3 months 1 week ago
அவை சிங்களவர்களுடைய எலும்புகள் என்ற உல்டா கதை மிக விரைவில் வெளிவரும்.
3 months 1 week ago
இலங்கை அரசாங்க தரப்பு, புளோரிடா அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யும் பின்னணியை நாங்கள் சற்று அவதானிப்பது அவசியம் என்று நினைக்கிறன். ஏற்கனவே சிங்களத் தரப்பால் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யப்பட்ட யாழ் மனித புதைகுழி தடயங்கள் போர்த்துக்கீசர் காலத்து மனித எலும்புகள் என்று உல்டா கதையை சிங்கள மக்களிடையே செய்தி பரப்பப்படுகிறது. சிங்களம் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யும் என்பது நாம் அறிந்தது தானே.
3 months 1 week ago
செம்மணி பக்கம் போய் பார்க்கிறது.
3 months 1 week ago
அது தான் இன்றைய நவீன புத்திசாலித்தனம் மற்றும் ராஜதந்திரம்.
3 months 1 week ago
இஸ்ரேல்-ஈரான் போர் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பம்மிக்கொண்டு நிற்கிறது போலும்.
3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேரள மாநிலம் கொச்சியில் கள்ளுக்கடை (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 17 ஜூன் 2025, 02:43 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரிக்கையை சிலர் முன்வைத்துவரும் நிலையில், கள் இறக்க அனுமதிக்க கோரும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. கள் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு உதவும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? கேரளா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறப்பதில் என்ன பிரச்னை? அரசு கூறும் சிக்கல் என்ன? தமிழ்நாட்டில் கள் விற்க தடை தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தில் கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கம் நீண்ட காலமாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கள்ளை இறக்கி, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுபானங்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் மொத்தமாக வாங்கி, தன்னுடைய கடைகள் மூலமாக விற்பனை செய்துவருகிறது. இது தவிர, தனியான உரிமங்கள் மூலம் தங்கும் விடுதிகள், தனியார் பார்களிலும் மதுபானங்களை விற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், அங்கும் கள், சாராயம் போன்றவற்றை விற்க முடியாது. டாஸ்மாக் கடைகளிலும் உணவகங்களிலும் பார்களிலும் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களையும் வெளிநாட்டு மதுபானங்களையும் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கள், சாராயம் போன்ற பானங்களை விற்க முடியாது. ஆனால், வெளிநாட்டு மதுபானங்களை விற்க அனுமதியளிக்கும் நிலையில், கள், சாராயம் போன்ற பானங்களையும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. பட மூலாதாரம்,SEEMAN4TN_OFFICIAL/INSTAGRAM கள்ளுக்கு ஏன் அனுமதி இல்லை? ஆர்டிஐ கேள்விக்கு அரசு பதில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு 'கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு நீண்ட காலமாக இயங்கிவருகிறது. "2005ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கள்ளுக்கு ஏன் அனுமதியில்லை எனக் கேட்டோம். அதற்குப் பதிலளிக்கும் போது, பனை மரத்தில் இறக்கும் கள்ளில் போதை குறைவு என்பதால் குளோரல் ஹைட்ரேட் கலக்கிக் கொடுப்பார்கள். ஒவ்வொரு பனை மரத்திலிருந்தும் கள்ளை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஒவ்வொரு மரத்தையும் கண்காணிக்க முடியாது. இதனால் 1987ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது என்றார்கள். இதற்குப் பிறகுதான் போராட ஆரம்பித்தோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் கள் இறக்க முடியவில்லை. புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கள் விற்கிறார்கள். அங்கெல்லாம் கலப்படம் நடக்காது, இங்கே மட்டும்தான் நடக்குமா?" எனக் கேள்வி எழுப்புகிறார், தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி. தங்களைப் பொறுத்தவரை, கள் ஒரு போதை ஏற்படுத்தும் பானமல்ல என்றும் அது உணவின் ஒரு பகுதி என்றும் குறிப்பிடும் அவர், தமிழ்நாடு அரசு தனது மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென்கிறார். "பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்குவதில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. அது போதை ஏற்படுத்தும் பானமே அல்ல" என்கிறார். பட மூலாதாரம்,NALLASAMY 'கலாசார சீரழிவு ஏற்படும்' ஆனால், கள்ளை ஒரு உணவைப் போல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார். "கள் என்பது அடிப்படையில் மது. அது உணவு அல்ல. கஞ்சாவை மூலிகை என்று சொல்வதைப் போலத்தான், கள்ளை உணவு என்று சொல்வதும். மதுபானங்களின் விலை அதிகம் என்பதால், எல்லோராலும் நிறைய வாங்கிக் குடிக்க முடியாது. ஆனால், கள்ளின் விலை குறைவாக இருக்கும் என்பதால் இன்னும் நிறையப் பேர் குடிக்க ஆரம்பிப்பார்கள். இப்போது குடிப்பதைப் போல அதிக மடங்கு குடிப்பார்கள். குடி நோயாளிகளின் எண்ணிக்கை 3-4 மடங்கு அதிகரிக்கும்" என்கிறார் து. ரவிக்குமார். கள்ளுக் கடைகள் அமையும் இடங்களும் பிரச்னைக்குரியவை என்கிறார் அவர். "யார் வாடிக்கையாளரோ, அவர்களுக்கு அருகில்தான் இந்தக் கடைகளை அமைக்க நினைப்பார்கள். இயல்பாகவே அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் இந்தக் கடைகளை அமைப்பார்கள். அது அந்த அடித்தட்டு மக்களை மிகப் பெரிய கலாசாரச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்" என்கிறார் அவர். ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார். "கள்ளுக் கடைகளைத் திறந்தால், அத்தனை கடைகளுக்கும் தேவைப்படும் அளவுக்கெல்லாம் கள் கிடைக்காது. அத்தனை மரங்களில் ஏறவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். ஆகவே, அதில் கலப்படம்தான் நடக்கும். கள்ளைப் போன்ற பானத்தை உருவாக்குவதற்காக கலக்கப்படும் ரசாயனங்கள் மிகத் தீங்கானவை. போலியான கள்ளை அருந்தியதால் கேரளாவில் பாதிப்புகள் ஏற்பட்டடதாக அவ்வப்போது செய்திகளில் வரத்தான் செய்கின்றன. 20 லிட்டர் கள்ளை வடித்தால், 200 லிட்டர் கள்ளை விற்பனை செய்வார்கள். ஆகவே கள்ளை இறக்க வேண்டும் எனச் சொல்வதே சட்ட விரோதம்" என்கிறார் ரவிக்குமார். பட மூலாதாரம்,WRITERRAVIKUMAR/X படக்குறிப்பு,ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார் கேரளா, ஆந்திராவில் நிலைமை என்ன? 70களின் இறுதியிலும் 80களிலும் கள்ளும் சாராயமும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கிறது என்பதால்தான் கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் மூடப்பட்டன என்கிறார் அவர். தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் கேரளாவிலும் ஆந்திராவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கள்ளுக்கடைகள் உள்ளன. கேரள அரசின் 2023-24 மதுக் கொள்கையில், கள்ளை கள்ளுக் கடைகளில் மட்டுமல்லாமல் பிராண்ட் செய்து, ஹோட்டல்கள், பார்களிலும் விற்க நினைப்பதாக குறிப்பிட்டது. ஆனால், அங்கு கள் இறக்க பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கேரளா கள் இறக்கும் தொழிலாளர்கள் நல நிதியில் 2014ல் 30,000 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2023ல் இந்த எண்ணிக்கை 15,000ஆக குறைந்தது. ஆந்திர மாநில அரசின் 2022-27 ஆண்டுகளுக்கான கள் கொள்கையின்படி, அம்மாநிலத்தில் 4,138 கள்ளுக்கடைகள் இயங்கிவருகின்றன. நல்லுசாமியைப் பொறுத்தவரை வெளிநாட்டு மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்திவிட்டு கள் விற்பனையை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்கிறார். "தமிழ்நாட்டில் விஸ்கி, பிராந்தி போன்ற வெளிநாட்டு மது வகைகளை விற்க தடை விதிக்கப்படுவதோடு, கள் விற்க அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் கள் விடுதலை - மதுவிலக்கு மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். அந்த மாநாட்டுக்கு பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை அழைக்கப்போகிறோம்" என்கிறார் நல்லுசாமி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளை உணவின் ஓர் அங்கமாக பார்க்க வேண்டும் என, கள் பாதுகாப்பு இயக்கம் கூறுகிறது தமிழ்நாட்டில் மது விலக்கின் வரலாறு தமிழ்நாட்டில் மதுவிலக்கு 1937ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் ராஜாஜி ஆட்சியில் இருந்தபோது 1937ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரை ஒட்டி, ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகிய பிறகு மதுவிலக்கு மெல்லமெல்ல தளர்ச்சியடைந்தது. 1947ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகப் பதவி வகித்த போது, வடஆற்காடு, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. பிறகு 1948ல் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுந்துவந்தது. இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியான டேக் சந்த் என்பவர் தலமையில் ஒரு குழுவை 1963ல் அமைத்தது மத்திய அரசு. இந்தக் குழு 1964ல் தனது அறிக்கையை அளித்தது. அதில் மதுவிலக்கு தொடர்பான பல கடுமையான பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கையை மாநிலங்கள் ஏற்கவில்லை. மதுவிலக்கினால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் அவை சுட்டிக்காட்டின. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் பாதியை தாங்கள் தருவதாக மத்திய அரசு கூறியது. ஆனால், மாநிலங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, ஏற்கெனவே மதுவிலக்கை அமல்படுத்தி வரும் தங்கள் மாநிலத்துக்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரியது. ஆனால், மத்திய அரசின் நிதியுதிவி என்பது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தானே தவிர, ஏற்கெனவே அமல்படுத்திய மாநிலங்களுக்கு அல்ல எனக் கூறியது. இதையடுத்து, மாநில நிதி நிலையைக் காரணம் காட்டி 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் மதுவிலக்கை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த நினைத்த தமிழ்நாடு அரசு 1973ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கள்ளுக்கடைகளையும் மூடுவதாக அறிவித்தது. பிறகு, 1974ல் இருந்த அனைத்துச் சாராயக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1977ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு மதுவிலக்கைத் தளர்த்துவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. முடிவில், 1981ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் மதுவிலக்குத் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கள்ளுக்கடை, சாராயக் கடை, வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. இதற்குப் பிறகு, 1987ல் கள், சாராயக் கடைகளை மூடுவதாக அரசு அறிவித்தது. ஆனால், இந்தியாவிலேயே தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை தொடர்ந்தது. 1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, 1990 முதல் மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. இதைத் தயாரித்து விற்பனை செய்ய டாஸ்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. 1991ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, மலிவு விலை மது விற்பனையைத் தடை செய்தது. ஆனால், இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது பானங்களின் விற்பனை தொடர்ந்தது. 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மதுபான விற்பனையை டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தது தமிழ்நாடு அரசு. அதிர்வலையை ஏற்படுத்திய சசி பெருமாள் மரணம் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு ஆதரவான கோரிக்கைகள் வலுவடைந்தன. சசி பெருமாள் என்பவர் இதற்காகத் தீவிரப் போராட்டங்களை நடத்திவந்தார். இந்நிலையில், 2015ஆம் ஆண்டில், ஒரு சிறுவனுக்கு அவனுடைய உறவினர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து, அவன் அதைக் குடிப்பதை வீடியோ எடுத்தார். அது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அப்போதைய தி.மு.க. தலைவரான மு. கருணாநிதி, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பல கட்சிகள், மதுவிலக்கு குறித்து தங்கள் நிலைப்பாட்டை வெளியிட ஆரம்பித்தன. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை என்ற இடத்தில் இருந்த மதுபானக் கடையை மூட வேண்டும் என போராட்டம் நடந்துவந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சசி பெருமாள் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். இதையடுத்து அவரும் அந்த ஊரின் ஊராட்சி தலைவருமான ஜெயசீலனும் செல்போன் டவர் மீது ஏறினர். பாதிக்கு மேல் ஜெயசீலனால் ஏற முடியாத நிலையில், சசி பெருமாள் உச்சிக்குச் சென்றுவிட்டார். சுமார் ஐந்து மணி நேரம் செல்போன் டவர் உச்சியில் இருந்து போராடிய சசி பெருமாள், அங்கேயே மயங்கினார். அவரை தீயணைப்பு படையினர் கீழே இறக்கிவந்தபோது, அவரது உடலில் உயிர் இல்லை. காமராசர் திறந்த அணையில் இருந்து மது ஆலைக்கு தண்ணீர் தர எதிர்ப்பு - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு மது, சிகரெட் மட்டுமல்ல, இந்த பழக்கங்களும் உங்கள் கல்லீரலை பாதிக்கலாம் என்று தெரியுமா? தாய் மட்டுமல்ல, தந்தை மது குடித்தாலும் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் - எச்சரிக்கும் புதிய ஆய்வு மரணத்தை ஏற்படுத்தும் கள்ளச் சாராயத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் தாக்குதலுக்கு இலக்காயின. அன்றைய ஆளும் கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சிகளுமே பூரண மதுவிலக்குக்காக கோரிக்கை விடுத்தன. இதற்கு அடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆளும் அ.தி.மு.கவே வெற்றிபெற்ற நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை அரசியல் கட்சிகள் படிப்படியாக கைவிட ஆரம்பித்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyqjn553rwo
3 months 1 week ago
கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கூறுவது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வேலையல்ல - உச்ச நீதிமன்றம் காட்டம் Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 04:51 PM நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளது. தக் லைஃப் படத்திற்கு தடை கிடையாது.. "குண்டர்கள்" படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சரமாரி கேள்விகளை எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. யாராக இருந்தாலும், கமல்ஹாசனாக இருந்தாலும் கூட, நீங்க கமலா இருங்க.. யாரா வேணா இருங்க... மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் பெரிய நடிகராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது. இந்த நாட்டின் பிரிவினை மொழிவாரி அடிப்படையில்தான் நடந்தது. ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட முடியாது. இதன் காரணமாக அமைதியின்மை, நல்லிணக்கமின்மை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்க மட்டுமே சொன்னார்கள். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள். நீங்கள் என்ன அடிப்படையில் அப்படி பேசினீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியரா, மொழியியல் நிபுணரா? என்ன அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். மணிரத்னம் படம் என்பதால் படத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் மன்னிப்பு அறிக்கை (மன்னிப்பு) வெளியிட முடியாது என்று கூறுகிறீர்கள். நீங்களே உருவாக்கிய பிரச்சனைக்கு அரசாங்கத்தின் ஆதரவை எப்படி கேட்கிறீர்கள். நீங்கள் பேசிவிட்டு அதற்கு அரசு பாதுகாப்பு தர வேண்டுமா? மொழி என்பது மக்களுடன் இணைந்த ஒரு உணர்வு. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு பொது நபர். சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கூட விசாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய நபர். நீங்கள் பெரிய தவறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போது கர்நாடகாவில் படத்தை ஓட்ட வேண்டும் என்கிறீர்கள். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், மன்னிப்பு கேட்டால் இங்கே வரும் வசூல் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பேசியதை, திரும்பப் பெறலாம். அந்த பேச்சில் இப்போதும் உறுதியாக நிற்கிறீர்களா? இது தமிழ் மற்றும் கன்னட அறிக்கை சண்டை கிடையாது. நீங்கள் பேசியதால் வந்த பிரச்சனை. வாய் தவறி ஏதேனும் நடக்கலாம். ஆனால் தெரிந்த பேசிய விஷயங்கள் அப்படி இல்லை. நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் மன்னிப்பு கேட்கலாம். உடைந்த முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கில் படத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அதற்கு எதிராக கமல்ஹாசன் மேல்முறையீடு செய்து இருந்தார். இதை எதிர்த்து கமல்ஹாசன் மேல்முறையீடு செய்திருந்த நிலையில்தான் கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று 'தக் லைஃப்' வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளது. தக் லைஃப் படத்திற்கு தடை கிடையாது.. "குண்டர்கள்" படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217732
3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 12:22 PM “MI6” எனப்படும் பிரித்தானியாவின் வெளிநாட்டு புலானாய்வு அமைப்பை முதல் முறையாக பெண்ணொருவரால் வழிநடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். அதன்படி, 1999 ஆம் ஆண்டு முதல் MI6 புலானாய்வு அமைப்பில் பணியாற்றிவரும் புலானாய்வு அதிகாரியான பிளேஸ் மெட்ரூவெலி தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார். MI6 புலானாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் சர் ரிச்சர்ட் மூரிடமிருந்து 18 ஆவது தலைவராக பதவியை பொறுப்பேற்கவுள்ளார். 47 வயதுடைய பிளேஸ் மெட்ரூவெலி தற்போது MI6 புலானாய்வு அமைப்பின் Q பிரிவின் பணிப்பாளர் நாயகமாக உள்ளார். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும் பொறுப்பாகவுள்ளார். MI6 மற்றும் MI5 ஆகிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எதிர் - புலனாய்வு அமைப்புகளில் பணிப்பாளராகவும் இருந்துள்ளார். பிளேஸ் மெட்ரூவெலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றுள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றினார். மெட்ரூவெலி தலைவராக நியமிக்கப்பட்டள்ளமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “MI6 புலானாய்வு அமைப்பின் தலைவராக பிளேஸ் மெட்ரூவெலி நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு விடயமாகும். நமது உளவுத்துறை சேவைகளின் பணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமது நீர்நிலைகளுக்குள் தங்கள் உளவு கப்பல்களை அனுப்பும் ஆக்கிரமிப்பாளர்களாலும், நமது பொது சேவைகளை சீர்குலைக்க முயலும் அதிநவீன சைபர் - சதித்திட்ட ஹேக்கர்களாலும் பிரித்தானியா முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுதல்களை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜோர்ஜ் ஆணை (Order of St Michael and St George) எனப்படும் பிரித்தானிய ஆணையை தனது சேவைக்கான அங்கீகாரமாக பெற்ற மெட்ரெவெலி, “எனது சேவையை வழிநடத்தும்படி கோரப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பிரித்தானிய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், வெளிநாடுகளில் பிரித்தானிய நலன்களை மேம்படுத்துவதிலும் MI6 - MI5 மற்றும் GCHQ உடன் - முக்கிய பங்கு வகிக்கிறது. MI6 இன் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் எங்கள் பல சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து அந்தப் பணியைத் தொடர நான் எதிர்பாக்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217693
3 months 1 week ago
இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஹைஃபா நகர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பிந்தைய படம் (ஜூன் 16,2025) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல் தொடர்கிறது. இரானின் அணு ஆயுத திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் பல வான்வழி தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. பதிலடியாக, இரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, அவற்றில் சில இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டி குடியிருப்புப் பகுதிகளை அடைந்தன. இரான் சுகாதாரத்துறை கூற்றின்படி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அந்நாட்டில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபக்கம் இஸ்ரேலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஐ எட்டியுள்ளது. இரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற நகரங்களை சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் சொல்கிறது. இரான் தாக்குதலில் இஸ்ரேலின் இரண்டு முக்கிய நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஹைஃபா ஆகியவை இலக்காயின. ஹைஃபா என்பது இஸ்ரேலின் வடக்கு துறைமுக நகரம். இங்கு ஒரு பெரிய துறைமுகமும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் உள்ளன. முன்னதாக, டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற இஸ்ரேல் நகரங்கள் பல இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது போன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா நகரை குறிவைப்பதற்கான காரணங்கள் மற்றும் இந்த நகரத்திற்கு இந்தியாவுடன் இருக்கும் தொடர்பு குறித்தும் தெரிந்துகொள்ள முயற்சிக்கலாம். ஹைஃபா நகரம் இஸ்ரேலுக்கு ஏன் முக்கியமானது? இஸ்ரேல் விவகாரங்களில் நிபுணரான மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஸ்ரா, தற்போது ஜெருசலேமில் உள்ளார். பிபிசி செய்தியாளர் அபய் குமார் சிங்குடன் பேசுகையில், இஸ்ரேலுக்கு ஹைஃபா நகரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறுகிறார். "ஹைஃபா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமாகும். இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்த இந்த நகரம், மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்லாமல், பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானது." என்றார் அவர். உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நகரில் அதிகம் இருப்பதாக கூறும் அவர், "மைக்ரோசாஃப்டாக இருக்கட்டும், கூகுளாக இருக்கட்டும், இன்டெல்லாக இருக்கட்டும், அனைத்து ஹை-டெக் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை ஹைஃபாவில் வைத்திருக்கின்றன," என்கிறார். இஸ்ரேலின் மிகப்பெரிய கச்சா சுத்திகரிப்பு மையம் ஹைஃபா நகரில் இருக்கிறது, இது அதன் பொருளாதார முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. ஹைஃபாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது இரானின் தாக்குதல் நடத்தியிருப்பது உறுதி செய்யப்ப்பட்டது திங்கட்கிழமை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து புகை எழுவது போன்று காணப்பட்ட ஒரு காணொளி அதனை உறுதிசெய்தது. இந்த வீடியோவில், இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள பகுதியிலிருந்து புகை எழுவது தெரிகிறது. இந்த வீடியோ இரானின் தாக்குதல்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஹைஃபா நகரில் இரான் ஏவுகணை தாக்கிய இடத்தில் இஸ்ரேலின் அவசர கால மற்றும் பாதுகாப்பு சேவை தொழிலாளர்கள் பிபிசி, வீடியோவின் பல முக்கிய பிரேம்களைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் எனப்படும் ஆய்வை மேற்கொண்டு, அவற்றை செய்தி முகமை படங்களுடன் பொருத்தி, சுத்திகரிப்பு ஆலை தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. பின்னர், வீடியோவிலும் செய்தி முகமை படங்களிலும் காணப்பட்ட முக்கிய அம்சங்களை கூகுள் எர்த் மற்றும் அப்பகுதியின் பழைய காட்சிகளுடன் ஒப்பிட்டது. இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, சுத்திகரிப்பு ஆலை இரவில் இரானிய ஏவுகணைகளால் குறி வைக்கப்பட்டதாகவும், இதனால் விநியோக குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் பசன் குழுமம்,தெரிவித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மற்ற பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் பசன் குழுமம் கூறியது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தவிர, ஹைஃபாவில் இஸ்ரேலின் துறைமுகமும் அமைந்திருப்பது இந்நகரத்தை பலவகையிலும் முக்கியமானதாக்குகிறது. ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், "ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது. அங்கு ஏராளமான சரக்குகள் வந்து செல்கின்றன. வரலாற்று கோணத்தில் பார்த்தால், இஸ்ரேலின் முதல் வெளியுலகத் தொடர்பு இந்நகரத்திலிருந்தே தொடங்கியது" என்றார். 2023 ஆம் ஆண்டு, ஹைஃபாவில் ஒரு துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியது. இதில் 70 சதவீத பங்கு அதானி குழுமத்திடமும், 30 சதவீத பங்கு இஸ்ரேலின் கடோட் குழுமத்திடமும் உள்ளது. நகரத்தின் மக்கள் தொகை குறித்து விளக்கும் ஹரேந்திர மிஸ்ரா, சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரம் ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுவதாகக் கூறுகிறார். "இங்கு கணிசமான அரபு மக்கள் உள்ளனர், இதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவர். பஹாய் சமூகத்திற்கு ஒரு மத வழிபாட்டு இடமும் உள்ளது. டெல்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் போன்று, இங்கு பஹாய் தோட்டம் உள்ளது." என்கிறார் அவர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான பஹாய் உலக மையமும் ஹைஃபாவில் அமைந்துள்ளது. பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES டெல் அவிவ், ஹைஃபா மட்டுமே இரானின் இலக்குகளாக உள்ளன? ஹைஃபாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இரான், அதை இலக்காக்கியிருக்கலாமா? இது குறித்து ஹரேந்திர மிஸ்ரா பேசுகையில், "மிக அதிக மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை இரான் குறிவைப்பதாக நம்புகிறேன். பல மதங்களுக்கு புனித தலமாக இருப்பதால் ஜெருசலேம் இதுவரை தாக்கப்படவில்லை." என்றார். இரானின் ஏவுகணைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளதாக அவர் சொல்கிறார். " இதுவரை பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது, ஆனால் 10-12 ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன." என்று அவர் கூறுகிறார். ஹைஃபா மற்றும் டெல் அவிவ் போன்ற நகரங்கள் மக்கள் தொகை அதிக அடர்த்தி கொண்டவை என்பதுடன், இஸ்ரேல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் கருதப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஜெருசலேம் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகரமாக இருந்தாலும், அங்கு இஸ்லாமிய தலங்கள் அதிகம் இருப்பதால், ஒருவேளை இரான் இதுவரை அதை குறிவைக்காமல் இருக்கலாம்." என்பது அவரது கூற்று. பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES ஹைஃபாவுடன் இந்தியாவுக்கு என்ன தொடர்பு? இந்தியாவுக்கும் ஹைஃபாவுக்கும் இடையிலான உறவு 1918-ஆம் ஆண்டின் ஒரு வரலாற்று கதையுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது. முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் பேரரசின் சார்பில் போரிட்ட இந்திய குதிரைப்படை வீரர்கள், துருக்கி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியவற்றின் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து ஹைஃபா நகரத்தை விடுவித்தனர். இந்த வரலாறு இஸ்ரேலில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார். "ஹைஃபாவின் பள்ளிகளில் இந்த வரலாறு கற்பிக்கப்படுகிறது. 'ஹைஃபாவின் நாயகன்' யார் என்று குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் மேஜர் தள்பத் சிங் என சொல்வார்கள்." என்று அவர் தெரிவித்தார். இந்தப் போரில், ஜோத்பூர் லான்சர்ஸின் தளபதியான மேஜர் தள்பத் சிங் ஷெகாவத் கொல்லப்பட்டார். அவருக்கு பின்னர் மிலிட்டரி கிராஸ் விருது வழங்கப்பட்டது. பிரிட்டனுக்காக போரிட்ட 44 இந்திய வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்தனர். இது குதிரைப்படை முக்கிய பங்காற்றிய கடைசி யுத்தமாக வரலாற்றில் பார்க்கப்படுகிறது. ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், "இந்திய தூதரகமும் ஹைஃபா நகராட்சியும் ஒவ்வொரு ஆண்டும் ஹைஃபா தினத்தை இணைந்து கொண்டாடுகின்றன. பிரதமர் நரேந்திர மோதி இங்கு வருகை தந்தபோது, அவர் அங்கு சென்று இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்." என்றார். இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தீன் மூர்த்தி சௌக்கின் பெயர், தீன் மூர்த்தி ஹைஃபா சௌக் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இதற்கான விழாவில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்து கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79qwvqqn0eo
3 months 1 week ago
17 JUN, 2025 | 02:06 PM வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217712
3 months 1 week ago
Published By: RAJEEBAN 17 JUN, 2025 | 02:29 PM மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம்-இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது செம்மணிமனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர்பேராசிரியர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என குறிப்பிட்டுள்ளார். அல்ஜசீராவிற்கு(ஜீவன் ரவீந்திரன் ) இதனை அவர் தெரிவித்துள்ளார் உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்துள்ள அவர் திகதிகளுடன் காணப்படும் பொலித்தீன் உறைகள் அல்லது ஆடைகள் போன்ற உடல்களுடன் மீட்கப்பட்ட பொருட்களை போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார் நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார் மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள சோமதேவ, மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்தவாரமேஉடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ. குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217702
3 months 1 week ago
பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2025, 03:51 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது. ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்? ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம் தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்? மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது. ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன? கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும். கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்? கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர். அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது. அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது. பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது. ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது. இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சி மாற்றம் கொண்டுவர என்ன காரணம்? ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தென் ஆப்ரிக்க அணியில் இட ஒதுக்கீடு ஏற்படுத்திய மாற்றம் என்ன? ஒரு சாம்பியன் உருவான கதை 'சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியனாக மாறிய கதை - கேப்டன் பவுமா கூறியது என்ன? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பலமான ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது எப்படி? 'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்? ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன? பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும் ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20rlz01j8ko
3 months 1 week ago
3 months 1 week ago
ஈரான் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்'' - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு 17 JUN, 2025 | 02:13 PM டெல் அவிவ்: தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐஏஎஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார்" என்று ஐடிஎஃப் ட்வீட் செய்தது. ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார். ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில், இதுவரை 224 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில், ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 592 பேர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/217715
3 months 1 week ago
3 months 1 week ago
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி! இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தாலியில் உள்ள மிலான் மல்சேனா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதி அதிக எடையுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அப் பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என வினவியுள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அப் பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானம் ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் செல்லவிருந்த விமானத்தில் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், இதன் பின்னர் அவருக்கு வேறு விமானத்தில் டிக்கெட் ஒழுங்கு செய்து கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே விமான நிலையங்களில் அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் சலசலப்புகள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு காரணமாக விமான நிலைய அதிகாரிகள் அவ்வப்போது விதிகளை மாற்றி வருகின்றனர். எனினும் இதனை பயணிகளுக்கு சரியான முறையில் அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை என பயணிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு சிக்காகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தவறவிட்ட பயணி கோபமடைந்து அங்கிருந்த கணினியை எடுத்து விமான நிலைய அதிகாரி மீது வீசிய வீடியோவொன்றும் இணையத்தில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsபயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தா...
3 months 1 week ago
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது! ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டா பிரபலம் ”கபேன் காபி லேம் (Khaby-lame) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான காபி லேம் அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30-ம் திகதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசா காலத்தையும் தாண்டி,விதிமுறைகளை மீறி அதிக நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவரைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுக்குப் பின், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவதாக அவர் கூறிக் கொண்டதால் காபி லேம்மை விடுவித்துள்ளனர். தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறி உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காபி லேம் கைது செய்யப்பட்ட தகவல் தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி அவரது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காபி லேம்மிற்கு ஒரு வயதாக இருக்கும் போது அவரது குடும்பத்தினர் இத்தாலிக்குக் குடிபெயர்ந்ததால், அவர் இத்தாலி நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இதனையடுத்து தனது பதின்ம வயதில் தொழிற்சாலையில் CNC இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்த அவர் கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் டிக்டாக்கில் வீடியோ பதிவிட ஆரம்பித்தார். சிக்கலான வாழ்க்கைச் சம்பவங்களை இதைவிட எளிமையாக யாராலும் புரிய வைக்க முடியாது என யோசிக்கும் அளவுக்கு வார்த்தைகளற்ற சைகையால் துவம்சம் செய்து வீடியோ பதிவிட ஆரம்பித்தார். விழுந்து புறண்டு ஊதிப் பெரிதாக்கும் சம்பவங்களைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருப்பார்கள். இது ஒரு விஷயமா? என சைகையால் கேள்வி கேட்பதோடு, அதைக் கிண்டல் செய்து பதிவிடும் இவரது வீடியோவால், பலரும் காபி லேம்மிற்கு ரசிகர்களாகத் தொடங்கியுள்ளனர். காபி லேமின் தனித்துவமான கையசைவு சைகையைப் பின்பற்றி, அவரைப் போலவே வீடியோ வெளியிட்டுப் பலரும் பிரபலமாகி உள்ளனர். அதில் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் உண்டு. குறிப்பாக ஹர்திக் பாண்டியாவும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அவரைப்போலத்தான் போஸ் கொடுத்தார். டிக்டாக்கில் 162 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை வைத்துள்ள அவர் இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1435754
3 months 1 week ago
3 months 1 week ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
3 months 1 week ago
இலங்கையில் தமிழினத்தின் அறிவார்ந்த வளர்ச்சியுடன் தாங்களும் வளரவேண்டும் என்ற எண்ணமோ, முயற்சியோ இன்றி அங்குள்ள படித்த சிங்கள இனவாதிகளும் காழ்புணர்சியோடு தமிழினத்தின் வளர்ச்சியை நோக்குவது போல், இந்தியாவிலும் தமிழ் மாநிலத்தின் வளர்ச்சியை அதன் சில மாநிலங்களிலுள்ள இனவாதிகள் நோக்குவது தெரிகிறது. இது இந்தியாவின் அழிவுக்கான அறிகுறிகள் என்பதை இலங்கையைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.🤔
Checked
Thu, 09/25/2025 - 00:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed