புதிய பதிவுகள்2

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

3 months ago
அப்ப.... சாராயம், கசிப்பு, கஞ்சா எல்லாம்... விட்டமின் சேர்ந்த பானங்களா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளுவரே கள்ளு குடிக்கச் சொல்லி இருக்கின்றார். நீங்கள்.. வந்தேறி தெலுங்கர்களின் கதையை கேட்டு, கெட்டுப் போகாதீங்க. 🤣

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
உலகப் பெரும் சண்டியர்கள் எல்லோரும், நேருக்கு நேர் மோதும் காலம் வெகு தொலைவில் இல்லைப் போல் உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு... பெரும் உலக யுத்தம் வெடித்தால், முழுக் காரணமும் அமெரிக்காவையும், இஸ்ரேலையுமே சாரும்.

மனிதநேயம் எங்கே

3 months ago
மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகாரம்தான்” என்றே சொல்லி போரிடும் நாடுகளைக் கேட்க ஆருமின்றியே அவலங்கள் தொடர்கின்றன மந்தாகினி

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

3 months ago
கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர். உந்த வெள்ளைக்காரர் கள்ளடித்து கள்ளுக்கு விளம்பரம் செய்யிறார்.வன்மையாக கண்டிக்க வேண்டும். கள் என்பது மது.மது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். கெட்ட கெட்ட வருத்தங்கள் எல்லாம் வரும்.இதை சமூக சீர்கேடாக நான் பார்க்கின்றேன்.😂 வன்மையான கண்டனங்கள்.😎

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

3 months ago
சிரித்துக் கொண்டு சொல்லும் பதிவுகளை... கேள்விக்கு உட்படுத்தக் கூடாது சார். 😂 அதை நம்பிக் கொண்டு போகின்றவர்கள், போகட்டும் என்று விடுங்க. இருந்தாலும்.... இந்த "ஊத்தை, கழிசடை வேலைகளை" சுமந்திரன் செய்யக் கூடிய ஆள் தான். 😎

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்!

3 months ago
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்! இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் அவிவில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனையில் தனது நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவமனைக்கு அருகில் ஏவுகணைத் தாக்குதலின் போது பராமரிப்பாளர் காயமடைந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விடயத்தில் உதவ தூதரகத்திலிருந்து ஒரு குழு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். ஈரானுடனான அதன் 7 நாள் மைல்கல்லை எட்டியபோது, தெஹ்ரான் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் டெல் அவிவ் மீது சுமார் 25 ஏவுகணைகளை சரமாரியாக வீசி பலரை காயப்படுத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதல்கள் பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனையையும், ஹோலோன் மற்றும் ராமத் கானில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளையும் நேரடியாகத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இதனால், பரவலான அழிவுகளும் பலர் காயமடைந்தும், உயிரிழந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1436259

அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்

3 months ago
நன்றி குமாரசாமியாரையா! இன்று பொதுவாக மக்களிடமும் ஒருவகை ஆதிக்க மனோபாவம் வளர்ந்துவரும் சூழலைக்கொண்டுள்ளது. யேர்மனியின் புதிய அரசுத்தலைமையின் கூற்றுக்கூட அப்படியானதே. அதாவது, தமது பணியினை இஸ்ரேல் கையிலெடுத்துள்ளதாம். ஆனால், போரின் கொடுமையை இங்கு சாதாரண மக்களே சுமக்கின்றனர். மக்களின் வரிப்பணம் யுத்தத்தின்மேல் கொட்டப்படுகிறது. அது உதவி என்ற பெயரில் இலங்கை முதல் உக்ரேன், இஸ்ரேல் வரை.. வரி அறவீடுகூடச் சாதாரண மக்களிடமே கணக்கீடும் அறவீடுமாகத் தொடர்கிறது. முதலாளிகளோ நட்டமென்றும், பொருளாதாரச் சரிவென்றும் தப்பித்துவிடுகின்றனர். சாதாரண மக்கள் வருமான வரிக் கணக்கைக் கொடுக்காவிடின் உடனடியாக வரிக்கட்டணத்திற்கான பற்றுச்சீட்டை அனுப்பிவிடும் நிலை. உலகின் போர்களனைத்தும் பொருண்மியத்தை மையப்படுத்தியதே. மத்திய கிழக்கில் மேற்கினது நிலையான சுரண்டலுக்குத் தடையாகச் சதாம் இருந்தார். அவரை குர்துகளைக் கொன்றதற்காகத் தூக்கிலிட்டார்கள். சதாமைவிடப் பன்மடங்காகப் பலஸ்தீனர்களைப் இனவழிப்புச் செய்துவரும் நெத்தன்யாகுவைத் தூக்கிலிடுவார்களா? மணிப்பூர் முதல் காஷ்மீர்வரை இன அழிப்புச் செய்த, செய்துவரும் இந்தியத் தலைவர்களையோ, குர்துகளை அழித்துவரும் எற்டோகானைத் தூக்கிலிடுவார்களா? ஏன் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமென அழைக்கப்படும் இனவழிப்பைச் செய்த சிறிலங்காவையே தண்டிக்க முன்வராதவர்களிடம் நீங்கள் சுட்டியதுபோல் நீதியையோ நடுநிலையையோ(ஆனால், நீதியின் முன்னால் நடுநிலை இல்லை என்பதே மெய்நிலையாகும்) எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் மனிதராக மனிதர்கள் குறைந்தபட்சம் தமது கண்டனத்தைவது பதியலாம் என்பதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

3 months ago
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை யாழ்ப்பாணத்தில், "ஜெற் விங்" இல் சந்தித்து... பிரதானமாக எதிர்வரும் மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் சம்பந்தமாக நீண்ட உரையாடலில் ஈடுபட்ட சுமந்திரன், இலங்கை அரசு செய்த கொலைகளை தண்டிக்காமல் விடுமாறு கேட்டார். 😂 🤣 யாழ்ப்பாணம்.com

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

3 months ago
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்? மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக மீன்பிடி அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின் நேற்று (18) ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்த அளவு மீன் பிடிக்க முடியாததால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதே வேளை மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில்,இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்ததோடு, கடற் படையினரின் உதவியுடன் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436261

ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு!

3 months ago
ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு! வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள். அவற்றின் எண்ணிக்கை 58,947 என DMT ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு மேலதிகமாக, 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1436265

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

3 months ago
கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர். நான்... யாழ்ப்பாணத்தில் நின்ற போது, அந்த மண்ணில் பிறந்த எனக்கே... கள்ளுக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வெள்ளைக்காரன் போய்... கள்ளு அடிப்பதை பார்க்க, பயங்கர எரிச்சலாக இருக்கிறது. 😂

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதலாவது நாடு ஈரான் என்றும் ஈரானின் அரசு செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது. சாதனை இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான உத்தரவை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான உத்தரவை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விமர்சனம் இதன்படி, F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாக கூறப்படுகின்றன. ட்ரோன் போர் அதிகரித்துள்ள காலகட்டத்தில் F-35 காலாவதியானது என்று எலான் மஸ்க் உட்பட பலர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/iran-is-shoot-down-5th-generation-fighter-jet-f-35-1750213555 செய்தியின் உண்மைத்தன்மை பற்றி யான் அறிந்திலேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
1954 மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியினை கலைத்து சா மன்னராட்சியினை ஏற்படுத்திய அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகள் அதற்கான காரணமாக கூறப்பட்ட காரணம் எண்ணெய் வளத்தினை தேசியமயப்படுத்தல் என கூறப்படுகிறது, பின்னர் அந்த மன்னராட்சியினை கோமேனி கலைத்தார் அப்போது அந்த கோமேனிக்கு ஆதரவாக இருந்தவர் தற்போதுள்ள அலி கோமேனி, இவருடைய ஆட்சிக்கு இந்த ஆண்டு முடிவு வரலாம், அதனால் இதுவரை காலமும் அல்லலுறும் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படலாம் (நடக்காமலும் போகலாம்), ஆனால் ஈராக் போல 1 மில்லியன் உயிரிழப்பு ஏற்படுமா எனத்தெரியவில்லை ஆனால் பல இலட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என கருதுகிறேன். ஆனால்இதற்கு எண்ணெய் வளம் முக்கியமாக காரனமாக இருக்கலாம், 1975 இல் அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகளால் அவுஸ்ரேலிய பிரதமர் ஒருவரும் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார், அதற்கு வளங்களை தேசிய மயப்படுத்தல் மற்றும் அவுஸ்ரேலிய ஒரு குடியுரிமை கொண்ட சுதந்திர நாடாக அதன் விருப்பின் படி செயற்பட வேண்டும் என விரும்பியிருந்தார் என வேறு சில காரணங்கள் உள்ளடங்கலாக.
Checked
Thu, 09/25/2025 - 03:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed