3 months ago
எனக்கும் இந்தக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொண்டு நாங்கள் இந்த பிரபஞ்ச பயணத்தை வாயேஜர் போல கண்களை(கமரா) இறுக மூடிக்கொண்டு தொடருவோம்!
3 months ago
காஜலிச கோட்ப்பாட்டில் இந்த பிரபஞ்சத்தில் மூடர்களால் உருவான எடுப்பது (Take) கொடுப்பது (Give) என்ற துஸ்பிரயோகமே இல்லை. பகிர்தல் (Share) என்ற தனித்துவம் மட்டுமே உண்டு. அதுக்கு அடிப்படை காரணம் இங்கிருக்கும் அனைத்துமே ஒரு பெரு வெடிப்பின் மூலத்தில் இருந்து உருவானவைகள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையே ஒரே ஒரு தற்செயல்தான். தற்செயலின் தொடர்ச்சிதான் இப்போதும் தொடர்கிறது ஆனால் புரியாதவர்கள் தம் வாழ்வு எதோ தாய்ச்செயல் என்று புலம்பி கொள்வார்கள். இங்கிருக்கும் அனைத்தும் ஒரு இருத்தலில் இருந்து உருவானது ... அந்த இருத்தல் இருதலின்மையில் இருந்து உருவானது. ஆகவே இங்கு இருப்பவை எல்லாம் இல்லாதவைகள்தான் அல்லது இல்லாதவைகள்தான் இங்கு இருக்கின்றன. ஆதலால்தான் காஜலிசம் உங்கள் மூல கூறுகளை மற்ற மூல கூறுகளுடன் பகிர்வதை வலியுறுத்துகிறது இந்த நொடியில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருக்கும் சூரியன்/ சந்திரன் தன் ஒளியை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் காற்று தான் சுமந்திருக்கும் ஓட்ஸிசனை பகிர்ந்துகொள்ளும் அவ்வாறு கண்ணுக்கு தெரியாத பல மூல கூறுகள் ஒவ்வொன்றும் பகிர்வதால் இந்த பிரபஞ்சம் நீள்கிறது அந்த நொடியில் உங்கள் அருகில் இருக்கும் மூல கூறுகளுடன் எதை பகிர முடியுமோ அதை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள் உங்கள் கையில் தண்ணீர் இருந்தால் ஒரு செடிக்கு ஊற்றுங்கள் விலங்குகள் பறவைகளுக்கு கிடைக்க கூடிய வகையில் ஓரிடத்தில் வைத்து விடுங்கள். இந்த பிரபஞ்ச பயணத்தில் தொடருங்கள் ......... ஆதலால் அண்ணி கோவிக்க போவதில்லை
3 months ago
11 Nov, 2025 | 02:20 PM (நெவில் அன்தனி) இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேகாலயா கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சௌதரி 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசியதுடன் 11 பந்துகளில் அரைச் சதம் குவித்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரைச் சதம் குவித்து சாதனை நிலைநாட்டினார். இதன் மூலம் அனைத்துக் கால கிரிக்கெட் ஜாம்வான்கள் இருவரின் மைல்கல் சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை 25 வயதான ஆகாஷ் சௌதரி பெற்றுக்கொண்டார். ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசிய அவர் அடுத்து அவர் எதிர்கொண்ட ஓவரின் முதல் 2 பந்துகளில் மேலும் 2 சிக்ஸ்களை விளாசி இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார. மேகாலயா அணிக்கும் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கும் இடையில் குஜராத் மாநிலத்தின் சுராத் விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கோப்பை பிரிவு கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திலேயே ஆகாஷ் இந்த இரண்டு சாதனைகளையும் நிலைநாட்டினார். மேகாலயா அணியின் முதல் இன்னிங்ஸில் 8ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக ஆடுகளம் நுழைந்த ஆகாஷ் சௌதரி, முதலாவது பந்தில் ஓட்டம் பெறாததுடன் அடுத்த 2 பந்துகளில் ஒற்றைகளைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து இடதுகை சுழல்பந்துவீச்சாளர் லிமார் தாபியின் ஓவரை எதிர்கொண்ட ஆகாஷ் சௌதரி தொடர்ச்சியாக 6 சிக்ஸ்களை விளாசினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசியவர்கள் வரிசையில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள் - 1968), ரவி ஷாஸ்திரி (இந்தியா - 1985) ஆகியோருடன் மூன்றாவது வீரராக ஆகாஷ் சௌதரி இணைந்துகொண்டார். அதன் பின்னர் மற்றொரு சுழல்பந்துவீச்சாளரான ரி.என்.ஆர். மோஹித்தின் ஓவரை எதிர்கொண்ட ஆகாஷ், முதல் இரண்டு பந்துகளை சிக்ஸ்களாக அடித்து 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை விளாசிய முதலாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். இசெக்ஸ் அணிக்கு எதிராக லெஸ்டர்ஷயர் வீரர் வெய்ன் வைட் 2012இல் 12 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததே முந்தைய அதிவேக அரைச் சதமாக இருந்தது. ஆகாஷ் அரைச் சதம் பூர்த்திசெய்ததும் மேகாலய அணி தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட்கள் இழப்புக்கு 629 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது. அருணாச்சல பிரதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 73 ஓட்டங்களுக்கு சுரண்டதுடன் பலோ ஒன்னில் 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 446 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சௌதரி முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். பந்துவீச்சில் 31 போட்டிகளில் 90 விக்கெட்களைக் கைப்பற்றி ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக ஆகாஷ் சௌதரி முன்னேறி வருகிறார். https://www.virakesari.lk/article/230081
3 months ago
பொதுவாக உலகில் ஆண்களை விடப் பெண்கள் விகிதாசாரப்படி அதிகம். இதற்கான முக்கிய காரணம் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிட அதிகமானது. எப்படியிருந்தாலும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள். 😁
3 months ago
பட மூலாதாரம், Mauricio Hoyos படக்குறிப்பு, வெவ்வேறு சுறா இனங்கள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார் ஹோயோஸ் கட்டுரை தகவல் ரஃபேல் அபுசைடா பிபிசி நியூஸ் முண்டோ 12 நவம்பர் 2025, 08:40 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உங்களுக்கு சங்கடம் தரும் விவரிப்புகள் இருக்கலாம்.) தன்னுடைய மண்டை ஓட்டின் மீது சுமார் 3 மீட்டர் (10 அடி) நீளமுடைய பெண் கலாபகோஸ் சுறாவின் தாடை ஏற்படுத்திய அழுத்தத்தை மௌரிசியோ ஹோயோஸ் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். தனது கழுத்து நரம்பை காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி முயற்சியில் தலையை சாய்க்கக் கூட நேரமில்லாத வகையில் அது அவரை நோக்கி திடுக்கிடும் வேகத்தில் வந்தது. "அது தன் தாடையை மூடிக் கொண்டபோது, சுறா கடித்த அழுத்தத்தை உணர்ந்தேன், பின் ஒரு நொடியில் மீண்டும் தாடையை திறந்து என்னை தப்பிச் செல்ல அனுமதித்தது," என மெக்ஸிகோவின் பாஜா கலிஃபோர்னியாவில் உள்ள தன் வீட்டிலிருந்து ஹோயோஸ் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். அச்சமயத்தில், சுறாவின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்து ஒருமாதமே ஆகியிருந்தது. கடல் உயிரியலாளரான ஹோயோஸ், சுறாக்களை அதன் இயற்கை வாழ்விடங்களுக்கு சென்று ஆராய்வதில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். கடந்த செப்டம்பர் மாதம் கோஸ்டா ரிக்காவில் (Costa Rica) ஆராய்ச்சிக்காக பயணம் மேற்கொண்டிருந்த போது அவரை சுறா ஒன்று தாக்கியது. முகத்தில் ஏற்பட்ட காயத்தை இன்னும் தாங்கிக் கொண்டிருக்கும் அவர், தான் மீண்டு வந்தது "நம்ப முடியாததாக உள்ளது" என்றும், தன்னை தாக்கிய சுறாவை தான் மீண்டும் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் உள்ளதாகவும் கூறினார். படக்குறிப்பு, சுறா கடித்ததால் ஏற்பட்ட காயத்தை, "செவுள்கள் போன்று தோன்றும் விழுப்புண்" என கூறுகிறார் ஹோயோஸ் கொக்கோஸ் தீவில் (Cocos Island) ஹோயோஸுக்கு நடந்தது, ஆபத்து என தான் நினைக்கும் ஒன்றை எதிர்கொள்ளும்போது விலங்குகளின் இயல்பான நடத்தையின் விளைவு அது. "நாய் கடித்தது போன்று இருந்தது," என்கிறார் அவர். "ஒரு நாய் தனக்கு அருகில் வரும்போது மற்றொரு நாய் அதை விரைந்து கடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது அந்த நாய்க்கு வலிக்காது, ஆனால் நெருங்கி வரும் நாயை அமைதிப்படுத்தும்." ஹோயோஸ் சகாக்களுடன் இணைந்து தன் வேலையின் ஒரு பகுதியாக சுறாக்களின் இனச்சேர்க்கை மற்றும் முட்டையிடும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக அவற்றுக்கு ஒலிப்புலன் சார்ந்த பட்டைகளை (acoustic tags) பொருத்திக் கொண்டிருந்தார். அப்போது, நீரில் சுறா இருப்பது குறித்து சுற்றுலாப் பயணிகள் அவருக்கு எச்சரித்தனர். அது 40 மீட்டர் ஆழத்தில் இருந்தது, தான் வந்த படகை செலுத்தியவரிடம் "தான் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அங்கு இருப்பேன்" என கூறியுள்ளார். பின்னர் நீருக்குள் மெல்ல மூழ்க ஆரம்பித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கலாபகோஸ் சுறாக்கள் 3 மீட்டர் நீளம் வரை வளரும் சுறாவை எதிர்கொண்டது குறித்து ஹோயோஸ் கூறினார்: "3-3.5 மீட்டர் (11.5 அடி) நீளமுடைய அந்த பெண் சுறா நீந்தி அடிப்பகுதியை நோக்கிச் சென்றது, நான் அதன் முதுகெலும்பு துடுப்பில் டேக்-ஐ பொருத்துவதற்கு ஏற்றபடி இருந்தேன்." ஆனால், தனது பல தசாப்த பணியில் பலவித சுறாக்களுக்கு டேக் பொருத்தியிருக்கும் ஹோயோஸ், இந்த சுறா மற்றவற்றைவிட வித்தியாசமாக நடந்துகொண்டதாக கூறுகிறார். "அந்த டேக்கின், ஆய்வுக்கருவியில் இணைக்கப்பட்டுள்ள கேபிளுடன் உள்ள உலோகத்தாலான கூர்முனையை உள்ளே செலுத்தியவுடன் மற்ற சுறாக்கள் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடும், மாறாக இந்த சுறா என்னை திரும்பி பார்த்தது," என அவர் நினைவுகூர்கிறார். "அதன் சிறிய கண்கள் என்னை பார்ப்பதை நான் கண்டேன், அது அமைதியாக திரும்பியதை நான் பார்த்தேன்." படக்குறிப்பு, ஹோயோஸும் அவருடைய சகாக்களும் இத்தகைய டேக்குகளை சுறாக்களுக்கு பொருத்துகின்றனர். சுறா நீந்திச் சென்றபோது அதன் கண்களை பார்த்ததாக கூறும் ஹோயோஸ், திடீரென அது தன்னை நோக்கி வந்ததாக கூறுகிறார். "நான் என் தலையை தாழ்த்திக்கொண்டேன், அதன்பின், அதன் கீழ் தாடை என் கன்னத்தையும் மேல் தாடை என் தலையையும் துளைப்பதை உணர்ந்தேன். அதன் தாடைக்குள் நான் இருப்பதாக நினைத்தேன், பின் மீண்டும் அது தன் தாடையை திறந்தது." "சுறா தன் தாடையை மூடியதும், அது கடித்ததன் அழுத்தத்தை உணர்ந்தேன். பின் அது என்னை அங்கிருந்து செல்ல அனுமதித்தது," என ஆச்சர்யப்படுகிறார். கலாபகோஸ் சுறாவின் ரம்பம் போன்ற 29 பற்கள், ஹோயோஸுக்கு அவரின் தலை மற்றும் முகத்தில் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக அவருடைய டைவிங் கருவியின் ஆக்சிஜன் குழாயையும் துண்டித்தது. சுறாவின் தாக்குதலில் இருந்து அவர் உயிர் பிழைத்தாலும் அவர் மரண ஆபத்தில் தான் இருந்தார். நீச்சலின் போது அணியக்கூடிய கண் பாதுகாப்பு கண்ணாடியையும் கிழித்துவிட்டது, தவிர ஏற்கெனவே மங்கலான அவரின் பார்வை, ரத்தம் கலந்த நீரால் மேலும் மங்கலானது. "டைவிங் கருவியிலிருந்து ஆக்சிஜன் வரவில்லை என்பதை உணர்ந்ததும், எங்களிடம் இருந்த மற்றொரு கருவியை எடுத்துக்கொண்டேன், அதை நாங்கள் ஆக்டோபஸ் என அழைக்கிறோம், மூச்சுக்காற்று தேவைப்படுபவர்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது," என அவர் பிபிசி முண்டோவிடம் கூறினார். "பின்னர்தான் அக்கருவியின் ரெகுலேட்டர் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தேன், காற்றை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக அதை வெளியேற்றிக் கொண்டிருந்தது, எனவே நான் என்னுடைய பயிற்சியை நினைவில் வைத்து, என் உதடுகள் மூலம் அதை ஒழுங்குபடுத்தினேன்." ஒருபுறம் ரத்தம், மங்கலான பார்வை, காற்று இல்லாத நிலை என, மேற்பரப்புக்கு வர ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருப்பதை ஹோயோஸ் கணக்கிட்டார். "என்னால் எதையும் பார்க்க முடியாததால், வெளிச்சத்திற்காக மேற்பரப்புக்கு வர முயற்சித்தேன். எனவே, மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேல்நோக்கி நீந்தினேன், ஏனெனில் சுறாவை கவரும் வகையிலான ஒருங்கற்ற நகர்வுகளை நான் தவிர்க்க விரும்பினேன்." பட மூலாதாரம், Mauricio Hoyos படக்குறிப்பு, இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க இத்தனை ஆண்டுகால டைவிங் பயிற்சியில் கற்ற பாடங்களை ஹோயோஸ் பிரயோகிக்க வேண்டியிருந்தது. ஹோயோஸ் மேற்பரப்புக்கு வந்ததும் இளைஞர் ஒருவர் அவரை இழுத்து படகில் அமரவைத்தார், படகை செலுத்தியவர் அவரின் நிலைமையை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சிறிது நேரத்திற்கு அந்த காயத்தின் வலியை தான் அவ்வளவாக உணரவில்லை என விவரிக்கிறார் ஹோயோஸ். "உண்மையில் நான் பதற்றத்தில் இருந்தேன், அந்த காயம் எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. அதன் தாக்கம் தான் என்னை அதிகமாக காயப்படுத்தியது. 3 மீட்டர் நீளம் கொண்ட ஒரு விலங்கு, அந்த வேகத்தில் என்னை கடித்தது, கார் என் மீது மோதியது போன்று இருந்தது. என் தாடை முழுக்க பெரிய காயம் இருந்தது, அது உடைந்துவிட்டது என்றே நினைத்தேன்." பின்னர், அவருக்கு மருத்துவ உதவியாளர்கள் அவசர சிகிச்சை செய்தனர். ஹோயோஸ் அதிர்ஷ்டக்காரர். சுறாவின் தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்து மேற்பரப்புக்கு நீந்தியபோதும் அவருடைய காயத்தில் தொற்று ஏற்படவில்லை, யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத குறைவான காலத்தில் காயம் குணமடைய தொடங்கியது. "இது அதிசயம் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர்: செப்டம்பர் 27-ஆம் தேதி சுறா என்னை தாக்கியது, அதன்பின், நான் 34 மணிநேரம் பயணம் செய்தேன், மருத்துவர்கள் எனக்கு சேதமடைந்த திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர், இரு தினங்கள் கழித்து எனக்கு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யலாமா என்பது குறித்து அவர்கள் பரிசோதித்தனர்." இந்த தாக்குதல் ஹோயோஸுக்கு மிக மோசமான நிலையை ஏற்படுத்தியிருக்கும். மருத்துவர்களின் கூற்றின்படி, 2017-ஆம் ஆண்டில் அதே பகுதியில் கலாபகோஸ் சுறாவால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட காயங்கள் சரிவர ஆறவில்லை என்பதால், சுமார் ஒருமாத காலம் அவர் ஹைபர்பேரிக் சேம்பரில் (hyperbaric chamber - இது அழுத்தப்பட்ட சூழலில் 100% ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக கலன்) இருக்க வேண்டியிருந்ததாக கூறினர். "என் காயங்கள் ஆறிய விதம் நம்ப முடியாததாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொற்று குறித்து தாங்கள் எப்படி கவலையடைந்தோம் என மருத்துவர்கள் கூறினர், ஏனெனில் முகத்தில் காயம் இருந்ததால் அது மூளைக்கான நேரடி பாதையாக இருந்தது." பட மூலாதாரம், Mauricio Hoyos மீண்டும் அதே நீருக்குள் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சிரித்துக்கொண்டே கூறிய ஹோயோஸ், நவம்பர் 14-ஆம் தேதி அங்கு டைவிங் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலுக்கு ஆளான பின்பு, தான் ஆராய்ச்சி செய்யும் விலங்குகள் மீது தனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். "சுறாக்கள் இல்லாமல் கடல் சிறப்பாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர், ஆனால் கடலின் சிக்கலான சமநிலையை பராமரிக்க சுறாக்கள் ஆற்றும் முக்கிய பங்கு குறித்து புரியாமல் அவர்கள் இதை கூறுகின்றனர்." தன் கன்னத்தில் உள்ள பெரிய காயத்தை சுட்டிக்காட்டிய அவர், "அந்த பெண் சுறா என் உயிரை காப்பாற்றியது என்பதற்கு இதுவே சான்று. இது, சுறாக்கள் குறித்து நன்றாக பேசுவதை தொடரவும் எதிர்காலத்தில் அதன் பாதுகாப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்கும் என்னை அனுமதிக்கும்." இதனிடையே, ஹோயோஸை தாக்கிய கலாபகோஸ் சுறா நீரின் ஆழத்தில் தன் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறது, அதை மீண்டும் சந்திப்பேன் என நம்பிக்கை கொள்கிறார் அவர். தன்னை தாக்குவதற்கு முன்பு அவர் சுறாவின் மீது டேக்-ஐ பொருத்திவிட்டதால் மீண்டும் அதை சந்திப்பதற்கான சாத்தியம் உள்ளது. "ஜனவரி மாதம் நான் கொக்கோஸ் தீவுக்கு செல்லவிருக்கிறேன். ஜன. 20 முல் 27 வரை நாங்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளோம், நிச்சயமாக (தாக்குதல் நடந்த) ரோகா சுசியாவுக்கு (Roca Sucia) சென்று ஆழ்கடலில் டைவ் செய்வேன்," என மன உறுதியுடன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3k75239j0o
3 months ago
3 months ago
காஜல் அண்ணி(காஜலிசம்) கோச்சிக்கமாட்டாங்களா அண்ணை?!
3 months ago
கணக்கு எடுப்பின் பிரகாரம் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் 7 லட்ஷத்து 37 ஆயிரம் பெண்களுக்கு துணை இல்லை என்னை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே அந்த பெண்கள் வாழ்வும் ஒளி பெறும்!
3 months ago
'Achilles heel' என்று கிரேக்க புராணங்களில் சொல்லப்படுவது போல, மிகவும் பலமான மனிதர்களுக்கும் ஒன்றோ சிலவோ பலவீனங்கள் அமைந்து, அவர்களை அழித்தும் விடுகின்றன, அண்ணா..........
3 months ago
12 Nov, 2025 | 04:06 PM அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னப்செட் போன்ற சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால், அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார். நிகழ்நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே அவர்களின் சமூக ஊடக பாவனைக்கு தடை விதித்திருப்பதாக அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230168
3 months ago
அண்ணை, திருமணம் செய்தவர்கள் என்பது உண்மைதான்!! ஒரு சில ஆ சாமிகள்! உளர்...
3 months ago
பிக்குவும், பாதிரியாரும்... காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்த மாதிரி.... சிறுவர், சிறுமியர், பெண்கள் எல்லோரையும் மேய்ந்து தள்ளி விடுவார்கள். அவர்கள் திருமணம் செய்யாமல் தனியே வசிப்பதால்... இந்த வியாதியை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி எல்லை மீறி விடுகின்றார்கள். 😂 ஐயரும் , மௌலவியும் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதால்... பாலியல் விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்கின்றார்கள். 👍 😜
3 months ago
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, செங்கோட்டை அருகே நடந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டது. கட்டுரை தகவல் சையத் மொஸீஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நவம்பர் 10 ஆம் தேதி மாலை, டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கார் வெடித்து, குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கார் வெடிப்புக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தில் பலரை கைது செய்தது. மேலும் பலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குமார் குப்தா இதுகுறித்து கூறுகையில், "இது, கடந்த 15 நாட்களாக நடந்த கூட்டு நடவடிக்கையின் விளைவு. இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது," என்றார். ஆனால், இந்த கைது நடவடிக்கைகள் டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தின் விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவரின் பணியிடத்தில் இருந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சஹரன்பூர் மற்றும் லக்னௌ பகுதிகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஃபரிதாபாத் காவல்துறையினர் அளித்த தகவலின்படி, அல் ஃபலா பல்கலைக்கழகம் மற்றும் ஃபரிதாபாத்தின் பல இடங்களில் சுமார் 800 போலீஸ் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அல் ஃபலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்துக்கு முன்பாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஏழு பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மருத்துவர் அதீல், மருத்துவர் முஸம்மில் ஷகீல் மற்றும் ஷாஹீன் சயீத் ஆகியோருக்கு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய பாதுகாப்பு அமைப்புகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்த இடத்தில் ஆதாரங்களை சேகரிக்கும் புலனாய்வுக் குழு. சந்தேகத்துக்குரிய நபர்களின் பட்டியலில் மருத்துவர் உமர் நபி தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி, டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பு வழக்கில் சந்தேகத்துக்குரிய நபராகக் கருதப்படுகிறார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவர் உமர் குற்றமற்றவர் என்றும், கடந்த சில மாதங்களாக அவர் தனது பணியில் முழுமையாக ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். விசாரணை அமைப்புகளின்படி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அருகே வெடித்த வெள்ளை ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டிச் சென்றவர் 34 வயதான மருத்துவர் உமர் நபி என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை பிபிசி உறுதிப்படுத்தவில்லை. அந்த காருக்கும் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஃபரிதாபாத்தில் காவல்துறையினர் அதிக அளவிலான வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (Ansar Ghazwat-ul-Hind) போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய வலையமைப்புடன் மருத்துவர் உமர் நபிக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. நபியின் உறவினர் முசம்மிலா, தான் வெள்ளிக்கிழமை நபியுடன் பேசினேன் என்றும், பின்னர் போலீசார் தனது கணவர், மாமியார் மற்றும் மைத்துனரை அழைத்துச் சென்றனர் என்றும், அதனைத் தொடர்ந்து நபியின் தந்தையையும் கைது செய்தனர் என்றும் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் மருத்துவர் கைது மருத்துவர் அதீல் அகமது ராதர் நவம்பர் 7-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் கைது செய்யப்பட்டார் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தகவல் வழங்கியுள்ளது. ராதரின் ஆதார் அட்டையில் அனந்த்நாக் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. சஹரன்பூரில் அம்பாலா சாலையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக மருத்துவர் அதீல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவர் அதீல், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர், அனந்த்நாக் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமதுவை ஆதரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டியதாக போலீசார் கூறுகின்றனர். விசாரணையின் போது ஸ்ரீநகர் போலீசார் பெற்ற சிசிடிவி காட்சிகளில், அவர் சுவரொட்டிகளை ஒட்டுவது பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த காட்சிகளின் அடிப்படையில், அவர் சஹரன்பூரில் கைது செய்யப்பட்டார். மருத்துவர் அதீல் கடந்த மூன்று ஆண்டுகளாக சஹரன்பூரில் வசித்து வந்துள்ளார். மங்காமோவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்த அவர், அந்த இடத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்தார் என காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கு முன்பு, அவர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவராக பணியாற்றியுள்ளார். அக்டோபர் 24, 2024 வரை அவர் அங்கு பணியில் இருந்துள்ளார். உத்தரபிரதேச போலீசார் சஹரன்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அவர் குறித்த தகவல்களை ஆய்வு செய்து, ஊழியர்களிடம் விசாரித்தனர். அதீலுக்கு அம்பாலா சாலையில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர் அதீல், அக்டோபர் 4, 2025 அன்று ஜம்மு காஷ்மீரில் திருமணம் செய்து கொண்டார். செப்டம்பர் 26-ஆம் தேதி விடுப்பில் சென்ற அவர், சில பணியாளர்களுக்கு திருமண அழைப்பிதழ்களையும் வழங்கியிருந்தார். இந்நிலையில் அவரது கைது செய்தி வெளிவந்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது பெயர்ப் பலகையை அகற்றியது. மருத்துவமனை நிர்வாகம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரிலும் பல மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரபல மருத்துவமனையின் மேலாளர் மனோஜ் மிஸ்ரா கூறுகையில், "ஜனவரி–பிப்ரவரி 2025 இல் மருத்துவமனையில் மருத்துவர் பதவி காலியாக இருந்தது. அப்பதவியில் மார்ச் மாதத்தில் அதீல் நியமிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை அவரது சேவையை நிறுத்தியுள்ளது." என்றார். உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சஹரன்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் வ்யோம் பிண்டால் ஊடகங்களிடம் பேசுகையில், "இது ஜம்மு–காஷ்மீர் காவல்துறையின் வழக்கு. உத்தரபிரதேச காவல்துறை ஒத்துழைப்பு மட்டுமே அளித்துள்ளது." என்றார். அதே சமயம், சஹரன்பூரில் மருத்துவர் அதீல் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் அதீல் அகமது ராதர் முன்பு சஹரன்பூரில் உள்ள வி பிரதர்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்தார். அதன் நிர்வாகியான மருத்துவர் மம்தா வர்மா கூறுகையில், "மருத்துவர் அதீல், மருத்துவ நிபுணராக இங்கு சுமார் நான்கு மாதங்கள் பணியாற்றினார்." என்றார். பின்னர், அவர் பிப்ரவரி 28-ஆம் தேதி விலகி பிரபல மருத்துவமனைக்கு மாறியுள்ளார். அவருடன் பணியாற்றிய சிலர், பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இதுகுறித்து பேசினர். அப்போது, 'அதீல் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அவரது வருங்கால மனைவியும் ஜம்மு–காஷ்மீரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் என்றும் கூறியிருந்தார்' எனத் தெரிவித்தனர். அவருடன் பணியாற்றிய சக மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'அதீலுக்கு மருத்துவம் குறித்த அறிவு மிக நன்றாக இருந்தது. நாங்கள் அவ்வப்போது அதைப் பற்றி விவாதிப்போம். ஆனால், தனிப்பட்ட தொடர்பு மிகவும் குறைவாக இருந்தது' என்றார். அவர் எங்கு தங்கியிருந்தார் என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், வழக்கமாக ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்து, உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கம் என்று அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர். ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் மருத்துவர் கைது ஹரியாணா மாநிலம் தௌஜில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த மருத்துவர் முசம்மில் ஷகீல், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டு நடவடிக்கையின் போது, மருத்துவர் முசம்மிலிடமிருந்து ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினர். மருத்துவர் முசம்மில் அக்டோபர் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது வாடகை வீட்டில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குப்தா கூறுகையில், "முசம்மில் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் கற்பித்து வந்தார். அவரிடமிருந்து ஒரு கலாஷ்னிகோவ் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு டைமர் கைப்பற்றப்பட்டுள்ளன." என்றார். ஷாஹீன் சயீத் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் காவல்துறை தகவல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஷாஹீனும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். "360 கிலோ எடையுள்ள எளிதில் தீப்பிடிக்கும் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அது ஆர்.டி.எக்ஸ் அல்ல," என்று சதேந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவர் முசம்மிலின் தாயார் நசீமா, பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "அவர் கைது செய்யப்பட்டது குறித்து நாங்கள் மற்றவர்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டோம். அவரைச் சந்திக்க முயன்றோம், ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை," என்றார். முசம்மில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஃபரிதாபாத்தில் ஷாஹீன் சயீத் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கூற்றுப்படி, முசம்மிலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் ஷாஹீனுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில், புல்வாமாவில் உள்ள மருத்துவர் முசம்மிலின் சகோதரர் ஆசாத் ஷகீல், 'என் சகோதரர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவரைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை' என்று பிடிஐக்கு தெரிவித்தார். அவர் வருடத்திற்கு இரண்டு முறை வீட்டிற்கு வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் வாகன சோதனை மேற்கொள்கின்றனர். லக்னௌவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை செவ்வாய்க்கிழமை, ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன் சயீத்தின் லக்னௌ வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவர் ஷாஹீன் சயீத்தின் குடும்பம் லக்னௌவின் லால் பாக் பகுதியில் உள்ள கந்தாரி பஜாரில் வசிக்கிறது. அவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவரது மூத்த சகோதரர் ஷோயிப் சயீத்தின் தந்தையுடன் வசிக்கிறார், இளையவர் பர்வேஸ் சயீத் ஐஐஎம் மதியான்வ் அருகே வசிக்கிறார். அவரது தந்தை சையத் அகமது அன்சாரி கூறுகையில், "எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஷாஹீன் சயீத் என் இரண்டாவது மகள். அவர் அலஹாபாத் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி பட்டம் பெற்றுள்ளார்," என்றார். மேலும், "நீங்கள் சொல்வதை (சட்டவிரோத நடவடிக்கைகள்) என்னால் நம்ப முடியவில்லை. இதுவரை போலீசார் என்னைத் தொடர்புகொள்ளவில்லை," என்று சையத் அகமது அன்சாரி கூறினார். சஹரன்பூர் மற்றும் லக்னௌவிலுள்ள ஷாஹீன் சயீத்தின் சகோதரர் பர்வேஸ் அன்சாரியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். நவம்பர் 11-ஆம் தேதி உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவும், ஜம்மு–காஷ்மீர் காவல்துறையினரும் ஷாஹீன் சயீத்தின் தந்தையின் வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். சையத் அன்சாரி கூறுகையில், 'நான் பர்வேஸுடன் ஒவ்வொரு வாரமும் பேசுவேன். அவர் இன்டக்ரல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஷாஹீனுடன் நான் ஒரு மாதத்திற்கு முன்பு பேசினேன், அவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்தேன்' என்றும் தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், "ஷாஹீன் சயீத் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கவில்லை. அவர் இங்கே வருவது மிகவும் அரிது," என்றார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் சந்தையில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். முன்வைக்கப்படும் கேள்விகள் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, தாங்கள் ஒரு பெரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்தக் கூட்டு நடவடிக்கை உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணா காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, "இந்த நடவடிக்கை நீண்டகால கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது." இந்தக் குழு ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே தீவிரமாகச் செயல்பட்டு வந்தது என்றும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்து, இளைஞர்களைத் தூண்டியது என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தது என்றும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கூறுகிறது. காஷ்மீர் காவல்துறை அளித்த தகவலின்படி, சோதனைகளின் போது பல டிஜிட்டல் சாதனங்கள், சுவரொட்டிகள் மற்றும் மின்னணு பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சித்தாந்தத்தைப் பரப்பி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், அதாவது UAPA வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பூடான் பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோதி, டெல்லி வெடிப்புச் சம்பவம் குறித்து கூறுகையில், "இந்த வெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் சதி செய்தவர்கள் தப்ப முடியாது. இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்," என்றார். மறுபுறம் இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், "தேசிய தலைநகர் டெல்லியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டுமே ஃபரிதாபாத்தில் 360 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது அங்கே எப்படி சென்றது? அது எவ்வளவு பெரிய பேரழிவாக மாறியிருக்கும்?" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சுமார் ஏழு மாதங்களுக்கு முன்புதான் பஹல்காமில் ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இப்போது டெல்லியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு? உள்துறை அமைச்சர் எங்கே? பிரதமர் எங்கே?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15pyyvpn0yo
3 months ago
உங்களை போன்ற அறிவாளிகள் ஒரு சிலர் பிறப்பார்கள் அந்த வெப்பத்தில் தமிழ் இனம் உயிர் பெரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு
3 months ago
சிறி முன்பக்க கடிதத்தோடு நெஞ்சுவலி வராமல் விட்டது பிள்ளை செய்த புண்ணியம்.
3 months ago
அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன? முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தினை வந்தடைகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் நிலவவும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளினை எரிப்பதினால் வரும் புகை என்பன வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லாமல் தரை மட்டத்தில் தங்குவதினால் மனிதர்கள் அதிகளவு மாசடைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகின்றது. 2. வேறு என்ன காரணங்களினால் காற்று மாசடைகின்றது? மேற்குறிய காரணங்கள் தவிர கட்டிட நிர்மாண பணிகளினாலும், வாகனங்கள் வீதியில் செல்லும் பொழுது வீதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் படிந்த தூசுக்கள் வளி மண்டலத்திற்கு வெளிக்கிளம்புவதினால் காற்று மாசுபடுகின்றது 3. கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபடுவதற்கான பிரதான காரணங்கள் என்ன? பிரதானமாக வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையே காரணம் ஆகும் 4. யாழில் தற்போது நிலவவும் அதிக மாசுப்பட்ட காற்று எவ்வாறு குறைவடையும்? வட கீழ் பருவ காற்று முடிவடைந்து தென் மேல் பருவ காற்று (May to September) தொடங்கும் பொழுது இந்து சமுத்திரத்தில் இருந்து வரும் ஈரப்பதன் நிறைந்த காற்று இம்மாசுக்களை கழுவி செல்ல தற்பொழுது நிலவும் சூழ்நிலை மாறும். இடைப்பட்ட காலங்களில் உள்ளூரில் நிலவும் காற்று ஒட்டத்தினை பொறுத்து காற்று மாசுபடல் இருக்கும் 5. எவ்வாறான மாசுக்கள் இந்த மாசடைந்த காற்றில் இருக்கும்? வாகன மற்றும் தொழில் சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளில் இருக்கும் கார்பன் துகள்கள், கார்பன் மோனோக்ஸ்சைடு, கந்தகம், நைட்ரோஜென் ஓட்ஸ்சைட், ஈயம், பிளாஸ்ட்டிக் துகள்கள் …. போன்ற பல்வேறு மாசுக்கள் இருக்கும். இவை தவிர பல்வேறு சிறு துணிக்கைகள் இருக்கும் இவை மிக மிக மெல்லிய துகள்களாக இருக்கும். முக்கியமாக 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இம்மாசுக்கள் இருக்கும் இதன் காரணமாக இந்த மாசுக்கள் நுரையீரலின் சுவாச சிற்றறை வரை சென்றடையும் இவை பொதுவாக PM 2.5 என்றழைக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் இவை நுரையீரலினை தாண்டி இரத்தத்தில் கலக்கும் PM 10 என்பது 10 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இருக்கும் மாசுக்கள். உதாரணமாக வீதியோர தூசுக்கள், மகரந்த மணிகள் போன்றன இதில் அடங்கும். இவை எமது நாசிக்குழியுடன் நின்று விடும். எனவே PM 2.5 என்பது PM 10 என்பதினை விட ஆபத்தானது. 6. ஏன் மாசடைந்த காற்று மணக்கவில்லை? சாதாரணமாக நாம் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் பொழுது வித்தியாசமான மணமாக இருக்கும் ஆனால் தற்போதைய மாசடைந்த காற்று அதிகளவு ஈரப்பதன் மூலம் நிரம்பி இருப்பதினால் இவ்வாறான மணம் இருக்க மாட்டாது 7. மாசடைந்த காற்றினை சுவாசித்தினால் மனிதருக்கு எவ்வாறான சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்? ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோய்கள் அதிகரிக்கும் அதாவது தீவிரத் தன்மை அடையும். சிலருக்கு புதிதாக சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அதாவது இருமல் மற்றும் சுவாசிப்பதில் கடின தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும் 8. எம்மை எவ்வாறு நாம் பாதுகாத்து கொள்ளலாம்? வீட்டினை விட்டு வெளியில் செல்லும் பொழுது பொதுவாக போக்குவரத்தில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் எமது சூழலில் குப்பைகளை இருக்கது தவிர்க்க வேண்டும். 9. எவ்வாறு காற்றின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்? IQAir, World’s Air Pollution, AirNow App, Accu weather போன்ற சர்வதேச வலைத்தளங்களில் இருந்தும் இலங்கையின் AQ.LK, https://www.nbro.gov.lk/ வலைத்தளங்களில் இருந்தும் realtime முறையில் நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதினை அறிந்து கொள்ளலாம் இவ்வாறு மாசடைவதன் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்ட வைத்தியர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்குதல் செய்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 22, 2026 அன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி https://tinyurl.com/3mynhy82
3 months ago
குளிர்விட்டதால தொழில்வளர்ச்சியோ தெரியல அண்ணை!
3 months ago
அண்ணை, அவையளும் லேசுப்பட்டவை இல்லை கண்டியளோ!
3 months ago
ஓரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார். அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன். அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும் (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது. டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது. மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான். அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன். உங்கள் அன்பு மகள், லிண்டா..! அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.. கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.. துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார். அங்கு இவ்வாறு எழுதியிருந்தது: பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை. நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள். 😂 🤣
3 months ago
இது அவனிடம் இருந்து எடுத்த மாதிரி தெரியவில்லை. எப்படியோ உள்ளே போட்டால் சரி.
Checked
Mon, 02/16/2026 - 00:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed