புதிய பதிவுகள்2

மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?

3 months ago
இங்கே மன்னிப்பு கேட்கவில்லை வலி தீரவில்லை காலில் விழவில்லை என்று..,..... தமிழர்கள் மீதும் தலைமை மீதும் சேறு பூசிக் கொண்டே இருப்பவர்கள் நிச்சயமாக வாசிக்க வேண்டிய கட்டுரை. நன்றி.

21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த

3 months ago
21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பங்கேற்காததற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். தங்காலையில் தினமும் தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது என்பதாலும், தங்காலையில் இருந்து நுகேகொடை வரை பயணம் செய்வதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதாலும் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இருப்பினும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த போராட்டப் பேரணியில் தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றும், அதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்வில் தான் பங்கேற்காதது சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார். இருப்பினும், 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு மக்களைத் திரட்டும் நோக்கில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று (10) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ, எதிர்க் கட்சிகளால் நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். வரவிருக்கும் கூட்டத்தை வெற்றிகரமாக்கவும், கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க தேவையான வேலைத்திட்டம் குறித்து விவாதிக்கவும் தான் வந்ததாக அவர் கூறினார். https://athavannews.com/2025/1452470

யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

3 months ago
யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வருகின்ற வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, 170 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhuagsup01irqplpva6b2mje

அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!

3 months ago
அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை! அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 6 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த 6 பேருக்கும் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. Athavan Newsஅம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பி

2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

3 months ago
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்! இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமான நிலையில், டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் இன்று வெற்றிகரமாக ஆரம்பமான நிலையில், இது தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார். இன்று குறித்த நேரத்தில் பரீட்சை ஆரம்பமானதுடன் நாட்டிலுள்ள அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் எவ்விதத் தடங்கலும் இன்றிப் பரீட்சை வழமைபோல நடைபெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பரீட்சை முடிவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க தற்போது நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1452437

மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?

3 months ago
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா? லக்ஸ்மன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்திருந்த காலத்திலேயே அவர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்கா மன்னிப்புக்கள் கோரியிருந்தனர். அவற்றுக்கான காரணங்களையும் கூறியிருந்தனர். அதை அடையாளம் காண்பதில் தவறுகள் நிகழ்ந்தனவா? அதே நேரத்தில், பிராயச் சித்தங்களையும் செய்திருந்தனர் என்றே கொள்ள வேண்டும். ஆனால், அரசாங்கமோ, ஏனைய தரப்புகளோ தங்களால் கவனமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக கூட இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. அதற்குப் பதிலாக நியாயப்படுத்தல்களை செய்து வருகின்றனர். அத்துடன், மூடி மறைக்க முயல்கின்றனர். மௌனமாக இருந்திருக்கின்றனர். இந்த நேரத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழர்களின் மன்னிப்புக் கோரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கும் இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால் அமைதிப்படையாக நாட்டுக்குள் வந்த இந்திய இராணுவம் வடக்கு - கிழக்கில் மேற்கொண்ட அட்டூழியங்கள் கணக்கிலடங்காதவை. அவை தொடர்பில் இந்திய அரசாங்கம் மன்னிப்பு கோருவதை விடுத்து மீண்டும் வடக்கு கிழக்குக்கு இராணுவத்தை அனுப்பி இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யவே ராஜீவ் காந்தி திட்டமிட்டிருந்தார். அதனால் அவர் தமிழ்நாட்டின் சிறிபெரும்புத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, விபரீதம் நிகழ்ந்தது.நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரபாகரன் அது ஒரு துன்பியல் சம்பவம் எனக் கூறியிருந்தார். இந்தப் பதிலை அதற்கான மன்னிப்புக் கோரலாகவே அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனலாம்.விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்கள் மீதான விரோத, எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த காலங்களில் சகோதரப் படுகொலைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் பல கொடுமைகளும் நிகழ்ந்தன. ஆனால், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கொள்கையுடன் இருந்த சகோதர இயக்கங்கள், அமைப்புகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அந்தக் கூட்டமைப்பினை தமிழ் மக்களின் அரசியல் தரப்பாகவும் வெளிப்படுத்தியிருந்தனர். அந்தக் கூட்டமைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி கவனமாகத் திட்டமிட்டுக் குலைத்து விட்டிருப்பது வேறு கதை. அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் தொடர்பான விடயத்தில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து. இருந்த பிரச்சினைகள், குழப்பங்கள், தவறுகளுக்காகச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேச்சுக்களை நடத்தி உடன்பாடுகளை ஏற்படுத்தி அதற்கான பரிகார நடவடிக்கைகள் எடுத்திருந்தார். இப்போது வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை தூக்கிப்பிடித்து பெரிதாக்கி நாட்டில் இருக்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவு நிலையினைக் குழப்பி நல்லிணக்கத்திற்குப் பங்கத்தினை ஏற்படுத்த முனையும் சிலர் தேவையானவற்றை விடுத்து வேறு விடயங்களைத் தூக்கிப்பிடித்து பிழைகளை மூடி மறைக்க முனைவதாக சொல்லாம். இலங்கை அரசாங்கங்களைப் பொறுத்தவரையில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் தங்களது பிழைகள் குறித்து எந்த இடத்திலும் மன்னிப்புக் கோரவில்லை. அதே நேரத்தில், அதற்கான நியப்படுத்தல்களையும் மூடி மறைத்தல்களையுமே மேற்கொண்டு வந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தங்களுக்கான சுயநிர்ணய உரிமைக்காக அறம், அகிம்சை, ஆயுதம், இராஜதந்திர ரீதியாக போராடி வருகின்ற இனத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற தோரணையில் அரசாங்கம் நடந்து வருகிறது. இது உண்மையில் பாரபட்சமே. உலகின் அனைத்து நாடுகளும் பாராமுகமாகவும், அறியாத விடயம் போலவும் இருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்புகளும் வெளிப்படுத்தல்கள் மட்டும் காரணமல்ல. அவர்கள் தங்களது நாட்டுக்கான இராஜதந்திர செயற்படுத்தலைச் சிறப்பாக மேற்கொள்கின்றனர் என்பதே முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும். ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர்கள் நடைபெறுவதும், மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடப்பதும். மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கைகளை வெளியிடுவதும் ஏதோ கண் துடைப்புகள் போலவே இருந்து வருகின்றன. இறுதியில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவற்றினால் எதுவும் நிகழ்வதில்லை என்றே கொள்ள முடிகிறது. கால இழுத்தடிப்பு மாத்திரமே நடைபெற்று வருகிறது.யுத்தம் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற காட்சிப்படுத்தல்கள் மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் அதற்கான பெறுபேறுகளைக் காணவில்லை. இதற்கிடையில் சர்வதேச நிறுவனங்கள் நாட்டுக்குள் வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கான வேலைகளைச் செய்து வருகின்றன. அதே நேரத்தில், நாட்டிற்குள் நிலை பேறான அபிவிருத்தி, சமூக நல்லிணக்கம், சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலை பேறான மீள்குடியேற்றம் போன்ற பல செயற்திட்டங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இன்னமும் அவை நிறைவுக்கு வராதவைகளாகவே இருக்கின்றன. நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு, மத ரீதியான முரண்பாடுகள் பற்றிய எண்ணக்கருக்கள் போன்றே சமாதானம் மற்றும் மோதல் தீர்வு பற்றிய தலைப்புகள் என்பன அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டத்தில் உள்ள ஜனரஞ்சகமான பிரகடனங்கள் மற்றும் செயற்றிட்டங்களாக அமைகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகாரத்துக்கு வரும் அரசுகள் மூலம் இவ்வாறான விடயங்கள் முன்னிலைக்கு எடுத்து விடப்படுகின்றன. இருந்தாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தாமதங்களே ஏற்படுகின்றன. அதற்குத் தொடர்ச்சியற்ற தன்மையும், இடையீடுகளுடனான சிக்கல்களும் காரணமாகும். இந்த நிலையில்தான், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவாக, தமிழ்மு ஸ்லிம் நல்லிணக்கம் மற்றும் இணைந்த வாழ்வை வலியுறுத்தும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான நிகழ்வுகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன. நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் வரலாற்றுப் பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வகையான நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். யூத அமைப்பொன்றிடமிருந்தும் நிதியைப் பெற்று வரும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது அவ் அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பதாகவே அறியமுடிகிறது. இந் நிகழ்வுகள் வடக்கில் மன்னிப்புக் கோரலாகவும் கிழக்கில் நீதிக்கும் மனித உரிமைக்கான குரலை இணைக்கும் வகையில் கலந்துரையாடலாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை ஏன் இந்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இந்த வேளையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி இந்த இடத்தில் உருவாகிறது. இதற்கு நிதி வழங்கும் நிறுவனத்தின் அறிவுறுத்தலே காரணமாகும். இலங்கையின் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருந்து வருகின்றனர். இந்தச் சிக்கலைத் தனித்து வேறு ஒரு திசையில் அவர்களைத் திருப்பி விடுவதற்காகத் தமிழர்கள் பக்கமாகத் திசை திருப்பிவிடுவது முதல் காரணமாக இருக்கலாம். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு மாற்றான சர்வதேச தலையீடற்ற செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான உதவி முயற்சியாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் அரசாங்கத்தை இஸ்‌ரேலியர்களின் செயற்பாடுகளுக்கு உதவக்கூடியதாக மாற்றுவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. உண்மையில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த வெளியேற்றத்தில் உள்ள நல்லவை, கெட்டவை என ஆரம்பத்திலிருந்து ஆராய்ந்து பார்த்தே அதற்கான முடிவுக்கு வந்தாக வேண்டும். வெறுமனே எழுந்தமானமாக நிகழ்ச்சித்திட்டங்கள் தேவை, நிதிகள் தேவை என்பதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் இவ்வாறான விடயங்களை கையிலெடுப்பது தவறாகும். இலங்கையில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், அவர்களின் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்ற தீர்வானது நல்லிணக்கமாகவும் நீதியாகவும் அமைய வேண்டும். இல்லாது போனால், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்ற உள்ளகப் பொறிமுறை ஏற்பாட்டை அனைவரும் ஏற்க வேண்டிய நிலையே அனைவருக்கும் ஏற்படும். அதனைத் தவிர ஒன்றுமில்லை. இவ்வாறிருக்கையில் தான் மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதா அல்லது பாதிக்கப்பட்ட, அடக்கப்பட்ட தரப்புக்கானதா? என்ற கேள்வி தோன்றும். அது மன்னிப்பு கோர வேண்டியவர்கள் அதற்குத் தயாரா? இல்லையானால் இந்தக் கேள்விக்கான பதிலை யாரிடமிருந்து எதிர்பார்ப்பது என்பதாக தமிழர்கள் பக்கம்தான் மாறி நிற்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மன்னிப்புக்-கோரல்-எல்லோருக்கும்-பொதுவானதுதானா/91-367720

சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி?

3 months ago
சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சப்போரா கிளை' என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராமத்தினர் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வழக்கில் அனில் பாஸ்கர் என்ற நபரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரது கூட்டாளிகள் 8 பேரைத் தேடி வருகின்றனர். ‘எஸ்.பி.ஐ கிளையை’ பார்த்து மகிழ்ந்த மக்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு சப்போரா கிராமத்தில், 'ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா' பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டதும், அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி வங்கிப் பணிகளுக்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை என அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த வாரம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அந்த வங்கியில் சோதனை நடத்திய போது, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் திறக்கப்பட்ட இந்த வங்கி முற்றிலும் போலியானது என்ற விஷயம் தெரிய வந்தது. சப்போரா கிராமத்தைச் சேர்ந்த அஜய் அகர்வால், தங்கள் கிராமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் ‘கியோஸ்க்’ வேண்டும் என விண்ணப்பித்திருந்ததாகக் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cgj4wg1nzy5o

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

3 months ago
டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது! புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களின் புலனாய்வுக்கு தேசிய பாதுகாப்புப்படையினரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளும் உதவி வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தலைநகர் டில்லி உள்பட நாடு முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் மெதுவாக சென்ற கார் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தக் காரில் பயணிகள் இருந்ததாகவும், கார் வெடித்ததில் அருகில் இருந்த வாகனங்களும் கடும் சேதமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று இரவு 7.29 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆறு கார்கள், இரண்டு ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோவும் தீயில் எரிந்து நாசமாகியதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வெடிப்பு நடந்த இடத்தில் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதை கண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விசாரணை: சம்பவ பகுதியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) குழுவினர் விசாரணை நடத்தினர். தேசிய பாதுகாப்புப் படையினரும் சம்பவ பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். தடயவியல் நிபுணர்கள் தனியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காவல் துறையின் சிறப்புப்பிரிவினர் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆணையர் ஆய்வு: இந்நிலையில், டில்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் உடனுக்குடன் தகவல் பகிர்ந்து வருகிறோம். கார் வெடிக்கும் முன்பாக சிக்னலில் மெதுவாக அது நகர்ந்து கொண்டிருந்தபோது வெடித்ததாக தெரிய வந்துள்ளது. இது கார் வெடிகுண்டு தாக்குதலா என இப்போதைய சூழலில் தெரிவிக்க இயலாது’ என்றார். இந்தச் சம்பவத்தில் நெற்றிப்பகுதியில் காயமடைந்த ஒருவர் கூறுகையில், “எனது ஆட்டோவின் முன் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அது திடீரென வெடித்தது’ என்றார். பலத்த பாதுகாப்பு: இந்தச் சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த ஹரியாணாவின் ஃபரீதாபாதில் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரின் வீட்டில் சுமார் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் திங்கள்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தில்லி செங்கோட்டை அருகே இந்த கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளனவா? என்பதை கூற முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பிரதமர் இரங்கல் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் உத்தரவு: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கார் வெடிப்பு சம்பவ நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள காணொளியில் சம்பவம் குறித்து விரிவாக விளக்கினார். சம்பவ பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் புலனாய்வைத் தீவிரப்படுத்தவும் அனைத்து கோணங்களில் விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் அமித் ஷா ஆய்வு: கார் வெடிவிபத்து நிகழ்ந்த செங்கோட்டை பகுதியில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அமித் ஷா, எல்.என்.ஜேபி மருத்துவமனைக்கு சென்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதத் தாக்குதலா? இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் உடலில் பெல்லட் என்ற சிறிய குண்டுகள் அல்லது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புக்கான பாதிப்புகள் இல்லாததாலும், சம்பவ இடத்தில் குண்டு வெடிப்புக்கான வயர்கள் தற்போது வரை கிடைக்காததாலும் இது குண்டுவெடிப்பு சம்பவமாக உடனடியாக உறுதி செய்யப்படவில்லை என்று டில்லி காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவத்துக்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. எனினும், அனைத்து கோணங்களிலும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் உரிமையாளர் கைது வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் முன்னதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “வெடிப்பு நிகழ்ந்த கார் ஹரியாணா மாநிலத்தின் பதிவெண் கொண்டிருந்தது. காரின் உள்ளே மூன்று பயணிகள் இருந்தனர்’ என்று தெரிவித்தார். இதையொட்டி, சல்மான் என்ற நபரின் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452454

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

3 months ago
டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்! Published By: Digital Desk 1 11 Nov, 2025 | 12:02 PM டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியர் உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு அருகே வெடித்த வெள்ளை ஹ_ண்டாய் ஐ 20 காரின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்தனர். சந்தேக நபர், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன், செங்கோட்டைக்கு அருகில் அந்தக் காரை 3 மணி நேரம் நிறுத்தி வைத்துள்ளார். சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியான் உமர் முகமதுவின் புகைப்படம் இந்திய ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.அவர் வைத்தியர் ஆதீல்அஹ்மத் ராதர் மற்றும் வைத்தியர் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு வைத்தியர்களும் ஜம்முகாஷ்மீர் மற்றும் ஹரியானா பொலிஸாரால் தகர்க்கப்பட்ட "வெள்ளைக் காலர்" பயங்கரவாத அமைப்பில் கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டனர். தனது நண்பர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த பின்னர், வைத்தியர் உமர் ஃபரிதாபாத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். அதற்கு பின்னர் அவர் குண்டுவெடிப்பைத் தூண்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலை உமர், மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாகவும், அந்தக் காரில் ஒரு டெட்னேட்டர் கருவியை பொருத்தியதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230071

ஆபத்துமிக்க வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவை

3 months ago
ஆபத்துமிக்க வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவை 11 Nov, 2025 | 10:31 AM ஆபத்துமிக்க திருகோணமலை, வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவையினை வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் திங்கட்கிழமை (10) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். ஆபத்துமிக்க புன்னையடி இழுவைப் பாதையினை வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்கு செல்வதற்கு இப்பாதையூடாக சென்று வருகின்றனர். புன்னையடியில் பாலம் இல்லாமையினால் சுமார் 60 மீற்றர் தூரம் இம் மக்கள் இழுவைப் பாதை மூலம் அச்சத்துக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். இவ்வருடம் வரவு செலவுத் திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கிண்ணியா -குறிஞ்சாக்கேணி படகு விபத்து போன்று இன்னுமொரு விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் புன்னையடியில் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி இவ் கள விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230052

மருத்துவ பீடத்திற்கு பேருந்து!

3 months ago
மருத்துவ பீடத்திற்கு பேருந்து! adminNovember 11, 2025 யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவ பீடம் வரையில் அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்கள் விடுதி, மருத்துவ பீடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள, யாழ். நகர் பகுதியில் போதனா வைத்திய சாலைக்கு அருகில் காணப்படுகிறது. அத்துடன் மாணவர்கள் உள்ளக பயிற்சிகளுக்காக போதனா வைத்திய சாலைக்கு மருத்துவ பீடத்திற்கு வர வேண்டிய தேவையுள்ளது. இதனால் மாணவர்கள் போக்குவரத்தில் பல இடர்களை எதிர்கொண்டு வந்தனர். அந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, மருத்துவ பீடம் வரையில் பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். யாழ். மத்திய பேருந்து நிலையம் https://globaltamilnews.net/2025/222545/

நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்!

3 months ago
நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்! adminNovember 11, 2025 யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும், வடதாரகை மற்றும் , நெடுந்தாரகை ஆகிய இரு படகுகளின் சேவை நேரம் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது நிலவும் கால நிலையில் விரைவாக இருட்டுவதனால் , படகு சேவைகளை 30 நிமிடங்கள் முன்னதாக மாற்றியுள்ளோம். அதன் அடிப்படையில் நெடுந்தீவில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் படகு , வியாழக்கிழமை முதல் 30 நிமிடங்கள் முன்னதாக 3 மணிக்கு புறப்படும். அதேபோன்று குறிகாட்டுவானில் இருந்து , மாலை 5 மணிக்கு புறப்பட்ட படகு இனி மாலை 4.30 மணிக்கு புறப்படும். அதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்து , காலையில் நீண்ட நேரம் குறிகாட்டுவானில் படகுக்கு காத்திருப்பதனால் , ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.45 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் படகு , குறிகாட்டுவான் சென்று மீண்டும் காலை 08 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து தனது சேவையை ஆரம்பிக்கும் என தெரிவித்தார். அதேவேளை குமுதினி படகின் நேர ஒழுங்கில் மாற்றம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222538/

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!

3 months ago
கொழும்பு துப்பாக்கி சூடு – யாழில் மேலுமொருவர் கைது – கைதானவரிடம் இருந்து போதை மாத்திரைகள், வாள் மீட்பு! adminNovember 11, 2025 கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் , தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை காவற்துறையினர் காரினை மடக்கி கைது செய்த போது , காரினுள் இருந்து 5ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர். அதேவேளை காரின் இலக்க தகடு போலியானது எனவும் , குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் காவற்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ள நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , பெண்ணொருவருடன் பிரதான சந்தேநபர்கள் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் , கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பில் இருந்து , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருப்பது தொடர்பிலான தகவல் , காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து வீதியில் காரை மடக்கி சந்தேக நபரை கைது செய்தனர். அதன் போது காரினுள் 5ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றையும் காவற்துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , குறித்த நபர் உடுவில் பகுதியை சேர்ந்தவர், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் சிலவற்றுடன் தொடர்புடையவர் , வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்குபவர் என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரின் இலக்க தகடும் போலியானது என்பதனையும் காவற்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதேவேளை ,போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டில் யாழ் , நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பின்னர் , கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு , நீதிமன்ற அனுமதியுடன் சந்தேக நபரை கொழும்பு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2025/222529/

மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால

3 months ago
பெரும்பாலானவர்கள் துபாய், தாய்லாந்து போன்ற நாடுகளை தேர்ந்து எடுத்து அங்கு தலைமறைவாக வாழ்ந்து கொண்டு பெரும் குற்றங்களை மற்றைய நாடுகளில் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும். மேற்கூறிய நாடுகளின் காவல்துறைகள், கண்காணிப்புகள் போன்றவை பலவீனமான நிலையில் இருக்கின்றதா.

இந்த குளிர்காலத்தில் நீடித்த மின் தடை காரணமாக பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளார்!

3 months ago
இந்த குளிர்காலத்தில் நீடித்த மின் தடை காரணமாக பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளார், மேலும் பழியை மாற்ற முயற்சிக்கிறார் என்று உக்ரைனின் அரசுக்கு சொந்தமான தேசிய மின்சார நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கூறினார். | கிறிஸ் ஜே. ராட்க்ளிஃப்/இபிஏ எடுத்த நீச்சல் குள புகைப்படம் பிரத்தியேகமானது நவம்பர் 4, 2025 காலை 4:11 CET ஜேமி டெட்மர் எழுதியது விளாடிமிர் புடின் உக்ரைனின் எரிசக்தி விநியோகத்தின் மீது இராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தும் அதே வேளையில், விளக்குகள் மற்றும் வெப்பத்தை தொடர்ந்து எரிய வைக்குமாறு விமர்சகர்களிடமிருந்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். இந்த குளிர்காலத்தில் நீடித்த மின்தடை காரணமாக பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படும் என்று உக்ரைன் ஜனாதிபதி அஞ்சுவதாகவும், பழியை மாற்ற முயற்சிப்பதாகவும் உக்ரைனின் அரசுக்கு சொந்தமான தேசிய மின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கூறினார். எரிசக்தித் துறையின் அரசியல் கட்டுப்பாடு குறித்த உட்பூசல்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை உக்ரெனெர்கோவை வழிநடத்திய முப்பத்தொன்பது வயதான வோலோடிமிர் குட்ரிட்ஸ்கி, ஜனாதிபதி அலுவலகம் பலிகடாவாகப் பார்க்கிறவர்களில் ஒருவர் என்று கூறினார். POLITICO உடனான ஒரு பிரத்யேக நேர்காணலின் போது, உக்ரைன் இடைவிடாத ரஷ்ய குண்டுவீச்சின் கீழ் “மிகவும் கடினமான குளிர்காலத்தை” எதிர்கொள்ளும் என்று அவர் கணித்தார் - மேலும் கியேவின் அரசாங்கம் தொடர்ச்சியான தவறான செயல்கள் மூலம் அதை மோசமாக்கியுள்ளது என்று வாதிட்டார். ஜெலென்ஸ்கியின் அணியுடனான மோதலுக்கு எண்ணெய் ஊற்றும் வகையில், குட்ரிட்ஸ்கி மீது கடந்த வாரம் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது , இது உக்ரைனின் சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து கண்டனத்தைத் தூண்டியது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரெனெர்கோவில் துணை இயக்குநராக இருந்தபோது, குட்ரிட்ஸ்கி அங்கீகரித்த நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களில் ஒன்றான அவரது குற்றச்சாட்டு, உக்ரேனிய தலைமையின் எதிரிகளை அச்சுறுத்தவும், விமர்சகர்களை மௌனமாக்கவும், அவர்களின் சொந்த தவறுகளை மறைக்கவும் சட்ட நடவடிக்கைகளை ஆக்ரோஷமாகப் பயன்படுத்துவதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டு என்று அவர்கள் கூறுகிறார்கள். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஜனாதிபதி அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், "ஜெலென்ஸ்கியின் உத்தரவின் பேரில் மட்டுமே திட்டமிடப்பட்டிருக்க முடியும்" என்றும் குட்ரிட்ஸ்கி மேலும் கூறினார். கருத்துக்காக POLITICO இலிருந்து பலமுறை கோரிக்கைகள் வந்தபோதும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டது. கைது செய்யப்படுவதற்கு முன்பு, குட்ரிட்ஸ்கி, "நான் நிதி மோசடி செய்ததாக பொய்யான கூற்றுகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தை ஆதரிக்கும் பெயர் குறிப்பிடப்படாத டெலிகிராம் சேனல்களால்" தான் விமர்சனத்திற்கு ஆளானதாகக் கூறினார். அவர் கடுமையான சிகிச்சைக்கு இலக்காக நேரிடும் என்பதற்கான முதல் அறிகுறியாக அதை எடுத்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட குட்ரிட்ஸ்கி, தனக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் "முட்டாள்தனமானவை" என்று கூறினார், ஆனால் அவை சுமத்தப்பட்டுள்ளன, எனவே "நான் ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரெனெர்கோவில் இல்லை என்ற போதிலும், வரவிருக்கும் குளிர்காலத்திற்கு எரிசக்தி அமைப்பைத் தயாரிக்கத் தவறியதற்கு நான் பொறுப்பு என்ற கருத்தை ஜனாதிபதி அலுவலகம் எளிதாக விற்பனை செய்யும்" என்று கூறினார். இந்த குளிர்காலத்தில் ஒரு பொது மக்கள் கண்டனக் குரல் எழுந்ததால் "அவர்கள் மரண பயத்தில் உள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார். போட்டியிடும் திட்டங்கள் கியேவில் தலைமைக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு ஓரளவுக்கு நியாயப்படுத்தப்படும் என்று குட்ரிட்ஸ்கி கூறினார், ஏனெனில் விளக்குகளை எரிய வைப்பதற்கான போராட்டம், மேலும் பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தியை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் அதிகரிக்கப்படும். குளிராக மாறும்போது உக்ரைனின் எரிசக்தி சவால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெலென்ஸ்கியிடம் அவர் முன்வைத்த திட்டத்தில் அரசாங்கம் உடனடியாக செயல்படத் தவறியதால் மேலும் அதிகரிக்கும் என்று குட்ரிட்ஸ்கி கூறினார். இந்த திட்டம், எரிசக்தி உற்பத்தியை பரவலாக்கி, மிகப்பெரிய சோவியத் கால மையப்படுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பிலிருந்து விரைவாக மாற்றியமைத்திருக்கும், இது ரஷ்ய தாக்குதல்களுக்கு அதிக இலக்குகளை ஈர்க்கும். முப்பத்தொன்பது வயதான வோலோடிமிர் குட்ரிட்ஸ்கி, ஜனாதிபதி அலுவலகம் பலிகடாவாக்கப் பார்க்கிறவர்களில் ஒருவர் என்று கூறினார். | கிரில் சுபோடின்/கெட்டி இமேஜஸ் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தாங்குவதற்கு மின் உற்பத்தியைப் பரவலாக்குவதே சிறந்த வழி என்ற கருத்தை மையமாகக் கொண்டது இந்த திட்டம். சமீபத்திய வாரங்களில், ஈரானால் வடிவமைக்கப்பட்ட 500 ட்ரோன்கள் மற்றும் ஒவ்வொரு தாக்குதலிலும் 20 முதல் 30 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்ததால், அவை ஆபத்தான அளவில் இரட்டிப்பாகியுள்ளன. பரவலாக்கத் திட்டத்தை விரைவாக அங்கீகரிப்பதற்குப் பதிலாக, "ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஆற்றலுக்கான நூற்றுக்கணக்கான மில்லியன் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க ஒரு பெரிய நிதியை உருவாக்க" தனது சக்திவாய்ந்த தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக்கால் ஆதரிக்கப்பட்ட ஒரு போட்டித் திட்டத்தை ஜெலென்ஸ்கி - குட்ரிட்ஸ்கியின் கூற்றுப்படி - அங்கீகரித்தார். கடந்த ஆண்டு அரசாங்கம் தனது கவனத்தை பரவலாக்கத்திற்கு மாற்றியது, இறுதியில் குட்ரிட்ஸ்கியின் திட்டத்தை எடுத்துக் கொண்டது. "ஆனால் நாங்கள் ஒரு வருடத்தை இழந்தோம்," என்று அவர் கூறினார். நேரடித் தாக்குதல்கள் அல்லது குண்டுவெடிப்புகளின் தாக்கத்தை சிறப்பாகத் தாங்கும் வகையில் நாட்டின் எரிசக்தி வசதிகளை வலுப்படுத்துவதில் மெதுவான வேகம் - மின் உற்பத்தி நிலையங்களில் மின்மாற்றிகளைப் பாதுகாக்க கான்கிரீட் தங்குமிடங்களைக் கட்டுவது உட்பட - "அரசாங்கத்தின் பரபரப்பான தோல்வி" என்றும் அவர் கூறினார். உக்ரெனெர்கோ, 2023 ஆம் ஆண்டில் மின்மாற்றிகளுக்கான வசதிகளை வலுப்படுத்தவும் கான்கிரீட் தங்குமிடங்களைக் கட்டவும் தொடங்கினார் என்று குட்ரிட்ஸ்கி கூறினார் - ஆனால் மற்ற மின் உற்பத்தி நிறுவனங்களால் சிறிய வேலைகளே செய்யப்படவில்லை. ஜனநாயக பின்னடைவு கடந்த ஆண்டு குட்ரிட்ஸ்கி திடீரென ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . உக்ரைனில் உள்ள பல எரிசக்தி நிர்வாகிகள், அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்ற உறுதிபூண்டுள்ள ஜனாதிபதி உள் நபர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சி என்று கூறுகின்றனர். அவரது விலகல் பிரஸ்ஸல்ஸ் மற்றும் வாஷிங்டன், டி.சி.யில் எச்சரிக்கையை ஏற்படுத்தியது - மேற்கத்திய இராஜதந்திரிகள் மற்றும் உலகளாவிய கடன் வழங்குநர்கள் உள்நாட்டு உக்ரேனிய அரசியல் குறித்த அவர்களின் வழக்கமான பொது மௌனத்தை உடைத்து, ஒரு அரிய பொது கண்டனத்தை கூட வெளியிட்டனர் . அவர்கள் கியேவை தனது போக்கை மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தினர். இதுவரை, சர்வதேச பங்காளிகள் குட்ரிட்ஸ்கியின் கைது மற்றும் விசாரணை குறித்து எந்த பொதுக் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. ஆனால் நான்கு முக்கிய உக்ரைனிய சிந்தனைக் குழுக்களின் குழு, குட்ரிட்ஸ்கியின் விசாரணைக்கு அடுத்த நாள், அக்டோபர் 30 அன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது , அதிகாரிகள் "மிகவும் பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் அரசியல் நடுநிலைமையுடன்" விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. அரசியல் துன்புறுத்தல்களை நடத்துவதற்கு எதிராகவும் சிந்தனைக் குழுக்கள் எச்சரித்தன. அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியது: "எந்தவொரு நாட்டிலும், குறிப்பாக போரின் மிகவும் கடினமான காலங்களை அனுபவிக்கும் ஒரு நாட்டில், அதிகாரத்தில் உள்ள நிபுணர்களுக்கு எதிராக அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது, நீதியின் வெளிப்பாடாக அல்ல, மாநிலத்திற்கு ஒரு அடியாகும்." குட்ரிட்ஸ்கிக்கு எதிரான மோசடி வழக்கை நாட்டின் மிக முக்கியமான ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களில் ஒருவரும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மையத்தின் தலைவருமான டாரியா கலெனியுக், எந்த சட்ட அர்த்தமும் இல்லாதது என்று விவரித்துள்ளார். முன்னாள் எரிசக்தித் தலைவர் எந்த வகையிலும் தன்னை வளப்படுத்திக் கொண்டதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர் வழங்கத் தவறிவிட்டார் என்றும், மற்ற சிவில் சமூகத் தலைவர்களுடன் சேர்ந்து, இந்த வழக்கு ஜனநாயக பின்னடைவின் மற்றொரு அத்தியாயம் என்றும் அவர் வாதிட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு, ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து மேலும் தாக்குதல்களை நடத்தியது , நாடு முழுவதும் உள்ள பகுதிகளைத் தாக்கியது. ஜெலென்ஸ்கியின் கூற்றுப்படி, "இந்த வாரம் மட்டும் உக்ரைனில் உயிர்களைத் தாக்க ரஷ்யர்களால் கிட்டத்தட்ட 1,500 தாக்குதல் ட்ரோன்கள், 1,170 வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுகள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன." முந்தைய போர்க்கால குளிர்காலங்களைப் போலல்லாமல், இந்த முறை ரஷ்யப் படைகள் நாட்டின் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பையும் ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தில் தாக்கி வருகின்றன. உக்ரெனெர்கோவிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதிலிருந்து, குட்ரிட்ஸ்கி உக்ரைனின் எரிசக்தித் துறையின் தவறான மேலாண்மை என்று தான் கூறுவதை முன்னிலைப்படுத்துவதில் வெட்கப்படவில்லை. அதற்காக அவர் தேசபக்தி இல்லாதவர் என்று சமூக ஊடகங்களில் தாக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் அவர் அதை வித்தியாசமாகப் பார்க்கிறார். "போர்க்காலத்திலும் கூட தவறுகளுக்காக அரசாங்கம் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான உக்ரேனியர்கள் புரிந்துகொள்கிறார்கள், இல்லையெனில் அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்," என்று அவர் கூறினார். https://www.politico.eu/article/volodymyr-zelenskyy-volodymyr-kudrytskyi-ukraine-blackout-freezing-winter-energy-supply-criticism/

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

3 months ago
இலங்கையில் மலையகத் தமிழர் மக்கள் தொகை சரிவு - இலங்கைத் தமிழர், முஸ்லிம் நிலை என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழ் 10 நவம்பர் 2025 இலங்கை அரசால் அண்மையில் வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு அறிக்கை தரவுகளின்படி மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளனர். இலங்கையில் இறுதியாக 2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையின் பிரகாரம், 8,39,504 மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) இருந்தனர். ஆனால், 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையின்படி, 6,00,360 மலையக தமிழர்களே (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) பதிவாகியுள்ளனர். சிங்களர், இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சனத் தொகையில் அதிகரிப்பு காணப்படுகின்ற போதிலும், மலையக தமிழர்களின் சனத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை நாட்டில் பேசுபொருளாகியுள்ளது. 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் மலையக தமிழர்கள் ஏன் குறைவடைந்துள்ளனர் என்பது உள்ளிட்ட 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கை குறித்து பிபிசி தமிழ் இந்த கட்டுரையில் ஆராய்கின்றது. பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2024 2024-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையை, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது. இலங்கையில் 15வது தடவையாக இந்த குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக விஞ்ஞான ரீதியான தொகை மதிப்பு 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது. 15வது குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2021-ஆம் ஆண்டு நடாத்தப்படவிருந்த நிலையில், கோவிட் - 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை 2024-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் பிரகாரம், இலங்கையில் இரண்டு கோடியே பதினேழு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து நூற்று எழுபது (2,17,63,170) பேர் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் அறிக்கையிடப்பட்ட மொத்த சனத் தொகையை விட, 2024-ஆம் ஆண்டு சனத் தொகை பதினான்கு லட்சத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று (1,403,731) பேர் அதிகமாக உள்ளனர். 2001 முதல் 2012-ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சனத் தொகை சராசரியாக வருடத்திற்கு 0.7 வீதத்தினால் காணப்பட்டதுடன், அந்த வளர்ச்சியானது 2012 முதல் 2024ம் ஆண்டு வரை 0.5 வீதமாக பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கையின் சனத் தொகை குறைந்த வேகத்திலேயே வளர்ச்சியடைந்துள்ளதாக குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இலங்கையில் மாகாண ரீதியாக சனத் தொகையை கருத்திற் கொள்ளும் பட்சத்தில், முழு சனத் தொகையில் 28.1 வீதமானோர் மேல் மாகாணத்தில் வசிக்கின்றனர். 5.3 வீதத்தையும் விட குறைவானோர் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் வட மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதிகளவான சனத் தொகையை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் (2,433,685) பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிக சனத் தொகையை கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் ( 2,374,461) உள்ளது. இதேவேளை, சனத் தொகை குறைந்த மாவட்டங்கள் பட்டியலில் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434) மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. எனினும், குறைவான சனத் தொகையை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 2.23 என்ற வீதத்திலான அதியுயர் வளர்ச்சி வீதத்தினை காண முடிகின்றது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 0.01 எனும் குறைந்த வளர்ச்சி வீதத்தினை கொண்ட மாவட்டமாக வவுனியா மாவட்டம் பதிவாகியுள்ளது. பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 1871 முதல் 2024 வரையான சனத் தொகை வளர்ச்சி இலங்கையில் முதல் தடவையாக விஞ்ஞான ரீதியான சனத்தொகை மதிப்பு 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகின்றது. இதன்படி, 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சனத் தொகை மதிப்பின் பிரகாரம், இலங்கையில் 24,00,380 மக்கள் வசித்துள்ளனர். ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை சனத்தொகை மதிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டு வந்த பின்னணியில், அந்த செயற்பாடு 1931-ஆம் ஆண்டு வரை முறையாக நடாத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் 1946ம் ஆண்டு சனத் தொகை மதிப்பு நடாத்தப்பட்டதுடன், அதன்பின்னர் 1953ம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 1963, 1971, 1981ம் ஆண்டுகளில் முறையாக நடாத்தப்பட்ட நிலையில், 1981-ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்த கணக்கெடுப்பு 20 வருடங்கள் கழித்து 2001-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. உள்நாட்டு போர், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சனத் தொகை மதிப்பு 20 வருடங்களுக்கு பிற்போட காரணமாக அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது. 2001-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2012ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் இந்த சனத் தொகை மதிப்பு நடாத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு நடாத்தப்பட வேண்டிய சனத் தொகை மதிப்பானது, கோவிட் - 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் 2024ம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 சனத் தொகை வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைய காரணம் என்ன? இலங்கையில் 153 வருட சனத் தொகை மதிப்பீட்டு வரலாற்றில் வருடாந்த வளர்ச்சி வீதம் பெரும்பாலும் படிப்படியாக குறைவடைந்து செல்வதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாட்டில் இதுவரை நடாத்தப்பட்டுள்ள 15 முறையான சனத் தொகை மதிப்பீடுகளில் 1953-ஆம் ஆண்டு வருடாந்த சனத் தொகை வளர்ச்சி அதி உயர்ந்த வீதமாகிய 2.8 வீதமாக பதிவாகியுள்ளது. அதன்பின்னராக சனத் தொகை மதிப்பு அறிக்கைகளின் பிரகாரம், சனத் தொகையின் வருடாந்த வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது. 2012-ஆம் ஆண்டு சனத் தொகை மதிப்பில் 0.7 வீதமாக காணப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதம், 2024ம் ஆண்டு 0.5 வீதமாக குறைந்துள்ளது. இலங்கையில் சனத் தொகை வளர்ச்சி வீதம் குறைவடைவதற்காக பல்வேறு விடயங்களை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளது. நீண்ட காலமாக காணப்படும் குறைந்த பிறப்பு வீதம், அதிகமான இறப்பு வீதம் மற்றும் நாட்டில் வெளிநோக்கிய இடப் பெயர்வு அதிகரித்தல் போன்ற காரணங்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன், உரிய காலத்தில் பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய் நிலைமைகள், போர் நிலைமைகள் போன்றவற்றை அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், சராசரி வருடாந்த சனத் தொகை வளர்ச்சி வீதத்தில் நேர்மறையான மதிப்பினை காட்டுவதன் மூலம் இலங்கையின் சனத்தொகை குறைந்த வீதத்திலேனும் படிப்படியாக வளர்ச்சியடைந்து நிலைமையை காண முடிகின்றது என சன தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகின்றது. பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 சிங்களவர்களே நாட்டில் அதிகம் இலங்கையில் 2024ம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கையின் பிரகாரம், சிங்கள மக்களே அதிகளவில் காணப்படுகின்றனர். இலங்கையில் சிங்கள மக்களின் தொகை 1,61,44,037ஆக இம்முறை பதிவாகியுள்ளது. 2012ம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம், நாட்டிலிருந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை 1,52,50,081 ஆகும். 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வீதமானது, 0.4ஆக பதிவாகியுள்ளது. சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். 2012ம் ஆண்டு 22,69,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள், 2024ம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம், 26,81,627ஆக பதிவாகியுள்ளனர். 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வீதமானது, 1.3ஆக பதிவாகியுள்ளது. இலங்கை முஸ்லிம் மக்களின் தொகையானது, 2012ம் ஆண்டு 18,92,638ஆக காணப்பட்டது. அது 2024ம் ஆண்டு 22,83,246ஆக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியானது, 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5ஆக காணப்படுகின்றது. எனினும், மலையக தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) சனத் தொகை வளர்ச்சியானது, 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் -2.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மலையக தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) தொகையானது, 2012ம் ஆண்டு 8,39,504ஆக காணப்பட்டது. அது 2024ம் ஆண்டு 6,00,360ஆக பதிவாகியுள்ளது. நாட்டில் காணாமல் போன 2,39,144 மலையக தமிழர்கள் (இந்திய வம்வாவளித் தமிழர்கள்) 2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு 239,144 மலையக தமிழர்கள் (இந்திய வம்வாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. மலையக பகுதிகளில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பை காட்டி நிற்கின்ற நிலையில், அங்கு மலையக மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை காட்டுகின்றது. மலையக தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளமைக்கான காரணம் குறித்து பிபிசி தமிழ் ஆராய்வதற்காக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவரை தொடர்புக் கொண்டு வினவியது. ''நாம் சனத் தொகை மதிப்பீட்டில் முக்கியமாக இனம், மதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே தரவுகளை சேகரிப்போம். ஆவணங்களை பரிசோதனை செய்து, இனம், மதம் குறித்த தகவல்களை நாங்கள் பெற்றுக்கொள்வதில்லை. பிரஜைகள் சொல்கின்ற விடயங்களையே தரவுகளாக பதிவு செய்யுமாறு நாங்கள் எங்களது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். அவர்கள் சொல்கின்ற விதத்திலேயே தரவுகளை பதிவு செய்யுமாறு கூறியிருந்தோம். கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட இனங்கள், இம்முறை தரவு சேகரிப்பின் போதும் சேர்த்துக்கொள்வோம். இலங்கை தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்ற விடயத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இன்னுமொரு பெயரை உள்வாங்குமாறு அமைச்சு மட்டம் உள்ளிட்ட உயர் மட்டங்களில் எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நாங்கள் ''மலையக தமிழர்கள்'' என்ற பெயரை உள்வாங்கினோம். உடனடியாகவே இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பதை புறக்கணிக்க முடியாது என்பதனால், இந்திய தமிழர்கள், மலையக தமிழர்கள் என்ற இரண்டு பெயரையும் பயன்படுத்தினோம். இனங்களை தீர்மானிப்பதற்கும், இனங்களை வேறுபடுத்துவதற்கும் எங்களுக்கு அதிகாரம் கிடையாது. இதன்படி, நபர்கள் சொல்கின்ற விடயங்களை நாங்கள் அவ்வாறே பதிவு செய்துக்கொண்டுள்ளோம்.'' என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார். மலையக பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமைக்கான காரணம் என்னவென்பது குறித்தும் பிபிசி தமிழ், குறித்த அதிகாரியிடம் வினவியது. ''மலையக பகுதிகளில் இலங்கை தமிழர்கள் அதிகரித்துள்ளமைக்கான காரணம் தெரியாது. அது அவ்வாறே பதிவாகியுள்ளது.'' என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 2023 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபமொன்று குறித்தும் இதன்போது, குறித்த அதிகாரியினால், எமக்கு தெளிவூட்டப்பட்டது. ''இனங்களை குறிப்பிடும் போது இந்திய தமிழர்கள் அல்லது இலங்கை தமிழர்கள் என குறிப்பிடப்படுவதற்கான நியதிகள் என குறிப்பிடப்பட்டு சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவுகளின் இனங்களை பதிவிடும் போது பதிவாளர் நாயகத்தினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதானது, ஒருவருடைய உரிமையாகும். அவர்களில் இந்திய தமிழர்களை இந்திய தமிழர்கள் என குறிப்பிடுவதுடன், அதற்கு முன்னரான இரண்டு பரம்பரையிலுள்ள பாட்டன், தந்தை ஆகியோர் இலங்கையில் பிறந்திருப்பார்களாயின், அவர்களை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்த முடியும். இரண்டு பரம்பரையினர் இலங்கையில் பிறந்திருப்பார்களாயினும், அவர்கள் தமது விருப்பத்திற்கு அமைய, இலங்கை தமிழர்களாக தம்மை பதிவு செய்துக்கொள்ள முடியும். அத்துடன், நபரொருவர் தனது இனம் மற்றும் மதம் குறித்து அவர் சொல்கின்ற விடயங்களையே நாங்கள் பதிவு செய்துக்கொள்வோம்.'' எனவும் அவர் குறிப்பிட்டார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகளின் கருத்தின் படி, "மலையகத்தில் வாழ்கின்ற மலையக தமிழர்கள் தம்மை அடையாளப்படுத்தியுள்ள விதமே தரவுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையகத்தில் வாழ்கின்ற தமிழர்களில் ஒரு தொகுதியினர் தம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். ஏனையோர் தம்மை மலையக தமிழர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். அதனாலேயே, மலையக தமிழர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ம் ஆண்டு குறைவடைந்துள்ளது." என்று தெரியவந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp97p7v583mo
Checked
Sun, 02/15/2026 - 21:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed