ட்கள் மற்றும் ஆஃப்டர் ஷேவ் கிரீம்கள் உள்ளிட்ட செயற்கை வாசனை திரவியங்களாக இருக்கலாம். 150க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் இத்தகைய ஒவ்வாமையுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளது. காரணம் என்பது எப்போதும் தெளிவாக இருக்காது. ஒரு அமெரிக்கப் பெண், தனது கணவரின் வாசனை திரவியத்தால் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு ஆளானார். அவருக்கு மாஸ்ட் செல் ஆக்டிவேஷன் சிண்ட்ரோம் என்ற நோய் ஏற்பட்டது. இந்த நிலையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் செல்கள் செயலிழக்கத் தொடங்குகின்றன. ஆஸ்திரியாவில் உள்ள கெப்லர் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் சபீன் ஆல்ட்ரிச்டர் கூறுகையில், "இந்த இணைப்பு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மாஸ்ட் செல் கோளாறுகள் உள்ள சில நோயாளிகள், மற்றவர்களின் இயற்கையான உடல் துர்நாற்றம் அல்லது தோலால் வெளிப்படும் ரசாயனங்களுக்கு உணர்திறன் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்." என்கிறார். உடல் துர்நாற்றத்திற்கு பங்களிக்கும் பல சேர்மங்களை தோல் வெளியிடுகிறது. இந்த தோல் வாயுக்களில் டோலுயீன் போன்ற ரசாயனங்கள் அடங்கும். இவை கச்சா எண்ணெயில் காணப்படுகிறது. மேலும், வண்ணப்பூச்சுகள் (Paint), பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது. மக்கள் தெரிந்தோ தெரியாமலோ டோலுயீனை நுகரலாம், உதாரணத்திற்கு, புகையிலை புகையில் உள்ள ஏராளமான ரசாயனங்களில் டோலுயீனும் ஒன்றாகும். 'பீப்பிள் அலர்ஜி டு மீ' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மனித தோல் தொடர்ந்து தூசித் துகள்களை உதிர்த்து வாயுக்களை வெளியிடுகிறது. பீப்பிள் அலர்ஜி டு மீ (PATM- People Allergic To Me) எனப்படும் மர்மமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உடல்கள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை குறித்து சில கூடுதல் நுண்ணறிவுகளை வழங்க முடியும். சமீபத்திய ஆய்வுகள், சிலரின் சரும வாயுக்கள் அவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை போன்ற எதிர்வினைகளைத் தூண்டுவதாகக் கூறுகின்றன. அத்தகைய நிகழ்வு பீப்பிள் அலர்ஜி டு மீ (PATM) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானில் உள்ள டோக்காய் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான யோஷிகா செகின் மற்றும் அவரது குழுவினர், 2023ஆம் ஆண்டில் PATM அறிகுறிகளைப் பற்றி புகார் அளித்தவர்களால் வெளியிடப்பட்ட சரும வாயுக்களை ஆராய்ந்தனர். குழு ஆய்வு செய்த 75 சரும வாயுக்களில், குறிப்பாக டோலுயீன் இருக்க அதிக வாய்ப்புள்ளது. PATM உள்ளவர்கள், இந்த நிலை இல்லாதவர்களை விட சராசரியாக 39 மடங்கு அதிகமாக இந்த வேதிப்பொருளை வெளியேற்றினர். "சுவாசத்தின் போது டோலுயீன் காற்றின் வழியாக உள்ளிழுக்கப்படுகிறது. ஒரு தீங்கு விளைவிக்கும் சேர்மமாக, இது பொதுவாக கல்லீரலால் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது," என்று செகின் விளக்குகிறார். "இருப்பினும், PATM நோயாளிகளுக்கு டோலுயீனை உடைக்கும் திறன் குறைந்து, ரத்த ஓட்டத்தில் அது குவிந்து, பின்னர் தோல் வழியாக வெளியிடப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். PATM என்ற கருத்தாக்கமே இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அதற்கான நோயறிதல் அளவுகோல்கள் எதுவும் இல்லை என்றும் செக்கின் குறிப்பிடுகிறார். மறுபுறம், வியர்வை ஒவ்வாமை என்பது பொதுவாக மற்றவர்களின் வியர்வையை விட ஒருவரின் சொந்த வியர்வைக்கான உணர்திறனுடன் தொடர்புடையது. முடியைப் பொறுத்தவரை, மனித முடி ஒவ்வாமை இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்ட சில சந்தர்ப்பங்களில், எதிர்வினைக்கான காரணம் முடியில் உள்ள ஒவ்வாமை அல்ல, மாறாக வெளிப்புறப் பொருளில் உள்ள ஒவ்வாமையாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஒரு பூனையை வளர்ப்பவரின் முடியில் நுழையும் பூனை புரதம் (Cat protein) அல்லது கெரட்டின் முடி சிகிச்சையில் மூலம் வரும் ஃபார்மால்டிஹைட் வகைகள். உடல் திரவங்களிலிருந்து ஏற்படும் பாதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முத்தமிடுவதால் உமிழ்நீர் வழியாக ஒவ்வாமை பரவும். உடல் திரவங்களில் உள்ள குறிப்பிட்ட ஒவ்வாமையூக்கிகளால் (Allergen) ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படலாம். பிரிட்டனில் ஒரு பெண்ணுக்கு பிரேசில் கொட்டைகள் (Brazil nuts- மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரு விதை அல்லது பாதாம் போன்ற ஒரு கொட்டை) தொடர்பான ஒவ்வாமை இருந்தது. அந்தப் பெண்ணின் துணைவர், அவர்களது உடலுறவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பிரேசில் கொட்டைகளை எடுத்துக்கொண்டார். இருப்பினும் இடைப்பட்ட நேரத்தில், அவர் தனது பற்கள், நகங்கள் மற்றும் கைகளை நன்றாக சுத்தம் செய்திருந்தார். ஆனால், அவருடனான உடலுறவுக்குப் பின், அந்தப் பெண்ணுக்கு தோல் அரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பொதுவாக முத்தமிடும்போது இத்தகைய ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு பாதாம், வேர்க்கடலை போன்ற கொட்டைகள் காரணமென கூறப்பட்டாலும், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொண்ட பிறகு, உமிழ்நீர் மூலமாகவும் ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படுகிறது. ஆன்டிபயாடிக் ஒவ்வாமை உள்ள பெண்கள், அந்த மருந்துகளை உட்கொண்டவர்களுடன் உடலுறவு மற்றும் (சாத்தியமான) வாய்வழி உறவு கொண்டபிறகு, பாதகமான எதிர்விளைவுகளை அனுபவித்துள்ளனர். ஆனால் இந்த வெளிப்புற ஒவ்வாமைகளுக்கு அப்பால், சில உடல் திரவங்களுக்குள் இருக்கும் புரதங்களும் ஒரு எதிர்வினையைத் தூண்டும். ஒரு உதாரணம் விந்து, சில மருத்துவர்கள் இதுகுறித்து அறிந்திருந்தாலும், இந்த விஷயத்தில் இன்னும் அதிக தகவல்கள் தேவைப்படுகிறது. விந்து ஒவ்வாமையின் அறிகுறிகள் (செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி என்றும் அழைக்கப்படுகின்றது) என்பது, அதீத தோல் அரிப்பு முதல் ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையான அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) வரை இருக்கலாம். இது குறிப்பாக 20 மற்றும் 30 வயதுடையவர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஒட்டுமொத்தமாக 100க்கும் குறைவான ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளே உள்ளன என்று 2024இல் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. செமினல் பிளாஸ்மா- விந்தணுவின் பெரும்பகுதியை உருவாக்கும் திரவம் இது. இதில் ஒவ்வாமை என்பது விந்தணுவை விட, அதனுள் இருக்கும் ஒரு புரதத்தின் காரணமாக ஏற்படுகிறது. 'கர்ப்பமடைய முயற்சிக்கும்போது, இந்த பிரச்னை' பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில், ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் 'கிளினிக்கல் மெடிசின்' பேராசிரியரான ஜோனாதன் பெர்ன்ஸ்டீன் இது குறித்து விளக்கினார். செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி கொண்டவர்களின் உடலில் என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி குறித்த ஆராய்ச்சியை செயல்படுத்த நல்ல விலங்கு மாதிரிகள் இல்லை, அல்லது போதுமான அளவு பாதிக்கப்பட்ட மனிதர்கள் இல்லை என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். விந்து ஒவ்வாமை என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சார்ந்தோ அல்லது பரவலான முறையிலும் ஏற்படலாம். இது பொதுவாக யோனியுடன் அல்லது அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஸ்பெயினில், ஒரு பெண், யோனி வழி உடலுறவுக்குப் பிறகு எந்த ஒவ்வாமையையும் எதிர்கொள்ளவில்லை. குதவழி உடலுறவுக்குப் பிறகு, சுயநினைவை இழந்து, அனாபிலாக்ஸிஸின் பிற அறிகுறிகளையும் எதிர்கொண்டார். அவருக்கு, விந்து திரவத்திற்கு அதிக உணர்திறன் இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் ஒரு பெண்ணின் சருமம் விந்துடன் தொடர்பு கொண்டபோது (பாலியல் சாராத சூழ்நிலையில்) வீக்கம் மற்றும் தோல் அரிப்பு ஏற்பட்டது. உடலுறவுக்குப் பிறகான கடுமையான வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஆகியவை குறிப்பிட்ட அறிகுறிகளாக இருக்கலாம் என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். அவரது நோயாளிகளில் ஒருவர் அந்த உணர்வை, "யோனியில் ஆயிரம் ஊசிகள் கொண்டு குத்தப்படுவது போல இருந்தது" என்று விவரித்தார். ஒரு பெண், பல துணைவர்களின் விந்து அல்லது ஒருவரின் விந்துவுக்கு உணர்திறன் கொண்டவராக இருக்கலாம் என்று பெர்ன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். பொதுவாக இதில் நோயறிதல் (Diagnosis) என்பது ஒரு பாலியல் துணையிடமிருந்து சேகரித்த புதிய விந்து திரவ மாதிரியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்கின் ப்ரிக் (Skin prick) சோதனையை உள்ளடக்கியது. பெர்ன்ஸ்டீனிடம் வழக்கமாக, ஒரு ஆண் துணைவருடன் வாழும் அல்லது ஒருதார மணம் செய்து கொண்ட பெண்களே சிகிச்சைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் கர்ப்பமடைய முயற்சிக்கும்போது, இந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். விந்து ஒவ்வாமை குறித்த சிகிச்சைக்கு அதிக நிபுணர்கள் இல்லாததால், சிலர் பெர்ன்ஸ்டீனுடன் கலந்தாலோசிக்க நீண்ட தூரம் பயணம் செய்து வருகிறார்கள். "மருத்துவ நிபுணர்களுக்கு அவ்வாறு வருபவர்களை எப்படி கையாள்வது என தெரியாததால், பல நோயாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது தீவிரமான ஸ்டீராய்டு சிகிச்சைகளைத் தொடங்குகிறார்கள்" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். ஆனால் பெர்ன்ஸ்டீனின் கூற்றுப்படி, விந்து ஒவ்வாமை உள்ள எவரும் அவரது நுட்பத்திலிருந்து பயனடையலாம். ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே விந்து ஒவ்வாமை பற்றிய தரவு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. பெர்ன்ஸ்டீன் அது போன்ற ஒரு பாதிப்பை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறுகிறார், ஆனால் அது ஆண்களில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லையா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஒவ்வாமையின் அறிகுறிகள் யோனிக்குள் உள்ள குறிப்பிட்ட நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடுமா என்று அவர் யோசித்தார். இருப்பினும் இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான குதவழி உடலுறவுக்குப் பிறகு ஏற்பட்ட ஒவ்வாமை குறித்த பதிலை அளிக்கவில்லை. சிகிச்சைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பெர்ன்ஸ்டீன் பரிசோதித்த முந்தைய சிகிச்சையில், ஒரு நோயாளியின் உணர்திறனைக் குறைக்க, அவரது தோலுக்குள் ஒரு துணையின் விந்துவை ஊசி மூலம் செலுத்துவது அடங்கும். இது போஸ்ட் ஆர்கஸமிக் இல்னஸ் சிண்ட்ரோமுக்கான (Post orgasmic illness syndrome) சிகிச்சையைப் போன்றது. (போஸ்ட் ஆர்கஸமிக் இல்னஸ் சிண்ட்ரோம்- இதில், ஆண்கள் தங்கள் சொந்த விந்தணுக்களுக்கே அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவொரு அரிய மற்றும் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையாகும்.) ஆனால் இந்த சோதனை முறை விலை உயர்ந்தது. "மாதிரிகளைத் தயாரிப்பதில் நிறைய ஆய்வகப் பணிகள் இருந்ததால், நோயாளிகள் அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தது" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். பெர்ன்ஸ்டீனும் அவரது குழுவினரும் இரண்டு மணி நேர அமர்வில் இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியைக் கண்டுபிடித்தனர். முதலில், அவர்கள் விந்தணுவிலிருந்து விந்து திரவத்தைப் பிரித்தனர். பின்னர், நோயாளி எவ்வளவு உணர்திறன் உடையவர் என்பதைப் பொறுத்து, திரவத்தை மிகவும் பலவீனமான நிலைக்கு - மில்லியனில் ஒரு பங்கு அல்லது பத்து மில்லியனில் ஒரு பங்கு என நீர்த்துப்போகச் செய்தனர். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும், அவர்கள் நீர்த்த திரவத்தை நோயாளியின் யோனியில் செலுத்தினர், ஒவ்வொரு முறையும் செறிவுகளை படிப்படியாக அதிகரித்தனர். இது நோயாளி சகிப்புத்தன்மையை வளர்க்க உதவியது. செயல்முறை முழுவதும், நோயாளி நெருக்கமாக கண்காணிக்கப்பட்டார். இதன் விளைவாக, "அதன் பிறகு, பெரும்பாலான நோயாளிகளுக்கு பெரிய ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படவில்லை. பின்னர் அந்த ஒரு துணையுடன் (விந்தணு மாதிரி அளித்த நபர்) அவர்களால் எந்த பிரச்னையும் இல்லாமல் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள முடிந்தது." என பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிற மனிதர்கள் தொடர்பான ஒவ்வாமை என்பது துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உடலுறவுக்கு பிறகு ஆணின் பிறப்புறுப்பு சிவந்தது செமினல் பிளாஸ்மா மற்றும் விந்து தொடர்பான அதிக உணர்திறன் என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது வேறு பிரச்னையாக கருதப்படுகிறது. உடலுறவின் போது பரவும் வேறு சில திரவங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. கருப்பை வாய் மற்றும் யோனியின் செல்களால் சுரக்கப்படும் ஒரு திரவமான செர்விகோவஜினல் (Cervicovaginal) திரவத்திற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கிட்டத்தட்ட எந்த ஆராய்ச்சியும் இல்லை. இந்தத் திரவம் யோனி பகுதியின் வறண்ட தன்மையைக் குறைக்கவும், சில நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பை வழங்கவும் உதவுகிறது. ஆனால் போலந்தில் உள்ள தோல் மருத்துவ நிபுணரான மாரெக் ஜான்கோவ்ஸ்கி, செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியைக் தான் கண்டதாக கூறுகிறார். அந்த நோயாளி, ஒரு ஆண் பல மருத்துவர்களைச் சந்தித்த பிறகு அவரிடம் வந்தார். ஒரு பெண்ணுடன் யோனி உடலுறவு கொண்டு, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ஆணின் பிறப்புறுப்பு பகுதி சிவந்து, தோல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாய்வழி உடலுறவு கொண்ட பிறகு அவரது முகத்திலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஒவ்வாமையாக இருக்கலாம் என்று அந்த நோயாளி நினைத்தார், ஆனால் மற்ற மருத்துவர்கள் அவர் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ஜான்கோவ்ஸ்கி கூறுகிறார். இருப்பினும், ஜான்கோவ்ஸ்கி நேர்மறையான சிந்தனையுடன் இருந்தார். பாலியல் செயல்பாடுகளின் போது பெண்களால் சுரக்கப்படும் செர்விகோவஜினல் திரவத்திற்கு ஏற்படும் ஒவ்வாமைக்கான பிற சாத்தியமான நிகழ்வுகளையும் தேடினார். ஆண்டிஹிஸ்டமைன்களை எடுத்துக் கொண்ட பிறகு தன்னிடம் வந்த நோயாளி குணமடைந்ததாக அவர் கூறுகிறார். இந்த பாதிப்பு ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரை 2017இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது. அவர்கள் தோல் மருத்துவர்கள் மற்றும் இந்த நிலை இருக்கக்கூடிய நபர்களை ஆய்வு செய்தனர். ஐந்து தோல் மருத்துவர்களில் ஒருவர் இதே போன்ற நிகழ்வுகளை நோயாளிகளிடம் கண்டதாகக் கூறினர். இருப்பினும் பல மருத்துவர்களால் இந்த ஒவ்வாமை உண்மையானதா என்பதை உறுதியாக கூறமுடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துணைவர்களுக்கும், உணர்ச்சி ரீதியான தாக்கங்கள் சிக்கலானதாக இருக்கலாம். ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரின் ஆய்வில், செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமை உள்ளவர்கள், தொடர்புக்குப் பிறகு தோல் சிவந்து போவது, அரிப்பு, எரிச்சல், வீக்கம் ஆகியவை ஏற்பட்டதாகக் கூறினர். இந்த பதில்களின் அடிப்படையில், ஜான்கோவ்ஸ்கியும் அவரது குழுவினரும் இந்த ஒவ்வாமை அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் விந்து ஒவ்வாமையைப் போலவே பொதுவானதாக இருக்கலாம் என்று மதிப்பிட்டனர். இருப்பினும், இதுவரை கிடைத்த சான்றுகள் அவதானிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும், அதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் ஜான்கோவ்ஸ்கி கூறுகிறார். விந்து மற்றும் செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமைகளுக்கு இடையிலான ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஆணுறைகள் பிந்தையவற்றுக்கு பெரிதும் உதவாது. காரணம், ஆணுறைகள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பையை முழுமையாக மூடாது என்பதால். இருப்பினும், ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரின் ஆய்வு முடிவுகளில், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் மீண்டும் அந்தத் திரவத்திற்கு பழக்கப்படுவது, செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமை உள்ளவர்களுக்கு உதவியது என்று கண்டறியப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், இளம் வயதினர்- அதாவது தங்கள் காதல் உறவுகளின் தொடக்க கட்டத்தில் இருப்பவர்கள் என்றும், துணையுடனான நெருக்கத்திற்கான அவர்களின் வலுவான ஆசை அவர்களுக்கு இந்த ஒவ்வாமையின் அசௌகரியத்தைத் தாங்க உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். காலப்போக்கில், திரவத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்வது அவர்களின் அறிகுறிகளைக் குறைப்பதாகத் தோன்றியது. எனவே இது விந்து ஒவ்வாமையிலிருந்து வேறுபட்டது, பொதுவாக விந்து ஒவ்வாமை, தானாகவே போய்விடாது. தங்கள் துணையிடம் ஏதாவது ஒரு விஷயத்தால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, அதன் தாக்கம் தீவிரமாக இருக்கலாம். விந்து மற்றும் அது தொடர்புடைய ஒவ்வாமையைத் தவிர்ப்பதற்கு விலையுயர்ந்த மாற்று வழிகள் தேவைப்பட்டிருக்கலாம் என்பதால், தானும் தன்னுடைய துணையும், குழந்தைகள் பெற வேண்டாம் என்ற முடிவை எடுப்பதில், தனது விந்து ஒவ்வாமை பிரச்னை ஒரு பங்கு வகித்ததாக மௌரா நம்புகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துணைவர்களுக்கும், உணர்ச்சி ரீதியான தாக்கங்கள் சிக்கலானதாக இருக்கலாம். "எனது துணைவரின் விந்துவுக்கு எனக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கூறியதால், மனம் புண்பட்டதாக துணைவர் என்னிடம் கூறினார்," என்று மௌரா கூறுகிறார். ஆனால், அவரது காதல் உறவு பாதுகாப்பானதாக உள்ளது. அவரது துணைவர் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை. "இந்த ஒவ்வாமைக்கு அவர் என்னை அல்ல, விதியையே குறை கூறுகிறார்." என்கிறார் மௌரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyl6p49330o

நல்லூரில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் புதிய நிலையம் விரைவில் அமைக்கப்படும்; தவிசாளர் மயூரன் அறிவிப்பு

3 months ago
20 JUN, 2025 | 09:57 AM நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நிலவிவரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக விரைவில் பிறிதொரு இடத்தில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபை அலுவலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிக நீண்ட காலமாக செய்யப்பட்டுவந்த திண்மக் கழிவகற்றல் பொறிமுறைக்கு பொருத்தமான இடம் இல்லாத காரணத்தால் தற்போது சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தற்சமயம் அதற்கான தீர்வாக மாற்றிடமொன்றுக்கு சுற்றுச்சூழல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளரின் முயற்சியால் இதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அதற்கான அமைவிடத்தில் தற்போது வேலைகள் உள்ளதன் காரணமாக அது இன்னும் முடிவடையவில்லை. திண்மக்கழிவகற்றல் தரம் பிரிக்கும் பகுதி தற்சமயம் இல்லாத காரணத்தால் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. திண்மக் கழிவுகளை தரம் பிரித்து தரும் பட்சத்தில் அதனை அகற்றுவதற்கான வசதிகள் இலகுவாக இருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் கையிலுமே எமது பிரதேசத்தின் தூய்மையும் இருக்கிறது. பிரதேச சபைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஒரிரு வாரங்களாக பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். சில வாரங்களில் முழுமையான வினைத்திறனாக திண்மக் கழிவகற்றலை கொண்டு செல்வோம் என்பதை உறுதியுடன் கூறுகிறோம். காரைக்கால் பகுதி தற்போது திண்மக் கழிவகற்றலை தரம் பிரிக்கும் வேலையை செய்ய முடியாத பிரதேசமாக மாறியுள்ளது. அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றபடியால் தொடர்ச்சியாக அதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்றிடமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைமுனங்கு இந்து மயானத்துக்கு அருகில் திண்மக் கழிவகற்றல் இடமொன்றை அமைத்து எங்களுக்கு வர வேண்டிய நிதிப் பங்களிப்புடன் முழுமையான வேலை திட்டங்கள் நடக்கிறது. அந்த இடத்தில் அதனை திறம்பட செய்வோம் என எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/217964

மிகப்பெரியளவில் தரவு திருட்டு; 16 பில்லியன் கடவுச்சொற்கள் கசிவு

3 months ago
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 09:37 AM வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவு இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகளாவிய பிரபல இணைய சேவைகளான ஆப்பிள், பேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான username மற்றும் கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 184 மில்லியன் சான்று மீறலைவிட இது எண்ணிக்கையில் பெரிதாக இருப்பதால், இதனை துகாப்பு ஆய்வாளர்கள் "மாபெரும் அச்சுறுத்தல் " என வர்ணிக்கின்றனர். https://www.virakesari.lk/article/217960

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

3 months ago
பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை Published By: VISHNU 20 JUN, 2025 | 03:12 AM செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பல அரசியல்வாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொரர்பாக பொலிஸார் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். குறித்த சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் என கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களைக் கைப்பற்ற இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் இயங்கும் IAID தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புத் தலைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து காவல்துறை நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் சரிபார்க்க முடியாத சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தும். சொத்துக்கள் விசாரிக்கப்படும் அரசியல்வாதிகளில் இலங்கை பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குழு மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அடங்கும். இந்தக் குழுவில் முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் பலரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணையின்போது, யாரேனும் முறைகேடான ஆதாயங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217956

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

3 months ago
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கின் யாழ் விஜயமும் முக்கிய சந்திப்புக்களும்! Published By: PRIYATHARSHAN 20 JUN, 2025 | 12:01 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் அங்கு பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், வடமாகாண ஆளுநர், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழுக்கான விஜயத்தின் முதல் நாளில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், யாழ். கோட்டையை பார்வையிட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கோரி ஏனைய உறுப்பு நாடுகளுடன் இப்போதிருந்தே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்,தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு, முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள், கட்டுமான அபிவிருத்திகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை , விமான சேவை, கப்பல் சேவை, காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் கேட்டறிந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள VVS விநியோகஸ்தார்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் பனை உற்பத்திப் பொருட்களின் பல்வகைப்பட்ட தயாரிப்புக்களை பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் பாரிம்பரிய உள்ளூர் கூழை சுவைத்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கும் உள்ளுர் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசாவை சந்தித்து கலந்துரையாடிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், உயர்கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் அபிலாஷைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இந்த சந்திப்பு, கல்வியை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது. யாழ். மாநகர மேயர் விவேகானந்தராஜா மதிவதானியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளார், இந்த ஆக்கபூர்வமான ஈடுபாடுகள், மாகாண மற்றும் நகராட்சி மட்டங்களில் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் மற்றும் முயற்சிகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கயுள்ளது. யாழில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர், அங்குள்ள ஊழியர்களை சந்தித்து ஆங்கில மொழி கற்றல் மற்றும் டிஜிட்டல் கல்வியை ஆதரிப்பதில் அவர்களின் பணிகளை அறிந்துகொண்டார். உலகளாவிய சூழலில் செழித்து வளர இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் பிரிட்டிஷ் கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. வட இலங்கையில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் இளம் தொழில்நுட்ப தொழில்முனைவோரை Yarl IT Hub -இல் சந்தித்தார் பிரித்தாகிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், இந்த மையம் ஒரு செழிப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், உள்ளூர் திறமைகளை உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கவும் உதவுகிறது. வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை ஆதரிக்கிறது. தொழில்நுட்பம், தொழில்முனைவோரை உள்ளிடக்கிய வளர்ச்சியில் இளைஞர்களை வழிநடத்தும் முயற்சிகளை பிரித்தானிய மதிக்கிறதாக குறிப்பிட்டார். நாகதீப விகாரை மற்றும் நாகபூஷணி அம்மன் கோவில் ஆகியவற்றைப் பார்வையிட உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நைனாதீவுக்குச் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகார் அன்று பற்றிக், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடல் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னுரிமைகள் குறித்த மதிப்புமிக்க முன்னோக்குகளை வழங்கியது. பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகம் வகிக்கும் முக்கிய பங்கை பிரித்தானியா அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் மீனவர்களின் பங்கு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மீனவர் அமைப்புகளிடமிருந்து பல தகவல்களை கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், நிலையான கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்களின் நுண்ணறிவு முக்கியமானது என்று குறிப்பிட்டார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன் மற்றும் ஆராய்ச்சியாளர்களை சந்தித்த, உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், இலங்கையில் முதன்மை மருத்துவத்தில் நீண்டகால நிலைமைகள் மேலாண்மைக்கான ஆதரவு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக். யாழ்ப்பாணத்திலுள்ள பழைமை வாய்ந்த உணவகமான மலாயன் கபேக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அங்கு உள்ளூர் செய்திகளை அறியும் முகமாக 94 வருட கால பழைமை வாய்ந்த வீரகேசரி பத்திரிகையில் செய்திகளை ஆராய்ந்தார். யாழ். தீபகற்பத்தில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவன திட்டத்தின் முதலாம் கட்ட நிறைவுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். நீர் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும், சமூகங்களை ஆதரிக்கும் மற்றும் இலங்கையில் நீண்டகால மீள்தன்மையை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கு நிதியளிப்பதில் பிரித்தானிய பெருமை கொள்கிறது என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217980

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

3 months ago
மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC கௌரவிப்பு 17 JUN, 2025 | 12:13 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாகும். தனது 118ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் இந்த டெஸ்ட போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளார். இதனை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இந்த நினைவுச் சின்னத்தை ஏஞ்சலோ மெத்யூஸிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவித் தலைவர் ஜயன்த தர்மதாசவும் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட அழைக்கப்பட்டதை அடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் முதலில் களத்தினுள் சென்றார். அப்போது பாடசாலை வீரர்கள் இருபுறமும் நின்றவாறு துடுப்பை உயர்த்தி அவருக்கு கௌரவம் செலுத்தினர். மெத்யூஸ் கையை உயர்த்தி அசைத்தவாறு களத்தினுள் புகுந்தார். அப்போது இலங்கை வீரர்களும் அரங்கில் குழுமியிருந்தவர்களும் பலத்த கரகோஷம் செய்து ஏஞ்சலோ மெத்யூஸை பாராட்டி கௌரவித்தனர். https://www.virakesari.lk/article/217694

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

3 months ago
மண்குதிரைக்காக அல்ல, மண்குதிரையை காட்டி மக்களை ஏமாற்றும் அற்ப பதர்களை இனம்காட்டவும் அரசியல் என்பது அறிவு ரீதியனதேயொழிய பக்தி ரீதியானது அல்ல என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே எனது கருத்துக்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

3 months ago
மண் குதிரைக்காக மட்டும் இரவு பகல் பாராமல் நேரம் ஒதுக்கி பாடுபடும் உரிமை உங்களுக்கு உள்ளது.

கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது

3 months ago
வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த ‘தண்ணி மருந்து’ ஊழல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி, இரு மகள்கள், மருமகன் பிணையில் விடுவைப்பு. ஆனால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் மகள் சமித்ரி ஜனனிகா சிறைக்கு, அவர் தந்தையை போலவே கீல்ஸ் பையோடு சிறை செல்வதை படத்தில் காணலாம்! Vaanam.lk

அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

3 months ago
அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா! இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகின்றது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 11,000 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து, சுமார் 1,500 கிமீ வரம்புக்குள் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது” ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மற்றும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிரி ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை தெற்கு பஞ்சாப்,டெல்லி போன்ற இடங்களில் இருந்து இந்திய விமானப்படையின் சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் மூலம் ஏவ முடியும் எனவும், இதனால் இந்தியா எதிரி எல்லைகளை தாண்டாமலே தாக்குதல் நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) தலைமையில், ப்ராஜெக்ட் விஷ்ணு என்ற பெயரில், ‘தன்னம்பிக்கை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. எதிரி நாடுகளின் எச்சரிக்கையை அதிகரிக்கும் வகையில், இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436418

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
இர‌ண்டு இணைய‌த்தில் காணொளி பார்த்தேன் ஆனால் அது நூற்றுக்கு நூறு உண்மையென‌ சொல்ல‌ முடியாது.................... ர‌ஸ்சியாவுக்கு ரோன்க‌ளை ஏற்றும‌திவ்செய்த‌ நாடு ஈரான்...................ர‌ஸ்சியாவிட‌ம் இருந்தும் ஈரான் சில‌ ஆயுத‌ங்க‌ளை வேண்டி இருக்க‌ கூடும் முன் கூட்டியே.......................இன்று கூட‌ X த‌ள‌த்தில் சீனாவின் விமான‌ம் ஈரானில் வ‌ந்து இற‌ங்கின‌தாக‌ போட்டு இருக்கின‌ம்.......................

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

3 months ago
வாழ்ககை முழுவதும் மண்குதிரைகளை நம்புவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. 😂

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
வெற்றி பெற்ற‌ பெரிய‌ப்புவுக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰 ம‌னுஷ‌ன் இந்த‌ போட்டியில் தான் முத‌ல் முறை வெற்றி பெற்று இருக்கிறார்...................ச‌ந்தோஷ‌த்தில் மித‌க்க‌ டென்மார்க்கில் இருந்து இர‌ண்டு விஸ்கி போத்த‌ல‌ அனுப்ப‌லாம் என்று இருக்கிறேன் லொள்😁.............................
Checked
Thu, 09/25/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed