3 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார். எதற்காக இந்த நடவடிக்கை? ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் "தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான" அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார். பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது. அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், "இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்" என்றார். கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது. இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, "அவசர நடவடிக்கை தேவைகளுக்காக" அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன. F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம். இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்" என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார். பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது. ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator - MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் "பங்கர் பஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் மீது திங்கட்கிழமை இரான் நடத்திய தாக்குதலை காட்டும் படம் இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும். டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும். "[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்." என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். இரான்- இஸ்ரேல் மோதலில், வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரிக்க இந்தியா தயங்குவது ஏன்? இஸ்ரேல் - இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன? அச்சம், அதிர்ச்சி, குழப்பம்: இஸ்ரேல் தாக்குதல் குறித்து இரான் மக்கள் கூறுவது என்ன? இரான், இஸ்ரேல் மோதலில் இந்தியாவின் ஆதரவு யாருக்கு? - துருவங்களாக பிரிந்து நிற்கும் உலகம் மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை. வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார். இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார். "இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்." மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2d1lz6q0o
3 months ago
நான் சிறுவனாக இருந்த போது எனக்கு கணச்சூடு இருக்கிறது என்பதால் எமது வீட்டு தென்னையில் இறக்கப்படும் கள்ளில் எனது தகப்பனார் எனக்கு தருவது வழமை. ஆனால் நான் எனது மூத்த மகளை திருமணம் செய்து வைக்கும் வரை எந்த மதுவையும் தொட்டதில்லை. இத்தனைக்கும் மதுபானம் விற்கும் இடத்தில் தான் வேலையே.
3 months ago
ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்கள்;- இஸ்ரேலுடன் இணைகின்றது அமெரிக்கா 18 JUN, 2025 | 06:41 AM ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைந்துகொள்வதற்கு அமெரிக்கா தயராகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர்டோ உட்பட ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திடுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பில் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்கள் மத்தியில் முழுமையான உடன்பாடில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/217770
3 months ago
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 10:49 AM இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18) முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும். ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது. புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்து சிதறியது.இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் சுற்றுலாத் தளமான பாலிக்கான ஏராளமான சர்வதேச விமான வேகைள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தோனேசிய மொழியில் "ஆண்" என்று பொருள்படும் லக்கி-லக்கி, அமைதியான எரிமலையுடன் "பெண்" என்பதை குறிக்க இந்தோனேசிய வார்த்தையான லக்கி இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்ட நாடானது, பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது. https://www.virakesari.lk/article/217777
3 months ago
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள் Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 10:36 AM மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் என இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மீதான உரையாடலிற்காக இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இங்கிலாந்தின் மனித உரிமைகளிற்கான தூதுவர் எலினோர் சான்டெர்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது= இலங்கை குறித்த உங்கள் அலுவலகத்தின் பணிகள் குறித்து நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம். இலங்கையில் மேமாதம் தேர்தல்கள் நடாத்தப்பட்டதை நாங்கள் வரவேற்பதுடன்,2009ம் ஆண்டு ஆயுதமோதலின் போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவது இம்முறை அமைதியான விதத்தில் இடம்பெற்றதை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். அதேவேளை மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கீட்டிற்கு அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் மேலும் ஊடகவியலாளர்கள்,மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் சமூகத்தினர் சுதந்திரமாக பாதுகாப்பாக செயற்படகூடிய நிலையை ஏற்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பி;க்கையை பெறுவது மிகவும் முக்கியமானது. அரசாங்கம் பயங்கரவாத தடைச்;சட்டத்தை நீக்குவதே தனது நிலைப்பாடு என தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனைகொண்டுள்ளோம். மேலும் காணாமல்போனோர் அலுவலகத்தை மீண்டும் வலுப்படுத்துவதன் மூலம் பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்க்கப்படாத விடயங்களை தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/217782
3 months ago
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்த முடிவால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி பிள்ளையான் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தின் எஸ். துரை ராஜா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து, மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் கோரினார். அதன்படி, வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க பிரதிவாதி தரப்பினருக்கு இரண்டு வார கால அவகாசம் அளித்த நீதியரசர்கள் அமர்வு, அந்த திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறும் மனுதாரர் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmc0ubopq000rqp4k2jga3qjm
3 months ago
கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை! பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. போதுமான எரிபொருள் இருப்பு இருந்தபோதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி இவ்வாறு செயல்படுவதால், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmc1gv0nb001aqp4k559tu6se
3 months ago
அமெரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஈரான் அதிரடி இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், காமெனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இன்று இந்தப் போரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அச்சுறுத்தியதையடுத்து, ஈரான் உயரிய தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "போர் தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பின்படி, அயோத்துல்லா அலி காமெனி தனது பதிவில் "அலி கைபாருக்குத் திரும்புகிறார்" என்று கூறி உள்ளார். அதவாது யூத நகரமான கைபாரை கைப்பற்றிய இஸ்லாமிய வரலாற்றை குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. இது ஷியா இஸ்லாத்தின் முதல் இமாம்படி 7-ம் நூற்றாண்டில் யூத நகரமான கைபாரைக் இஸ்லாமியர்கள் கைப்பற்றியதைக் குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. அந்தப் பதிவில், ஒரு நபர் கையில் வாளுடன் கோட்டை போன்ற வாயிலுக்குள் நுழைவது போன்றும், வானத்தில் தீப்பிழம்புகள் தெரிவது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், சில நிமிடங்களுக்குப் பிறகு, காமெனி இஸ்ரேலுக்கு மற்றொரு எச்சரிக்கை விடுத்தார். அதில், "பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் ஒரு வலுவான பதிலடியைக் கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாம் கருணை காட்ட மாட்டோம்" என்று குறிப்பிட்டிருந்தார். இதை உலக நாடுகளே எதிர்பார்த்து இருக்காது என்று ஈரான் கூறி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. புதன்கிழமை அதிகாலையில் முதல் இரண்டு மணி நேரத்தில் இஸ்ரேலை நோக்கி ஈரான் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் டெல் அவிவ் நகரில் வெடிச்சத்தம் கேட்டது. இதற்கிடையில், டிரம்ப் ஜி7 மாநாட்டிலிருந்து முன்னதாகவே புறப்பட்டு வந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 90 நிமிடங்கள் கலந்துரையாடினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமெரிக்காவுக்கு-காத்திருக்கும்-அதிர்ச்சி-ஈரான்-அதிரடி/50-359467
3 months ago
இஸ்ரேல் - ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு! ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கே சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கையைப் பாதிக்கும் பலகாரணிகள் உள்ளன. முக்கியமானது எரிபொருள் விலை அதிகரிப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஏற்கனவே பத்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தப் போர் பிராந்திய ரீதியாக பரவினால், இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியை மோசமாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலைமை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீது மிகவும் எதிரமறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வேலை, பாதுகாப்பு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன கடுமையாகப் பாதிப்படையும் - என்றார். https://newuthayan.com/article/இஸ்ரேல்_-_ஈரான்_முறுகலால்_இலங்கைக்கு_கடும்_பாதிப்பு;_பொருளாதார_ஆய்வாளர்கள்_சுட்டிக்காட்டு!#google_vignette
3 months ago
3 months ago
வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்! adminJune 18, 2025 வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (18.06.25) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர் https://globaltamilnews.net/2025/216970/
3 months ago
3 months ago
நெத்தன்யாஹு யூத இனத்தின் நவீன மீட்பராக வரலாற்றில் இடம்பிடிக்க விரும்புகின்றார். அதற்கு சிந்தித்து செயலாற்றாமல், கசினோவில் சூதாட்டத்தில் கணக்குப் போடும் புத்திசாலித்தனமான மூளையுள்ள அமெரிக்காவின் ட்ரம்பைச் சரியாகப் பாவிக்கின்றார். இஸ்ரேல், அமெரிக்கா, மேற்குநாடுகள் ஈரானின் இஸ்லாமிய ஆட்சியை அகற்றச் சொல்லுபவை வெறும் நொண்டிச் சாட்டுகள். ஈரான் பலவீனமாக இருப்பதால், இதுதான் ஆட்சியை மாற்ற சரியான தருணம் என்பதைத் தவிர மிச்சமெல்லாம் அவசரமான காரணங்கள் அல்ல. ஈரானியர்கள் இஸ்லாமிய ஆயத்துல்லாக்களின் ஆட்சியை வெறுத்தாலும் இஸ்ரேலின் நண்பர்களாக மாறமாட்டார்கள். ஜனநாயக ஆட்சி இப்போதைக்கு வருவதும் சாத்தியமற்றதே.
3 months ago
வெளியேற முடியாது இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! வணிக நோக்கங்களுக்காக இஸ்ரேலில் உள்ள பல இலங்கையர்கள் வெளிச்செல்லும் விமானங்கள் இல்லாததால் சிக்கித் தவிப்பதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது, ஈரானுடனான மோதல் காரணமாக இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மற்றும் இஸ்ரேலிய வான்வெளி அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தூதரக அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், தேவைப்பட்டால் இஸ்ரேலை விட்டு வெளியேறுவதற்கான ஆதரவையும் வழங்குவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார குறிப்பிட்டார். தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேறுபவர்கள் ஈலாட் எல்லை வழியாக எகிப்துக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பழைய கட்டிடங்களில் முறையான தங்குமிடங்கள் இல்லாமல் வசிக்கும் சில இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதாக தூதர் நிமல் பண்டார தெரிவித்தார். அதன்படி, தாக்குதல்களின் போது தங்குமிடத்திற்கான தற்காலிக மாற்று வழிகளை அடையாளம் காணவும், தனிப்பட்ட அவசரகால திட்டத்தை உருவாக்கவும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட சமூக சேவையாளர்களை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், அவசரநிலைகள் ஏற்பட்டால் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் தூதர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1436066
3 months ago
அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்! ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்ற தெஹ்ரானிய மூத்த அதிகாரியின் கூற்றினை இஸ்லாமாபாத் உடனடியாக மறுத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், பாகிஸ்தானும் இஸ்ரேலை அணுகுண்டைப் பயன்படுத்தித் தாக்கும் என்று பாகிஸ்தான் எங்களிடம் கூறியுள்ளது என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியும் ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாய் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. எனினும், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கூற்றை நிராகரித்ததுடன், இஸ்லாமாபாத் அத்தகைய உறுதிமொழியை அளிக்கவில்லை என்றும் கூறினார். எவ்வாறெனினும், இஸ்ரேலுடனான பரந்த மோதலில் ஈரானுக்கான பாகிஸ்தானின் ஆதரவினை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்தினார். ஜூன் 14 அன்று, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தேசிய சட்டமன்றத்தில் முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட முஸ்லிம் நாடுகள் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கூட்டு மூலோபாயத்தை உருவாக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ஆசிப் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1435944
3 months ago
லெப்.கேணல் மாதவன் சின்னையா விநாயகமூர்த்தி நுவரெலியா, சிறிலங்கா
3 months ago
வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் - - குரு அரவிந்தன் - பயணங்கள் 11 ஏப்ரல் 2025 நடு இரவில் தெரியும் சூரியன்! ஐஸ்லாந்திற்குச் சென்ற போது நடுநிசியில் சூரியனைப் பார்த்திருக்கிறேன். அதே அனுபவம் மீண்டும் அலாஸ்காவில் கிடைத்தது. கனடாவின் வடக்குப் பக்கத்தில் அலாஸ்கா இருந்தாலும், ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அதை விலைக்கு வாங்கியிருந்தது. தெற்கே ஹவாயும் வடக்கே அலாஸ்கா மகாணமும்தான் அமெரிக்காவுடன் நிலத்தொடர்பு இல்லாத மாகாணங்களாக இருக்கின்றன. அலாஸ்காவின் வடபகுதி பனிசூழ்ந்த பனிப்புலமாக இருந்தாலும், 776,000 மக்கள் இங்கே வசிக்கின்றார்கள். ஆதிகாலத்தில் ஆசியாவுடன் நிலத்தொடர்பு இருந்ததால், பழங்குடி மக்கள் முதன் முதலாக அலாஸ்கா வழியாகத்தான் உள்ளே வந்தார்கள். பழங்குடி மக்களின் சுமார் 22 மொழிகள் இங்கே பாவனையில் இருக்கின்றன. இங்குள்ள 86 வீதமான மக்கள் ஆங்கிலமொழி பேசுகின்றார்கள். பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், நடுநிசியில் தெரியும் சூரியன், பல வர்ணங்கள் கொண்ட நொதேன்லைட், வட அமெரிகாவிலே உயர்ந்த தெனாலி மலைத்தொடர், உலகிலே உயிர் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலங்கள், பனிக்காலத்தில் உறங்குநிலைக்குப் போகும் கரடிகள், வடதுருவ பனிக்கரடிகள், பனிக்கட்டி வீட்டில் வாழும் எஸ்கிமோக்கள் என்றெல்லாம் மாணவப் பருவத்தில் படித்ததை அங்கே நேரடியாகக் காணமுடிந்தது. இதைவிட முக்கியமான ஒரு காரணமும் இருந்தது, அது என்னவென்றால் ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற, சேலம் தமிழ் சங்கத்தின் சிறந்தநாவல் -2020 க்கான பரிசு பெற்ற எனது நாவலின் தளமாகவும் பனி சூழ்ந்த அலாஸ்காதான் இருந்தது. நாங்கள் ஒரு கரவன் வண்டியை அதாவது இங்கே ஆர்.வி. என்று சொல்லப்படுகின்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்றோம். அதில் சமையலறை, படுக்கையறை, குளியலறை எல்லாமே இருந்தன. பெயபாங் என்ற இடத்தில் இருந்து டல்ரன் நெடுஞ்சாலையில் சென்றால் வடதுருவத்தை அடையலாம். அங்கே உள்ள மொறிஸ் தொம்ஸன் கலாச்சார மண்டபத்திற்குச் சென்றால் வடதுருவத்தில் கால்பதித்தவர் என்று உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள். வடஅமெரிக்காவில் மிக உயரமான மலைச்சிகரம் Mount McKinley இங்கேதான் இருக்கின்றது. உலகிலேயே மூன்றாவது பிரபலமான இந்த மலையின் உயரம் 20,310 அடியாகும். இந்த மலைத் தொடரில் பனிப்படலத்தால் உறைந்த ஐந்து கிளேஸியர்கள் இருக்கின்றன. சிலெட்டோக் என்று சொல்லப்படுகின்ற அலாஸ்கியன் நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டிகளில் பயணிப்பது, பனியில் சறுக்கி விளையாடுவது, கூடாரம் அடித்து தங்கி காம்பயர் செய்வது, மலை ஏறுவது, வேட்டையாடுவது, மீன் பிடிப்பது போன்ற பொழுது போக்குகள் இங்கே உண்டு. கருங்கரடிகள், கரிபோ மான்கள், மலை ஆடுகள் போன்றவற்றை அருகே சென்று பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் முடிந்தது. கழுகுகள், மலை எலிகள், நரிகள், மலை அணில்கள் போன்றவற்றையும் அங்கே காணமுடிந்தது. எஸ்கிமோக்கள் என்று நாங்கள் சிறுவயதில் படித்த, பனிக்கட்டிகளால் உருவான வீடுகளில் வாழ்ந்த முதற்குடி மக்களின் பரம்பரையினரை அங்கு சந்தித்து உரையாட முடிந்தது. அங்கரேய்ச் நகரில் தங்கி அருங்காட்சியகம் போன்றவற்றைப் பார்த்தோம். கடல் உணவுக்குப் புகழ் பெற்றது. இரவுதங்கிவிட்டு தெற்கே 127 மைல்களுக்கு அப்பால் உள்ள சீவாட் என்ற இடத்திற்கு மறுநாள் காலையில் பயணமானோம். சீவாட்டில் சுமார் 3000 மக்கள் வசிக்கிறார்கள். கினாய் பியோட்ஸ் நேசனல் பார்க் என்ற இடத்திற்குச் செல்வதற்காக முற்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தோம். இது றிசுரக்ஷன் குடாவின் கரையோரத்தில், மலைகள் சூழ்ந்த பகுதியில்; இருப்பதால் படகில்தான் செல்லவேண்டும். படகில் செல்லும் போது, ஒன்றல்ல, இரண்டு இடங்களில் கறுப்பு வெள்ளை நிறமான ‘கில்லவேல்’ என்ற திமிங்கிலங்களை மிக அருகே காணமுடிந்தது. எக்ஸிற் கிளேஸர் என்ற பனிமலை இப்பகுதியில் பிரபலமானது. திரும்பி வரும் வழியில் கோப் (ர்ழிந) என்ற மிகப் பழமையான ஒரு கிராமத்துக்குச் சென்றோம். இங்கு 1898 ஆம் ஆண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால், சியாட்டோவில் இருந்து மக்கள் வந்து குடியேறினார்கள். அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் முதியவரான பெண்மணி, தான் அங்கே பிறந்து வளர்ந்ததாகவும், தனது தாத்தா, பாட்டி காலத்தில் அவர்கள் தங்கச் சுரங்கத் தொழில் நிமிர்த்தம் இங்கு வந்து குடியேறியதாகவும் குறிப்பிட்டார். ரொறன்ரோவில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியோடு தேனீர் தந்து உபசரித்தார். எங்களுடன் நின்று படமும் எடுத்துக் கொண்டார். தங்கச் சுரங்கத்தில் பாவித்த மிகப்பழைய பொருட்களைக் காட்சிப் படுத்தி இருந்தார்கள். எப்படித் தங்கத்தை பிரித்து எடுப்பது என்றும் அதற்கான தொட்டியில் செய்து காட்டினார். வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு ஐஸ்லாந்து என்ற ஒரு சிறிய தீவு அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இருக்கின்றது. 103,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட, ரெக்காவிக்கைத் தலைநகராகக் கொண்ட இந்த எரிமலைத் தீவுக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. படகில் சென்று வடதுருவத் திமிங்கிலங்களை அருகே பார்க்கக்கூடியதாக இருந்தது. இத்தீவில் சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். நான் பயணத்தை முடித்துக் கொண்டு வந்ததன் பின் ஒருநாள் 24 மணி நேரத்தில் சுமார் 2200 நிலவதிர்வுகள் இத்தீவில் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்று அங்குள்ள மக்கள் பயந்து போனார்களாம். இந்தச் சிறிய தீவில் சுமார் 30 மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பூமிக்கடியில் உள்ள தட்டுகள் அடிக்கடி முட்டிக் கொள்வதால், இந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இங்கே உள்ள எரிமலை ஒன்று 2010 ஆம் ஆண்டு வெடித்த போது விமானப் போக்குவரத்தே அப்பகுதியில் ஒருவாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த எரிமலை வெடிப்பால், புகையும், சாம்பலும் பல மைல் தூரங்களுக்குக் காற்றோடு பரவி சுற்றுவட்டத்தை மாசடைய வைத்திருந்தன. ஐஸ்லாந்தின் பொருளாதார வசதிகளுக்காகச் சுற்றுலாப் பயணிகளையே அவர்கள் அதிகம் நம்பியிருக்கிறார்கள். பொருட்களை இறக்குமதி செய்வதால் பொருட்களின் விலை இங்கு சற்று அதிகமானது. ஆங்கிலமும் பேசும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள். வீடுகள் கூட்டமாக இல்லாமல், தனித்தனியாகவே அங்குமிங்குமாக இருக்கின்றன. மலைச்சரிவில் உள்ள சில வீடுகளின் கூரைகளைப் புற்கள் வளர்ந்து மூடியிருக்கின்றன. பபின் என்று சொல்லப்படுகின்ற அழகிய பறவைகளை இங்கு காணமுடிந்தது. செம்மறி ஆடுகளும், குதிரைகளும் நிறை இருக்கின்றன. சிக்காக்கோவில் ‘பான்பிட்ஸா’ பிரபலமாக இருப்பது போல, இங்கே கிடைக்கும் ‘ஐஸ்லாண்டிக் கொட்டோக்’ மிகவும் ருசியானதால் பிரபலமானது. வரிசையில் நின்றுதான் வாங்கவேண்டி வந்தது. ‘நோர்ஸ்’ இனத்தைச் சேர்ந்த வைக்கிங் காலப்பகுதியில்தான் இத்தீவில் குடியேற்றங்கள் எற்பட்டன. சுமார் 3 லட்சம் மக்கள்தான் இங்கு வசிக்கிறார்கள். அரச கட்டுப்பாடுகள் காரணமாக, பெற்றோர் விரும்பியவாறு பிள்ளைகளுக்கு இங்கே பெயர் வைக்க முடியாது. தொடர்வண்டிகளும் இங்கு இல்லை. இவர்களது முன்னோர்கள் ஒரு காலத்தில் பயங்கரமான கடற்கொள்ளையர்களாக இருந்தார்கள். கழுத்தைக் கோடாரியால் வெட்டுவது, மரத்திலே கட்டி உயிரோடு எரிப்பது போன்ற தண்டனைகளைக் கொடுத்தார்கள். இங்குள்ள காட்சியகத்தில் இது போன்ற தண்டனைக் காட்சிகளை நிஜமாக நடப்பது போலப் பார்க்க முடிந்தது. இன்னுமொரு காட்சிப் பொருளாக 2 ஆம் உலகயுத்தத்தில் ஜெர்மனியால் சுட்டு விழுத்தப்பட்ட ரஸ்ய விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் அமெரிக்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கவனித்த போது ஆச்சரியமாக இருந்தது. இதைப்பற்றித் தேடுதல் செய்தபோது அமெரிக்காவிடம் இருந்து ரஸ்யா அந்த விமானங்களை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது. நிலத்திற்கு அடியில் இருந்து திடீர் திடீரென ஒரு பனைமர உயரத்திற்கு நீர் ஊற்றுக்கள் சீறிப்பாய்கின்றன. நிறைய நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. சுடுதண்ணிக் குளங்களும் இங்கு இருக்கின்றன. வீடுகளைச் சூடாக்க இந்த சூடான தண்ணீரையும், நிலவடிச் சூட்டுகாற்றையும் பயன்படுத்துகின்றார்கள். தீவைச் சுற்றி வருவதற்கு நல்ல நிலையில் ‘றிங்ரோட்’ என்ற நெடுஞ்சாலையை அமைத்திருக்கிறார்கள். வண்டியை வாடகைக்கு எடுத்து விரும்பிய இடங்களைச் சென்று பார்க்கக்கூடிய வசதிகள் உண்டு. பனிக்காலத்தில் சிறிய வீதிகளை மூடிவிடுகிறார்கள். இக்காலத்தில் ‘நொதேன் லைட்’ என்று சொல்லப்படுகின்ற வானத்தைப் பல வர்ணங்களில் பார்க்க முடியும். நோர்வே நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் இந்தத் தீவுகளுக்குப் பெயர்சூட்டும் போது தவறு செய்து விட்டார்கள். மாலுமிகள் தகவல் தெரிவித்தபோது ஒரு தீவு பனியாலும், அருகே உள்ள இன்னும் ஒரு தீவு பச்சைப் பசேலென்று தாவரங்கள் சூழ்ந்திருப்பதாகவும் அறிவித்தபோது, நேரடியாகச் சென்று பார்க்காததால் அருகே இருந்த பனியால் சூழப்பட்ட கிறீன்லாந்திற்கு அந்தப் பெயரையும், தாவரங்கள் வளர்ந்திருந்த இந்தத் தீவக்கு ஐஸ்லாந்து என்றும் வரலாற்றுத் தவறு காரணமாகப் பெயர் நிலைத்து விட்டது. இங்குள்ள துறைமுகத்திற்கு அருகே சூடான நீரோட்டம் ஓடுவதால் துறைமுகத் தண்ணீர் உறைவதில்லை. குற்றங்களே நடக்காத நாடு என்பதால் வீதிகளில் பொலிசாரைக் காணமுடியாது. நான் அங்கு நின்ற நாட்களில் ஒரே ஒரு பொலிஸ்காரரைக் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாட முடிந்தது. பாதுகாப்பு வேலிகள் இல்லாததால், சில இடங்களில் தரை பிளந்து அதிலிருந்து புகை வெளிவருவதையும், சுடுநீர் கொதிப்பதையும் அருகே சென்று பார்க்கமுடிந்தது. சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த இடமாக இது இருக்கின்றது. kuruaravinthan@hotmail.com https://www.geotamil.com
3 months 1 week ago
அண்ணா, ஈரான் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்று மேற்குநாடுகள் சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நீண்டகாலமாக தொடரும் தவறுகள், குறுகியகாலத்தில் நடந்த தவறுகள் என்று இரண்டாகப் பார்க்கலாம். நீண்டகாலம்: ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். ஈரானிடம் அணு ஆயுதப்பலம் கிடைக்கும் என்பது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மிக ஆபத்தானது, இஸ்ரேல் என்னும் நாடே இல்லாமல் போகலாம் என்ற, உண்மையோ பொய்யோ, ஒரு கருத்து இவர்களிடையே உள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் சிரியா, ஈராக், யேமன் என்று பல நாடுகளில் ஈரான் ஆயுதக் குழுக்களை வளர்த்து வைத்திருக்கின்றது. இந்தக் குழுக்கள் இஸ்ரேல் மீது இடைக்கிடையே தாக்குதலை மேற்கொள்ளுகின்றன. குறுகியகாலம்: ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை மிகவும் நெருங்கி விட்டது என்னும் தகவல். இது உண்மையில்லாமல் கூட இருக்கலாம். ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் போன்ற ஒரு அவசரமான, ஆனால் பிழையான தகவலாகவும் இது இருக்கலாம். முன்னர் ஈராக்கின் அணு ஆயுத முயற்சிகளையும் இஸ்ரேல் அழித்திருந்தது. அதிபர் ட்ரம்ப் ஈரானுடன் அணு ஆயுதம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பித்தார். 60 நாட்கள் கெடு என்றார். ஈரான் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. 61ம் நாள் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்கா முதலில் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது என்றது. ட்ரம்ப் முற்றிலுமாக உறுதித்தன்மை அற்றவர். மற்றும் பழிவாங்கும் இயல்பும் கொண்டவர். ஈரான் மீதான் எந்த விதமான தாக்குதலுக்கும் மிகவும் வெளிப்படையாகவே இஸ்ரேலை ஆதரிப்பது மட்டும் இல்லை, உதவிகளும் செய்வார். ஈரானிடம் மொத்தமாகவே இரண்டாயிரம் ஏவுகணைகள், ballistic missiles, தான் உள்ளன என்கின்றனர். முதல் நாள் அன்று ஈரான் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இப்பொழுது இன்னும் சிலவற்றை ஏவிக் கொண்டிருக்கின்றது. இதே வேகத்தில் போனால் இரண்டு வாரங்களுக்குள் அவை முடிந்துவிடும். ஈரானுக்கு ரஷ்யாவோ அல்லது சீனாவோ உடனடியாக எந்த உதவியும் செய்யப் போவதில்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே அவர்களின் ஆதரவு. வெளியே பலமான ஒன்றாக தெரியும் ஈரான் உண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நீண்ட ஒரு சண்டைக்கு தயாராகவில்லை என்பதே இன்றைய நிலை. இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி.
3 months 1 week ago
விமான கட்டணங்களின் விலை அதிகரிப்பு ,விமானப் பயணத்தால் ஏற்படும் சுற்றுபுற சுழல் பாதிப்பினால் விமானப் பயணம் இனி செய்வதில்லை என்ற ஆர்வலர்களின் முடிவு இவற்றால் விமானப் பயணங்க எதிர்காலத்தில் அதிகரிக்காது என்றும் சொல்லபடுகின்றது
3 months 1 week ago
காணொளி ஒன்று பார்த்தேன் சீமான் கள்ளை எல்லோருக்கும் ஊற்றி கொடுக்கின்றார் நாம் தமிழர் கட்சியில் சேலம் தொகுதியில் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்த பெண் வேட்பாளர் கள்ளு வாங்கி குடிக்கின்றார். சீமான் நிறைய பெண்களை தனக்கு பாதுகாப்பிற்கு அடுக்கி வைத்து கொண்டு செல்பவர். அவர்கள் எல்லாம் கள்ளு குடிக்க தொடங்கினால் நிலைமை என்ன. அதில் ஒரு புர்க்கா போட்ட சீமான் கட்சி பெண் தலைவர் சொல்கின்றார் கள்ளு குடித்து செத்தவன் கிடையாது என்று எங்கள் தலைவர் சீமான் சொல்லியுள்ளார் என்று கள்ளு குடிப்பதை நியாயபடுத்துகின்றார் முஸ்லிம் மதம் கள்ளு குடிப்பதை ஆதரிக்கின்றதா? இவர் ஏதாவது நல்ல செயல்களை கையில் எடுப்பார் என்று பார்த்தால் சமுதாயத்தை நாசம் செய்கின்ற செயல்களை தான் கையில் எடுக்கின்றார்.இவரது தொண்டர்கள் சொல்லி கொள்வது தமிழ்நாட்டில் இவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து உலகத் தமிழர்களே தலைநிமிர போகின்றார்களாம்
Checked
Thu, 09/25/2025 - 00:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed